Jump to content

எழும்படி பெண்பாவாய்


Recommended Posts

பதியப்பட்டது

எழும்படி பெண்பாவாய்

ஒரு பேப்பரிற்காக

மார்கழி மாதம் ஊரில் திருவெண்பாவை காலம் தொடங்கினாலே பதின்ம வயதுகளில் இருந்தஎங்களிற்கு பக்தி பாதி பம்பல் பாதி கலந்த கொண்டாட்டம்.மயிர்க்கால்கள் குத்திட்டு நிக்கும் மெல்லிய மார்கழி மாதத்து குளிரிர். இப்ப ஜரோப்பா குளிரோடை ஒப்பிடேக்கை அதெல்லாம்ஒரு குளிரா என்று தோன்றுது. அதிகாலை நாலுமணிக்கு எழும்பி சில்லென்ற கிணத்து நீரை அள்ளி நடுக்கியபடி தலையில் ஊற்றிக்கொண்டு முன் ஜாக்கிரதையாக ஒரு காற்சட்டையை உள்ளை போட்டு மேலை அப்பாவின் பட்டுச்சால்வையை வேட்டியாக்கி கட்டிக்கொண்டு என்னிடம் இருந்த மிருதங்கத்தையும் தூக்கிக்கொண்டு கோயிலடிக்கு ஓடுவேன். மிருதங்கம் வைச்சிருந்தனான் எண்டதும் நான் ஏதோ பெரிய மிருதங்க வித்துவான் எண்டு கண்டபடி கற்பனை பண்ண வேண்டாம். அதையும் சொல்லிப்போட்டு பிறகு அங்காலை போறன்.முந்தி இந்த இந்த வாத்திய கருவிகள் இல்லாட்டிசங்கீதம் வாய்ப்பாட்டு (கணக்கு வாய்பாடு அல்ல)பழகுகின்ற ஆண்கள் வேட்டி கட்டி கழுத்திலை தொப்புளை தொடுகிற அளவுக்கு ஒரு பதக்கங்சங்கிலி இல்லாட்டி உருத்திராட்சை கொட்டை வைத்த ஒரு சங்கிலி போடுறதெண்டது ஒரு விதிக்கபடா சம்பிரதாயம் இல்லாட்டி எழுதப்படாத சட்டம் எண்டும் சொல்லலாம்.

அப்பிடித்தான் எனக்கும் ஒரு சங்கிலி போடவேணுமெண்ட ஆசை அதாலை சங்கீதம் படிக்கப்போறன் எண்டு கேக்க முடியாது ஏணெண்டால் எனக்கே தெரியும் என்னை சங்கீதம் படிக்க அனுப்பி ஊர்காரரின்ரை வெறுப்பை வீட்டுகாரர் சம்பாதிக்க மாட்டினம் அதாலை மிருதங்கம் பழகபோனால் அதை சாட்டா வைத்து வீட்டிலை ஒரு உருத்திராட்ச கொட்டை வைச்ச சங்கிலி வாங்கலாம் எண்டு ஒரு திட்டத்தை போட்டு நானும் மிருதங்க வகுப்புக்கு போகத் தொடங்கினாப்பிறகு அப்பாட்டை மெல்லமாய் சங்கிலி விசயத்தை சொன்னன் . அதுக்கு அப்பா என்னட்டை "டேய் மிருதங்கம் பழகுறதுக்கு முதல்லை மிருதங்கம்தான் தேவை அதை வாங்கித்தாறன் நீ நல்லாப் பழகி அரங்கேற்ரம் செய்யிற அண்டைக்கு நானே உனக்கு உருத்திராட்சை கொட்டை வைச்ச சங்கிலியை மேடையிலை வைச்சு போடுறன் எண்டுபோட்டார்".பிறகென்ன நான் மிருதங்கம் பழகி அரங்கிலை ஏறி இதெல்லாம் நடக்கிற கூத்தா அதாலை மிருதங்கம் வாங்கித்தந்த கொஞ்சநாளிலையே மிருதங்கம் பழகப்போறதை விட்டிட்டன்.

