Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடிகை பாலியல் வழக்கு.. நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் சீமான்! வழக்கை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

Mani Singh SUpdated: Wednesday, October 8, 2025, 12:20 [IST]

Seeman Supreme Court

டெல்லி: நடிகை பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். நடிகை குறித்து இனி கருத்து தெரிவிக்க மாட்டேன் என்றும் நடிகை குறித்த கருத்துக்களை திரும்ப பெறுவதாகவும் சீமான் தரப்பு கூறியது. இதேபோல் சீமானுக்கு எதிரான பாலியல் புகாரை திரும்ப பெறுவதாகவும் நடிகை தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Also Read

சனாதனத்தை அவமதிப்பதா? வக்கீல் அடாவடி! உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீசி தாக்க முயற்சி

இந்த உத்தரவுக்கு எதிராக சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி மீண்டும் விசாரித்தது. சீமான் தரப்பில் வழக்கு விசாரணையை தள்ளிவைக்கக்கோரி ஏற்கனவே கடிதம் வழங்கி இருந்த நிலையில், நடிகை சார்பில் வக்கீல் ஆஜராகி பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கு இடமில்லை என்று கூறினார்.

இந்த வழக்கு கடந்த 12 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, நடிகையிடம் சீமான் வரும் 24ம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியது.

இந்த நிலையில், சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், நடிகை குறித்து இனி கருத்து தெரிவிக்க மாட்டேன் என்றும் நடிகை குறித்த கருத்துக்களை திரும்ப பெறுவதாகவும் சீமான் தரப்பு கூறியுள்ளது. சீமானுக்கு எதிரான பாலியல் புகாரை திரும்ப பெறுவதாகவும் நடிகை தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

https://tamil.oneindia.com/news/delhi/supreme-court-quashes-actress-harassment-case-after-ntk-chief-seeman-apology-741497.html?utm_source=OI-TA-Home-Page&utm_medium=Display&utm_campaign=News-Cards

டிஸ்கி

மண்டியிடாத மானம்…

முழந்தாளிட்டு…ஊ….

ஊரறிய மன்னிப்பு கேட்ட தருணம்🤣.

பிகு

பாஜக அனுசரானையில் சுப்ரீம் கோர்ட் மாமா வேலை பார்திருக்காவிடின் சைமனுக்கு விளைவு இன்னும் மோசமாய் இருந்திருக்கும்.

Edited by goshan_che

  • Replies 78
  • Views 3.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ஈழப்பிரியன்
    ஈழப்பிரியன்

    ஒவ்வொரு தேர்தல்கள் வரும்போதும் எங்காவது இருக்கும் இந்த அம்மாவை இழுத்துவிட்ட திருத்த முடியாத கழுதைகளுக்கு மாபெரும் தோல்வி.

  • Kavi arunasalam
    Kavi arunasalam

  • Kadancha
    Kadancha

    இதில் நடிகையே பொய் சொல்லி உள்ளதாக வருகிறது. சீமானின் 'வார்த்தை' செயல்கள் - அதாவது அவதூறு. - அதுக்கு தானே மன்னிப்பு கேட்க்கும் படி சொன்னது நீதி மன்றம். நடிகை சீமானுடன் (உடல்) உறவு வைத்தது என்று புகார்

  • கருத்துக்கள உறவுகள்

மிகச் சரியான, தேவையான செயல். இனிப்பண்ணி பாருங்கோவன். 😅

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னது மீசையில மண்ணா🤣.

நாங்கதான் கிளீன் ஷேவ் எடுத்துட்டமே🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"மன்னிப்பு கேட்பவன் பெரிய மனிதன்" என்பது, தவறு செய்த ஒருவர், தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது மிகவும் உயர்வான பண்பு என்பதைக் குறிக்கிறது. இந்த பழமொழி, தவறு இழைத்தவர்கள் அனைவரும் மனிதர்கள் என்றாலும், அவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் மனப்பக்குவம் கொண்டவர்களே மாமனிதர்கள் அல்லது பெரிய மனிதர்கள் என்பதை வலியுறுத்துகிறது.

தவறு செய்வது இயல்பு, மனித இயல்பு அது. ஆனால், அந்த தவறை உணர்ந்து, அதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பது என்பது, ஒருவரின் பெருந்தன்மை மற்றும் மனிதநேயத்தைக் காட்டுகிறது.

