Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

நீங்கள் கூறியவை பிற்காலங்களில் நடந்தவை. ஆரம்பத்தில் பல குற்றவாளிகள் கொலை செய்யப்பட்டார்கள். ஆனால் இவற்றுக்கு எனது ஞாபகத்தை தவிர ஆவணங்கள் இல்லை. கோபு என்ற நபர் பல குற்றச்செயல்களுக்காக புலிகளால் கொல்லப்பட்டார். போயா என்ற நபரும் இதே காரணத்துக்காக ரெலோ அல்லது ரெலியால் முதல் முறை சுடப்பட்டு யாழ் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அன று இரவு ஆஸபத்திரிக்குள் நுளைந்து மீண்டும் சுட்டு கொல்லப்படார். இவர்கள் இருவருக்கும் அரசியல் தொடர்பு இருக்கவில்லை. நீங்கள் கேட்டதால் இதை பதிந்தேன். மற்றப்படி நான் கூற வந்த முக்கிய விடயம் இன்று மனித உரிமை, நீதிமன்றம், உலகில் துப்பாக்கி பாவிக்கும் புரொட்டோகோல் எப்படி என்றெல்லாம் முகநூல்களில் வகுப்பு எடுபவர்கள் எல்லோருமே இந்த கொலைகளையும் கடந்த வருடம் நடைபெற்ற மனைவியின் தலையை வெட்டிய குற்றத்தையும் ஒப்பிட்டு பாராட்டி எழுதியவர்கள் தான். அதுவே நான் கூற வந்த கருத்து. அதில் ஒரு முக நூல்க்கருத்து பின்வருமாறு இருந்தது.

உது தமிழ் ஈழத்தின் தண்டனை தமிழன் கெத்து 🎉🎉🎉🎉🎉 இனி இப்படித்தான் 💪🏽🎉பயப்பட வேண்டும் தமிழ்ப்பெண்கள் 👌🏼👌🏼👌🏼
-----
தன்மான தமிழ் ஈழத்தமிழன் நம் தலைவரின் சட்டப்படி அவர் செய்திருக்கின்ரார் 🎉🎉🎉

கோபுவை பற்றி நான் அறியவில்லை. ஆனால் போயா, ஜப்பான் ஆகியோர் கொலை பற்றி அறிந்துள்ளேன். அதை புலிகள் செய்யவில்லை என நினைக்கிறேன்.

ஆனால் அந்த மனைவி கழுத்தை வெட்டியதை “தலைவன் வழி” என எத்தனை பெயர் எழுதினாலும் அவர்களுக்குதான் மண்டை பிழையே ஒழிய, இது அவரின் வழி அல்ல, என்பது வெள்ளிடமலை.

சில பழமைவாத மடமைவாதிகள் தம் மனதில் தோன்றும் பிற்போக்கு அழுக்குகளை எல்லாம், தலைவர் வழி, புலிகள் வழி என பக்கெட் பண்ண முயல்வதை நாம் யாழில் கூட காண்கிறோம். ஆனால் அது உண்மை அல்ல.

  • Replies 80
  • Views 3.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • நியாயம்
    நியாயம்

    குருவி சுடுவது போல் சுட்டு பொசுக்கி உள்ளார்கள். சோசல் மீடியாவில் போலீசுக்கு முண்டு கொடுத்து துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி உள்ளார்கள். இலங்கையில் கொலை குற்றம் செய்து மரண தண்டனை தீர்ப்பு கொடுக்கப்பட்

  • இவை எல்லாமும் மட்டும் அல்ல அதிபர் ஆனந்தராஜா போன்றோர் கொலைகளும் அரங்கேறின. இவை அரசியல் கொலைகள். ஆனால் களவுக்கு புலிகள் மரண தண்டனை வழங்கியதாக நான் அறியவில்லை. கப்பம் கேட்டு கொடுக்காத போது புளொட் சுட்டு

  • கள்ள மாடு உட்பட திருட்டுக்கு சிங்கள தேசத்தில் தினமும் சிங்கன பொலிஸ் சிங்களவரை சுடுகுதா??? வாகனம் நிற்காமல் போனால் துரத்தி பிடிக்கலாம். தீவகத்துக்க வர போக ஒற்றை வீதி தானே இருக்கு. அதில தடை போட்டு வாகனத

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பொது இடங்களில் கட்டி வைத்து அடித்தார்கள், நான் கள்ளன் என அறிவிப்பு கழுத்தில் கட்டினார்கள்.

இவை பல உதயன், முரசொலியில் செய்தியாக வந்தன.

ஆனால் மரண தண்டனை, இராணுவ, அரசியல் காரணங்களுக்காகவே அரங்கேறின என்பது என் அனுபவம்.

