Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிர்வாகத்தில் இருப்பவர்கள் பற்றிய குற்றச்சாட்டை எங்கே வைப்பது.(நிர்வாகத்தையல்ல)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தில் உள்ள சிலரின் செயற்பாடு தொடர்பாக விமர்சனம் செய்தால், அது குறித்த இடத்தில் வைக்கவில்லை என அகற்றப்படும். உறவோசை தான் குறித்த இடம் என்று மட்டுக்கட்டி, எழுதினால் அது இலகுவாக" பண்பற்ற வார்த்தை", "தனிநபர் தாக்குதல்", அல்லது குறித்த இடத்தில் வைக்கவில்லை என்று அதற்கும் காரணம் போட்டும் அழிக்கப்படும். குறித்த இடம் எது என்று யாருக்குமே, இது வரை தெரியாத அப்பாவிகள் இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

கடவுளை அவமதித்தாக நடிகை குஷ்பு மீது இந்து முன்னணி வழக்கு என்ற தலைப்பில் இருந்து ஒரு கருத்து நீக்கப்பட்டுள்ளது.

தனி நபர் சம்மந்தப்பட்ட செய்தியை பயன்படுத்தி மத துவேசத்தை வெளிப்படுத்துவது தவறானது என்பதை கருத்தில் கொள்ளவும்.

என்ற இந்த வலைஞனின் வியாக்கியானத்தை வரவேற்கும் அதே வேளை, அல்லது *** சோ என்ற தமிழன எதிரியையோ, அல்லது இந்து ராம் போன்ற சிங்கள அடிவருடிகளை விமர்சிக்கின்றபோது, சாதிரீதியாகவும், மதரீதியாகவும் கேவலம் கெட்ட வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்து நச்சுவிதைகளை விதைக்கின்றபோது, தாங்கள் எங்கையா போனீர்கள்??

சகோதர மதத்தை விமர்சிக்கின்றபோது, கொழும்பில் குண்

டுவெடித்தால் மட்டும் உயிர்தெழும் சர்வதேசம் போல, உயிர்தெழும் உங்களின் நடுநிலமை வெளிப்படையாகத் தெரிகின்றது.

Edited by வலைஞன்
தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

சகோதர மதத்தை விமர்சிக்கின்றபோது, கொழும்பில் குண்

டுவெடித்தால் மட்டும் உயிர்தெழும் சர்வதேசம் போல

போட்டீங்களே ஒரு போடு... :unsure:

எப்படிப்பா இந்தளவுக்கு யோசிக்கிறீங்கள்... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ராமர் பாலம் இருந்தது உண்மைதான்: இந்திய அறிவியல் ஆய்வு மையம் என்கிற தலைப்பின் கீழ் இரு கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

அத்தோடு கருத்துக்கள உறவு நெடுக்காலபோவானுக்கு ராமர் பாலம் இருந்தது உண்மைதான்: இந்திய அறிவியல் ஆய்வு மையம் என்ற தலைப்பின் கீழ் கருத்துக்கள மட்டுறுத்துனரைத் தாக்கி எழுதியமையால் ஒரு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. கருத்துக்களத்தில் வேறு பல சந்தர்ப்பங்களில் பலதடவைகள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது: மட்டுறுத்துனர்கள் பற்றிய விமர்சனங்கள் இருப்பின் அவற்றை பண்பான முறையில் உரிய பகுதியில் முன்வைக்கலாம். அல்லது, கருத்துக்கள பொறுப்பாளரிடம் அதுபற்றி தனிமடலில் அறியக் கொடுக்கலாம். முன்னரும் சிலதடவைகள் மட்டுறுத்துனர்கள் பற்றி(தாக்கி) நாகரிகமற்ற வகையில் எழுதப்பட்டமையால் - இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

வலைஞனின் மேற்குறித்த குற்றச்சாட்டுக்கள் போலியானவை. இது குறித்து அவர் எனக்கு ஆதாரத்துடன் விளக்கமளிக்க 24 மணி நேரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மட்டுறுத்தினரை.. எவ்வெவ்வகையில் நாகரிகமற்றுத் தாக்கினது என்பதை வலைஞன் உடனடியாக பகிரங்கமாகவோ அல்லது தனிமடலூடோ எனக்கு அறியத்தர வேண்டும்.

வலைஞன் போலிக் காரணங்கள் கூறி தனது எதேச்சதிகாரப் போக்கில் தானே களவிதிகளை புதிசு புதிசா அமுல் படுத்திறது மோசமான செயல். வலைஞனிடமிருந்து எனக்குக் கிடைத்த எந்தத் தனிமடலிலும் நான் மட்டுறுத்தினர்களைத் தாக்கியதற்காக அறிவுறுத்தப்படவில்லை. ஆக.. இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என்மீது சந்தர்ப்பம் பார்த்து நடவடிக்கை எடுத்திருக்கிறார் வலைஞன் என்றே கருதுகிறேன். எனவே எனது எண்ணம் தவறென்பதை அவர் நிரூபிக்கக் கடமைப்பட்டுள்ளார்.

அவரிடம் தற்போதும் முன்னரும் விளக்கம் கோரி அனுப்பட்ட தனிமடல்கள் என்னிடம் இன்னும் உள்ளன. ஆனால் அவை எவற்றுக்கும் அவர் விளக்கம் தரவில்லை. அப்படி இருக்க மட்டுறுத்தினர்களின் செயல்கள் குறித்து வலைஞனுக்கு அறியத்தருவதால் எந்தப் பயனும் இல்லை என்பதை நான் நீண்ட நாட்களுக்கு முன்னரே தீர்மானித்து விட்டேன். அதனடிப்படையிலேயே எழுவானின் ஒருதலைப்பட்சமான செயலை பகிரங்கமாகக் கண்டித்தேன். அதுதான் எனக்கிருந்த ஒரே மாற்றீடு..! அதற்காகவும் வேறு போலிக் காரணங்களுக்காகவும் வலைஞன் எச்சரிக்கை வழங்கியுள்ளார். அவருக்கு அப்படி முடியும் என்றால் எமக்கும் அவருக்கு எச்சரிக்கை வழங்க முடியும் தானே.

எழுவானைப் பற்றிய குறிப்பை களத்தில் எழுத வைத்தது வலைஞனுக்கான முன்னைய தனிமடல்களுக்கு அவர் மதிப்பளிக்காமையே..! :o:lol:

இதற்காக நான் அவருக்கு ஒரு எச்சரிக்கை வழங்குகிறேன். எழுவானின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைக்காக அவருக்கும் ஒரு எச்சரிக்கை வழங்கப்படுகிறது..! :unsure:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போட்டீங்களே ஒரு போடு... :o

எப்படிப்பா இந்தளவுக்கு யோசிக்கிறீங்கள்... :lol:

ரெம்ப முக்கியம் :unsure:

இதற்காக நான் அவருக்கு ஒரு எச்சரிக்கை வழங்குகிறேன். எழுவானின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைக்காக அவருக்கும் ஒரு எச்சரிக்கை வழங்கப்படுகிறது..!

எழுதின கருத்தை வடிவாகப் பார்த்துக் கொள்ளுங்கள். என்னும் எத்தனை நிமிடத்துக்குத் தான் கிடக்குமோ தெரியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருணாவைப் பற்றி புதிதாக விமர்சனம் என்று வரவில்லைத் தானே? 2003ம் ஆண்டு பிரிந்த காலத்தில் இருந்து வருது. டக்ளஸ் பற்றி என்றால் யாழ்பார்க்கத் தொடங்கின காலத்தில் இருந்து வருது.

ஏன் இப்படிச் சொல்லுகின்றேன் என்ற நினைக்காதையுங்கோ! இந்த விதியைப் படிக்கேக்க தான் அதற்கான கேள்வி தேவைப்படுது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் கருத்துக்கள விதிமுறைகளில் உள்ளவை. ஒருவரைப் பற்றி விமர்சிப்பதற்கு உங்களுக்கு கருத்துச் சுதந்திரம் உள்ளது. அதேநேரம், கருத்துக்கள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு உங்கள் விமர்சனங்களை முன்வையுங்கள். யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்றபட்டவர்கள் அல்ல. அதேநேரம், விமர்சனம் என்ற பெயரில் - குடிகாரர் வீதியில் போறவர் வாறவர்களை வசைபாடுவது போன்றோ - நாய்கள், வீட்டுக் கதவைத் தாண்டிப் போகிறவர்களையெல்லாம் பார்த்து குரைப்பது போன்றோ எழுதாதீர்கள். விமர்சிக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் - அது பெரியாராக இருக்கலாம், சாயி பாபாவாக இருக்கலாம், டக்ளஸ் அல்லது கருணாவாக இருக்கலாம், ராஜபக்சா அல்லது கருணாநிதியாக இருக்கலாம் - பண்பான முறையிலும், கருத்தியற் தளத்தில் நின்றும் விமர்சியுங்கள். யாழ் இணைய கருத்துக்களம் ஒன்றும் சாராயக்கடை அல்ல - இது ஒரு கருத்தாடற் களம். கருத்தாடற் பண்பைப் பேணுவது இங்கு அவசியம். மேம்போக்காக - வசைபாடலாக - வீதியோரச் சுவர்க் கிறுக்கல்களாக ஒருவர் பற்றி எழுதுவீர்களானால் - அது யார் பற்றியதாக இருந்தாலும் - நீக்கப்படும்

ஆனால் விடையும் அதில் இருக்கு, தடித்த கோடிட்ட ஆளைப் பற்றி விமர்சித்ததால் தான் இந்த விதி. சும்மா சொல்லுகின்றேன் என்று தானே நினைக்கின்றியள். மேலே பாருங்கோ, தமிழின எதிரிகள் சோ, ராம் பற்றி விமர்சனம் செய்தால் அது கிடக்குது. அந்த ஆளைப் பற்றிச் சொன்னவுடன் தூக்குப்பட்டு விட்டுது.

