Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-2-1.jpg?resize=600%2C300&ssl

மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு!

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று(6) முதல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதலாவது நாளான இன்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்காக மொத்தம் 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

உ லகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவத்துக்காக அமெரிக்காவை சேர்ந்த 2 விஞ்ஞானிகள் மற்றும் ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

நோய் எதிர்ப்பு தாங்கு திறன் குறித்த ஆய்வுக்காக இந்த விருது அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

உலகின் உயரிய விருதுகளில் ஒன்றாக பார்க்கப்படும் நோபல் பரிசு, கடந்த 1091ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகியவற்றில் சிறப்பான பங்களிப்பு வழங்கியவர்களுக்கு இந்த விருது கொடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஸ்வீடன் நாட்டின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இந்தாண்டுக்கான நோபல் பரிசு பெறப்போகும் விருதாளர்களின் பெயர்கள், இன்று முதல் நாள்தோறும் ஒவ்வொரு துறையாக அறிவிக்கப்பட இருக்கிறது.

முதல்நாளான இன்று (06) மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவரின் விபரம் வெளியிடப்பட்டது.

இந்தாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த மேரி பிரங்கோ, பிரட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமொன் சாகாகுச்சி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நோபல் விருது குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான் தலைவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பரிந்துரைத்ததாக கூறியுள்ளனர்.

ஆனால் ஜனவரி 31 என்ற காலக்கெடுவுக்கு பின்னர் அவர்கள் பரிந்துரை செய்துள்ளதால் நடப்பு ஆண்டுக்கான விருதுக்கு ட்ரம்ப்பின் பெயர் பரீசீலிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதேவேளை ட்ரம்ப் தற்போது சர்வதேச உறவுகளை சீர்குலைத்து வருகிறார் என குற்றம்சாட்டும் நோபல் விருது குழு ட்ரம்ப் தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டால் மட்டுமே நோபல்பரிசு பெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என கூறியுள்ளது.

இம் முறை நோபல் பரிசுக்கு மனித உரிமை அமைப்புகள், பத்திரிகையாளர்கள், ஐ.நா போன்ற அமைப்புகளை குழுவினர் முன்னிலைப்படுத்தி இருக்கலாம் என கூறப்படும் நிலையில் ஆச்சரியமிக்க அறிவிப்புகளையும் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

https://athavannews.com/2025/1449649

Edited by தமிழ் சிறி

  • தமிழ் சிறி changed the title to இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்ப் அவர்களுக்கு முப்பத்திரண்டும் விழ்ந்து முடிந்ததும் அவருக்கு “நோ பல்” பரிசு வழங்கி அவரையும், பாகிஸ்தான் தலைவர் அவர்களையும் மகிழ்விக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.🥱

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, தமிழ் சிறி said:

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுக்காக மொத்தம் 338 பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

உலக அமைதிக்கான நோபல் பரிசு

மனித உரிமைக்கான நோபல் பரிசு

இந்த இரண்டையும் நிகழ்சி நிரலில் இருந்து தூக்கி விடச்சொல்லுங்கள். போற வழிக்கு புண்ணியமாகும்.

வர வர காசு குடுத்து வாங்கிற பட்டங்கள் மாதிரியே நோபல் பரிசும் வரப்போகுது.🙃

  • கருத்துக்கள உறவுகள்

2025ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

Published By: Digital Desk 3

07 Oct, 2025 | 10:40 AM

image

2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோர் விவரங்கள் திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்படுகின்றன.

உலக அளவில் மருத்துவம், பௌதிகவியல், இரசாயனவியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் பணப்பரிசு அடங்கியது.

இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக மேரி இ. பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு 2025-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4.jpg

https://www.virakesari.lk/article/227086

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு!

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு!

2025 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகளான ஜான் கிளார்க், மைக்கேல் டெவோரெட் மற்றும் ஜான் மார்டினிஸ் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார சர்க்யூட்களில் மைக்ரோஸ்கோபிக் குவாண்டம் மெக்கானிக்கல் டனல் மற்றும் ஆற்றல் அளவீட்டைக் கண்டுபிடித்ததற்காக அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மைக்கேல் எச்.டெவோரெட் மற்றும் ஜான் எம். மார்டினிஸ் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் இன்று ஸ்டாக்ஹோமில் அறிவித்தது.