சீமான் அவர்கள் விஜயலச்சுமியுடன் தொடர்பில் இருக்கவில்லை என எங்கும் எப்போதும் மறுக்கவில்லை.மனைவி துணைவி என மக்களை பேய்க்காட்டவுமில்லை.

எனவே மன்னிப்பு என்பதன் மூலம் சீமான் உயர்ந்து நிற்கிறார்.💪

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிகு

கனக விஜயனின் முடித்தலை மீது கல்லினை வைத்தான் தமிழன் சேரமகன்….

கங்கை கொண்டான் தமிழன் சோழன் மகன்….

இமய வரம்பில் மீன் கொடி ஏற்றினான் தமிழன் பாண்டியன்…

இதை எல்லாம் போல்….

டெல்லி வரை சென்று மானத்தை கப்பல் ஏற்றினான்… சைமன் செபஸ்டியன் என்ற கேரளத்து மைந்தன் என நாளை சரிதிரம் பாடும் 🤣.

அண்மைய இரு வாரங்களில் விஜைக்கு யாழ்களத்தில் வழங்கப்பட்ட பூரண கும்பம், முதல் மரியாதை இன்று நான் அண்ணன் சீமானுக்கு வழங்குகிறேன்.

த்…..தூ…..

(தம்பிகள்: துப்பினா துடைச்சுகுவோம்🤣)

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

ஊரறிய மன்னிப்பு கேட்ட தருணம்🤣.

32 minutes ago, விசுகு said:

மிகச் சரியான, தேவையான செயல்.

மன்னிப்புக் கேட்பது என்பது ஒன்றும் மனிதர்களுக்கு புதியது அல்ல .

மனித மாண்புகளில் ஒன்று தான்....

விட்ட தவறை உணர்ந்து பாதிக்கப்பட்ட ..அல்லது பாதிக்கப்பட்டதாக நினைத்துக் கொண்டு தடங்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்....இன்னொருவரிடம்

மன்னித்து விடுங்கள்... எதோ தவறுதலாகப் பேசிவிட்டேன் என்பது .

விட்ட தவறுகளை ? கண்டும் காணாதது போல கடந்து செல்லும்

மனிதர்களை விட இங்கே சீமான் பரவாயில்லை .

மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தை என்பது பலரது அரசியல் வாழ்க்கை யிலும்

பெரிய திருப்பங்களையும் வெற்றிகளையும் கொடுத்திருக்கின்றது

இப்போது சீமானிற்கு இன்னும் 4% வாக்குகள் அதிகரித்திருக்கும்

தலைவர்யா அவர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, வாத்தியார் said:

மன்னிப்பு கேட்பது மாண்புதான்….

எப்போது?

அது உளப்பூர்வமான மன்னிப்பாக இருக்கும் போது.

போன வாய்தாவின் பின் கூட மன்னிப்பு கேட்கமாட்டேன் என வாய் ஜம்பம் அடித்தவர்…இன்று மன்னிப்பு கேட்பது அப்பட்டமான போக்கிரித்தனம்.

அத்தோடு அண்ணன் தான் பிழையே விடவில்லை என்றார்…தம்பிகளும் அதற்கு வில்லுபாட்டு பாடினர்.

அப்போ இப்போ ஏன் மன்னிப்பு கேட்கிறார்?

ஒன்றில் பிழை விட்டு விட்டு - மக்களுக்கு பொய் சொல்லி விட்டு - இப்போ மன்னிப்பு கேட்கிறார்.

அல்லது…

செய்தாத தவறுக்கு கோழைதனமாக மன்னிப்பு கேட்கிறார்.

எப்படி பார்த்தாலும் ஒன்றில் சீமான் பொய்யன் அல்லது கோழை என்பதே முடிவாகும்.

40 minutes ago, வாத்தியார் said:

இப்போது சீமானிற்கு இன்னும் 4% வாக்குகள் அதிகரித்திருக்கும்

சொல்லுவதுதான் சொல்லுறம் 40% எண்டால் தம்பி-அண்ணன்களாவது சந்தோசப்படுவார்கள்🤣.

