Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறையிட்டுள்ளேன் - தவிசாளர் தியாகராஜா நிரோஷ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறையிட்டுள்ளேன் - தவிசாளர் தியாகராஜா நிரோஷ்

23 Dec, 2025 | 10:07 AM

image

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக அமைதி வழியில் ஜனநாயக ரீதியாக போராடிய எம்மை அரச அறிவுறுத்தலின் பேரில் பொலிஸார் கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய பொலிஸாரின் இம் மிலேச்சத்தனமான பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான அணுகுமுறைகளுக்காக அழுத்தத்தினைப் பிரயோகிக்குமாறு வெளிநாட்டுத் தூதுவராலயங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ரீதியிலான பொறிமுறைகளுக்கும் அரசுக்கு உதவி அளிக்கும் நிறுவனங்களுக்கும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா  நிரோஷ் கோரியுள்ளார்.

இலங்கையில் தமக்கு எதிராக இடம்பெற்ற சித்திரவதைகள் தாம் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பினை எதிர்த்த வேளை இடம்பெற்ற தாக்குதல்கள் என்பதால் இலங்கை அரச கட்டமைபினுள்ளாக ஒருபோதும் நீதி கிட்டாது என்பதை நாம் உணர்கின்றோம். 

அரச கொள்கையும் சட்டங்களும் சட்ட அமுலாக்கமும் பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்பிற்கு வலுச்சேர்ப்பவையாகவே பேணப்படுகின்றன. யாரும் எதிராக அமையக்கூடாது என்பதில் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பே இலங்கையில் நடைமுறையில் உள்ளது. 

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோதும் மாற்றமின்றி இந் நிலை தொடர்கின்றது. பௌத்த பேரினவாத விஸ்தரிப்பிற்கு எதிராக கடந்த காலத்தில் கௌரவ நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் கூட இந் நாட்டில் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை.

தையிட்டியில் நேற்று வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஏகமனதாக முன்னெடுத்த சபைத் தீர்மானத்தின் அடிப்படையில் பகிரங்க அகிம்சை வழி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப் போராட்டத்தில் கௌரவ நீதிமன்றின் உத்தரவுகளை மதித்தே நாம் போராடினோம். 

அவ்வாறாகப் போராடிய போது எம்மீது பொலிஸார்  பிரயோகித்த சித்திரவதையினையும் மனித குல நாகரீகத்திற்குப் ஏற்புடையதல்லாத நடவடிக்கைகள் தொடர்பாகவும்  இலங்கையில் உள்ள பிரதான நாடுகளின் வெளிநாட்டுத் தூதுவராலயங்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான நிறுவனங்கள், சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தாபனங்கள், இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள மனித உரிமைகள் நிறுவனங்கள் மற்றும் ஏனைய தாபனங்களுக்கும் இவ்விடயம் பற்றி போதிய ஆதாரங்களுடன் முறையிட்டுள்ளோம்.

இராணுவமயமாக்கத்தின் கீழ் பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளில் அரச அனுசரனையுடன் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தினை பாதிக்கம் வகையில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராகவே நாங்கள் தொடர்ச்சியாக போராடிவருகின்றோம். 

அரசாங்கம் இவ்வாறான நீதிகோரிய அகிம்சை ரீதியிலான போராட்டங்கள் மீது அடக்கு முறையினையும் மக்களிடத்தில் அச்சத்தினையும் ஏற்படுத்தும் நோக்கில் பொலிஸாரை ஏவிவிட்டு சித்திரவதை செய்து வருகின்றமை உடன் நிறுத்தப்படவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/234165

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டியில் பொலிஸ் சித்திரவதை: நிரோஷ் வைத்தியசாலையில் அனுமதி

Dec 24, 2025 - 08:44 AM

தையிட்டியில் பொலிஸ் சித்திரவதை: நிரோஷ் வைத்தியசாலையில் அனுமதி

தையிட்டியில் அமைக்கப்பட்ட சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற அகிம்சை வழிப் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேற்குறிப்பிட்ட போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது, வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் மல்லாகம் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவர்கள் கைது செய்யப்பட்டபோது, பொலிஸாரால் கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டே கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

தாக்குதல்களுக்கு உள்ளான வேலன் சுவாமிகள் ஏற்கனவே யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ஆண்கள் விடுதி இலக்கம் 09 இல் சிகிச்சை பெற்று வருகின்றார். 

