Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sasi_varnam said:

மலையகத்து மண் வளமாக இருக்கிறது... அந்த மலையகத்தை பெருந்தோட்டமாக உருவாக்கிய மக்கள் இன்றுவரை வளமாக இருக்கிறார்களா?

சுமந்திரனை கழுவி ஊத்த மலையக மக்களின் கண்ணீர் வேண்டாமே. 🤲

சுமந்திரனை நம்பி யாரும் இந்த அழைப்பினைக் கருத்தில் எடுக்க வேண்டாம் என்பதே எமது கருத்து.

அரசியலில் மட்டும் தான் இதனால் அவருக்கு ஆதாயம் என்று பலரும் நினைக்கலாம். ஆத்மீகம் என்றும் ஒன்று உள்ளதே அதுவும் இப்போது ஆதாயம் தேடும் மார்க்கமாக மாறிவிட்டதே

  • Replies 159
  • Views 7.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    நாற்பது, ஐம்பதுகளின் இலங்கையின் இருந்த பிரதேச பாகுபாடுகள் மலையகத் தமிழர்களின் வாழ்க்கையை ஆழமாக பாதித்திருந்தது. குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதியில் சில யாழ்ப்பாணத் தமிழர்கள், தேயிலைத் தோட்டங்களில் இருந்து

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    உங்களது இந்த வரிகள் எனக்கு இதை எழுத வைத்தது. நன்றி goshan_che அறுபதுகளின் நடுப்பகுதியில், ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா காலத்தில், விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் “படித்த வாலிபர் திட்டம்” என்ற பெயர

  • Sasi_varnam
    Sasi_varnam

    என்னை பொறுத்தவரையில் இது எப்போதோ நடந்திருக்க வேண்டிய ஒரு காலக் கடமை. 200 வருட அடிமை சாசன வாழ்க்கையில் அந்த பெருந்தோட்ட மக்கள் கூட்டம் அடைந்த முன்னேற்றம் என்பது ஆமை வேகத்தில் தான் நடந்திருக்கிறது. இன்ற

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

🤣 ஓம்.."அங்கே பார்! மேலே பார்! கீழே பார்!.. உரையாடலுக்கு மையமான கருத்தை மட்டும் பார்க்காதே! " இந்த ட்ராபிக் கான்ஸ்ரபிள் வேலையை முன்னர் தமிழக அரசியல் திரிகளில் மட்டும் பார்த்தோம், இப்போது எல்லா திரிகளிலும் இந்த வேலையைச் செய்வோர் இருக்கிறார்கள் போல😎!

எவ்வளவுதான் தான் கல்வி அறிவு இருந்தாலும்

சில சந்தர்ப்பங்களில் பட்டறிவு தான் கை கொடுக்கும்....😅

என்ற வசனம் சுமந்திரனின் கருத்திற்குப் பொருத்தமானது என்பதற்கான

சில ஆதாரமான விஷயங்களை சொன்னால்...... இவர் கீழே மேலே நடுவிலே என்று ஆர்ப்பரிக்கின்றார்😂

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

ஒரு இனத்தை இன்னொரு இனம் அழிக்கும் போர்.  200 ஆண்டு காலம் என்பது எத்தனை தலைமுறைகள்? அங்கேயே அந்த மண்ணிலே பிறந்து, வளர்ந்து அங்கேயே உழைத்த மக்களுக்கு உரிமை கிடைக்காது என்பது எப்படிப்பட்ட கொடுமை. 

சிங்கள இன மக்களுடன் சேர்ந்து வாழ முடியாது என்று ஆயுத ரீதியாகப் போராடிய தமிழ் மக்கள் வாழும் ஒரு நிலப்பகுதியில் .......

எங்களுக்கு எங்கள் உரிமை வேண்டும்... எங்களை இந்த நாட்டின் மக்களாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

எங்கள் நிலத்தில் எங்கள் சந்ததியினருக்கு கல்வி உரிமையைக் கொடுங்கள்....

நாங்கள் காடு அழித்து கடும் துயர் மத்தியிலும் நாட்டிற்காக எங்கள் வியர்வையைச் சிந்தி உருவாக்கிய இந்த நிலத்தில் எங்களுக்கும் பங்கு வேண்டும் .... என்று அகிம்சை வழியில் போராடும் மக்களை எப்படி அழைத்துச் சென்று வாழ வைக்க முடியும்?

சரி அப்படி ஒரு நிலை வந்தால் 200 ஆண்டுகள் உழைப்பினாலும் கடும் துயரங்களின் மத்தியிலும் உருவாக்கப்பட்ட அந்த நில புலன்களின் நன்மைகளை யார் அனுபவிக்கப் போகின்றார்கள்?

(இதுக்கை வேறை மலையகம் சிங்களரின் தாயகமாம்)

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரசோதரன் said:

இந்த விடயத்தில் யாழ்ப்பாண மக்களும் இவ்வாறானவர்களே

இது விடயத்தில் எனக்கும் சிலபல அனுபவங்கள் உண்டு ரசோதரன் அண்ணை. எமது பகுதி மக்களுடைய புறக்கணிப்பை ஒரு விதமான மனப் பிறழ்வாகவே பார்க்க முடிகிறது ஆழ்மனத்தில் புரையோடியுள்ள இவ்வாறான கருதுகோள்களிலிருந்து அவர்கள் வெளிப்படுவதற்கு சில தலைமுறைகளோ இல்லை தன்னலத்திலிருந்து வெளிப்பட்டு வாழ்க்கையை நோக்கக்கூடிய மன முதிர்ச்சியோ தேவை.

எவ்வளவோ படித்தும் அனுபவமிக்கவர்களாகவும் உள்ளோருமே தம் மனம் எனும் வட்டம் சிறு கிணற்றளவேயாய்ச் சமைத்துக் கொண்டு அதனுள்ளே தாவும் தவளைகளாய் வாழ்தல் யாழ்ப்பாணத்தில் மிக அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

பொய்மான்களின் பின்னால் ஓடி கொண்டே இருக்க வேண்டியதுதான்.

