Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கேயிருந்து வருகின்ற சத்தம் கிழக்கே இல்லையே. ஏன்?

large.IMG_9310.jpeg.66c27db3a9b52d54af29

  • Replies 159
  • Views 7.4k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    நாற்பது, ஐம்பதுகளின் இலங்கையின் இருந்த பிரதேச பாகுபாடுகள் மலையகத் தமிழர்களின் வாழ்க்கையை ஆழமாக பாதித்திருந்தது. குறிப்பாக யாழ்ப்பாணப் பகுதியில் சில யாழ்ப்பாணத் தமிழர்கள், தேயிலைத் தோட்டங்களில் இருந்து

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    உங்களது இந்த வரிகள் எனக்கு இதை எழுத வைத்தது. நன்றி goshan_che அறுபதுகளின் நடுப்பகுதியில், ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா காலத்தில், விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் “படித்த வாலிபர் திட்டம்” என்ற பெயர

  • Sasi_varnam
    Sasi_varnam

    என்னை பொறுத்தவரையில் இது எப்போதோ நடந்திருக்க வேண்டிய ஒரு காலக் கடமை. 200 வருட அடிமை சாசன வாழ்க்கையில் அந்த பெருந்தோட்ட மக்கள் கூட்டம் அடைந்த முன்னேற்றம் என்பது ஆமை வேகத்தில் தான் நடந்திருக்கிறது. இன்ற

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kavi arunasalam said:

வடக்கேயிருந்து வருகின்ற சத்தம் கிழக்கே இல்லையே. ஏன்?

large.IMG_9310.jpeg.66c27db3a9b52d54af29

புலம் பெயர்ந்தவர்கள் எல்லாம் வடக்கைச் சேர்ந்தவர்களோ?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

இது இரண்டிற்குள்ளும் நானில்லை.

பட்டறிவிலிருந்து கற்ற பாடம். அகதியாக ஓடி வந்து நான் படும் வேதனை. ஒரு மண்ணில் இருந்து ஒருவரை அடியோடு புடுங்கி......

அதுவும் அவர் அதை கேட்காதபோது...??

சுமந்திரன் இதை சொன்னார் என்று அதை நான் பார்க்கவில்லை. ஆனால் இங்கே சுமந்திரன் சொன்னதால் தான் என்று வாதிடுவோர் நான் இதை சொவ்லியிருந்தால் ஏன் முள்ளிவாய்க்காலில் கொடுத்தது போதாதா? இவர்களையுமா ...? என்று தான் முடித்திருப்பார்கள்.

அண்ணை யாரும் யாரையிம் அடியோடு புடுங்க, கேட்காமல் இழுத்து வர கேட்கவில்லை.

அவர்கள் எமம்முடன் வந்து வாழும் ஏது நிலையை உருவாக்குவோம்…

முதலில் ஒரு சிலர் வரட்டும்…அவர்களை கைதூக்கி விடுவோம்…

அதன் பின் அவர்கள் ஏனையோரை அழைப்பர்…அடித்தடுத்த சந்ததி..அவர்களுக்கு அவர்களே வழிகாட்டுவார்கள்.

இப்படித்தானே அண்ணை, கொழும்பையே காணாத, ஊரில் காலை எழுந்ததும் பனங்கூடலுக்க ஒதுங்கின ஆட்களை எல்லாம் இலண்டன், பரிஸ், கனடா எண்டு எடுத்து விட்டு…இப்ப அவை எல்லாம் செருப்பு போடாமல் நடக்க முடியாது எண்டு சொல்லும் அளவுக்கு “முன்னேறி” இருக்கினம்.

2026 இல் 50 குடும்பங்களை, 200 தனி ஆண்களை இப்படி எடுத்து விட்டால், ஆண்டு 9+ படிக்கும் பிள்ளையள் 200 பேரை எமது பள்ளிகளில், பள்ளிக்கு 20 பேர் என ஹொஸ்டலில் சேர்த்து விட்டால்—-

2056ம் வருடத்தில் லைன், தேயிலை பறிக்கும் தொழில் எதுவும் இருக்காது.

தேயிலை ஒன்றில் சிங்களவர் பறிக்கலாம், அல்லது அதற்குரிய சம்பளத்தில் சகல இனத்தவரையும் வேலைக்கு அமர்த்தலாம் அல்லது தானியங்கிகளை அறிமுகம் செய்யலாம்.

வளைவு, கோபுரம், கோவில், விளையாட்டு மைதான சுற்று மதில், அம்மா, அப்பா பெயரில் அன்னதானம்…

#இன்ன யாவிலும் புண்ணியம் கோடி

புண்ணியம் மட்டும் இல்லை, வடக்கும் தொடர்ந்து தமிழர் நிலமாக நிலைக்கும்😂.

அதாவது மாவட்டம்/மாகாணத்துகுரிய வழமையான 100% சுயநலத்துடன் சிந்தித்தால் கூட இது நல்ல விடயமே😎.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனின் “அடுத்த தீபாவளிக்குள் தீர்வு” ஜவ்வு மிட்டாய் போல…

மலையகமக்களை தோட்டங்களிலேயே ராஜாவாக்குவோம்.. என இங்கே சில அறை கூவல்களை கேட்க கூடியதாக உள்ளது.

ராசாமார்….உங்களுக்கு சிங்களவன் தமிழ் ஈழம் கூட தருவான்…ஆனால் இதை செத்தாலும் செய்யமாட்டான்….

இது உங்களுக்கும் தெரியும்.

ஆனால் நேரடியா மலையக மக்கள் எம் ஊரில் வேண்டாம் என சொன்னால் இமேஜ், டமேஜ் ஆகிவிடும் என்பதால், இப்படி ஒரு சம்பந்த வியாக்கியானம் கொடுக்கிறீர்கள்.

ஆப்கானிய, எகிப்திய, ஜோர்தானிய, லெபனானிய இன்னும் பல நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் துன்புற்ற யூதர்களை இஸ்ரேல், உள்ளே எடுத்து, வீடும் காணியிம், தொழிலும் கொடுத்தத்து.

இப்படி செய்யதால் அது இனச்சுத்தீகரிப்பாகிவிடும்…எனவே நீங்கள் அங்கேயே கிடந்து மாளுங்கள் என சக யூதர்களை அவர்கள் விட்டு விடவில்லை.