இந்நிலையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தற்போது 24 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmjjfwlyt0328o29nk79qoqs1

  • கருத்துக்கள உறவுகள்

large.IMG_9336.jpeg.7929439f98f0d6ff09e7

  • கருத்துக்கள உறவுகள்

தள்ளாடி விழுந்ததெல்லாம் சித்திரவதையில் அடங்காது😂

5 hours ago, ஏராளன் said:

சித்திரவதை என்ன என்பதையும் இலங்கை படை அதை எப்படி செய்யும் என்பதையும் மன்னிப்பு சபை ஈறாக பல உலக அமைப்புகள் வெளிகொணர்ந்துள்ளன.

இந்த தவிசாளர் தனக்கு சுயவெளிச்சம் தேட இப்படி ஆஸ்பத்திரியில் போய் இருந்து அலப்பறை செய்வதால்….

உண்மையான சித்திரவதை சம்பவங்களை கூட அமைப்புகள் கண்டு கொள்ளாமல் விட வாய்ப்புக்கள் அதிகம்.

போன தலைமுறை அரசியல்வியாதிகள்தாம் “பே விளாத்தியள்” எண்டால் இந்த தலைமுறை “பெரிய விளாத்திகளாக” அல்லவா இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எடுத்ததுகெல்லாம் நீதிமன்றம் வழக்கு என்று கிளம்பும் கபடவேட தாரி சுமத்திரன் இங்கு நித்திரை கொள்கிறார் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்

நிரோஷன் அவர்கள், இந்திய/தமிழ் நாட்டு அரசியல் பிரபலங்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை செய்ததும், நெஞ்சைப் பிடித்த படி மருத்துவ மனையில் போய் படுப்பது போன்ற ஒரு சிஸ்ரத்தை ஈழத்திலும் உருவாக்குவார் போலிருக்கிறது.

சில ஆண்டுகள் முன்பு, பிரதேச சபை போட வேண்டிய வீதியை, பிரதேச சபை கவனிக்காமல் விட்டிருந்த சூழலில், அங்கஜன் பா.உ க்களுக்கு ஒதுக்கப் பட்ட நிதியைப் பயன்படுத்தி செப்பனிட முயன்றார். விளம்பரத்திற்காக பெயர்ப்பலகையும் வைத்தார். அந்தப் பெயர்ப் பலகையைப் பிடுங்கிச் சென்று ஒளித்து வைத்தவர் தான் இந்த நிரோஷன் என நினைக்கிறேன். எதிர்காலத்தில் தமிழ் பா.உ வாக வருவதற்குரிய சகல தகுதிகளும் உடைய ஒருவர் எனலாம்😂!

  • கருத்துக்கள உறவுகள்

நக்கல், நையாண்டிகள் எல்லாம் ஒரு புறம் போக தையிட்டி விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு நம்மவர்களே கல்லெறிவது இலங்கை அரசின் நீண்டகால அடக்குமுறை கொள்கைகளுக்கும், திட்டமிட்ட சிங்கள மயப்படுத்தலுக்கும் கிடைக்கும் பெரு வெற்றி!

இனி அடுத்தகட்டம் நம்மவர்களே விகாரை கட்ட லொக்கேசன் எடுத்து கொடுப்பதோடு, காணி, காசு, பொருள் நன்கொடைகள் தொடக்கம், இலவசமாக கட்டுமான பணிகளும் செய்து கொடுப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நியாயம் said:

போருக்கு பிந்திய கால(post - war) முன்னெடுப்புக்களை இலங்கை ஆட்சியாளர்கள் இதுவரை மேற்கொள்ளவில்லை, மறுவளமாக நிலமையினை மோசமாக்கும் செயல்களையே முன்னெடுக்கிறார்கள்.

புலம் பெயர் உறவுகளும் போர்க்கால மனநிலையிலேயே தேங்கிவிட்டார்கள் (தனி நாடு), அரசுகள் தவறவிட்ட விடயங்களில் ஒன்றான பொருளாதார மீழ்கட்டமைப்பிற்கு புலம் பெயர் உறவுகள் உதவியிருக்கலாம்.

அங்குள்ள அரசியல் கட்சிகள் மக்களை ஒருங்கிணைக்க முயற்சிக்கவில்லை, இது ஒரு இனப்பிரச்சினையாக மட்டும் பார்க்கின்ற நிலை நிலவுகிறது, இது சிறுபான்மையினரது பிரச்சினை, அது பல வடிவங்களில் உருவாகிறது, அனைவரும் சமம் எனும் எண்ணும் நிலையினை சமூகத்தில் உருவாக்க முடியாத ஒரு தோல்வி நிலை உள்ளது.

தற்போது இலங்கை ஒரு கலைத்து போட்ட சீட்டு கட்டு போல உள்ளது சுயநலமிகள் தமக்குத்தேவையானவற்றை அதிலிருந்து உருவுகிறார்கள்.

