Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..

திங்கள், 16 மார்ச் 2026 02:43 PM

இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..

வடமாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் பிரட்லியின் செயற்பாடுகளை வடமாகாண ஆளுநர் வேடிக்கை பார்ப்பாராயின் பாடசாலைகளில் இந்து மாணவர்களுக்கு வழங்கும் பைபிள்களை வாங்கி கொளுத்துவோம் என இலங்கை சிவசேனை அமைப்பின் சிவத்தொண்டர்கள் சிறீந்திரன் மற்றும் மாதவன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 யாழில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

 வட மாகாண மேலதிக கல்வி பணிப்பாளரின் செயற்பாடு மதங்களுக்கு இடையில் முறுகல்களை ஏற்படுத்துவதாக அமைகிறது.

பைபிள் என்கின்ற கிறிஸ்தவ நூலினை வட மாகாண பாடசாலைகளுக்கு வழங்குவதற்கு அனுமதித்தமை இந்து மாணவர்களையும் பைபிள் நூலை பெறுவதற்கு திணிப்பதாக அமைகிறது.

குறித்த நூலினை வழங்குவதற்காக அனுமதி கோரிய கிறிஸ்தவ அமைப்பு தொடர்பில் விசாரித்தபோது அவ்வாறான அமைப்பு ஒன்று இலங்கையில் பதிவு செய்ததாக அறியப்படவில்லை. 

அவ்வாறான அமைப்பு வடமாகாணத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் பைபிள்களை வழங்கப்போவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. 

வடமாகாண ஆளுநரின் அனுமதி இல்லாமல் மேலதிகமாக மாகாண கல்வி பணிப்பாளர் வழங்குவதற்கு சிபாரிசு செய்தமை ஏதோ ஒரு பின்புலத்தை அடிப்படையாக கொண்டதாக பார்க்கிறோம். 

குறித்த விடயம் தொடர்பில் வட மாகாண ஆளுநருக்கும் எழுத்தம் மூலம் தெரியப்படுத்தியுள்ள நிலையில் பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளோம். 

ஆகவே குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் இந்து மாணவர்களுக்கு பைபிளை வழங்க வழங்க முற்பட்டால் அதனை வாங்கி பாடசாலைகளுக்கு முன்பாக கொளுத்துவோம் என  மேலும் தெரிவித்தனர்

https://jaffnazone.com/news/55614

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..

https://jaffnazone.com/news/55614

கெதியாகச் செய்யுங்கோ, கட்டாயம் சமூக வலைத்தளத்தில் எரிப்பதை வீடியோவும் போடுங்கோ! ட்ரம்ப் ரீமின் கவனத்திற்குக் கொண்டு வந்தால் "இலங்கையில் கிறிஸ்தவர்களுக்கு அச்சுறுத்தல்" என்று விசேட விசாவும் கொடுத்து, உங்களைத் தட்டி வைக்கும் படி அனுரவுக்கு அழுத்தமும் கொடுப்பார்கள்😇!

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த ரவுடிகளுக்கு சளைத்தவர்களல்லர் இவர்கள். நாட்டை கொழுத்துவதென்றே சன்னதமாடுகிறார்கள்!

14 hours ago, கிருபன் said:

