Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

இந்திய,தமிழ்நாட்டு அரசியலில் இதைத்தான் தொடர்ந்து சொல்லி வருகின்றேன். இருந்தாலும் சீமானை மட்டும் தேர்ந்தெடுத்து அரசியல் வக்கிரம் செய்யும் கருத்தாளர் நீங்கள்.

சீமான் தனது தேர்தல் வியாபாரத்துக்கு தேர்ந்தெடுத்தது ஈழப்போராட்டத்தை. அதனால்தான் நீங்கள் சொல்லும் ‘வக்கிரம்’ என்னுள் இருக்கிறதோ தெரியவில்லை. 😌

  • Replies 146
  • Views 7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இவர்கள் எவரையும் நம்பி தூய்மை, சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கும் விதம் என்று நாங்களும் சொல்லலாமா............. 'புலி' படத்துக்கு கறுப்பாக வாங்கிய 15 கோடி ரூபாய்களுக்கு வந்த வழக்கில், விஜய் தரப்பு என்

  • வாதவூரான்
    வாதவூரான்

    ஏழையா இருந்தால் தானே மக்களுக்கு சேவை செய்யலாம். பாவம்நடிகைகளுக்கு செலவளித்துநொந்து போனார் போலை

  • ரசோதரன்
    ரசோதரன்

    திமுகவினரே உள்ளவர்களில் மிகப் பெரும் கொள்ளையர்கள் என்பதே என் அபிப்பிராயம். இதை நான் மீண்டும் மீண்டும் எழுதுகின்றேன். திமுகவின் குடும்ப ஆட்சி இல்லாமல் ஆக்கப்பட வேண்டும் என்றும் நான் தொடர்ந்து சொல்லிக்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரசோதரன் said:

இப்போதைக்கு எடப்பாடியார் சாத்தியங்கள் உள்ள ஒரு மாற்றாகத் தெரிகின்றார். அவருக்கு தனிப்பட்ட ஆளுமையோ அல்லது பிரபலமான பின்புலமோ அல்லது பெரும் கவர்ச்சியோ கிடையாது. ஆதலால் ஓரளவுக்கேனும் ஒரு கூட்டு முயற்சியாக அவரது நிர்வாகம் அமையக்கூடும். ஆனால் அவர் சேர்ந்திருக்கும் இடமும், அதிமுகவின் பிளவுகளும் பயத்தை உண்டாக்குக்கின்றன. சசிகலாவுக்கு தங்கள் ஊரிலேயே ஒரு இரண்டாயிரம் வாக்குகள் இருப்பதாக திண்டுக்கல் நண்பன் ஒருவன் சொன்னான். இந்தக் கொடுமை வேறு இருக்கின்றது..........

எடப்பாடி மீது எனக்கு இந்த நம்பிக்கை இல்லை. எலக்சனில் கொஞ்சம் பிஜேபி கை ஓங்கினாலும் அடுத்த நித்தீஸ்குமார், உத்தவ் தாக்ரே இவர்தான்.

எனக்கு இப்போ தமிழ் நாட்டில் வோட் இருந்தால் மூக்கை பிடித்து கொண்டு திமுகவுக்கே போடுவேன்.

ரிஸ்க் எடுப்பதாயின் விஜை.

விஜையை விட எடப்பாடி அதிக ரிஸ்க். கூடவே அவர் ஆட்சியில் ஆட்கள்தான் மாறுவார்கள். ஆட்சி முறை திமுக 2.0 தான்.

எனவே விஜை சொல்வது போல் போட்டி திமுக vs தவெக என்பதே options.

ஆனால் மக்கள் இப்படி சிந்திகிறார்களா? தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரசோதரன் said:

ஜி கே வாசனின் தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஐந்து இடங்களையும் பார்த்தீர்களா................. இதுக்கு அவருக்கு ஒரு இடமும் கொடுக்காமலேயே விட்டிருக்கலாம்............. இதில் வேற அவர் தாமரைச் சின்னத்தில் நிற்கின்றார்.................🫣.

ஓம் பார்த்தேன்….இன்னும் எதிரணியில் எந்த கட்சி இந்த தொகுதிகளில் நிற்கிறது என்பதை பார்க்கவில்லை.

காங்கிரஸ்-அதிமுக கூட்டணியை எதிர்த்து உருவான கட்சி, அதிமுக-பிஜேபி கூட்டணியில் தேர்ந்து எடுக்கபட்ட வெல்ல முடியாத 5 இடங்களில் தாமரையில் போட்டி போடுகிறது.