1 hour ago, குமாரசாமி said:

"மன்னிப்பு கேட்பவன் பெரிய மனிதன்" என்பது, தவறு செய்த ஒருவர், தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பது மிகவும் உயர்வான பண்பு என்பதைக் குறிக்கிறது. இந்த பழமொழி, தவறு இழைத்தவர்கள் அனைவரும் மனிதர்கள் என்றாலும், அவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்கும் மனப்பக்குவம் கொண்டவர்களே மாமனிதர்கள் அல்லது பெரிய மனிதர்கள் என்பதை வலியுறுத்துகிறது.

தவறு செய்வது இயல்பு, மனித இயல்பு அது. ஆனால், அந்த தவறை உணர்ந்து, அதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பது என்பது, ஒருவரின் பெருந்தன்மை மற்றும் மனிதநேயத்தைக் காட்டுகிறது.

சீமான் அவர்கள் விஜயலச்சுமியுடன் தொடர்பில் இருக்கவில்லை என எங்கும் எப்போதும் மறுக்கவில்லை.மனைவி துணைவி என மக்களை பேய்க்காட்டவுமில்லை.

எனவே மன்னிப்பு என்பதன் மூலம் சீமான் உயர்ந்து நிற்கிறார்.💪

பிகு

தம்பிகளுக்கு ஒரு கேள்வி.

நாளைக்கு சோனியா காந்தி, மகிந்த இதே போல் முள்ளிவாய்காலுக்கு மன்னிப்பு கேட்டால்….

மன்னிப்பு கேட்டுவிட்டார்கள் எனவே அவர்கள் மாண்புள்ளோர் என கொண்டாடுவீர்களா?

%செய்தாலும் செய்வீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

எப்படி பார்த்தாலும் ஒன்றில் சீமான் பொய்யன் அல்லது கோழை என்பதே முடிவாகும்

21 minutes ago, goshan_che said:

நாளைக்கு சோனியா காந்தி, மகிந்த இதே போல் முள்ளிவாய்காலுக்கு மன்னிப்பு கேட்டால்….

கிணத்தடியில் இருந்த வாளியைக் களவெடுத்த ஒருவரையும்

இரட்டைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்த ஒருவரையும் ஒப்பீடு செய்தல் முறையா ....

நீதிக்கு முன்னர் யாவரும் சமமே என்று கூறினாலும் தண்டனையில் வேறுபாடு உள்ளதல்லவா

அதை போலத்தான் இதுவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, விசுகு said:

மிகச் சரியான, தேவையான செயல். இனிப்பண்ணி பாருங்கோவன். 😅

என்ரை கவலை என்னெண்டால்......

இவ்வளவுகாலமும் சீமானை வறுத்தெடுக்க விஜயலட்சுமிக்கு நீதி கேக்கிறம் எண்டு போராடிச்சினம்.கதை முடிச்சாச்சு.சும்மா வெறும் வாயை வைச்சு மென்றவர்கள் இனி என்ன செய்யப்போயினம்? அதோட தங்கள் அரசியல் லாபத்திற்காக அப்பப்ப விஜயலச்சுமியை களம் இறக்கி கூத்து காட்டினவையள் இனி என்ன செய்யப்போயினம்.😂

அதைவிட இஞ்சையொரு தம்பி சீமான் கடை எண்ட திரியை திறந்து நல்ல சனத்தை கூட்டி சேக்கஸ் காட்டுவார். இனி என்ன செய்யப்போறார்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, வாத்தியார் said:

கிணத்தடியில் இருந்த வாளியைக் களவெடுத்த ஒருவரையும்

இரட்டைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்த ஒருவரையும் ஒப்பீடு செய்தல் முறையா ....

நீதிக்கு முன்னர் யாவரும் சமமே என்று கூறினாலும் தண்டனையில் வேறுபாடு உள்ளதல்லவா

அதை போலத்தான் இதுவும்

நான் காறித்துப்பியது அவருக்கு கேட்டிருக்கும்.....

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிப்புக் கேட்பது உயர்ந்த பண்பு என்பது சரி. ஆனால், வருடக் கணக்காக விட்டுத் துரத்தி, பல இடங்களில் ஒளித்து விளையாடி, இறுதியில் "இனியெங்கும் போய் ஒளிய முடியாது"😎 என்று ஒரு மூலையில் மாட்டிக் கொண்ட பிறகு மன்னிப்புக் கேட்கிற ஒருவர் உண்மையில் தவறுணர்ந்து மன்னிப்புக் கேட்கிறாரா அல்லது தன்னைக் காத்துக் கொள்ள மன்னிப்புக் கேட்கிறாரா?