இதை எல்லாம் களவிதி என்ற நினைக்காதையுங்கோ. எங்கட தலைவிதி......

  • கருத்துக்கள உறவுகள்

பாராளுமன்றம் முதல் முதலில் கூட்டப்படுகின்ற போது இவைகள் எல்லாம் சபாநாயகரின் அணுமதியுடன் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும்.....

இதற்காக நான் அவருக்கு ஒரு எச்சரிக்கை வழங்குகிறேன். எழுவானின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைக்காக அவருக்கும் ஒரு எச்சரிக்கை வழங்கப்படுகிறது..!

நெடுக்ஸ் தாத்தா சும்மா அதிருதிலலல :lol: ...............அந்த மாதிரி இருக்கு உங்க பஞ் தாத்தாவோட சேர்ந்து நானும் ஒரு எச்சரிக்கையை வழங்குகிறேன்!! :unsure:

அப்ப நான் வரட்டா!!

நிர்வாகத்தில் இருப்பவர்கள் பற்றிய குற்றச்சாட்டை எங்கே வைப்பது??

ஒரு புதிய இணையத்தளத்தை திறந்து அங்கே வைக்கலாம்... :lol:

இதற்காக www.முறைப்பாடுகள்.com என்று ஒரு டொமையினை பதிவு செய்யலாம்..

இல்லாவிட்டால் www.எச்சரிக்கை.com என்று ஒரு டொமையினை பதிவு செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிலதடவைகள் மட்டுறுத்துனர்கள் பற்றி(தாக்கி) நாகரிகமற்ற வகையில் எழுதப்பட்டமையால் - இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

எனக்கு எச்சரிக்கை வழங்க உபயோகிப்பட்ட மட்டுறுத்தினர்களைத் தாக்கி நாகரிகமற்ற வகையில் சில தடவைகள் என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. வலைஞன் தனிமடலில் அனுப்பி வைத்த கூறுகள் அனைத்தும் மட்டுறுத்தினர்களின் செயற்பாடுகளின் பக்கச்சார்பு நிலை கருதி முன்வைக்கப்பட்ட விமர்சனங்கள் மட்டுமே. அவற்றுள் எவற்றிலும் எனது அறிவுக்கு எட்ட கள விதியில் குறிப்பிட்டதற்கு அமைய எந்த அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களும் காணப்படவில்லை. எனவே இது தொடர்பாக மேலதிக விளக்கம் நிர்வாகி வலைஞனிடம் கோரப்பட்டுள்ளது. நான் எழுதியவற்றுள் எவை எவை நாகரிகமற்றவை எந்தெந்த வகையில் என்பது அவரிடம் கோரப்பட்டுள்ளது. அதற்கான சரியான பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். வெறுமனவே நாகரிகமற்றது என்பதை தனிநபர்களின் (மட்டுறுத்தினர்களின்) கண்ணோட்டத்தில் வைத்து மட்டுறுத்தினர்கள் செயற்பட முடியாது. களவிதிக்கு அமையத்தான் நாகரிகம் அநாகரிகம் என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். எனவே நாகரிகமற்ற முறையிலும் தாக்கியும் எழுதியதாக குறிப்பிட்ட வலைஞன் தான் எந்தக் களவிதிக்கு அமைய அதை தீர்மானித்தார் அல்லது எப்படித் தீர்மானித்தார் என்பதை எமக்கான பதிலில் குறிப்பிட எதிர்பார்க்கின்றோம்.

களவிதிக்கு அமைய அவர் பட்டியலிட்ட மட்டுறுத்தினர்களின் பக்கச்சார்பான செயற்பாடுகள் குறித்த விமர்சனம் (அங்கு எந்த அநாகரிகமும் இல்லை) இங்கு வைக்கப்படக் கூடாது என்று சுட்டிக்காட்டியதால் அது இங்கு வைக்கப்படவில்லை.

இந்த விடயத்திற்கு நாம் முக்கியமளிப்பது இப்படியான தவறுகள் எவ்வகையிலும் எத்தரப்பில் இருந்து ஏற்படக் கூடிய சூழல் எதிர்காலத்தில் உருவாகக் கூடாது என்பதுடன் மட்டுறுத்தினர்கள் ஆளாளுக்கு எதை நாகரிகம் அநாகரிகம் என்று கருதுகின்றனர் (களவிதிக்கு மேலதிகமாக) இங்கு பகிரங்கப்படுத்த வேண்டும். இன்றேல் விமர்சனங்களை அநாகரிகமானது என்று ஆளாளுக்குப் பிடிக்காததை எல்லாம் தூக்கிக் கொண்டிருக்கலாம். அந்த அடிப்படையில் அநாகரிகம் அல்லது நாகரிகமற்றது என்பதையிட்டு அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

அதுவரை வலைஞனுக்கு எழுவானுக்கும் வழங்கப்பட்ட எச்சரிக்கைகள் மீளப் பெறப்பட மாட்டாது.

வலைஞனின் தொகுப்புகளுக்கும் அவரின் நேரத்தைச் எமது வினவலுக்கு மரியாதை தந்து செலவிட்டதற்கும் நன்றிகள். :wub:

Edited by nedukkalapoovan

நிர்வாகத்தில் உள்ள சிலரின் செயற்பாடு தொடர்பாக விமர்சனம் செய்தால், அது குறித்த இடத்தில் வைக்கவில்லை என அகற்றப்படும். உறவோசை தான் குறித்த இடம் என்று மட்டுக்கட்டி, எழுதினால் அது இலகுவாக" பண்பற்ற வார்த்தை", "தனிநபர் தாக்குதல்", அல்லது குறித்த இடத்தில் வைக்கவில்லை என்று அதற்கும் காரணம் போட்டும் அழிக்கப்படும். குறித்த இடம் எது என்று யாருக்குமே, இது வரை தெரியாத அப்பாவிகள் இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

என்ற இந்த வலைஞனின் வியாக்கியானத்தை வரவேற்கும் அதே வேளை, அல்லது *** சோ என்ற தமிழன எதிரியையோ, அல்லது இந்து ராம் போன்ற சிங்கள அடிவருடிகளை விமர்சிக்கின்றபோது, சாதிரீதியாகவும், மதரீதியாகவும் கேவலம் கெட்ட வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்து நச்சுவிதைகளை விதைக்கின்றபோது, தாங்கள் எங்கையா போனீர்கள்??

சகோதர மதத்தை விமர்சிக்கின்றபோது, கொழும்பில் குண்

டுவெடித்தால் மட்டும் உயிர்தெழும் சர்வதேசம் போல, உயிர்தெழும் உங்களின் நடுநிலமை வெளிப்படையாகத் தெரிகின்றது.

மதங்களை விமர்சிப்பதற்கு நாம் கருத்துக்களத்தில் தடைவிதிக்கவில்லை. குஸ்புவின் மீது சொல்லப்பட்ட கருத்து மதம்சார்ந்து பொதுமைப்படுத்தப்பட்டு, மதத்துவேசக் கருத்தாக முன்வைக்கப்பட்டதால் தான் அந்தக் கருத்து நீக்கப்பட்டது. தவிரவும், கருத்துக்கள நிர்வாகம் சார்பாக கருத்தை நீக்கியதும், மேலுள்ள வசனத்தை எழுதியதும் கருத்துக்கள மட்டுறுத்துனர் எழுவான்.