இது இவ்வாறு தொடர்ந்தால் மீண்டும் ஒரு உள்நாட்டு போர் உருவாகலாம் (40% உள்நாட்டு போர்கள் ஒரு தசாபத்தில் மீண்டும் ஆரம்பித்ததாக கூறுகிறார்கள்), அது மீண்டும் தேவையற்ற அழிவுகளையே கொண்டுவரும், மக்கள் வாழ்கை நிலை மேலும் மோசமாகும்.

தற்போதய உலக ஒழுங்கு மாற்றம் ஒரு அமைதியற்ற சூழலை இலங்கையில் தோற்றுவிக்க ஏதுவான நிலைகளை உருவாக்கிவிடும், இலங்கைக்கு தேவையான ஒரு தேசிய அரசாங்கம் இந்த காலத்தின் அவசியம் (அதிகார பரவலாக்கத்தினை பெரும்பான்மை எப்போதும் ஒரு சந்தேக கண்ணுடன் பார்க்கின்றது)

இறுக்கமான சட்டத்திற்கான அதிகாரம், சமூக சமத்துவம், சமூக பொருளாதார அபிவிருத்தி என்பன அவசியமாகிறது.

இலங்கை, இந்த நூற்றாண்டின் ஒரு தோற்று போன தேசம், அதற்கு அனைவரும் காரணம்.

Edited by vasee

  • கருத்துக்கள உறவுகள்

பொலிஸார் மிலேச்சத்தனமான பாரதூரமான மனித உரிமை மீறல்கள் கடுமையாக சித்திரவதை எம் மீது செய்துள்ளனர் என்று சொல்லி போலிக்கு நடித்து வைத்தியசாலைக்கு சென்றிருக்கின்ற நிரோஷ்சனும் இவர் போன்றவர்களும் எதிர்காலத்தில் தமிழ் அரசியல்வாதியாக வர கூடாது .

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நியாயம் said:

நக்கல், நையாண்டிகள் எல்லாம் ஒரு புறம் போக தையிட்டி விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு நம்மவர்களே கல்லெறிவது இலங்கை அரசின் நீண்டகால அடக்குமுறை கொள்கைகளுக்கும், திட்டமிட்ட சிங்கள மயப்படுத்தலுக்கும் கிடைக்கும் பெரு வெற்றி!

இனி அடுத்தகட்டம் நம்மவர்களே விகாரை கட்ட லொக்கேசன் எடுத்து கொடுப்பதோடு, காணி, காசு, பொருள் நன்கொடைகள் தொடக்கம், இலவசமாக கட்டுமான பணிகளும் செய்து கொடுப்பார்கள்.

உங்களுக்கு புரியவில்லையா?

ஒரு காலத்தில் தம்பிள்ளைகளை போராட கொடுத்த சமூகத்தில் இப்போ தையிட்டி விகாரை போராட்டத்துக்கு வெறும் 17 பேர் மட்டுமே போகும் நிலை!

இதை ஆதவன் பெரும் போராட்டம் என எழுதலாம்…

பொலிசார் பிடித்து சென்றதை சித்திரவதை என நிரோசன் லூசு கூத்தாடலாம்…

ஆனால் மக்கள் இதில் அந்நியபட்டு போய் பலகாலம் ஆகிவிட்டது.

யாரும் கல் எல்லாம் எடுத்து கொடுக்க தேவையில்லை - விகாரைகளும், சிங்கள மயமாதலும் தவிர்க்கவே முடியாத புள்ளியை தாண்டி நகர்ந்து விட்டதாகவே எனக்கு படுகிறது.