ஆனால் அந்தமிருதங்கத்தைதான் திருவெண்பா காலங்களிலை நான் கொண்டு போறனான். அதாலை அந்த பஜனைக்கோஸ்ரிக்கு நான் தான் மிருதங்க வித்துவான் .பஜனைப்பாட்டு ராகத்துக்கு ஏற்றமாதிரியெல்லாம் நான் தாளம்வாசிக்கமாட்டன். பஜனை பாடுறவை நான் அடிக்கிறதாளத்துக்கு ஏற்றமாதிரி பாடவேண்டியதுதான். சரி இனி விசயத்துக்கு வாறன்.கோயிலடியிலை என்னைப்போலவே நண்பர்கள் சங்கு.சேமக்கலம்.சிஞ்சா(தாளம்)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாத்திரியார்!!நானும் உங்களை மாதிரித்தான் படலைபடலையாய் திருவம்பா படிச்சு களச்சுப்போன மனுசன்.நாங்கள் பெற்றோல்மைக்ஸ்சோடை மினைக்கடேல்லை லாம்புதான் :D

எங்களுக்கு ஹோர்லிக்ஸ் எல்லாம் இல்லை வெறுந்தேத்தண்ணிதான் :lol:

கதைச்சால் கனக்க கதைக்கலாம் வேண்டாம் :D

சாத்திரியாரே தொடருங்கள் உங்கள் பழைய கதை பயணத்தை வாழ்த்துக்கள் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாத்திரியார் உங்க காலம் பொற்காலம். ஒரு சமூகம் விரும்பியோ விரும்பாமலோ கட்டிக்காத்த விடயங்கள் உங்களுக்கு தந்த அனுபவங்கள் இன்று கதையாக வர அதை ரசிக்க என்று ஒரு கூட்டமிருக்கு..!

ஆனால் இன்றைக்கு எங்க நிலை...???! எவனோட டேட்டிங் போய் என்னத்தை.. பண்ணினம் என்று வெளில சொல்ல அதைக் கேட்ட தோழி.. அடி போடி நீ இவ்வளவுதான் செய்தாயா நான் எல்லாம் முடிச்சிட்டன் எத்தனை போய் பிரண்டடி என்ற லைவில... என்று சொல்லுற நிலைல இருக்குதுகள்..???!

இவையின்ர கதை... எப்படி இருக்கும் என்று நினைக்கிறியள்...?????????! ஊரில தெருநாயிட கதை போல இல்ல...! :lol::rolleyes:

Posted

நெடுக்ஸ் தாத்தா தெருநாய்கள் கதைச்சதை ஒட்டுக்கேட்ட நீங்களே இவ்ளோ அறிவாளியா இருக்கேக்க தாங்கள் டேற்றிங் போன பெடியங்களைப் பற்றிக் கதைக்கிறவை உங்கள விட நல்லாத்தானிருப்பினம். அவைன்ர எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் அவ்வளவு கவலைப்படுறது அவசியம் இல்லை என்றது என்ர அபிப்பிராயம்.

இருந்தாலும் நீங்கள் யாராலயோ ரொம்பப் பாதிக்கப்பட்டிருக்கிறீங்கள

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுக்ஸ் தாத்தா தெருநாய்கள் கதைச்சதை ஒட்டுக்கேட்ட நீங்களே இவ்ளோ அறிவாளியா இருக்கேக்க தாங்கள் டேற்றிங் போன பெடியங்களைப் பற்றிக் கதைக்கிறவை உங்கள விட நல்லாத்தானிருப்பினம். அவைன்ர எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் அவ்வளவு கவலைப்படுறது அவசியம் இல்லை என்றது என்ர அபிப்பிராயம்.

எனக்கோரு சந்தேகம்.. அதேன் ஆங்கிலத்திலும் Bitch என்றால் இழக்காரமாப் பார்க்கினம்..???! இல்ல தெருப் பெட்டை நாயை.. (அது செய்யுறத கேட்னும் என்றில்ல ரோட்டால போகேக்கையே தெரியும்) பிச் என்றுவினம்.. ஆண் நாயைச் சொல்லுறதில்ல..

அப்ப ஒருவேளை ஆங்கிலமும் ஆணாதிக்க மொழியா இருக்குமோ..???! அப்ப எனிப் பெண்கள் தாங்களா ஒரு மொழியை இயற்றி அதில கதைக்கட்டும். அப்ப நமக்கு விளங்காதில்ல..! சுபம். :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கோரு சந்தேகம்.. அதேன் ஆங்கிலத்திலும் Bitch என்றால் இழக்காரமாப் பார்க்கினம்..???! இல்ல தெருப் பெட்டை நாயை.. (அது செய்யுறத கேட்னும் என்றில்ல ரோட்டால போகேக்கையே தெரியும்) பிச் என்றுவினம்.. ஆண் நாயைச் சொல்லுறதில்ல..