அதாவது ஏழைகள் எங்கும் எப்போதும் உங்கள் கருத்தின்படி குடியேறிகளாக வாழ முடியும்

ஆனால் அவர்களிடமிருந்து உறிஞ்சப்பட்ட ரத்தத்திற்கான விலை கிடைக்காது அல்லது கிடைக்கவும் தேவையில்லை

அவர்களுக்கு அவர்களின் நிலத்திலேயே பாதுகாப்பான வீடு கிடைக்கக் கூடாது

அதற்குப் பதிலாக இன்னொரு இடத்தில் அவர்களை மீண்டும் ஒருமுறை,,,,,,,

இன்னும் ஒரு 200 ஆண்டுகளுக்கு அகதிகளாக குடியமர்த்தி விட்டால் உங்களின் தலைவருக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும் 😇

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள குடிநேற்றமும் பிடிக்காது , தமிழ் குடியேற்றமும் பிடிக்காது. தமிழ் தேசியர்கள் உலகில் ஒரு வினோதமான பிறவிகள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, villavan said:

இது விடயத்தில் எனக்கும் சிலபல அனுபவங்கள் உண்டு ரசோதரன் அண்ணை. எமது பகுதி மக்களுடைய புறக்கணிப்பை ஒரு விதமான மனப் பிறழ்வாகவே பார்க்க முடிகிறது ஆழ்மனத்தில் புரையோடியுள்ள இவ்வாறான கருதுகோள்களிலிருந்து அவர்கள் வெளிப்படுவதற்கு சில தலைமுறைகளோ இல்லை தன்னலத்திலிருந்து வெளிப்பட்டு வாழ்க்கையை நோக்கக்கூடிய மன முதிர்ச்சியோ தேவை.

எவ்வளவோ படித்தும் அனுபவமிக்கவர்களாகவும் உள்ளோருமே தம் மனம் எனும் வட்டம் சிறு கிணற்றளவேயாய்ச் சமைத்துக் கொண்டு அதனுள்ளே தாவும் தவளைகளாய் வாழ்தல் யாழ்ப்பாணத்தில் மிக அதிகம்.

தலை முழுவதும் வெற்றுப் பெருமிதத்தை நிரப்பிக் கொண்டு வாழும் ஒரு மனப்பிறழ்வே இது, வில்லவன்..............

தலைவர் இவை எல்லாவற்றையும் தகர்த்து எறிவார் என்று தான் இருந்தோம். அவர்களுக்கு இருந்த இமாலயப் பணிகளை முடித்துக் கொண்டு பின்னர் இதைப் பார்ப்போம் என்று இருந்திருப்பார் போல..................

இனி ஒவ்வொரு தலைமுறையும் இந்த விடயத்தில் சில அடிகளாவது முன்னோக்கி போனார்கள் என்றால் கூட பரவாயில்லை........................

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

அவர்கள் இன்றும் அந்த பகுதியில் மலையக மக்கள் என்று தான் அழைக்கப்படுகிறார்கள் என்பது தான் யதார்த்தம் வரலாறு. டொட்.

விசுகர் பழைய தலைமுறைதான் அப்படி இனம் காண்கின்றது. வவுனியாவில் நல்ல வசதியாக உள்ள 50 வயசு தாண்டியவர்கள் வாழும் பகுதியை வைத்து ஆட்களை முத்திரை குத்துவார்கள். தொழில் நிமித்தம் வன்னியில் பணியாற்றிய (அரசு உத்தியோகத்தர்) யாழ்ப்பாணத்தாரும் ஆட்களை வாழும் பகுதிகளின் அடிப்படையில் இனம் காண்பார்கள். ஆனால், அடிப்படையில் வவுனியா மாவட்டத்தை (வன்னி) பொறுத்தவரை பெரும்பாலானோர் குடியேறியவர்களே. இங்கு போர்ச்சூழலுடன் வன்னிக்கு சென்று நிரந்தரவதிவிடமாக்கியோர் பலர்.

1970 வந்து குடியேறிய மலையகத்து மக்களின் ஒரு பகுதியை பார்த்தால் அவர்களின் நாலாம் தலைமுறை பாடசாலைக்கு செல்கின்றது. இரண்டாம், மூன்றாம் தலைமுறை யாழ்ப்பாணம் தொடக்கம் மட்டக்களப்பு வரை திருமணம் செய்துள்ளது. மூன்றாம் தலைமுறையிடம் தமது அடி மலையகம் எனும் இனங்காணல் இல்லை. பலர் மலையக பக்கம் சென்றதே இல்லை.

சிறப்பாக வாழ்கின்றார்களா என்று பார்த்தால் அப்படி கூறுவதற்கு இல்லை என்றாலும் பொதுவாக வன்னியில் வாழும் சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் இவர்களுக்கு உள்ளது. சிலர் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலைக்கும் சென்றுள்ளார்கள்.

இந்த வரலாறு - டொட் எல்லாம் எங்கள் காலத்துடன் மருகிவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெருந்தோட்ட முதலாளிகளோ அல்லது அரசாங்கமோ மலையக மக்களின் சுபிட்சமான வாழ்வு குறித்து பெரிதாக சிந்திக்கப் போவதில்லை. காரணம் நாளைக்கு வாழ்க்கையில் அவர்கள் ஒரு நல்ல நிலைக்கு வந்து விட்டால் அந்த தேயிலை கூடையையும்... கவ்வாத்து கத்தியையும் அவர்கள் கையில் எடுக்கப் போவதில்லை. 

சிங்களவர்கள்; ஈழத் தமிழர்கள்; முஸ்லிம்கள்; யாரும் இந்த தேயிலை தோட்டத்து கூலி வேலையை செய்யப் போவதுமில்லை. ஆகவே இந்த மக்கள் கூட்டம் அவர்களுக்கு தேவை... அடிமைகளாகவே தேவை. இதுதான் யதார்த்தம்.

நம் விடுதலைப் போராட்ட வரலாறில் தம்மை இணைத்து கொண்ட அனைத்து இயக்கங்களும் சாதிய கட்டமைப்புகள்; சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவே குரல் கொடுத்திருந்தார்கள். 

குறிப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பு காத்திரமான; செயற்பாடுகளை கூட மேற்கொண்டு இருந்தார்கள். இவ்வாறான உயரிய செயல்பாடுகளை பெருமையாக பேசியதும் நாங்கள் தான்.

இன்று அவர்கள் இல்லாமல் இருக்கலாம்... ஆனாலும் அந்தப் போராட்டத்தின் நியாயப்பாடுகள்; கோட்பாடுகள்; தேவைகள் எமக்கு இன்றுமே இருக்கின்றன.

