Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்  பதவிவிலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தாயகம் அலுவலகத்தில் இன்று(03) இடம்பெற்றது.

இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…

பகிரங்கமாக சவால் 

அரசாங்கம் எல்லைமீள் நிர்ணயம் செய்தபின்னர் தான் மாகாணசபை தேர்தல் என்று கூறுவதை நாம் ஏற்கமுடியாது. தேர்தல் முறை மறுசீரமைப்பு என்பது ஒரு விடயம்.

ஆனால் மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்பதற்காக தேர்தலே நடத்தாமல் இருப்பது ஏற்க முடியாத ஒரு விடயம். அதனை அரசுக்கு சொல்லியிருக்கிறோம். அப்படி பார்த்தால் கடந்த இரு நாடாளுமன்ற தேர்தல்கள் நடாத்தியிருக்க முடியாது.

சிறீதரனை பதவிவிலகுமாறு பணிப்புரை! எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம் | Sritharan Resigns From Parliament Position Sumanth

எனவே தேர்தலை உரிய காலத்தில் நடாத்துவது அடிப்படையான விடயம். அரசானது தேர்தலுக்கு முகம் கொடுக்க பயந்துகொண்டு மாகாணசபை தேர்தலை காலவரையின்றி பிற்போட்டுக்கொண்டிருப்பதாக தெரிகின்றது.

முடிந்தால் மாகாணசபை தேர்தலை உடனடியாக நடாத்துங்கள் என்று பகிரங்கமாக சவால் விடுக்கின்றோம். வடகிழக்கில் அரசின் செல்வாக்கு பாரிய அளவு சரிவடைந்துள்ளது. மக்கள் தெளிவடைந்துள்ளனர்.

அதனை நடத்தினால் மண் கௌவ்வுவீர்கள் என சவாலாக  கூறுகின்றோம்.

நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்

அத்துடன் பயங்கரவாத தடுப்புச்சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்படவேண்டும். மாற்றீடாக எந்த சட்டமும் தேவையில்லை என்று எங்களை விட தீவிரமாக இருந்தவர்கள் இந்த ஜேவிபியினர். கடந்தகாலங்களில் மாற்று வரைபுகள் வந்தபோது இவர்கள் அந்த கூட்டங்களுக்கே வரமாட்டார்கள்.

அதனை நீக்குமாறு நாங்கள் நடாத்திய போராட்டங்களில் ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் அவர்கள் சார்ந்த முக்கியமான ஒருவர் பங்கு கொண்டிருந்தார். எனவே ஆட்சிக்கு வந்தவுடன் இருப்பதை விட மோசமான ஒரு வரைபு தற்போது வெளிவந்துள்ளது.

சிறீதரனை பதவிவிலகுமாறு பணிப்புரை! எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம் | Sritharan Resigns From Parliament Position Sumanth

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்காகவாம் என்று கூறப்படுகின்றது. இது ஒரு நகைப்பிற்குரிய விடயம். அவ்வாறு எனில் மக்களை பாதுகாப்பதற்காக இல்லை. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் உள்ள விடயங்கள் தொடர்பாக கட்சி சில கலந்துரையாடல்களை நடாத்தும்.அந்த வரைபை முற்றாக எதிர்க்கிறோம். கட்சியில் இருந்து நீக்கம் நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது ஒரு மோசமான குற்றச்சாட்டு. சட்டத்தின் முன் குற்றம் நிரூபிக்கப்படும் வரைக்கும் அவர் நிரபராதியாக இருந்தாலும் கூட ஒரு பொறுப்பான அரசியல் கட்சி என்ற ரீதியிலே இந்த செயற்பாட்டிற்கு இடம்கொடுக்க கூடாது.

எனவே உடனடியாக அவரை கட்சியில் இருந்து நீக்குவது என்ற தீர்மானம் எடுத்திருக்கிறோம்.

அரியநேந்திரன்

அத்துடன் எங்களுடைய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை தொடர்பாக பேசியிருக்கிறோம்.

குறிப்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அரியநேந்திரனை கட்சியின் நிகழ்வு ஒன்றில் முக்கியத்துவம் வழங்கியதான குற்றச்சாட்டு ஒன்று மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் மீது இருந்தது.

