Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருவிகளைக் காதலிக்கிறவர்களுக்கு மட்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_44281489_rufousvanga203b.jpg

இக்குருவியின் இன்னிசைக் குரலிங்கே: http://news.bbc.co.uk/player/nol/newsid_71...s=1&bbcws=1

நம்மோட பூமியின் இயற்கையையே இனிமையானது. ஐம்புலனுக்கும் தெவிட்டாத இனிய உணர்வுகளைத் தரவல்லது. அதற்கேற்ப பல்வேறு உயிரினங்களையும் இயற்கை எழில்களையும் தன்னக்கத்தே நம்ம பூமி கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

ஆனால் மனிதனின் அறிவுமுத்திய தான்தோன்றித்தனமான செயலால் அழகிய நம்ம பூமியும் சீரழ்ஞ்சிட்டே போகுது. அதோட அழகும் சீரழிஞ்சிட்டே வருகுது. இருந்தாலும் பூமியின் அழகை காதலிக்கின்றவங்க இன்னும் இருக்கிறாங்க.

_44281487_groundroller203b.jpg

நான் அதிகம் விரும்புவது குருவிகளை. எனக்கு சின்னனில இருந்தே குருவிகளோட நல்ல ஈடுபாடு. அதுகளோட கதைப்பன் பிரன்சிப் வைப்பன்.. இப்படி நிறைய செய்திருக்கன் சின்னில.

இப்ப விடயத்துக்கு வாறன்.. மடகஸ்கார் என்ற தேசம் மனித இடைஞ்சல் இல்லாமல் இருந்த தேசம். அதுவும் இப்ப மனிதரால இடைஞ்சலாகிட்டு வருகுது. இருந்தாலும் அங்கு இன்னும் பல இன உயிரினங்களும் இயற்கையும் உறவாடி மகிழ்வோடு வாழ்ந்து வருகின்றன.

_44281483_bensonsrockthrush203b.jpg

அப்படி அங்கு வாழ்ந்து வரும் சுமார் 127 பறவை இனங்களின் இன்னிசைக் குரல்களை ஒலிப்பதிவாக்கி உள்ளார்கள். அவற்றில் சில மனிதரின் செயற்பாட்டால் அகதிகளாகி அழிவைச் சந்தித்து நிற்கின்ற இனங்களில் அடங்குகின்றன.

கேட்க என்ன ஒரு இனிமை. எந்த செயற்கையான இசைக்கும் இல்லாத மகிமை அவற்றின் குரலில் ஒலிக்கிறது.

நீங்களும் கேட்டு மகிழுங்கள் கீழுள்ள இணைப்பில்..

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/7128840.stm

Edited by nedukkalapoovan

கிளிகளைக் காதலிப்பவர்கள் பக்கம் எப்போது திறக்கும் நெடுக்ஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அதிகம் விரும்புவது குருவிகளை. எனக்கு சின்னனில இருந்தே குருவிகளோட நல்ல ஈடுபாடு. அதுகளோட கதைப்பன் பிரன்சிப் வைப்பன்.. இப்படி நிறைய செய்திருக்கன் சின்னில.

அதுதான் இஞ்சை இருக்கிற எல்லாருக்கும் தெரிஞ்ச விசயமாச்சே :)

அப்ப தாத்தாவிற்கு குருவி என்றா ரொம்ப விருப்பம் என்று சொல்லுங்கோ :lol: எப்படி தாத்தா பிரன்சிப் எல்லாம் வைப்பியள் அது தான் விளங்கவில்லை :) !!ம்ம்ம் நல்லா இருக்கு தாத்தா இன்னிசைய கேட்டு மகிழ சந்தர்ப்ப்பம் சந்ததிற்கு நன்றி ஆனாலும் என்ன சொன்னாலும் காக்காவின் இனிய குரல் மாதிரி வராது என்ன தாத்தா நான் சொல்லுறது :lol: ..............நான் வந்து காக்கா கூட தான் பிரண்சிப் வைக்கிறனான்! :wub: !