இன்று சாதிய மேலாண்மை குறித்து ஆங்காங்கே தனி மனிதர்கள், சமூகங்கள் மத்தியில எழக்கூடிய வக்கிர புக்தியை பொது புத்தியாக பேசத் துணிந்து உள்ளோம். இதை அருண் சித்தார்த்தன் பேர்வழி தெற்கில் போய் பிரச்சாரம் செய்தால் அவனைத் துரோகி, அரச கைகூலி என்கின்றோம். 

இங்கே இரட்டை நிலைப்பாட்டை எடுப்பதைப் போல் எனக்குப்படுகிறது. 

நீங்கள் இன்னும் மாறவில்லை என்பதை நீங்களே கூறிக் கொள்கிறீர்கள். அப்படித்தான் நான் பார்க்கிறேன். 

நாளைய அல்லது அடுத்து வரும் தலைமுறைகள் இப்படியே இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. 

ஈழத் தமிழரிடம் சென்று ஆங்காங்கே முகம் கொடுக்கக்கூடிய களைய வேண்டிய இந்த சமூகப் பிரச்சினையை விட; மலையக மக்களை சிங்களவன் காலடியில் கிடந்தது வாழ்நாள் முழுவதும் பரம்பரை பரம்பரையாக எல்லா வகையிலும் அடிமையாக  வாழ்ந்து மடிவது சிறப்பு என்கிறீர்கள்.

என்னத்த சொல்ல!!!

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, விசுகு said:

இங்கே பேசப்படுவது ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுதது தானே தவிர....

மேலும் மலையகத்தின் வளம் மற்றும் மண் சார்ந்த தெளிவுள்ளவர்கள் அவர்களை காய்ந்த நிலப்பரப்பு களில் குடியேற்ற நினைக்கவே மாட்டார்கள்.

இந்த மலையக தமிழரின் மீள் குடியேற்ற விவகாரத்தில் சுமந்திரன் ஐயா சொன்னவுடன் எல்லாம் நடந்து விடும் என்ற தொனியில் பலரின் கருத்துக்கள் உள்ளது.

இத்தனைக்கும் சுமந்திரனும் மனோகணேசனும் எதற்கும் லாயக்கு இல்லாத அரசியல்வாதிகள். சும்மா பேச்சுக்காக,தங்கள் அரசியல் லாபத்திற்காக வசனங்களை வெளி விடுபவர்கள்.அந்த இருவரும் ஜதார்த்தமாக எதையும் சிந்தித்த வரலாறு இல்லை. குட்டையை குழப்பி சுகம் தேடுபவர்கள்.

விசுகர்! உங்களிடம் ஒரு கேள்வி?

அரசியல்/பொருளாதார ரீதியாக சிங்கள அரசு இதனை அனுமதிக்கும் என நினைக்கின்றீர்களா? கிந்திய அரசு மீள் குடியேற்றத்திற்கு ஆதரவளிக்கும் என நம்புகின்றீர்களா?

இன்றைய ஸ்ரீலங்கா அரசியல் நிலவரத்தில் இந்தியாவை மீறி சிங்கள அரசால் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது என்பது பெரும் துயரம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, Kavi arunasalam said:

நாற்பது, ஐம்பதுகளின் இலங்கையின் இருந்த பிரதேச பாகுபாடுகள் மலையகத் தமிழர்களின் வாழ்க்கையை ஆழமாக பாதித்திருந்தது. குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதியில் சில யாழ்ப்பாணத் தமிழர்கள், தேயிலைத் தோட்டங்களில் இருந்து மலையகத் தமிழர்களை வீட்டு வேலைக்கும், கழிவுகளை அகற்றும் பணிகளுக்கும் அழைத்து வந்து அமர்த்திய நிகழ்வுகள் நிறைய இருக்கின்றன. அப்பொழுதெல்லாம் யாழ்ப்பாணம் வறண்ட பிரதேசம். மலையகம் செழிப்பான பூமி என்று யாரும் பேசவில்லை.

தாய் தந்தையை உறவுகளை மலையகத்திலேயே விட்டு விட்டு,சிறுமியையோ, சிறுவனையோ பிரித்து கூட்டிக் கொண்டு வந்து வேலை செய்ய விட்டு தன் பிள்ளைகளை படிக்க விட்ட போது யாருமேகுய்யோ முறையோஎன்று கத்தவில்லை.

தாயக விடுதலைக்காக கரும்புலியாகப் போனவனை, “இது எங்கள் போராட்டம் நீ வளமும், உன் வாழ்வும் உள்ள உன் மலையகத்துக்குப் போஎன்று சொல்ல பிரபாகரனே சொல்லவில்லை.

புலிகள் அறிவித்தவுடன், “ஊரில் உழாத மாடு வன்னியில் எப்படி உழும்என்று சொன்னவர்கள் வன்னிக்கு இடம் பெயர்ந்து  வாழவில்லையா?

புகையிலைத் தோட்டம், மிளகாய் தோட்டம் என்று வாழ்ந்தவன் இடம் பெயர்ந்து 10,000 கிலோ மீற்றர்கள் பறந்து வந்து சீமையிலே வாழ முடிந்தது என்றால்,தேயிலைத் தோட்டத்தில் வாழ்ந்தவன் உள்ளூரில் இடம் பெயர்ந்து வாழ முடியாதா?

சுமந்திரனை நீங்கள் தூற்றுங்கள். பாரளுமன்றத்தில் யாராவது பிரபாகரனுக்கு பிறந்தநாள் சொன்னால் போற்றுங்கள். அது உங்கள் விருப்பம். சுமந்திரன் சொன்னார் என்பதற்காக நல்லதை எதிர்ப்பது எந்தவகையில் நியாயம்?

ஒன்று நிச்சயம் கால் மேல் கால் போட்டு மல்லாக்காகப் படுத்திருந்து வானத்தை நோக்கி துப்பிக் கொண்டிருப்பவர்களால் ஈழத் தமிழர்களுக்கு எந்த பிரயோசனமும் கிடையாது.

மலையகம்.

மலயகத்திற்கென்று ஒரு தனி அரசியல் தளம் இருக்கின்றது. அங்கே யாரும் வாலாட்ட முடியாது. அன்றைய தொண்டமான் தொடக்கம் இன்றைய தொண்டமான்கள் வரைக்கும் மலையக அரசியல் பாணி தனி வழி. அது திராவிட நட்புகளை கொண்டது.