  • கருத்துக்கள உறவுகள்

கள நிர்வாகத்தால் தனிமடலில் வழங்கப்பட்ட விளக்கங்கள் பல முரண்பாடுகளுக்கு உரியதாக அமையினும் களத்தின் பொதுநலன் கருதி அவற்றைத் தவிர்த்து நாம் சுட்டிக்காட்டிய அவதானிப்புக்களின் படி கள நிர்வாகம் நீதி நேர்மை பக்கச்சார்பின்மை என்ற நிலையில் நின்று களத்தில் மட்டுறுத்தினர்களின் மற்றும் பிற நிர்வாகத்தினர்களின் தனிப்பட்ட கெளரவம் காத்தல் போன்ற நிலைகளுக்கு அப்பால் செயற்பட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி அரசியல், சமூகம் மற்றும் மத ரீதியான விவாதங்களில் சிலர் பிற கருத்தாளர்களின் கருத்துக்கள் தொடர்பில் வேண்டும் என்றே வைக்கும் நளினம் நக்கல் மேதாவித்தனம் பேணல் போன்ற நிலைக்குரிய கருத்துக்களை வைக்க அனுமதிப்பதும் நிர்வாகம் அவற்றைக் கண்டும் உணர்ந்தும் பாராமுகமாக இருப்பதும் எவ்வித பாரபட்சத்துக்கும் இடமளிக்காது இக்களத்தில் இருந்து அகற்றப்படுதல் வேண்டப்பட்டுள்ளது. குறித்த கருத்துக்களை எழுதுபவர்கள் எவ்வளவு பிரத்தியேகமாக, விசேடமாக வேண்டப்பட்டவராயினும் நடவடிக்கைகள் என்பது நீதியாக பக்கச்சார்பின்றி எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

நிர்வாகத்தின் எதிர்கால நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்களை அவதானிக்கும் நோக்கில் இன்றில் இருந்து ஒரு மாத கால அவகாசம் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. நிர்வாகத்தின் நடவடிக்கைகள் மேன்மை பெறுகின்ற போது அவர்களுக்கு வழங்கப்பட்ட எச்சரிக்கைகளும் தானாக நீக்கப்படும். அவர்கள் வலுக்கட்டாயமாக நீக்கின் அது நிர்வாகத்தின் எதேச்சதிகாரத் தன்மையையே எடுத்தியம்பி நிற்கும். அதன் பின்னர் அவர்கள் எம்மிடமும் புரிந்துணர்வை எதிர்பார்க்க முடியாது.

நிர்வாகம் கள உறவுகளின் ஆதங்கங்களைப் புரிந்து கொண்டு அவர்கள் அனைவருக்கும் ஏற்றத்தாழ்வற்ற சம அந்தஸ்து அளித்து நட்புறவுடன் செயற்பட்டு பெறுமதி மிக்க இக்களத்தின் செயற்பாட்டை சீராக்கும் என்று நம்புவோமாக..!

நன்றி வணக்கம்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மதங்களை விமர்சிப்பதற்கு நாம் கருத்துக்களத்தில் தடைவிதிக்கவில்லை. குஸ்புவின் மீது சொல்லப்பட்ட கருத்து மதம்சார்ந்து பொதுமைப்படுத்தப்பட்டு, மதத்துவேசக் கருத்தாக முன்வைக்கப்பட்டதால் தான் அந்தக் கருத்து நீக்கப்பட்டது. தவிரவும், கருத்துக்கள நிர்வாகம் சார்பாக கருத்தை நீக்கியதும், மேலுள்ள வசனத்தை எழுதியதும் கருத்துக்கள மட்டுறுத்துனர் எழுவான்.

மதங்கள் மீதான விமர்சனம் என்பதென்ன.. மதத்துவோசம் என்பதென்ன..??!

மதங்கள் மீதான விமர்சனம் என்ற பெரியரில் மத எதிர்ப்பு இந்து மத இழிவுபடுத்தல் இந்துமதத் துவோசிப்பு சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. எழுவான் நீக்கிய கருத்தை எழுதியது நான். குஸ்பு இஸ்லாமியர் என்பது வெளிப்படை உண்மை. இஸ்லாமியர்கள் (குர்றானில் மற்றைய மதங்களையும் மதிக்கச் சொல்லப்படுகிறது) மற்றைய மதங்களை மதிக்காமல் செயற்படுவது உலக தரிசனம் (உ+ம்: இஸ்லாமிய நாடுகளில் சட்டங்களே உள்ளன.) அப்படி இருக்க எனது கருத்தில் மதத்துவோசம் என்பது என்ன..??! குஸ்பு பற்றிய விமர்சனம் மதத்துவோசம் என்றால் சீதை பற்றிய விமர்சனம் மட்டும் எப்படி மத விமர்சனமாக முடிகிறது..??!

இவ்விவகாரம் தொடர்பில் பல முரண்பாடுகள் உள்ளன. நீங்கள் மீண்டும் மதத்துவோசம் என்பதை உச்சரித்ததன் படியால் எனது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மற்றும்படி எனது கருத்தை மதத்துவேச எண்ணத்தோடு வைக்கவில்லை. நான் நேரடியாகவே எனது இஸ்லாமிய நண்பர்களோடு இதைக் கூறி இருக்கிறேன். அவர்கள் எவரும் மதத்துவேசமாக நோக்கவில்லை..! அவர்களே குஸ்பு இஸ்லாத்துக்கு எதிரானவர் எங்கிறார்கள். அப்படி இருக்க... இங்கு மட்டும் மதத்துவேசமாம்..??! எப்படி எவ்வகையில் ..??! :lol::wub:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மதங்களை விமர்சிப்பதற்கு நாம் கருத்துக்களத்தில் தடைவிதிக்கவில்லை. குஸ்புவின் மீது சொல்லப்பட்ட கருத்து மதம்சார்ந்து பொதுமைப்படுத்தப்பட்டு, மதத்துவேசக் கருத்தாக முன்வைக்கப்பட்டதால் தான் அந்தக் கருத்து நீக்கப்பட்டது. தவிரவும், கருத்துக்கள நிர்வாகம் சார்பாக கருத்தை நீக்கியதும், மேலுள்ள வசனத்தை எழுதியதும் கருத்துக்கள மட்டுறுத்துனர் எழுவான்.

ஆமாம். அதில் உங்களைச் சாடியமைக்கு வருந்துகின்றேன். எழுவானுக்காக உங்களைச் சாடியமைக்கான முழுப்பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கின்றேன்.

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதங்கள் மீதான விமர்சனம் என்பதென்ன.. மதத்துவோசம் என்பதென்ன..??!

மதங்கள் மீதான விமர்சனம் என்ற பெரியரில் மத எதிர்ப்பு இந்து மத இழிவுபடுத்தல் இந்துமதத் துவோசிப்பு சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. எழுவான் நீக்கிய கருத்தை எழுதியது நான். குஸ்பு இஸ்லாமியர் என்பது வெளிப்படை உண்மை. இஸ்லாமியர்கள் (குர்றானில் மற்றைய மதங்களையும் மதிக்கச் சொல்லப்படுகிறது) மற்றைய மதங்களை மதிக்காமல் செயற்படுவது உலக தரிசனம் (உ+ம்: இஸ்லாமிய நாடுகளில் சட்டங்களே உள்ளன.) அப்படி இருக்க எனது கருத்தில் மதத்துவோசம் என்பது என்ன..??! குஸ்பு பற்றிய விமர்சனம் மதத்துவோசம் என்றால் சீதை பற்றிய விமர்சனம் மட்டும் எப்படி மத விமர்சனமாக முடிகிறது..??!

இவ்விவகாரம் தொடர்பில் பல முரண்பாடுகள் உள்ளன. நீங்கள் மீண்டும் மதத்துவோசம் என்பதை உச்சரித்ததன் படியால் எனது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மற்றும்படி எனது கருத்தை மதத்துவேச எண்ணத்தோடு வைக்கவில்லை. நான் நேரடியாகவே எனது இஸ்லாமிய நண்பர்களோடு இதைக் கூறி இருக்கிறேன். அவர்கள் எவரும் மதத்துவேசமாக நோக்கவில்லை..! அவர்களே குஸ்பு இஸ்லாத்துக்கு எதிரானவர் எங்கிறார்கள். அப்படி இருக்க... இங்கு மட்டும் மதத்துவேசமாம்..??! எப்படி எவ்வகையில் ..??!

இந்து மதத்தவராக இருந்து இந்து மதத்தின் குறைபாடுகளை விமர்சிப்பதற்கும் பிறமதத்தை விமர்சிப்பதற்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கின்றது.

இந்து மதத்தவர் எல்லம் இஸ்லாமியருக்கு எதிரானவர் அல்ல அதேபோல் இஸ்லாமிய மதத்தவர் எல்லாம் இந்துக்களுக்கு எதிரானவர் அல்ல

குஷ்பு இஸ்லாமிய சமுதாயத்தின் ஒட்டுமொத்த அடயாளமில்லை. இதை நீங்களே மேல் எழுதிய பந்தியில் குறிப்பிடுகின்றீர்கள்.

அவர்களே குஸ்பு இஸ்லாத்துக்கு எதிரானவர் எங்கிறார்கள்.