பாடசாலைகளில் இந்து மாணவர்களுக்கு வழங்கும் பைபிள்களை வாங்கி கொளுத்துவோம்

இவருக்கு புத்தி பேதலித்து விட்டதா, நாட்டில் வன்முறையை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்கும் கூட்டத்துடன் ஏதும் டீல் போட்டுவிட்டார்களா? உதயன் கம்மன்பில கூறுகிறார், சஹ்ரானுடன் இணைந்து செயற்பட்ட தாக்குதலாளிகள் முந்நூறுபேர் இன்னும் இருக்கிறார்களாம், இதனடிப்படையில் முஸ்லிம்களை வைத்து இன்னொரு தாக்குதலை நடத்தி மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த முடியும் என்கிறாரா? கம்மன்பில நடுங்குவதும், கூறும் ஆரூடத்தை வைத்து பார்க்கும்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளைவேர் இவர்போல்தான் தோன்றுகிறது. இல்லையேல் இவர் ஏன் பதறுகிறார்? குற்றவாளிகளுக்குப்பின்னால் ஓடுகிறார், கதைகளை கூறுகிறார், அடுத்த கைதின் இலக்கு யாரென துல்லியமாக கூறுகிறார், விசாரணை செய்வோரை குற்றம் சுமத்துகிறார், உண்மையான குற்றவாளிகளை வெளிப்படுத்துவேன் என்கிறார். அதை வெளிப்படுத்த ஏன் இவ்வளவு காலம் காத்திருந்தார்? இவரும் கைது செய்து விசாரிக்கப்பட வேண்டியவர். தன வாயாலேயே மாட்டிக்கொள்கிறார் என்பது அவருக்கு புரியவில்லை. "முட்டாள்கள் தங்கள் வாயாலேயே மாட்டிக்கொள்வர்."

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடமாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் பிரட்லியின் செயற்பாடுகளை வடமாகாண ஆளுநர் வேடிக்கை பார்ப்பாராயின் பாடசாலைகளில் இந்து மாணவர்களுக்கு வழங்கும் பைபிள்களை வாங்கி கொளுத்துவோம் என இலங்கை சிவசேனை அமைப்பின் சிவத்தொண்டர்கள் சிறீந்திரன் மற்றும் மாதவன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இப்படியான அறிக்கைகளுக்கு என் கண்டனங்கள்.

இருந்தாலும்....

ஏன் ....பிற சமய சமூகத்தினரிடம்... எதற்காக பைபிளை கொண்டு சேர்க்க முயற்சிக்கின்றார்கள் என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.😎

தனகுபவர்களை விடுத்து தனகுபவர்களுக்கு பதில் சொல்வதை குற்றமாக கருதி தண்டனைகளும் தடைகளும் கொடுக்கும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

உதாரணத்திற்கு ஈரான் போர்.

  • கருத்துக்கள உறவுகள்

குயஸ்யன் 1

இந்து மாணவர்களுக்கு ஏன் பய்பிள் கொடுக்கின்றார்கள்? மாறாக கிருஷ்ண பரமாத்மா அருளிச்செய்த பகவத் கீதையையல்லவா வழங்கவேண்டும்?

குயஸ்யன் 2

சரி அப்படி பய்பிள் வழங்கப்பட்டு இந்து மாணவர்கள் அதைப் படிப்பதால் சிவத்தொண்டர்களுக்கு ஏன் கடுப்பு வருகின்றது? பதிலாக கிறிஸ்தவ மாணவர்களுக்கு பகவத் கீதையை வழங்கி வைக்கலாமே? பய்பிள் இந்து மாணவர்களை மாற்றிவிடும் என சிவத்தொண்டர்கள் அஞ்சுகின்றார்களா? மற்றவர்களின் புனித நூல்களை வாசிப்பதன் மூலம் பரந்துபட்ட அறிவை வளர்த்துக்கொள்ளலாம் அல்லவா?

குயஸ்யன் 3

படத்தில் உள்ள சிவத்தொண்டர்களில் யார் சிறீந்திரன் மாஸ்டர் யார் மாதவன் அம்மான்?

  • கருத்துக்கள உறவுகள்

பைபிள் ஒரு சமய நூல். பாடசாலைகளில் பிற சமயத்து மாணவர்களிற்கு இதை இலவசமாக விநியோகம் செய்வது எதை குறிக்கின்றது?