அப்ப ஒருவேளை ஆங்கிலமும் ஆணாதிக்க மொழியா இருக்குமோ..???! அப்ப எனிப் பெண்கள் தாங்களா ஒரு மொழியை இயற்றி அதில கதைக்கட்டும். அப்ப நமக்கு விளங்காதில்ல..! சுபம். :D:lol:

நெடுக்கண்ணே,பிச் எண்டால் தெருப் பெட்டை நாய் எண்டு அர்த்தம் கிடையாது. வெறும் "பெண் நாய்"எண்டு தான் அர்த்தம். நாயின் குடும்பத்தைச் சேர்ந்த நரி, ஓநாய், மரநாய் இவையிண்ட பெண்பாலுக்கும் பிச் எண்டு தான் சொல்வார்கள். அனேக விலங்குகளில், பெண்பாலுக்கும் ஆண்பாலுக்கும் வெவ்வேறான சொற்பதங்கள் இருக்கு, ஏன் நாய்க்கு இல்லை எண்டு தெரியாது. ஆனால் பிச் எண்ட பதம் ஒருவரை இழித்துரைக்கப் பயன்படும் slang ஆகவும் பயன்படும். அனேகமாக இழித்துரைக்கப் படும் நபர் பெண்ணாக இருப்பார், ஆனால் அது சில சமயம் ஆணாவோ அல்லது உயர்திணையற்ற பொருளாகவோ கூட இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுக்கண்ணே,பிச் எண்டால் தெருப் பெட்டை நாய் எண்டு அர்த்தம் கிடையாது. வெறும் "பெண் நாய்"எண்டு தான் அர்த்தம். நாயின் குடும்பத்தைச் சேர்ந்த நரி, ஓநாய், மரநாய் இவையிண்ட பெண்பாலுக்கும் பிச் எண்டு தான் சொல்வார்கள். அனேக விலங்குகளில், பெண்பாலுக்கும் ஆண்பாலுக்கும் வெவ்வேறான சொற்பதங்கள் இருக்கு, ஏன் நாய்க்கு இல்லை எண்டு தெரியாது. ஆனால் பிச் எண்ட பதம் ஒருவரை இழித்துரைக்கப் பயன்படும் slang ஆகவும் பயன்படும். அனேகமாக இழித்துரைக்கப் படும் நபர் பெண்ணாக இருப்பார், ஆனால் அது சில சமயம் ஆணாவோ அல்லது உயர்திணையற்ற பொருளாகவோ கூட இருக்கலாம்.

ஊரில எல்லாம் பெட்டை நாயை வீட்டுக்க வளர்க்கிறது ரெம்பக் குறைவு. தெருவில தான் லோ லோ என்று அலையும். அதுதான் தெருப் பெட்டை நாய் என்றன். பெட்டை நாயைத்தான் சொல்லுறது.. தெருப் பெட்டை நாயையும் அப்படித்தான் சொல்லுறது. நான் சொன்னதில தப்பில்லையே. நான் சொல்லேல்லையே தெருப் பெட்டை நாயை மட்டும் தான் பிச் என்றது என்று. :lol:

உங்கள் விளக்கத்துக்கு நன்றி. பொதுவா கூடாத ஒழுக்கமுள்ள பெண்களைப் பார்த்து... அதுதாங்க கண்டவங்க கூடையும் சுத்திற பெண்களைப் பார்த்து பிச் என்பார்கள் வெள்ளையர்கள்..! அதில பெரிய மதிப்பு இருக்காது உணர்வுபூர்வமா தாழ்ச்சி தான் இருக்கும்..! ஆனால் அப்படி பல பெண்கள் கூட சுத்திற ஆண்களை பிச் என்று சொல்லுறதில்ல... மாறிக் கீறிச் சொன்னாலே தவிர..! :o:D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருவம்பாவுக்கும் பெட்டைநாய்க்கும் என்னப்பா சம்பந்தம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருவம்பாவுக்கும் பெட்டைநாய்க்கும் என்னப்பா சம்பந்தம் :lol:

என்ன சம்பந்தம் எண்டு சாத்திரி சொல்லுவார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருவம்பாவுக்கும் பெட்டைநாய்க்கும் என்னப்பா சம்பந்தம் :lol:

சம்பந்தம் இருக்கு கு.சா இருக்கு.

