Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலிற்கு வந்த கொழும்பு நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் சுட்டுக்கொலை

Featured Replies

இச் சம்பவத்தில் காயமடைந்த குமரன் மகேந்திரன் என்பவரும் இறந்திருக்கிறார்.

கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில்

மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான

மேலக மக்கள் முன்னணி தலைவர்

மனோ கணேசன் நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

  • Replies 78
  • Views 14.4k
  • Created
  • Last Reply

கொலை தாக்குதலுக்கு வந்தவர்களில் ஒருவர் மருத்துவ மனையில்?

பா.உ. மகேஸ்வரனை கொலை செய்ய வந்தவர்களில் ஒருவர்

காயமடைந்த நிலையில் தேசிய வைத்தியசாலையின் 74ம் இலக்க வாட்டில் இருப்பதாகவும்

அவரை விசாரணை செய்து வருவதாகவும்

போலீஸ் அத்தியேட்சகர் விக்டர் பெரேரா தெரிவித்திருக்கிறார்.

காயமடைந்தவர்களின் பெயர்கள் பின்வருமாறு:-

தர்மசிரி

மதுராணி (17)

மாணி (40)

சரளா (39)

பாலசந்திரன் (23)

அகிரேசன் (13)

புஸ்பவாணி (15)

சிவலிங்கம் (22)

வசந்த (23)

சிவசூரியன் (63)

கே.சிவராம் (22)

Edited by AJeevan

மூன்று நாட்களுக்கு முன்னர் மகேஸ்வரனின் கொடுத்த மரண வாக்குமூலம் ஏற்கப்படுமா?

டக்கிளஸ் கைது செய்யப்படுவானா?

“Govt. responsible for my life”, Maheswaran in final TV interview

[01-01-2008 1.46pm]

“My life is increasingly at risk after the reduction of my security from 18 personnel to only one. Even state intelligence has established that there are threats to me. Therefore, the government should take full responsibility,” UNP MP T. Maheswaran told the media just three days prior to his murder. Participating in “Minnel” talk-show of Shakthi TV on December 30th, he had spoken at length on threats to his person.

Maheswaran had also severely criticized the government for incidents of abduction, extortion and killing in Jaffna and said an organized 10-member gang sent from Colombo was responsible.

A Tamil minister is leading this paramilitary gang, the UNP MP had said, promising to expose all those involved when parliament begins sittings on January 08th.

Maheswaran, who was gunned down today (Jan. 01st) at a kovil in Kochchikade, Colombo, escaped an attempt on his life in 2004.

Thiagaraja Maheswaran, 42, was a businessman by profession.

He was fatally shot by a lone gunman this morning and underwent emergency surgery at the Colombo National Hospital.

He died a few moments later.

His bodyguard Kumaran Mahendran also died from the incident, while several other people who were gathered at the kovil at the time, sustained injuries.

Maheswaran was the third Tamil parliamentarian to be murdered after the present regime assumed office, the other two being TNA’s Joseph Pararajasingham in Batticaloa in 2005 and Nadaraja Raviraj at Narahenpita in November the following year.

http://lankadissent.com/index.php?option=c...36&Itemid=1

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

இக்கொலையுடன் அரசைச் சாடி வரும் செய்திகளுக்கு முன்னுரிமை தரும் சர்வதேச ஊடகங்கள். ஆனால் இராணுவ இணையத்தளம் மட்டும் புலிகளை இதில் சம்பந்தப்படுத்த தனது வழமையான புளிச்சுப் போன தந்திரத்தை பயன்படுத்துகிறது..!

Sri Lanka opposition parliamentarian shot dead

By Ranga Sirilal

COLOMBO (Reuters) - A prominent Sri Lankan opposition Tamil parliamentarian was shot and killed on Tuesday, the military said, as the opposition charged that a lack of security made the government responsible for the death.

Main opposition United National Party (UNP) parliamentarian T. Maheshweran was shot at a Hindu temple on Tuesday morning.

"The government had reduced his security after he was being critical of the government and the president, so the government should be held responsible for his killing," said UNP general Secretary Tissa Attanayake.

"Maheshweran was voicing (concern) over the recent abductions of Tamils."

The military said unidentified gunmen shot the parliamentarian while he was in a Hindu temple and police are investigating.

"Inside the (temple) unidentified gunmen had shot Mr. Maheshweran and it was reported he died after being admitted to the hospital," said Military Spokesman Brigadier Udaya Nanayakkara.

The military said another civilian died after being admitted to the hospital, and seven others were injured from the firing.

Maheshweran, from Sri Lanka's minority Tamil community, was a former Hindu Affairs minister and party chief district organizer of the army-held northern Jaffna peninsula.

The killing came as fighting between government forces and Tamil Tiger rebel fighters was escalating with near daily land, sea and air clashes.

In 2005 Tamil National Alliance member of parliament, Joseph Pararajasingham, was shot and killed at a church in the eastern district of Batticaloa while attending Christmas Eve prayers, and another parliamentarian from the same party, Nadarajha Raviraj, was shot and killed in Colombo a year after.

More than 5,000 people have been killed in fighting between the military and Tigers since early 2006 alone, taking the death toll since the war erupted in 1983 to around 70,000.

Military analysts say there is no clear winner on the horizon, and fear the war could grind on for years.

(Editing by Jerry Norton)

http://www.reuters.com/article/worldNews/i...lBrandChannel=0

மகேஸ்வரன் தமிழனானதால் மரண வாக்குமூலமும் மறுக்கப்படும் என்பதே உன்மை....

திரு. மகேஸ்வரன் உட்பட மகிந்தரின் ஆட்சியில் இதுவரை 3 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்கள். சுட்டுக்கொல்லப்பட் மூவருமே நாடாளுமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி மகிந்த அரசுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர்கள். இலங்கையில் மகிந்த அரசினால் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் அரசபயங்கரவதத்திற்கு எதிராக ஆக்ரோசமாக குரல் எழுப்பியவர்கள்.