1984 - 1987 காலப்பகுதியில் இயக்கங்களால் கொடுக்கப்பட்ட தண்டனைகள் பொதுவாக இராணுவத்ததோடு தொடர்புவைத்துக்கொண்டு இயக்க நடவடிக்கைகளை காட்டிக்கொடுத்தல் (ஒத்தோடிகள்) தொடர் கொள்ளைகள், பாலியல் வல்லுறவுகள் இப்படியானவர்கள் மீது உடனடியாக இருந்தது. அதிலும் பல, தடவைகள் எச்சரிக்கை விடப்பட்டு, தொடர்ச்சியின் காரணமாக மரண தண்டனை வழங்கப்பட்டது.

மரணதண்டனை கொடுத்ததை இன்று நான் ஆதரிக்கவில்லை. அன்று 16,17 வயதில் ஆழமாக சீர்தூக்கி பார்க்கும் பக்குவமும் இருக்கவில்லை. அன்றைய சூழ்நிலையில் கெரில்லா போராட்ட முறைகள் உலகம் முழுவதும் அப்படித்தான் இருந்தன என்று நினைக்கிறன்.

வெறும் கோழி திருடியவன், ஆடு திருடியவன் எல்லாம் மின்கம்பத்தில் கட்டப்படவில்லை. எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, பச்சைமட்டை பிரயோகப் படுத்தப்பட்டு தண்டனைகள் கொடுக்கப்பட்டது.

எங்கள் ஊரில் ஒரு இளம்பெண் (எனது வகுப்பு தோழி, பெயர் சொல்வதை தவிர்க்கிறேன்) இந்திய இராணுவ சிப்பாய் ஒருவரோடு காதல் போன்ற ஒரு உறவில் இருந்தார். இந்திய ராணுவம் தோழியின் வீட்டு வாசலில் அடிக்கடி வாகனத்தை நிறுத்தி, களைப்பாறி, இளைப்பாறி போவார்கள். ஊர் மக்களுக்கும் கூட இதில் அதிருப்தி இருந்தது. அன்றைய நாவற்குழி இயக்க பொறுப்பாளர் அருள் ஓரிரு தடவைகள் தோழியின் வீட்டுக்கு சென்று தாய் தகப்பன் சகோதரர்களோடு உறவாடி எச்சரிக்கை விடுத்து இருந்தார். இருந்தும் இந்திய ராணுவம் வீட்டுக்கு வருவதை நிறுத்தவில்லை. தோழியும் இதை சீரியஸாக எடுக்கவில்லை. கடைசியில் பொறுப்பாளர் தோழியின் வீட்டு வாசலில் வைத்தே அவருக்கு தண்டனை வழங்கினார். அதிசயமாக அந்த பிள்ளையும் முகத்தில் பாரிய முகம் சிதைந்த காயத்துடன் உயிர் தப்பியது.

இதேபோல வெள்ளையன் என்று அழைக்கப்பட்ட (பின்னாளில் EPRLF / EPDP அட்டகாச குழு உறுப்பினர் ) பல சிறிய திருட்டு செயல்களுக்காக, பெண்கள் சேஷ்ட்டை காரணங்களுக்காக இயக்க முகாமுக்கு அழைக்கப்பட்டு பச்சை மட்டை தண்டனை வழங்கப்பட்டு கொஞ்ச காலம் அமைதியாக இருந்தார். இந்திய ராணுவம் வந்தவுடன் EPDP, EPRLF குழுக்களோடு சேர்ந்தது ஊரில் பெரும் அட்டகாசங்கள் செய்தார். இரண்டு, மூன்று அப்பாவி இயக்க ஆதரவாளர்கள் கொலைகளோடு கூட அவனின் பெயர் பேசப்பட்டது.

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

1984 - 1987 காலப்பகுதியில் இயக்கங்களால் கொடுக்கப்பட்ட தண்டனைகள் பொதுவாக இராணுவத்ததோடு தொடர்புவைத்துக்கொண்டு இயக்க நடவடிக்கைகளை காட்டிக்கொடுத்தல் (ஒத்தோடிகள்) தொடர் கொள்ளைகள், பாலியல் வல்லுறவுகள் இப்படியானவர்கள் மீது உடனடியாக இருந்தது. அதிலும் பல, தடவைகள் எச்சரிக்கை விடப்பட்டு, தொடர்ச்சியின் காரணமாக மரண தண்டனை வழங்கப்பட்டது.

மரணதண்டனை கொடுத்ததை இன்று நான் ஆதரிக்கவில்லை. அன்று 16,17 வயதில் ஆழமாக சீர்தூக்கி பார்க்கும் பக்குவமும் இருக்கவில்லை. அன்றைய சூழ்நிலையில் கெரில்லா போராட்ட முறைகள் உலகம் முழுவதும் அப்படித்தான் இருந்தன என்று நினைக்கிறன்.

வெறும் கோழி திருடியவன், ஆடு திருடியவன் எல்லாம் மின்கம்பத்தில் கட்டப்படவில்லை. எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, பச்சைமட்டை பிரயோகப் படுத்தப்பட்டு தண்டனைகள் கொடுக்கப்பட்டது.