மலைய அரசியலில் இனவாத சிங்கள அரசியல் இல்லை. அப்படியிருந்தும் ஏன் தோட்டத் தொழிலாளர்களால் ஒரு எல்லையை மீறி முன்னேற முடியவில்லை?அதைப்பற்றி ஏன் நீங்கள் கேள்வி எழுப்பவில்லை? நூற்றாண்டு கால சரித்திரம் உள்ளவர்கள் அல்லவா மலையக தமிழர்? ஒரு அங்குலம் கூட அவர்கள் ஏன் அவர்களால் முன்னுக்கு வரமுடியவில்லை. ஏன் எதனால் என்பதை பற்றி ஒரு கட்டுரை,பந்தியாவது எழுதியிருக்கின்றீர்களா?

காலம் காலமாகத்தான் மலையக பிரதேசங்களில் மண்சரிவுகளும் அழிவுகளும் வந்து போகின்றன.அப்போது காணாத கண்கள் இப்போது சுமந்திரன் சொல்லிவிட்டார் என்பதற்காக குத்தி முறிகின்றீர்கள்.ஏன் அன்றைய கால அழிவுகளுக்கெல்லாம் குரல் கொடுக்கவில்லை. மீள் குடியேற்ற சிந்தனைகள் வரவில்லை? சரி வேண்டாம் மலையகத்தில் கஷ்டப்படுபவர்களுக்காக நிதியுதவி பற்றி யாராவது இங்கு விவாதித்திருக்கின்றார்களா?

பாதிக்கப்பட்டவர்களை வடபகுதியில் குடியேற்ற முடியும். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் அவர்களுக்குரிய வாழ்வாதாரம் பற்றி யாராவது விவாதித்தார்களா? மீண்டும் வீட்டு வேலைகள்,தோட்ட வேலைகள் தான் அவர்கள் வாழ்வாதாரம் என்றால் அவர்கள் அங்கேயே இருப்பது புத்திசாலித்தனம்.

மற்றும் படி தமிழ் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அங்கிருந்து அகற்றுவதன் மூலம் சிங்கள பொருளாதாரத்தை வீழ்த்த முடியும் என கனவு கண்டால் அதுவும் பொய்க்கனவாகவே அமையும்.

பத்தாயிரம் மைல் கடந்து வாழ்வது பணம் படைத்த நாடுகளில்.....இங்கே எப்படியும் வாழலாம்.....அந்த நாடுகளிடம் பணம் இருக்கு...உதவி செய்கின்றார்கள். செய்வார்கள்.வேலைக்கு போகாமல் விட்டாலும் வாழலாம். இது அங்கு சாத்தியமா?

மற்றும் படி தமிழீழ நிகழ்ச்சி நிரலில் மலையகமும் ஒரு அங்கம் என்பதனை இங்கே பலருக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

புங்குடுதீவில் எத்தனை சதவீதம் புங்குடுதீவு மண்ணை பூர்வீகமாகக் கொண்டோர் வாழ்கின்றனர் என்று உங்களுக்கு தெரியுமா??

வெளிநாடுகளில் வெளிஊர்களில் அதிலும் வன்னி நிலப்பரப்பில் எத்தனை கிராமங்கள் புங்குடுதீவு தீவுமக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர் என்பது தெரியுமா? அது ஏன் என்றாவது உங்களுக்கு புரியுமா??

மலையக மக்களை குடியேற்ற கரம்பனில் வீடுகள் சும்மா கிடக்கிறது என்பவரிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும். ???

ஓம் தெரியும்.

ஆக நீங்கள் சொல்வது?

புங்குடுதீவு/யாழ்/வடக்கு மக்கள் கெட்டிக்காரர் அவர்கள் எந்த ஊர், நாடு போனாலும் அந்த ஊருக்கு ஏற்ப பிழைத்து நல்லா வருவார்கள்.

ஆனால் மலையக மக்களுக்கு கரம்பனில் இருக்க இடமும், தொழிலுக்கு உதவியும் கொடுத்தாலும் அவர்களால் முடியாது. ஏனெனில் அவர்கள் மொக்கர்.

சரியாக புரிந்துள்ளேந்தானே?

10 hours ago, island said:

சிங்கள குடிநேற்றமும் பிடிக்காது , தமிழ் குடியேற்றமும் பிடிக்காது. தமிழ் தேசியர்கள் உலகில் ஒரு வினோதமான பிறவிகள் தான்.

தாங்காளும் போய் இருக்காயினம்🤦‍♂️

9 hours ago, குமாரசாமி said:

மற்றும் படி தமிழீழ நிகழ்ச்சி நிரலில் மலையகமும் ஒரு அங்கம் என்பதனை இங்கே பலருக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

ஆதாரம் எங்கே?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, வாத்தியார் said:

அதாவது ஏழைகள் எங்கும் எப்போதும் உங்கள் கருத்தின்படி குடியேறிகளாக வாழ முடியும்

ஆனால் அவர்களிடமிருந்து உறிஞ்சப்பட்ட ரத்தத்திற்கான விலை கிடைக்காது அல்லது கிடைக்கவும் தேவையில்லை

அவர்களுக்கு அவர்களின் நிலத்திலேயே பாதுகாப்பான வீடு கிடைக்கக் கூடாது

அதற்குப் பதிலாக இன்னொரு இடத்தில் அவர்களை மீண்டும் ஒருமுறை,,,,,,,

இன்னும் ஒரு 200 ஆண்டுகளுக்கு அகதிகளாக குடியமர்த்தி விட்டால் உங்களின் தலைவருக்கு தகுந்த சன்மானம் கிடைக்கும் 😇

எனக்கு சுமன் தலைவர் இல்லை. ஆனால் உங்களுக்கு பைத்தியர்தான் ஆதர்ச புருடர் என்பதை களம் அறியும்.

மிக தெளிவாக மேலே சொல்லி உள்ளேன் சுமன் சும்மா வாய்ப்பேச்சுக்கு சொல்லி உள்ளார்.

ஆனால் அவர் சொன்ன கருத்து மிக சரியானது.

சுமனை விட்டு விட்டு நாம் கருத்தைதான் ஆராயவேண்டும்.


நீங்கள் இஸ்ரேலின், தென் கொரியாவின் right to return பற்றி கேள்விபடவில்லையா?