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி பஞ்-

"எவ்வளவு அற்புதமான குரல்கள் இருக்கதக்கன மனிதன் ஏனோ மனிதனின் அவல குரலை கேட்டு ரசிக்க விரும்புகிறானோ"

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் க்கு குருவிகள் எண்டால் கொள்ளைப் பிரியமாக்கும்

நெடுக்ஸ் க்கு குருவிகள் எண்டால் கொள்ளைப் பிரியமாக்கும்

கறுப்பி அக்கா... ஊங்களுக்கும் .குருவி என்றால் ரொம்ப பிரியமாமே ...ஆரோ பேசிக்கிட்டாங்கள் ...அது நிசமா... :D:D

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி அக்கா... ஊங்களுக்கும் .குருவி என்றால் ரொம்ப பிரியமாமே ...ஆரோ பேசிக்கிட்டாங்கள் ...அது நிசமா... :D:D

குருவிகளெல்லாம் பிடிக்காதுங்க. மிருகங்களைத்தான் பிடிக்கும் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குருவிகளெல்லாம் பிடிக்காதுங்க. மிருகங்களைத்தான் பிடிக்கும் :D

ஓஓஓ... அதுதான் உங்களுக்கு உங்களையே ரெம்பப் பிடிக்கும் இல்லையா கறுப்பி..! :lol::D

சரி கறுப்பி கூட ஜோக் பண்ணினது காணும் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பாங்க. அப்புறம் கறுப்பிக்கு கோவம் வந்திச்சு யாழ் தாங்காது..

குருவிப் பிரியர்களுக்கு என்று ஒரு இணையத்தில ரெம்ப சுவாரசியமான குருவிகளின் இன்னிசைக் குரல்கள் கிடைச்சுது.. இலங்கையிலும் இங்கினியாகலல்ல குருவிகள் சரணாலயம் இருக்கிறது. அங்கு போறது எனக்கு ரெம்பப் பிடிக்கும். அதிகாலை வேளையில் அவற்றின் இன்னிசை கேட்பது தனிச் சுகம்..!

tngr.jpg

http://www.naturesound.com/birds/birds.html

  • கருத்துக்கள உறவுகள்

நமக்குக் காடை, கெளதாரி, காட்டுக்கோழி போன்றனதான் பிடிக்கும். குருவிகளைவிட அவற்றில் இறைச்சியின் அளவும் ருசியும் அதிகம் :D

நமக்குக் காடை, கெளதாரி, காட்டுக்கோழி போன்றனதான் பிடிக்கும். குருவிகளைவிட அவற்றில் இறைச்சியின் அளவும் ருசியும் அதிகம் :D

tngr.jpg

மேல இருக்கிற இந்த சின்ன அழகான குருவியை பார்த்தும்

இப்படி சொல்ல எப்படி மனம் வந்திச்சு கிருபன் அண்ணா... :D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நமக்குக் காடை, கெளதாரி, காட்டுக்கோழி போன்றனதான் பிடிக்கும். குருவிகளைவிட அவற்றில் இறைச்சியின் அளவும் ருசியும் அதிகம் :D

உங்களைப் பார்க்கவே தெரியுது காடை, கெளதாரி தான் பிடிக்கும் என்று..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

மேல இருக்கிற இந்த சின்ன அழகான குருவியை பார்த்தும்

இப்படி சொல்ல எப்படி மனம் வந்திச்சு கிருபன் அண்ணா... :D:lol:

இயற்கை எப்போதுமே அழகாகத்தான் இருக்கும்.. 3 மாதப் பன்றிக்குட்டியும் அழகாகத்தான் இருக்கும், அதற்காக அதைக் கொல்லாமலா இருக்கிறார்கள்?? இரக்கமுள்ள மனிதர்களாக இருந்தால், மரக்கறியைவிட வேறொன்றையும் உண்ணக்கூடாதல்லவா!

உங்களைப் பார்க்கவே தெரியுது காடை, கெளதாரி தான் பிடிக்கும் என்று..! :):D

greypartridgesmalluf5.jpg

உண்மைதான்.. மேலுள்ள கெளதாரியை அழகுபார்க்கவா முடியும்!

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் அழகு தந்தாலும் குழம்பு வந்தால் ருசித்து சாப்பிடுகிறோம் இல்லே.அட அட என்ன மனிதோபாயம்.?

  • கருத்துக்கள உறவுகள்

நான் அதிகம் விரும்புவது குருவிகளை. எனக்கு சின்னனில இருந்தே குருவிகளோட நல்ல ஈடுபாடு.