எங்கள் ஊரில் ஒரு இளம்பெண் (எனது வகுப்பு தோழி, பெயர் சொல்வதை தவிர்க்கிறேன்) இந்திய இராணுவ சிப்பாய் ஒருவரோடு காதல் போன்ற ஒரு உறவில் இருந்தார். இந்திய ராணுவம் தோழியின் வீட்டு வாசலில் அடிக்கடி வாகனத்தை நிறுத்தி, களைப்பாறி, இளைப்பாறி போவார்கள். ஊர் மக்களுக்கும் கூட இதில் அதிருப்தி இருந்தது. அன்றைய நாவட்குழி இயக்க பொறுப்பாளர் அருள் ஓரிரு தடவைகள் தோழியின் வீட்டுக்கு சென்று தாய் தகப்பன் சகோதரர்களோடு உறவாடி எச்சரிக்கை விடுத்து இருந்தார். இருந்தும் இந்திய ராணுவம் வீட்டுக்கு வருவதை நிறுத்தவில்லை. தோழியும் இதை சீரியஸாக எடுக்கவில்லை. கடைசியில் பொறுப்பாளர் தோழியின் வீட்டு வாசலில் வைத்தே அவருக்கு தண்டனை வழங்கினார். அதிசயமாக அந்த பிள்ளையும் முகத்தில் பாரிய முகம் சிதைந்த காயத்துடன் உயிர் தப்பியது.

இதேபோல வெள்ளையன் என்று அழைக்கப்பட்ட (பின்னாளில் EPRLF / EPDP அட்டகாச குழு உறுப்பினர் ) பல சிறிய திருட்டு செயல்களுக்காக, பெண்கள் சேஷ்ட்டை காரணங்களுக்காக இயக்க முகாமுக்கு அழைக்கப்பட்டு பச்சை மட்டை தண்டனை வழங்கப்பட்டு கொஞ்ச காலம் அமைதியாக இருந்தார். இந்திய ராணுவம் வந்தவுடன் EPDP, EPRLF குழுக்களோடு சேர்ந்தது ஊரில் பெரும் அட்டகாசங்கள் செய்தார். இரண்டு, மூன்று அப்பாவி இயக்க ஆதரவாளர்கள் கொலைகளோடு கூட அவனின் பெயர் பேசப்பட்டது.

இவை எல்லாமும் மட்டும் அல்ல அதிபர் ஆனந்தராஜா போன்றோர் கொலைகளும் அரங்கேறின.

இவை அரசியல் கொலைகள்.

ஆனால் களவுக்கு புலிகள் மரண தண்டனை வழங்கியதாக நான் அறியவில்லை.

கப்பம் கேட்டு கொடுக்காத போது புளொட் சுட்டு கொன்றது என கேள்விபட்டுள்ளேன்.

புலிகள் பல கொலைகளை, குறிப்பாக 85-86 மற்றும் 87-90 இல் செய்தார்கள். எங்கள் ஊரில் புலியும் ஈப்பியும் ஏட்டிக்கு போட்டியாக கொன்றவர்கள் லிஸ்ட் மிக பெரிது.

ஆனால் எல்லாமும் அரசியல், இராணுவ சம்பந்த பட்ட கொலைகளே.

கோழி கள்ளன், மாட்டுக்கள்ளனை எல்லாம் சுட்டார்கள் என்பது - சோபா சக்தி போன்றோரின் மிகைபடுத்தல் மொழி என்றே நான் நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

புலிகள் பல கொலைகளை, குறிப்பாக 85-86 மற்றும் 87-90 இல் செய்தார்கள். எங்கள் ஊரில் புலியும் ஈப்பியும் ஏட்டிக்கு போட்டியாக கொன்றவர்கள் லிஸ்ட் மிக பெரிது.

இதில் குறிப்பிட்டுள்ள விடயம், உங்களூர் சமாச்சாரம்..

அப்படி போட்டி போட்டு கொன்றவர்கள் என்பது மாற்று இயக்க போராளிகளுடன் நடந்த சம்பவங்களா ? இல்லை பொதுமக்கள் சார்ந்த சம்பவங்களா?

எங்கள் ஊரில் (நாவற்குழி) + கைதடி + தச்சன்தோப்பு + பகுதியில் புலிகளால் நடந்தது ஒரே ஒரு சம்பவம் அதுவே நான் சொன்ன என்னுடைய தோழி குறித்தது.