எந்த யூதனும், எந்த கொரியனும் எங்கே இருந்தும் அங்கு போய் வாழ முடியும்.

அப்படித்தான் தலைவர் கண்ட தமிழீழம் தமிழருக்கு இருந்திருக்கும்.

குறைந்த பட்சம் இலங்கை தமிழ் பிரசைகளுக்காவது வடக்கை இப்படி ஒரு இடமாக வைத்திருக்க வேண்டும் என்பது உன்னத நோக்கம்.

200 வருடமாக செய்த உழைப்புக்கான பலனை இந்த மக்களுக்கு இலங்கை கொடுத்து விட்டதா?

இல்லவே இல்லை.

மலையகத்தை விட்டு வன்னி, மேல்மாகாணம் என வெளிக்கிட்ட மக்கள், பெருந்தோட்டங்களில் தங்கிவிட்ட மக்களிலும் எவ்வளவோ மேம்பட்டு உள்ளார்கள்.

1000 வருடம் ஆனாலும் பெருந்தோட்டத்தில் உள்ள மக்கள் நவீன அடிமைகள்தான்.

இதை ஒரு இனமாக எம்மால் உடைக்க முடியும். வடக்கில் எம் இனப்பரம்பலையும் பேண முடியும்.

ஆனால்….

“என்னது உவயள் யாழ்பாணத்துக்கு, கரம்பனுக்கு வந்து வாழுறதோ?”

எண்ட சுண்ணாம்பு சக்குகட்டிய சிந்தனை அதை தடுக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

அப்படித்தான் தலைவர் கண்ட தமிழீழம் தமிழருக்கு இருந்திருக்கும்.

குறைந்த பட்சம் இலங்கை தமிழ் பிரசைகளுக்காவது வடக்கை இப்படி ஒரு இடமாக வைத்திருக்க வேண்டும் என்பது உன்னத நோக்கம்

❤️ சிறப்பு!!!

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, வாத்தியார் said:

அரசியலில் மட்டும் தான் இதனால் அவருக்கு ஆதாயம் என்று பலரும் நினைக்கலாம். ஆத்மீகம் என்றும் ஒன்று உள்ளதே அதுவும் இப்போது ஆதாயம் தேடும் மார்க்கமாக மாறிவிட்டதே

சுமந்திரனுக்குக் கிடைக்கவிருக்கும் இந்த "ஆத்மீக" ஆதாயம் பற்றியும் கொஞ்சம் விரிவாக எழுதுங்கள்😎!

ஒன்று மட்டும் புரிகிறது: பல "ஈழத்தமிழ் தேசியர்களின்" மெல்லிய மேல் பூச்சைச் சுரண்டி உண்மையான வர்ணத்தை வெளிக் கொண்டுவரும் வேலையைச் செய்யவாவது சுமந்திரன் பேசிக் கொண்டிருக்க வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, island said:

சிங்கள குடிநேற்றமும் பிடிக்காது , தமிழ் குடியேற்றமும் பிடிக்காது. தமிழ் தேசியர்கள் உலகில் ஒரு வினோதமான பிறவிகள் தான்.

காலம் காலமாக பரம்பரம்பரையாக வாழும் ஒருவனை அந்த இடத்தில இருந்து துரத்தும் உங்கள் எண்ணங்கள் அதைவிட வினோதமானது மட்டுமல்ல விசித்திரமானதும்

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Maruthankerny said:

காலம் காலமாக பரம்பரம்பரையாக வாழும் ஒருவனை அந்த இடத்தில இருந்து துரத்தும் உங்கள் எண்ணங்கள் அதைவிட வினோதமானது மட்டுமல்ல விசித்திரமானதும்

பரம்பரை பரம்பரையாக லைன் ஒற்றை அறை குடிசைக்குள் மூன்று, நான்கு தலைமுறைகள் ஒன்றாக வாழ்ந்தபடி, எந்த சமூக, காணி, மனித அங்கீகாரம் கூட இன்றி, உழைக்கும் இயந்திரங்களாக, நவீன அடிமைகளாக… வெறும் 100 கிமி தொலைவில்… வாழும்…

சக தமிழனை…

அவன் சுய விருப்பில்….

எமது இடம் கூட்டி வந்து, அவமாக போகும் எமது மனைகளில் இடம், கொடுத்து, ஒரு தொழிலுக்கான பாதையையும் காட்டலாம் என்கிறோம்…

யூதனோ, சிங்களவனோ தன் சக இனத்தை இப்படித்தான் நடத்தி இருப்பான்.

ஆனால் சுண்ணாம்பு தமிழர்களுக்கு இது வினோதமான கோரிக்கையாக இருக்கிறது.

சிங்களவரின் பாரம்பரிய தாயகத்தில் அவன் நாலாம் தர பிரஜையாக இருப்பதே அவனுக்கு நல்லது என்கிறீர்கள் 😂.

இந்த மனோநிலை வினோதம் அல்ல…

விசம்…விசம்…விசம்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

ஓம் தெரியும்.

ஆக நீங்கள் சொல்வது?

புங்குடுதீவு/யாழ்/வடக்கு மக்கள் கெட்டிக்காரர் அவர்கள் எந்த ஊர், நாடு போனாலும் அந்த ஊருக்கு ஏற்ப பிழைத்து நல்லா வருவார்கள்.

ஆனால் மலையக மக்களுக்கு கரம்பனில் இருக்க இடமும், தொழிலுக்கு உதவியும் கொடுத்தாலும் அவர்களால் முடியாது. ஏனெனில் அவர்கள் மொக்கர்.

சரியாக புரிந்துள்ளேந்தானே?

தாங்காளும் போய் இருக்காயினம்🤦‍♂️

ஆதாரம் எங்கே?

மிகத் தவறான புரிதலும் உள்நோக்கமும். உங்களுக்கு கரம்பன் மண்ணுக்கும் கண்டி மண்ணுக்கும் வித்தியாசம் தெரியாது என்று என்னால் எழுத முடியவில்லை..

நீங்கள் சிலர் என் போன்ற சிலரை எங்கே குற்றம் கண்டு பிடிக்கலாம் எங்கே சிறு தடுமாற்றம் அல்லது கொள்கை சறுக்கலில் சிக்குவார்கள் என்று தான் இங்கே வருகிறீர்கள். எனவே நான் எதை எழுதினாலும் அதை எப்படியாவது உருமாற்றி தான் புரிந்து கொள்வீர்கள். அதனால் தான் யாழில் இருந்து முடிந்தவரை தள்ளி நிற்கிறேன். என்னைப்போல பலர் இங்கே....