அதிலும் இதில் இரண்டு கொலைகள் வணக்கத்தலங்களுக்கு உள்ளே நடத்தப்பட்டுள்ளன. ஒரு கிறிஸ்மஸ் தினத்தன்று தேவாலயத்தில் வைத்து திரு. ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார். இன்று திரு மகேஸ்வரன் கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

1. நாடாளுமன்ற உறுப்பினர்களை சுட்டுக் கொல்வது

2. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக வாக்களிப்பதை

தடுப்பதற்காக அவர்களை பணய கைதிகளாக பிடித்து வைத்துக் கொள்வது

3. கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் உள்ள தமிழர்களை பல தடவைகள்

இனச்சுத்திகரிப்பு செய்ய முயற்சி செய்தது

4. அரசை கண்டிக்கும் ஊடகங்களை அச்சுறுத்துவது, தடை செய்வது

5. ஊடகர்களை கொலை செய்வது

5. ஒரு அமைச்சரே போய் அரச தொலைக்காட்சி நிறுவனத்தை அடித்து நொறுக்குவது,

இப்படியான காட்டுமிராண்டி செயல்களில் ஈடுபடும் சிங்கள அரசுகளுக்கு முண்டு கொடுத்தும், இராணுவ உதவிகள் செய்தும், சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு துணைநின்று ஈழத்தமிழர்களின் அழிவுக்கு மிகப்பெரும் மறைமுக காராணியாக நிற்கும் இந்திய அரசு தான் இது போன்ற அரசியல் கொலைகளுக்கும் பொறுப்பு ஏற்கவேண்டும்.

ஏனென்றால் சிங்கள அரசும் சரி, சிங்கள அரசுடன் இணைந்து தமிழ் இன சுத்திகரிப்புக்கு துணை போகும் ஈ.பி.டி.பி போன்ற துணை இராணுவ குழுக்களும் சரி, இந்திய அரசு வழங்கும் மறைமுக ஆதரவினாலும், ஆசீர்வாதத்தாலும் தான் இது போன்ற படுபாதக செயல்களை செய்யும் தைரியம் பெறுகின்றன

இந்திய ஜனநாயகத்தின் போலித்தனத்தை பார்த்து இந்திய மக்கள் தான் வெட்கி தலைகுனிய வேண்டும். அது மட்டும் அல்ல தனது காலாவதியாகி விட்ட பழமைவாத வெளியுறவு கொள்கையை வைத்துக் கொண்டு, அடிப்படையிலேயே நூற்றாண்டு காலங்களாக, இந்திய விரோத போக்கு கொண்ட சிங்களவர்களுக்கு துணை போவதன் மூலம். தனது தென் பிராந்திய பாதுகாப்பிற்கு இந்தியா தன்னை அறியாமலேயே குழி பறிக்கிறது.

விடுதலை புலிகளின் தோல்வி ஈழத்தமிழர்களின் தோல்வியாக மட்டும் அல்ல, இந்தியாவின் தென்பிராந்தியத்தின் பாதுகாப்பையும் கேள்வியாக்கிவிடும் என்பதே உண்மை. வங்கக்கடலில் சீன, பாகிஸ்தானிய ஆதிக்கத்திற்கு வழிசமைத்து கொடுத்ததாகவே இலங்கை சம்பந்தமான இந்தியாவின் இன்றைய வெளியுறவு கொள்கை அமையும்.

Edited by vettri-vel

2081MaheshwaranDead_J.jpg

மகேஸ்வரனின் உடல் பின்னால் கதறி அழும் அவரது மனைவி.........

  • கருத்துக்கள உறவுகள்

2081MaheshwaranDead_J.jpg

மகேஸ்வரனின் உடல் பின்னால் கதறி அழும் அவரது மனைவி.........

இந்தப் படம் ஒன்றே போதும்.. தென்னிலங்கை மற்றும் ஈழத்தீவில் சிறீலங்கா அரச மற்றும் இராணுவக் கட்டுப்பாட்டில் வாழும் மக்கள் கொலை வாளின் கீழ் அநாதைகளாக வாழ்வதைக் காட்ட.

ஒரு சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர் இப்படிக் கொல்லப்பட்டிருப்பின்.. என்ன நடந்திருக்கும்.. இந்த உடலைச் சுற்றி ஆயிரம் படையினர் நின்றிருப்பர்.. அரச மற்றும் எதிர்கட்சி என்று சிங்கள அரசியற்தலைவர்கள் கூடி நின்றிருப்பர்.. சிங்கள மக்கள் கதறி அழுதுகொண்டு நின்றிருப்பர்... வைத்தியசாலை வைத்தியர்கள் தாதிகள் ஊழியர்கள் புடைசூழ கண்ணீர் மல்கி இருப்பர்.. ஆனால்.. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்.. தனது மனைவியின் அழுகுரலுக்கு மத்தியில் ஒரு நாலு பேரின்.. உதவியோடு.. நகர்கிறார்..!

இதே நிலையை குமார் பொன்னம்பலம் அவர்களின் மரணத்தின் போது நேரில் தரிசித்திருக்கிறேன். அவரின் கார் அவரின் உடலத்தோடு அநாதரவாகக் கிடந்தது பல மணி நேரம்...! :o

தென்னிலங்கையில் தமிழ் மக்கள் என்ன உரிமையோடு வாழ்கின்றனர் என்பதற்கு இது ஒரு சான்று..!

............

வெற்றி வேல்..

உங்களின் பார்வையில் நியாயம் இருக்கிறது.