சின்னனில குருவியெண்டால் இப்ப என்ன சிட்டுக்குருவி லேகியமே..? என்ன கறுப்பியக்கா, நான் கேக்கிறது சரிதானே?!

:D:D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நமக்குக் காடை, கெளதாரி, காட்டுக்கோழி போன்றனதான் பிடிக்கும். குருவிகளைவிட அவற்றில் இறைச்சியின் அளவும் ருசியும் அதிகம் :D

ஆஆஆஆ.....ஒன்றையும் விட்டு வைக்கமாட்டிங்க போலிருக்கே :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆ.....ஒன்றையும் விட்டு வைக்கமாட்டிங்க போலிருக்கே :lol:

அவர் காடை கெளதாரியை விட்டிருந்தா எப்படி... உருப்படிட்டிருப்பாரில்ல..! :(:D

:D நெடுக்ஸ்க்கு குருவிகளை பிடிக்கிறதால் தான் பெண்களை வெறுக்கிறார் போல :lol:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D நெடுக்ஸ்க்கு குருவிகளை பிடிக்கிறதால் தான் பெண்களை வெறுக்கிறார் போல :lol:

சின்னனில எப்படி எனக்குக் குருவிகளைப் பிடிக்குமோ அவ்வளவுக்கு பெண்களைப் பிடிக்காது.

சின்னில பெண்களை ஏன் பிடிக்கல்லைன்னா... (சின்னில உணர்ந்தும் வெளில சொல்ல முடியாதிருந்த விடயங்களை இப்ப சொல்லுறன் கேளுங்க)

1. அம்மாட்ட அண்டிவிடுறததில முதலாவது பெண்கள் தான்.( நான் சின்னனில இருந்தே பெண்களோட சேரன். சிரிச்சாலும் நெவர் மைண்ட் என்று போவன். எனக்கு அவங்கள ரெஸ்பெக்ட் பண்ணனும் என்ற எண்ணம் அப்பவே வரல்ல.. ஏனோ தெரியல்ல.பட் வீட்டில அம்மாதான் செல்லம். அம்மாண்டா ரெம்பவே பிடிக்கும். ஆனா மற்றப் பெண்களைப் பிடிக்காது.)

2. சும்மா இருக்கிற என்னை அடிக்கடி தூக்கிக் கொஞ்சுறனென்று முகத்தில எச்சி பிரட்டுறது பிடிக்கிறதில்லை. (இதேபோல் செய்யுற ஆண்களையும்,சிகரெட், சாராயம் குடிச்சிட்டு எனக்கு கிட்ட வாறவையையும் பிடிக்காது. இப்பவும் தான்.)

3. 2ம் ஆண்டிலேயே நம்மோட போட்டி போட ஆரம்பிச்சிட்டாங்க ஸ்கூலில..! யாரென்று கூட எனக்குத் தெரியாது ஆனா வலிய வந்து "உமக்கு என்ன மார்க்ஸ்" (நண்பர்கள் எல்லாம் மரியாதையா உங்களுக்கு என்று கேட்பார்கள்.. ஆனால் பெண்கள் "உமக்கு" என்பது எனக்கு அவ்வளவாப் பிடிக்கிறதில்ல) என்று கேட்கிறதோட தங்கட போட்டி பொறாமை மனப்பாண்மையை பெண்கள் வெளிக்காட்ட ஆரம்பிச்சாங்க.

(நான் ஆண்டு 4 வரைக்கும் தான் மிக்ஸ் ஸ்கூலில் படிச்சேன். அப்புறமும் வீட்டுக்கு வாற பெண்களின் அம்மாமார் நம்மளச் சும்மா விடுறதில்ல. அதுக்கு எவ்வளவு இதுக்கு எவ்வளவு என்று நச்சரிக்க.. அம்மாவும் எல்லாரும் வந்து உன்னைத்தான் மார்க்ஸ் கேட்பினம் படிடா என்று நம்மள ரென்சன் பண்ணிட்டா சின்னனில. அவை ஏன் மார்க்ஸ் கேட்கிறது நான் குறையத்தான் எடுப்பனா சோ அதைக் காட்டி அவனைப் போல மொக்கா இருக்காம படியுங்க என்று சொல்ல..! அது என்னை ரெம்பவே இன்சல்ட் பண்ணிட்டுது. :lol: )

4. வீட்டில நான் கொஞ்சம் நிறம் குறைவா (அதுக்காக கரித்துண்டு என்று எண்ணப்படாது), அம்மா கூட கவலைப்படாத அந்த விசயத்தை ஒரு குறையா பெரிசாக்கினது பெண்கள் தான்.