காலம் செய்த கோலம் என்பது இதைத்தான் போலும்.

இந்த முறை வாசனின் ராஜ்சபா சீட்டை கூட பறித்து அன்புமணிக்கு கொடுத்துவிட்டார்கள்.

வேறு ஏதாவது மாநிலபட்டியலில் பிஜேபி கோட்டாவில் மீளவும் ராஜ்சபா போகத்தான் இந்த கூத்து என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கம், வெள்ளி ஏதுமில்லை; கையில் 50,000 ரொக்கம் மட்டுமே.! - வெளியான உதயநிதியின் வேட்புமனு விவரம்!

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் அவரின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் 10. 5 ஏக்கர் வேளாண் நிலம் உள்ளது.

அசையும் சொத்துக்களின் மதிப்பு 12. 92 கோடி, அசையா சொத்துகளின் மதிப்பு 7.72 கோடி உள்ளது என்றும் கையில் 50,000 ரொக்கம் இருப்பதாகவும் வேட்புமனுவில் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

தவிர 1 கோடி மதிப்பில் உள்ள டிஃபென்டர் கார் ஒன்றும் 23 லட்ச ரூபாய் மதிப்பில் இன்னோவா கார் ஒன்றும் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் தங்கம், வெள்ளி, நகைகள், விலையுயர்ந்த பொருட்கள் ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தங்கம், வெள்ளி ஏதுமில்லை; கையில் 50,000 ரொக்கம் மட்டுமே.!- வெளியான உதயநிதியின் வேட்புமனு விவரம் | Details of Udhayanidhi’s nomination affidavit released - Vikatan

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

மேலும் தங்கம், வெள்ளி, நகைகள், விலையுயர்ந்த பொருட்கள் ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அடப்பாவமே............... அடுத்த முதல்வர் என்னை விட ஏழையாக இருக்கின்றாரே.......................🤣.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரசோதரன் said:

அடப்பாவமே............... அடுத்த முதல்வர் என்னை விட ஏழையாக இருக்கின்றாரே.......................🤣.

ஏழையா இருந்தால் தானே மக்களுக்கு சேவை செய்யலாம். பாவம்நடிகைகளுக்கு செலவளித்துநொந்து போனார் போலை

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

ரசோதரன், “ஒரு நல்லவர் ஆட்சிக்கு வர வேண்டும்”  இதை யார் வேண்டாம் என்று சொல்வார்கள்? ஆனால் கேள்வி என்னவென்றால், அந்த நல்லவர் யார்? எங்கே இருக்கிறார்? நல்லவர், இல்லாவிட்டால் ஓரளவாவது நல்லவர் என்று தேடினாலும் கிடைக்குமா? நல்லவர்களைத்தான் 67இல் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்களே. அன்றிலிருந்து அண்ணனின் தம்பிகள் காட்டில்தானே மழை.

கவிஞரே, இன்றைய தமிழ்நாட்டு அரசியலில் நல்லவர்கள் அத்துடன் மக்கள் ஆதரவு உள்ளவர்கள் என்று யாராவது இருக்கின்றார்களா, அப்படி ஒருவருமே கிடையாதே என்று நீங்களும் கோஷானும் சொல்வதை நானும் ஏற்றுக் கொள்ளுகின்றேன். உண்மையான இடதுசாரிகள் நிஜ உலகத்தில் புறநடைகளே, அவர்கள் வீட்டில் கூட அவர்கள் புறநடைகளாகவும் இருக்கக்கூடும். அவர்களை திராவிட, தேசிய, சாதியக் கட்சிகளுக்கு மாற்றாக நான் நினைக்கவும் இல்லை.

என்னுடைய தத்தளிப்புகள் எல்லாமே புதிய வரவுகள் இருக்கும் நிலையை இன்னும் சீரழித்து விடுவார்களோ என்னும் அச்சமே. புதிதாக வருபவர்கள் சமூகத்தை கொஞ்சமேனும் பக்குவப்பட்ட, பொதுப் பண்புகள் உள்ள, சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்களா மாற்ற மாட்டார்களா என்னும் ஆதங்கமே.

  • கருத்துக்கள உறவுகள்

enhanced-image-2026-04-02t124033-280-177

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல்…

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வியாழக்கிழமை (02) திருச்சி கிழக்குத் தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார். இதற்காக அவர் சென்னையிலுள்ள தனது இல்லத்திலிருந்து காலை புறப்பட்டு, தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார்.

