Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம்

October 28, 2025 1:50 pm

‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம்

தற்போது பிரான்சில் வசிக்கும் இனோஷன் சூரன், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை 10,000 கிலோமீட்டர் தூரத்தை ” பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை” என்ற அவரது விசேட சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.

2025 செப்டம்பர் 01 ஆம் திகதி பிரான்சிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய சூரன், கடுமையான சவால்களுக்கு மத்தியில் ஜேர்மனி, துருக்கி, இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் வழியாகப் பயணம் செய்து கடந்த வியாழக்கிழமை (23) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.

அவரது முயற்சியினை பாராட்டும் வகையில் யாழ்ப்பாணத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இலங்கை இராணுவத்தினரால் அதில் அவர் வரவேற்கப்பட்டார்.

பிரான்ஸ், ஜேர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, சேர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்ஜியா, கசகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா ஊடாக இவர் பயணம் செய்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.

இந்தப் பயணத்தின் நோக்கம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்தின் விசேட கலாசார முக்கியத்துவம், மரபுகளை உலகிற்கு வெளிப்படுத்துவதும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு யாழ்ப்பாணத்தை ஒரு அழகான இடமாக ஊக்குவிப்பதும், நல்லிணக்கத்தை வளர்ப்பதும், சர்வதேச சமூகங்களுடனான சமூக மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவதும் தனது நோக்கம் என்று வலியுறுத்தினார்.

இதேவேளை, உலகளாவிய பயணம் தொடர்பான லொன்லி பிளானட் (Lonely Planet) சஞ்சிகையானது, 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ரீதியில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

571215894_1308440961325330_2938814841578571656823_1308441047991988_1750691569495573970237_1308441107991982_5520091677334572013638_1308441137991979_7673953001214572792512_1308440757992017_2184247514656

https://oruvan.com/sri-lankan-army-welcomes-sooran-from-france-to-jaffna/

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள், சூரன்போர் நடக்கும் நேரத்தில் யாழில் சூரனின் விஜயம் பொருத்தமாய் அமைந்திருக்கு . .....! 😂

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை சிறியர் எங்கோ இணைத்து வாசித்தேன். ஆனால், சிறியரின் வீரகேசரி இணைப்பில் செய்தி விபரம் காணப்படவில்லை. யாரோ இந்த சூரன் இது என்ன பயணமோ என நினைத்தேன். சூரத்தனமான வேலைதான் பார்த்து உள்ளார். சைக்கிளில் பாக்கு நீரிணையை எப்படி கடந்தார் என அறிய ஆவல்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நியாயம் said:

சைக்கிளில் பாக்கு நீரிணையை எப்படி கடந்தார் என அறிய ஆவல்.

சைக்கிளில் வந்த அவர் பாகிஸ்தானில் எல்லை மூடப்பட்டு இருந்ததால் விமானத்தில் இந்தியா டெல்லி வந்து பின்பு சைக்கிளில் நாகப்பட்டினம் வந்து கப்பல் எடுத்து சைக்கிளுடன் காங்கேசன்துறை வந்துள்ளார்.

Edited by விளங்க நினைப்பவன்

  • கருத்துக்கள உறவுகள்

சூரன் ஏன் தமிழ் தேசிய ஏற்பாட்டாளர்களை சந்திக்கவில்லை? சிங்கள ராணுவத்தை சந்தித்தார்? துரோகி பட்டம் ரெடி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

சூரன் ஏன் தமிழ் தேசிய ஏற்பாட்டாளர்களை சந்திக்கவில்லை? சிங்கள ராணுவத்தை சந்தித்தார்? துரோகி பட்டம் ரெடி

அது வேறொன்றுமில்லை ......அவர்கள் வேற்றுமையில் ஒற்றுமையாய் இருக்கிறார்கள், இவர்கள் ஒற்றுமையில் வேற்றுமையாய் இருக்கிறார்கள் ........!

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, suvy said:

அது வேறொன்றுமில்லை ......அவர்கள் வேற்றுமையில் ஒற்றுமையாய் இருக்கிறார்கள், இவர்கள் ஒற்றுமையில் வேற்றுமையாய் இருக்கிறார்கள் ........!