ம்ம்ம்…அவன் யூதன்…கூர்ப்பில் முன்னேறியவன்.

நாங்கள் பெயருக்குத்தான் ஜப்னா ஜூ 😂.

மூலோபாய சிந்தனை அறவே அற்ற கூட்டம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, goshan_che said:

2026 இல் 50 குடும்பங்களை, 200 தனி ஆண்களை இப்படி எடுத்து விட்டால், ஆண்டு 9+ படிக்கும் பிள்ளையள் 200 பேரை எமது பள்ளிகளில், பள்ளிக்கு 20 பேர் என ஹொஸ்டலில் சேர்த்து விட்டால்—-

இதையெல்லாம் யார் எந்த கட்டமைப்புடன் தலையேற்று நடத்துவது? அதற்கான திட்டங்கள் உங்களிடம் ஏதாவது இருக்கின்றதா?

1 hour ago, goshan_che said:

ஆப்கானிய, எகிப்திய, ஜோர்தானிய, லெபனானிய இன்னும் பல நாடுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தால் துன்புற்ற யூதர்களை இஸ்ரேல், உள்ளே எடுத்து, வீடும் காணியிம், தொழிலும் கொடுத்தத்து.

இப்படி செய்யதால் அது இனச்சுத்தீகரிப்பாகிவிடும்…எனவே நீங்கள் அங்கேயே கிடந்து மாளுங்கள் என சக யூதர்களை அவர்கள் விட்டு விடவில்லை.

யூத இனத்திற்கென்று ஒரு தனி பூமி இருக்குன்றது.அவர்கள் ஆட்சி செய்யும் பூமி அது. அவர்கள் ஏது செய்தாலும் தடை போட யாரும் இல்லை. உலகில் உள்ள அனைத்து யூதர்களையும் உள்ளே வாங்க முடியும். ஆனால் வடகிழக்கு தமிழர் பகுதி என நாங்கள் சொல்லத்தான் முடியும்.ஏனைய ஏனைய விடயங்களில் சிங்கள அனுமதியில்லாமல் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது என்பதை சில நலன்புரி இயக்கங்கள் மீதான அழுத்தங்கள் உதாரணமாக அமைகின்றது.

உங்களுக்குள் ஈழத்தமிழர்கள் நலன்புரி சம்பந்தமான நீண்ட வரைபடம் உள்ளது போல் தெரிகின்றது. வெளியே இழுத்து விடுங்கள். போற வழிக்கு புண்ணியமாகும்.

2 hours ago, goshan_che said:

நாங்கள் பெயருக்குத்தான் ஜப்னா ஜூ 😂.

மூலோபாய சிந்தனை அறவே அற்ற கூட்டம்.

இதைத்தான் பிரதேசவாதம் என்கிறேன்.👆

தமிழீழம் சாத்தியம் என நிழல் அரசு அமைத்து காட்டியவர்கள் ஈழத்தமிழர்கள்.அங்கே பிரதேசவாதம் வரவில்லை.

ஆனாலும் அதற்குள்ளும் பிரதேசவாதத்தை உட் புகுத்தியவர்கள் யார்...யார் என்பதை இந்த ஊர் உலகம் அறியும்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:
  1. முடியாது

  2. மிக முக்கியகாரணம் கட்டமைப்பாக விரிந்துள்ள வர்க, இனவாதம்.

தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய உரிமைகளை பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமை அந்த இடங்களில் அரசியல் செய்யும் கட்சிகளுக்கும் அரசுக்கும் நிச்சயமாக இருக்கு .

ஆனால் சிங்கள அரசுக்கும் மலையக அரசியல் வாதிகளுக்கும் மனம் இல்லை .எந்த ஒரு மலையாகத் தமிழ் அரசியல் கட்சியும் சிங்கள அரசிற்கெதிரான ஒரு சிறு அளவிலான அகிம்சைப் போராட்டத்தையும் செய்யும் நிலையில் இல்லை.

மலையக மக்களை இப்படியான சங்கடத்தில் வைத்திருந்தாலே அவர்களுக்கு வாக்கு வேட்டை செய்ய வசதியாக இருக்கும்-

இப்போது அனுரா திசாநாயக்க நாட்டின் தலைவராக வந்திருப்பதால் அவரின் மீதான தனிப்பட்ட ஒரு நம்பிக்கையினால் பல உலக நாடுகளும் அவருக்கான ஆதரவைத் தெரிவித்து வரும் நிலையில்

இந்த NPP அரசால் இந்த மலையக மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என மலையக மக்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் அரச நிர்வாகத்தினர் யாரையும் கூட்டாக வேறு இடத்தில் குடியேற அனுமதிக்க மாட்டார்கள்.

மனோ கணேசனின் ஒரு பேட்டி பார்த்தேன் அதில் அவரே சொல்கின்றார்

லட்சக்கணக்கில் மக்களை இடம்பெயர வைத்தால் எங்கள் பிரதி நிதித்துவம் பாராளுமன்றில் இல்லாம போய்விடும்.என்று

ஆகவே அரசியல்வாதிகள் தங்கள் முனைப்பில் கருத்தாக இருக்கின்றார்கள் என்பது அவருடைய அந்தக் கூற்றில் இருந்து தெரிய வருகின்றது

அடுத்து நீங்கள் கூறுவது போல ஒரு சில நூறு அல்லது ஆயிரம் மலையக மக்களை முதலில் வடக்கு கிழக்கில் குடியேற்றி அவர்களுக்கான ஆவனங்களை செய்து கொடுக்கலாம் என்பது .

வடக்கு கிழக்கு மக்களின் தேவைகளுக்காக மட்டுமே இந்த நூறு அல்லது ஆயிரம் மக்களும் பயன்படுத்தப்படுவார்கள்.

மலையக மக்களின் குழந்தைகளின் கல்வி என்பது கேள்விக்குறி ஆக்கப்படும் அந்த மாணவர்களால் வடக்கு கிழக்கு மாணவர்களின் போட்டிக் கல்வி முறையில் தேற முடியாத சந்தர்ப்பங்கள் அதிகமாக உருவாகும். .

