Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவிற்கு அரசாங்கம் அவரது சொந்த பாதுகாப்பிற்காக துப்பாக்கி குடுத்துள்ளதாம். உளறுவாயன், அதை இடுப்பில் செருகிக்கொண்டு, என்னோடு யாராவது எதிர்த்து வாக்குவாதம் செய்தால், அவர்களின் மண்டையில் துளை போட்டுவிடுவேன் என்று பகிரங்கமாக உளறிக்கொண்டு திரிகிறார் அதன் விளைவு தெரியாமல். ஆனால் அவரது தற்போதைய சொல் செயலைப்பார்க்கும் போது செய்தாலும் செய்யக்கூடிய ஆள். இவரது தற்போதைய நடைமுறையை வைத்துப்பார்க்கும்போது எப்போ எது பேசுவார், எது செய்வார் என்றும் சொல்ல முடியாது. துப்பாக்கி என்றவுடன் இவரோடும் பெரிய தலைகள் பேரம் பேசலாம், சில பணிகள் தேடி வரலாம், போதைப்பொருள் வியாபாரிகளின் தொடர்பும் கிட்டலாம், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் என திரும்பப்பெறவும் வாய்ப்புண்டு. "அத்தைக்கு பவுசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிக்குமாம்." பாதுகாப்புக்கு அளிக்கப்பட்ட துப்பாக்கியால் ஒருவர் இப்போ முழிக்கிறார், இன்னொருவர் எச்சரிக்கிறார் மக்களை.

  • கருத்துக்கள உறவுகள்

MediaFile-11.jpeg?resize=750%2C375&ssl=1

டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து விசாரணை ஆரம்பம்!

கைத்துப்பாக்கி தொலைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவத்தினால் வழங்கப்பட்ட ஏனைய துப்பாக்கிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன்படி, அவருக்கு வழங்கப்பட்டுள்ள மேலும் 19 துப்பாக்கிகள் குறித்து அந்த திணைக்களம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

கடந்த 2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காகவே முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடந்த 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதூஷிடம் இருந்து கண்டெடுக்கப்பட்ட அந்தத் துப்பாக்கியின் இலக்கங்களைச் சோதித்தபோது, அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து தெளிவுபடுத்தத் தவறியமையினாலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அவர் 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவில் விசாரிக்கப்படும் நிலையில், இன்று (28) கம்பஹா நீதவானிடம் ஆஜர்படுத்தப்படுப்படவுள்ளார்.

https://athavannews.com/2025/1457509

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, தமிழ் சிறி said:

மதூஷிடம் இருந்து கண்டெடுக்கப்பட்ட அந்தத் துப்பாக்கியின் இலக்கங்களைச் சோதித்தபோது, அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது தெரியவந்துள்ளது.

தான் கேட்க்கும்போது துப்பாக்கியை திருப்பி தரும்படி மதுஷிடம் கொடுத்து வைத்திருந்தாராம் டக்கிளஸ்!

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, satan said:

தான் கேட்க்கும்போது துப்பாக்கியை திருப்பி தரும்படி மதுஷிடம் கொடுத்து வைத்திருந்தாராம் டக்கிளஸ்!

சில வேளை அதுதான்…உண்மையாய் இருக்குமோ. 😂

  • கருத்துக்கள உறவுகள்

நான் சு. பொன்னையா. 1990 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை ஈபிடிபி இயக்கத்தில் இருந்தேன்.

அந்தக் காலத்தில் நடந்த மிகச் சீரழிந்த, மனிதநேயத்துக்கு எதிரான சம்பவங்களை நேரில் பார்த்திருக்கின்றேன்

சிலவற்றில் நானும் உடன் இருந்திருக்கிறேன்

நான் எதற்கும் பயப்படவில்லை. உண்மையை சொல்ல வந்திருக்கிறேன்.

தினமுரசு நாளிதழின் ஆசிரியர் பத்திரிகையாளர் நடராஜா அற்புதராஜா, மகேஸ்வரி வேலாயுதம் ஆகிய இருவரையும் வி*டுதலைப் பு*லிகள் செய்தது என்று கூறி, நாமே கொ*ன்றோம்.

அந்தக் கொ*லைகளுக்கு புலிகள் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் உலகிற்கு “புலிகள் செய்தார்கள்” என சொன்னோம்

ஊடகவியலாளர் நிமலராஜன் அவர்களையும் எங்களில் சிலர் திட்டமிட்டு கொ*ன்றார்கள்

அந்தக் கொ*லையில் தொடர்புடையவர்கள் சிலர் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறார்கள். சிலர் வெளியேறியிருக்கின்றார்கள்

உதயன் நாளிதழ் மீது தாக்குதலையும் இராணுவமும், ஈபிடிபியும் சேர்ந்து செய்தார்கள்.

குறித்த தாக்குதலில் ராஜன், திவாகரன் ஆகிய ஈபிடிபி உறுப்பினர்கள் காயமடைந்தார்கள்

இருவரும் உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்த பலாலி இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்கள்.

அவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்.