நாவற்குழியில் மட்டும் 9 + கொலைகள் நான் இருந்த காலத்தில் (1984 - 1990) ஒரே வீட்டில் வசித்த மருத்துவர் குடும்பம் கணவன் மனைவி இன்னும் இருவர் என பேர் கொல்லப்பட்டார்கள் அவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்தார்கள் (அவர்களை பற்றி இன்றுவரையும் எதையும் அறிய முடியவில்லை - இதை செய்தது தனியே இந்திய ராணுவமா இல்லை அவர்களோடு சேர்ந்து இயங்கிய ஒட்டுண்ணிகளா தெரியவில்லை)

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Sasi_varnam said:

அப்படி போட்டி போட்டு கொன்றவர்கள் என்பது மாற்று இயக்க போராளிகளுடன் நடந்த சம்பவங்களா ? இல்லை பொதுமக்கள் சார்ந்த சம்பவங்களா?

87-90 இல் பின்னாளில் கருணா பிரிவின் போது நடந்ததை போல பல சம்பவங்கள் யாழில் அரங்கேறின.

மாற்று இயக்க, புலி உறுப்பினர்கள் ஆளை ஆள் சுட்டதை விட, தத்தம் ஆதரவாளர்களை போட்டு தள்ளினர்.

ஒருநாள் புலி ஆதரவாளர் ஒருவரை ஈபி கொலை செய்தால், ஒரு கிழமைக்குள் புலிகள் ஒரு ஈபி ஆதரவாளரை கொலை செய்தார்கள். இது மறுவளமாகவும் நடந்தது.

என்ன கருமம் செய்தேனோ தெரியாது - அப்போ எனக்கு பதின்ம வயது கூட இல்லை, இப்படி 3 கொலைகளை என் கண்ணால் கண்டேன். நாலாவதாக ஒருவரை (புலி ஆதரவாளர்) தேடி வந்த சமயம் அவர் வீட்டில் இல்லை, அவரின் மனைவி என்னை அனுப்பி அவர் நிண்ட வீட்டில் இருந்து அப்படியே கொழும்புக்கு படி தகவல் அனுப்பினார்.

இதை எல்லாம் இப்போ சொன்னால் எனக்கு PTSD எண்டு சொல்லி போடுவாங்கள்.

83 க்கு பின் ஊரில் வளர்ந்த பலருக்கு PTSD இருக்கு - நாம் அதை காட்டி கொள்வதில்லை என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

கோபுவை பற்றி நான் அறியவில்லை. ஆனால் போயா, ஜப்பான் ஆகியோர் கொலை பற்றி அறிந்துள்ளேன். அதை புலிகள் செய்யவில்லை என நினைக்கிறேன்.

ஆனால் அந்த மனைவி கழுத்தை வெட்டியதை “தலைவன் வழி” என எத்தனை பெயர் எழுதினாலும் அவர்களுக்குதான் மண்டை பிழையே ஒழிய, இது அவரின் வழி அல்ல, என்பது வெள்ளிடமலை.

சில பழமைவாத மடமைவாதிகள் தம் மனதில் தோன்றும் பிற்போக்கு அழுக்குகளை எல்லாம், தலைவர் வழி, புலிகள் வழி என பக்கெட் பண்ண முயல்வதை நாம் யாழில் கூட காண்கிறோம். ஆனால் அது உண்மை அல்ல.

இங்கு எந்த எந்தக் குறூப் யாரை கொலை செய்தது என்பதற்கோ ஏன் கொலை செய்தார்கள் என்பதற்கோ எவராலும் விடை காண முடியாது.

ஆனால் எனது கேள்வி என்ன வென்றால் ஒரு குடும்பத்தில் நடந்த கொடூரக் கொலையை எமது மக்களில் பெரும்பாலோனோர் கொண்டாடும் , ஆதரவாகக் கருத்திடும் மனநிலையை எங்கிருந்து பெற்றார்கள் என்பதை தான். இது நடந்தது ஏதோ நீண்ட காலத்துக்கு முன்பு அல்ல. சமீபத்தில் தான் என்பதால் தான் இந்தக் கேள்வி எழுந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, island said:

சாவச்சேரி டெலோ காம்பை அடித்து முடித்து விட்டு வந்த புலிகளுக்கு சோடா உடைத்து கொடுத்தேன் என சொன்ன காலம் தொட்டு, அதற்கு முன் சண்டியர்களை ஹீரோ போல் நடத்திய காலம் தொட்டு இந்த மனநிலை உள்ளது.

அன்றைய நிலையில் டெலோவின் கை ஓங்கி, புலிகளை அடித்திருந்தாலும் - டெலோவுக்கும் இன்னும் ஒரு குரூப் சோடா உடைத்து கொடுத்திருக்கும்.

இதே மனநிலையை நீங்கள் ஆப்கானிகளிடமும் காணலாம்.

சங்கிகளிடமும், தென் தமிழ்நாட்டு சாதி சங்க அடிப்பொடிகளிலும் காணலாம்.

இலண்டனில் பெரியார் வாசக வட்டத்தில் போய் ஒரு பெண்ணோடு வம்பிழுத்த கூட்டத்திடமும் காணலாம்.

வன்முறையை வீரம் என்றும், பிற்போக்குத்தனத்தை மானம் என்றும் தலைகீழாக விளங்கி கொள்ளும் சகல மொக்கு கூட்டங்களிலும் இது உண்டு.