இப்படிப் பல சிக்கல்களினால் அவர்களின் முன்னேற்றம் இன்னும் சில தசாப்தங்களுக்குப் பின்தள்ளப்படும்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இதையெல்லாம் யார் எந்த கட்டமைப்புடன் தலையேற்று நடத்துவது? அதற்கான திட்டங்கள் உங்களிடம் ஏதாவது இருக்கின்றதா?

ஐயா பெரியவரே,

எந்த தர்க்கமும் தோற்கும் போது, நீ என்ன செய்தாய். என்ன செய்கிறாய், என்ன செய்வாய் என மடை மாற்றுவது உங்கள் வழமையான உத்திதான்.

நான் இங்கே மனோ, சுமந்திரன் என்ற மனிதர்களை பற்றியோ, அல்லது அவர்கள் சொன்ன விடயத்தை நடைமுறை படுத்த என்னிடம் திட்டம் உள்ளது என்றோ - அல்லது அதை தலைமை ஏற்று யார் செய்ய கூடும் என்பது எனக்கு தெரியும் என்றோ எங்கும் எழுதவில்லை.

அவர்கள் சொன்ன கருத்து, கொள்கை அளவில் - சரியானது, தேவையானது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, goshan_che said:

அவர்கள் சொன்ன கருத்து, கொள்கை அளவில் - சரியானது, தேவையானது.

எல்லாம் சரிதான்.

அவர்கள் சொல்வதும் சரிதான். அதே போல் நீங்கள் சொல்வதும் சரிதான். இதை யார் தலைமையில் முன்னெடுப்பது? எப்படியான சட்ட திட்டங்களில் இதை செய்ய முடியும் என்றாவது நீங்கள் சொல்ல வேண்டும்.

ஒரு நிதர்சனமான வழியை காட்டினால் மாற்றுக்கருத்துக்கள் வராது என நான் நினைக்கின்றேன்.

மலையக தமிழர்களின் வாழ்வை வைத்து பட்டிமன்றம் நிகழ்த்த தேவையில்லை என்பது என் கருத்து.

மலையக தமிழர்களின் வாழ்வு செழிக்க வேண்டும் என்பது அனைவரின் நோக்கம் என்பது புரிகின்றது.அது அவர்களை வடக்கில் குடியேற்றுவதன் மூலம் நிவர்த்தி பெறுமா என்பது முக்கிய விடயம்.மற்றும் படி தமிழர் பெரும்பான்மை சரி. இப்போது கேள்வி என்னவென்றால் அனைவரும் தமிழர் பெரும்பான்மைக்கு சார்பாக இருப்பார்களா? இன்றைய அரசியல் நிலவரத்தின் படி பார்த்தாலும் இந்த யாழ்களத்தில் கூட அரசியல் ஒற்றுமை இல்லை.அப்படியிருக்க நாளைய ஈழ அரசியலை பற்றி நீங்கள் எப்படி எதிர்வு கூறமுடியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, Kavi arunasalam said:

வடக்கேயிருந்து வருகின்ற சத்தம் கிழக்கே இல்லையே. ஏன்?

கிழக்கு மக்களுக்கு சுமந்திரன் யார்,எப்படிப்பட்டவர் என தெரியும்.அவர் சும்மா அலட்டுவதையெல்லாம் கணக்கில் எடுக்க மாட்டார்கள்.

சுமந்திரம் இப்போது எம்பியும் இல்லை,தும்பியும் இல்லை. அவரை தூக்கி பிடிப்பது உங்களைப்போன்றவர்கள் மட்டுமே.

அங்கே கருணாவை கூட ஒதுக்கித்தான் வைத்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஆனால் வடகிழக்கு தமிழர் பகுதி என நாங்கள் சொல்லத்தான் முடியும்.ஏனைய ஏனைய விடயங்களில் சிங்கள அனுமதியில்லாமல் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது என்பதை சில நலன்புரி இயக்கங்கள் மீதான அழுத்தங்கள் உதாரணமாக அமைகின்றது.

அப்படி இல்லை, வன்னியில், கிழக்கிலங்கையில் எத்தனையோ ஏழைபட்ட மக்களுக்கான திட்டங்கள் நடைமுறையில் உள்ளன.

நான் மேலே சொன்ன விடயத்தை ஒரு பத்து ஊர் சங்கங்கள், பத்து பாடசாலை அமைப்புகள் ஒரு சம்மேளனமாக திரண்டு செய்ய முடியும்.

பதாகை வைத்து, தம்பட்டம் அடித்து செய்யாமல் - பேரினவாதிகள் கண்ணை குத்தாத வகையில் - பயணாளர் தெரிவில் கொஞ்சம் கெட்டிக்காரத்தனமாக இருந்தே இதை செய்யலாம்.

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை மிக சுலபமாக தனியார் நிறுவனக்கள் செய்யலாம். நாம் வேலைக்கு எடுக்கும் 2/10 பேர் மலையக ஆளாக இருக்க வேண்டும் என ஒரு எழுதா விதியை, பெரிய, மத்திய வடக்கு வியாபார அமைப்புகள் கடைப்பிடித்தாலே போதும்.

நினைவூட்டல்:

இஸ்ரேல் தேசமாக முன்பே, உலகெங்கும் உள்ள யூதர்களை கிபுட்ஸ் பண்ணைகள் என நிலத்தை அரபிகளிடம் வாங்கி குடியேற்ற தொடங்கி விட்டான் யூதன்.

இந்த எண்ணிக்கை பலம் - பின்னாளில் இஸ்ரேஸ் அமைவதை இலகுவாக்கிய காரணிகளில் ஒன்று.

1 hour ago, வாத்தியார் said:

அரசியல் செய்யும் கட்சிகளுக்கும் அரசுக்கும் நிச்சயமாக இருக்கு .

இதை எழுதும் போது சிரிக்காமல்தான் எழுதினீர்களா?

எந்த அரசு தமிழர் நலனை அதன் கடமையை சரிவர செய்யும் என்கிறீர்கள் ? இலங்கை அரசு?

அவர்களின் அரசியல் கட்சிகள் - நவீன கங்காணிகள். இவர்கள் தோட்டத்தை விட்டு வெளிக்கிட்டால் அவர்கள் ஆட்டம் குளோஸ். ஆகவே தம் தலையில் அவர்கள் மண்ணை அள்ளி போடமாட்டர்கள்.