அது மட்டும் இல்லாமல், அந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருந்த Masterminds, யாரெல்லாம் தூண்டினார்களோ – எல்லோரும் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறார்கள்.

எந்தப் பயமும் இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

நெல்லியடி, புங்குடுதீவு, காரைநகர், யாழ்ப்பாணம், வவுனியா எங்கும் பொதுமக்கள் இராணுவத்தினருடன் இணைந்து ஈபிடிபியினரால் தான் கடத்தப்பட்டார்கள்.

கொ*லை செய்யப்பட்டார்கள். சிறுமிகளும், மாணவர்களும் என பலர் காணாமலாக்கப்பட்டார்கள்

ஈபிடிபி யின் சாவகச்சேரி அமைப்பாளர் சார்ள்ஸ் தான் இந்த ஆட்கடத்தல்களுக்கு பின்னால் இருந்த Operation lead.

1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதியில் மண்டைதீவு பகுதி இராணுவ முற்றுகைக்குள் இருந்தே வேளை, அங்குள்ள மக்களுக்கு நாங்கள் நிவாரண பொருட்கள் கொண்டு சென்ற போது 15 – 20 பேர் அளவில் இராணுவத்தினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்களை டக்ளஸ் தேவானந்தா பார்க்க வேண்டும் என சொல்லி இராணுவத்தினரிடம் கேட்டு , நாங்கள் நேரில் சென்று அவர்களை பார்த்தோம்.

அவர்களில் ஒரு 13 வயதுடைய சிறுவனும் இருந்தான்.

நாங்கள் பார்த்து வந்த சில நிமிடங்களில் வெ$டி சத்தம் கேட்டது. அத்தனை பேரையும் சு*ட்டு கொ*ன்று விட்டார்கள்.

அவ்வேளை அங்கிருந்த அரச உத்தியோகஸ்தரான நிக்லஸ் என்பவரை சந்திக்க வருமாறு கேட்டிருந்தனர்.

அவர் தான் நேரில் வர மாட்டேன் என கூறியதும் அவரை அ*டித்து சி*த்திரவதை செய்த வேளை , அவர் உயிரிழந்து விட்டார்.

பின்னர் அவரின் உடலை தூக்கில் தொங்க விட்டனர். யாரும் விசாரிக்கவில்லை. ஒரு கேள்வியும் இல்லை.

ஏனெனில், எங்களை இராணுவத்தினர் பாதுகாத்தார்கள்

எங்களுடன் இருந்த 6 உறுப்பினர்கள், பு*லிகளுடன் இணைய முயன்றார்கள். அவர்களை வெ*ட்டிக் கொ*ன்றது யாரென்று தெரியுமா?

எங்களுடன் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இராமமூர்த்தி. அவரே வெ*ட்டிக் கொன்ற கத்தியுடன் வந்து, கூட்டம் நடத்தினார்.

முன்னாள் வானொலி அறிவிப்பாளர் கே.எஸ். ராஜா இந்தியாவில் இருந்தார். டக்ளஸ் தேவானந்தாவே அவரை அழைத்து வந்தார்.

பின்பு அவர் மீண்டும் ஒலிபரப்பு சேவைக்கு சேரலாம் என்ற தகவல் வந்ததும், அவர் நமது சில இரகசியங்களை வெளியே சொல்லக் கூடும் என்ற பயத்தால் அவருக்கு மதுவில் ந*ஞ்சு கொடுத்தோம். அவரும் செ*த்து போனார்.

மலையகத்தை சேர்ந்த மோகன், விஜி, யாழில் பாண்டியன், ஊர்காவற்றுறையில் கிளி – ஆகியோர் எங்களில் சிலருக்கு விரோதமாக நடந்ததால் நாமே அவர்களை கொ*ன்றோம்.

அவர்களை மலசல கூட குழிக்குள் போட்டு அசிட் ஊற்றி அவர்களின் உடல்களை பொ*சுக்கினோம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த சூரி என்பவரை கொழும்பில் கொலை செய்து , கடற்கரையில் அவரின் உடலை போட்டோம்

அதே போல ஈ.பி.டி.பி க்கு சொந்தமான கொழும்பு பார்க் வீதியில் இருந்த வீட்டில் பல கொ*லைகள் நடைபெற்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கான உத்தரவு – நம்முடைய முன்னாள் எம்.பி மதனராஜாவிடமிருந்து தான் வந்தது.

பாதுகாப்பு அமைச்சகம் மாதாந்தம் எங்களுக்கு சம்பளத்தை அனுப்பியது.

மஹிந்த ராஜபக்சே காலத்தில் எங்கள் அங்கத்தவர் ஒருவருக்கு 65,000 ரூபாய் வரை கணக்குக் காட்டி டக்ளஸ் தேவானந்தா பாதுகாப்பு அமைச்சிலிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டார்.

ஆனால் எங்களுக்கு ரூபா 10,000 - ரூபா 15,000 வரையில் சம்பளம் வழங்கினார்கள்.

கட்சியிலிருந்து விலகும் வரை மாதாந்தம் ரூபா 3,000 வரை EPF/ETF சேமிப்பதாகத் தெரிவித்திருந்தனர்.