ஆனால் சிங்கள காடையர்கள் திரண்டு வருகிறார்கள் என்றால் எதிர்த்து ஒரு குருவி நிற்காது.

இவர்கள் பலசாலிகளை மட்டும் போற்றும் பச்சோந்திகள்.

புலிகள் பலமாய் இருந்தால் புலிகள்…

அனுர பலமாய் இருந்தால் அனுர…

இவர்கள் தமது அடிப்படைவாத உந்தலில் முகநூலில் வந்து எழுதும் குப்பைகெல்லாம், புலிகளை பொறுப்பாக முடியாது என்பது என் கருத்து.

அதே போல் அவர்கள் செய்யாத விடயங்களையும் பொத்தாம் பொதுவில் (கோழி கள்ளன், மாட்டு கள்ளன்) அவர்கள் தலையில் போடக்கூடாது.

இதை ஒரு figure of speech ஆக நீங்கள் சொல்லி இருக்கலாம். ஆனால் கோழி பிடித்தவன், மாட்டு கள்ளன், பிற்பொக்கற் அடித்தவனை எல்லாம் புலிகள் மரண தண்டனைக்கு உள்ளாக்கினர் என்பதை - போராட்ட காலத்தில் வாழ்ந்த, வாசித்த என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

இந்த கொலைக்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஏன் ஜனாதிபதியால் ஒரு நேரடி விசாரணைக்கு உத்தரவிட முடியவில்லை?

போலீசார், இராணுவம், ஒட்டுக்குழுக்களை வைத்து தமது அரசியல் எதிரிகளை அடக்கவும் தமது அரசியலை, அடாவடிகளை தக்க வைக்கவும் ஆய்தப்படைகளுக்கு வரம்புக்கு மீறிய அதிகாரகங்களை வழங்கி, அவர்களது அதிகார துஸ்பிரயோகங்களுக்கு தண்டனை விலக்களித்து பாதுகாத்தது முன்னைய அரசாங்கங்கள். நம்மவர்களும் சிலர் தமது களவுகள் அடாவடிகளை மறைக்க இவர்களுக்கு இலஞ்சம் கொடுத்து பழக்கியிருக்கிறார்கள். இது உடனடியாக களையக்கூடியது அல்ல, புரையோடிப்போன ஒன்று. இப்போ அனுராவை தனிமைப்படுத்தும் வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. முன்னைய ஜானாதிபதிகளால் போஷிக்கப்பட்டவர்களுக்கு நீதியாக நிஞாயமாக வேலைசெய்ய முடியவில்லை, தண்டனை அனுபவிக்கவும் விருப்பமில்லை. அதனால் ஒவ்வொருவரும் தம் பழைய நிலையை மாற்ற தயாராக இல்லை. அனுரா எடுக்கும் நடவடிக்கை எல்லாம் அவரை நோக்கி எதிராக திருப்பப்படுகிறது. ஒன்று, அவரும் பழைய முறைக்கு செல்ல வேண்டும் இல்லையேல் பழையவற்றை சுத்தமாக அழித்து புதியதை உருவாக்க வேண்டும். அது சாதாரண விடயமல்ல. இருந்தாலும் அநுர பாத்துக்கொண்டு சும்மா இருக்கப்போவதில்லை. மஹிந்த, ரணில் செய்த ஊழல் அநிஞாயாயங்களுக்கு தண்டனை அளிக்க காலம் தாழ்த்தும் ஒவ்வொரு கணமும் அனுராவுக்கு எதிராகவே மாறும்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, satan said:

தனது பதவியை தக்க வைக்க, பொலிசாரின் அராககத்தையும் கண்டும் காணாமல் விடும் அற்பனா அனுர?

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

அநுர பாத்துக்கொண்டு சும்மா இருக்கப்போவதில்லை.

அரசியல் ஊழல் பெருச்சாளிகளை அழிக்காமல், தண்டனை வழங்காமல் அரசியலில் அனுராவால் ஓரடி கூட நகர முடியாது. அனுராவின் எந்த ஒரு நடவடிக்கைக்கும் எதிர்நடவடிக்கை தயாராகி, மக்களை குழப்பும் வேலை முடுக்கி விடப்பட்டுள்ளது, வேண்டுமானால் இன்னொரு குண்டுத்தாக்குதல் நடத்தப் பாதாளக் குழுவினரை பயன்படுத்தக்கூடும், எதுவும் செய்வார்கள் தம்மை பாதுகாக்க. இல்லையேல் மக்களே இவர்களை அடித்துக்கொன்று விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தனது பதவியை தக்க வைக்க, பொலிசாரின் அராககத்தையும் கண்டும் காணாமல் விடும் அற்பனா அனுர?