இந்த மன்னிப்பின் பின்னணியை அடையாளம் காண முடியாமல் தவிக்கிறார்களா யாழ் கள "பெரியோர்" அல்லது இதுவும் முரட்டு முட்டின் ஒரு தொடர்ச்சியா?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

சீமானுக்கு எதிரான பாலியல் புகாரை திரும்ப பெறுவதாகவும் நடிகை தரப்பு தெரிவித்துள்ளது.

ஆகவே சீமானுக்கு எதிரான பாலியல்~ புகாரே தவிர அங்கு மழை இல்லை. ஈரம் இல்லைப்போல் தெரிகிறது. உண்மை என்ன??? அது சீமானுக்கும் அந்த நடிகைக்கு மட்டுமே தெரியும். வேறு யாருக்குமே தெரிய வாய்ப்பில்லை, இருந்தால் சாட்சி ஏதாவது வந்திருக்கும். சீமான் என்றாலே ஒருவருக்கு வாந்தி வருகிறது, அதை ஏந்த ஒருவர் இருப்பதையும் பின்னூட்டங்களில் காணமுடிகிறது.

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்”. அது சீமானுக்குப் பொருந்தும்போல் தெரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி மூலைக்குள் மாட்டிக் கொண்ட பிறகு தப்பிக்கொள்ள மன்னிப்புக் கேட்ட உதாரணமாக இருக்கக் கூடிய ஒரு வழக்கு போன வெள்ளிக்கிழமை நியூ யோர்க்கில் முடிந்திருக்கிறது. விபரங்கள் கீழே:

No image preview

Sean 'Diddy' Combs sentenced to over 4 years in prison

Combs apologised to his mother, children, and victims, specifically naming his two ex-girlfriends, Casandra Ventura and "Jane".

சுருக்கமாக, டிடி கோம்ப்ஸ் பல ஆண்டுகளாக பல பெண்களை உணர்வு ரீதியாகச் சித்திரவதை செய்து தானும் அனுபவித்து விபச்சாரத்திற்கும் தூண்டியிருக்கிறார். அவர்கள் விலக முடியாத படி அந்தக் காட்சிகளை மிரட்டும் சாட்சியாக (blackmail) சேமித்து வைத்திருக்கிறார். 12 மாதங்கள் முன்பு இதற்காக குற்றம் சாட்டப் பட்டுக் கைதான போது, கோம்ப்ஸ் பேசியது கிட்டத் தட்ட சீமான் விஜயலட்சுமியைப் பற்றிப் பேசியது போலவே இருந்தது😂. கோம்ப்ஸ் தரப்பினர் மிரட்டினார்கள் , பெண்களை விபச்சாரிகள் என்று கதை பரப்பி விட்டார்கள். ஆனால், கோம்ப்சை குற்றவாளியாக ஜூரிகள் தீர்ப்பளித்த பின்னர் ரெக்கோர்ட்டை மாற்றிப் போட்டார்கள் கோம்ப் தரப்பினர்.

கடந்த வாரம் "11 வருட சிறை வழங்க" வேண்டுமென அரச தரப்பு நீதிபதியைக் கேட்டுக் கொண்ட போது. "நான் திருந்தி விட்டேன், 14 மாத சிறையில் நான் திருந்தி விட்டேன்" என்று கடிதம் எழுதி நிறைய கண்ணீரெல்லாம் விட்டார்கள் கோம்ப்சும் குடும்பத்தினரும்.

ஆனால், நீதிபதி சுப்ரமணியன் (ஆம், இந்தியப் பெற்றோருக்குப் பிறந்த நியூ யோர்க்கின் முக்கிய மாவட்டத்தில் பெடரல் நீதிபதி, தமிழராக இருக்கக் கூடும்) "நீ திருந்துவதாக இருந்திருந்தால் 2019 இல் ஒரு வீடியோ வெளியே வந்த பின்னரே திருந்தியிருக்க வேண்டும். இது மனம் வருந்திய திருத்தம் அல்ல" என்று 4 ஆண்டுகள் சிறை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறார்.

பிந்திய செய்திகளின் படி, கோம்ப்ஸ் குற்றவாளியாகத் தீர்ப்புக் கிடைத்தவுடன் ட்ரம்பிடம் பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென்றும் தூது அனுப்பியிருக்கிறாராம்.