ஆனால் அடிப்படை வேதனம் கேட்ட சிலரை கூட டக்ளஸ் தேவானந்தா இல்லாமல் ஆக்கியுள்ளார்

இவ்வாறு மிக நீண்ட ஆதாரங்களை ஈபிடிபி அமைப்பின் முன்னாள் உறுப்பினரான சு. பொன்னையா (சதா) என்பவர் திரு மைத்திரிபால சிறிசேன - திரு ரணில் விக்ரமசிங்கே அரசாங்க காலத்தில் குறைபாடாக முன்வைத்திருந்தார்

பின்னர் தற்போது ஜேவிபி அதிகாரத்திற்கு வந்த பின்னர் மீண்டும் பொலிஸ் தலைமையகம் முதல் பலவேறு தளங்களில் முறைப்பாடுகளாக வழங்கியிருக்கின்றார்

எத்தகைய விசாரணைகளுக்கு அழைத்தால் சாட்சியம் அளிப்பதாகவும் சொல்லியிருக்கின்றார்

ஆனால் இந்த குற்றச்செயல்களில் இராணுவம் சம்பந்தப்பட்டு இருப்பதால் நல்லாட்சி ஆட்சியாளர்கள் போல ஜேவிபியும் முறைப்பாட்டை ஏற்று கொள்ள தற்போது வரை தயாரில்லை

இராணுவ ஒருங்கிணைப்பில் தான் அப்பாவி தமிழ் மக்கள் வேட்டையிடப்பட்டு இருக்கின்றார்கள் என்பது பகிரங்கமாகி விடும் என்பதால் முறைப்பாட்டாளரை அலைக்கழிக்கின்றார்கள்

குறிப்பாக அப்பாவி தமிழ் மக்களை வேட்டைடைய பாதுகாப்பு அமைச்சு மாதாந்தம் பணம் செலவளித்திருக்கின்றது என்கிற அசிங்கம் தெரியாமல் இருக்க நாடகமாடுகின்றார்கள்

இருப்பினும் பிரதான சூத்திரதாரிகளான இராணுவ கட்டமைப்புகளை தெளிவாகவிருக்கும் ஜேவிபி ஆட்சியாளர்கள் தேவைகள் முடிவடைந்த நிலையில் கடுமையாக தண்டிக்க வேண்டிய ஓட்டுகுழு அம்புகளை களத்திலிருந்து அகற்ற சில்லறை வழக்குகளை நடத்தி நாடகமாடுகின்றார்கள்

இது ஜே ஆர் ஜெயவர்த்தனே கால Technique

https://m.facebook.com/story.php?story_fbid=pfbid02RU7NXS6p2mcYrfFgDxbkpz9kRa4FWrEvMrE6E7ZASKQzkEW62L7sHBK9ksWCTAB5l&id=100057588638936

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, ஈழப்பிரியன் said:

இருப்பினும் பிரதான சூத்திரதாரிகளான இராணுவ கட்டமைப்புகளை தெளிவாகவிருக்கும் ஜேவிபி ஆட்சியாளர்கள் தேவைகள் முடிவடைந்த நிலையில் கடுமையாக தண்டிக்க வேண்டிய ஓட்டுகுழு அம்புகளை களத்திலிருந்து அகற்ற சில்லறை வழக்குகளை நடத்தி நாடகமாடுகின்றார்கள்

இது ஜே ஆர் ஜெயவர்த்தனே கால Technique

உண்மை, அனுர அரசுக்கும் முன்னைய அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. பெயர்களும் நிறங்களுமே வேறு. சிலர் கோத்தாபோல் கடுமையாக இல்லை என்பர். மக்களுக்கு ஆட்சியை வழங்க வேண்டுமேயொழியக் கடுமையாக இருக்க வேண்டியதில்லை. நியாயமான சட்டத்தின் ஆட்சியை சகலருக்கும் உறுதிப்படுத்த வேண்டும். சட்டத்தின் ஆட்சியை சகலருக்கும் சமனாக வழங்கமுடியாதவராகவே இந்தத் தலைவரும் உள்ளார். திருகோணமலை புத்தர் சிலைவிவகாரத்தையே துணிவோடு கையாள முடியாத அரசு.அரசியலமைப்பென்று இதற்கும் விளத்தம் கொடுப்போரும் உளர். பெரும்பான்மையைக் கொண்ட அரசு ஏன் சரியானதொரு உலக நடைமுறைகளை உள்வாங்கி இன சமத்துவத்தைப் பேணக்கூடிய அரசியலமைப்பொன்றை முன்வைத்து நாட்டை சனநாயக நாடாக மாற்றலாமே. இவர்கள் ஒருபோதும் அப்படிச் செய்யமாட்டார்கள். அப்படிச்செய்தால் இவர்களது கட்சியில் உள்ளோரும் நீதியின் முன் நிற்கவேண்டி வரலாம்.

