Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துப்படம் - 14.11.2007

Featured Replies

store.jpg

எண்ணக்கரு: செய்திக் குழுமம் | ஓவியம்: மூனா

அருமையான எண்ணக்கரு

மிகவும் தரமாக இருக்கிறது. :(

வாழ்த்துக்கள்!

சிறப்பான எண்ணகருவை உருவாக்கிய செய்திகுழுமதிற்கும் அதனை தன் கைவண்ணத்தால் திறம்பட செய்த ஓவியர் மூனாவிற்கும் வாழ்த்துகள்!! :(

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எண்ணமும் ஓவியமும் நன்றாக இருக்கின்றது.

அருமையான எண்ணக்கரு.... :lol:

நன்றாக இருக்கு: பாராட்டுக்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு எண்ணக்கரு.இதை சகல நாட்டு பத்திரிகைகளிலும் போடும்படி நிர்வாகம் ஒழுங்கு செய்ய வேண்டும்.பாடுபட்டோருக்கு வாழ்த்துக்கள்.

இதை எல்லா நாட்டுப் பத்திரிகையிலும் போடுவது நியாயமான எதிர்பார்ப்புத்தான். ஆனால் இது எந்தளவுக்கு ஈழப்பிரச்சனை தொடர்பான விபரங்களை முன்னர் அறிந்திராத மக்களுக்கு கருத்துச் சொல்லும்.

பட்டியலைத் தாங்கிக் கொண்டு நிற்பவர்.. ஈழத்தமிழன் என்பதற்கு என்ன.. அடையாளம் காட்டப்பட்டுள்ளது..???!

ஒரு சொல் தவிர (anti - tamil) என்பதைத் தவிர இது ஈழம் சம்பந்தப்பட்டது சிறீலங்கா சம்பந்தப்பட்டது என்ற எண்ணத்தை தெரிவிக்க ஏதும் இல்லையே..???!

எடுத்துக் கொண்ட கருப்பொருள் தரமானது எனினும் அதை வெளிப்படுத்திய விதம் முழுமையற்றதாகவே இருக்கிறது..! :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இதை எல்லா நாட்டுப் பத்திரிகையிலும் போடுவது நியாயமான எதிர்பார்ப்புத்தான். ஆனால் இது எந்தளவுக்கு ஈழப்பிரச்சனை தொடர்பான விபரங்களை முன்னர் அறிந்திராத மக்களுக்கு கருத்துச் சொல்லும்.

பட்டியலைத் தாங்கிக் கொண்டு நிற்பவர்.. ஈழத்தமிழன் என்பதற்கு என்ன.. அடையாளம் காட்டப்பட்டுள்ளது..???!

ஒரு சொல் தவிர (anti - tamil) என்பதைத் தவிர இது ஈழம் சம்பந்தப்பட்டது சிறீலங்கா சம்பந்தப்பட்டது என்ற எண்ணத்தை தெரிவிக்க ஏதும் இல்லையே..???!

எடுத்துக் கொண்ட கருப்பொருள் தரமானது எனினும் அதை வெளிப்படுத்திய விதம் முழுமையற்றதாகவே இருக்கிறது..! :lol::lol:

இலங்கைத் தமிழர் பிரச்சனை என்று தலைப்பிட்டு வேற்று நாட்டு ஊடகங்களுக்கு அனுப்பலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர் பிரச்சனை என்று தலைப்பிட்டு வேற்று நாட்டு ஊடகங்களுக்கு அனுப்பலாம்.

கருத்துப்படங்களுக்கு தலைப்பிடுவது பொருத்தமானதாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு சிறு திருத்தம் செய்தால் பார்ப்பவர்கள் அனைவருக்கும் விடயம் போய்ச் சேரக் கூடியதாக அமையலாம். குறித்த பட்டியலை சமர்பிக்க உள்ளவர் சிறீலங்காவின் தலைப்பகுதியில் நிற்பது போன்று காட்டி இருக்கலாம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

~

கருத்துப்படங்களுக்கு தலைப்பிடுவது பொருத்தமானதாகத் தெரியவில்லை.

32261508hq1.jpg

SriLankan Tamil's struggle for independence என்று தலையங்கம் போட்டு விளம்பரப்படுத்தலாம்.

அந்த நபர் காட்டும் பட்டியலின் பின்னணியில் (Background) தமிழீழத்தின் அல்லது முழு இலங்கைத்தீவின் வரைபடம் போடலாம். That will make the cartoon more relevant to our Freedom Struggle. Of course the concept seems to be good. பாராட்டுக்கள்!

