Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகல்: எழுத்து மூலம் நோர்வேக்கு சிறிலங்கா அறிவிப்பு

Featured Replies

தற்போது கிடைத்த செய்திகளின் படி வெளிவிவகார அமைச்சர் போர் நிறுத்த உடன்படிக்கை இரத்து செய்ததற்கான கடிதத்தை தற்போது இலங்கைக்கான நோர்வே தூதுவரிடம் கையளித்துள்ளதாக தெரியவருகின்றது.

அத்துடன் கண்காணிப்புக் குழு தமது பணியை வரும் 16ம் திகதியுடன் இடைநிறுத்திக் கொள்ள உத்தேசித்துள்ளது.

ஜானா

  • Replies 67
  • Views 13.8k
  • Created
  • Last Reply

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அதிகாரபூர்வமாக விலகுவதாகவும், அதற்கான 14 நாள் கால அவகாசத்தை சிறிலங்கா அரசாங்கம் சற்று முன்னர் நோர்வே தூதரகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

சிங்களவனின் இந்த முடிவு தமிழர்தரப்புக்கு பல விதத்தில் மிகவும் சாதகமான விடையாதான்,ஆனால் அதை

இந்த நேரத்தில் எமது போராட்டத்திற்கு சாதகமாக சர்வதேச அரங்கில் நகர்த்திச்செல்வதென்பது எமது

புலம் பெயர் மக்களின் கைகளிலேயே உள்ளது.

தமிழ் ஊடகங்களின் கூழ்முட்டை வேடம் எப்ப முடிவுக்கு வருமோ?

போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் வெளியேறுவர்: நோர்வே அறிவிப்பு -- புதினம்

போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து அரசு விலகிக் கொள்கிறது என அறிவிப்பு: -- சுடர் ஒளி

வான்கோழி எனக்கு ஒண்டும் புரியவில்லை உங்கள் தீக்கோழி அரி(றி)வால் விளங்கபடுத்த முடியுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஊடகங்களின் கூழ்முட்டை வேடம் எப்ப முடிவுக்கு வருமோ?

போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர் வெளியேறுவர்: நோர்வே அறிவிப்பு -- புதினம்

போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து அரசு விலகிக் கொள்கிறது என அறிவிப்பு: -- சுடர் ஒளி

நேற்று தான் கூறினீர்கள் தமிழ் ஊடகங்களை வாசிக்க சந்தோசமாக இருப்பதாக.இன்று இப்படி பிளேற்ரை இப்படி மாத்துகின்றீர்கள்.

இனி வரும் இனி வரும் காலங்கள் எங்களின் காலங்கள்

ரணிலைவெல்லவிடாது மகிந்தரை கொண்டு வந்ததின் அர்த்தம் தமிழருக்கு இப்பபோது புரிந்து இருக்கும், அமெரிக்காவிற்கும் அதன் சொற்படி நடந்த நோர்வேக்கும் இது ஒரு முகத்தில் கரிபூசும் செயல். அமெரிக்காவின் ஆத்திரம் தமிழர்பால் நெருங்கி வர உதவும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசினால் ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்த உடன்படிக்கையை இரத்து செய்துவிட்ட செய்தியை நோர்வே உத்தியோகபூர்வமாக விடுதலைப் புலிகளுக்கு விரைவில் அறிவிக்கும். உடனேயே விடுதலைப் புலிகள் ஒரு கண்துடைப்புக்காவது "ஐயோ, அருமையான அந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை சிங்கள அரசு இரத்து செய்து விட்டது எமது துர் அதிஸ்டம்தான். இதனால் தமிழ் மக்களுக்குத்தான் சரியான இழப்பு என்று ஒப்புக்காவது ஒரு பதில் அறிக்கையை விடவேண்டும்(விடுவார்கள்)" பின்னர் என்ன எங்கள் தேசியத் தலைவருக்கு அனைத்து தமிழ் மக்களும் கைகொடுத்து அவரின் பின்னால் அணிதிரளவேண்டிய ஒன்றுதான் பாக்கி.