திருச்சி கிழக்குத் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக, திருச்சி விமான நிலையத்திலிருந்து பரப்புரை வாகனத்தில் ‘ரோட் ஷோ’ (Road Show) ஊடாக வந்த விஜய், முற்பகல் 11.20 மணியளவில் பாலக்கரை மாநகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தார். எனினும், அவர் உடனடியாக உள்ளே சென்று வேட்புமனுத் தாக்கல் செய்யாமல், சிறிது நேரம் தனது வாகனத்திலேயே (Caravan) காத்திருந்தார். நண்பகல் 12 மணியளவில் ‘நல்ல நேரம்’ என்பதால், அதுவரை காத்திருந்து அதன் பின்னரே அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ததாகக் கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே அவர் பெரம்பூர் தொகுதியில் தனது மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அன்றைய தினமே பெரம்பூர் மற்றும் கொளத்தூர் ஆகிய இரு தொகுதிகளிலும் விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து வில்லிவாக்கம் மற்றும் அண்ணா நகர் தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்த போதிலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் பிரசாரங்கள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நேற்று மற்றும் அதற்கு முந்தைய தினங்கள் விடுமுறை என்பதால் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படாத நிலையில், இன்று மீண்டும் மனுத் தாக்கல் செய்ய முடியும் என்பதால் விஜய் இன்று காலை திருச்சியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

https://athavannews.com/2026/1470821

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:

தங்கம், வெள்ளி ஏதுமில்லை; கையில் 50,000 ரொக்கம் மட்டுமே.! - வெளியான உதயநிதியின் வேட்புமனு விவரம்!

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் அவரின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் 10. 5 ஏக்கர் வேளாண் நிலம் உள்ளது.

அசையும் சொத்துக்களின் மதிப்பு 12. 92 கோடி, அசையா சொத்துகளின் மதிப்பு 7.72 கோடி உள்ளது என்றும் கையில் 50,000 ரொக்கம் இருப்பதாகவும் வேட்புமனுவில் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

தவிர 1 கோடி மதிப்பில் உள்ள டிஃபென்டர் கார் ஒன்றும் 23 லட்ச ரூபாய் மதிப்பில் இன்னோவா கார் ஒன்றும் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் தங்கம், வெள்ளி, நகைகள், விலையுயர்ந்த பொருட்கள் ஏதுமில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தங்கம், வெள்ளி ஏதுமில்லை; கையில் 50,000 ரொக்கம் மட்டுமே.!- வெளியான உதயநிதியின் வேட்புமனு விவரம் | Details of Udhayanidhi’s nomination affidavit released - Vikatan

மூன்று தலைமுறையாய் ஏழைகள்…

பாவங்கள்😂

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன் - விஜய் பிரச்சாரம்

02 Apr, 2026 | 03:36 PM

image

''நான் பல வலிகளை தாங்கிக்கொண்டிருக்கிறேன். உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன்'' என இந்தியாவில் தமிழ்நாடு, திருச்சியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்தார்.

விஜய் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் தொடங்கிய மார்ச் 30ஆம் திகதி அன்று சென்னை பெரம்பூர் தொகுதிக்கான வேட்பு மனுவை மாநில நிர்வாகிகளுடன் இணைந்து கட்சியின் தலைவரான விஜய் தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து ஏப்ரல் 2ஆம் திகதியான இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை விஜய் தாக்கல் செய்தார்.

இதை தொடர்ந்து திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய விஜய், '' தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் வேறு. நான் வேறல்ல. உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்.

அத்துடன் பிரச்சாரத்தில் திரண்டு இருந்த மக்களை பார்த்து, கேஸ் புக் செய்தால் புக் ஆகிறதா? சிலிண்டர் வீட்டிற்கு வருகிறதா? சிலிண்டர் பற்றாக்குறையால் எவ்வளவு பிரச்சனை? எத்தனை உணவகங்கள் மூடப்பட்டுள்ளன?.. மத்திய அரசோ மாநில அரசோ கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் இருந்திருந்தால்.. இதனை தவிர்த்து இருக்கலாம். முதல்வர் ஸ்டாலினை கேட்டால்.. இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பார்கள். ஆனால் அவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் .. உடனடியாக புதுடெல்லிக்கு செல்வார். திமுகவும், பாஜகவும் ஒன்றுதான்.

அதன் பிறகு, திமுக கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பட்டியலிட்டு இதெல்லாம் சொன்னீர்களே....! செய்தீர்களா..? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.