வேறு சமயத்து நூல்களும் பாடசாலைகளில் இலவசமாக விநியோகம் செய்யப்பட முடியுமா? இதற்கான அனுமதி கிடைக்குமா? சமய நம்பிக்கை சாராத நாத்திகர்களின் நூல்களும் இலவசமாக விநியோகம் செய்யப்படும் என்றால் அதற்கான அனுமதி கிடைக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன், இலங்கை சிவசேனை அமைப்பின் சிவத்தொண்டர்கள் சிறீந்திரன் மற்றும் மாதவன் பிழையான தகவல்களை பரப்பி எச்சரிக்கிறார்கள். சைவப்பாடசாலைகளில் கல்வி கற்கும் கிறிஸ்தவ பிள்ளைகளுக்கு பரிசுத்த பைபிளை வழங்கி வைத்து அவர்களின் சமய அறிவை வளர்க்க உத்தேசித்திருக்கலாம், இவர்கள் பதறியடிக்கிறார்கள். நான் படித்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமயத்தை சேர்ந்த பாடசாலையில் வேறு சமயத்தை சேர்ந்த மாணவர்களும் கல்வி கற்றார்கள், அருகில் அவர்களின் சமயம் சார்ந்த பாடசாலை இருந்தபோதும் அவர்களின் பெற்றோர் இந்தப்பாடசாலையை தேர்ந்தெடுத்து அனுப்பி வைத்தார்கள். அவர்களுக்கு சமயம் பாடம் இல்லை, அவர்கள் சமய பாட நேரத்தில் வெளியே சென்று விடுவார்கள் அல்லது வகுப்பின் பின் வரிசையில் அமர்ந்திருப்பார்கள். அந்த பாடசாலை அதிபர் அவர்களுக்கான சமய ஆசிரியருக்காக கல்வி பணிப்பாளரிடம் கோரிக்கை வைத்தும் பயனில்லை, இருந்தபோதும் அந்த பாடசாலையில் விவசாயம் கற்பித்த ஆசிரியரை அதற்காக ஒழுங்கு செய்தார். ஆனாலும் அந்த மாணவரோ பெற்றோரோ ஆர்வம் காட்டவில்லை பின் வரிசையில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த மாணவர்கள் அந்த சமயத்தை சேர்ந்த மாணவர்களைவிட அதிக மதிப்பெண்ணை பெற்றனர் சமய பரீட்ச்சையில். வேறு மதங்களை பற்றி அறிவதில் தப்பில்லை, பின்பற்றுவது அவரவர்களின் சுதந்திரம். எங்கள் பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் தங்கள் சமய வழிபாடுகள், விழாக்கள் செய்வதற்கு கூட சுதந்திரம், உரிமை, வசதி வழங்கப்பட்டிருந்தது. யாரும் மாணவர் சமயம் மாறி விடுவார் என அச்சப்பட்டதில்லை, அதே சமயத்தை சேர்ந்தவர்கள் கூட ஏனைய மதத்தை கற்று அந்த மாணவர்களுக்கு கற்பித்ததும் எனக்கு நினைவுண்டு. இவர்கள் எந்த நன்மையையும் செய்வதில்லை, மற்றவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதும் தவறான கருத்துக்களை பரப்பி சமூகத்தில் பிளவுகளை ஏற்படுத்துகிறார்கள். மக்களுக்கு எவ்வளவோ பிரச்சனை இவர்களுக்கு இவர்களது பிரச்சனை.

  • கருத்துக்கள உறவுகள்

பைபிள் பிரச்சினைக்கு நீதியான விசாரணை மேற்கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் எழுந்த பைபிள் பிரச்சினைக்கு சரியான தீர்வினை கூறியதாக தெரிவித்து யாழ்ப்பாணம் தலைமை காரியாலய பொறுப்பதிகாரிக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டது.இது குறித்து மேலும் தெரியவருகையில்,

பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவதற்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன் அனுமதியளித்த நிலையில் அதற்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமை காரியாலயத்தில், சிவசேனை அமைப்பினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் நீதியாக இடம்பெற்றதாக சிவசேனை அமைப்பினரால் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நீதியான விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, சிவசேனை அமைப்பினரால்  பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

https://athavannews.com/2026/1468946

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இந்நிலையில் நீதியான விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு, சிவசேனை அமைப்பினரால்  பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