ஒரு ஒப்பீட்டுக்கு, யாழ் கள பெரிசுகளுக்காக, இதைப் பகிர்ந்திருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நடிகையிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான்!

Published By: Digital Desk 3

08 Oct, 2025 | 01:40 PM

image

டெல்லி,

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக விஜயலட்சுமி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீமான் மேல்முறையீடு செய்தார். கடந்த மார்ச் மாதம் இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரு தரப்பும் (சீமான், விஜயலட்சுமி) பேசி முடிவுக்கு வர சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது. ஆனால், சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் சமரசம் வேண்டாம், நீதி தான் வேண்டும் என்று விஜயலட்சுமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சீமானை கைது செய்வதற்கான தடையை நீட்டித்து வழக்கை சுப்ரீம் கோர்ட்டு ஒத்தி வைத்தது.

இந்நிலையில், நடிகை தொடர்ந்த பாலியல் புகார் வழக்கை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் சீமான் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும். வழக்கை எதிர்கொள்ள சீமான் தயாராக இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், விஜயலட்சுமி சுமுகமாக செல்வதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியது.

இருவரும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்று, மன்னிப்பு கேட்கட்டும். நடிகையை தொந்தரவு செய்யமாட்டேன் என சீமான் உறுதியளிக்க வேண்டும். சீமானுக்கு எதிரான புலன்விசாரணைக்கு இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி குறித்து அவதூறு பேசியதற்காக சுப்ரீம் கோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் சீமான். எனது சொல், செயல்களால் விஜயலட்சுமிக்கு வலி, காயம் ஏற்பட்டிருந்தால் நிபந்தனையின்றி மன்னிப்பு கோருகிறேன். விஜயலட்சுமிக்கு எதிரான அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகளை திரும்ப பெறுவதாகவும் சீமான் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதே போல் நடிகை தரப்பிலும் மன்னிப்பு கோரப்பட்டது. சீமான் மற்றும் விஜயலட்சுமியின் பரஸ்பர மன்னிப்பை ஏற்று வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பும் எந்த ஒரு வழக்கையும் இதற்கு மேலாக எடுத்துச் செல்ல விரும்பவில்லை எனவும் சீமானுக்கு எதிரான புகாரை திரும்பப் பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் விஜயலட்சுமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/227210

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இப்படி மூலைக்குள் மாட்டிக் கொண்ட பிறகு தப்பிக்கொள்ள மன்னிப்புக் கேட்ட உதாரணமாக இருக்கக் கூடிய ஒரு வழக்கு போன வெள்ளிக்கிழமை நியூ யோர்க்கில் முடிந்திருக்கிறது.

என்னப்பா இது காம்ப்ஸ் செய்த குற்றமும் பின்னணியும் எப்படியானது என்பதும் சீமான் எந்த அளவில் குற்றவாளி என்பதும் குழந்தைப் பிள்ளைக்கும் தெரியும்

சிறைத் தண்டனை கிடைக்கும் வழக்குகளுக்கும்

குடும்ப நல வழக்குகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் தம்பி ஜஸ்டின்

அமெரிக்கா வழக்கை உதாரணம் காட்டுகின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நடிகையே பொய் சொல்லி உள்ளதாக வருகிறது.

சீமானின் 'வார்த்தை' செயல்கள் - அதாவது அவதூறு. - அதுக்கு தானே மன்னிப்பு கேட்க்கும் படி சொன்னது நீதி மன்றம்.

நடிகை சீமானுடன் (உடல்) உறவு வைத்தது என்று புகார் சொல்லி, பின் விலத்தியது

(எப்படி நடந்த உடல் உறவு இல்லாமல் போகும்)

மற்றது கோயிலில் திருமணம் (இதுவே எல்லாரையும் ஏய்க்காட்டும் கதை).

(நடிகை புகாரை விலத்துவது என்பது, புகார் பகிடிக்கு சொன்னது என்று வரும், வருகிறது)

நடிகை தங்கி இருந்தது 'பெண்' என்ற போர்வைக்குள்ளும் (மேற்கிலும் இது பொதுவாக பாவிக்கப்படுவது) - அதை நீதி மன்றம் கிழித்து விட்டது.