ஆனால் இந்தியாவின் அணுகுமுறை 100% சிறீலங்கா அரசை நம்பி என்று சொல்ல முடியாது. புலிகளை நம்புவதை விட சிறீலங்காவை நம்பலாம் என்று நினைக்கும் இந்திய ஆளும் மத்திய அரசு.. புலிகளை அழித்து அதற்கு மாற்றீடாக தனக்கு சாதகமான ஒரு தமிழ் மிதவாத அரசியல் பேசும் தரப்பை (புலி எதிர்ப்புத் தரப்பு என்பதைத்தான் அரசியல் அலங்காரமிட்டு.. மிதவாதத் தரப்பு என்பது) சிறீலங்காவின் வடக்குக் கிழக்கில் நிலை பெற வைக்க வேண்டும் என்றே 1987 இல் இருந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதை சிறீலங்கா அரசு தனது இனப்படுகொலைக்கு ஏற்ப பாவித்து வருகிறதே தவிர... இந்தியாவும் பேமாளி நாடு அல்ல. ஆனால் இந்தியா சிறீலங்கா அரசுகளால் ஏமாற்றப்பட்ட ஏமாளி நாடு என்பதே உண்மை...!

இந்தியா சிறிலங்காவின் வடக்குக் கிழக்கில் தனக்கு சாதகமான, புலி எதிர்ப்பு தமிழ் ஆயுதக் குழுக்களை ஆட்சிப்பீடமேற்றி தமிழ் மக்களின் மனங்களை அவர்களின் மூலம் வென்றிடலாம் என்று கணக்குப் போட.. சிறீலங்கா அரசோ.. இந்தியாவின் எண்ணத்தை பாதுகாத்தப்படி.. அதே தமிழ் ஆயுதக் குழுக்களை தனக்கு விசுவாசிகளாக்கி தமிழின அழிப்பை அரங்கேற்றி வருகிறது.

ஆக இந்தியக் காகம் வடையைத் தூக்க சிறீலங்கா நரி அதைத் தட்டிப் பறிக்க முயலாதது போலக் காட்டிக் கொண்டு... இடையில் குள்ள நரிகள் பின்னால் ஓடவிடுகிறது. புலி தன்பாட்டில்... தனித்தன்மையோடு...!

ஆனால் இந்தியக் காகத்துக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு 1987 இல் தோற்ற தனது கொள்கை வெல்லும் என்று..! அதன் மூலம் தனது தென்பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தலாம் என்று. ஆனால் சிங்கள அரசு.. இந்திய அரசு நினைப்பது போல முட்டாள் அரசல்ல..! தேவை முடிந்ததும்.. தமிழ் ஆயுதக் குழுக்களின் கதி அதோ கதிதான் என்பதற்கு கருணா சாட்சி. இந்தியா ஏமாறும் காகமாகவே உள்ளது.. அதுதான் காலத்தின் நியதி.

புலியெதிர்ப்பை கைக்கொண்டு எவரும் வென்றதாக வரலாறில்லை..! :rolleyes:

Edited by nedukkalapoovan

எனக்கு மகேஸ்வரன் பற்றி அதிகம் தெரியாது......... அவர் ஐ.தே.க வை சேர்ந்தவர் என்பதால் டக்கிளஸ் போன்றோர் போல் அவரை நினைத்து விட்டேன்........

உங்கள் பதிவுகளை ப்பார்த்த பின் தான் உண்மை உணர்ந்து கொண்டேன்...

இலங்கை அரசின் பயங்கரவாதம் பற்றிய கண்டனங்களை தமிழர்கள் ஒற்றுமையாக அனைத்து நாடுகளுக்கும் அனுப்ப வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

மகேஸ்வரன் 100% தமிழ் தேசிய ஆதரவு அரசியல்வாதியல்ல. ஆனால் பல இக்கட்டான கட்டங்களில் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த தனது அரசியல் எதிரிகளான தமிழ் விரோத ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளை வெளிக்கொணர்ந்தவர். அதற்காக தான் சார்ந்திருந்த சிங்களக் கட்சியின் ஒத்தாசை அவருக்குக் கிடைந்திருந்தது..!

ஆனால் டக்கிளசை வளர்த்த.. கருணாவை உருவாக்கி இயக்கிய ஐ தே கட்சியில் தான் இவரும் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவரைக் கொலை செய்யும் அளவுக்கு தமிழ் மக்களுக்கு எதிரா அவர் செயற்படவில்லை. தமிழ் துரோக ஆயுதக் குழுக்களுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் வெளிப்படையாக கருத்துச் சொல்லி வந்ததுடன் இராணுவமும் தமிழ் துரோக ஆயுதக்குழுக்களும் ஈடுபடும் யாழ்ப்பாணத்துக்கான வியாபாரத்திலும் இவருக்குப் போட்டி இருந்தது..! :rolleyes:

----------------------

Leading Sri Lanka Tamil MP killed

_44328889_body203afp.jpg

T Maheswaran succumbed to his wounds in hospital

A leading Tamil member of the Sri Lankan parliament, T Maheswaran, has been shot dead at a Hindu temple in the capital, Colombo, officials said.

Mr Maheswaran, a former minister and member of the opposition United National Party, was shot by unknown attackers and died in hospital.

He was critical of the government's policy towards the Tamil minority.

Sri Lanka has been ravaged by conflict between the Sinhala Buddhist majority and the Hindu Tamils.

Mr Maheswaran, 41, died while undergoing intensive medical treatment around 1035 local time (0505 GMT), hospital sources said.

"The government had reduced his security after he was being critical of the government and the president, so the government should be held responsible for his killing," UNP general Secretary Tissa Attanayake told

Reuters news agency.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7166560.stm

Edited by nedukkalapoovan

(2ம் இணைப்பு)கொழும்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் சுட்டுக்கொலை

[செவ்வாய்க்கிழமை, 01 சனவரி 2008, 11:42 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்]

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயப் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தியாகராஜா மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 12 பேர் காயமடைந்த நிலையில் கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுவருட நாளினை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் தனது குடும்பத்தினருடன் மெய்ப்பாதுகாவலர்கள் சகிதம் கொட்டாஞ்சேனையில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபாட்டில் கலந்து கொண்டார்.

20080101001.jpg

20080101002.jpg

பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய உள்வீதியை மகேஸ்வரன் சுற்றி வந்துகொண்டிருந்த போது முற்பகல் 9.55 மணியளவில் அங்கு நின்ற துப்பாக்கிதாரி ஒருவர் அவரை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தினார்.