இந்தப்பிரச்சினையை போலீசார் விசாரிக்க முடியுமா?யார் யார் விசாரிக்கபட்டார்கள்? என்ன முடிவு எடுக்கப்பட்டது என்று எதுவும் கூறவில்லை, பொலிஸாருக்கு எதுக்கு பொன்னாடை போர்த்துகிறார்கள்? மக்களின் சமூக பிரச்சனைகளை தீர்க்க முடியாத போலீசார், கல்விசார் பிரச்சனைகளை தீர்க்கமுடியுமா? சைவ ஆலயங்களை இடித்து பௌத்த விகாரைகளை அமைப்போரையும் போலீசார் விசாரித்து பிரச்சனைகளை தீர்த்து சமூகத்தில் இந, மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாமே? என்ன கோமாளிக்கூத்தெல்லாம் நடத்துது சிவசேனை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

பற்றிக் டிரஞ்சன்

On 17/3/2026 at 07:10, கிருபன் said:

மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் பிரட்லியின்

இதென்ன பைபிள் கொடுத்தா இந்திரன், பைபிள் கொடுக்காட்டில் சந்திரன் எண்டு ஒரே தில்லு முல்லா கிடக்கு.

இஸ்லாம், கிறிஸ்தவத்தில் சில பிரிவுகள் மதம் பரப்புவதை ஒரு கடமையாக சொல்லிறன. இந்த பணிப்பாளர் இப்படி ஒருவராக இருக்கலாம்.

ஆனால்…

அரச கல்விகொள்கைக்கு அப்பால் அதிகாரிகள் விருப்பபடி எல்லாம் பள்ளிகளில் புத்தகம் வினியோகிக்க முடியாது.

அப்படி நடந்தாலும் அதை பெற்றோர், பாதுகவலர் சங்கத்தினர் கேட்பார்கள்.

யார் இந்த் பெயர் தெரியாத இரெண்டு சங்கி மங்கிகள்? ஆட்களும் அவையின்ற பல்லும்😂.

பைபிளை கொழுத்துவோம் என்ற சொற்பாவனை, சிவசேனா என்ற பெயர், இவர்களின் நோக்கம் என்ன என்பதை காட்டி நிற்கிறது.

11 hours ago, நியாயம் said:

பைபிள் ஒரு சமய நூல். பாடசாலைகளில் பிற சமயத்து மாணவர்களிற்கு இதை இலவசமாக விநியோகம் செய்வது எதை குறிக்கின்றது?

வேறு சமயத்து நூல்களும் பாடசாலைகளில் இலவசமாக விநியோகம் செய்யப்பட முடியுமா? இதற்கான அனுமதி கிடைக்குமா? சமய நம்பிக்கை சாராத நாத்திகர்களின் நூல்களும் இலவசமாக விநியோகம் செய்யப்படும் என்றால் அதற்கான அனுமதி கிடைக்குமா?

இந்த செய்தி உண்மையாக இருக்குமா ?

இது இரெண்டு சங்கி மங்கியள் ஊடக வெளிச்சம் தேடி செய்யும் விடயமாகவே தெரிகிறது.

அவரவர் சமய நூல்களை தவிர வேறு ஏதும் வினியோகம் ஆவதில்லை. லைபிரரியில் ஒண்டை வைக்கலாம் - ஆர்வம் உள்ளோர் தேடி வாசிக்க.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்துவ மாணவர்களிற்கு பைபிளை பாடசாலைக்கு தேடிச்சென்று கொடுக்க வேண்டிய தேவை இல்லை. அதை அவரவர் செல்கின்ற சேர்ச்சிலேயே கொடுக்கலாம். அப்படித்தான் காலம் காலமாக நடக்கின்றது. வெளிநாடுகளில் கிறிஸ்தவர்களாக மதம் மாற்றப்பட்டவர்களின் பிள்ளைகள் வார இறுதியில் சமய வகுப்பிற்கு சென்று வருகின்றார்கள். அங்கு தேவையானவற்றை வழங்குகின்றார்கள். இலங்கையிலும் கிறிஸ்துவ மாணவர்கள் யாராவது பைபிள் இல்லாமல் சிரமப்பட்டதாக நான் அறியவில்லை.