நூற்றாண்டு பழமையான குவாண்டம் இயக்கவியல் தொடர்ந்து புதிய ஆச்சரியங்களை வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

குவாண்டம் மெக்கானிக்ஸ் அனைத்து டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கும் அடித்தளமாக இருப்பதால், இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நோபல் பரிசு குழுவின் தலைவர் ஓலே எரிக்சன் கருத்து தெரிவித்தார்.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு விஞ்ஞானி ஆல்ஃபிரட் நோபல் நினைவாக ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வென்றவர்கள் குறித்த அறிவிப்பு நேற்று முதல் வெளியிடப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த மேரி இ பிரன்கோவ், ஃப்ரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என நேற்று அறிவிக்கப்பட்டது.

இவ்விருது அறிவிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தங்க பதக்கம், பட்டயம், ரொக்கப் பரிசு 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் அதாவது இலங்கை மதிப்பில் 3 கோடி ரூபா உள்ளிட்டவை ஆல்பிரட் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10-ம் திகதி வழங்கப்படும் என்பதும் குறிப்பிடதக்கது.

https://athavannews.com/2025/1449789

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Paanch said:

ட்ரம்ப் அவர்களுக்கு முப்பத்திரண்டும் விழ்ந்து முடிந்ததும் அவருக்கு “நோ பல்” பரிசு வழங்கி அவரையும், பாகிஸ்தான் தலைவர் அவர்களையும் மகிழ்விக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.🥱

15 hours ago, குமாரசாமி said:

உலக அமைதிக்கான நோபல் பரிசு

மனித உரிமைக்கான நோபல் பரிசு

இந்த இரண்டையும் நிகழ்சி நிரலில் இருந்து தூக்கி விடச்சொல்லுங்கள். போற வழிக்கு புண்ணியமாகும்.

வர வர காசு குடுத்து வாங்கிற பட்டங்கள் மாதிரியே நோபல் பரிசும் வரப்போகுது.🙃

eat-chocolate.gif

எனக்கு... அமைதிக்கான நோபல் பரிசு தாராவிடில்,

நோபல் பரிசு கொடுபவர்களுக்கு... அமைதி இருக்காது. ஆமா....

இப்படிக்கு,

தம்பர். 😂

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

இப்படிக்கு,

தம்பர்

ரப்பர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, தமிழ் சிறி said:

eat-chocolate.gif

எனக்கு... அமைதிக்கான நோபல் பரிசு தாராவிடில்,

நோபல் பரிசு கொடுபவர்களுக்கு... அமைதி இருக்காது. ஆமா....

இப்படிக்கு,

தம்பர். 😂

ரம்பருக்கு நோபல் பரிசு குடுக்காட்டில் சுவீடன் அமெரிக்காவின் 52வது மாநிலமாக அறிக்கை விட்டாலும் விடுவார். கனடா அமெரிக்காவின்ர 51வது மாநிலம் எண்டது ஊரறிஞ்ச விசயம் தானே....😂

  • கருத்துக்கள உறவுகள்

இரசாயனத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

Published By: Digital Desk 3

09 Oct, 2025 | 11:14 AM

image

இரசாயனத்துக்கான நோபல் பரிசு புதன்கிழமை (08) அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025ம் ஆண்டு இரசாயனத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜப்பானைச் சேர்ந்த சுசுமா கிடகவா, பிரித்தானியாவைச் சேர்ந்த ரிச்சர்டு ராப்சன், ஜோர்தானைச் சேர்ந்த உமர் யாகி ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலோக - கரிம கட்டமைப்பை உருவாக்கியதற்காக 3 பேருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசு பெற்ற 3 பேருக்கும் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Capture.JPG

https://www.virakesari.lk/article/227292

  • கருத்துக்கள உறவுகள்
On 7/10/2025 at 00:17, குமாரசாமி said:

மனித உரிமைக்கான நோபல் பரிசு

இதை இன்றுதான் கேள்விப்படுகிறேன்.

சாவச்சேரி பக்கம் குடுக்கிறவையோ🤣.