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

மிகத் தவறான புரிதலும் உள்நோக்கமும். உங்களுக்கு கரம்பன் மண்ணுக்கும் கண்டி மண்ணுக்கும் வித்தியாசம் தெரியாது என்று என்னால் எழுத முடியவில்லை..

நீங்கள் சிலர் என் போன்ற சிலரை எங்கே குற்றம் கண்டு பிடிக்கலாம் எங்கே சிறு தடுமாற்றம் அல்லது கொள்கை சறுக்கலில் சிக்குவார்கள் என்று தான் இங்கே வருகிறீர்கள். எனவே நான் எதை எழுதினாலும் அதை எப்படியாவது உருமாற்றி தான் புரிந்து கொள்வீர்கள். அதனால் தான் யாழில் இருந்து முடிந்தவரை தள்ளி நிற்கிறேன். என்னைப்போல பலர் இங்கே....

அண்ணை,

நானும் நீங்களும் இந்த திரியில் எதிர் எண்டால் உக்ரேன் திரியில் ஒரே கருத்து. 2017 முதல் இப்படித்தான்.

அதேபோல் நீங்களும் யாழை விட்டு ஒதுங்கவில்லை. ஒதுங்கவும் கூடாது.

எந்த தனிப்பட்ட உள்நோக்கமும் இல்லை. ஆனால் மலையக மக்களை ஊரில் குடிவைக்க இங்கே சொல்லப்பட்ட எந்த காரணும் தர்க வலு அற்றவை.

இந்த எதிர்ப்பின் பின்னால் இருப்பது (நாம் உணரும் (conscious) அல்லது உணரா (unconscious) யாழ் மையவதம் என்பது என் நிலைப்பாடு.

இணைந்திருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

ஆனால் அவர் சொன்ன கருத்து மிக சரியானது.

சுமனை விட்டு விட்டு நாம் கருத்தைதான் ஆராயவேண்டும்.

சரி உங்கள் கருத்துப்படியே செல்வோம்

ஆனால் முதலில் சில கேள்விகளுக்கு நேர்மையான பதில் வேண்டும்....

1.மலையகத்தில் வாழும் அடிமட்ட மக்களுக்கான உதவிகளையும் வாழ்வாதாரத்திற்காக தேவைகளையும் அவர்களுடை நிலத்திலேயே வைத்து செய்ய முடியாதா?

2.முடியாது என்றால் என்ன காரணம் ?

(சிங்கள அரசு செய்து கொடுக்காது என்பது அபத்தமான ஒரு பதிலாக இருக்கும் ஏனெனில் வடக்கு கிழக்கிலும் சிங்கள அரசு மக்களுக்கு ஏதும் பெரிதாகச் செய்து விடவில்லை)

3.தங்கள் உரிமைகளை தேவைகளை பெற்றுக்கொள்ளவதற்காக எந்த வகையில் அந்த மக்கள் முயற்சி செய்கின்றார்கள் ?

4.எந்த அரசியல் தலைவர்கள் அவர்களுடைய தேவைகளையும் வசதிகளையும் செய்து கொடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள் ?

மனோ கணேசன் கூட காணி உரிமை என்பதைக் கூறாமல் மக்களுக்கான நிலங்கள் கிடைக்காவிட்டால்....... மட்டுமே....... (வடிவாகக் கவனிக்க வேண்டிய இடம்) வட கிழக்கிற்குச் செல்ல மக்கள் தயார் என்று அறிவிப்புச் செய்ததை நியாயப்படுத்தும்அரசியல்வாதிகள்

அரசியல் லாபம் தேட முயற்சிக்கவில்லையா ?

முடிந்தால் அரசியல் பசப்பு வார்த்தைகளை அள்ளி வீசாமல் பதில் தாருங்கள் 😂

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, வாத்தியார் said:

சரி உங்கள் கருத்துப்படியே செல்வோம்

ஆனால் முதலில் சில கேள்விகளுக்கு நேர்மையான பதில் வேண்டும்....

1.மலையகத்தில் வாழும் அடிமட்ட மக்களுக்கான உதவிகளையும் வாழ்வாதாரத்திற்காக தேவைகளையும் அவர்களுடை நிலத்திலேயே வைத்து செய்ய முடியாதா?

2.முடியாது என்றால் என்ன காரணம் ?

(சிங்கள அரசு செய்து கொடுக்காது என்பது அபத்தமான ஒரு பதிலாக இருக்கும் ஏனெனில் வடக்கு கிழக்கிலும் சிங்கள அரசு மக்களுக்கு ஏதும் பெரிதாகச் செய்து விடவில்லை)

3.தங்கள் உரிமைகளை தேவைகளை பெற்றுக்கொள்ளவதற்காக எந்த வகையில் அந்த மக்கள் முயற்சி செய்கின்றார்கள் ?

4.எந்த அரசியல் தலைவர்கள் அவர்களுடைய தேவைகளையும் வசதிகளையும் செய்து கொடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்கள் ?

மனோ கணேசன் கூட காணி உரிமை என்பதைக் கூறாமல் மக்களுக்கான நிலங்கள் கிடைக்காவிட்டால்....... மட்டுமே....... (வடிவாகக் கவனிக்க வேண்டிய இடம்) வட கிழக்கிற்குச் செல்ல மக்கள் தயார் என்று அறிவிப்புச் செய்ததை நியாயப்படுத்தும்அரசியல்வாதிகள்

அரசியல் லாபம் தேட முயற்சிக்கவில்லையா ?

முடிந்தால் அரசியல் பசப்பு வார்த்தைகளை அள்ளி வீசாமல் பதில் தாருங்கள் 😂

பசப்பு வார்த்தை பேச நான் என்ன அருச்சுனாவா 😂.