சிறீதரனை பதவிவிலகுமாறு பணிப்புரை! எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம் | Sritharan Resigns From Parliament Position Sumanth

கட்சி தீர்மானத்திற்கு மாறாக செயற்ப்பட்டமையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரே அரியநேந்திரன். அந்த தீர்மானத்துடன் இணைந்து செயற்ப்படவேண்டியது கட்சியில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை.எனவே அவ்வாறு செயற்ப்பட இடமளிக்க முடியாது என்ற விடயத்தையும் வலியுறுத்தியுள்ளோம்.

சிறீதரன் மீது குற்றச்சாட்டு

அத்துடன் தேசிய ரீதியில் ஒரு குற்றச்சாட்டு ஒன்று எமது நாடாளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறீதரன் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையில் அரசுடன் இணைந்து அனைத்திற்கும் வாக்களித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. விசேடமாக கணக்காளர் நாயகம் நியமனத்தில் ஒரு இராணுவ அதிகாரிக்கு சார்பாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இழப்பீட்டிற்கான அலுவலகத்திற்கும் இராணுவ அல்லது பாதுகாப்புத்தரப்பின் பின்புலத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு சிறீதரன் சார்பாக வாக்களித்தமை மட்டுமல்லாமல் அவர்களை தெரிவுசெய்கின்ற நேர்முக பரீட்சையிலும் தேர்வுசெய்துள்ளார். என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்தது.அதனை அவர் மறுத்திருந்தார். ஆனால் அது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சிறீதரனை பதவிவிலகுமாறு பணிப்புரை! எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம் | Sritharan Resigns From Parliament Position Sumanth

அந்த இருவரையும் நியமிக்கக்கூடாது என்று கட்சி ஜனாதிபதிக்கு கடிதம் எழுத வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு எழுதிவைத்திருந்தோம். எனவே அது ஒரு தர்மசங்கடமான நிலைமையை கட்சிக்கு ஏற்ப்படுத்தியுள்ளது. இவர்களை நியமிக்க கூடாது என்று கட்சி கடிதம் எழுதியுள்ளது. ஆனால் கட்சியை சேர்ந்தவர் அவர்களை தெரிவுசெய்துள்ளார்.

அத்துடன் அதற்கு முன்னரும் கூட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக மத்தியகுழு கூட்டத்தில் அவரிடம் விளக்கம் கேட்டிருந்தோம். கூடிய புள்ளி எண்ணிக்கையை பெற்றவருக்கு அந்த பதவியை வழங்காமல் இரண்டாவதாக வந்தவருக்கு அரசாங்கம் கொடுத்தபோது அரசுடன் இணைந்து அவர் வாக்களித்ததாக சொல்லப்பட்டது.

ஒழுக்காற்று விடயங்கள் 

அதற்கான நியாயப்பாடுகளை கட்சிக்கூட்டத்தில் அவர் சொல்லியிருந்தார். மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பதவி தொடர்பான வாக்கெடுப்பிலும் அப்படி செயற்ப்பட்டதாக சொல்லப்பட்டிருந்தது.

கணக்காளர் நாயகம் விடயத்தில் மூன்று தடவைகள் அவ்வாறு நடந்துள்ளது. இறுதியாகவே அந்த இராணுவ அதிகாரியும், அதற்கு முன்பு ஜனாதிபதி தனது நெருங்கிய நண்பரையும் பின்னர் இரண்டாம் நிலையில் இருக்கும் ஒருவரையும் பரிந்துரை செய்திருந்தார். இருப்பினும் அந்த மூன்றும் நிறைவேறவில்லை.

ஏனெனில் எதிர்கட்சி உறுப்பினர்கள் இருவரும் சிவில் சமூகத்தை சேர்ந்த மூவரும் சேர்ந்து அந்த பிரேரணைகளிற்கு எதிராக வாக்களித்திருந்தனர். அவர்களுக்கு சார்பாக சிறீதரனின் வாக்கு உட்பட நான்கு வாக்குகள் கிடைத்தது. எனவே அரசுடன் இணைந்து இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டது தொடர்பான குற்றச்சாட்டு அவருக்கு இருந்தது.

சிறீதரனை பதவிவிலகுமாறு பணிப்புரை! எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம் | Sritharan Resigns From Parliament Position Sumanth

ஏற்கனவே இது தொடர்பாக நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரச்சனையை எழுப்பியிருந்தார். சிறீதரன் பிரதிநிதித்துவப்படுத்துவது பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த மற்றய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதி. எனவே அப்படியாக இருப்பவர் எல்லா விடயங்களிலும் கண்ணை மூடிக்கொண்டு அரசுக்கு சார்பாக வாக்களிப்பது தொடர்பான குற்றச்சாட்டு எட்டாவது தடவையாக நடந்துள்ளது.