இதைக் கூறியவரை எப்போது காணாமலாக்குகிறார்களோ தெரியவில்லை.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

இதைக் கூறியவரை (சு.பொன்னையாவை) எப்போது காணாமலாக்குகிறார்களோ தெரியவில்லை.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

டக்கிலசாரின் வரலாற்றை விக்கி கலைக்களஞ்சியத்தில் வாசித்தேன். தலை சுற்றுதய்யா!

தாயார் யாழ் மத்திய கல்லூரி ஆசிரியையாம். இவருக்கு ஆறு வயதிலேயே மறைந்துவிட்டார்.

டக்லசாரின் வாழ்க்கை திசைமாறி பயணிக்க இதுவே ஆரம்பம் போல் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் துப்பாக்கி விவகாரத்தின் திடுக்கிடும் பின்னணி!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 2019-ல் வெலிவேரிய காட்டில் மீட்கப்பட்ட பாதாள உலகத் தாதா மாகதுர மதுஷின் துப்பாக்கிக்கும் டக்ளஸுக்கும் என்ன தொடர்பு?

எழுத்தும் தேடலும்: Zafar Ahamed

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது யாழ் களத்தில் அனுரவின் முகத்தை பலர் கிழிக்க தொடங்கி உள்ளனர்.

காவடிகள் மூவர் சுழண்டு ஆடியும்…

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

சில வேளை அதுதான்…உண்மையாய் இருக்குமோ. 😂

அதற்கிடையில் மதுஷின் மண்டையில் போட்டுவிட்டார்கள். கையில் விலங்குடன் இருந்த மதுஷ், போலீசாரை தாக்க முற்பட்டபோது போலீசார் திருப்பி தாக்கியதில் மதுஷ் கொல்லப்பட்டார். அவரோடு பல அரசியல்வாதிகளின் ரகசியங்களும் மறைந்தன. இப்போ, டக்கியார் தொடர்வார் மதுஷ் விட்டு இடத்திலிருந்து அல்லது அவரும் மதுஷ் போன இடத்திற்கே அனுப்பி வைக்கப்படுவார். டக்கிளசுக்கு தன் முடிவு எப்படியானது எனத் தெரிந்திருக்கும், அவரே பலருக்கு முடிவுகளை எடுத்தவராயிற்றே. இராணுவம், போலீசில் பல ஊழல்வாதிகளும் கொலைகாரரும் முன்னைய அதிபர் விசுவாசிகளும் உள்ளனர். கம்மன்பில தனது சட்டத்தரணி மேலங்கியை சலவைக்கு கொடுத்துள்ளாராம், அது வீட்டுக்கு வந்தவுடன் களத்தில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவஞானமும் சுமந்திரனும் மிகுந்த வேதனையில் உள்ளனராம், டக்கிளஸ் குற்றமற்றவர் என வெளியில் கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன என ஊர்க்குருவி ஒன்று சொல்லிச்சு. டக்கிளஸ் இவர்களை மாட்டி விட்டாலும் விடலாம் யாரறிவார்? அரசியலில் எதுவும் எந்நேரத்திலும் நிகழலாம். என்னவோ... புது வருடத்தில் நல்ல செய்திகள் வரட்டும்!

செய்த "தர்மம் தலைகாக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும், கர்மம் காத்திருந்து கழுத்தறுக்கும்." ஓமோ, இல்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் அரசியலில் ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்திய போராளியாகவும், பின்னர் செல்வாக்குமிக்க மத்திய அமைச்சராகவும் திகழ்ந்த டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைப் பயணம் தற்போது கர்மாவின் பிடியில் சிக்கியுள்ளது.

அவரது எழுச்சியும் வீழ்ச்சியும் குறித்த சுருக்கமான தொகுப்பு இதோ:

1957-இல் பிறந்த கதிரவேலு தேவானந்தா, தனது இளம் வயதிலேயே இடதுசாரி மற்றும் தமிழ் தேசியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். ஈரோஸ் (EROS) அமைப்பில் இணைந்து 'டக்ளஸ்' என்ற பெயரில் லெபனானில் இராணுவப் பயிற்சி பெற்றார். பின்னர் ஈபிஆர்எல்எஃப் (EPRLF) அமைப்பில் இணைந்து அதன் இராணுவத் தளபதியாகச் செயல்பட்டார்.

தேவானந்தாவின் வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே சர்ச்சைகளால் சூழப்பட்டிருந்தது.

இவரது ஆரம்பகால நடவடிக்கைகளை மீட்டுபார்க்கையில் 1980-களில் இலங்கையில் பலமுறை சிறை வைக்கப்பட்டார். 1983 வெலிக்கடை சிறைப்படுகொலையில் தப்பிப் பிழைத்து, மட்டக்களப்பு சிறையிலிருந்து தப்பியோடி இந்தியா சென்றார்.

சென்னையில் தங்கியிருந்தபோது, சூளைமேடு பகுதியில் ஒரு வழக்கறிஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் கடத்தல் புகார்களில் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

அமெரிக்கத் தம்பதியினர் கடத்தல் மற்றும் நிதி திரட்டுவதற்காகச் சொந்த மக்களையே கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டன.

