Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாம்பு பால் குடிக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பு பால் குடிக்குமா?

பாம்புகளில் சில பாம்புகள் மட்டும் நச்சுத் தன்மை கொண்டவை. பெரும்பாலான பாம்புகள் நச்சுத்தன்மை அற்றவை. அவை கடித்தால் தடிப்பு, சொறி, உடல் வீக்கம் ஏற்படும், உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விரியன் பாம்புகள் மிகவும் கொடிய நச்சைக் கொண்டவை. கடித்த சில மணித்துளிகளிலே உயிரைக் குடிக்கும் தன்மை உடையவை.

பாம்புகள் பெரும்பாலும் இருட்டிய பிறகே இரை தேடப் புறப்படுகின்றன. எலி, தவளை, சிறுசிறு பூச்சிகள், மற்ற பறவைகளின் முட்டைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. சில பாம்புகள் மற்ற வகைப் பாம்புகளையே உண்ணக் கூடியவை. பாம்புகளில் மிகவும் எடையும், வலுவும், நீளமும், கொண்டவை மலைப்பாம்புகள்.

பாம்புகள் அந்த இனங்களிலேயே தங்களுக்கு இணைகளைத் தேடிக் கொள்கின்றன. பாம்புகள் முட்டையிட்டு அடைகாக்கும் தன்மை கொண்டன. பெரும்பாலும் ஆண் பாம்புகளே அடை காக்கின்றன. இடத்திற்கும், தட்ப வெப்ப நிலைக்கும் ஏற்ப பாம்புகள் வெண்மை, மஞ்சள், கருமை, நீலம், பச்சை, சிவப்பு, பழுப்பு மற்றும் பல வண்ணங்களில் மணமும் பல வகையாக உள்ளன.

பாம்புகளுக்கு காதுகள் கிடையாது பாம்பின் கால் பாம்பறியும், கட்செவி போன்றவை பாம்பைப் பற்றி ஆராய்ச்சி அறிவு இல்லாத காலத்தில் கூறப்பட்டவையாகும். பாம்பாட்டி மகுடியை அப்படியும் இப்படியும் அசைத்து ஆட்டும் போது பாம்பும் தன் பார்வையை மகுடி மீது செலுத்தி அதற்கேற்றவாறு அசைவதைத்தான் “மகுடியின் இசையில் தான் பாம்பு ஆடுகிறது” என்று தவறாகக் கூறுகிறார்கள்.

பாம்பு தன் அடி வயிற்றிலுள்ள செதில்கள் போன்ற அமைப்பு மூலம் தரையைப் பற்றி (மண்புழு போன்றே) முன்னுக்கு நகர்கிறது. மண்புழுவிற்கு முன் பக்கம் மட்டுமே அந்த அமைப்பு உள்ளது. ஆனால், பாம்புக்கோ கழுத்திலிருந்து வால் வரை செதில் அமைப்பு உண்டு. இதனால் தான் மிக வேகமாக நகர முடிகிறது.

பாம்புகளுக்கு அதிர்வுகளை உணரும் திறன் உண்டு. மனிதனோ, விலங்கோ, நெருங்கும் போது, நிலத்தில் ஏற்படும் அதிர்வலைகளைப் பாம்புகள் தங்கள் வயிற்றுப்புறச் செதில்கள் மூலம் உணர்ந்து அதற்கேற்றவாறு தன் திசையை மாற்றி எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளும்.

பாம்புகளுக்கு நாக்கு பிளவுபட்டு கம்பிகள் போல் இருக்கும். எனவே, பாம்பு பாலையோ நீரையோ நக்கிக் குடித்திட முடியாது. கிண்ணத்தில் பாலை வைத்தால் பாம்பு உறிஞ்சிக் குடிக்கிறது என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இது மிகவும் அறியாமையாகும். பாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப் பொருளில் வாயை வைக்கும்போது முதலில் நுழைவது மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத்திணறிச் செத்து விடும். இதை அறியாதோர்தான் பாம்பு பால் குடிக்கிறது என்று தவறாகச் சொல்லி வருகின்றனர்.

மேலும் முட்டையைக் கூட உடைத்து உறிஞ்சிக் குடிப்பதாகவும் பக்தர்கள் சரடு விடுகிறார்கள். பாம்பு இரையை (எலி, தவளை போன்றவற்றை) அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு கிடையாது. எனவே முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சிக் குடிக்காது.