On 7/10/2025 at 22:32, குமாரசாமி said:

ரம்பருக்கு நோபல் பரிசு குடுக்காட்டில் சுவீடன் அமெரிக்காவின் 52வது மாநிலமாக அறிக்கை விட்டாலும் விடுவார்

அமைதிக்கான நோபல் பரிசு சுவீடனில் இருந்து அல்ல, நோர்வேயில் இருந்து என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் நேரம் சொல்லியது போல்….

ஆட்சிக்கு வந்து ஒரு வாரத்தில் ரஸ்ய - உக்ரேன் போரை டிரம்ப் நிறுத்தியமைக்கு நோபல் பரிசு கொடுக்க முடியாது🤣….

ஆனால் காசாவில் யுத்த தவிர்ப்பு, ஹமாஸ் ஆயுத களைவு, இடைக்கால நிர்வாகசபை, காசாவின் பாதுகாப்பு அரேபிய அமைதிபடைகளிடம், பணய கைதிகள் விடுவிப்பு - இத்தனையையும் அண்மைய டிரம்பின் அமைதி முயற்சிகள் சாதித்தால் அவருக்கு நூறு நோபல் பரிசு கொடுத்தாலும் தகும்.

அடுத்த வருடம் வாய்ப்புள்ளது.

எல்லாம் ஹமாஸ், நெந்தன்யாகு கையில்தான் உண்டு.

ஆனால் ஒரு நிரந்தர ஒப்பந்தம் கைச்சாத்தாகும் வரை பரிசை கொடுத்தல் ஆகாது.

டிரம்ப் இதில பழியா கிடந்து மெனகெடுவதே பரிசை குறி வைத்துத்தான்.

ஒண்டும் செய்யாமல் ஒபாமாவுக்கு கொடுத்தவங்கள்…

நான் என்ன தக்காளி தொக்கா என தலை கேட்பதிலும் ஒரு நியாயம் இல்லாமல் இல்லை🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 7/10/2025 at 10:37, தமிழ் சிறி said:

eat-chocolate.gif

எனக்கு... அமைதிக்கான நோபல் பரிசு தாராவிடில்,

நோபல் பரிசு கொடுபவர்களுக்கு... அமைதி இருக்காது. ஆமா....

இப்படிக்கு,

தம்பர். 😂

 🤭animiertes-lucky-luke-bild-0003.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, யாயினி said:

 🤭animiertes-lucky-luke-bild-0003.gif

காணாமல் போன எனது “அவதாரை” கண்டு பிடித்துத் தந்தமைக்கு நன்றி யாயினி. 👍🏽 🙏 😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

காணாமல் போன எனது “அவதாரை” கண்டு பிடித்துத் தந்தமைக்கு நன்றி யாயினி. 👍🏽 🙏 😁

ஜேம்ஸ்பாண்டுக்கு நிகரான சூப்பர் ஹீரோ “இலையான் கில்லர்” க்கு முன்பு இந்த அவதாரை பாவித்தீர்கள் என நினைக்கிறேன் ?

முன்பெல்லாம் யாழை வாசிக்கும் போது கண்ணை சட்டென கவர்ந்தவை உங்கள் பகிடிகள்+அவதார்கள்.

யாழில் உங்களின் ஒரு பாணியை நான் கொப்பி அடிக்கிறேன்……

குறிப்பாக ஒரு கருத்தை ஊண்டி (emphasise) சொல்ல…..

என்ன என கண்டுபிடிக்க முடிகிறதா?

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, goshan_che said:

ஜேம்ஸ்பாண்டுக்கு நிகரான சூப்பர் ஹீரோ “இலையான் கில்லர்” க்கு முன்பு இந்த அவதாரை பாவித்தீர்கள் என நினைக்கிறேன் ?

முன்பெல்லாம் யாழை வாசிக்கும் போது கண்ணை சட்டென கவர்ந்தவை உங்கள் பகிடிகள்+அவதார்கள்.

யாழில் உங்களின் ஒரு பாணியை நான் கொப்பி அடிக்கிறேன்……

குறிப்பாக ஒரு கருத்தை ஊண்டி (emphasise) சொல்ல…..

என்ன என கண்டுபிடிக்க முடிகிறதா?