பதில்கள் கீழே

  1. முடியாது

  2. மிக முக்கியகாரணம் கட்டமைப்பாக விரிந்துள்ள வர்க, இனவாதம். இங்கே நாம் தோட்ட மக்களை மட்டுமே அலசுகிறோம். அவர்கள் நில உரிமை அற்றவர்கள். அதாவது அவர்கள் இருக்கும் பகுதிகள் அநேகம் உள்ளூராட்சி சபை அன்றி தோட்ட நிர்வாகத்தின் கீழ் வருவன. இது அவர்களை சம பிரஜைகளாக வாழ விடாமல் தடுக்க அமைக்கப்பட்ட திட்டமிட்ட பொறிமுறை. அவர்களுக்கு தொழிலுடன் குடியிருப்பும் இணைக்கப்படுகிறது. எனவே இந்த முறையில் இருந்து வெளி வந்தால், இரெண்டும் போய்விடும். கிராமமங்களுள் அவர்களை நடமாடவே சிங்களவர் அடிக்கடி கெடுபிடி செய்வார்கள். அருகில் உள்ள கிராமங்களில் குடி அமர்த்த, அல்லது இவர்களுக்கு ஒரு கிராமத்தை அமைக்க முனையின் பிக்குகள் தலைமையில் கிராமமே சேர்ந்து எதிர்க்கும். ஆகவே இருக்கும் ஒரே தெரிவு லைன் வீடு, 1000 ரூபாய் சம்பளம் என இவர்களை சந்ததி சந்ததியாக கட்டிப்போட்டுள்ளனர். இதை எதிர்த்து அவர்களை மலையகத்தில் சிங்களவருக்கு நிகரான சம பிரசைகள் ஆக்குவது. தமிழ் ஈழம் எடுப்பதை விட கடினமானது.

  3. பலநூற்றாண்டு காலமாக தொர, சாமி என அடிமைபட்டு போன மக்கள் கூட்டம். இன்றும் அதிகாரத்தின் மீது “பெரியவன்” மீது அதீத பயம் இருக்கிறது. தவிர தொழிற்சங்கங்கள், ஈரோஸ், ஈபி, ஜேவிபி எல்லாரும் இவர்களை பயன்படுத்தினரே ஒழிய, அரசியல் ஓர்மத்தை வளர்க்கவில்லை. எந்தளவுக்கு என்றால் மின்னல் ரங்கா போல ஒரு மரம்தாவியை தமது எம்பியாக்குள் அளவுக்கு அரசியல்படுத்த படாத மக்கள். இவர்களின் அரசியல் அனைத்தும், நவீன கங்காணிகளாக இருக்கும் சில குடும்பங்களால் கட்டுப்படுத்தபசுகிறது. எனவே அவர்கள் போராட வாய்ப்பில்லை.

  4. எவரும் இல்லை. வாக்குகளுக்காக சில சலுகைகளை பெற்று கொடுப்பார்கள். இவர்கள் தோட்டத்தை விட்டு நாட்டு மக்கள் ஆகி விட்டால் தமது வாக்கு வங்கி, மிராசுத்தனம் பாதிக்கப்படும் என்பதால் இவர்களை இப்படியே வைத்திருக்கவே இவர்களின் அரசியல் தலைமைகளும் விரும்புகிறன.

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மக்களை மீட்ப்பதற்காக மனிதாபிமானப்போர் புரிந்து மக்களை மீட்டோம் என்று மார் தட்டி விழா எடுத்தார்கள். அந்தமக்களுக்கு மாற்றுத்துணி இல்லை, அடுத்தவேளை உணவு இல்லை, கழிப்பிட வசதியில்லை, உறங்க கூரையில்லை, மந்தைகள் போல் வெளியில் அடைத்தார்கள், அந்த மக்கள் அனுபவித்த சுதந்திரம் கூட இல்லை. அவர்களை அவர்கள் சொந்த இடத்தில வாழ விடாமல் துரத்துவதற்கு அவர்களது வாழ்விடங்களை சூறையாடுவதற்கும் அடுத்த வேளைக்கு அடுத்தவர் கையை எதிர்பாத்து அடிமையாக்கியதே இவர்கள் செய்த சாதனை. அவர்களை அவர்கள் இடத்தில வாழுவதற்கு வழிவகை செய்வதே அவர்களுக்கு செய்யும் உதவியாக இருந்திருக்கும். தங்களது இரத்தம் வியர்வை சிந்தி காட்டை மேடாக்கி வளமாக்கியவர்கள் அவர்கள். அவர்கள், எங்களை இந்த இடத்திலிருந்து வேறொரு இடத்தில குடியிருத்துங்கள் என்று கோரவில்லை. அந்த மண் அவர்களுக்குரியது. அதை அவர்களது உரிமையாக்குவதற்கு என்ன செய்யலாமென ஆராய்ந்து அதற்கான செயற்பாடுகளை செய்ய வேண்டும். அவர்களது அவலங்களில் அரசியல் செய்ய முயலக்கூடாது. வெளிநாட்டில் குடும்பம், உறவுகள் யாரும் நம் நாட்டில் இல்லை, போர்க்காலத்தில் தமது வீட்டை இழந்த அயலவரை குடியிருக்கும்படி சொன்னார்கள் அந்த புலம்பெயர்ந்த தமிழர். பற்றைக்காடாக கிடந்த காணியை, பாம்புப்புற்று நிறைந்திருந்த வீட்டை சுத்தம் பண்ணி, சோலையாக வைத்திருந்தார்கள். எல்லாம் நிறைவானபின், அவர்கள் இன்னொரு இல்லிடத்தை தேடவும் அவகாசம் கொடுக்காமல் அவர்களை தெருவில் விரட்டியது இந்த புலம் பெயர் கூட்டம். இன்னும், வெளிநாடுகளிலிருந்து அதிகாரம் பண்ணுவோர், கண்காணித்து கேள்வி கேட்போர் இருக்கிறார்கள். இதில மலையக மக்களை வரவழைத்து வாழவைக்கப்போகிறார்களாம். ஒரு சில குடும்பத்தையே பொறுப்பெடுக்க பல யோசனை, உறவுகளை சகோதரர்களை வாழவைப்பதற்கே எத்தனையோ காரணங்கள் கூறுகிறார்கள். மலையக மக்கள் ஒன்று இரண்டு குடும்பமா இவர்கள் பெருந்தன்மையாக குடியேற்றி வாழ வைப்பதற்கு? அவர்களுக்கு இங்கு அநிஞாயம் நடந்தால், கேட்பதற்கு நாதியில்லை. தெருவிற்தான் அவர்கள் விடப்படுவார்கள். அவனவன் காணியையே எல்லையை கூட்டுவதும், அடாவடி பண்ணி பறிப்பதும், இடிப்பதும் தெரியாததா என்ன? ஜதார்த்ததை சிந்தியுங்கள். அவலங்களில் அரசியல் செய்வதும், உண்மையை பேசுபவர்களை குற்றம் காண்பதும், ஏதோ சுமந்திரன் சொன்னால் செய்பவர் போலவும் சுமந்திரனின் அபிமானிகள் கூச்சல் போடுவதும் தான் மிச்சம். எங்கே, சுமந்திரன் தன் வீட்டின் பக்கத்தில் ஒரு அறையை ஒரு பாதிக்கப்பட்டவருக்கு உறங்க கொடுக்கட்டும் பாப்போம்?