பைபிளை கொளுத்தும் அளவிற்கு சிந்திப்பது மனப்பிறழ்வு நிலை என்பது ஒருபுறம் அமைய, பாடசாலையை மத பிரச்சார மேடையாக்குவதும் தவறானதே. அவரவர் அவரவர் மதத்தில் அவரவர் விடயங்களை கடைப்பிடிக்கும்போது சச்சரவுகள் வருவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு மத மாணவருக்கு

இன்னொரு மதம் பிடித்தவர்

இன்னொரு மத புத்தகத்தை

ஏன் கொடுக்கணும்.

இன்னொரு மதத்தைப் பற்றி அறிய

இன்னொரு மதத்தவனுக்கு

ஆர்வம் இருந்தால்

அவனாகவே வாங்கிப் படிப்பான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணப் பாடசாலைகளில் பைபிள் விநியோகம் – ஆளுநர் நடவடிக்கை

adminMarch 19, 2026

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிப்பது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து, ஆளுநர் நா. வேதநாயகன் முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அது குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாடசாலைகளுக்குள் வெளிநபர்கள் அல்லது அமைப்புகள் நேரடியாகச் சென்று மத நூல்கள் விநியோகிப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. பைபிள் வழங்க விரும்பும் அமைப்புகள், அதை நேரடியாக மாணவர்களுக்கு வழங்காமல் மாகாணக் கல்வித் திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும். பின்னர்: அந்த நூல்கள் கிறிஸ்தவ பாடம் கற்கும் மாணவர்களுக்கு மட்டும்அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ்வழங்கப்பட வேண்டும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரனுக்கு ஆளுநர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமொன்றால் பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த அமைப்பு தமக்குரிய கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கே அனுமதி கோரியிருந்த போதிலும், கல்வித் திணைக்களத்தின் ஆரம்பக் கடிதத்தின் வாசகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக புரிந்துகொள்ளப்பட்டு சர்ச்சைகள் எழுந்தன.

இதனையடுத்து, குறித்த விநியோகமானது ரோமன் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரமே என மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளரால் திருத்தப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் பின்னர் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பிலான சர்ச்சைகள் தொடரும் நிலையில், பாடசாலைக் கட்டமைப்புக்குள் மத நல்லிணக்கத்தைப் பேணுவதும், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்ப்பதும் மிகவும் அவசியமானது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இதற்கான உரிய ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துமாறு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைவாக, பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என ஆளுநர் பணித்துள்ளார்.  மேற்படி பைபிள்களை விநியோகிக்க விரும்பும் குறித்த நிறுவனம், அவற்றை வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்க வேண்டும்.

அவ்வாறு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் நூல்களை, கிறிஸ்தவ பாடத்துக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், அந்த நூல் அவசியமான மற்றும் அப் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த முறையான நிர்வாக நடைமுறையின் ஊடாக, பாடசாலைகளில் சகல மத மாணவர்களிடையேயும் நல்லிணக்கம் பாதுகாக்கப்படுவதுடன், தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்படும் என நம்புவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 மொத்தத்தில், இந்த நடவடிக்கை பள்ளி சூழலில் மத சார்ந்த விஷயங்கள் கட்டுப்பாட்டுடனும் சமநிலையுடனும் நடத்தப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

https://globaltamilnews.net/2026/230657/

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் பாடசாலை மாணவர்களுக்கான பைபிள் விநியோக சர்ச்சைகளுக்கு ஆளுநர் முற்றுப்புள்ளி

19 Mar, 2026 | 10:40 AM

image

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிக்கப்படவுள்ளது தொடர்பில் அண்மைய நாட்களாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரனுக்கு ஆளுநர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமொன்றால் பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த அமைப்பு தமக்குரிய கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கே அனுமதி கோரியிருந்த போதிலும், கல்வித் திணைக்களத்தின் ஆரம்பக் கடிதத்தின் வாசகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக புரிந்துகொள்ளப்பட்டு சர்ச்சைகள் எழுந்தன.