1990-களில் ஈபிடிபி (EPDP) கட்சியைத் தொடங்கிய அவர், விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்துடன் கைகோர்த்தார். ஒரு துணை இராணுவக் குழுவாகச் செயல்பட்டு, யாழ்ப்பாணத் தீவுகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 1994 முதல் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல அரசாங்கங்களில் சக்திவாய்ந்த அமைச்சராகவும் பதவி வகித்தார்.

புலிகளின் பத்து கொலை முயற்சிகளில் இருந்தும் அவர் உயிர் தப்பினார்.

1990-களில் இலங்கை அரசுடன் இணைந்த பிறகு, EPDP ஒரு துணை இராணுவக் குழுவாகச் செயல்பட்டது. இந்த காலகட்டத்தில் நெடுந்தீவு உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகள் EPDP-யின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தன. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மீது கப்பம் கோருதல், சித்திரவதை மற்றும் தன்னிச்சையான கொலைகள் செய்தார்.

2006-2007 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் 'வெள்ளை வேன்'களில் கடத்தப்பட்ட சம்பவங்களில் EPDP-யினருக்குத் தொடர்பிருப்பதாக Human Rights Watch மற்றும் Amnesty International போன்ற அமைப்புகள் சுட்டிக்காட்டின.

யாழ்ப்பாணத்தில் பிபிசி செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் EPDP உறுப்பினர்களுக்குத் தொடர்பிருப்பதாகக் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டாலும், போதிய ஆதாரங்கள் இன்றி விடுவிக்கப்பட்டனர்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கருதப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தியதாக ஈபிடிபி மீது பல புகார்கள் உள்ளன. குறிப்பாக 2011-ல் யாழ்ப்பாணத்தில் நடந்த உள்ளூராட்சித் தேர்தல் காலப்பகுதியில் வன்முறைகளில் ஈடுபட்டதாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியது.

அரசியல் ரீதியாகப் பல சவால்களைச் சந்தித்த தேவானந்தாவின் வீழ்ச்சி, 2025-ஆம் ஆண்டின் இறுதியில் உச்சகட்டத்தை எட்டியது.

தனது தனிப்பட்ட துப்பாக்கியை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றின் கைகளுக்குச் செல்ல அனுமதித்தார் என்ற குற்றச்சாட்டில், 2025 டிசம்பர் 26 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) அவர் கைது செய்யப்பட்டார்.

ஒரு காலத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக அரசாங்கத்துடன் நின்ற அவர், தற்போது அதே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு 72 மணிநேரத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஒரு போராட்ட இயக்கத்தின் தளபதியாகத் தொடங்கி, அதிகாரமிக்க அமைச்சராக வலம் வந்த டக்ளஸ் தேவானந்தா, இன்று சட்டவிரோத கும்பல்களுடனான தொடர்பு மற்றும் ஆயுதக் கையாளுதல் புகார்களால் சிறைவாசம் அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

டக்ளஸ் தேவானந்தாவின் இந்தத் திடீர் கைது, அவரது தசாப்த கால அரசியல் ஆதிக்கத்தின் வீழ்ச்சியாகக் கருதப்படுவதோடு மட்டுமல்லாமல், ஒரு பிரபஞ்ச நீதியையும் உரக்கச் சொல்லியிருக்கிறது. "நீ விதைத்த வினையெல்லாம் உன்னை ஒருநாள் வேரறுக்கக் காத்திருக்கும்" என்ற முதுமொழிக்கு அவரும் விதிவிலக்கல்ல என்பதை தற்போதைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் அடக்குமுறைகளும், சர்ச்சைக்குரிய கடந்த காலச் செயல்பாடுகளும் இன்று ஒரு சுழற்சியைப் போல அவரிடமே திரும்பி வந்துள்ளன.

விதியை மதியால் வெல்லலாம் என்று நினைத்தாலும், ஒரு மனிதன் செய்த வினைகள் காலத்தின் கணக்கில் ஒருபோதும் தப்புவதில்லை என்பதற்கு டக்ளஸின் இன்றைய நிலையும், இந்தத் திடீர்ச் சரிவும் ஒரு வரலாற்றுச் சான்றாக மாறியுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, தமிழ் சிறி said:

ஒட்டுக்குழு தலைவன் டக்ளஸ்

அனுர ஆட்சியில் பிள்ளையான் மற்றும் ரனில் கைதாகும் போது வராத சவுண்ட் மற்றும் சலசலப்புகள் டக்ளஸ் கைதாகும் போது வருகின்றது எனும் போது....எங்கையோ யாருக்கோ குத்துது குடையுது என்றுதானே அர்த்தம்.

டக்ளஸ் கும்பல் செய்த அட்டூழியங்கள் ஆதாரங்களாக பெரிய யூனிகளான ஒக்ஸ்வோர்ட்,ஹவார்ட் போன்ற யூனிகளில் ஆதாரமாக திரட்ட முடியாது.சிசி என் என் பி பிசி ஊடகங்களும் சொல்லாது.