நன்றி கோசான். 🙏🏽

தடித்த எழுத்தில் எழுதுதல், பெயின்ற் அடித்தல் இவற்றை சொல்கிறீர்கள் என நினைக்கின்றேன். 😁 😂 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, யாயினி said:

 🤭animiertes-lucky-luke-bild-0003.gif

இந்த அவதார்தான் சிறியரின் பதிவுகளுக்கு அழகு . ...... எங்கே இசகு பிசகாய் நடந்துபோய் எழாத்துப் பிரிவுக்குள் போட்டுதோ என நினைத்தேன் ..........! 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நன்றி கோசான். 🙏🏽

தடித்த எழுத்தில் எழுதுதல், பெயின்ற் அடித்தல் இவற்றை சொல்கிறீர்கள் என நினைக்கின்றேன். 😁 😂 🤣

😂 இல்லை….

ஒரு கருத்தை சொல்லும் போது…..

பத்தி பத்தியாக எழுதாமல்….

இப்படி ……போட்டு

இடைவெளிவிட்டு எழுதும் பாங்கு.

ஏதோ நிறைய எழுதினமாதிரியும் தெரியும் 🤣.

அதைவிட முக்கியமாக வாசிப்பவர் கவனம் தேவையான புள்ளியில் படியும்.


சமாதானத்துக்கான நோபல் பரிசு வெனிசுவேலாவின் எதிர்கட்சி அரசியல்வாதி மாரினா மச்சாடோ வுக்கு போயுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

😂 இல்லை….

ஒரு கருத்தை சொல்லும் போது…..

பத்தி பத்தியாக எழுதாமல்….

இப்படி ……போட்டு

இடைவெளிவிட்டு எழுதும் பாங்கு.

ஏதோ நிறைய எழுதினமாதிரியும் தெரியும் 🤣.

அதைவிட முக்கியமாக வாசிப்பவர் கவனம் தேவையான புள்ளியில் படியும்.


சமாதானத்துக்கான நோபல் பரிசு வெனிசுவேலாவின் எதிர்கட்சி அரசியல்வாதி மாரினா மச்சாடோ வுக்கு போயுள்ளது.

ஓம் கோசான்.

நிறைய எழுதும் போது வாசிப்பவர்களுக்கும் அலுப்பு அடிக்கும் என்பதுடன்,

பலர் நுனிப்புல் மேய்ந்து விட்டுப் போகும் சந்தர்ப்பங்கள் அதிகம் என்பதால்,

முக்கிய சமாச்சாரத்தை... சின்ன வரியாக இடைவெளி விட்டு எழுதும் போது...

பலரும் ஆர்வத்துடன் வாசிப்பார்கள்.

நிறைய எழுதி பெரும்பாலானோர் வாசிக்காமல் போனால்,

மினைக்கெட்டுஎழுதியதில், அர்த்தம் இல்லாமல் போகும். 🙂

டிஸ்கி: உங்களைப் போல் நிறைய எழுத... என்னிடம், சரக்கும் இல்லை என்பதை மற்றவர்களுக்கு தெரியாமல் இரகசியமாக தெரிவித்துக் கொள்கின்றேன். 😂


forget-it-im-over-it-donald-trump.gif

உலகத்தில் உள்ள பெரும்பாலானோர்.. ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்காது என்றும், அப்படிக் கிடைத்தால் அது கேலிக் கூத்தாகி விடும் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது....

திருவாளர் ட்ரம்ப் அவர்கள் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கும் இறுதி நிமிடம் வரை... தனக்குத்தான் அப் பரிசு கிடைக்கும் என நம்பிக் கொண்டு இருந்தார்.

பல வழிகளில்... அவர் வாய் விட்டுக் கேட்டும், பரிசு கிடைக்காதது அவருக்கு பெரிய ஏமாற்றமாகவும், பயங்கர ஆத்திரமாகவும் இருக்கும் என நினைக்கின்றேன்.

இதன் பின் விளைவுகளாக சில வேளை அவர் நோபல் பரிசுக்கு ஈடாக... அமெரிக்க மேற்பார்வையில், இன்னும் ஒரு பரிசு கொடுக்க ஒரு அமைப்பை உருவாக்கலாம் என நினைக்கின்றேன். 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

ஓம் கோசான்.

நிறைய எழுதும் போது வாசிப்பவர்களுக்கும் அலுப்பு அடிக்கும் என்பதுடன்,

பலர் நுனிப்புல் மேய்ந்து விட்டுப் போகும் சந்தர்ப்பங்கள் அதிகம் என்பதால்,

முக்கிய சமாச்சாரத்தை... சின்ன வரியாக இடைவெளி விட்டு எழுதும் போது...