இதனையடுத்து, குறித்த விநியோகமானது ரோமன் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரமே என மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளரால் திருத்தப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் பின்னர் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பிலான சர்ச்சைகள் தொடரும் நிலையில், பாடசாலைக் கட்டமைப்புக்குள் மத நல்லிணக்கத்தைப் பேணுவதும், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்ப்பதும் மிகவும் அவசியமானது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இதற்கான உரிய ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துமாறு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைவாக, பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என ஆளுநர் பணித்துள்ளார். மேற்படி பைபிள்களை விநியோகிக்க விரும்பும் குறித்த நிறுவனம், அவற்றை வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்க வேண்டும்.

அவ்வாறு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் நூல்களை, கிறிஸ்தவ பாடத்துக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், அந்த நூல் அவசியமான மற்றும் அப் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த முறையான நிர்வாக நடைமுறையின் ஊடாக, பாடசாலைகளில் சகல மத மாணவர்களிடையேயும் நல்லிணக்கம் பாதுகாக்கப்படுவதுடன், தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்படும் என நம்புவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/241336

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களுக்கு எத்தனையோ தேவைகள் இருக்கின்றன. தேவையான சமய நுhல்களைத்தவிர எனைய பாடங்களுக்கான நுhல்களக் கொடுக்கலாமே. அது ஏன் வடமாகாணத்தின் அனைத்துப்பாடசாலைகளுக்கும் கொடுக்க வேண்டும்.அங்குள்ள மக்கள் மதவெறிபிடித்து சண்டை போடுகிறார்களா?இலங்கை முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு கொடுக்க முடியுமா?எனது கிராமத்தில் சைவசமயத்தவர்களும் கிறிஸ்தவர்களும் நீண்ட காலமாக எந்தப் பிணக்குகளும் இல்லாமல் வாழுகிறார்கள்.சைவமக்கள் தங்கள் வீட்டுக்கருகில் கிறிஸ்தவப் பாடசாலைகள் இருந்தால் அங்குதான் சென்று கல்வி கற்கிறார்கள். அதே நேரம் கிறிஸ்தவ மக்கள் சைவப் பாடசாலைகளில் படிப்பது ஒப்பீட்டளவில் குறைவு. உயர்தரப்பாடசாலைகளில் இருசமயத்தவர்களும் படிக்கிறார்கள்.இல்லாத பிணக்கை ஏன் தேலையில்லாமல் உருவாக்குகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

குறித்த அமைப்பு தமக்குரிய கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கே அனுமதி கோரியிருந்த போதிலும், கல்வித் திணைக்களத்தின் ஆரம்பக் கடிதத்தின் வாசகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக புரிந்துகொள்ளப்பட்டு சர்ச்சைகள் எழுந்தன.

இதனையடுத்து, குறித்த விநியோகமானது ரோமன் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரமே என மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளரால் திருத்தப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் பின்னர் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

இந்த இரு பந்திகளும் என்ன நடந்தது என தெளிவாக காட்டுகிறன.

எப்போதும் பைபிளை புரெட்டஸ்தாந்து மாணவருக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதே மத அமைப்பின் வேண்டுகோள்.

கல்வி அலுவலகத்தின் முதல் கடிதம் இதை தெளிவாக சொல்லவில்லை.

இந்த மயக்கத்தை அதே அலுவலகத்தின் இரெண்டாம் கடிதம் விளக்கி சொல்லி விட்டது.