ஆனால் ஊரில் உள்ளவர்களை கேட்டால் கண்ணீர் மல்க உடல் நடுக்கத்துடன் சொல்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

செய்த "தர்மம் தலைகாக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும், கர்மம் காத்திருந்து கழுத்தறுக்கும்.]

கர்மம் கர்மா என்பது எல்லாம் பகவத்கீதையில் வருகின்ற பிஜேபி பாவிக்கின்ற சொற்கள் தானே புலம்பெயர் இலங்கை கிறிஸ்தவர்களும் நம்புவார்கள்🙄

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து, வடக்கில் இன்னுமொரு அரசியல் புள்ளி கைது செய்யப்படுவாரென செய்திகள் சொல்கின்றன. அது சிர்த்தாத்தனாக இருக்குமோ?

25 minutes ago, புலவர் said:

பின்னர் செல்வாக்குமிக்க மத்திய அமைச்சராகவும் திகழ்ந்த டக்ளஸ் தேவானந்தா

கொலைகார அரசுகளில் கொலைகாரன் மத்திய அமைச்சராக இருப்பதில் என்ன அதிசயம்? இவர்கள் திறமையினாலேயோ, மக்கள் ஆதரவினாலேயோ இவற்றைப்பெறவில்லை, செய்த கொலைகளுக்கு சன்மானம். ஏன் சிவநேசதுரை சந்திரகாந்ததனுக்கு முதலமைச்சர் பதவி எப்படி கிடைத்தது? பலி கொடுக்கப்போகும் கடாவுக்கு மாலை போட்டு, பொட்டு வைத்து, தூபம் காட்டி மரியாதை செய்வதில்லையா? அறிவு கொஞ்சமாவது இருந்திருந்தால் எதிர்காலம் மாறலாமென நினைத்திருக்க மாட்டாரா இந்த மனிதன்? ஜனநாயக வீரர், எங்கே இவரது ஜனநாயகம்? ஏன் இவரது கைதை மக்கள் வெடி கொழுத்தி கொண்டாடுகின்றனர்? அசுரன் அழிந்த நாளென்றா? மக்கள் உண்மையான தீபாபலியை கொண்டாடுகின்றனர். இவரோடு உடனிருந்தவர்கள் இவரை விட்டோடுகின்றனர், சிலர் காத்திருந்து காட்டிக்கொடுக்கின்றனர். இவரது ஜனநாயகத்தில் சாதித்தவை இவை. இவரால் கொல்லப்பட்ட ஆன்மாக்கள் சாந்தியடையட்டும் இவரை பழிவாங்கிய திருப்தியில்.

இந்த மனிதன் இந விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி எதையும் சாதிக்கவில்லை இந விடுதலைக்காய், அரசியல் செய்தும் இனத்தை அழித்ததுதான் மிச்சம், அதைத்தான் இப்போ அறுவடை செய்கிறார். அன்று புலிகளின் தாக்குதலில் இவர் இறந்திருந்தால்; இத்தனை கொடுமைகளும் வெளிவந்திருக்குமா? ஆண்டு நினைவலைகள் கொண்டாடப்பட்டிருக்கும் இவருக்கு, புலிகள் மேல் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும். ஒருபோதும் மக்களால் நினைவு கூரப்படக்கூடிய மனிதனல்ல இவ(ன்)ர்.

கர்மம் என்றால்; பாவம், அதர்மம் என்று பல்வேறு பொருள் தரும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

ஈழத்தமிழர் அரசியலில் ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்திய போராளியாகவும், பின்னர் செல்வாக்குமிக்க மத்திய அமைச்சராகவும் திகழ்ந்த டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைப் பயணம் தற்போது கர்மாவின் பிடியில் சிக்கியுள்ளது.

அவரது எழுச்சியும் வீழ்ச்சியும் குறித்த சுருக்கமான தொகுப்பு இதோ:

1957-இல் பிறந்த கதிரவேலு தேவானந்தா, தனது இளம் வயதிலேயே இடதுசாரி மற்றும் தமிழ் தேசியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். ஈரோஸ் (EROS) அமைப்பில் இணைந்து 'டக்ளஸ்' என்ற பெயரில் லெபனானில் இராணுவப் பயிற்சி பெற்றார். பின்னர் ஈபிஆர்எல்எஃப் (EPRLF) அமைப்பில் இணைந்து அதன் இராணுவத் தளபதியாகச் செயல்பட்டார்.

தேவானந்தாவின் வாழ்க்கை ஆரம்பத்திலிருந்தே சர்ச்சைகளால் சூழப்பட்டிருந்தது.

இவரது ஆரம்பகால நடவடிக்கைகளை மீட்டுபார்க்கையில் 1980-களில் இலங்கையில் பலமுறை சிறை வைக்கப்பட்டார். 1983 வெலிக்கடை சிறைப்படுகொலையில் தப்பிப் பிழைத்து, மட்டக்களப்பு சிறையிலிருந்து தப்பியோடி இந்தியா சென்றார்.