பலரும் ஆர்வத்துடன் வாசிப்பார்கள்.

நிறைய எழுதி பெரும்பாலானோர் வாசிக்காமல் போனால்,

மினைக்கெட்டுஎழுதியதில், அர்த்தம் இல்லாமல் போகும். 🙂

டிஸ்கி: உங்களைப் போல் நிறைய எழுத... என்னிடம், சரக்கும் இல்லை என்பதை மற்றவர்களுக்கு தெரியாமல் இரகசியமாக தெரிவித்துக் கொள்கின்றேன். 😂


forget-it-im-over-it-donald-trump.gif

உலகத்தில் உள்ள பெரும்பாலானோர்.. ட்ரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்காது என்றும், அப்படிக் கிடைத்தால் அது கேலிக் கூத்தாகி விடும் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போது....

திருவாளர் ட்ரம்ப் அவர்கள் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கும் இறுதி நிமிடம் வரை... தனக்குத்தான் அப் பரிசு கிடைக்கும் என நம்பிக் கொண்டு இருந்தார்.

பல வழிகளில்... அவர் வாய் விட்டுக் கேட்டும், பரிசு கிடைக்காதது அவருக்கு பெரிய ஏமாற்றமாகவும், பயங்கர ஆத்திரமாகவும் இருக்கும் என நினைக்கின்றேன்.

இதன் பின் விளைவுகளாக சில வேலை அவர் நோபல் பரிசுக்கு ஈடாக... அமெரிக்க மேற்பார்வையில், இன்னும் ஒரு பரிசு கொடுக்க ஒரு அமைப்பை உருவாக்கலாம் என நினைக்கின்றேன். 😂

நோபல் கிடைக்காட்டி ஒண்டாச்சு…,

நீ வா தல…நாங்க உனக்கு…

ஜேர்மன்-யூகே தமிழர் சார்பாக…

No balls பரிசுதாறம் என கேட்டுப்பாப்பமா, தம்பர🤣.

பிகு

இந்த பரிசுக்கான நாமினேஷன் ஜனவரியோடு குளோசாம்.

இப்பதானே காசா தீர்வு சூடு பிடிக்குது, அடுத்த வருடம் தம்பருக்குத்தான்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு!

அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு!

வெனிசுலாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக அமைதியான மாற்றங்களுக்கான போராட்டத்திற்காக வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

வெனிசுலா மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக அவர் அயராது உழைத்ததற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் அவர் அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுகிறார் என்று இன்று ஒஸ்லோவில் உள்ள நோர்வே நோபல் நிறுவனத்தில் பரிசை வழங்கிய நோர்வே நோபல் குழு தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1450047

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
58 minutes ago, தமிழ் சிறி said:

திருவாளர் ட்ரம்ப் அவர்கள் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கும் இறுதி நிமிடம் வரை... தனக்குத்தான் அப் பரிசு கிடைக்கும் என நம்பிக் கொண்டு இருந்தார்.

பல வழிகளில்... அவர் வாய் விட்டுக் கேட்டும், பரிசு கிடைக்காதது அவருக்கு பெரிய ஏமாற்றமாகவும், பயங்கர ஆத்திரமாகவும் இருக்கும் என நினைக்கின்றேன்.

வாற வருசமும் நோபல் பரிசு குடுப்பினம் தானே. அப்ப பாப்பம் 😂

donald-trump-dancing.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

வாற வருசமும் நோபல் பரிசு குடுப்பினம் தானே. அப்ப பாப்பம் 😂

donald-trump-dancing.gif

இன்னும் ஒரு வருசத்துக்கு....

இஸ்ரேல் - ஹமாஸ்,

ரஷ்யா -உக்ரேன்,

இந்தியா - பாகிஸ்தான்.... போன்றவற்றை, சண்டை பிடிக்காமல்

ஒழுங்காக இருக்கச் சொல்லி வெருட்டி வைத்திருக்கிறது

லேசுப் பட்ட காரியம் இல்லை கண்டியளோ. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

559220232_1220176873487586_5460211778808

பராக் ஒபாமா... ஒன்றுமே செய்யவில்லை. ஆனால் அவருக்கு நோபல் பரிசு வழங்கப் பட்டது.