அத்தோடு முடிந்திருக்க வேண்டிய உள்ளக விடயம் இது.

இரெண்டு சங்கிகள், ஒரு சம்பந்தமே இல்லாத பொலிஸ் உத்தியோகத்தர், கடைசியாக ஜனநாயக விரோத ஆளுனர், மூவரும் இதை ஊதி பெரிதாக்கி தமக்கு ஊடக வெளிச்சம் பாய்ச்சி உள்ளார்கள்.

சும்மா நாங்களும் நேரத்தை வீணடித்துள்ளோம்.

பிகு

மேலே கொடுக்கப்பட இருப்பது கிங் ஜேம்ஸ் பைபிள் என நினைக்கிறேன்.

இதை கத்தோலிக்க மாணவருக்கே கொடுக்க முடியாது, இப்படி இருக்க இதை சைவ, இஸ்லாமிய அனைத்து மாணவருக்கு கொடுப்பார்கள் என்பது நம்பகூடியதல்ல, ஆரம்பத்தில் இருந்தே.

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-2-21.jpg?resize=600%2C300&ss

பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ , அமைப்புகளோ நேரடியா சென்று நூல் வழங்க முடியாது – வட மாகாண ஆளுநர் திட்டவட்டம்!

பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்

இது குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிக்கப்படவுள்ளது தொடர்பில் அண்மைய நாட்களாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் கரிசனைகளைக் கருத்திற்கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரனுக்கு ஆளுநர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமொன்றால் பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது.

குறித்த அமைப்பு தமக்குரிய கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கே அனுமதி கோரியிருந்த போதிலும், கல்வித் திணைக்களத்தின் ஆரம்பக் கடிதத்தின் வாசகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக புரிந்துகொள்ளப்பட்டு சர்ச்சைகள் எழுந்தன.

இதனையடுத்து, குறித்த விநியோகமானது ரோமன் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரமே என மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளரால் திருத்தப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் பின்னர் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பிலான சர்ச்சைகள் தொடரும் நிலையில், பாடசாலைக் கட்டமைப்புக்குள் மத நல்லிணக்கத்தைப் பேணுவதும், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்ப்பதும் மிகவும் அவசியமானது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இதற்கான உரிய ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துமாறு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைவாக, பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என ஆளுநர் பணித்துள்ளார்.

மேற்படி பைபிள்களை விநியோகிக்க விரும்பும் குறித்த நிறுவனம், அவற்றை வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்க வேண்டும்.

அவ்வாறு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் நூல்களை, கிறிஸ்தவ பாடத்துக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், அந்த நூல் அவசியமான மற்றும் அப் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த முறையான நிர்வாக நடைமுறையின் ஊடாக, பாடசாலைகளில் சகல மத மாணவர்களிடையேயும் நல்லிணக்கம் பாதுகாக்கப்படுவதுடன், தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்படும் என நம்புவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2026/1469178

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

உப்பு சப்பில்லாத மேட்டரை ஊதி பெரிதாக்கி ஊடக வெளிச்சம் தேடுகிறார் ஜனநாயக விரோத ஆளுனர்.

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

உப்பு சப்பில்லாத மேட்டரை ஊதி பெரிதாக்கி ஊடக வெளிச்சம் தேடுகிறார் ஜனநாயக விரோத ஆளுனர்.

இந்த பைபிள் விநியோகத்தைப் பற்றி….

ஆபிரகாம் சுமந்திரன் தனது திருவாயை திறந்து, கருத்து ஒன்றும் கூறவில்லை என்ற படியால்…

சுத்துமாத்து சுமந்திரன் பம்மிக் கொண்டு இருக்கிறதை பார்க்க.... அவருக்கும் உள்ளுக்கு நல்ல விருப்பம் போல் தெரிகிறது. 😂

மௌனம்… சம்மதத்துக்கு அறிகுறி 🤣

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.