சென்னையில் தங்கியிருந்தபோது, சூளைமேடு பகுதியில் ஒரு வழக்கறிஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் கடத்தல் புகார்களில் தேவானந்தா தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

அமெரிக்கத் தம்பதியினர் கடத்தல் மற்றும் நிதி திரட்டுவதற்காகச் சொந்த மக்களையே கடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டன.

1990-களில் ஈபிடிபி (EPDP) கட்சியைத் தொடங்கிய அவர், விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்துடன் கைகோர்த்தார். ஒரு துணை இராணுவக் குழுவாகச் செயல்பட்டு, யாழ்ப்பாணத் தீவுகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 1994 முதல் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல அரசாங்கங்களில் சக்திவாய்ந்த அமைச்சராகவும் பதவி வகித்தார்.

புலிகளின் பத்து கொலை முயற்சிகளில் இருந்தும் அவர் உயிர் தப்பினார்.

1990-களில் இலங்கை அரசுடன் இணைந்த பிறகு, EPDP ஒரு துணை இராணுவக் குழுவாகச் செயல்பட்டது. இந்த காலகட்டத்தில் நெடுந்தீவு உள்ளிட்ட யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகள் EPDP-யின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தன. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மீது கப்பம் கோருதல், சித்திரவதை மற்றும் தன்னிச்சையான கொலைகள் செய்தார்.

2006-2007 காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் 'வெள்ளை வேன்'களில் கடத்தப்பட்ட சம்பவங்களில் EPDP-யினருக்குத் தொடர்பிருப்பதாக Human Rights Watch மற்றும் Amnesty International போன்ற அமைப்புகள் சுட்டிக்காட்டின.

யாழ்ப்பாணத்தில் பிபிசி செய்தியாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் EPDP உறுப்பினர்களுக்குத் தொடர்பிருப்பதாகக் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டாலும், போதிய ஆதாரங்கள் இன்றி விடுவிக்கப்பட்டனர்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கருதப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல்கள் நடத்தியதாக ஈபிடிபி மீது பல புகார்கள் உள்ளன. குறிப்பாக 2011-ல் யாழ்ப்பாணத்தில் நடந்த உள்ளூராட்சித் தேர்தல் காலப்பகுதியில் வன்முறைகளில் ஈடுபட்டதாகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியது.

அரசியல் ரீதியாகப் பல சவால்களைச் சந்தித்த தேவானந்தாவின் வீழ்ச்சி, 2025-ஆம் ஆண்டின் இறுதியில் உச்சகட்டத்தை எட்டியது.

தனது தனிப்பட்ட துப்பாக்கியை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் ஒன்றின் கைகளுக்குச் செல்ல அனுமதித்தார் என்ற குற்றச்சாட்டில், 2025 டிசம்பர் 26 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) அவர் கைது செய்யப்பட்டார்.

ஒரு காலத்தில் பயங்கரவாதத்திற்கு எதிராக அரசாங்கத்துடன் நின்ற அவர், தற்போது அதே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் கைது செய்யப்பட்டு 72 மணிநேரத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஒரு போராட்ட இயக்கத்தின் தளபதியாகத் தொடங்கி, அதிகாரமிக்க அமைச்சராக வலம் வந்த டக்ளஸ் தேவானந்தா, இன்று சட்டவிரோத கும்பல்களுடனான தொடர்பு மற்றும் ஆயுதக் கையாளுதல் புகார்களால் சிறைவாசம் அனுபவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

டக்ளஸ் தேவானந்தாவின் இந்தத் திடீர் கைது, அவரது தசாப்த கால அரசியல் ஆதிக்கத்தின் வீழ்ச்சியாகக் கருதப்படுவதோடு மட்டுமல்லாமல், ஒரு பிரபஞ்ச நீதியையும் உரக்கச் சொல்லியிருக்கிறது. "நீ விதைத்த வினையெல்லாம் உன்னை ஒருநாள் வேரறுக்கக் காத்திருக்கும்" என்ற முதுமொழிக்கு அவரும் விதிவிலக்கல்ல என்பதை தற்போதைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் அடக்குமுறைகளும், சர்ச்சைக்குரிய கடந்த காலச் செயல்பாடுகளும் இன்று ஒரு சுழற்சியைப் போல அவரிடமே திரும்பி வந்துள்ளன.

விதியை மதியால் வெல்லலாம் என்று நினைத்தாலும், ஒரு மனிதன் செய்த வினைகள் காலத்தின் கணக்கில் ஒருபோதும் தப்புவதில்லை என்பதற்கு டக்ளஸின் இன்றைய நிலையும், இந்தத் திடீர்ச் சரிவும் ஒரு வரலாற்றுச் சான்றாக மாறியுள்ளது.

யாழ் மத்திய கல்லூரி, கொழும்பு இந்துக்கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார் என விக்கியில் உள்ளது. 1977ம் ஆண்டு இவரது நெருங்கிய உறவினர் ஜே ஆர் ஜெயவர்த்தனவினால் தொழிற்சங்கம் ஒன்றில் முக்கிய பதவிக்கு நியமிக்கப்பட்டதாகவும் அவரின் உதவியாளராக டக்லசார் செயற்பட்டார் எனவும் தகவல் உள்ளது. இத்தகைய அனுபவங்கள் டக்லஸ் அந்த காலத்திலேயே கொழும்பை பிரித்து மேய்வதற்கு உதவ போதுமானது.