இதில் மகேஸ்வரனும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் 2 பேரும், 7 பொதுமக்களும் காயமடைந்தனர். மகேஸ்வரனின் குடும்பத்தினருக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

மகேஸ்வரனையும் அவரது மெய்ப்பாதுகாவலர்களையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். காயமடைந்த பொதுமக்களை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் அங்கு அவர்கள் அனுமதிக்கப்படாததால் அவர்களையும் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவமனைக்கு மகேஸ்வரன் கொண்டு செல்லப்படும் போது மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருந்தார். அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சில நிமிடங்களில் சுமார் முற்பகல் 10.15 மணியளவில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மகேஸ்வரன் உயிரிழந்ததை கொழும்பு மருத்துவமனைப் பேச்சாளர் சொய்சா உறுதிப்படுத்தினார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

மகேஸ்வரன் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் மிகவும் ஆபத்தான நிலையிலேயே இங்கு கொண்டு வரப்பட்டார். அவரின் நெஞ்சுப்பகுதியில் பல குண்டுகள் துளைத்திருந்தன. அவரது தலைப்பகுதியையும் குண்டுகள் துளைத்திருந்தன. அவருக்கு உடனடியாக சத்திர சிகிச்சை செய்யப்பட்டது. எனினும் அது பலனளிக்காது அவர் உயிரிழந்தார் என்றார்.

மகேஸ்வரன் உயிரிழந்த சிறிது நேரத்தில் காயமடைந்த அவரது மெய்ப்பாதுகாவலரான காவல்துறையைச் சேர்ந்தவரும் உயிரிழந்ததாக மருத்துவமனை பணிப்பாளர் ஹெக்டர் வீரசிங்க தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த பொதுமக்களில் இருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை ஐக்கிய தேசியக் கட்சி கடுமையாகக் கண்டித்திருக்கின்றது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறுகையில்,

மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் குறைத்துக் கொண்டது அரசாங்கம். அதன் தொடர்ச்சியாகவே மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்திலும் வெளியிடங்களிலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்ததன் விளைவாகவே அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக நாங்கள் கருதுகின்றோம். கொலைச் சம்பவத்திற்கு அரசாங்கமே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். அரசாங்கம்தான் அவரைப் படுகொலை செய்யும் உத்தரவை வழங்கியுள்ளது என்றார்.

20080101003.jpg

20080101004.jpg

சம்பவம் இடம்பெற்ற போது அங்கு வழிபாட்டில் நின்ற பொதுமக்கள் அல்லோலகல்லோலப்பட்டு சிதறி ஓடினர். மகேஸ்வரன் மீது துப்பாக்கிச் சூட்டினை நடத்திய நபரை நோக்கி அவரது மெய்ப்பாதுகாவலர்களும் துப்பாக்கிச் சூட்டினை நடத்தினர் என்று கூறப்படுகின்றது. தற்போது பொன்னம்பலவாணேஸ்வரர் கோவிலில் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை "சக்தி" தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "மின்னல்" நிகழ்ச்சயில் கலந்துகொண்ட மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் படுகொலைகளுக்கு அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக்குழுவான ஈ.பி.டி.பியே காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

அதன் தொடர்ச்சியாகவே அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிற்கான பிரசாரத்தின் போதும் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னர் பிரபல வரத்தகரான இவர், யாழ்ப்பாணம் காரைநகரைச் சொந்த இடமாகக் கொண்டவர். இவருக்கு வயது 42.

இலங்கையில் பெயர் குறிப்பிடத்தக்க வர்த்தகர்களுள் மகேஸ்வரனும் அடங்குவார். அவருக்குச் சொந்தமான நான்கு கப்பல்கள் இலங்கையிலும், வெளிநாடுகளிலும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுட்டு வருகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசு இருந்தபோது யாழ். மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றியீட்டி இந்து கலாச்சார அமைச்சர் பதவியையும் மகேஸ்வரன் வகித்திருந்தார்.

இவரது நெருங்கிய சகாவான பேபியன் எனப்படும் முத்துக்குமார் சிவபாலன் கடந்த வருடம் டிசம்வர் மாதம் 21 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சுமார் ஒரு வாரத்திற்குப் பின்னர் மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் நவம்பரில் கொழும்பில் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த மகேஸ்வரன், பாதிக்கப்பட்ட மக்களை திரட்டிக் கொண்டு பூசா தடுப்பு முகாமுக்கு சென்றதுடன் அரச தலைவரின் அலுவலகத்தை நோக்கி பேரணியாகவும் சென்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மகேஸ்வரனை நோக்கி துப்பாக்கிச் சூட்டினை நடத்திய நபரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருபக்பதாக தகவல்கள் தெரிவிக்கன்றன. எனினும் இதனை மருத்துவமனை நிர்வாகத்தினர் உறுதிப்படுத்த மறுக்கின்றனர்.

மகேஸ்வரனின் மெய்ப்பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இச்சம்பவத்தின் சூத்திரதாரி படுகாயமடைந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Edited by சாணக்கியன்

ஐ.தே.க. எம்.பி. மகேஸ்வரனின் படுகொலையின் பின்னணியில்....

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் இன்று கொலை கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அண்மைக் காலமாக பாராளுமன்ற உறுப்பினர் ரி.மகேஸ்வரனின் பாதுகாப்பு நீக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மின்னல் எனும் அரசியல் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மகேஸ்வரன் தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்த செவ்வியின் போது, யாழ்ப்பாண குடாநாட்டில் இடம்பெற்றுவரும் கடத்தல், கப்பம் பெறல், கொலைகள் ஆகிய சம்பவங்களுக்கு அரசாங்கமே காரணம் என குற்றஞ்சாட்டியிருந்தார்.