நாட்டின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி , நாட்டின் ஒரு மூலையில் சிவில் நிலைமையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சகூட்டில் சிறுவன் ஒருவள் இறந்த நிலவரத்துக்கு , உடனேயும் நேரடியாக தலையிடுவது ஒரு பிழையான முன்மாதிரி அதிகார நிறைவேற்று விடயம் .

திருகோணமலை புத்தரை நினைவு கொள்ளலாம்

இப்பதான் வேறு பகுதியில் வக்கீலையும் மனைவியையும் பத்துத்தரம் சுட்டு போட்டுத்தல்லியிருக்கு

அனுரா இன்னமும் என் நேரடியாக அதில் இன்னமும் தலையிடவில்லை என்று என் ஒருவரும் இன்னமும் கேட்கவில்லை ?

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

ஏன் ஜனாதிபதியால் ஒரு நேரடி விசாரணைக்கு உத்தரவிட முடியவில்லை?

தமிழ் போதைப்பொருள் கும்பல்கள் இலங்கைக்குள் மரணத்தையும் அழிவையும் கொண்டு வருவதை தடுத்த வீர பணி செய்த பொலிஸ் அதிகாரிகள் என்று அவர் பொலிசாரை பாராட்டவில்லை தானே 🙄

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை அறியாமல் சில உண்மைகள் வெளிவந்துவிடுகின்றன, அப்பாவிகள் சிலர் அதை நம்பி விடுகின்றனர்.

அப்பாவிகள் சிலர் அவர்களை நம்பி விடுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சாமானியன் said:

நாட்டின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி , நாட்டின் ஒரு மூலையில் சிவில் நிலைமையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சகூட்டில் சிறுவன் ஒருவள் இறந்த நிலவரத்துக்கு , உடனேயும் நேரடியாக தலையிடுவது ஒரு பிழையான முன்மாதிரி அதிகார நிறைவேற்று விடயம் .

திருகோணமலை புத்தரை நினைவு கொள்ளலாம்

இப்பதான் வேறு பகுதியில் வக்கீலையும் மனைவியையும் பத்துத்தரம் சுட்டு போட்டுத்தல்லியிருக்கு

அனுரா இன்னமும் என் நேரடியாக அதில் இன்னமும் தலையிடவில்லை என்று என் ஒருவரும் இன்னமும் கேட்கவில்லை ?

இங்கே அனுரவை யாரும் நீதிபதி வேலை செய்ய சொல்லவில்லை.

மாறாக பொலிஸ் ஒரு அரச அமைப்பு. அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையில் பொலிஸ் நடவைக்கையை விசாரிக்க அனுரவுக்கு முடியும்.

ஏனைய கொலைகளுக்கும், பொலிஸ் செய்யும் கொலைகளுக்கும் வித்தியாசம் உண்டு.

4 minutes ago, satan said:

அவர்களை அறியாமல் சில உண்மைகள் வெளிவந்துவிடுகின்றன, அப்பாவிகள் சிலர் அதை நம்பி விடுகின்றனர்.

என்ன உண்மை வெளி வந்தது?

நீங்கள் மேலே பத்தி பத்தியாக, அதாம் இதாம் என்று அனுரவுக்கு கவர் எடுத்ததை தவிர இங்கே எந்த உண்மையும் வெளிவரவில்லை.

6 hours ago, விளங்க நினைப்பவன் said:

தமிழ் போதைப்பொருள் கும்பல்கள் இலங்கைக்குள் மரணத்தையும் அழிவையும் கொண்டு வருவதை தடுத்த வீர பணி செய்த பொலிஸ் அதிகாரிகள் என்று அவர் பொலிசாரை பாராட்டவில்லை தானே 🙄

தனது இருப்பை தக்க வைக்க, பொலிஸ் அராஜகத்தை நம்பி இருக்கும் இன்னொரு அரசியல்வாதிதான் அனுர.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

மாறாக பொலிஸ் ஒரு அரச அமைப்பு. அரசாங்கத்தின் தலைவர் என்ற வகையில் பொலிஸ் நடவைக்கையை விசாரிக்க அனுரவுக்கு முடியும்.

விசாரணை செய்யாமலா விடப்போகிறார்?

3 hours ago, goshan_che said:

என்ன உண்மை வெளி வந்தது?

நீங்கள் மேலே பத்தி பத்தியாக, அதாம் இதாம் என்று அனுரவுக்கு கவர் எடுத்ததை தவிர இங்கே எந்த உண்மையும் வெளிவரவில்லை.