நடப்பு அரசாங்கம் டக்லசை எவ்வளவு தூரம் முடக்கும் என கூறுவது கடினமானது.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நியாயம் said:

நீங்கள் சொல்வது பிரபல தொழிற்சங்கவாதியான கேசி நித்யானந்தா என நினைக்கிறேன்.

நான் அறிந்த வகையில் டக்கா சில காலம் இவரின் சீடர்களில் ஒருவர் போல இருந்தார் என நினைக்கிறேன்.

ஆனால் பெரியப்பா, சுவீகார தந்தை என பல கதைகள் உலாவுகிறன.

இந்த கதைகளை தனக்கு கீர்த்தி ஏற்படும் வகையில் டக்காவே பரப்பினார் என்பதே நித்யாநப்தாவுடன் அருகில் இருந்து வேலை பார்த்தோர் என்னிடம் நேரடியாக கூறியது.

1 hour ago, விளங்க நினைப்பவன் said:

செய்த "தர்மம் தலைகாக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும், கர்மம் காத்திருந்து கழுத்தறுக்கும்.]

கர்மம் கர்மா என்பது எல்லாம் பகவத்கீதையில் வருகின்ற பிஜேபி பாவிக்கின்ற சொற்கள் தானே புலம்பெயர் இலங்கை கிறிஸ்தவர்களும் நம்புவார்கள்🙄

கிறிஸ்மசுக்கு கேக் அடிப்பவர் எல்லாம் கிறீஸ்தவர் அல்ல 😂

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ, இவர் இன்னும் செயல் வீரர் என பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர் என்ன ஜனநாயக வழியிலா செயற்பட்டு கொண்டிருந்தார் இவரை முடக்குவதற்கு? வைத்திருந்த கைதுப்பாக்கியையும் இரவல் கொடுத்து மாட்டுப்பட்டிருக்கிறார். இவர் செய்த எத்தனையோ தீவினைகள் இருக்க இப்படி மாட்டுப்படுவேன் என்று கனவிற்கூட நினைத்துப்பார்த்திருக்க மாட்டார். அவரது துணைக்கரங்களும் மடங்கி விட்டன. செய்த அநிஞாயம், அக்கிரமம், அதர்மம், வினை மட்டுமே இப்போது இவருடன் கூட இருக்கின்றன. அவரை கேள்வி கேட்டு கஸ்ரப்பட்டு விசாரிக்கத்தேவையில்லை, அவருடன் சேர்ந்தியங்கியவர்கள் அங்கே காத்திருக்கிறார்கள் இவரைக்காண, அவர்களை கண்டதும் இவர் உளறத்தொடங்கி விடுவார். ஒரு கேள்வி கேட்டால் சம்பந்தமில்லாமல் ஒன்பது உளறுவது இவரின் வழக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிதான் எங்கள் ஊரில் ஒருவர் கிறிஸ்தவ மதம் மாறி விட்டார். ஆனால் சேர்ச்சுக்கு போவதில்லை.

ஒரு தரம் வழியில் கண்ட பாதிரியார் “ என்ன இப்ப சேர்சுக்கே வாறேல்லா யேசுவை மறந்துட்டியளோ” என கேட்க,

எங்கட ஆள் சொன்னாராம்..

“சிவ, சிவா…நானாவது யேசுவை மறப்பதாவது” எண்டு 😂.

அப்படித்தான் பலரது கிறிஸ்தவ நம்பிக்கையும். சாதி, தீண்டாமை, பெண்ணடிமைதனம், கர்மா, ….

இப்படி சர்மாக்கள் சொல்லி கொடுத்த எதையும் கைவிடவில்லை.

9 minutes ago, goshan_che said:

கிறிஸ்மசுக்கு கேக் அடிப்பவர் எல்லாம் கிறீஸ்தவர் அல்ல 😂

40 minutes ago, நியாயம் said:

நடப்பு அரசாங்கம் டக்லசை எவ்வளவு தூரம் முடக்கும் என கூறுவது கடினமானது.

இங்கே பலர் அனுர காதலில் அனுங்குவதால் அவர்களுக்கு இலங்கை அரசு பற்றிய புரிதல் மங்கி விட்டது.

2009 க்கு முன் டக்கா செய்தவற்றுக்கு ஆக்ஸ்போர்ட், கேம்பிரிஜ் போக தேவையில்லை.

அம்னெஸ்டி, HRW, US State dept அறிக்கைகளே போதும்.

ஆனால் இவற்றை அனுரா கனவிலும் தொடார்.

மேலே ஈழப்பிரியன் அண்ணா பதிந்துள்ளார். ஒரு உறுப்பினர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை சீண்டுவார் இல்லை.

சும்மா கண்துடைப்புக்கு ஒரு கைது.

அதை கண்டவுடன் காவடிக்காரருக்கு ஒரு சோடா குடித்த சிலிர்ப்பு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.