மனோவின் பேச்சுக்கு இதொகவில் இருந்து கடும் எதிர்ப்பு வந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

இப்போது அனுரா திசாநாயக்க நாட்டின் தலைவராக வந்திருப்பதால் அவரின் மீதான தனிப்பட்ட ஒரு நம்பிக்கையினால் பல உலக நாடுகளும் அவருக்கான ஆதரவைத் தெரிவித்து வரும் நிலையில்

இந்த NPP அரசால் இந்த மலையக மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என மலையக மக்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்

ஓ…நீங்களும் காவடியை தூக்கி விட்டீர்கள்😂.

என்ன செய்வது தர்க்கம் என்று வந்தால் எதையாவது ஒப்பிக்க வேண்டுமே.

ஜேவிபி வட கிழக்கு தமிழர்களுக்கு அரசியல் உரிமை எதையும் தராது என்பது எவ்வளவு நிகரான அதே அளவு நிதர்சனம் மலையக மக்களை அடிமை வாழ்வில் இருந்து மீட்காது என்பதும்.

2 hours ago, வாத்தியார் said:

மனோ கணேசனின் ஒரு பேட்டி பார்த்தேன் அதில் அவரே சொல்கின்றார்

லட்சக்கணக்கில் மக்களை இடம்பெயர வைத்தால் எங்கள் பிரதி நிதித்துவம் பாராளுமன்றில் இல்லாம போய்விடும்.என்று

ஆகவே அரசியல்வாதிகள் தங்கள் முனைப்பில் கருத்தாக இருக்கின்றார்கள் என்பது அவருடைய அந்தக் கூற்றில் இருந்து தெரிய வருகின்றது

நீங்கள் ஏன் மனோ, சுமனில் தொங்குகிறீர்கள் என்பதுதான் புரியவில்லை.

இருவரும் சும்மா லுலுலுலா கதைதான் என்பதை நான் முதல் பதிவிலே சொல்லி விட்டேன்.

ஆனால் அவர்கள் சொன்ன விடயம்தான் முக்கியம்.

ஆட்களை விட்டு விட்டு, கொள்கையை அதன் சாதக பாதகங்களை அலசுங்கள்.

2 hours ago, வாத்தியார் said:

அடுத்து நீங்கள் கூறுவது போல ஒரு சில நூறு அல்லது ஆயிரம் மலையக மக்களை முதலில் வடக்கு கிழக்கில் குடியேற்றி அவர்களுக்கான ஆவனங்களை செய்து கொடுக்கலாம் என்பது .

வடக்கு கிழக்கு மக்களின் தேவைகளுக்காக மட்டுமே இந்த நூறு அல்லது ஆயிரம் மக்களும் பயன்படுத்தப்படுவார்கள்.

அது நாம் அவர்களை சுரண்டினால்.

வடக்கு தமிழர் சுரண்டல் போக்கிரிகள் என்கிறீர்களா?

அப்படி இருக்க கூடாது என்பது என் வாதம்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

மலையக மக்களின் குழந்தைகளின் கல்வி என்பது கேள்விக்குறி ஆக்கப்படும் அந்த மாணவர்களால் வடக்கு கிழக்கு மாணவர்களின் போட்டிக் கல்வி முறையில் தேற முடியாத சந்தர்ப்பங்கள் அதிகமாக உருவாகும். .

1970 களில் யாழ் மாவட்டத்தோடு, ஏனைய தமிழ் மாவட்ட கல்வி நிலை, 2025 இன் நிலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்த கருத்து பிழை என்பது புரியும்.

மலையகத்தில் 16 வயதுக்கு பின் கொழுந்து பறிக்க அல்லது கொழும்பு போய், ஆட்டோ ஓட்ட அல்லது கடையில் நிற்க என “தயாரிக்கபடும்” கல்வியை விட யாழ்பாணத்தில் ஹொஸ்டலில் தங்கி, நல்ல ஆசிரியர்களிடம் கற்கும் போது அதே மாணவன் ஒரு டாக்டர் ஆகாவிடினும் கம்பெளண்டர் ஆவது ஆகலாம். அந்த கம்பெளண்டரின் மகன் நாளை டாக்டர் ஆகலாம்.

இதைதான் social mobility என்பார்கள்.

இதுவும் புலம்பெயர் தேசத்தில் நாம் அடைந்ததுதான்.

4 hours ago, குமாரசாமி said:

இதைத்தான் பிரதேசவாதம் என்கிறேன்.👆

தமிழீழம் சாத்தியம் என நிழல் அரசு அமைத்து காட்டியவர்கள் ஈழத்தமிழர்கள்.அங்கே பிரதேசவாதம் வரவில்லை.

ஆனாலும் அதற்குள்ளும் பிரதேசவாதத்தை உட் புகுத்தியவர்கள் யார்...யார் என்பதை இந்த ஊர் உலகம் அறியும்.

இது பிரதேசவாதம் இல்லை…

நிலப்பரப்பின் பால்பட்டு ஒரு குறித்த மக்கட் தொகையினரின் சக்கு பிடித்த சிந்தனையை உள்ளது உள்ளபடியே சொல்வது.

நிழல் அரசு - அது ஒரு இந்த சக்கு பிடித்த சிந்தனை துளியும் இல்லாத, அதை வெறுத்த ஒரு அற்புதமான தலைவரினதும், அவர் பின்னால் திரண்ட அதிசயபிறவிகளினதும் பெறுபேறு.

அவர்கள் காலத்தில் இந்த சக்குபிடித்த்ஃ சிந்தனை கொஞ்சம் முகிழ்த்திருந்தது.