நீக்கப்பட்ட உங்கள் கருத்து குஷ்புவின் சம்பவத்தை பயன்படுத்தி குஷ்புவினூடாக ஒட்டுமொத்த இஸ்லாம் சமுதாயத்தினுடைய குணமும் இதுதான் என்பது விமர்சனமாகாது மாறாக அது துவேசம் என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

இந்து மதத்துள் எத்தனையோ வன்முறையாளர்கள் இருக்கின்றார்கள். கலவரங்களில் எத்தனையோ முஸ்லீம்கள் இறந்திருக்கின்றார்கள். அவ்வாறு வன்முறையில் ஈடுபட்ட ஒரு இந்து மத்தவரை வைத்து ஒட்டுமொத்த இந்துக்கள் அதற்குள் சிவ சாதுக்கள் ரமணமகரிஷி சேசாத்திரி வள்ளலார் என்னும் ஆயிரமாயிரம் அன்பை போதித்தவர்கள் எல்லம் அந்த வன்முறையாளன் போல் குணம் கொண்டவர் என்றால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா சொல்லுங்கள்? அது விமர்சனமா அல்லது துவேசமா? இதே கருத்தை இந்து மதத்தில் இருந்து ஒருவர் சொல்வதற்கும் வேறு மத்தில் இருந்து ஒருவர் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கின்றது.

குஷ்பு கலையுலகத்தை சேர்நதவர். இஸ்லாமிய சமூகம் அவரை புறக்கணிக்கின்றது. ஒரு இந்துவை மணம் முடித்துள்ளார். அவர் செருப்பணிந்து இருந்தது விபத்தா அல்லது வேண்டுமென்று நடந்ததா? என்னும் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றது. இவற்றை கருத்தில் கொள்ளாது ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தின் குணம் பற்றி முன்வைக்கப்பட்ட உங்கள் கருத்து பிரச்சனைக்குரியது.

பகவத்கீதை மேல் நல்ல மதிப்பு வைத்துள்ள அப்துல்கலாமை எங்கே வைத்துப்பார்ப்பது?

நீங்கள் மத துவேச எண்ணத்துடன் வைக்கவிலை என்பது உங்களுக்கு தெரிந்து என்ன பயன்? அதை விளங்கி கொள்பவர்கள் இது ஒரு துவேசமான கருத்து யாழ் இணையத்தினூடாக வருகின்றது என்றால் அதில் கவனம் செலுத்த வேண்டிய கடமை இருக்கின்றது. இதன் நிமிர்த்தம் உங்கள் கருத்தை நீக்கவேண்டி எற்படுகின்றது. அதற்குரிய விளக்கம் சுருக்கமாக எழுதவும் வேண்டியுள்ளது.

நன்றி

எழுவான்

கருத்துக்களம் சார்பாக சில பொதுவான கருத்துக்கள்

தனிமடல்கள் தொடர்பான விளக்கம்:

மட்டுறுத்தல்கள் தொடர்பான விளக்கம் கோரல்கள், கருத்துக்களம் தொடர்பான உதவிகோரல்கள் ஒவ்வொருநாளும் பல உறுப்பினர்களிடம் இருந்து தனிமடலூடாக வரும். அவற்றுக்கு முடிந்தளவு விளக்கஙகள் அளிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சில சந்தர்ப்பங்களில் விளக்கம் தந்தபின் விதண்டாவாதமாக தொடரும் தனிமடல்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்திருக்கிறோம். சில சந்தர்ப்பங்களில் மட்டுறுத்துனர்களைத் திட்டி பண்பற்ற முறையில் எழுதப்பட்டு வந்த தனிமடல்களுக்கும் பதிலளிப்பதைத் தவிர்த்திருக்கிறோம். சில சந்தர்ப்பங்களில், ஏற்கனவே விளக்கம் கூறப்பட்ட பின்பும், மீண்டும் மீண்டும் எழுதப்பட்ட தனிமடல்களுக்கும் பதிலளிப்பதைத் தவிர்த்திருக்கிறோம்.

மட்டுறுத்துனர்களின் செயற்பாடுகள்:

கருத்துக்கள விதிமுறைகளுக்கு அமைவாகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு உறுப்பினரும் தங்கள் நிலையில் இருந்து பக்கசார்பு என்று சொல்லலாம். இது வழமையானது. கருத்துக்கள நிர்வாகம் விதிமுறைகளின்படியே செயற்பட முடியும். கருத்துக்கள நிர்வாகம் அநாகரிகமான அணுகுமுறையை கடைப்பிடித்ததில்லை. கருத்துக்கள நிர்வாகம் பண்பானமுறையிலும், பொறுமையுடனும் தான் ஒவ்வொரு உறுப்பினர்களையும் அணுகுகிறது. சில சந்தர்ப்பங்களில் கருத்துக்கள உறுப்பினர்கள் கோபத்துடன் உணர்ச்சிவசப்பட்டு நிர்வாகத்தை பண்பற்ற முறையில் விமர்சித்த சந்தர்ப்பங்களிலும், மட்டுறுத்துனர்கள் பொறுமையுடனும் நேர்மையுடனுமே நடந்துகொண்டிருக்கிறார்கள். எனவே, கருத்துக்கள உறுப்பினர்களிடம் இருந்தும் அதே பண்பை எதிர்பார்க்கிறோம்.

மட்டுறுத்துனர்கள் பற்றிய விமர்சனங்கள்

மட்டுறுத்துனர்கள் பற்றிய விமர்சனங்களை நீங்கள் தாராளமாக முன்வைக்கலாம். கருத்துக்கள நிர்வாகம் தொடர்பாக விமர்சனங்களை முன்வைப்பதற்கு யாழ் கருத்துக்களத்தில் தடையில்லை. அந்தக் கருத்துக்கள் பண்பான முறையில் அமைந்திருக்கவேண்டும் என்பதே நிர்வாகத்தின் எதிர்பார்ப்பு. பொதுவாக, கருத்துக்கள மட்டுறுத்துனர்களை சீண்டும் விதமாகவும், தாக்கும் நோக்குடனும், கேலிசெய்தும் மட்டந்தட்டியும் எழுதப்படும் கருத்துக்கள் தொடர்ந்தும் கருத்துக்களத்தில் வந்துகொண்டுள்ளன. சில நேரங்களில் தணிக்கை செய்தும், சிலநேரங்களில் கருத்துக்களை நீக்கியும் நடவடிக்கை எடுத்துள்ளோம். சில நேரங்களில் நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடித்துள்ளோம். தம்முடைய கருத்துக்கள் நீக்கப்படும்போது, அக்கருத்தை நீக்கும் மட்டுறுத்துனர் தொடர்பாக வெறுப்பை அநாகரிகமான முறையில் வெளிக்காட்டுவது என்பது அனுமதிக்கப்படமுடியாதது. பக்கச்சார்பானதோ, ஓரவஞ்சகமானதாக இருந்தால் யாழ் உறவோசை பகுதியில் அதனை நீங்கள் பண்பான முறையில் எழுதமுடியும். அல்லது பொறுப்பாளரிடம் தனிமடலூடாக அறிவிக்க முடியும். இது கருத்துக்களத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊகங்களின் அடிப்படையிலான ஆதாரமற்ற தகவல்கள்:

கருத்துக்கள நிர்வாகத்துக்குள் நடக்கும் விடயங்களை கருத்துக்கள மட்டுறுத்துனர்கள் வெளியில் சொல்லக்கூடாது. நிச்சயமாக இதுவரை இருந்த கருத்துக்கள மட்டுறுத்துனர்கள் நிர்வாகத்துக்குள் விவாதிக்கப்படும் நிர்வாகம் தொடர்பான விடயங்களை வெளியில் சொல்லும் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டிருக்கமாட்டார்கள் என்றே நம்புகிறோம். எனவே, கருத்துக்கள நிர்வாகத்துள் விவாதித்த விடயமாக ஆதாரமற்ற அவசியமற்ற பொய்க்குற்றச்சாட்டுக்களை ஊகங்களின் அடிப்படையில் முன்வைப்பதை தவிர்த்துக்கொள்ளவது நல்லது. இவை அநாகரிகமான செயற்பாடாகவே கருதப்படமுடியும்.