என்ன. ஒரு. அழகான. விளக்கம். நீங்கள். ரணிலுக்கு. உதவியளாராக. இருக்க. பூரண தகுதியுண்டு. இலங்கையில். இராணுவத்தை. தாண்டி. எதுவும். செய்ய. முடியாது. இது. தான். போராட்டம். பெற்று. தந்த. தீர்வு. ஆகும் இந்த. சைக்கிள். ஒட்டத்தை. இராணுவம். நல்ல முறையில். பயன்படுத்தி. இலவசமாக. விளம்பரம். பெற்றுவிட்டது. சர்வதேசத்தில். நம்ம. ஆள்கள். பயன்படுத்தவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, colomban said:

சூரன் ஏன் தமிழ் தேசிய ஏற்பாட்டாளர்களை சந்திக்கவில்லை? சிங்கள ராணுவத்தை சந்தித்தார்? துரோகி பட்டம் ரெடி

ஏன் இலங்கை வாழ் முஸ்லீம்கள் சிங்களவன் எப்படித்தான் அடித்தாலும் தமிழில் கதைத்துக்கொண்டு சிங்களவனுக்கு வக்காளத்து வாங்கிறவங்கள்? அதுக்கி நீங்கள் பதில் சொல்லுங்கோ பிறகு இதிக்கு பதில் எடுப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் உணவு தயாரிப்பில் விசேட விருது பெற்ற ஒரு தமிழர் இலங்கைக்கு வந்தபோது விமானநிலையத்தில் வரவேற்பு நடந்தது. ஏன்? லைக்கா இன்னும் கனடா இந்திரகுமார் இவர்களுக்கும் வரவேற்புண்டு. அடித்து கலைப்பது, பின் மாலையளித்து வரவேற்று தங்களை மறைத்து இலங்கையர் என்று உரிமை கொண்டாடி தமிழருக்கு தங்களால் ஏற்பட்ட அழிவுகளையும் கொடூரங்களையும் இழைக்கப்படும் அநீதிகளையும் மறைத்து அவர்களது போராட்டத்தை மழுங்கடித்து தங்களை காப்பாற்றிக்கொள்வது. அதனாற்தான் சிங்களவருடன் வாழ்வது அதிஷ்டமென சிலர் புளகாங்கிதம் கொள்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

அதனாற்தான் சிங்களவருடன் வாழ்வது அதிஷ்டமென சிலர் புளகாங்கிதம் கொள்கின்றனர்.

சிலர். என்றால். யார்? சமத்திரனைத். தவிர. வேறு. எவரையும். நான் அறியவில்லை. உங்களுக்கு. தெரிந்தவர்களை. எழுதுங்கள். வாசித்து. அறிவோம். மற்றும். பிரான்சில் இருந்து. இலங்கைக்கு. பேகிறவர்களுக்கு. வரவேற்ப்பு. அதிகம். தான். ஆனால்்ஜேர்மனியிலிருந்து. போகிறவர்களை. கண்டுக்கிறார்களில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சில் புளகாங்கிதம் கொண்ட வெளிநாட்டு தமிழர்கள் சிலர் அவர் ஆட்சிக்கு பக்கபலமாக இருங்கோ என்று நல்லுர் கடவுளை பிரார்த்தனையும் செய்கின்றார்கள். அதற்காக இன்னும் விரதம் தான் அவர்கள் இருக்கவில்லை. டொனால்ட் ரம் இன்னொரு தடவை தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று அவரே விரும்புகின்றார். ஆனால் இங்கே வெளிநாட்டு தமிழர்கள் தோழர் நல்லாட்சி செய்ய காலம் போதாது அவர் இரண்டாம் மூன்றாம் தடவையும் ஆட்சி செய்ய வேண்டும் என்று விரும்பி இப்போதே சொல்ல தொடங்கிவிட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, colomban said:

சூரன் ஏன் தமிழ் தேசிய ஏற்பாட்டாளர்களை சந்திக்கவில்லை? சிங்கள ராணுவத்தை சந்தித்தார்? துரோகி பட்டம் ரெடி

கிழக்கின் தமிழ் தேசியத்தின் விடிவெள்ளி சாணக்ஸிடம் முன்கூட்டியே அறிவித்து அனுமதி வாங்காமல் இலங்கைக்குள் நுழைத்த சூரனை கன்மையாக வண்டிக்கிறேன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.