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை என்றாலும் அரசினதும் உலக நாடுகளினதும் பசப்பு வார்த்தைக்கு இடம் கொடாமல் எமது வழியை நாம் நிர்ணயிக்க நிச்சயமாக ஒரு நல்ல தருணம். வாய்ப்பை தமிழ் மக்கள் நன்றாக பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகல்: எழுத்து மூலம் நோர்வேக்கு சிறிலங்கா அறிவிப்பு

[Thursday January 03 2008 01:26:41 PM GMT] [யாழ் வாணன்]

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அதிகாரபூர்வமாக விலகுவதாக சிறிலங்கா அரசாங்கம் சற்று முன்னர் நோர்வே தூதரகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம இந்த அறிவிப்பினை விடுத்திருப்பதாக அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அலரி மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

நோர்வேத் தூதரகத்திற்கு இந்த அதிகாரபூர்வ அறிவிப்பினை விடுத்த பின்னர் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளையும் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தலைமையிலான அரச உயர்மட்டக்குழு சந்தித்து பேச்சு நடத்தவிருக்கின்றது.

இதேவேளை சிறிலங்கா அரசாங்கம் போர்நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையிலிருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறியதனைத் தொடர்ந்து கொழும்பிலும் அதனை அண்டிய கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதிகளிலும் கடுமையான பாதுகாப்பு (Red alert) போடப்பட்டிருக்கின்றது.

விடுதலைப் புலிகள் இன்றைய சந்தர்ப்பத்தில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தக்கூடும் என்பதாலேயே நாட்டின் கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதிகளில் Red alert கடுமையான பாதுகாப்பை அமுல்படுத்த பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சின் இந்த உத்தரவை அடுத்து கொழும்பினதும், கேந்திர முக்கியத்துமிக்க பகுதிகளினதும் பாதுகாப்பு முப்படையினரிடமும், காவல்துறையினரிடமும் ஒப்படைக்கப்படுள்ளது.

வீதிச் சோதனை நிலையங்களில் காவல்துறையினரும், படையினரும் பாதுகாப்பு நடைமுறைகளை கவனிக்க அமைச்சர்களினதும் அரசாங்க அதிகாரிகளினதும் பாதுகாப்பை வான்படையினரும் கொமாண்டோக்களும் கவனிப்பதாகவும் காவல்துறையினரும் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் வீதிச் சோதனைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதால் கொழும்பின் பல பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான வாகனங்களும் பயணிகளும் கடுமையாகச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தலைமையிலான ஊடகவியலாளர் மாநாடு நாளை மாலை நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்

SLMM இன் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் விடுக்கப்பட்ட அறிக்கை.

http://www.slmm.lk/W_Report/SLMM%20Stateme...uary%202008.pdf

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை எழுதுகிறதுகளைப் பார்த்தாப் போல பெரிய சண்டை தொடங்குமட்டும் பொழுதுபோக்கவெண்டு சாத்திரப் புத்தகங்களும் ரஜனி பட டிவிடிக்களும் வாங்கலாம் எண்டு நினைச்சிருக்கிறன்.. என்ன நினைக்கிறியள்?

இஞ்ச எழுதுறதுகளையும் தமிழ் ஊடகங்களின் தலையங்கங்களையும் பார்த்தா தமிழரும் உடன்படிக்கையில இருந்து விலகத்தான் விருப்பமாக இருந்தவை சிங்களவன் அதை துணிந்து செய்ததுக்காக சர்வதேசம் சிங்களத்தில் குற்றம் காணுவதில் அர்த்தம் இல்லை எண்ட மாதிரி இருக்கு.

ராஜபக்ச அரசு எழுந்தமாதிரியாக விலகப்போவதாக அறிக்கை விடவில்லை. அவர்கள் (பொங்கல் செய்தியாக கூட இருக்கலாம்?) செய்ய இருக்கும் political/diplomatic stunt அய் எப்படி தமிழர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது தான் தற்பொழுது முக்கியமானது.

சிறீலங்கா ஒரு முழு அங்கீகாரம் கொண்ட நாடாக இருக்கிறது. தமிழர் தரப்பு முழு அங்கீகாரம் வேண்டி நிக்கிறது, ஓரளவு அங்கீகாரத்தை 2002 உடன்படிக்கை மூலம் பெற்றிருந்தது.

இன்றைய நிலையில் சிறீலங்காவைப் பொறுத்தவரை முடியுமான அனுகூலங்கள் எல்லாவற்றையும் பெற்றும் 2002 இன் ஆரம்பத்தில் விட்ட தவறுகளும் முடிந்தவரை சீர செய்யப்பட்டும் விட்டதாக (undo) கருதுகிறது. அவர்களது எதிர்பார்ப்புகள் நிகழ்ச்சிநிரல்களின் படி கணிசமான அளவில் உண்மையும் அது தான்.