நக்கல், நளினம்

கருத்துக்களத்தில் கருத்து எழுதும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், தமது எதிர்நிலைக் கருத்துகள் தொடர்பாக நக்கலாகவும், நளினமாகவும் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். இவை கருத்துக்கள விதிமுறைகளை மீறாத போது, சக உறுப்பினர்கள் மீதான தாக்குதலாக இல்லாதபோது அனுமதிக்கப்படுகின்றன. கருத்துக்கள விதிமுறைகளை மீறும் விதமாக அமைந்திருப்பின் அவை தணிக்கைக்குள்ளாகின்றன. ஒரு கருத்தாடலில் எதிர்நிலைக் கருத்து தொடர்பாக நக்கலும், நளினமுமாக எழுதுவது சரியா பிழையா என்பதை கருத்துக்கள உறவுகளே தீர்மானித்துக் கொள்ளுங்கள். ஆனால், சக கருத்துக்கள உறவுகளை அல்லது மட்டுறுத்துனர்களை நக்கலும் நளினமுமாக மட்டந்தட்டி கேலிபண்ணி எழுதுவது அநாகரிகமான செயல். இவையே தணிக்கைக்கு உள்ளாகின்றன.

சீண்டல், தாக்கி எழுதுதல்

கருத்துக்கள உறுப்பினர்களை சீண்டியோ அல்லது தாக்கியோ எழுதினால் அக்கருத்துக்கள் தணிக்கைக்குள்ளாகின்றன. அதேபோலத்தான் கருத்துக்கள மட்டுறுத்துனர்களையும் சீண்டியோ தாக்கியோ எழுதுகிறபோது அவை தணிக்கைக்கு உள்ளாகின்றன. உதாரணமாக வால்பிடிக்கிறார், விசுவாசக் கருணை காட்டுகிறார், இவரின் இயல்பு இதுதான், நிர்வாகத்தில் ஒட்டிக் கொண்டிராமல் விலகலாம் போன்ற வார்த்தைப் பிரயோகங்கள், சீண்டல்களாகவும் மட்டுறுத்துனர்களின் செயற்பாடுகளை கொச்சைப்படுத்தும் விதமாகவும் அமைந்திருப்பது பண்பற்ற கருத்தாடலின் வெளிப்பாடாகவே பார்க்கமுடியும். பெரியார் பற்றிய தலைப்பில் கருத்துக்கள விதிமுறைகளுக்கான கருத்து நீக்கப்பட்டால், அக் கருத்துக்குரியவர் மட்டுறுத்துனரை திராவிடக் கும்பல் என்பதுவும், இந்துமதம் பற்றிய தலைப்பொன்றில் ஒரு கருத்து நீக்கப்பட்டால் அக்கருத்துக்குரியவர் மட்டுறுத்துனரை மதவெறியர் என்பதுவும், பண்பான சொற்பிரயோகங்களாக நோக்கப்பட முடியாது.

தரக்குறைவான சொற்களைப் பயன்படுத்தி எழுதுவதுதான் நாகரிகமற்ற கருத்து என்பதில்லை. கருத்துக்கள நிர்வாகம் பற்றிய விமர்சனங்கள் வருகிறபோது கருத்துக்கள நிர்வாகம் அவற்றை உள்வாங்கிக் கொள்கிறது. அதேநேரம், நிர்வாகத்தில் உள்ளவர்களை சீண்டி, தாக்கி, மட்டம்தட்டி, எள்ளல் தொனியில் எழுதுகிற கருத்துக்களையும் நிர்வாகம் நாகரிகமற்ற கருத்தாகவே பார்க்கிறது.

அதனால் தொடர்ந்தும் இதுபோன்ற நிர்வாகம் தொடர்பான கருத்துக்கள் இடம் பெறாமல், ஆக்கபூர்வமான விமர்சனங்கள் இடம்பெறவேண்டும் என்பதை கருத்துக்கள நிர்வாகம் எதிர்பார்ப்பதால், இப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது பின்வரும் கருத்துக்கள விதிமுறைகள் கவனத்தில் கொள்ளப்பட்டிருக்கின்றன:

அ) கருத்துகள்

1. கருத்து/விமர்சனம்

1. கருத்து/விமர்சனம் பண்பான முறையிலும், கண்ணியமான முறையிலும் வைக்கப்படல் வேண்டும்.

3. ஊகங்களின் அடிப்படையிலான விமர்சனங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.

6. சக கருத்துகள உறுப்பினரை சீண்டும் வகையில் கருத்துக்கள் அமைதல் ஆகாது.

7. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தாக்கி கருத்து/விமர்சனம் வைக்கப்படல் ஆகாது.

பக்கச்சார்பு

பக்கச்சார்பின்மை என்பது ஒவ்வொருவரும் தமது தமது நிலைப்பாட்டிலிருந்து சொல்வதுதான். கருத்துக்கள உறுப்பினர்களின் செயற்பாட்டின் பிரதிபலிப்பாகத்தான் அவர்களின் கருத்துக்கள் மீதான தணிக்கை செய்வதோ, அவர்களுக்கு எச்சரிக்கை வழங்குவதோ நிகழ்கிறது. நிர்வாகம் பண்பான முறையில் தான் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கிறது. பக்கச்சார்பு இன்றி யாழ் இணையத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கும், கருத்துக்கள விதிமுறைகளுக்கும் அமைவாகவே செயற்படுகிறது. இவ் விடயத்தில் தனி ஒரு மட்டுறுத்துனரை விமர்சிப்பதால் எந்தப் பயனும் இல்லை.

இறுதியாக

கருத்துக்களத்தில் கருத்தாடும் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும். அதனால் ஏற்படும் கருத்து முரண்பாடுகள், பல சந்தர்ப்பங்களில் கருத்தாளர்களிடையேயான முரண்பாடுகளாகவே மாறுகின்றன. ஒரு உறுப்பினர் ஒரு சந்தர்ப்பத்தில் சொல்கிற ஒரு கருத்தை வைத்து, அவரின் ஏனைய விடயங்கள் தொடர்பான கருத்துக்களும் அப்படித்தான் இருக்கும் என்கிற தவறான அபிப்பிராயத்தை உருவாக்கி அதனடிப்படையில் அவருடன் கருத்தாடுவது நிகழ்கின்றது. இதுபோன்ற தப்பபிப்பிராய உருவாக்கங்களும், தவறான அணுகுமுறைகளும், தான் முரண்பாடுகளை மேலும் மேலும் சிக்கலுக்குள்ளாக்குகின்றன.

இந்நிலையில் - கருத்துக்கள உறவுகளுக்கிடையிலான சரியான அணுகுமுறையும், புரிந்துணர்வும் அற்ற சூழ்நிலையில் - கருத்துக்கள நிர்வாகம் பக்கசார்பாக நடந்துகொள்கிறது, சரியான முறையில் செயற்படவில்லை என்று நிர்வாகத்தின் மீது குறைசொல்வது இயல்பானது. அதை நாம் புரிந்துகொள்கிறோம். உங்களின் மனோநிலையை விளங்கிக்கொள்கிறோம். ஆனால், கருத்தாடற் பண்பை சரியான முறையில் பேண கருத்துக்கள உறவுகள் ஒவ்வொருவரும் முற்பட்டால், சிக்கல்கள் பல எழாது என்று கருதுகிறோம். ஒவ்வொரு உறுப்பினரும் நேர்மையுடனும், பண்புடனும், சக கருத்துக்கள உறவுகளின் உணர்வுகளை மதித்தும் செயற்படின் தணிக்கைகளுக்கான தேவை எழாது. இல்லை நான் கணினிக்கு முன்னால் இருந்து, மற்றவர் பற்றிய எதுவித கவலையும் அக்கறையும் இன்றி, எனது மனதில் தோன்றுவதை எனது போக்கில் தான் எழுதுவேன் என்றால் - அது கருத்துக்கள விதிமுறைகளுக்கு முரணாக இருந்தால் - மட்டுறுத்துனர்களின் நடவடிக்கைகளுக்கான தேவை எழுகிறது.

பல இடங்களில் பிரச்சனை சொல்லப்படுகிற கருத்தில் அல்ல. அக் கருத்து சொல்லப்படுகிற முறையில் தான் உள்ளது. அவற்றை திருத்திக் கொள்வது, தணிக்கைகள் எச்சரிக்கைகள் இடம்பெறாமல் தவிர்க்க வழிகோலும். எனவே, கருத்துக்கள உறவுகள் உங்கள் கருத்தாடற் பாணியை மீளாய்வு செய்து, அது எதிர்க் கருத்தாளரிடம் எவ்வகையில் சென்றடையும், அவரிடம் எவ்வகையான உணர்வுகளைத் தோற்றுவிக்கும் போன்றவற்றை சிந்தித்து, கருத்தாடற் பாணியில் மாற்றங்களைக் கொணர்தல் நல்லது.

நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதத்தவராக இருந்து இந்து மதத்தின் குறைபாடுகளை விமர்சிப்பதற்கும் பிறமதத்தை விமர்சிப்பதற்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கின்றது.