இது சாதாரண தேர்தல் அல்ல. ஒரு தலைமுறைக்கான தேர்தல். வசதியான வாழ்க்கையை விட்டு விட்டு உங்களுக்காக வந்திருக்கிறேன். பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன். நான் பல வலிகளை தாங்கிக் கொண்டு தான் உங்களுக்காக இங்கு வந்து இருக்கிறேன்.'' என்றார்.

முன்னதாக திருச்சி மரக்கடை பகுதிக்கு வந்த விஜய், அங்கு உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய பிறகு பிரச்சாரத்தை தொடங்கினார்.‌

download__3_.jpg

https://www.virakesari.lk/article/242569

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, தமிழ் சிறி said:

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

ஏன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றார்? இவருக்கே தன் வெற்றியில் நம்பிக்கை இல்லை போல....😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, Kavi arunasalam said:

சீமான் தனது தேர்தல் வியாபாரத்துக்கு தேர்ந்தெடுத்தது ஈழப்போராட்டத்தை. அதனால்தான் நீங்கள் சொல்லும் ‘வக்கிரம்’ என்னுள் இருக்கிறதோ தெரியவில்லை. 😌

ஈழத்தில் போர் நடந்து கொண்டிருக்கும் போதே அரசியல் மேடைகளில் ஈழத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் சீமான். அது திருமாளவனின் அரசியல் மேடை என நினைக்கின்றேன்.சீமான் அன்றிருந்த கொள்கையில் இன்றும் நிலை மாறவில்லை.

அது அவர் பிரச்சனை. ஈழ அரசியலுக்காக நான் சீமானை ஆதரிப்பதில்லை.ஏனென்றால் அரசியல் என்பது காலத்திற்கு காலம் மாறும். அதில் யாருமே பந்தயம் கட்ட முடியாது.

சீமான் தன் அரசியல் இலாபத்திற்காக ஈழத்தை கையில் எடுத்தார் என்றால்.... பழ. நெடுமாறன் என்ன மாதிரி? அவரின் இன்றைய நிலைகள் என்ன? எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஏன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றார்? இவருக்கே தன் வெற்றியில் நம்பிக்கை இல்லை போல....😂

இந்தியாவில்…. இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி… போன்ற பலரும் இரட்டை தொகுதிகளில் போட்டியிடுபவர்களே.

அதிலும் இந்த காந்திக்கள்…. வடக்கில் ஒரு தொகுதியும், தெற்கில் ஒரு தொகுதியும் என்று அகலக் கால் வைத்திருப்பார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு

3 Apr 2026, 1:59 PM

BJP Candidate List Released

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் 27 தொகுதிகள் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 3) வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

WhatsApp-Image-2026-04-03-at-1.51.51-PM-

WhatsApp-Image-2026-04-03-at-1.51.51-PM-

https://minnambalam.com/bjp-candidate-list-released/

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

இந்தியாவில்…. இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி… போன்ற பலரும் இரட்டை தொகுதிகளில் போட்டியிடுபவர்களே.

அதிலும் இந்த காந்திக்கள்…. வடக்கில் ஒரு தொகுதியும், தெற்கில் ஒரு தொகுதியும் என்று அகலக் கால் வைத்திருப்பார்கள். 😂

மோடியும் வரணாசி, குஜராத் என இரு தொகுதியில் போட்டி போட்டவர்.

டான்சி தீர்ப்புக்கு பின் ஜெயலலலிதா 4 தொகுதியில் வேட்புமனு செய்து, 4ம் தள்ளுபடியானது என நினைக்கிறேன்.

2க்கு மேல் போட்டியிட முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை

கோவையில் ஒரு தொகுதியில் போட்டியிட மலையார் விரும்பினவராம். ஆனால் நயினார் கோவை வடக்கை தவிர வேறு எந்த தொகுதியையும் திட்டமிட்டே கேட்டு பெறவில்லையாம். இது எடப்பாடி+நயினானார் ஜாயிண்ட் ஆப்பரேசனாம்.

கோவை வடக்கில் வானதி சிட்டிங் எம் எல் ஏ, அவரை தூக்கி விட்டு தன்னை போடும் படி மலையார் கேட்க, இல்லை என வானதி மறுக்க —-பட்டியல் வெளி வர தாமதம் ஆகியதாம்.