தமிழர் தரப்பைப் பொறுத்தவரை இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலைக்கு ஓரங்கட்டப்பட்டு நிக்கிறார்கள். இதனால் அவர்கள் மீது சர்வதேசத்தின் மூலம் போடக் கூடிய அழுத்தங்களிற்கான சந்தர்ப்பங்கள் அவற்றின் தாக்கம் பலாபலன்கள் என்பது மிகவும் குறைவாகவே இருப்பதாக சிறீலங்கா கருதுகிறது. இதுவும் பல வழிகளில் உண்மை தான்.

எனவே சர்வதேசம் இனி சிறீலங்காவிடம் எதையாவது பெற வேண்டும் என்றால் அல்லது சிறீலங்கா எதையாவது பெற வேண்டும் என்றால் அவற்றிற்கான விலையாக கொடுப்பதற்கு தமிழர் தரப்பின் மீதான அழுத்தங்கள் என்ற "பண்டம்" பெரிதாக இல்லை என்றாகிவிட்டது. எனவே சிறீலங்காவைப் பொறுத்தவரை சர்வதேசத்திற்கு எதிர்த்தரப்போடு பேரம்பேசி தனது நலன்களை முன்னெடுப்பது தான் சரியான வழியாகத் தெரிகிறது. இல்லாவிட்டால் சர்வதேசம் iniciative அய் தன்பக்கம் எடுத்து தமிழர் தரப்பு மீது சாய்ந்து காட்டி காட்டி தனது நலன்களை முன்னெடுக்க முயலும் என்பது சிறீலங்காவிற்கு தெரியும்.

மிகுதியை விளங்கிக் கொள்வது கடினமாக இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க என்ன சொல்லவாறீங்க அண்ணாச்சி.. 2002 இல் தமிழர் தரப்பு கட்டியிருந்த கோ...ணத்தையும் பறிகொடுத்திட்டு நிக்குது... எனி என்ன கிடக்குது.. ஆயுதங்களை கீழ வைச்சிட்டு.. போக வேண்டியான் என்றீங்களோ.

இதையே ஒரு கருத்துப்படமா யாழில போட்டா என்ன அண்ணாச்சி..!

பாலகுமாரண்ண கடைசியா ஒன்று சொல்லி இருக்கிறார்.. ராஜ தந்திரிகள் வராத போது எங்களிடம் ராஜதந்திரம் இல்லை என்றும்.. அவர்கள் வந்த போது ராஜ தந்திரம் இருந்ததென்றும் அர்த்தப்படக் கூடாது என்று..! சொன்னது பல அண்ணாச்சிகளுக்கு சரி வரப் புரியல்ல..! :unsure::lol:

அண்ணாச்சிகள் இதையும் கொஞ்சம் ஊன்றிப் படியுங்கோ...

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24159

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்ச எழுதுறதுகளையும் தமிழ் ஊடகங்களின் தலையங்கங்களையும் பார்த்தா தமிழரும் உடன்படிக்கையில இருந்து விலகத்தான் விருப்பமாக இருந்தவை சிங்களவன் அதை துணிந்து செய்ததுக்காக சர்வதேசம் சிங்களத்தில் குற்றம் காணுவதில் அர்த்தம் இல்லை எண்ட மாதிரி இருக்கு.

ராஜபக்ச அரசு எழுந்தமாதிரியாக விலகப்போவதாக அறிக்கை விடவில்லை. அவர்கள் (பொங்கல் செய்தியாக கூட இருக்கலாம்?) செய்ய இருக்கும் political/diplomatic stunt அய் எப்படி தமிழர்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது தான் தற்பொழுது முக்கியமானது.

சிறீலங்கா ஒரு முழு அங்கீகாரம் கொண்ட நாடாக இருக்கிறது. தமிழர் தரப்பு முழு அங்கீகாரம் வேண்டி நிக்கிறது, ஓரளவு அங்கீகாரத்தை 2002 உடன்படிக்கை மூலம் பெற்றிருந்தது.

இன்றைய நிலையில் சிறீலங்காவைப் பொறுத்தவரை முடியுமான அனுகூலங்கள் எல்லாவற்றையும் பெற்றும் 2002 இன் ஆரம்பத்தில் விட்ட தவறுகளும் முடிந்தவரை சீர செய்யப்பட்டும் விட்டதாக (undo) கருதுகிறது. அவர்களது எதிர்பார்ப்புகள் நிகழ்ச்சிநிரல்களின் படி கணிசமான அளவில் உண்மையும் அது தான்.