பாம்புகள் அதன் இனத்திலேயே இணைந்து இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால், நல்ல பாம்பும், சாரைப்பாம்பும் தான் இணைகின்றன என்ற தவறான கருத்தினைக் கூறி வருகிறார்கள். பறக்கக் கூடிய பறவைகள் எல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்திருப்பதால் கோழி, கொக்குடன் இணையுமா? கழுகு, வவ்வாலுடன் இணையுமா? காக்கை குயிலுடன் இணை யுமா? குருவி, கரிச்சானோடு இணையுமா? வாத்து வான்கோழியுடன் இணையுமா? இவை எப்படிச் சாத்தியமில்லையோ அப்படித் தான் பாம்பின் சேர்க்கையும் ஆகும்.

நன்றி: உண்மை மாதமிருமுறை இதழ்

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா இருக்கு. நன்றி நுணாவிலான். பிள்ளையார் பால் குடிக்கிறது பற்றியும் ஏதாவது தெரிஞ்சால் எழுதுங்கோ! :lol:

அட பாம்பு அப்ப பால் குடிக்காதா? நான் இவ்வளவு நாளும் பாம்பு பால் குடிக்கும் எண்டு அல்லோ நினைச்சுக்கொண்டு இருந்தன்.

இதவிட, பாம்பில இருந்து பால கறக்கலாம் எண்டும் கூட முந்தி ஒருக்கால் நினைச்சிருந்தன்.

பறவைப் பாம்பு எண்டு ஒண்டு ஊரில இருக்காமே? யாருக்காவது தெரியுமா? அது வேலிகளில நிண்டு ஆக்களில பாயுமாம்.

இதவிட, பாம்பில இருந்து பால கறக்கலாம் எண்டும் கூட முந்தி ஒருக்கால் நினைச்சிருந்தன்

அட இவ்வளவு அப்பாவியா இருந்திருக்கிறீங்கள்... :o:lol:

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக பாம்பு பால் உட்பட திரவ நிலைக் கூறுகளை உறிஞ்சி வாய்க்குழிக்குள் சேமித்துப் பின்னர் வாய்க்குழி மீது அழுத்ததைப் பிரயோகித்து திரவக் கூறுகளை விசையோடு உணவுக்கால்வாய்க்குள் தள்ளுகின்றன..!

எனவே பாம்பு பால் உட்பட திரவ உணவுக் கூறுகளை உறிஞ்சிக் குடிக்கும்..! :o

http://www.anapsid.org/drinksnake.html

அட அப்ப பாம்பு பால் குடிக்கிறதில்லையா நேக்கும் இன்றைக்கு தான் தெரியும் அப்ப புற்றில பால் ஊத்துவோம் என்று போய் ஊத்துவார்கள் என்னவோ!! :o

ஆனாலும் ஜெனரல் பாம்பில இருந்து பால் கறக்கலாம் என்று வேற நினைத்து இருக்கிறார் இதை பற்றி நான் ஆராய்ச்சி செய்ய வேண்டும்!! :)

ஜெனரல் சொன்ன பறவை பாம்பை பற்றி என்ட மம்மி சொல்லுறவா அந்த பறவை பாம்பு வந்து வீட்டிற்கு வந்தா அந்த வீடு அவ்வளவும் தான் என்று எல்லாம் சொல்லுறவா நேக்கு இதை பற்றி தெரியாது ஜெனரல்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Myths and Beliefs

Over the centuries, snakes have been regarded as the mysterious of all the animals known to exist. They have been a part of religions, customs and stories told throughout the world. To primitive humans snakes appeared to possess seemingly magical and almost supernatural attributes because unlike any other animal, they move without legs, eat without chewing and in some cases their single bite can cause serious illness or even death. These instinctive behaviours were enough to form a myriad of myths and stories about the shy animal, snake.

Following is a list of myths and beliefs practised commonly in the Indian sub-continent:

1.Myth:

A small Kashmiri snake is so dangerous that it melts the snow as it passes.

Reality:

This is not true because snakes are cold-blooded animals and their body temperature is not high enough to melt the snow as it passes through.

2.Myth:

Upon killing a snake, revenge will be taken by its mate.

Reality:

This myth is well expressed through the Urdu and Hindi movies popular in our society. But this is not the case as it appears. When a snake is killed it secretes pheromone(a sex-attractant) from its anal opening, so it is highly probable that the nearby snake may show up to investigate what this musk is all about giving the impression that it will chase and kill the person.

3.Myth:

Snakes are milk lovers.