எனவே கட்சியையும் சங்கடப்படுத்தாமல் அவரையும் சங்கடத்திற்கு உட்படுத்தாமல் இருப்பதற்காக அரசியலமைப்பு பேரவையில் இருந்து அவர் பதவிவிலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதாக தீர்மானம் எடுத்துள்ளோம் என்றார்.

அத்துடன் கட்சியின் ஒழுக்காற்று விடயங்கள் தொடர்பாக பிரதேச சபை உறுப்பினர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கட்சியின் உத்தரவு மீறப்படும் சந்தர்ப்பத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அவர்களுக்கு ஞாபகமூட்டப்பட்டிருக்கின்றது.


https://tamilwin.com/

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சிறிதரன் பா.உ வும் அனுர காவடியாக மாறி விட்டாரா? அல்லது பார் லைசென்ஸ் விடயம் வெளியே வராமல் இருக்க ஆட்சிக்கு வரும் எந்த அரசிடமும் சரணாகதி அடையும் நிலையா? சிறிதரன் ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அதிரடி 1. சிங்கள கட்சியை எதிர்த்து பொது வேட்பாளராக களமிறங்கிய அரிய நேந்திரன் தமிழரசுக்கட்சியிலிருந்து அதிரடி பதவி நீக்கம். அதிரடி 2. அரசுக்கு சார்பாக வாக்களித்ததால் சிறிதரன் கட்சியிலிருந்து பதவி நீக்கம். ஆனால் கட்சியின் கொள்கைகளுக்கு மாறாக, கட்சியின் ஒப்புதலின்றி, அரசுடன், வெளிநாட்டு தூதுவர்களுடன் இரகசிய பேச்சுக்கள், நகர்வுகள், முடிவுகள் மேற்கொண்ட, தமிழ்தேசியத்துக்கெதிரான கருத்துக்கள் சொன்ன, தனக்கென பதவிகளை உருவாக்கிக்கொண்ட ,பதவியை இறுக பிடித்துக்கொண்டுள்ள சுமந்திரன் கட்சியின் பொது செயலாளர். தமிழரசுக்கட்சி தன் முடிவை நோக்கி பயணிக்கிறது. சுமந்திரன் அடிக்கடி சொல்லுவார், தமிழ்த்தேசியம், தமிழரசு என்று கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் இருப்பதால் சிங்களவர் கோபம் அடைகின்றனராம், பயப்படுகின்றனராம். அவற்றை இல்லாமல் செய்வதற்காகவே கட்சிக்குள் இறக்கப்பட்டார். வந்த காரியம் ஓரளவு நிறைவேறிவிட்டது. தன் இனம் சார்ந்த பெயரை தமிழ் மக்கள் வைப்பதற்கு சிங்களம் ஏன் வெறுக்க வேண்டும்? அதனால் சிங்களத்திற்கு என்ன பாதிப்பு? அதாவது தமிழர் இந்த மண்ணின் குடிகள் இல்லை என்று நிறுவுவதற்கு இவைகள் தடையாக உள்ளனவோ? தமிழ் என்று சொல்லக்கூடாது என்று கூறு அரசுக்கு துணை போகிற சுமந்திரன், எப்படி தமிழ் மக்களின் பிரதி நிதியாகவோ அல்லது அவர்கள் சார்பாக முடிவெடுக்கும் ஒருவராகவோ இருக்க, செயற்பட முடியும்? இருந்தாலும் சுமந்திரனின் அரசியல் அஸ்தமனமாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பார் சிறி தன்ர குட்டு வெளிக்காது கவி பண்ண அரசுடன் இசைந்து போகிறார் போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

வட்ஸப்பில் வந்தது…

சிவஞானம் சிறீதரனை அரசியலிலிருந்து அகற்றும் உள்வீட்டு அரசியலின் ஒரு அங்கமாக அரசியலமைப்பு பேரவையில் இருந்து ராஜினாமா செய்ய பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் அத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமகாலத்தில் சிவஞானம் சிறீதரன் மீது தென்னிலங்கையில் சிலரால் குற்றச்சாட்டுகள் மற்றும் நிரூபிக்கப்படாத வதந்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டே வருகின்றது.