பெட்டை நாய் குட்டிபோட்டா ஆண் குட்டியைக் களவெடுக்கிற கூட்டம்.. பெட்டை நாயையும் பெட்டைக் குட்டியையும் தெருவில விட்டிட்டுப் போக.. அதுகள் தெருவிலேயே சாப்பிட்டு தெருவிலேயே வளர்ந்து தெருவிலேயே குடியும் குடித்தனமும் செய்யுறது மட்டுமல்ல... தெருவையே ஆட்சியும் செய்ய வெளிக்கிட்டிடுங்கள்.

திருவெம்பாவைக்கு அதிகாலை எழும்பி மார்கழிக் குளிருக்க குளிச்சிட்டு நடுங்க நடுங்க.. சைக்கிள மிதிச்சா.. ரோட்டில கரையோரம கிடங்கு கிண்டிட்டு சுருண்டு கிடக்கிற பெட்டை நாய் விட்டுக் கலைக்குமே.. கோயில் வாசல் வரை.. காலைத் தூக்கி சைக்கிள் பார்ல வைச்சிட்டு.. நாயைப் பார்த்து எச்சிலைத் துப்பித் துப்பி... படுற அவஸ்தை... அதெல்லாம் அனுபவச்சாத்தானே தெரிய.. சம்பந்தம்..! :D

ஊரில நாய் தான் அப்படின்னா.. புலம்பெயர் தேசத்தில.. சந்து சந்தா.. மனிசாள் அப்படி...! இப்ப சொல்லுங்கோ சம்பந்தம் இருக்கோ இல்லையோ என்று. :o:D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுக்காலபோவான்,

பெட்டை நாயென்றால் உங்களுக்கு இவ்வளவுக்கு நக்கலா?

அந்த பெட்டை நாயை தெருவில் விட்டதும் மனித வர்க்கத்தின் ஆணாதிக்கச் சிந்தனைதான் என்பது உங்களுக்குத் தெரியாதா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எழும்படி பெண்பாவாய்!

பழைய ஞாபகங்களை மீட்டிச் செல்கிறது. அந்நாட்கள் எவ்வளவு அழகானவை. உங்கள் படைப்பிற்கு நன்றி சாத்திரியார்.

Posted

அது மட்டுமில்லை எங்களோடை படிக்கிற இல்லாட்டி தெரிஞ்ச பெட்டையளின்ரை வீட்டிலை அண்டைக்கு தேத்தண்ணி தாறநாளெண்டால் பிறகென்ன அதைவிட்ட சந்தோசம் வேறையொண்டும் இல்லை.

நேக்கு சரியான கவலையா இருக்கு :lol: நேக்கு இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கவில்லை ஏனேன்றா ஈசியா பிட்டை போட்டிருக்கலாம் சாத்திரி அங்கிள் பெட்டைகளுக்கு :) அது தான் சொன்னனான் எனிவே மிஸ் பண்ணிட்டேன் :) .....அது சரி சாத்திரி அங்கிள் உங்கள் பஜனையில் மனதை பறிகொடுத்தவா யார் என்று சொல்லவே இல்லை :D சும்மா கேட்டனான் டவுட்டை கிளியர் பண்ண எனிவே சாத்திரி அங்கிளின் கதை வழமை போல் தன் அநுபவத்தை நகைசுவையுடன் கதையாக சொல்லி சென்ற விதம் அருமை.... :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுக்காலபோவான்,

பெட்டை நாயென்றால் உங்களுக்கு இவ்வளவுக்கு நக்கலா?

அந்த பெட்டை நாயை தெருவில் விட்டதும் மனித வர்க்கத்தின் ஆணாதிக்கச் சிந்தனைதான் என்பது உங்களுக்குத் தெரியாதா?

ஒரு பெரிய தீர்மானத்தோடதான் இணைய வலையில் வலம் வாறீங்க போல..! இல்ல.. பெட்டை நாயை அண்டாம இருக்கிறதில மனிதப் பெண்களும் தான் தீவிரமா இருக்கினம்..! ஆனால் பழி என்னவோ வழமை போல ஆண்கள் மீதும்.. அவர்களை வசைபாட பாவிக்கப்படும் கற்பனை ஆதிக்கத்தின் மீதும் தான்..! :):)