அண்ணாமலை போன்ற ஒருவரை சட்டசபைக்குள் வராமல், கட்சியில் மாநில பதவியில் இல்லாமல் ஆக்கியதன் மூலம், தேர்தலுக்கு பின்னாக தனக்கு வரக்கூடிய இடைஞ்சலை கணிசமாக குறைத்துள்ளார் எடப்பாடி.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

அண்ணாமலை போன்ற ஒருவரை சட்டசபைக்குள் வராமல், கட்சியில் மாநில பதவியில் இல்லாமல் ஆக்கியதன் மூலம், தேர்தலுக்கு பின்னாக தனக்கு வரக்கூடிய இடைஞ்சலை கணிசமாக குறைத்துள்ளார் எடப்பாடி.

பதவிக்காக இவர் முன்பு தவழ்ந்து சென்று காலில் விழுந்து கும்பிட்டார் இப்போது இப்படி. இவர் மிகப் பெரிய சதிகாரன்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பதவிக்காக இவர் முன்பு தவழ்ந்து சென்று காலில் விழுந்து கும்பிட்டார் இப்போது இப்படி. இவர் மிகப் பெரிய சதிகாரன்.

ஆம்…ஆனால் அதுதான் அரசியலில் முதற்பாடம் இல்லையா.

காலில் தவழ்தை சொல்லவில்லை, சதி செய்வதை சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஓட்டு போடு இல்லையென்றால் சாப்பிட கூப்பிட்டு சோத்தில நஞ்சு வைச்சு கொல். இப்படி என்னை வருசக்கணக்காக கத்தவைக்கதே என்று செபஸ்ரியன் சீமான் மக்களை பார்தது கேட்டுள்ளார். அதற்கும் கைதட்டல் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

660123541_932304526083892_46280611385345

அரசியல்வாதி ஆகுவதற்கு உரிய தகுதிகள் அத்தனையும் இவருக்கு இருந்தாலும்..

இரண்டு பெண்டாட்டி, மூன்று பெண்டாட்டி இருந்தால்... இன்னும் சிறப்பாக இருக்கும். 😂

  • கருத்துக்கள உறவுகள்

“விஜய்யும், சீமானும் ஓட்டுகளை பிரிப்பது திமுக கூட்டணிக்கே சாதகம்” - மு.வீரபாண்டியன்

hindutamil-prod%2F2026-04-03%2F6yx38n59%

Updated on: 03 Apr 2026, 7:41 pm

1 min read

கோவில்பட்டி: “விஜய்யும், சீமானும் ஓட்டுகளை பிரிப்பதால் திமுக கூட்டணியின் வெற்றி மிகவும் எளிதாகும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.

கோவில்பட்டி தொகுதி திமுக வேட்பாளர் கருணாநிதிக்கு ஆதரவு திரட்டும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் பேசியது: “ஒரு கட்சி வெற்றி பெறலாம், தோற்கலாம். ஆனால் ஜனநாயகம் தோற்றுவிடக் கூடாது.

பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைபும் பேரபாயம். இந்த தேர்தலில் பாஜக இல்லாமல் அதிமுக தனித்து நின்றிருந்தால் கடுமையான போட்டி இருந்திருக்கும், ஆனால், பாஜகவை அதிமுக அழைத்து வருவதால் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி என்பது மிக இலகுவாகிவிட்டது.

அமைதியாக இருக்கும் தமிழகத்தை பாஜக கெடுக்க முயற்சிக்கிறது. இது தமிழக மக்களுக்கு தெரியும். விஜய்யும், சீமானும் ஓட்டுகளை பிரிப்பார்கள். எனவே, இன்னும் பிரம்மாண்டமான வெற்றியை திமுக கூட்டணி அடையும்” என்று அவர் கூறினார்.

“விஜய்யும், சீமானும் ஓட்டுகளை பிரிப்பது திமுக கூட்டணிக்கே சாதகம்” - மு.வீரபாண்டியன்

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

சீமான் அன்றிருந்த கொள்கையில் இன்றும் நிலை மாறவில்லை.

புரிகிறது. நீங்கள் பெட்டியைத்தானே சொல்கிறீர்கள்.

20 hours ago, குமாரசாமி said:

சீமான் தன் அரசியல் இலாபத்திற்காக ஈழத்தை கையில் எடுத்தார் என்றால்.... பழ. நெடுமாறன் என்ன மாதிரி?

கருத்துப்படம் 29.03.2024

இந்த வரிசையில் சீமான்தான் கடைசி. இனியொருவர் வருவதற்கு வாய்ப்பில்லை ….

large.IMG_6241.jpeg.19e1a52f4a36b3103208

Edited by Kavi arunasalam
எழுத்துப்பிழை திருத்தம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.