5. என் கூட எனிமி போல பிகேவ் பண்ண ஆரம்பிச்சதும் பெண்கள் தான். ஆண்கள் சர்வ சாதாரணமா பழகுவினம். பெண்கள் அப்படியிருக்கிறதில்ல.

எங்க வீட்டுக்கு முன்னாடி ஒரு வீட்ட பல பெண்கள். அவங்க வேறெங்கோ இருந்து வந்தவங்க. சும்மா இருக்கிற என்னை வழிய சண்டைக்கு இழுப்பாங்க. நக்கல் நளினம் பண்ணுவாங்க. அதெல்லாம் எனக்குப் பிடிக்கிறதில்ல. இப்படிப் பண்ணிப் பண்ணியே வலிய நெருங்கி வந்து வேணாம் வேணாம் என்றவும் ரெம்ப பிரண்ஸ் ஆனாங்க. இறுதியில நம்மளப் பார்த்து ரெம்ப கெட்டவன் எண்டுடாங்க என்னா பாருங்களன். அப்ப தான் தெரிஞ்சுது பெண்களின் குணம். ஒன்றுமில்ல.. அவங்களில ஒராள் ஒரு அண்ணாவை சைட் அடிக்கிறதை.. எனக்கு சின்னில அதென்ன மாற்றர் என்று புரியாம.. அவங்க அப்பா கிட்ட சொல்லிட்டன்... அந்த அக்கா இந்த அண்ணா கூட கதைக்கிறவன்னு. அவ்வளவும் தான் அப்புறம் பிரண்டா இருந்த என்னை குட்டிப் பிசாசா பார்க்க வெளிக்கிட்டாங்க. சொல்லுங்க கண்டதைச் சொன்னது தப்பா..??! :lol:

6. எனக்கு இங்கிலீஸென்ன அலேர்ஜி. அதைத் தெரிஞ்சு கொண்ட ஒருத்தி எங்க வீட்டையே ரியுசனுக்கு வந்தாவு. அப்புறம் என்ன காயா நாளும் 4 மணிக்கு கிரிக்கெட் விளையாடப் போற என்னை இங்கிலீஸ் படிக்க வைச்சிட்டாளே அந்தப் பாவி. நல்லா இருப்பாளா என்ன..! கடைசியில என் நம்பர் வன் எனிமி ஆனதும் அந்தப் பெண்ணு தான்.

7. எனது நேசறில ஒரு ரீச்சர். அப்புறம் ஆண்டு 2 இல ஒரு ரீச்சர். அப்புறம் ஆண்டு 7 இல ஒரு ரீச்சர். இந்த 3 பேரைப் போலவும் ஒரு ஆசிரியரை (ஆண்) நான் என் வாழ் நாளில் சந்திக்கல்ல. ரெம்பக் கொதிப்பிடிச்சதுகள். ஆண்டு இரண்டில இருந்தவ தான் ரெம்ப மோசம். வெள்ளிக்கிழமைன்னா போதும் கலை எடுத்து ஆடுவா. அவா அப்ப இளம் ரீச்சரா. வீட்ட என்ன பிரச்சனையோ தெரியல்ல. வெள்ளிக்கிழமைன்னா எல்லாரும் பயம் முட்டிப் போயிருப்பம். அவா தான் வகுப்பாசிரியையும். சொல்லவா வேணும். முதன் முதலில எனக்கு அடிச்ச ரீச்சரும் அவா தான். மறக்க முடியல்ல அந்தக் கொடுமையை. ஒரு வகுப்புக்கே அடிக்கும் என்றால் பாருங்களன். அந்த ரீச்சருக்கு கையுளையாதோ என்று தவம் கிடக்கிறது.