Reality:

Snake doesn't drink any type of liquid, but thinking critically, of what nutritional value a few spoonfuls of milk would be to a snake, and above all, how can a snake drink milk when it lacks suction powers.

4.Myth:

Snakes are believed to respond to music by dancing.

Reality:

Even though recent experiments have shown that snakes respond to low frequency airborne sounds but none of these experiments concluded that they could appreciate music.

5.Myth:

Some snakes are so special that they have got two heads.

Reality:

Since the red sand boa has an extremely blunt tail for camouflaging, so that the predator attacks the tail and head seeks escape, many people come to think that they have got two heads.

6.Myth:

Snakes possess jewel or some sort of light in their heads.

Reality:

There isn't such thing in snakes. If this were the case, then snake-catchers would have become rich overnight.

7.Myth:

If a ring snake bites a person, ring patterns will appear on victim's whole body.

Reality:

There isn't any scientific proof of this, although swelling may occur around the bitten part of the body.

8.Myth:

Chanting mantras, and magic herbs can cure snakebite.

Reality:

The above statement is true as long as it is understood in the context of a psychological cure of snakebite. But for physical treatment only anti-venom or anti-snakebite serum is effective.

9.Myth:

Snakes hunt by charming or hypnotising their prey.

Reality:

There is no scientific evidence that snakes charm their prey. In some cases the appearance of the snakes may prove to be breathtaking for smaller animals, but they aren't charmed. Birds may manoeuvre around the snake in order to prevent it from reaching its nest, and in the process be captured by the snake, giving the impression that they were charmed.

10.Myth:

Saw-Scaled Vipers jump as long as 6 feet in the air.

Reality:

Upon hearing this statement, it seems that evolution has blessed snakes with rocket propulsions. To be honest, a jump of 6 inch is more accurate.

11.Myth:

Besides their family members, cobras also mate with rattlesnakes.

Reality:

Cobras always mate with their own species and tend to avoid the company of big rattlesnakes.

12.Myth:

Removal of fangs makes snakes harmless.

Reality:

This is not true as snakes constantly shed and re-grow their fangs.

The advancement in the fields of biology and herpetology has paved a way to understand these fascinating animals in depth ands to form our perception about snakes based on facts and not fiction.

http://edu.iucnp.org/themeSnakes/kc_mb.htm

பாம்பு பற்றியும் குழப்பிட்டாங்களே.

இங்க உள்ள விவாதங்களை வாசிச்சா நிச்சயமா நட்டு லூசாகும் போல...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஆதி வாசி உள்ள பாம்பு அறிவும் இல்லாமல் போயிட்டுதா? :o:lol::)

நுணுக்கம்!(இப்படி அழைக்கலாமா?) நக்கலா?

பாம்பின் கால் பாம்பறியும்??????

பாம்புக்கு எங்கேப்பா கால்? அறிவுத்தடாகத்தில வந்தா எல்லாமே குழப்பமா கிடக்கே....

இந்த லட்சணத்தில பாம்பு பால் குடிக்கிறதைப்பற்றி ஆதி அறிவை வளர்க்கிறதா? அல்லது குழப்பவா? என்று யோசிக்கிறன். இந்த மண்டை ஓட்டுக்குள் இருக்கிற ஒரு சாமான் எந்த முடிவுக்கும் இசையாதாமே....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாம்பு பற்றியும் குழப்பிட்டாங்களே.

இங்க உள்ள விவாதங்களை வாசிச்சா நிச்சயமா நட்டு லூசாகும் போல...

இப்ப மட்டும் ஏதோ நட்டு இறுக்கமாயிருக்கிறமாதிரி எல்லே கதைக்கிறார் :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இப்ப மட்டும் ஏதோ நட்டு இறுக்கமாயிருக்கிறமாதிரி எல்லே கதைக்கிறார்
:o:lol:

பாம்பு பற்றியும் குழப்பிட்டாங்களே.

இங்க உள்ள விவாதங்களை வாசிச்சா நிச்சயமா நட்டு லூசாகும் போல...

இப்ப மட்டும் ஏதோ நட்டு இறுக்கமாயிருக்கிறமாதிரி எல்லே கதைக்கிறார் :o

:lol::)

சரியாச் சொன்னீங்கள் கு.சா அண்ணா. இங்கு சிறப்பான முறையில் என்னை உங்களை மாதிரி கருத்தாடல் செய்வதற்கு இருக்க வேண்டிய முக்கியமான தகுதிகளில் ஒண்டு நட்டு லூசாக இருப்பதுதானே

Snakes are milk lovers.