சீமானின் நிலை ஏறி இருக்கிறது - எந்த விதமாக பார்த்தாலும்,

சீமான் செய்தது நடிகையின் குற்றச்சாட்டுக்கு செய்த மறுதாக்கம் - அதுக்கு தானே நீதி மன்ற உத்தரவு சீமான் மன்னிப்பு கேட்கும்படி

அப்போது என் சீமான் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும், நடிகை சொல்வதை மறுக்கும் போது.

நடிகை சொல்வதை சீமான் மறுத்தது, சட்டத்துக்கு உண்மை என்று நடிகையே நிரூபித்துவிட்டார் .

சீமான் அவதூறு பேசியது கூட, அது இயற்கையா (மனித சுபாவம்) என்றல்லவா வருகிறது.

செய்யாத ஒரு விடயத்தை செய்தது என்று குற்றம் சுமத்தும் போது, எவருக்கும் ஆத்திரம் தலைக்கேறும் என்பது.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வாத்தியார் said:

என்னப்பா இது காம்ப்ஸ் செய்த குற்றமும் பின்னணியும் எப்படியானது என்பதும் சீமான் எந்த அளவில் குற்றவாளி என்பதும் குழந்தைப் பிள்ளைக்கும் தெரியும்

சிறைத் தண்டனை கிடைக்கும் வழக்குகளுக்கும்

குடும்ப நல வழக்குகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் தம்பி ஜஸ்டின்

அமெரிக்கா வழக்கை உதாரணம் காட்டுகின்றார் .

"குடும்ப நல வழக்கில் எதிர் தரப்பில் இருப்பவரை "பாலியல் தொழிலாளி, சைக்கோ" என்று dehumanize செய்யலாம், கிரிமினல் வழக்கில் அப்படிச் செய்யக் கூடாது" என்கிறீர்களா😂?

ஒன்று "வாத்தியார்" என்ற அவதாரப் பெயரை மாற்றுங்கள், அல்லது சீமான் போன்ற மூன்றாந்தர அரசியல்வாதிக்கு நிபந்தனையில்லாத முட்டுக் கொடுப்பதை நிறுத்துங்கள்! இந்த இரு பாத்திரங்களும் ஒத்து வரவில்லை என்பது என் அபிப்பிராயம்😎!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

என்ரை கவலை என்னெண்டால்......

இவ்வளவுகாலமும் சீமானை வறுத்தெடுக்க விஜயலட்சுமிக்கு நீதி கேக்கிறம் எண்டு போராடிச்சினம்.கதை முடிச்சாச்சு.சும்மா வெறும் வாயை வைச்சு மென்றவர்கள் இனி என்ன செய்யப்போயினம்? அதோட தங்கள் அரசியல் லாபத்திற்காக அப்பப்ப விஜயலச்சுமியை களம் இறக்கி கூத்து காட்டினவையள் இனி என்ன செய்யப்போயினம்.😂

அதைவிட இஞ்சையொரு தம்பி சீமான் கடை எண்ட திரியை திறந்து நல்ல சனத்தை கூட்டி சேக்கஸ் காட்டுவார். இனி என்ன செய்யப்போறார்.🤣

இப்ப இங்கே சிலர் தரையில் கிடந்து தலையில் அடித்து அழுவது சீமான் என்ற நபர் மீது இனி புழுதி வார வழியில்லை என்று தானே.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

இப்ப இங்கே சிலர் தரையில் கிடந்து தலையில் அடித்து அழுவது சீமான் என்ற நபர் மீது இனி புழுதி வார வழியில்லை என்று தானே.

மீசையை வழித்துவிட்டு மண் ஒட்டவில்லை என்று முறுக்கெடுக்கும் மன்னர்கள்.🤗

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு தேர்தல்கள் வரும்போதும் எங்காவது இருக்கும் இந்த அம்மாவை இழுத்துவிட்ட திருத்த முடியாத கழுதைகளுக்கு மாபெரும் தோல்வி.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

மீசையை வழித்துவிட்டு மண் ஒட்டவில்லை என்று முறுக்கெடுக்கும் மன்னர்கள்.🤗

சட்டம் ஒரு இருட்டறை தமன்னா சொன்னாள்..

Legal significance

  • Mitigation or restitution: In some cases, offering a public apology can be a condition of settlement, probation, or part of a plea agreement. It demonstrates remorse and willingness to make amends.