என்னை மிகவும் அரவணைச்சது என்றால் ஆண் ஆசிரியர்கள் தான். அவங்க தான் எனக்கு அதிகம் உற்சாகம் அளிச்சது.. பெண் ஆசிரியர்களைக் காட்டிலும். ஒரு சிலரைத் தவிர ஏனையோர் அதிகம் பாரபட்சம் காட்டல்ல. நான் சந்திச்ச எல்லா பெண் ஆசிரியர்களிடமும் மாணவர்களை பாரபட்சமா நடத்திற பண்பை நான் அனுபவிச்சு வேதனை கூடப் பட்டிருக்கிறன்..!

இப்படிங்க.. பல காரணங்களால எனக்குப் பெண்கள் மீது நல்ல மதிப்பில்லை..! நான் எதிர்பார்த்த வடிவங்களில பெண்கள் எப்பவும் இருந்ததில்ல. அன்பின் உருவமா.. சாந்தமானவங்களா.. சாமி படத்தில பார்த்த பெண்கள் போல.. பெண்கள் எங்க இருக்காங்க உலகில..! நெவர்..! அம்மா கூட அப்பாவை விட கொஞ்சம் வன்முறை நாடிதான். நம்மள அடக்கனும் என்றதுக்காக பிரம்பு அதிகம் பாவிச்சதும் அம்மாதான். அரவணைச்சதும் அவங்க தான். அம்மாவை நான் பெண்ணா காணேல்ல. என் உயிராத்தான் பார்த்திருக்கன். இவை சின்னனில நான் உணர்ந்தவையைக் கொண்டு சொல்லுறன்.

பெரிசா வளர்ந்து பெண்களால சீரழிஞ்ச வரலாற்றைச் சொல்லேல்ல. வேணாம் வேணாம் என்றவும் நெருங்கி வாறதும்.. சுயநலத்துக்குப் பாவிச்சிட்டு.. தூக்கி வீசிறதும்.. பெண்களின் குணமாவே நான் அதிகம் கண்டிருக்கிறன். அடுத்தவையோட ஒப்பிடுறது.. குறைபிடிக்கிறது.. இல்லாததையும் நாங்க சிந்திக்கிறதா தங்க எண்ணத்தில தோன்ற மோசமான சிந்தனைகளை எங்களில கட்டிவிடுறது.. மற்றவர்களை மட்டம் தட்டி தங்களைப் பெரிசா காட்டிக்கிற போன்ற கீழ்த்தரமான பண்புகள் பெண்களிடம் இருக்கும் வரை அவங்கள எனக்குப் பிடிக்க வாய்ப்பே இல்ல..! அதிலும் அப்பாவித்தனமான காக்கா குருவி கூட பேசிட்டு இருக்கலாம். மனதுக்கும் கஸ்டமில்ல.. நம்மள அவை தூற்றப் போறதும் இல்ல. தூற்றினாலும் புரியப் போறதில்ல..! :lol:

Edited by nedukkalapoovan

குருவி ரசிகன் சார்..சாரி நெடுக்ஸ் சார் .....ரொம்பத்தான் பாதிக்க பட்டிருக்கிறீங்கள்..

என்னங்க செய்யறது ...இதை முன்னாடியே சொல்லிக்காமால் சில பேர் சும்மா மற்றாக்களை மென்டல் ஆக்கிங்கிறாங்க

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

சின்னில பெண்களை ஏன் பிடிக்கல்லைன்னா... (சின்னில உணர்ந்தும் வெளில சொல்ல முடியாதிருந்த விடயங்களை இப்ப சொல்லுறன் கேளுங்க)

சிகப்பு ரோஜாக்கள் கமலின்ர கதையைவிடக் கேவலமான கதையா இருக்கே உங்களின்ர..! :wub:

அப்ப ஆயுசு முழுக்க பிரம்மச்சாரியா? ஆரோ கார்மேகமா கண்ணீர் வடிக்கிறாப்பில தெரியுது. :wub:

நல்லதொரு கருத்தாளரை யாழ்களம் இழந்து விடக்கூடாது என்ற அக்கறையில் சொல்கிறேன், விரைவில் நல்லதொரு மனநல ஆலோசனையை பெற்றுக் கொண்டு மனதில் ஏற்பட்ட பாதிப்பை சீர் செய்து கொள்வது நல்லது!