எதுக்கய்யா எல்லாவற்றையும் உங்கள் தலையில் கட்டிக்கொண்டு காவடியாடுகிறீர்கள்? கோசானுக்காகவா கருத்தெழுதுகிறீர்கள் என்று கேள்வி வேறு என்னை கேட்க்கிறீர்கள்? நான் யாருக்கோ, எதுக்கோ எழுதும் கருத்துக்கெல்லாம் என்னை வசை பாடுகிறீர்கள். உங்களுக்கு என்னதான் பிரச்சனை என்று தெரியவில்லையே? நான் பந்திப்பந்தியாக எழுதினால் நீங்கள் கடந்து போங்கள், உங்களை வாசிக்கும்படி நான் ஒன்றும் கட்டாயப்படுத்தவில்லையே அல்லது சுருக்கமாக எழுதுங்கள் என்றும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. நான் எப்படி எழுதவேண்டுமென யாரும் என்னை கட்டாயப்படுத்தவும் முடியாது, அதற்கு யாருக்கும் உரிமையும் கிடையாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

உங்களை நான் கட்டாயபடுத்தவில்லை.

உங்கள் இஸ்டபடி எழுதுங்கள். அது உங்கள் உரிமை.

காவடி ஆடினால் எதிர்வினை ஆற்றுவது என் உரிமை.

2 minutes ago, satan said:

விசாரணை செய்யாமலா விடப்போகிறார்?

விசாரணை இலங்கை பொலிஸ் எப்படி நடத்தும் என மறந்து போச்சா?

தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பொலிஸ் செய்த கொலை பற்றி அதன் தலைமையில் இருக்கும் அனுரவுக்கு கூடுதல் பொறுப்பு கூறல் உண்டு. இன்னும் ஒரு வரி பேசவில்லை.

சம்பந்த பட்ட பொலிசார் அத்தனை பேரையும் கட்டாய லீவில் அனுப்பி இருக்க முடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு தனிப்பட்ட பிரச்சனையில்லை, அதற்கு என்று சில வரை முறை உண்டு அதற்கேற்ப நடத்தப்படும் என நினைக்கிறன். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கவனிக்க அனுரா ஒன்றும் கடவுளுமில்லை, மாயவித்தைக்காரனுமில்லை. இன்று தெற்கிலும் இதே பட்டப்பகலில் கொலை. அது அதற்கென்று விசாரணைக்குழுக்கள் உண்டு அதன் மூலமாகவே செயற்படுத்த முடியும்.

தனது பொறுப்பில் உள்ள ஒரு அமைப்பு குடிமகன் ஒருவனை அதுவும் சிறுவனை கொலை செய்துள்ளது.

குடும்பம் போராடுகிறது.

பொலிஸ் குடும்பத்தை மிரட்டுகிறது.

மனித உரிமை அலுவலகம் விசாரிக்கிறது.

குறைந்த பட்சம்.

நடந்தவை கவலை அளிக்கிறன. பாரபட்ச விசாரணையை உறுதி செய்யும் முகமாக சம்பந்த பட்ட அனைவரையும் லீவில் அனுப்புகிறேன் என்றாவது கூறி இருக்கலாம்.

இதற்கெல்லாம் நேரம் இல்லை, மலையகத்தில் போய் தொழிலாளர் கையை பிடித்து பார்த்து டிராமா போடவும், ஹெலி கொப்டரில் போய் கிரிகெட் மேட்ச் பார்க்கவும் நேரமிருக்கிறது.

கபடவேடதாரி, இனவாதி அனுர.

இதை பற்றி 3 ஜேவிபி யாழ் எம்பிகள் ஏதும் சொன்னார்களா?

தானாக விலகி போகும் ஆமியை நாம் அனுப்பினோம் என மார்தட்ட மட்டுமே அவர்கள் ரெடி.

சுமந்திரனை வென்ற நடிகர் திலகங்கள் அனுரவும் அவரின் எம்பிகளும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

தானாக விலகி போகும் ஆமியை நாம் அனுப்பினோம் என மார்தட்ட மட்டுமே அவர்கள் ரெடி.

ஏன் இதுவரை காலமும் தானாக ஆமி விலகவில்லை? புலம்பெயர்ந்தோருக்கு அடிபணிந்து அனுரா வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுகிறார், பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது என கதறுகிறதே தெற்கு.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, satan said:

ஏன் இதுவரை காலமும் தானாக ஆமி விலகவில்லை? புலம்பெயர்ந்தோருக்கு அடிபணிந்து அனுரா வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுகிறார், பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது என கதறுகிறதே தெற்கு.

ஏன் விலகவில்லை? வடக்கு கிழக்கில் பல இடங்களில் இருந்த முகாம்கள் ஆமி தானாக விலக்கி கொண்டுள்ளது அவர்கள் தேவைக்கு ஏற்ப. பல வருடமாக நடப்பது இது.

தெற்கில் பாவாடை நாடா காணாமல் போனாலும் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து என இனவாதிகள் கதறுவதும் வழமையானதே.

அனுர இதுவரை இராணுவ பிரசன்னத்தை தலையீட்டை குறைக்கவே இல்லை.

மாகாண சபை தேர்தலை நடத்தாமல் தனது கைப்பொமை ஆளுனர் மூலம் ஆட்சி செய்கிறார்.