இதை இப்போது கூட புத்திசாலித்தனமாக, ஒற்றுமையாக எதிர்கொள்ள முடியாமல் சுமன் v ஶ்ரீ v கஜன் எனவும், புலம்பெயர் நாட்டில் மேலும் பல பிரிவுகளாகவும் தமக்குள் அடிபடும் இனத்தை - நையண்டியை தவிர வேறு எந்தவகையில் அணுக எனக்கு தோணவில்லை என்பதே என் எழுத்தின் பின்னால் உள்ள வெம்பாரம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச்சம்பவத்தை விமர்சித்து, சில அரசியல்வாதிகள் தாங்களே தமிழ் மக்களின் உண்மையான ஏக பிரதிநிதிகள் என உருவெடுக்க முயற்சிக்கின்றனர். நாளொரு வம்பில் மாட்டிக்கொண்டு, அதை மாற்ற தமிழர் போராட்டங்களையும் நிஞாயங்களையும் கேலி பண்ணி, எந்த அரசியல் கட்சியில் இணையலாமென தூண்டில் போடுகின்றனர். அதற்காக சிங்களம் செய்யுமெதையும் வேடிக்கை பார்க்கவேண்டுமென ஆலோசனையும் கூறுகின்றனர். இந்த அடாவடிகளை ஆமோதித்து மக்களை மூளைச்சலவை செய்கின்றனர். சிலரின் உணர்ச்சி பேச்சுகளுக்கு புலம்பெயர்ந்தோர் மயங்கி இவர்களுக்கு பணம் அனுப்பி இந்தக் கோமாளிகளை உசார் படுத்தக்கூடாது. நீதிமன்றத்தை நாடட்டாம். நீதிமன்றத்தை நாடாமலா மக்கள் போராடுகிறார்கள் இவ்வளவுகாலமும்? யார் நீதிமன்றத்தை மதிக்கிறார்கள்? ஒருவருக்கு சொந்தமான காணியை அடாத்தாக பிடித்து, அனுமதியில்லாமல் விகாரை கட்டி, சொந்தக்காரரை அதிகார, ஆயுத பலம் கொண்டு தாக்குவதும், நீதிமன்றத்தை அவமதிப்பதும் இவருக்கு தெரியாமல், தனக்கு பின்னால் இழுத்துக்கொண்டு திரியும் அந்த இளம் சட்டத்தரணியை பிரபல்யமாக்க ஏதோ நடவாத ஒன்றை இவர் அறிமுகப்படுத்துவதுபோலவும், தான் சொன்னால் போலீசார் கேட்டுவிடுவார்கள் போலவும் கதையளக்கிறார். அந்தப் பிரச்சனையின் வரலாறு தெரியாதவர், மக்களின் பிரச்சனைக்காக அவர்களின் பிரதிநிதிகள், அனுமதி பெறாமல் கட்டிய கட்டிடத்திற்காக அந்தத் துறையும் அமைதியான முறையில் போராடுகிறார்கள், அதை வன்முறையாக்குவது போலீசார். ஏதோ அவர்கள் பொலிஸாருக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுகிறார்கள், ஏனென்றால் அசைலம் அடைவதற்காக என்று கேலி வேறு. ஏன் இந்தப்பெண் கோமாளிக்குப்பின்னால் அலைந்து, தனது எதிர்காலத்தையும் பெயரையும் வீணடிக்கிறது? நாளும் பொழுதும் சட்டத்தை மதிக்காமல், வீண் வம்பில் மாட்டுப்பட்டு போலீஸ், நீதிமன்றம், பிடியாணை, சரண் என்று அலையும் இவர், மக்களுக்கு ஆலோசனை. இவர் வாயால் வீராவேசம் பேசுவார், அவர் பேசுவது என்னவென்று இவருக்கே தெரிவதில்லை. மறுநாள் வேறொன்று பேசுவார். மக்கள் தங்கள் காணி தங்களுக்கு வேண்டுமென்று போராடுகிறார்கள். அவர்களிடம் உறுதியில்லை, வழக்கு போடவில்லை, நல்லூர் கோயில் எங்கே இருந்தது? இப்போ எங்கிருக்கிறது? என்கிற விசர்த்தனமான கேள்வி. இதுதான் மக்கள் பிரதிநிதியின் பொறுப்பா? எங்கிருந்தோ வந்து பிரச்சனையை உருவாக்கி, நாட்டில் வன்முறையை தூண்ட வருகிறார்கள். அதை கேள்வி கேட்க வக்கில்லை, மக்களை, போராடுபவர்களை குறை கூறிக்கொண்டு. மக்களுக்காக குரல் எழுப்ப வேண்டும் இல்லையேல் ஒதுங்கியிருந்த நடக்கிறதை பார்க்கவேண்டும். இதில சஜித் கேட்டாராம் இவரை கொழும்பில் தேர்தலில் போட்டியிடச்சொல்லி. அவர்களே, ஒரு பைத்தியத்தை வடக்குமக்கள் பாராளுமன்றம் அனுப்பியிருக்கிறார்கள் என்று கேலி செய்கிறார்கள், இதில யாழ்ப்பாணத்திற்கு கௌசல்யாவை நியமித்துவிட்டு கொழும்பில் கேட்கலாமாம். பாவம் அந்தப்பெண்ணின் விதி, அரசியல் ஆசையால் தன் தொழில் வளர்ச்சி, எதிர்காலத்தை விட்டு இவர் விடும் தவறுகளை சுட்டிக்காட்ட பயந்து, இவரின் அடாவடிகளை சகித்துக்கொண்டு திரிகிறார். அந்தப்பெண் பக்கத்திலிருக்கும்போதே சட்டத்தை மதிக்காமல், மீறுகிறார், இடையூறு செய்கிறார், அடாவடி செய்கிறார், அநாகரிகமான வார்த்தைப்பிரயோகம். அதை தடுக்க, தவறை சுட்டிக்காட்ட அந்த வக்கீலால் முடியவில்லை. இதில மக்களுக்காக வாதாடப்போகிறாராம்?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.