Reality:

Snake doesn't drink any type of liquid, but thinking critically, of what nutritional value a few spoonfuls of milk would be to a snake, and above all, how can a snake drink milk when it lacks suction powers.

பொதுவாக பாம்பு பால் உட்பட திரவ நிலைக் கூறுகளை உறிஞ்சி வாய்க்குழிக்குள் சேமித்துப் பின்னர் வாய்க்குழி மீது அழுத்ததைப் பிரயோகித்து திரவக் கூறுகளை விசையோடு உணவுக்கால்வாய்க்குள் தள்ளுகின்றன..!

எனவே பாம்பு பால் உட்பட திரவ உணவுக் கூறுகளை உறிஞ்சிக் குடிக்கும்..! :D

:lol::D:D

பக்திப்படங்களில் பாம்பு எல்லாம் பால் குடிக்கிறது என்று காட்டுறது உண்மையோ பொய்யோ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சினிமா எல்லாம் பார்த்து பாம்பு பால் குடிக்கும் எண்டுதானே நினைச்சிருந்தேன்.

மேலும் முட்டையைக் கூட உடைத்து உறிஞ்சிக் குடிப்பதாகவும் பக்தர்கள் சரடு விடுகிறார்கள். பாம்பு இரையை (எலி, தவளை போன்றவற்றை) அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு கிடையாது. எனவே முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சிக் குடிக்காது.

முன்பு இப்படித்தான் ஒரு கதை கேள்விப்பட்டேன். கத்தியுடன் இருந்த மனிதனை பாம்பு விழுங்கினதுக்கு பிறகு அந்த மனிதன் கத்தி கிழித்து மனிதன் உயிருடன் வந்து விட்டான் எண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த சினிமா எல்லாம் பார்த்து பாம்பு பால் குடிக்கும் எண்டுதானே நினைச்சிருந்தேன்
.

அது பின்னால் இருந்து இயக்குனர் வயர் வைச்சு குடிச்சுடுவார். :rolleyes::rolleyes:

.

அது பின்னால் இருந்து இயக்குனர் வயர் வைச்சு குடிச்சுடுவார். :rolleyes::rolleyes:

:rolleyes: சூட்டீங் எல்லாம் நேரில் போய் பார்ப்பீங்க போல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சூட்டீங் எல்லாம் நேரில் போய் பார்ப்பீங்க போல.

எத்தனை சூட்டிங் யாழ்ப்பாணத்தில் பார்திருக்கிறேன். எதை சொல்ல? எப்படி சொல்ல?

இப்ப மட்டும் ஏதோ நட்டு இறுக்கமாயிருக்கிறமாதிரி எல்லே கதைக்கிறார் :rolleyes:

ஆ... ஆதிக்கு நட்டு லூசா? அப்ப கலைஞன் சொன்ன மாதிரி ஸ்மார்ட்டா எல்லோ இருக்கோணும்....

ஆதி இன்னும் பாம்புக்குட்டிக்கு பல் விளக்கிற நிலையிலதான் மிஸ்டர் கு.சா.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆ... ஆதிக்கு நட்டு லூசா? அப்ப கலைஞன் சொன்ன மாதிரி ஸ்மார்ட்டா எல்லோ இருக்கோணும்....

ஆதி இன்னும் பாம்புக்குட்டிக்கு பல் விளக்கிற நிலையிலதான் மிஸ்டர் கு.சா.....

சீச்சீ நான் அப்புடி ஒண்டும் திங் பண்ணேல்லை இப்ப நான் சொல்ல வந்தது என்னவெண்டால் :D ......ஹலோ........ஹலோ.......... :lol: மை பிரதர் ஆதீ ஹலோ........... :wub: நாசமறுப்பு ரெலிபோன் கட்டாப்போச்சு :lol:

சீச்சீ நான் அப்புடி ஒண்டும் திங் பண்ணேல்லை இப்ப நான் சொல்ல வந்தது என்னவெண்டால் :icon_idea: ......ஹலோ........ஹலோ.......... :) மை பிரதர் ஆதீ ஹலோ........... :D நாசமறுப்பு ரெலிபோன் கட்டாப்போச்சு :D

ரெலிபோன் கட்டா போச்சோ இல்லை கட் பண்ணுட்டியளோ :( தாத்தா பிகோஸ் பாட்டி வந்திருப்பா அது தானே தாத்தா நேக்கு தாத்தாவை பற்றி நல்லா தெரியுமே!! :)

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.