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

அண்ணை,

இந்த எதிர்ப்பின் பின்னால் இருப்பது (நாம் உணரும் (conscious) அல்லது உணரா (unconscious) யாழ் மையவதம் என்பது என் நிலைப்பாடு.

இணைந்திருங்கள்.

இது இரண்டிற்குள்ளும் நானில்லை.

பட்டறிவிலிருந்து கற்ற பாடம். அகதியாக ஓடி வந்து நான் படும் வேதனை. ஒரு மண்ணில் இருந்து ஒருவரை அடியோடு புடுங்கி......

அதுவும் அவர் அதை கேட்காதபோது...??

சுமந்திரன் இதை சொன்னார் என்று அதை நான் பார்க்கவில்லை. ஆனால் இங்கே சுமந்திரன் சொன்னதால் தான் என்று வாதிடுவோர் நான் இதை சொவ்லியிருந்தால் ஏன் முள்ளிவாய்க்காலில் கொடுத்தது போதாதா? இவர்களையுமா ...? என்று தான் முடித்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மலையக தமிழ் மக்களின் நில உரிமை உட்பட அனைத்து அடிப்படை உரிமைகளையும் மறுதலித்து மலையக தமிழ் மக்கள் மீதான சிங்கள பேரின இனச்சுத்திகரிப்டஸ்ரீபுக்க துணை போவதே இந்த அழைப்பின் உண்மை நோக்கம்.

போர் கால பாதுகாப்பு முஸ்லிம் குடிபெயர்வை இனச்சுத்திகரிப்பு என்றவர் இந்த இன சுத்திகரிப்புக்கு தெரிந்தும் துணை போவது ஏன்??

அ. திட்டமட்ட கருத்தடை

ஆ. மக்கள் நல அபிவிருத்தி இன்மை

இ. உழைப்புக்கு ஏற்ற ஊதியமினமை

ஈ. பாதுகாப்பற்ற வாழ்விடங்கள்

உ. நீர்தேக்க விரிவாக்கம் என்ற போர்வையில் வாழிட நிலப்பறிப்பு

ஊ. நிர்வாகம் கல்வி கலாசாரம் சிங்கள பௌத்த மயமாக்கம்

எ. விகிசாதார கல்வி வேலை வாய்ப்பில் புறக்கணிப்பு

ஏ. தோட்ட மக்களின் நவீன தேவைகளுக்கு பிற நகரங்களை தங்கி இருக்கரசெய்தல்

ஐ. திட்டமிட்ட இனக்கலவரங்கள் சொத்தழிப்பு

ஒ. இயற்கை அனர்த்தங்களுக்கு சரியான நிவாரணமின்மை.. எதிர்கால அனர்த்தங்களில் இருந்து பாதுகாக்க நீண்ட கால திட்டங்கள் செயற்படுத்தாமை.

இவற்றோடு இயற்கை அனர்த்த அழிவை பயன்படுத்தி மலையக தமிழ் மக்களை துரித இனச்சுத்திகரிப்பு செய்ய நிற்கும் ஜேவிபிக்கு இவர் ஏன் அடி எடுத்து கொடுக்கிறார்????

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

மலையக தமிழ் மக்களின் நில உரிமை உட்பட அனைத்து அடிப்படை உரிமைகளையும் மறுதலித்து மலையக தமிழ் மக்கள் மீதான சிங்கள பேரின இனச்சுத்திகரிப்டஸ்ரீபுக்க துணை போவதே இந்த அழைப்பின் உண்மை நோக்கம்.

போர் கால பாதுகாப்பு முஸ்லிம் குடிபெயர்வை இனச்சுத்திகரிப்பு என்றவர் இந்த இன சுத்திகரிப்புக்கு தெரிந்தும் துணை போவது ஏன்??

அ. திட்டமட்ட கருத்தடை

ஆ. மக்கள் நல அபிவிருத்தி இன்மை

இ. உழைப்புக்கு ஏற்ற ஊதியமினமை

ஈ. பாதுகாப்பற்ற வாழ்விடங்கள்

உ. நீர்தேக்க விரிவாக்கம் என்ற போர்வையில் வாழிட நிலப்பறிப்பு

ஊ. நிர்வாகம் கல்வி கலாசாரம் சிங்கள பௌத்த மயமாக்கம்

எ. விகிசாதார கல்வி வேலை வாய்ப்பில் புறக்கணிப்பு

ஏ. தோட்ட மக்களின் நவீன தேவைகளுக்கு பிற நகரங்களை தங்கி இருக்கரசெய்தல்

ஐ. திட்டமிட்ட இனக்கலவரங்கள் சொத்தழிப்பு

ஒ. இயற்கை அனர்த்தங்களுக்கு சரியான நிவாரணமின்மை.. எதிர்கால அனர்த்தங்களில் இருந்து பாதுகாக்க நீண்ட கால திட்டங்கள் செயற்படுத்தாமை.

இவற்றோடு இயற்கை அனர்த்த அழிவை பயன்படுத்தி மலையக தமிழ் மக்களை துரித இனச்சுத்திகரிப்பு செய்ய நிற்கும் ஜேவிபிக்கு இவர் ஏன் அடி எடுத்து கொடுக்கிறார்????

"போர்க்கால பாதுகாப்பு முஸ்லிம் குடிபெயர்வு!"

வாவ்😂! என்ன ஒரு "சொற் சிலம்பம்" நெடுக்கர். முஸ்லிம்கள் "தாமாகவே சொத்துக்களை விட்டு விட்டு போர் சூழலில் இருந்து குடி பெயர்ந்தனர்" என்று எதிர்காலத்தில் எழுதுவார்கள் என நினைக்கிறேன்😂.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.