இலங்கை தமிழரசுகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலம் கட்சியிலிருந்து வெளியேற்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வைக்கும் சதிகள் உள்ளிருந்து உச்சமடைந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்திலிருந்து சிவஞானம் சிறீதரன் மட்டுமே வெற்றியடைந்திருந்தார்.

இந்நிலையில் ஏனையோரது தேர்தல் வெற்றி பற்றி அவர் அக்கறை கொள்ளவில்லையென்ற குற்றச்சாட்டு;க்கள் எம்.ஏ.சுமந்திரன் தரப்பினால் முன்வைக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில் தொடர்ச்சியாக தென்னிலங்கை அரசியல் சக்திகளது ஆதரவுடன் உள்வீட்டு மேற்பார்வையில் அவர் மீது சேறடிப்புக்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக சிவஞானம் சிறீதரன் ஆதரவு தரப்புக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டேவருகின்றது.

ஏற்கனவே கிளிநொச்சியில் மதுபானச்சாலைகளிற்கான அனுமதிப்பத்திர விவகாரம் மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனம் தொடர்பில் ஆதரவளித்ததான குற்றச்சாட்டுக்களை அத்தகைய தரப்புக்கள் பரப்பியே வருகின்றன.தற்போது இறுதியாக முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதியாக நல்லாட்சி காலத்தில் பணியிலிருந்த தர்சன ஹெட்டியராட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்காமை சர்ச்சையாகியுள்ளது.

எனினும் அவற்றினை நிரூபிக்க பகிரங்க சவாலை சிவஞானம் சிறீதரன் முன்வைத்துவருகின்ற போதும் அத்தரப்புக்கள் மௌனம் காத்தேவருகின்றன.

இந்நிலையில் தற்போது கிளிநொச்சியின் பூநகரி முட்கொம்பன் பகுதியில் இலங்கை அரசினால் அனுமதிக்கப்பட்ட சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கான அனுமதிக்காக சிவஞானம் சிறீதரன் தரகுப்பணம் பெற்றதாக கதைகள் வேகமாக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.

வுனவளத்திணைக்களத்தின் கீழுள்ள அரச காணிகளினை சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கு ஒதுக்குவதென்பது மொட்டைத்தலைக்கும் முழங்காலிற்கும் முடிச்சு போடுவதாகவே உள்ளதென்கின்றன உள்வீட்டு தரப்புக்கள்.

சண்பவர் எனும் தனியார் நிறுவனம் இலங்கை புதுப்பிக்க சக்தி அமைச்சின் அனுமதியுடன் முன்னைய ரணில் அரசிடம் சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கான அனுமதியை பெற்றிருந்தது.எனினும் ஆட்சி மாற்றம் மற்றம் மின் அலகொன்றை கொள்வனவு செய்வது தொடர்பிலான பிணக்கினால் சண்பவர் நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறியிருந்தனர்.

இந்நிலையில் புதிய முதலீட்டாளர்கள் சகிதம் மீண்டும் புதுப்பிக்க தக்க சக்தி அமைச்சின் ஊடாக அரசின் அனுமதியை சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கென பெற்றுள்ளது.

இந்நிலையில் அவற்றின் எந்நடவடிக்கையுடனும் தொடர்புபடாத சிவஞானம் சிறீதரன் மற்றும் அவர் மகன் மீது சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டிருந்தது.அத்தகைய குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுவதன் பின்னணியில் முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரது பெயர்கள் அரசியல் வட்டாரங்களிடையே பேசுபொருளாகியுள்ளது.

எனினும் முன்னதாக இக்குற்றச்சாட்டுக்கள் எழுந்த போதே "ஆதாரங்கள் இருந்தால் பகிரங்கமாக அல்லது நீதிமன்றத்தில் நிரூபிக்குமாறு" சிறீதரன் தரப்பு சவால் விடுத்திருந்தது.அதேபோன்று சிறீதரனின் மகனும் சவால் விடுத்திருந்தார். அதேவேளை தற்பேர்து இலஞ்ச ஊழல்களை ஆய்வு செய்வதற்கான குழுவில் முறைப்பாட்டளித்துள்ள சஞ்சய மஹவத்த கடந்த காலங்களில் உயர் காவல்துறை அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைதானவர் என்பதும் தற்போதும் 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரிய வழக்கு ஒன்றை எதிர்கொண்டு வருபவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

அவர் அத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன் பின்னணியிலும் உள்வீட்டு சதிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அரசியலமைப்பு பேரவையில் இருந்து ராஜினாமா செய்ய பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.