ஆனாலும் ஒரு சந்தேகம், கருத்துக்கள உறவுகள் ஆங்கிலத்தில் ஒரு வரி எழுதினால் கூட பல்வேறு மொழி பேசும் நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கு ஆங்கிலம் அறிவு இல்லாமலோ, குறைவாகவோ இருக்கக்கூடும் என்கிற காரணம் காட்டி கருத்துக்களில் உள்ள ஆங்கில வரிகளை வெட்டி வீசிவிடும் நிர்வாகம், தனி ஆங்கிலத்திலே உள்ள கருத்துப்படத்தை புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் சரியாக புரிந்து கொள்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்கிறது?! :lol:

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும் ஒரு சந்தேகம், கருத்துக்கள உறவுகள் ஆங்கிலத்தில் ஒரு வரி எழுதினால் கூட பல்வேறு மொழி பேசும் நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கு ஆங்கிலம் அறிவு இல்லாமலோ, குறைவாகவோ இருக்கக்கூடும் என்கிற காரணம் காட்டி கருத்துக்களில் உள்ள ஆங்கில வரிகளை வெட்டி வீசிவிடும் நிர்வாகம், தனி ஆங்கிலத்திலே உள்ள கருத்துப்படத்தை புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் சரியாக புரிந்து கொள்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்கிறது?! :lol:

யாழில் வந்த கருத்துப்படங்களில் சில சிங்களவர்களினால் எடுக்கப்பட்டு அவர்களுடைய ஊடகங்களிலும் வந்திருக்கிறது.கருத்துப்படங

யாழில் வந்த கருத்துப்படங்களில் சில சிங்களவர்களினால் எடுக்கப்பட்டு அவர்களுடைய ஊடகங்களிலும் வந்திருக்கிறது.கருத்துப்படங?கள் தமிழர் அல்லாதவர்களுக்கும் செல்லவேண்டும் என்பதினால் ஆங்கிலத்தில் எழுதப்படுகிறது. ஆனால் யாழ் கருத்துக்களத்தில் கருத்து எழுதுபவர்கள் தமிழர்கள். தமிழர்கள் தமிழர்களுடன் தமிழில் கதைக்க வேண்டும் என்பதினால் வேறு மொழிகளில் எழுதுவது தடை செய்யப்படுகிறது.

நீங்கள் சொல்வது எமக்கும் புரிந்தது தான்! ஆனால் கேள்வி என்னவென்றால்,

கருத்துப்படத்தை ஆங்கிலம் தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள் - நல்லது.

ஆங்கிலம் தெரிந்த சிங்களவர்கள், கருத்துப்படத்தை சிங்களத்தில் மொழிபெயர்ப்பதால் சிங்களவர்களும் புரிந்து கொள்வார்கள் - அதுவும் நல்லது தான்!

ஆங்கிலம் தெரியாத தமிழர்கள் எப்படி ஐயா இந்த கருத்துப்படத்தை புரிந்து கொள்வது?

[கேள்வி இது தான்]

Edited by vettri-vel

பட்டியலை பிடித்திருக்கும் வெள்ளைத் துண்டின் பின்னணியில் தமிழீழத்தையும் சிறீலங்காவையும் கிறுவது நல்லது யோசனை வெற்றிவேல்.

பலதரப்பட்டவர்களும் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் படங்கள் பொதுமொழியாக ஆங்கிலத்தில் வருகுது. தமிழர்களிற்கு மாத்திரம் என்பவை தமிழில் வருகுது (உதாரணம் சமச்சீரற்ற படை வலுச்சமநிலை).

IRTAG தமிழ்மொழிக் களம் என்ற வரையறைக்குள் இயங்கவில்லை. அப்படி இயங்குவதும் அர்த்தமற்றது.

உங்கள் தமிழர்கள் மீதான கரிசனையை செயலாக்கி வாரம் ஒருமுறை வரும் கருத்துப்படத்தை தமிழ் மொழியில் மாற்றி அதே பக்கத்தில் போட்டுக் கொண்டுவரும் பணியைய் செய்யுங்கோவன்.

carttoonmz8.jpg

தமிழில் சாணா.

மன்னிக்கவேண்டும் முணா.

Edited by சாணக்கியன்

நன்றி சாணக்கியன்.

"6 இனக்கலவரங்கள்" அல்லது "6 இனச்சுத்திகரிப்பு முயற்சிகள்" என்று போடலாம்.

மற்றது, நேரடி மொழிபெயர்ப்பில் "இறைமை அங்கீகாரம்" என்று வரும்.

தாயகம், தேசியம் என்பவை ஏற்றுக் கொள்ளப்ப்பட்டிருக்கு. பாதுகாப்பு உத்தரவாதம் அற்ற உள்ளக சுயநிர்ணயத்திற்கும் சர்வதேசம் உடன்படலாம்.

உள்ளக சுயநிர்ணயத்தில் இறைமை இல்லை. நாம் போராடுவது எம்மை நாமே பாதுகாத்து ஆழும் இறைமையுடன் கூடிய வெளியக சுயநிர்ணய உரிமைக்காக.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

~32261508hq1.jpgSriLankan Tamil's struggle for independence என்று தலையங்கம் போட்டு விளம்பரப்படுத்தலாம்.