அவர்களுக்கு முன்பும், பின்பும் எழும்பி ஆடுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
On 17/12/2025 at 05:45, goshan_che said:

எமது இடம் கூட்டி வந்து, அவமாக போகும் எமது மனைகளில் இடம், கொடுத்து, ஒரு தொழிலுக்கான பாதையையும் காட்டலாம் என்கிறோம்…

வடக்கு கிழக்கில் வேலையில்லாத்திண்டாட்டம். சிகை அலங்காரம் முதல் பெரிய வியாபாரதலம், கடற்தொழில் சிங்களம் செய்கிறது. இந்தியா சூறையாடுகிறது. அயலவனை தன் காணி வீடு சுத்தமாகும் வரை குடியிருக்க விடுவார்கள் புலம்பெயர்ந்தோர், பின் அவர்கள் தங்கள் நிலத்தை, காணியை உரிமையாக்கி விடுவார்கள் என்று பலாத்காரமாக வெளியேற்றுவார்கள். மொத்தத்தில் தம் காணி துப்பரவாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் வரை பேச்சு பெரிய வள்ளல்கள் போலிருக்கும், அவர்கள் வெளிநாடுகளில் உழைப்பு, கொலிடே வீடு இங்கே சுகமாக கழிப்பதற்கு. இதற்குத்தான் மிகையாக மக்கள் மேல் முதலைக்கண்ணீர். அவர்களையும் வெளிநாடுகளுக்கு எடுத்து வாழ வழி காட்டுங்கள், அல்லது ஓரிரண்டு குடும்பத்தை பொறுப்பெடுத்து கல்வி வசதி தொழில் வசதியை ஏற்படுத்தி முன்னுதாரணமாக செய்து காட்டுங்கள். அதன் பின் மற்றையோர் தொடர்வர். வடக்கிலேயே எத்தனையோ குடும்பங்கள் அயலில் ஏழ்மையிலும் குடிலிலும் வெள்ளத்திலும் வாழ்கிறார்கள், அவர்களை கவனிக்க யாருமில்லை. சுமந்திரன் ஏதோ உணர்ச்சியை வைத்து அரசியல் செய்ய உளறியவுடன் அவரின் அபிமானிகள் வந்து விடுவர். அவர் சொல்வது சரியாயின் நீங்கள் அதை செயற்படுத்தி காட்டலாமே? மற்றவரை குறை சொல்லிக்கொண்டு. மலையக மக்களின் வாக்குகளிலேயே சுகபோகம் அனுபவிப்பவர்கள் அந்த மக்களின் வாழ்க்கையை மாற்ற என்ன செய்தார்கள்? இப்போ வடக்கு கிழக்கில் குடியேற்றப்போகிறார்களாம். அதை சொல்வதற்கு இவர்கள் தேவையா? இதற்கா அவர்கள் இவரை தமது பிரதிநிதியாக தெரிந்தெடுத்தார்கள்? யார் அதை செய்வது? அவர்களே வந்து குடியேறுவதா? அதற்கான ஆயத்தங்களை செய்தபின் அவர்களை அழைக்கவேண்டும் இல்லையேல் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டும்.

9 hours ago, ஈழப்பிரியன் said:

புலம் பெயர்ந்தவர்கள் எல்லாம் வடக்கைச் சேர்ந்தவர்களோ?

இல்லை, கிழக்கில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

வடகிழக்கு தமிழர் பகுதி என நாங்கள் சொல்லத்தான் முடியும்.ஏனைய ஏனைய விடயங்களில் சிங்கள அனுமதியில்லாமல் ஒரு துரும்பை கூட அசைக்க முடியாது என்பதை சில நலன்புரி இயக்கங்கள் மீதான அழுத்தங்கள் உதாரணமாக அமைகின்றது.

ம், தனியார் காணிகளில் இராணுவ முகாம்கள், விகாரைகள். அதன் உரிமையாளர் சொந்தங்கள், வாடகை வீட்டில். எத்தனை ஆர்ப்பாட்டம், மீட்க முடிந்ததா? நீதிமன்றங்களினாலேயே முடியவில்லை. இதில மலையக மக்களை பாசத்தோடு அழைக்கிறார்களாம். என் காணியில் நான் குறித்த அனுமதி பெறாமல் எந்த கட்டுமானப்பணிகளும் செய்ய முடியாது. ஆனால் தனியார் காணியில் விகாரை, வியாபார நிலையம் அமைக்க எந்த அனுமதியும் தேவையில்லை.

7 hours ago, goshan_che said:

ஓ…நீங்களும் காவடியை தூக்கி விட்டீர்கள்

தாங்கள் காவடி தூக்கலாம் சுமந்திரனுக்கு, மற்றவர் உண்மையை சொன்னால் அது காவடி என்று தூக்கிக்கொண்டு வருவார். சொல்லாடல் வறுமை. தானே பகிடி விட்டு சிரித்து ரசிப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாம் சண்டை பிடியுங்கோ. ஒரு பத்தாயிரம் மலையக மக்களை வன்னிப்பகுதியில் குடியேற்றும் திட்டம் இருப்பதாக (அரசாங்கத்தரப்பில்) கேள்விப்பட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, goshan_che said:

அண்ணை யாரும் யாரையிம் அடியோடு புடுங்க, கேட்காமல் இழுத்து வர கேட்கவில்லை.

அவர்கள் எமம்முடன் வந்து வாழும் ஏது நிலையை உருவாக்குவோம்…

முதலில் ஒரு சிலர் வரட்டும்…அவர்களை கைதூக்கி விடுவோம்…

அதன் பின் அவர்கள் ஏனையோரை அழைப்பர்…அடித்தடுத்த சந்ததி..அவர்களுக்கு அவர்களே வழிகாட்டுவார்கள்.

உங்களது இந்த வரிகள் எனக்கு இதை எழுத வைத்தது. நன்றி goshan_che

அறுபதுகளின் நடுப்பகுதியில், ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா காலத்தில், விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் “படித்த வாலிபர் திட்டம்” என்ற பெயரில் ஒரு முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. இன்று பலருக்கு அது நினைவில் கூட இல்லாமல் இருக்காமல்.

அந்தக் காலத்தில், படித்து முடித்து வேலைவாய்ப்பில்லாமல் இருந்த இளைஞர்கள் பிரச்சினை ஒரு பெரிய சவாலாக இருந்தது.  அந்தச் சூழலில்தான், இளைஞர்களுக்கு நிலம் வழங்கி, விவசாயம் மற்றும் குடியிருப்பின் மூலம் வாழ்வாதாரம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டிருந்தது.

விரல் விட்டு எண்ணக்கூடிய மக்கள் இருந்த விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகள் குடியேற்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. காட்டுநிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு, படித்த இளைஞர்கள் அங்கு குடியேற்றப்பட்டனர். இது வேலைவாய்ப்பை சமாளிக்கும் முயற்சியாக மட்டுமன்றி, கிராம அபிவிருத்தியை நோக்கிய அரசின் ஒரு முயற்சியாகவும் பேசப்பட்டது.