  • Impact on sentencing or appeal: Judges sometimes consider a sincere apology as a sign of rehabilitation or acceptance of wrongdoing, potentially influencing a lighter sentence or favorably affecting an appeal.

  • Defamation or contempt cases: In such cases, courts may specifically order a public apology as a form of remedy to repair reputational harm.

b. Social and moral significance

  • Restores public trust: Especially for public figures or cases that attracted media attention, an apology helps restore faith in accountability and integrity.

  • Acknowledgment to victims: It recognizes harm done to victims or affected communities.

  • Rehabilitation and reintegration: Publicly owning up can help an accused reintegrate into society by showing remorse and change.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ஒவ்வொரு தேர்தல்கள் வரும்போதும் எங்காவது இருக்கும் இந்த அம்மாவை இழுத்துவிட்ட திருத்த முடியாத கழுதைகளுக்கு மாபெரும் தோல்வி.

அதைவிட விஜய் + விஜயலட்சுமி (பெயர் கூட தூக்கலாக இருக்குதல்ல) வைத்து நாம் தமிழர் வாக்கு வடை போச்சே என்றவர்களுக்கு ....

படுத்த இருவரும் படுத்த நாங்கள் தான் ஆனால் இனி வெளியே சொல்லமாட்டம் என்று இருவரும் ஒத்துக்கொண்டு பிரிந்து சென்றாலும் இங்கே பல்லுப் போனாலும் நானும் பழசல்ல என்றபடி சில பெரிசுகள்.....???

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, விசுகு said:

எம்ஜீஆர் ரோடு ஜெயலலிதா சேர்ந்த மாதிரி

விஜேயோடு தேர்தல் வரமுதலே திரிசா கூட வரப் போறாவாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

"குடும்ப நல வழக்கில் எதிர் தரப்பில் இருப்பவரை "பாலியல் தொழிலாளி, சைக்கோ" என்று dehumanize செய்யலாம், கிரிமினல் வழக்கில் அப்படிச் செய்யக் கூடாது" என்கிறீர்களா😂?

நீங்கள் சீமான் மனித தன்மையற்ற அல்லது மனிதாபிமானமற்ற முறையில் வழக்கின்போது கதைக்கலாமா என்று கேட்டால்.....

இல்லைத் தம்பி ஜஸ்டின்

நான் அப்படிச் சொல்லவில்லை

அதற்கான மன்னிப்பை சீமான் கேட்டுக் கொண்டார்..... என்பதை வரவேற்றேன்

அவரை அதற்காகப் பாராட்டுவது உங்களுக்குத் பிடிக்கவில்லை என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது

அடுத்து நீங்கள் கூறிய உதாரணம் பிழை என்றேன்

அதற்காக வாத்தியார் என்ற பெயரை என் மாத்த வேண்டும்

கருத்தப் பாருங்க தம்பி அதற்கான பதிலளித்த தாருங்கள்

நான் ஒரு நாளும் பெயரைப் பார்த்துக் கருத்து எழுதுவதில்லை

உங்களுக்கு எப்படி வசதி....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வாத்தியார் said:

கிணத்தடியில் இருந்த வாளியைக் களவெடுத்த ஒருவரையும்

இரட்டைக் கொலை செய்து நகைகளைக் கொள்ளையடித்த ஒருவரையும் ஒப்பீடு செய்தல் முறையா ....

நீதிக்கு முன்னர் யாவரும் சமமே என்று கூறினாலும் தண்டனையில் வேறுபாடு உள்ளதல்லவா

அதை போலத்தான் இதுவும்

குற்றம் இரெண்டும் ஒன்றல்ல.

ஆனால் மன்னிப்பு என்ற concept ஒன்றுதான்.

வாழைப்பழத்தை களவெடுத்துவிட்டு மன்னிப்பு கோரியவன் மஹாத்மா…

வைரநகையை களவெடுத்துவிட்டு மன்னிப்பு கோரியவன் துஸ்டாத்மா என்பதில்லையே?

மன்னிப்புக்கு முதல் தகுதி செய்த தவறுக்கு மனம் வருந்தல் (remorse).

அடுத்து தம்மை தாமே திருத்தி கொள்ளல் (rehabilitation).

இந்த இரெண்டு R உம் இல்லாத மன்னிப்பு அது கேட்கும் காதிதமளவு கூட பெறாது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.