அத்துடன், தென் பகுதியிலிருந்து மாதம் ஒருமுறை சுமார் 10 பேர் வரை யாழ்ப்பாணத்திற்கு புதிதாக அழைத்துச் செல்லப்பட்டு இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நபர்கள் தொடர்பான பெயர், விபரங்களையும் எதிர்வரும் 8ம் திகதி கூடும் பாராளுமன்றக் கூட்டத் தொடர்களின் போது வெளியிடுவதற்கும் தாம் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

இதன்போது, யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரும் இதனுடன் தொடர்பிருப்பதாக மகேஸ்வரன் எம்.பி. தகவல் வெளியிட்டுள்ள போது, தாங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தானே குறிப்பிடுகின்றீர்கள் என நிகழ்ச்சித் தொகுப்பாளர் வினவியபோது, அதனை யாவரும் அறிவார்கள் என மகேஸ்வரன் எம்.பி. குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், இதற்கு முன்னர் 2004ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கூட்டமொன்றில் கலந்துகொண்ட போது கொச்சிக்கடை ஜிந்துப்பிட்டியில் வைத்து அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

2004ம் ஆண்டு மார்ச் மாதம் 27ம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இந்த விடயத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் அன்றைய மின்னல் நிகழ்ச்சியின் வெளியிட்டிருந்ததார். அந்தச் சம்பவத்திலிருந்து தமது உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் உள்ளதாக புலனாய்வுத் துறையினர் தமக்கு அறிவித்துள்ளதாகவும் மகேஸ்வரன் எம்.பி. சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையிலேயே, தமக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு முற்றாக அகற்றப்பட்டுள்ளதாகவும், இதற்கு அரசாங்கமே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் அவர் அந்தச் செவ்வியில் தெரிவித்தார்.

இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில்....

இன்று (01) காலை கொழும்பு கொச்சிக்கடை ஸ்ரீபொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்திற்கு புதுவருட பிறப்பை முன்னிட்டு வழிபாட்டில் கலந்துகொள்வதற்காக மகேஸ்வரன் எம்பி. ஆலயத்திற்கு சென்றுள்ளார்.

அதன்பின்னர் ப+ஜை வழிபாடுகளை முடித்துவிட்டு ஆலயத்தில் இருந்து வெளியே வரும் நிலையில், ஆலய கோபுரம் அமைந்துள்ளதாக (ஆலயத்தின் (உள்ளே) பிரதான வாசலில்) இடத்தில் வைத்தே இவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, மகேஸ்வரன் எம்.பி.யின் பாதுகாவலர்கள் பதில் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று காலை 9.15 அளவில் இடம்பெற்றது.

மகேஸ்வரன் எம்.பி. மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த நபர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒரு சில தகவல்கள் தெரிவித்துள்ள போதிலும், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட நபர் தப்பியோடிவிட்டதாக வேறு பல தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் எவ்வாறு வந்தார், அவர் எந்தத் திசையில் தப்பிச் சென்றார், அவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் அவர் காயமடைந்தாரா என்பது குறித்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில், பலத்த காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மகேஸ்வரன் எம்.பி. உயிரிழந்தார்.

அத்துடன் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட குமரன் மஹேந்திரன் என்பவரும் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் பலர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்னல் தொலைக்காட்சியில் எம்.பி. மகேஸ்வரன் வழங்கிய செவ்வியின் அடிப்படையில் அரசாங்கமே இந்தக் கொலைக்கு முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டும் என கண்டனங்கள் எழுந்துள்ளன.

maheshwarendedpot.jpg

கொல்லப்பட்ட மகேஸ்வரின் வெற்றிடத்திற்கு ஸ்ரீ.ல.மு.க. உறுப்பினர் ஒருவர் நியமனம்

முற்பகல் சுட்டுக் கொல்லப்பட்ட ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரி.மகேஸ்வரனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ரபீக் ரஜாப்தீன் நியமிக்கப்பட்டுள்ளார். ரஜாப்தீன் முஸ்லீம் காங்கிரசின் 2004 ஆம் ஆண்டு பிரதேசசபைத் தேர்தலில் கொழும்பு மாவட்ட அணித் தலைவர்.

இது தேர்தலை எதிர் நோக்கியதான இரு கட்சிகளுக்குமிடையிலான புரிந்துணர்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மகேஸ்வரனுக்கு அடுத்ததாக விருப்பு வாக்கு பட்டியலின் அடிப்படையில் இவரே உள்ளார்.

Edited by சாணக்கியன்

மகேஸ்வரன் 100% தமிழ் தேசிய ஆதரவு அரசியல்வாதியல்ல. ஆனால் பல இக்கட்டான கட்டங்களில் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த தனது அரசியல் எதிரிகளான தமிழ் விரோத ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகளை வெளிக்கொணர்ந்தவர். அதற்காக தான் சார்ந்திருந்த சிங்களக் கட்சியின் ஒத்தாசை அவருக்குக் கிடைந்திருந்தது..!

தமிழ்தேசிய வாதிகளுக்கு புதிய புள்ளியிடும் முறையை அறிமுகப்படுத்தியுள்ள இந்த நெடுக்கு கூட 100% த.தே. ஆதரவாளர் அல்ல! இதற்கு இவரின் முன்னைய கருத்துகள் சான்று பகரும்!

முதலில் ஒரு தமிழனாக, பின்னர் வியாபாரத்தை ஜிவனோபாயமாக கொண்டவராக, ஈற்றில் அரசியல்வாதியாகவே மகேஸ்வரனை பார்க்க முடிகிறது. இத்தனைக்கும் மத்தியில் தனித்து நின்று த.தே.கூ வை விட அதிக அளவு மக்களுக்கு சேவை செய்தவராகவே இவர் விளங்குகிறார். பல்வேறு உபாயங்களை பாவித்து தன் சமுகத்திற்காக பல வழிகளில் போராடி இறுதியில் உயிரையும் கொடுத்த மகேஸ்வரனை கொழும்பு வாழ் தமிழ் மக்கள் என்றென்றும் மறக்க மாட்டார்கள்.