ஐந்து ஏக்கர் காணிகள், இலவச நீர் வசதி, உலர் உணவுகள், பயிர் செய்வதற்கான பணம் என அரசாங்கம் பல உதவிகளைச் செய்தது. குறிப்பிட்ட சில வருடங்களுக்கு அந்தக் காணிகளை விற்கவோ, குத்தகைக்கு விடவோ முடியாத கட்டுப்பாடுகளும் இருந்தன. பலர் இந்தத் திட்டத்தில் பயன் பெற்றனர். மிளகாய் பயிர் செய்து சில “விவசாய மன்னர்களும்” உருவானார்கள். பணமும் பார்த்தார்கள்.

ஆனால், இந்த முயற்சி நீண்டகாலம் தொடரவில்லை. அன்றைய அரசியல் மாற்றமும் அதற்கான் காரணமாக இருந்திருக்கலாம்.

இருந்தாலும், “படித்த வாலிபர் திட்டம்” இலங்கை வரலாற்றில் ஒரு முக்கியமான பாடமாகவே இருக்கிறது. வேலைவாய்ப்பை அரசுப் பணிகளுக்குள் மட்டுப்படுத்தாமல், நிலம், விவசாயம், கிராம அபிவிருத்தி வழியாகத் தீர்வு காண முயன்ற ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பாக இதைப் பார்க்கலாம். ஆயுதப் போராட்டத்துக்கு முன்னரே, அமைதியான சமூக அபிவிருத்தி முயற்சியாக இது செயல்பட்டது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

இப்படியான முயற்சிகள் மறக்கப்பட வேண்டியவையல்ல. மீண்டும் சிந்திக்க வேண்டிய விடயங்கள். இதைப் போன்று வெவ்வேறு வடிவங்களில் முயற்சிகள் இருக்கலாம். புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வழங்கும் நிதிகளை சரியான வழிகளுக்குத் திசைதிருப்ப முடியும். விதண்டாவாதங்களிலேயே காலத்தைக் கழித்தால், எதிர்காலத்தில் வடமாமணத்தில் ஒரு தமிழன் பாராளுமன்றம் செல்வதே கேள்வியாகி விடலாம்.

மலையக மக்களிடம், “வாருங்கள், உங்கள் உறவுகள் நாங்கள் இருக்கிறோம்” என்று சொல்வது வெறும் வார்த்தையல்ல. அது அவர்களுக்கு ஒரு ஆறுதலும், ஒரு நம்பிக்கையும். அழைத்தவுடன் எல்லோரும் பெட்டி, படுக்கையுடன் ஓடிவரப் போவதுமில்லை. ஆனால் இது ஒரு விதை. விதை விதைக்கப்படாவிட்டால் பயிர் எப்படி வரும்?

“இது சரிவராது” என்று ஆரம்பத்திலேயே எல்லாவற்றையும் தள்ளிவிட்டால், கிடைக்கின்ற அனுகூலங்களையும் இழந்து, தமிழினம் வெறுமையாக நிற்கும் அபாயம் இருக்கிறது.

ஒன்று மட்டும் நிச்சயம். புலம்பெயர் தமிழர்களின் அடுத்த சந்ததி, தங்கள் பணத்தை ஊருக்கு அனுப்பப் போவதில்லை. ஆகவே, காலத்தில் விதை விதைப்பதே அறிவு.

‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.’

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

இதற்குத்தான் மிகையாக மக்கள் மேல் முதலைக்கண்ணீர். அவர்களையும் வெளிநாடுகளுக்கு எடுத்து வாழ வழி காட்டுங்கள், அல்லது ஓரிரண்டு குடும்பத்தை பொறுப்பெடுத்து கல்வி வசதி தொழில் வசதியை ஏற்படுத்தி முன்னுதாரணமாக செய்து காட்டுங்கள்

இதோ இன்னொருவர் நீ செய், நான் செய்கிறேன் என மடைமாற்றுகிறார்😂.

நான் உங்கள் எவரையும் காணியை கொடுங்கள் என சொல்லவில்லை.

இப்படியான நகர்வு ஒரு நல்ல நகர்வு என கொள்கை அளவிலாவது ஏற்று கொள்ளுங்கள் என்கிறேன்.

ஆனால் அதற்கு உங்கள் மையவாதம் விடுகுதில்லை.

ஆகவே இப்படி மடை மாற்றுகிறீர்கள்.

9 hours ago, satan said:

வடக்கிலேயே எத்தனையோ குடும்பங்கள் அயலில் ஏழ்மையிலும் குடிலிலும் வெள்ளத்திலும் வாழ்கிறார்கள், அவர்களை கவனிக்க யாருமில்லை.

இன்னொரு டிசைன் மடைமாற்று.

வடக்கில் கடைசி ஏழை இருக்கும் வரை இப்படி மடைமாற்றி கொண்டே இருக்கலாம்.

நாம் கீழ்தரமான யாழ் மையவாதிகள் என வெளிப்படையாக ஒத்து கொள்ள வேண்டி வராது.

3 hours ago, satan said:

ம், தனியார் காணிகளில் இராணுவ முகாம்கள், விகாரைகள். அதன் உரிமையாளர் சொந்தங்கள், வாடகை வீட்டில். எத்தனை ஆர்ப்பாட்டம், மீட்க முடிந்ததா? நீதிமன்றங்களினாலேயே முடியவில்லை. இதில மலையக மக்களை பாசத்தோடு அழைக்கிறார்களாம். என் காணியில் நான் குறித்த அனுமதி பெறாமல் எந்த கட்டுமானப்பணிகளும் செய்ய முடியாது. ஆனால் தனியார் காணியில் விகாரை, வியாபார நிலையம் அமைக்க எந்த அனுமதியும் தேவையில்லை.

மடைமாற்று 3rd prototype😂

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

வடக்கு கிழக்கில் வேலையில்லாத்திண்டாட்டம்

அதுபாருங்கோ…ஜெப்பணீஸ்க்கு மிகவும் பிடித்தமான டவுசர், சேர்ட் போட்டு அரச அலுவலகங்களில் இருந்து பிளேன் டீ குடிக்கும் வேலைக்குத்தான் வேலையில்லா திண்டாட்டம்😂.