* எப்படி நாங்கள் கற்பனையில் விரும்பிய ஒரு பூவையோ அல்லது குருவியையோ நிஜத்தில் தேடி அலைவதில்லையோ அது மாதிரியே கிடைத்த பெண்ணையே ரசிக்கப் பழகலாம்!

* எப்படி நாங்கள் இருக்கிறோமோ அப்படியே எங்களை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் நாமும் அவர்களை எப்படி அவர்கள் இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொள்ளலாம்! (ஒருவரை மாற்ற முயல்வது பிளவுக்கு முதல் படி)

(மேலதிக இலவச ஆலோசனைகளுக்கு நாடவும்!)

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், உங்களின் அனுபவங்கள் எனக்கு நேரெதிராகவே (பல) உள்ளது.உங்கள் அனுபவங்கள் ரொம்ப விசித்திரமாக உள்ளது.அம்மாவை போல் அன்பு கொள்ள பெண்ணை தவிர யாருமே இருக்கமுடியாது.முயற்சியுங்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கருத்தாளரை யாழ்களம் இழந்து விடக்கூடாது என்ற அக்கறையில் சொல்கிறேன், விரைவில் நல்லதொரு மனநல ஆலோசனையை பெற்றுக் கொண்டு மனதில் ஏற்பட்ட பாதிப்பை சீர் செய்து கொள்வது நல்லது!

* எப்படி நாங்கள் கற்பனையில் விரும்பிய ஒரு பூவையோ அல்லது குருவியையோ நிஜத்தில் தேடி அலைவதில்லையோ அது மாதிரியே கிடைத்த பெண்ணையே ரசிக்கப் பழகலாம்!

* எப்படி நாங்கள் இருக்கிறோமோ அப்படியே எங்களை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் நாமும் அவர்களை எப்படி அவர்கள் இருக்கிறார்களோ அப்படியே ஏற்றுக் கொள்ளலாம்! (ஒருவரை மாற்ற முயல்வது பிளவுக்கு முதல் படி)

(மேலதிக இலவச ஆலோசனைகளுக்கு நாடவும்!)

உங்கள் கரிசணைக்கு மிக்க நன்றிகள். ஆனாப் பாருங்கோ.. நான் ரெகுலரா என்னை எல்லா வழிகளிலும் பரிசோதிச்சுக் கொள்ளுறனான். அப்படி எதுவும் எங்கிட்ட இருப்பதா இனங்காணப்படேல்ல. இந்த பதிவைச் செய்யேக்கையும் இப்படியும் இதைவிட மோசமாவும் கரிசணைகள் வெளிப்படும் என்று அறிஞ்சுதான் எனது பதிவையே தயாரிச்சனான்...! :lol::lol:

ஆனால் துரதிஸ்டவசமாக நாம் வாழும் பூமிப் பந்தில் உள்ள பெண்கள் பலர் மனநிலை பாதிக்கப்பட்டவங்களா இருப்பாய்ங்களோ என்று இப்ப நினைச்சுப் பாக்கிறன் நீங்க சொன்னப்பிறம்..! :lol:

நெடுக்கு,

பெண் சமுதாயத்தை தட்டி எழுப்பி கெட்டிக்காரர்கள் ஆக்க வேணும் என்ற நினைப்பிலதான் அவர்களைச் சீண்டிக் கோபமூட்டுகிறீர்கள் என்று நினைச்சன். இப்பத்தான் உண்மை விளங்குது. உண்மைகளை ஒரு கோணத்தில இருந்தே பார்க்கக் கூடாதுங்கோ.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு,

பெண் சமுதாயத்தை தட்டி எழுப்பி கெட்டிக்காரர்கள் ஆக்க வேணும் என்ற நினைப்பிலதான் அவர்களைச் சீண்டிக் கோபமூட்டுகிறீர்கள் என்று நினைச்சன். இப்பத்தான் உண்மை விளங்குது. உண்மைகளை ஒரு கோணத்தில இருந்தே பார்க்கக் கூடாதுங்கோ.....

நீங்கள் நினைச்சதில இப்ப வரைக்கும் தப்பில்ல. காரணம் மேல ஒரு வரில சொல்லப்பட்டிருக்குது. இது எனது தயாரிப்பு மட்டுமே (சில சம்பவங்களை அடிப்படையா வைச்சு..!) ஆனால் முழுமையான அனுபவமல்ல..! :lol::lol:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.