பராக் ஒபாமாவை விமர்சித்த ட்ரம்ப்.

Tamilwin

############### #################

நீயும், ஒண்ணுமே செய்யாம இரு!
உனக்கும்... தருவாங்க, நோபல் பரிசு. 🤣😂🤣

Muralimanoj Muralimanoj

############### #################

நீ... குழப்படி கூட, அதுதான் உனக்கு கிடைக்கல. 😂 🤣

Mafahim Junaid

############### #################

யாரப்பா... அங்க, அந்த நோபலை... கொடுத்து தொலைங்கப்பா முடியல. 😂 🤣

Jenatheeban Theeban

############### #################

குடுங்களேன்டா.... அந்தாளுக்கு, அத... 😂 🤣

Mhm Asmir

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நோபல் கிடைக்காட்டி ஒண்டாச்சு…,

நீ வா தல…நாங்க உனக்கு…

ஜேர்மன்-யூகே தமிழர் சார்பாக…

No balls பரிசுதாறம் என கேட்டுப்பாப்பமா, தம்பர🤣.

என் ஐடியா கொஞ்சம் ட்ரம்பிற்குப் பிடிக்கும் என நினைக்கிறேன். 1991 இல் இருந்து "இக் நோபல் - Ig Nobel" என்ற ஒரு நையாண்டி "நோபல்" பரிசை ஒரு அமைப்பு வருடாந்தம் வழங்கி வருகிறது. அதை ட்ரம்பிற்குக் கொடுக்க ஏற்பாடு செய்யலாம்! ட்ரம்பிற்கு பரிசில் "Nobel" இருந்தால் போதும், எனவே முகம் கோணாமல் வாங்கி க்கொள்வார்!

ஒரு சாம்பிளுக்கு, 2025 இல் இக் நோபல் பரிசுகள் பெற்றவர்கள் இவர்கள்👇

Ars Technica
No image preview

Meet the 2025 Ig Nobel Prize winners

The annual award ceremony features miniature operas, scientific demos, and the 24/7 lectures.

The kicker👇😂

Marcin Zajenkowski and Gilles Gignac, for investigating what happens when you tell narcissists—or anyone else—that they are intelligent.

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றவர் யார்?

Published By: Digital Desk 3

10 Oct, 2025 | 10:15 AM

image

இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய் வென்றுள்ளார். 

கிராஸ்னாஹோர்காய்  ஹங்கேரியில் கடந்த 1954-ம் ஆண்டு பிறந்தார். இவரது முதல் நாவல் ‘சாட்டன்டாங்கோ’ கடந்த 1985-ம் ஆண்டு வெளியானது. இவர் எழுதிய ‘ஸ்பேட்வொர்க் பார் ஏ பேலஸ்: என்ட்ரிங் தி மேட்னஸ் ஆஃப் அதர்ஸ்’ என்ற சிறுகதையும் பிரபலம் அடைந்தது. இவரது படைப்புகள் அனைத்தும் தொலைநோக்கு கொண்டவை. தீவிரவாதம் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூழலில், இவரது படைப்புகள் கலையின் சக்தியை வெளிப்படுத்துகின்றன. இதற்காக இவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.

மத்திய ஐரோப்பிய பாரம்பரியத்தில் வந்த மிகச் சிறந்த இதிகாச எழுத்தாளராக இவர் கருதப்படுகிறார். பிரபல எழுத்தாளர்கள் ஏனஸ்ட் ஹெமிங்கேவ, டோனிமாரிசன் ஆகியோர் அடங்கிய பட்டியலில் லஸ்லோ கிரஸ்னாகோர்காயும் இடம் பிடித்துள்ளார்.

9.jpg

கடந்த ஆண்டு தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங் இந்த பரிசை வென்றிருந்தார். இதுவரை மொத்தம் 117 முறை 121 பேருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 

பல்வேறு நாடுகளுக்கு இடையேயான போரை நிறுத்தியதால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று அவ்வப்போது அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் கூறி வருகின்றார். இந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசு இன்று வெள்ளிக்கிழமை (10) அறிவிக்கப்பட உள்ளது.

https://www.virakesari.lk/article/227375

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.