இதே போக்கினை இந்துக்கள் தொடர்பாக விமர்சனம் செய்பவர்கள் எல்லோரும் இந்துக்களா என நீங்கள் ஏன் ஆராய்வு செய்வதில்லை. உங்களுக்குத் தெரியும், இன்றைக்குப் பணம் காட்டி மதமாற்றத்தைச் செய்கின்ற வியாபாரமதங்கள் நிறையவே உண்டு. அவர்கள் முகமூடி அணிந்து வந்து, இந்துமதத்தைச் சாடி, மக்களுக்கு அது குறித்து வெறுப்பை ஏற்படுத்திவிட்டு தங்களுடைய வாசல்களை ஏன் திறந்து வைத்திருக்கமாட்டீர்கள் என நினைக்கவில்லை.

இன்று கூட, ஒருவர் இயேசுநாதர் செய்த மந்திரங்கள் உண்மைபோலவும், இராமயணத்தில் வந்தால் அது பொய்போலவும் எழதிக் கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. இப்படி எத்தனை சூழ்ச்சிகளை இக்களத்தில் செய்யமுடியாது என நினைக்கின்றீர்கள்.

அதைவிட நாளைக்கு நான் இசுலாமியப்பேரோடு வந்தோ, கிறிஸ்தவப் பெயரோடு வந்தோ, அம்மதங்களைச் சாடினால் அதை ஏற்றுக் கொள்ளுவீர்களா?

நீக்கப்பட்ட உங்கள் கருத்து குஷ்புவின் சம்பவத்தை பயன்படுத்தி குஷ்புவினூடாக ஒட்டுமொத்த இஸ்லாம் சமுதாயத்தினுடைய குணமும் இதுதான் என்பது விமர்சனமாகாது மாறாக அது துவேசம் என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

இந்து மதத்துள் எத்தனையோ வன்முறையாளர்கள் இருக்கின்றார்கள். கலவரங்களில் எத்தனையோ முஸ்லீம்கள் இறந்திருக்கின்றார்கள். அவ்வாறு வன்முறையில் ஈடுபட்ட ஒரு இந்து மத்தவரை வைத்து ஒட்டுமொத்த இந்துக்கள் அதற்குள் சிவ சாதுக்கள் ரமணமகரிஷி சேசாத்திரி வள்ளலார் என்னும் ஆயிரமாயிரம் அன்பை போதித்தவர்கள் எல்லம் அந்த வன்முறையாளன் போல் குணம் கொண்டவர் என்றால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா சொல்லுங்கள்? அது விமர்சனமா அல்லது துவேசமா? இதே கருத்தை இந்து மதத்தில் இருந்து ஒருவர் சொல்வதற்கும் வேறு மத்தில் இருந்து ஒருவர் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கின்றது.

இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் கலவரங்களுக்கு மூலகாரணமாக முஸ்லீம் தீவிரவாதிகள் தான் இருந்திருக்கின்றார்கள். சாதி மதம் இன்றி பலரும் விலை போய் இருக்கின்றனர். நக்மா, சஞ்சாய் தத் போன்றவர்கள் இதற்கு உதாரணம். எனவே நடந்த கலவரங்கள் மதக்கலவரமா, பாகிஸ்தான் -இந்தியப் பிரச்சனையின் வெளிப்பாடா என்பது ஆய்விற்குரியது. ... அதிருக்கட்டும்.

இத்தலைப்பினைத் தொடங்கினபோது கேட்ட கேள்வியை இப்பந்தியில் உங்களின் பதிலை வைத்துக் கேட்கின்றேன். பத்தினி குஸ்புவைச் சாடுகின்றபோது மதம் பற்றிக் கதைக்கக் கூடாது எனச் சொல்லுகின்ற தாங்கள், ஏன் சோ, போன்றவர்களைக் கதைக்கின்றபோது மதத்தை இழுத்துக் கதைத்தவர்களைக் கண்டு கொள்ளவில்லை??அங்கே உங்களுடைய வாதம் என்னாகிவிட்டது???

அல்லது இந்து மதம் **** வீட்டு வெத்திலைப்பெட்டி. யாரும் கிள்ளிப் போடலாம் என்று நினைத்துக் கொள்ளுகின்றீர்களோ என்னமோ?

குஷ்பு கலையுலகத்தை சேர்நதவர். இஸ்லாமிய சமூகம் அவரை புறக்கணிக்கின்றது. ஒரு இந்துவை மணம் முடித்துள்ளார். அவர் செருப்பணிந்து இருந்தது விபத்தா அல்லது வேண்டுமென்று நடந்ததா? என்னும் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றது. இவற்றை கருத்தில் கொள்ளாது ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தின் குணம் பற்றி முன்வைக்கப்பட்ட உங்கள் கருத்து பிரச்சனைக்குரியது.

பகவத்கீதை மேல் நல்ல மதிப்பு வைத்துள்ள அப்துல்கலாமை எங்கே வைத்துப்பார்ப்பது?

நீங்கள் மத துவேச எண்ணத்துடன் வைக்கவிலை என்பது உங்களுக்கு தெரிந்து என்ன பயன்? அதை விளங்கி கொள்பவர்கள் இது ஒரு துவேசமான கருத்து யாழ் இணையத்தினூடாக வருகின்றது என்றால் அதில் கவனம் செலுத்த வேண்டிய கடமை இருக்கின்றது. இதன் நிமிர்த்தம் உங்கள் கருத்தை நீக்கவேண்டி எற்படுகின்றது. அதற்குரிய விளக்கம் சுருக்கமாக எழுதவும் வேண்டியுள்ளது.

நன்றி

எழுவான்

உங்களின் கடமையுணர்வு பூரிக்க வைத்தாலும், இந்து மதங்கள் பற்றிய தலைப்புக்களில் புஸ்வாணமாகிப் போகின்றது.

எழுவான்

என்

தூயவன்....

இது பொழுது போக்கு தளம் எ்ண்று பலர் உறுதி படுத்தி இருக்கிறார்கள்.... பொழுது போக்கவும் மற்றவர்களை சொறிய ( காராணமே இல்லாமல்) வருப்பவர்களுக்கு எல்லாம் எதையாவது புரிய வைக்க வேண்டும் எண்று நினைத்தால், உங்களது எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கோ.....!

அதுக்காக இது வரை செலவளிக்கும் நேரத்தில், வாரத்துக்கு ஒரு இரண்டு மணிநேரம் வேலைக்கு போய் அதிலே ஏழு டொலரை தமிழீழ தேசிய பாதுக்காப்புக்கு அனுப்பி வைப்பீர்கள் எண்டால் பிரியோசனமாக இருக்கும்.....!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அடடா திரும்ப தொடங்கிட்டாங்களா ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் நெடுக்கும் தூயவனும் ஒரு அணிக்கு மாறிட்டினம். :wub::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருசிலருக்கு ஆவி அடித்துவிட்டது :wub::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மதத்தவராக இருந்து இந்து மதத்தின் குறைபாடுகளை விமர்சிப்பதற்கும் பிறமதத்தை விமர்சிப்பதற்கும் இடையில் நிறைய வித்தியாசம் இருக்கின்றது.

இந்து மதத்தவர் எல்லம் இஸ்லாமியருக்கு எதிரானவர் அல்ல அதேபோல் இஸ்லாமிய மதத்தவர் எல்லாம் இந்துக்களுக்கு எதிரானவர் அல்ல குஷ்பு இஸ்லாமிய சமுதாயத்தின் ஒட்டுமொத்த அடயாளமில்லை. இதை நீங்களே மேல் எழுதிய பந்தியில் குறிப்பிடுகின்றீர்கள்.

நீக்கப்பட்ட உங்கள் கருத்து குஷ்புவின் சம்பவத்தை பயன்படுத்தி குஷ்புவினூடாக ஒட்டுமொத்த இஸ்லாம் சமுதாயத்தினுடைய குணமும் இதுதான் என்பது விமர்சனமாகாது மாறாக அது துவேசம் என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.

இந்து மதத்துள் எத்தனையோ வன்முறையாளர்கள் இருக்கின்றார்கள். கலவரங்களில் எத்தனையோ முஸ்லீம்கள் இறந்திருக்கின்றார்கள். அவ்வாறு வன்முறையில் ஈடுபட்ட ஒரு இந்து மத்தவரை வைத்து ஒட்டுமொத்த இந்துக்கள் அதற்குள் சிவ சாதுக்கள் ரமணமகரிஷி சேசாத்திரி வள்ளலார் என்னும் ஆயிரமாயிரம் அன்பை போதித்தவர்கள் எல்லம் அந்த வன்முறையாளன் போல் குணம் கொண்டவர் என்றால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா சொல்லுங்கள்? அது விமர்சனமா அல்லது துவேசமா? இதே கருத்தை இந்து மதத்தில் இருந்து ஒருவர் சொல்வதற்கும் வேறு மத்தில் இருந்து ஒருவர் சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கின்றது.