பண்டிதர் அது தனித் தலைப்பல்ல.. தலைப்பு கேள்வியாக அமைகிறது அதற்கான பதில் படத்தில் இருப்பதால்.. பார்வையாளன் படத்தில் விடைதேடியாக ஆக வேண்டும் என்ற நிற்பந்தத்தை அங்கு வைத்துள்ளனர்.. அந்தக் கேள்வியோடு பொருந்தித்தான் படங்கள் அமைந்துள்ளதால்.. இந்தக் கருத்துப்பட்டத்திற்கு அந்தக் கேள்வி அவசியமானது. சும்மா தலைப்பிடுவதால்.. பார்வையாளன் படத்தில் தான் அதிகம் கவனம் செலுத்துவானே தவிர தலைப்பில் அல்ல..! கருத்துப்படங்களின் நோக்கமே சிக்கலான விடயங்களையும் எளிமையாக கவரத்தக்க வகையில் காட்சிகளால் விபரிப்பதுதான்..! தலைப்புக்களை இடுவதால் எளிமைத்தன்மை என்பது..??! :lol:

carttoonmz8.jpg

தமிழில் சாணா.மன்னிக்கவேண்டும் முணா.

சாணா திருத்தம் கூடிய விளக்கத்தைத் தருகிறது..! நன்றிகள்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வரும் இந்தக் கருத்துப்படங்களை தமிழ்நெற் தமிழ்காடியன் போன்ற தளங்களுக்கும் அனுப்பி பிரசுரிக்கச் செய்யலாமே...???! இவை அதிகம் சர்வதேசத்தின் பார்வைக்கு உட்படும் தளங்கள். தரமானவை என்று இனங்காணப்படுபவை பிரசுரிக்கப்படும் தானே..! தமிழ்நெற்றில் வரும் படங்கள் பிபிசி போன்ற சர்வதேச ஊடங்களால் எடுத்துப் பாவிக்கப்படுகின்றன அல்லது மேற்கோள் காட்டப்படுகின்றன.

நான் பார்த்தவரைக்கும் இங்கு வந்த எந்த ஒரு கருத்துப்படமும் தமிழ்நெற் போன்ற சர்வதேசம் அதிகம் பார்வையிடும் தளங்களில் வரமுடியல்லையே ஏன்..??!

நம்மவர்களின் உதாசீனமா... அல்லது... எங்களுக்குள்ள நாங்களே தெரிஞ்ச விடயங்களை கருத்துப்படம் மூலம் இனங்காட்டி திருப்திப்படுறமா..??! :lol:

Edited by nedukkalapoovan

நியாமான கேள்விதான்!

குறுக்ஸ்,

திருத்தங்களுடன் மீண்டும்,

carttooniv4.jpg

Edited by சாணக்கியன்

மூனாவின் மூலக்கருத்துக்கு சாணா அவர்கள் சாணை பிடித்து மேலும் கூர்மையாக்கி இருக்கிறார். மூனா சாணா இருவருக்கும் பாராட்டுக்கள்.

தமிழில் மொழிபெயர்த்து ஆங்கிலம் புரியாதவரும் கருத்துப்படத்தை புரிந்து கொள்ளும் வண்ணம் செய்த உங்கள் செயலுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் சாணக்கியன்.

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

சாணா அவர்களே எண்ணெய் என்பது சரியா எண்ணை சரியா..??!

Bond = Agreement (ஒப்பந்தம்) இது சரியா..??!

மூனாவின் மூலக்கருத்துக்கு சாணா அவர்கள் சாணை பிடித்து மேலும் கூர்மையாக்கி இருக்கிறார். மூனா சாணா இருவருக்கும் பாராட்டுக்கள்.

தமிழில் மொழிபெயர்த்து ஆங்கிலம் புரியாதவரும் கருத்துப்படத்தை புரிந்து கொள்ளும் வண்ணம் செய்த உங்கள் செயலுக்கு பாராட்டுக்களும் நன்றிகளும் சாணக்கியன்.

மூணாவிற்கே அனைத்து பாராட்டுகளும் சேரும், எண்ணக்கருவை சாணை பிடித்து தீட்டியது அவர்தான்.

அவர் கோபிக்க மாட்டார் என்ற நம்பிக்கையில், நான் இங்கே, அதை தமிழாக்கம் செய்துள்ளேன், அவ்வளவே!

சாணா அவர்களே எண்ணெய் என்பது சரியா எண்ணை சரியா..??!

Bond = Agreement (ஒப்பந்தம்) இது சரியா..??!

எப்படித்தான் கண்ணில் எண்ணெயை விட்டுக்கொண்டு தேடி அலைகிறீர்களோ தெரியாது?

எண்ணெய் மாற்றப்பட்டுள்ளது. நன்றி!

"பிணை", "கடன் முறி" என்பன சரியான சொற்களாக அமையலாம், ஆனால் ஒப்பந்தம் என்பது அனைவருக்கும் இலகுவில் புரியக்கூடியது என்று நினைக்கிறேன்.

Edited by சாணக்கியன்

carttoonmz8.jpg

கலக்கிட்டீங்க சாணக்கியன் அண்ணா சுகந்திர கருத்தாளர் சங்கம் சார்பாக வாழ்த்துகள்!! :(

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.