இன்றைய இக்கட்டான நிலையில கிடைக்கும் சிறு துரும்பையேனும் பற்றிக் கொண்டு சிறுக சிறுக அழிக்கப்படும் தமிழர்களிடையே சொல்லில் மட்டுமின்றி செயலிலும் வேற்றுமையில் ஒற்றுமையை கண்டு பாரியை அழிவை தடுத்து நிறுத்த சிந்திக்க வேண்டும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் அதி உச்ச பாதுகாப்பு உள்ள கொழும்பு துறைமுகத்திற்கு மிக அருகாமையில் உள்ள இந்த கோவிலின் தாக்குதல் நடாத்திவிட்டு யாருடைய உதவியும் இல்லாமல் ( :rolleyes: ) தப்பி சென்றது உண்மையிலே பாராட்டதக்கது.

வரும் காலங்களிலும் இந்த மாதிரியான சாகச நடவடிக்கைகள் தொடரும்.....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தேசிய வாதிகளுக்கு புதிய புள்ளியிடும் முறையை அறிமுகப்படுத்தியுள்ள இந்த நெடுக்கு கூட 100% த.தே. ஆதரவாளர் அல்ல! இதற்கு இவரின் முன்னைய கருத்துகள் சான்று பகரும்!

முதலில் ஒரு தமிழனாக, பின்னர் வியாபாரத்தை ஜிவனோபாயமாக கொண்டவராக, ஈற்றில் அரசியல்வாதியாகவே மகேஸ்வரனை பார்க்க முடிகிறது. இத்தனைக்கும் மத்தியில் தனித்து நின்று த.தே.கூ வை விட அதிக அளவு மக்களுக்கு சேவை செய்தவராகவே இவர் விளங்குகிறார். பல்வேறு உபாயங்களை பாவித்து தன் சமுகத்திற்காக பல வழிகளில் போராடி இறுதியில் உயிரையும் கொடுத்த மகேஸ்வரனை கொழும்பு வாழ் தமிழ் மக்கள் என்றென்றும் மறக்க மாட்டார்கள்.

இன்றைய இக்கட்டான நிலையில கிடைக்கும் சிறு துரும்பையேனும் பற்றிக் கொண்டு சிறுக சிறுக அழிக்கப்படும் தமிழர்களிடையே சொல்லில் மட்டுமின்றி செயலிலும் வேற்றுமையில் ஒற்றுமையை கண்டு பாரியை அழிவை தடுத்து நிறுத்த சிந்திக்க வேண்டும்!

மகேஸ்வரனின் அரசியல் பின்னணி.. வியாபாரம் சார்ந்து எழுந்தது என்பதாகவே இனங்காணப்படுகிறது. அதன் வழிதான் அவருக்கு சிங்கள வியாபாரிகளூடு ஐ தே க வுடன் நெருக்கம் ஏற்பட்டது.

எனினும் தமிழ் துரோக அரசியல் குழுக்களால் ஏற்படுத்தப்பட்டிருந்த ஆயுத சனநாயகச் சூழல் என்ற அபாயத்துக்குள்ளும் இராணுவக் கட்டுப்பாட்டு யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் துன்பங்களை இனங்காட்டவும் தமிழ் துரோகக் குழுக்களின் ஆயுத அரசியலை வெளிக்கொணரவும் வேண்டிய கட்டாயம் மகேஸ்வரனுக்கும்.. சந்திரிக்கா அம்மையாரோடு அரசியல் ரீதியா முரண்பட்டிருந்த ஐ தே கவுக்கும் இருந்தது.

அதற்காக ஐ தே க மகேஸ்வரனைப் பாவித்தது. மகேஸ்வரன் தன்னை வியாபாரரீதியாக நிலைநிறுத்த அரசியலையும் ஐ தே கவையும் தமிழ் மக்களின் அநாதரவான சூழலையும் பயன்படுத்திக் கொண்டார் என்ற ஒரு பக்கமும் உண்டு அதையும் நிராகரிக்க முடியாது. இருப்பினும் அதனால் தமிழ் மக்களுக்கு ஓரளவு நன்மை கிடைத்தது என்பது உண்மையே. அதற்காக மகேஸ்வரனை தமிழ் மக்களுக்காகவே உழைத்த தியாகம் மிக்க சுத்த அரசியல்வாதியாகக் காட்டுவதில் எனக்கு உடன்பாடில்லை.

இக்கட்டான நேரங்களில் தமிழன் என்ர உணர்வு மிகுந்து தமிழ் மக்களுக்காக உதவ முன்வந்தவர் என்பதுடன் சுயநலத்துக்கு அதிக இடமளிக்காது தமிழ் மக்களின் பொதுநலனிலும் அக்கறை செய்தவர் எனலாம். ஆனால் பல சந்தர்ப்பங்களில் வியாபாரமே அவரின் அரசியல் இராஜதந்திரத்திலும் பார்க்க பிரதான மூலோபாயமாக இருந்தது. :rolleyes:

Edited by nedukkalapoovan

கத்தி கத்தி அலுத்துபோய்விட்டது.......

மகேஸ்வரனின் வியாபாரப் பங்களியாகவிருந்தவர் போன்ற கருத்து நகைப்பிற்கிடமானது.

உதிர்த்த கருத்தை பலப்படுத்தும் நோக்கில் வகைவகையாக சந்தேகங்களை எல்லாம் "நெருக்கம்", "கட்டாயம்", "பயன்படுத்தல்" போன்ற வார்தைகளோடு கலந்து எவ்வித ஆதாரங்களும் இன்றி அள்ளித் தெளிப்பதை சேறுபூசுதல் என்று கூறுவார்கள்!

வியாபாரத்தை பார்ப்பவராக இருந்திருந்தால் உழைத்த பணத்துடன் முன்னரே புலம் பெயர்ந்து யாழ்களத்தில் கருத்துகளை எழுதிக் கொண்டிருக்கலாம்.

இத்தனைக்கும் இவர் ஒரு ஏழைத் தமிழாசிரியராக இருந்திருந்தால், அவர் எத்தனை நல்லவரானாலும் மக்களுக்காக ஒரு துரும்பை தன்னும் அசைத்திருக்க முடியாது. மக்களுக்கு சேவை செய்ய என்று வரும் அனைத்து அரசியல் தலைவர்களும் ஏதோ ஒரு பலத்துடன் தான் வருகின்றனர் அல்லது வர முடியும்.