மேசன், முட்டாள், விவசாய வேலை, என பல வேலைகளுக்கு வேலையாள் இல்லா திண்டாட்டம்.

கேட்டுப்பார்த்தேன் - பல முட்டாள்கள் கனடாவில் செட்டில் ஆகி விட்டார்களாம்😂.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

தாங்கள் காவடி தூக்கலாம் சுமந்திரனுக்கு, மற்றவர் உண்மையை சொன்னால் அது காவடி என்று தூக்கிக்கொண்டு வருவார். சொல்லாடல் வறுமை. தானே பகிடி விட்டு சிரித்து ரசிப்பார்.

அடடே சாதா காவடியை சொன்னால், தூக்குகாவடிக்கு கோவத்தை பாரேன்😂.

நான் சுமந்திரனை மிக கடுமையாக இதே யாழில் பல வருடங்களாக விமர்சிக்கும் ஒருவர்.

ஆனால் அனுர மேல் ஒரு தூசிபட்டாலும் உடனே ஓடி வந்து காவடி தூக்கும், இப்போதும் தூக்கும் நபர் நீங்கள்.

அனுரவின் ஈரச்சாக்கு அரசியல் இனத்தை நீண்ட கால நோக்கில் படுகுழியில் தள்ளும் என அறிந்தும், அதை ஆதரிக்கும் கோடாலிகாம்பு நானில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.’

நம்மில் ஒற்றுமை நீங்கினின் அனைவர்கும் தாழ்வு…

நன்றிது தேர்ந்திடல் வேண்டும்…

இந்த ஞானம் வந்தாற்பின் நமக்கேது வேண்டும்.

ஆனால் இந்த சக்கு மூளைகளுக்கு இத்தனை இழப்பு, தியாகம், கொடுமைக்கு பின்னும் வரவில்லை எனில், இந்த ஞானம் எப்போதும் வரும் என நான் நம்பவில்லை.

இவர்களுக்குரிய பாடல்…

எப்பா ஞானம்..

சீதாவ காணம்…

பொழுது விடிஞ்சா போக போது மானம்😂

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

அவர்கள் சொல்வதும் சரிதான். அதே போல் நீங்கள் சொல்வதும் சரிதான். இதை யார் தலைமையில் முன்னெடுப்பது?

ஒரு வழியாக 5ம் பக்கதிலாவது கருத்து சரியானது என்பதை ஒத்து கொண்ட அளவில் மகிழ்ச்சி.

எனக்கு தெரிந்த சில low profile, கண்ணை குத்தாத நடவடிக்கைகளை பட்டியல் இட்டுள்ளேன்.

இலண்டன் கோவில்கள் சிலது கூட மலையகத்தில் திட்டங்கள் செய்துள்ளனர்.

யார் செய்வது?

தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிகெட்டு, பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம் என்கிறார் பாரதி.

அந்த நிலைதான் இப்போ நமக்கும்.

உங்களை போலவே எனக்கும் விடை தெரியவில்லை.

ஆனால் -கொள்கை அளவில் கூட இது நல்ல விடயம் என ஒரு கருத்துகளத்தில் கூட இப்படி தொண்டை தண்ணி வத்த கத்த வேண்டி உள்ள போது….

நடைமுறையில் இந்த இனம் இந்த வேலைக்கு சரிப்பட்டு வராது என்றே எண்ணுகிறேன்.

"இதை எப்படிச் செயல்படுத்துவீர்கள்? முன்மொழிவைத் தாருங்கள் முதலில்!" என்று கேட்கும் "புலம் வாழ் பிளானிங் ஒபீசர் மார்"😎 எப்பவாவது இருந்து விட்டு சின்னத்திரையில் தான் தாயகத்தை இங்கிருந்து பார்க்கிறார்கள் என்று தெரிகிறது.

இங்கே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சில திட்டங்கள் ஏற்கனவே நடை முறையில் இருக்கின்றன. உதாரணமாக மலையக தமிழ் மாணவர்கள் ஒரு தொகையினரை யாழ் மத்திய கல்லூரியின் விடுதியில் இலவசமாகத் தங்க வைத்து கல்விச் செலவையும் புலமைப் பரிசில்கள் மூலம் ஈடு செய்யும் திட்டமொன்று சில ஆண்டுகளாக நடை முறையில் இருக்கிறது. வெளிநாட்டு பழைய மாணவர் சங்கங்கள் தான் இதற்கு நிதி ஆதரவு. இவை பற்றி யூ ரியூப் வீடியோக்கள் வராது, எனவே யூ ரியூப் வழியாக தாயகத்தைத் தரிசிக்கும் நோக்கர்களுக்கு இவை தெரிய வராது.

ஆனால், இந்த செயல்படுத்தல் பற்றிய நிஜமான கரிசனை அல்ல இங்கே எதிர்ப்பவர்களின் உண்மைக் காரணம். நமக்குப் பிடிக்காத சுமந்திரன், மனோ கணேசன் சொன்னார்கள், எனவே எதிர்க்க வேண்டுமென்ற குருட்டுத் தனமான காழ்ப்புணர்வு ஒரு காரணம்.

"நாங்க யாழ்ப்பாணத்தார், எங்கள் றோயல் பிளட் லைன் மலையகத் தமிழர் நிரந்தரமாக வந்து தங்கினால் நஞ்சாகி விடும்"😂 என்ற அச்சம் இரண்டாவது காரணம்.

இதனால் தான் நானும் ஐலண்டும் சில சமயங்களில் இங்கே சொல்லியிருக்கிறோம்: புலிகள் இருந்த போது கிடைக்காத தமிழ் ஈழம், இப்ப இருக்கும் வால்களிடம் கிடைக்கக் கூடாது! அது தமிழர்களுக்கே ஆப்பாகத் தான் முடியும்!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

கேட்டுப்பார்த்தேன் - பல முட்டாள்கள் கனடாவில் செட்டில் ஆகி விட்டார்களாம்

அவர்களது தற்போதைய modern name „தமிழீழ தேச பக்தர்கள்“.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, Kavi arunasalam said:

உங்களது இந்த வரிகள் எனக்கு இதை எழுத வைத்தது. நன்றி goshan_che

அறுபதுகளின் நடுப்பகுதியில், ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா காலத்தில், விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் “படித்த வாலிபர் திட்டம்” என்ற பெயரில் ஒரு முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. இன்று பலருக்கு அது நினைவில் கூட இல்லாமல் இருக்காமல்.