குஷ்பு கலையுலகத்தை சேர்நதவர். இஸ்லாமிய சமூகம் அவரை புறக்கணிக்கின்றது. ஒரு இந்துவை மணம் முடித்துள்ளார். அவர் செருப்பணிந்து இருந்தது விபத்தா அல்லது வேண்டுமென்று நடந்ததா? என்னும் எத்தனையோ விடயங்கள் இருக்கின்றது. இவற்றை கருத்தில் கொள்ளாது ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தின் குணம் பற்றி முன்வைக்கப்பட்ட உங்கள் கருத்து பிரச்சனைக்குரியது.

பகவத்கீதை மேல் நல்ல மதிப்பு வைத்துள்ள அப்துல்கலாமை எங்கே வைத்துப்பார்ப்பது?

நீங்கள் மத துவேச எண்ணத்துடன் வைக்கவிலை என்பது உங்களுக்கு தெரிந்து என்ன பயன்? அதை விளங்கி கொள்பவர்கள் இது ஒரு துவேசமான கருத்து யாழ் இணையத்தினூடாக வருகின்றது என்றால் அதில் கவனம் செலுத்த வேண்டிய கடமை இருக்கின்றது. இதன் நிமிர்த்தம் உங்கள் கருத்தை நீக்கவேண்டி எற்படுகின்றது. அதற்குரிய விளக்கம் சுருக்கமாக எழுதவும் வேண்டியுள்ளது.

நன்றி

எழுவான்

நான் எழுதிய கருத்தின் கீழ் குஸ்பு இஸ்லாமியப் பெண் அவங்க குணம் அப்படித்தான் என்று எழுதி இருந்தேன். இதில் மதத்துவோசம் என்பது எங்கிருந்து எழுகிறது..???!

இந்துக்களால் மட்டும் தான் முஸ்லீம்கள் தாக்கப்படனரா. ஏன் முஸ்லீம்களால் இந்துக்கள் தாக்கவே படல்லையா..???!

நான் எழுதியதை மதத்துவேசம் எங்கிறீர்களே.. சிங்கள பெளத்த பேரினவாதம் என்று பெளத்த மதத்தை துவேசிப்பத்தை எப்படி அங்கீகரிக்கிறீர்கள். அண்மையில் மாவீரர் தின உரையில் கூட தலைவர் பெளத்த மதக் கொள்கைகளைப் பாராட்டிப் பேசி இருந்தார். பெளத்த பேரினவாதம் என்பது துவேசம் இல்லையா..??! அப்ப அவற்றை ஏன் விட்டு வைக்கிறீர்கள்..??!

இன்னோர் இடத்தில் இஸ்லாமிய மத அடிப்படைவாதத்துக்கும் சிங்கள பெளத்த துறவிகளுக்கும் (ஒரு சில சிங்களத் துறவிகளின் செயற்பாட்டுக்காக) இடையில் துவேசத்தனமான பிரச்சாரத்தை இணைய முகப்பில் இருந்து முன்னெடுப்பதாக ஒருவர் கூறின் நீங்கள் அவ்வாக்கத்தை களைய முடியுமா..??!

நடைமுறை உலகில் இஸ்லாமியர்கள் இந்துக் கோவிலுக்கோ தேவாயலத்துக்கோ போவதில்லை. ஆனால் இந்துக்கள் பள்ளிக்குப் போயிருப்பார்கள் தேவாலயத்துக்குப் போயிருப்பார்கள் பன்சலைக்கு (விகாரைக்குப்) போயிருப்பார்கள். அந்தளவு நெகிழ்வுப் போக்கு உள்ள இந்துக்களிடம் போய்.. வன்முறையாளர்களாக இனங்காட்டுவது தவறு. நான் கூட பிறப்பால் இந்து அல்ல. ஆனால் எனக்கு கல்வியூட்டியது இந்து. நான் அப்போ இந்து மதத்தைப் பற்றி கதைச்சா துவேசமா..???! எல்லா முஸ்லீமும் தான் கோவிலுக்குப் போகவில்லை என்பதற்காக இந்துத் துவேசியாக இருப்பதில்லை. அதேபோல் பள்ளிக்குப் போகாத இந்துவும் துவேசியகாக இருப்பதில்லை. விமர்சனத்தை விமர்சனக் கண்ணோட்டத்தில் காணுங்கள். ஒரு இந்து எழுதிறான் என்ற கண்ணோட்டத்தில் நீங்கள் பார்த்ததால் தான் அது துவேசமாகத் தெரிந்தது. நான் பிறப்பால் இந்து அல்லாதவன். உங்கள் துவேசிய நோக்கம் தவறானது என்பதை இப்பவாவது புரிந்து கொள்கிறீர்களா..??! :lol::lol::wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் படித்த தமிழை வைத்து எவ்வளவு தூரம் நிர்வாகம் வைக்கும் நிபந்தனைகளை வளைக்க முடியுமோ, அவ்வளவு தூரம் வளைத்து சொல்ல வேண்டியதைச் சொல்லப் பார்த்தாலும் (வேறென்ன நக்கல், நளினம்தான்) கத்தி கொண்டு வெட்டுகிறார்கள்.. இதுக்கெல்லாம் விளக்கம் கேட்டுக்கொண்டிருக்கத் தேவையில்லை என்றே நிர்வாகத்திடம் மல்லுக் கட்டுவதில்லை.. இயலுமானவரை மட்டுறத்தினர்கள் நித்திரைக்குக் போகும் நேரம் பார்த்துக் கருத்தை (?) வைப்பதுதான் சாலச் சிறந்தது. :icon_mrgreen:

நாம் சுதந்திரமான சிந்தனையாளர்கள் (free thinkers).. நிபந்தனைகள் எல்லாவற்றையும் படித்து, மற்றவர்களுக்குக் குத்துமோ, குடையுமோ என்றெல்லாம் யோசித்து சொற்களைத் தேடி, வரிகளைச் செதுக்குவதில்லை.. மனதில் உள்ளது, வாயில் வரும் (அதாவது விசைப்பலகையூடாக கணணித் திரையில் விழும்)..

யாழ்ப்பாணத்தான்னு கல்லெறிந்தாங்க.. சாதி சாதீயம் என்று ஒரு குறிப்பிட்ட பிரிவினர்மீது ஏதோவெல்லாம் எறிந்தாங்க.. இனியாவது அதுகளிலும் மற்றவர் மனதை புண்படுத்தாத விதமாக கருத்துக்கள் இருக்கத்தக்கதாக அவதானித்துக் கொள்ளுங்கள் மட்டுறுத்துனர்களே!

ஆ.. இன்னொன்று.. சிலர் ஆணாதிக்கம்னு மொத்த ஆண்கள் மேலேயே கண்டபடி விமர்சனம் என்ற போர்வையில் ஏதேதோ எறியுறாங்க.. அதுகளையும் இனியாவது கவனிச்சுக் கொள்ளுங்கோ!!

:icon_mrgreen::icon_idea:

தேசத்துரோகிகளை ஒருமையில் எழுதவோ திட்டவோ ஏன் அனுமதி இல்லை.

வாற கோபத்துக்கு களத்தில நாகரிகம் கருதி ஓரளவு நாகரீகமாக திட்டினால்

அதையும் எடுக்க சொல்லுறீங்கள்.. ஏன் இப்படி? :(

ஒருவேளை களத்தை பார்வையிடும் எட்டப்பர் கூட்டம் மனம் வாடிப்

போய்விடுவினம் என்றா? :(

தயவு செய்து இதை கருத்தில எடுத்து துரோகிகளை வஞ்சனை இல்லாமல் திட்ட

அனுமதிக்க வேணும்.. அல்லது உங்களுக்கு உடும்புகளுக்கு வக்காலத்து வாங்கும் மட்டுஸ்

என்ற பட்டம் கிடைக்கும். :(

அடடா திரும்ப தொடங்கிட்டாங்களா ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் நெடுக்கும் தூயவனும் ஒரு அணிக்கு மாறிட்டினம். :(:lol::lol:

இதில கிருபன் அண்ணாவையும் சேருங்கய்யா :icon_idea:

ஆ.. இன்னொன்று.. சிலர் ஆணாதிக்கம்னு மொத்த ஆண்கள் மேலேயே கண்டபடி விமர்சனம் என்ற போர்வையில் ஏதேதோ எறியுறாங்க.. அதுகளையும் இனியாவது கவனிச்சுக் கொள்ளுங்கோ!!

:D :D

சோழி அண்ணா...இதைத்தான் ஆணாதிக்கம் என்கிறது :icon_mrgreen:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்....

இது பொழுது போக்கு தளம் எ்ண்று பலர் உறுதி படுத்தி இருக்கிறார்கள்.... பொழுது போக்கவும் மற்றவர்களை சொறிய ( காராணமே இல்லாமல்) வருப்பவர்களுக்கு எல்லாம் எதையாவது புரிய வைக்க வேண்டும் எண்று நினைத்தால், உங்களது எண்ணத்தை மாற்றி கொள்ளுங்கோ.....!