ஜேவிபி எம்பிகள் இருந்த இடமும் தெரியாமல் இருக்கிறார்கள்.

இதுதான் யதார்த்தம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் கள்ளமாடு பிடிக்கும் கும்பல்தான்.இரவு 1.30 மணிக்கு அவர்களுக்கு அங்கே என்ன வேலை?ஆனால் பொலிஸ் அவர்களைத் துரத்திப் பிடித்திருக்க வேண்டும்.வாகனத்தில் இருந்து எதிர்த்தாக்குதல் வந்திருந்தால் அவர்கள் சுட்டது நியாயமாகி இருக்கலாம்.ஆனால் அவர்களைத்துரத்திப்புடிக்காமல் நெற்றிப் பொட்டில் சுட்டிருக்கிறார்கள்.இது சட்டப்படி குற்றம்.மாட்டைப் பறிகொடுத்த மாட்டு உரிமையாளர்கள் இது சரி என்றே சொல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டது. பிழை. காரணம். சுட. முதல். அவன். குற்றவாளி இல்லை. தெரியாது. சுட்ட. பின்னர் தான் அவனைப் பற்றி. விபரங்கள். தெரிகிறது. இலங்கை. பொலிஸசாருக்கு. மோட்டர். சைக்கில். கார். வான். போன்றவற்றால். அவனை. துரத்தி. பிடிக்க. முடியாத. ?

நிறுத்தமால். ஒடுபவனுக்கு. மரணத் தண்டனையா ?

கள்வனுக்கு. மரணத்தண்டனையா?

சாரதி அனுமதிப் பாத்திரமின்றி. வாகனம். ஒட்டுபவனுக்கு. மரணத் தண்டனையா. ?

பொலிஸ. தண்டனையை. தீர்மானிக்க. முடியாது. குற்றவாளியை. நீதிமன்றில் நிறுத்தத் தான். முடியும். நீதிமன்றம். தண்டனையைத். தீர்மானிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டது பிழை. அல்லைப்பிட்டில் வாகனத்தை நள்ளிரவில் பொலிஸ் மறித்தபோது வாகனத்தை நிறுதமாமல் மண்டைதீவுப்பக்கம் வாகனத்தை திருப்பியது முதல் பிழை. மண்டைதீவு பொலிஸாருக்கு தகவல் அனுப்ப அங்கு மண்டை தீவு பொலிசால் வாகனத்தை நிறுத்த முயற்சிக்க, அங்கும் வாகனத்தை நிறுத்தாமல் வாகனத்தை அல்லைப்பிட்டிக்கு திருப்பியது முதலாவது பிழையை விட அடுத்த பெரிய பிழை. அதன் பின்னர் அல்லைப்பிட்டில் இருந்து துரத்திவந்த அல்லைப்பிட்டிப் பொலிசார் சுட்டிருக்கின்றனர். இரண்டு முறை பொலிசாருக்கு டிமிக்கி கொடுக்க டிமிக்கி கொடுக்க முயற்சித்தது பாரிய தவறு, அதுவும் நள்ளிரவு நேரத்தில். கூட இருந்தவர்களாவது சிறுவனுக்கு அறிவுரை கூறியிருக்கலாம்.

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

சுட்டது. பிழை. காரணம். சுட. முதல். அவன். குற்றவாளி இல்லை. தெரியாது. சுட்ட. பின்னர் தான் அவனைப் பற்றி. விபரங்கள். தெரிகிறது. இலங்கை. பொலிஸசாருக்கு. மோட்டர். சைக்கில். கார். வான். போன்றவற்றால். அவனை. துரத்தி. பிடிக்க. முடியாத. ?

நிறுத்தமால். ஒடுபவனுக்கு. மரணத் தண்டனையா ?

கள்வனுக்கு. மரணத்தண்டனையா?

சாரதி அனுமதிப் பாத்திரமின்றி. வாகனம். ஒட்டுபவனுக்கு. மரணத் தண்டனையா. ?

பொலிஸ. தண்டனையை. தீர்மானிக்க. முடியாது. குற்றவாளியை. நீதிமன்றில் நிறுத்தத் தான். முடியும். நீதிமன்றம். தண்டனையைத். தீர்மானிக்கும்.

அருமையான கருத்து.

ஏன் அண்ணை முன்பு போல் இப்போ யாழுக்கு வருவதில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒரு நேரான வீதி அல்லைப்பிட்டியைத்தாண்டியிருந்தால் குறுக்குப்பாதைகளுக்குள் விட்டிருக்கலாம். ஆனால்அந்தப்பாதையில் அவர்களைப் பொலிசாருக்குத் சிரமமான வேலை இல்லை.பொலிசார் இந்த இடத்தில்எல்லைமீறி நடந்திருக்கிறார்கள். அவர்களைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதே பொலிசாரின் கடமை. மாறாக துப்பாக்கிப் பிரயோகம் செய்து ஒரு சிறுவனைக் கொன்று விட்டார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.