தமிழர் தரப்பைப் பொறுத்தவரை இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலைக்கு ஓரங்கட்டப்பட்டு நிக்கிறார்கள். இதனால் அவர்கள் மீது சர்வதேசத்தின் மூலம் போடக் கூடிய அழுத்தங்களிற்கான சந்தர்ப்பங்கள் அவற்றின் தாக்கம் பலாபலன்கள் என்பது மிகவும் குறைவாகவே இருப்பதாக சிறீலங்கா கருதுகிறது. இதுவும் பல வழிகளில் உண்மை தான்.

எனவே சர்வதேசம் இனி சிறீலங்காவிடம் எதையாவது பெற வேண்டும் என்றால் அல்லது சிறீலங்கா எதையாவது பெற வேண்டும் என்றால் அவற்றிற்கான விலையாக கொடுப்பதற்கு தமிழர் தரப்பின் மீதான அழுத்தங்கள் என்ற "பண்டம்" பெரிதாக இல்லை என்றாகிவிட்டது. எனவே சிறீலங்காவைப் பொறுத்தவரை சர்வதேசத்திற்கு எதிர்த்தரப்போடு பேரம்பேசி தனது நலன்களை முன்னெடுப்பது தான் சரியான வழியாகத் தெரிகிறது. இல்லாவிட்டால் சர்வதேசம் iniciative அய் தன்பக்கம் எடுத்து தமிழர் தரப்பு மீது சாய்ந்து காட்டி காட்டி தனது நலன்களை முன்னெடுக்க முயலும் என்பது சிறீலங்காவிற்கு தெரியும்.

மிகுதியை விளங்கிக் கொள்வது கடினமாக இருக்காது.

குழப்பாமல் யாராவது ஒருத்தர் சொல்லுங்கோ, இந்த புஉஓ நீக்கம் பற்றிய அறிவிப்பு எங்களுக்கு சாதகமா பாதகமோ.

புஉஓ நீக்கம் பற்றிய அறிவித்தலால தமிழீழ பிரகடனத்துக்கு வழிவிட்டிருக்காமே!!! உண்மையா?

ஆலக்சாண்ரா பலசில 12 ம் திகதி தமிழீழ அறிவிப்பு வரக்கூடுமெண்டும் வேலைத்தலத்தில சென்னாங்க, குறுக்கு அண்னே அடிக்க வராதேங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்ச எழுதுறதுகளையும் தமிழ் ஊடகங்களின் தலையங்கங்களையும் பார்த்தா தமிழரும் உடன்படிக்கையில இருந்து விலகத்தான் விருப்பமாக இருந்தவை சிங்களவன் அதை துணிந்து செய்ததுக்காக சர்வதேசம் சிங்களத்தில் குற்றம் காணுவதில் அர்த்தம் இல்லை எண்ட மாதிரி இருக்கு.

தலைவர் சொன்ன மாதிரி செத்த பிணத்தை வைத்து எத்தனை நாட்களுக்கு தான் அழுகிறது.ஏதோ எடுத்ததற்கும் வி.புலிகள் மேல் குற்றம் சாட்டும் சர்வதேசம் அரசுஇன்று அந்த கைங்கரியத்தை செய்வதையிட்டு தமிழ் மக்கள் பூரிப்படையத்தானே வேண்டும். எள்ளளவும் பலனில்லாத உடன்படிக்கையை வைத்து தமிழ்மக்கள் ஏன் பூசிக்க வேண்டும்.மாறாக தூக்கி எறிவதில் தமிழ் மக்கள் ஆர்வமாக தான் உள்ளார்கள்.

புலிகளைப்பற்றி வசைபாடி அரசையும் அதன் செயற்பாடுகளையும் பாடிவர்களின் முகத்தில் மகிந்தவே தன்னுடைய கைகளால் கரி அள்ளி புசியிருப்பதன் முலம் தமிழர்களிற்கு தமிழிழம் தான் தீர்வு என்பதை மீண்டும் அரைகுறை நம்பிக்கை உள்ள தமிழர்களிற்கு அடித்து சொல்லப்படடிருக்கின்றது

Edited by puthijavan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.