1) பண பலம்

2) வாரிசு

3) பேச்சாற்றல் / எழுத்தாற்றல் / தலைமைத்துவம் போன்ற தனிப்பட்ட ஆற்றல்கள்

4) கட்சிப் பதவி

5) ஊடகத்துறை

6) அடியாள் பலம்

இவற்றில் எதுவுமின்றி அரசியல்வாதியென்ன ஒரு சாதாரண குடிமகனே இலங்கையில் வாழ்வது கடினம்.

அப்படியிருக்க திருமண வீடு, சாவு வீடு, கோவில் என்று மக்கள் அழைக்கும் இடத்திற்கெல்லாம் சர்வசாதாரணமாக வருகைதரும் பெருமையில்லாத ஒரு மனிதன்!

அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்து சிறிலங்கா பாராளுமன்றத்தை ஒரு ஜனநாயக அமைப்பு என்று சர்வதேசத்திற்கு மாதம் மாதம் உறுதிப்படுத்தும் த.தே.கூ. பா.உறுப்பினர்களையும் "அடுத்த மாவீரர் தினம் தமிழீழ பாராளுமன்றத்தில் என்று" என்று அறிக்கை விடும் வாரிசுகளான கஜேந்திரன், சந்திரகாசன் போன்றவர்கள் தமிழ் மக்களுக்கு செய்த உதவிகளை விட அதிக உதவிகளை செய்த மகேஸ்வரன் என்ற நம்பிக்கை நட்சத்திரம் இன்று இல்லை!

மேற்கொண்டு ஒரு நல்ல தமிழனை கொச்சைப்படுத்துவதில் பங்களிக்க விரும்பாமையினால் இந்த தலைப்பிலிருந்து விடைபெறுகிறேன்.

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

மகேஸ்வரனின் வியாபாரப் பங்களியாகவிருந்தவர் போன்ற கருத்து நகைப்பிற்கிடமானது.

உதிர்த்த கருத்தை பலப்படுத்தும் நோக்கில் வகைவகையாக சந்தேகங்களை எல்லாம் "நெருக்கம்", "கட்டாயம்", "பயன்படுத்தல்" போன்ற வார்தைகளோடு கலந்து எவ்வித ஆதாரங்களும் இன்றி அள்ளித் தெளிப்பதை சேறுபூசுதல் என்று கூறுவார்கள்!

வியாபாரத்தை பார்ப்பவராக இருந்திருந்தால் உழைத்த பணத்துடன் முன்னரே புலம் பெயர்ந்து யாழ்களத்தில் கருத்துகளை எழுதிக் கொண்டிருக்கலாம்.

இத்தனைக்கும் இவர் ஒரு ஏழைத் தமிழாசிரியராக இருந்திருந்தால், அவர் எத்தனை நல்லவரானாலும் மக்களுக்காக ஒரு துரும்பை தன்னும் அசைத்திருக்க முடியாது. மக்களுக்கு சேவை செய்ய என்று வரும் அனைத்து அரசியல் தலைவர்களும் ஏதோ ஒரு பலத்துடன் தான் வருகின்றனர் அல்லது வர முடியும்.

1) பண பலம்

2) வாரிசு

3) பேச்சாற்றல் / எழுத்தாற்றல் / தலைமைத்துவம் போன்ற தனிப்பட்ட ஆற்றல்கள்

4) கட்சிப் பதவி

5) ஊடகத்துறை

6) அடியாள் பலம்

இவற்றில் எதுவுமின்றி அரசியல்வாதியென்ன ஒரு சாதாரண குடிமகனே இலங்கையில் வாழ்வது கடினம்.

அப்படியிருக்க திருமண வீடு, சாவு வீடு, கோவில் என்று மக்கள் அழைக்கும் இடத்திற்கெல்லாம் சர்வசாதாரணமாக வருகைதரும் பெருமையில்லாத ஒரு மனிதன்!

அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்து சிறிலங்கா பாராளுமன்றத்தை ஒரு ஜனநாயக அமைப்பு என்று சர்வதேசத்திற்கு மாதம் மாதம் உறுதிப்படுத்தும் த.தே.கூ. பா.உறுப்பினர்களையும் "அடுத்த மாவீரர் தினம் தமிழீழ பாராளுமன்றத்தில் என்று" என்று அறிக்கை விடும் வாரிசுகளான கஜேந்திரன், சந்திரகாசன் போன்றவர்கள் தமிழ் மக்களுக்கு செய்த உதவிகளை விட அதிக உதவிகளை செய்த மகேஸ்வரன் என்ற நம்பிக்கை நட்சத்திரம் இன்று இல்லை!

மேற்கொண்டு ஒரு நல்ல தமிழனை கொச்சைப்படுத்துவதில் பங்களிக்க விரும்பாமையினால் இந்த தலைப்பிலிருந்து விடைபெறுகிறேன்.

நன்றி!

மகேஸ்வரனின் தமிழ் மக்கள் மீதான அக்கறையை மலினப்படுத்தும் நோக்கில் நாம் கருத்து வைக்கவில்லை. அவரின் துணிச்சல் மிக்க மக்கள் நோக்கத்தில் அமைந்த பணிகளைப் பாராட்டுகின்றோம். அவரின் இழப்பு துன்பப்படும் மக்களுக்கு ஓர் பேரிழப்பே..! அதில் எந்த விதமான ஐயுறவும் இல்லை..!

இருப்பினும்..

மகேஸ்வரனின் அரசியல் பிரவேசம் என்பது வியாபார அடிப்படையில் இருந்துதான் வந்தது என்பதை யாவரும் அறிவர்..!

பேரினவாதக் கட்சி ஒன்றின் உறுப்பினராக அவர் தேர்தலில் நின்ற சமயங்களில் மக்கள் சிறிது நின்று நிதானித்து தர்மசங்கடப்பட்டு வாக்களிக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியவர்.