அந்தக் காலத்தில், படித்து முடித்து வேலைவாய்ப்பில்லாமல் இருந்த இளைஞர்கள் பிரச்சினை ஒரு பெரிய சவாலாக இருந்தது.  அந்தச் சூழலில்தான், இளைஞர்களுக்கு நிலம் வழங்கி, விவசாயம் மற்றும் குடியிருப்பின் மூலம் வாழ்வாதாரம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டிருந்தது.

விரல் விட்டு எண்ணக்கூடிய மக்கள் இருந்த விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகள் குடியேற்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. காட்டுநிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டு, படித்த இளைஞர்கள் அங்கு குடியேற்றப்பட்டனர். இது வேலைவாய்ப்பை சமாளிக்கும் முயற்சியாக மட்டுமன்றி, கிராம அபிவிருத்தியை நோக்கிய அரசின் ஒரு முயற்சியாகவும் பேசப்பட்டது.

ஐந்து ஏக்கர் காணிகள், இலவச நீர் வசதி, உலர் உணவுகள், பயிர் செய்வதற்கான பணம் என அரசாங்கம் பல உதவிகளைச் செய்தது. குறிப்பிட்ட சில வருடங்களுக்கு அந்தக் காணிகளை விற்கவோ, குத்தகைக்கு விடவோ முடியாத கட்டுப்பாடுகளும் இருந்தன. பலர் இந்தத் திட்டத்தில் பயன் பெற்றனர். மிளகாய் பயிர் செய்து சில “விவசாய மன்னர்களும்” உருவானார்கள். பணமும் பார்த்தார்கள்.

ஆனால், இந்த முயற்சி நீண்டகாலம் தொடரவில்லை. அன்றைய அரசியல் மாற்றமும் அதற்கான் காரணமாக இருந்திருக்கலாம்.

இருந்தாலும், “படித்த வாலிபர் திட்டம்” இலங்கை வரலாற்றில் ஒரு முக்கியமான பாடமாகவே இருக்கிறது. வேலைவாய்ப்பை அரசுப் பணிகளுக்குள் மட்டுப்படுத்தாமல், நிலம், விவசாயம், கிராம அபிவிருத்தி வழியாகத் தீர்வு காண முயன்ற ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பாக இதைப் பார்க்கலாம். ஆயுதப் போராட்டத்துக்கு முன்னரே, அமைதியான சமூக அபிவிருத்தி முயற்சியாக இது செயல்பட்டது என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விடயம்.

இப்படியான முயற்சிகள் மறக்கப்பட வேண்டியவையல்ல. மீண்டும் சிந்திக்க வேண்டிய விடயங்கள். இதைப் போன்று வெவ்வேறு வடிவங்களில் முயற்சிகள் இருக்கலாம். புலம்பெயர் தமிழர்கள் தாங்கள் வழங்கும் நிதிகளை சரியான வழிகளுக்குத் திசைதிருப்ப முடியும். விதண்டாவாதங்களிலேயே காலத்தைக் கழித்தால், எதிர்காலத்தில் வடமாமணத்தில் ஒரு தமிழன் பாராளுமன்றம் செல்வதே கேள்வியாகி விடலாம்.

மலையக மக்களிடம், “வாருங்கள், உங்கள் உறவுகள் நாங்கள் இருக்கிறோம்” என்று சொல்வது வெறும் வார்த்தையல்ல. அது அவர்களுக்கு ஒரு ஆறுதலும், ஒரு நம்பிக்கையும். அழைத்தவுடன் எல்லோரும் பெட்டி, படுக்கையுடன் ஓடிவரப் போவதுமில்லை. ஆனால் இது ஒரு விதை. விதை விதைக்கப்படாவிட்டால் பயிர் எப்படி வரும்?

“இது சரிவராது” என்று ஆரம்பத்திலேயே எல்லாவற்றையும் தள்ளிவிட்டால், கிடைக்கின்ற அனுகூலங்களையும் இழந்து, தமிழினம் வெறுமையாக நிற்கும் அபாயம் இருக்கிறது.

ஒன்று மட்டும் நிச்சயம். புலம்பெயர் தமிழர்களின் அடுத்த சந்ததி, தங்கள் பணத்தை ஊருக்கு அனுப்பப் போவதில்லை. ஆகவே, காலத்தில் விதை விதைப்பதே அறிவு.

‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.’

இன்றைய எமது/மலையக சமூக சூழலில் எத்தனை பேர் விவசாயம் செய்ய காத்திருக்கின்றர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இன்றைய எமது/மலையக சமூக சூழலில் எத்தனை பேர் விவசாய

இந்த வேலையைத்தான் செய்வோம் என்று வெளிநாடுகளுக்கு நாங்கள் யாரும் இடம் பெயர்ந்து வரவில்லை.  எந்த வேலையையும் செய்யத் தயாராகவேதான் இருந்தோம்.

புலம்பெயர்ந்து நாங்கள் வந்த போது புதுவை இரத்தினதுரை கூட கவிதையில் எங்களைப் பற்றிச் சொன்னார் “தூசு தட்டியே காசு பார்த்தவர்கள்” என்று. சரி அதை விடுங்கள். இங்கே யாரையும் யாரும் வற்புறுத்தவில்லை. விருப்பமுள்ளவர்கள் வாருங்கள்.  ஒன்றாகப் பயணிப்போம். அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

குமாரசாமி, நான் எழுதியதை நீங்கள் மேலோட்டமாகவே வாசித்திருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன்.  அல்லது இந்தப் பகுதியை வாசிக்க மறந்து விட்டீர்களோ தெரியவில்லை.

இப்படியான முயற்சிகள் மறக்கப்பட வேண்டியவையல்ல. மீண்டும் சிந்திக்க வேண்டிய விடயங்கள். இதைப் போன்று வெவ்வேறு வடிவங்களில் முயற்சிகள் இருக்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.