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்படிதிருவெண்பாவை அதிகாலையில் என்னுடன் கூத்தும் கும்மாளமுமாய் கூடிக் கும்மியடித்த எத்தனையோ என்வயது நண்பர்கள் இன்று உயிருடன் இல்லை.எண்ணிப்பார்க்கிறேன் கொடிய யுத்தத்தில் கோரமாய் மாண்டும் விடுதலையை நேசித்து வீரமரணம் அடைந்தும் காரணமேயின்றி காணாமல் போனவர்கள் என்று சுமார் பதினைந்து பேருக்கு மேல்.ஊரை எழுப்புவதற்காய் அன்று என்னுடன் தெருத்தெருவாய் திரு வெண்பாபாடியவர்கள் இன்று எந்த வெண்பாபாடினாலும் எழுப்பமுடியாதவர்களாய். ஆனாலும் திருவெண்பாவை காலம் வரும்போதெல்லாம். அவர்கள் நினைவுகளுடன்

உங்களின் நண்பர்களது சிலரது கதைகளை உங்களின் முந்தைய பதிவுகளில் படித்திருக்கிறேன். நீங்கள் முன்பு யாழில் பதியாத மற்றைய நண்பர்களின் (மாவீரர்களின்) கதைகளை எங்களுக்குச் சொல்லுங்கள்.

Posted

சாத்திரியின் மிருதங்கம் அனுபவத்தைப் படித்ததும், நான் மிருதங்கம் படித்த காலம் யாபகத்துக்கு வருகிறது. எனது அப்பா எனக்கு மிருதங்கம் கற்பிக்க விரும்பினார். எனக்கு மிருதங்கம் கற்பது எனோ பிடிக்கவில்லை. அப்பாவின் ஆசைக்காக குரும்பசிட்டி சன்மார்க்க சபையில் சின்னராசா ஆசிரியரிடம் மிருதங்கம் கற்றேன். நல்லூர் நாவலர் வீதியில் இருக்கும் கோவிந்தசாமி என்பவரிடமிருந்து மிருதங்கம் வாங்கி கற்று வந்தேன். மிருதங்கம் முதலாவது வகுப்பில் சித்தி அடைந்து, 2ம் வகுப்புக்கு வந்து விட்டேன். ஆனால் எனக்கு மிருதங்கம் கற்க விருப்பமில்லை. சில வகுப்புகளுக்கு செல்வதில்லை. பரீட்சையும் வந்துவிட்டது. நான் எழுத்துப் பரீட்சையில் நன்றாகச் செய்வேன். ஆனால் தொழில் பரீட்சை(மிருதங்கம் அடித்துக் காட்டுவது) வகுப்புகளுக்கு ஒழுங்காகச் செல்லாததினால் என்னால் செய்யமுடியாமல் இருந்தது. ஆதிதாளம் மட்டுமே எனக்குத் தெரியும். மற்றைய தாளங்கள் தெரியாது. தொழில் பரீட்சைக்கு தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் நடைபெற்றது. ஆதிதாளத்தில் வாசித்துக் காட்டச் சொன்னார்கள். வாசித்துக்காட்டினேன். அடுத்து ஒரு ராகத்தில் வாசிக்கச் சொன்னார்கள். எனக்கு வாசிக்கத் தெரியாது. நல்லவேளை அச்சமயத்தில் உலங்குவானூர்தியில் இருந்து தெல்லிப்பளையில் இராணுவத்தினர் சுடத்தொடங்க எல்லோரையும் போல நானும் ஒடத்தொடங்கினேன். எனக்கு ஆதிதாளத்தோடு புள்ளிகள் வழங்கினார்கள். எழுத்துப்பரீட்சையில் அதிகபுள்ளிகள் பெற்றதினால் மிருதங்கம்2ம் வகுப்பில் அதிவிசேட சித்தியில் சித்தி பெற்றுவிட்டேன். பிறகு 3ம் வகுப்பு படிக்க வேண்டும். எனக்கு படிக்கிற நோக்கமிருக்கவில்லை. இந்தியா இராணுவம் யாழ் நகரைக் கைப்பற்றிய காலத்தில் இராணுவம் நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கும் வந்தது. கொள்ளை அடித்துச் சென்ற இராணுவத்தினர், எனது மிருதங்கத்தையும் குத்திப்பார்த்துவிட்டு, வெள்ளத்தண்ணீருக்குள் போட்டு விட்டு சென்றார்கள். உடனடியாக மிருதங்கத்தினை உபயோகிக்க முடியாத நிலை. அதன் பிறகு மிருதங்கம் படிப்பதினை நிறுத்திவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாத்திரியார்! கதை மிகவும் நன்று. :mellow::(

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.