அதுக்காக இது வரை செலவளிக்கும் நேரத்தில், வாரத்துக்கு ஒரு இரண்டு மணிநேரம் வேலைக்கு போய் அதிலே ஏழு டொலரை தமிழீழ தேசிய பாதுக்காப்புக்கு அனுப்பி வைப்பீர்கள் எண்டால் பிரியோசனமாக இருக்கும்.....!

நிச்சயமாக

முன்பு போல விவாதங்களில் ஈடுபாடுகாட்டாமைக்கு அதுவும் ஒரு காரணம். இத்தருணத்தில் ஒன்றைப் பெருமையோடு சொல்லிக் கொள்ளவேண்டும். யாழ்களத்தில் உள்ள கனடா நண்பர்கள், தாங்களுக்குக் கிடைக்கின்ற நேரத்தை தமிழர் சேவைகளுக்காகப் பயன்படுத்துவதைப் பார்க்கின்றபோது பூரிப்பாக இருக்கின்றது.

அடடா திரும்ப தொடங்கிட்டாங்களா ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் நெடுக்கும் தூயவனும் ஒரு அணிக்கு மாறிட்டினம்.

சாத்து

நமக்குக் கட்சி என்று ஏதுமில்லை. இன்றைக்கு உங்களோடு ஆதரவாக எழுதும் அதே வேளை நாளைக்கு சாமத்தியவீடு தொடர்பாக எதிராகத் தான் முடிவெடுப்பேன்.(எச்சரிக்கை :icon_mrgreen::icon_idea: ) மதம் தொடர்பாக எதிராக சிலரோடு நடந்தாலும், தாயகம் தொடர்பாக ஆதரவாகவே இருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அடடா திரும்ப தொடங்கிட்டாங்களா ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் நெடுக்கும் தூயவனும் ஒரு அணிக்கு மாறிட்டினம். :icon_mrgreen::icon_idea::(

இந்த அணி சேருறது சேர்க்கிறது எல்லாம் நமக்குக் கிடையாது. நாம நம்ம வழியில போய்க்கிட்டிருப்பம். ஒரு விடயத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பாதிப்புக்கள் கருத்துக்கள் பொதுவானது எனும் போது வரும் கருத்துக்களும் விமர்சனங்களும் பொதுவாகின்றன. இதைக் கவனித்துச் செயற்பட வேண்டியவர்கள் நிர்வாகத்தில் உள்ளவர்களே. அவர்கள் தங்களில் ஒருபோதும் தவறே இல்லை என்பது போன்ற நிலைப்பாட்டில் இருப்பதே ஆபத்தானது. அவர்கள் விடும் சிறிய தவறுகள் கூட கருத்தாளர்களுக்கு தெளிவாகத் தெரியும். எமது தவறுகள் அவர்களுக்குத் தெரியும். எம்மை நோக்கி அவர்கள் ஒரு தவறைச் சுட்டிக்காட்டுகின்ற போது நாமும் அவர்களிடமிருந்து வெளிப்படும் தவறுகளை சுட்டிக்காட்டி பரிகாரம் தேடுங்கள் அல்லது உங்கள் நிலைகளை மீளாய்வு செய்யுங்கள் எனும் போது அதை நிர்வாகம் பரிசீலிப்பதை விடுத்து.. நாங்க சரியாத்தான் இருக்கிறம் நீங்கள் சரியா இருக்கிறீங்களோ என்று பாருங்கள் என்று சொல்லுறது தான் இங்கு பிரச்சனைகள் தொடர வழிவகுக்குது.

களத்தில் கள உறவுகள் நிர்வாகத்துடன் பிரச்சனைப்படுவது இது முதற்தடவையும் அல்ல. பல கள உறவுகள் பல நிலைகளில் நிர்வாகத்தின் சில செயற்பாடுகளில் தாம் இனங்கண்ட தவறுகளைச் சொல்ல முனைந்த போதும் நிர்வாகம் பற்றிய கருத்துக்கள் என்று அவற்றை தூக்கிப் போறதும், தொடர்ந்து அதே தவறுகளை விடுறதும்.. அப்புறம் நிர்வாகம் நாகரிகமாத்தான் இருக்குது என்பதும்.. விசனத்துக்கு வழிவகுக்குதே தவிர புரிந்துணர்வுடன் செயற்பட தீர்வுகள் பெற வழிசெய்யல்ல..!

பல இடங்களில் சில விடயங்கள் மோசமாக விமர்சிக்கப்பட அனுமதிக்கப்படுகிறது. நக்கல் நளினம் சிலருக்கு என்று காரணங்களுக்கு அப்பால் அனுமதிக்கப்படுகிறது. அதுவே பிற உறவுகளும் பதிலுக்கு நக்கல் நளினமாக எழுதத் தூண்டுகிறது. ஆனால் குற்றச்சாட்டை முன் வைக்கும் போது நீங்களும் எழுதுகிறீர்கள் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளுறது தான் நிர்வாகத்தின் நிலை. அதிலும் வேடிக்கை என்னவென்றால் மத நம்பிக்கை இல்லாதவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தை பழிப்பது துவேசம் இல்லையாம்.. ஆனால் வேறோர் மதத்தினன் இன்னோர் மதத்தை விமர்சிப்பது துவேசமாம்..??! என்ன வரைவிலக்கணங்கள்..??!

நிர்வாகம் கள விதிகளை இன்னும் தெளிவாக்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. காரணம் நிர்வாகத்தில் உள்ளவங்க கள விதியென்று தங்கள் தலைவிதியை எல்லாம் நம்மில பிரயோகிக்கிறாங்க.

அநாகரிகம் என்பதை நாகரிகமற்றுத் தாக்குதல் என்பதை சுயகெளரவத்துக்கான பாதிப்போட சில நிர்வாகிகள் பார்க்கினம். விமர்சனம் என்பது தங்களைப் பாராட்டி இருக்கனும் என்பது போல நினைக்கினம். இது ஆபத்தான விமர்சனத்தைச் சந்திக்க முடியாத ஒரு நிலையின் வெளிப்பாடு. நாகரிகமற்ற சொற்களைப் பயன்படுத்தாமலே நாகரிகமற்று எழுத முடியும் என்பது நியாயமா இல்லை என்பது இருக்க.. அப்படி எழுதக் கூடியவற்றுள் எது நாகரிகம் எது அநாகரிகம் என்பதைத் தீர்மானிக்கிறதில உள்ள நிர்வாகிகளின் முடிவெடுத்தலில் தனிமனித சிந்தனையின் செல்வாக்கு என்பதை எப்படிப் போக்கிறது..???!

அதற்கு ஒரேவழி நிர்வாகத்தில் உள்ளவங்க கூடிப் பேசி இவையெல்லாம் அநாகரிகம்.. இவையெல்லாம் நாகரிகம் என்பதை சுருங்க வகைப்படுத்தி கள உறவுகளை நோக்கி முன் வைக்கனும். காரணம் நிர்வாகிகள் ஆளாளுக்கு தங்கள் சிந்தனைகளால் கள உறவுகளை மேலாதிக்க்கம் செய்ய முனைவதும் பின்னர் அதற்கு களவிதிக்கமைய என்று உச்சரித்துக் கொள்வதும் கருத்தியல் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை இல்லாதொழிப்பதுடன் களத்தில் நீடிப்பதையும் அதன் மீதான ஆர்வத்தையும் இல்லாமல் செய்கிறது..!

இப்படியான பாதிப்புக்கள் கருத்துக்களில் சுட்டிக்காட்டப்படும் போது கருத்தியல் ஒற்றுமைகள் நிகழ்வதை அணி சேர்தல் என்பதாக இனங்காட்டுதல் வரவேற்கத்தக்கதல்ல. எமக்கு எமது கருத்தை எமது சுதந்திரத்துடன் சொல்ல அனுமதிக்கனும் என்பதுதான் நிலைப்பாடு. இன்னொருவரின் வேண்டுகோளுக்கு அல்லது அழுத்தத்துக்குள் இருந்து கொண்டு எமது கருத்தை சொல்லனும் என்பதில் எமக்கென்ன அவசியம் இருக்கிறது..??!

சமச்சீரற்ற கள நிர்வாகச் செயற்பாடுகளை உணர்கின்ற போது ஒரு ஆர்வத்தில் தான் களத்தின் செயற்பாடுகளை நிர்வாகத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கிறது. அதைச் செய்வதில் அவர்களுக்கு உடன்பாடில்லை எனில்.. நாம் அவற்றை மரியாதை கருதித் தவிர்ப்பதுடன் இக்களத்தில் எமது கருத்துக்களைத் பதிவதைத் தவிர்த்தால் எமக்கு இங்கிருக்கின்ற அக்கறை என்பது தானே விடுபடும்..! அதைத்தான் இறுதியில் செய்யப் போகிறோம். செய்யத் தூண்டப்படுகின்றோம்..! :(

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.