பேரினவாதக் கட்சியோடு இணையாமல்.. அதன் ஆதரவோடு சுயேட்சையாக நின்றிருக்கலாம். 1989 இல் ஈரோஸ் சுயேட்சையாக நின்று தமிழ் தேசியத்தின் மீது மக்கள் கொண்டிருந்த அக்கறையை வெளிப்படுத்தியது போன்று..! டக்ளஸ் தேவானந்த கூட பொதுமக்கள் ஐக்கிய முன்னணியின் ஆதரவோடுதான் தேர்தலில் நின்றவர்.. ஆனால் ஈபிடிபி சார்பாக..!

நேரடியாக பேரினவாதக் கட்சியில் இணைகின்ற போது வெளி உலகுக்கு பேரினவாதக் கட்சிகள் தமிழ் மக்களுக்காகவும் உழைக்கின்றன என்ற தோற்றப்பாட்டையே காட்டும்..! அது தவறான காட்சியேதான்..! தமிழ் மக்களுக்கு செய்கின்ற நன்மைகளைக் கூட இந்தக் காட்சி பாழடித்து விடக் கூடியது..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

"எல்லாம் அவன் செயல்" அந்த பொன்னம்பலத்தான் செயல்

மகேஸ்வரனின் தமிழ் மக்கள் மீதான அக்கறையை மலினப்படுத்தும் நோக்கில் நாம் கருத்து வைக்கவில்லை. அவரின் துணிச்சல் மிக்க மக்கள் நோக்கத்தில் அமைந்த பணிகளைப் பாராட்டுகின்றோம். அவரின் இழப்பு துன்பப்படும் மக்களுக்கு ஓர் பேரிழப்பே..! அதில் எந்த விதமான ஐயுறவும் இல்லை..!

இருப்பினும்..

மகேஸ்வரனின் அரசியல் பிரவேசம் என்பது வியாபார அடிப்படையில் இருந்துதான் வந்தது என்பதை யாவரும் அறிவர்..!

பேரினவாதக் கட்சி ஒன்றின் உறுப்பினராக அவர் தேர்தலில் நின்ற சமயங்களில் மக்கள் சிறிது நின்று நிதானித்து தர்மசங்கடப்பட்டு வாக்களிக்க வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியவர்.

பேரினவாதக் கட்சியோடு இணையாமல்.. அதன் ஆதரவோடு சுயேட்சையாக நின்றிருக்கலாம். 1989 இல் ஈரோஸ் சுயேட்சையாக நின்று தமிழ் தேசியத்தின் மீது மக்கள் கொண்டிருந்த அக்கறையை வெளிப்படுத்தியது போன்று..! டக்ளஸ் தேவானந்த கூட பொதுமக்கள் ஐக்கிய முன்னணியின் ஆதரவோடுதான் தேர்தலில் நின்றவர்.. ஆனால் ஈபிடிபி சார்பாக..!

நேரடியாக பேரினவாதக் கட்சியில் இணைகின்ற போது வெளி உலகுக்கு பேரினவாதக் கட்சிகள் தமிழ் மக்களுக்காகவும் உழைக்கின்றன என்ற தோற்றப்பாட்டையே காட்டும்..! அது தவறான காட்சியேதான்..! தமிழ் மக்களுக்கு செய்கின்ற நன்மைகளைக் கூட இந்தக் காட்சி பாழடித்து விடக் கூடியது..! :rolleyes:

மக்கள் இறைவணக்கம் செலுத்துவதற்காக கூடும் இடம் என்றும் பாராமல், ஒரு தமிழ்மகன் இன்று அரச பயங்கரவாதத்தால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பதற்கான நாள் இதுவல்ல. அப்படியான விமர்சனங்களை தவிர்த்துவிட்டு, இறந்தவரின் குடும்பத்தாரின் சோகத்தில் பங்கு கொள்ளலாமே! அது தானே தமிழர்களின் பண்பாடு

கடந்து போன காலங்களின் நிறைகுறைகளை மறந்து விட்டு ஈழத்தமிழர்கள் ஒரே கொடியின் கீழ் ஒன்றுபட வேண்டிய காலம் இது. ஏனென்றால் நடந்து கொண்டிருப்பது ஈழத்தமிழர்களின் ஜீவமரண போராட்டம்.

Edited by vettri-vel

பா.உ.மகேஸ்வரனை கொலை செய்த நபர்

வத்தளை பகுதியில் வாழ்ந்து வந்த

யாழ்பாணத்தை பிறப்பிடாக கொண்ட ஒருவர் என்றும்

அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும்

அவரது நிலமை மோசமாக இருப்பதாகவும் தெரிகிறது.

(பெயரை அரசு இதுவரை வெளியிடவில்லை)

கடந்த 3 நாட்களுக்கு முன் தனது ஊர் காரைநகர் ஈழத்துச்சிதம்பரம் கோயில் திருவெம்பா தேர்திருவிழாவில் கலந்து கொண்டு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதான மிட்டு யாழ்நகர நிலவரங்களையும் அறிந்து வந்தார்

http://www.karainews.com

Edited by நேசன்

பா.உ.மகேஸ்வரனை கொலை செய்த நபர்

வத்தளை பகுதியில் வாழ்ந்து வந்த

யாழ்பாணத்தை பிறப்பிடாக கொண்ட ஒருவர் என்றும்

அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும்

அவரது நிலமை மோசமாக இருப்பதாகவும் தெரிகிறது.

(பெயரை அரசு இதுவரை வெளியிடவில்லை)

கொலை செய்த நபரின் பெயர் வெளியிடப்படவில்லை

கொலையாளியின் உடல் நிலை மோசம்

எனவே கொலை செய்யத்தூண்டிய சூத்திரதாரிகளின் பின்னணியை மறைக்க கொலையாளி காகடிக்கப்படுவார்

பனங்காய் சொன்னமாதிரி எல்லாமே அலுத்துப் போய்விட்டது

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் இறந்த பின்னருமா உங்களின் கேவலம் கெட்ட விமர்சனத்தை நிறுத்தவில்லை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.