Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தை 1 தான் தமிழ்ப் புத்தாண்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தூயவன்!

கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் தைப் பொங்கலை பல இடங்களில் கொண்டாடுகின்றார்கள். தேவாலங்கள,; மசூதிகள் போன்றவற்றிற்கு முன்னால் பொங்கலிட்டு இதைக் கொண்டாடுவார்கள். இந்த ஆண்டும் கொண்டாடுவார்கள்.

இதில் சூரிய வழிபாடு ஒரு அங்கமே தவிர, அதுவே எல்லாம் அல்ல. தொடர்ந்து மூன்று நாட்கள் பலவிதமான அம்சங்களோடு இந்த விழா கொண்டாடப்படுகின்றது.

தைப்பொங்கல் என்பது உணவுக்கு வழிசமைத்த சூரியனுக்கு நன்றி சொல்வதற்காக என்று விட்டு. அதில் சூரியனே முக்கியத்துவம் இல்லை என்றால் என்ன கதை? இல்லை அது தேவையில்லை என்றால், தைப்பொங்கலைச் சிதைக்கின்ற உங்களின் ஆரம்ப அடையாளமே அது.

நீங்கள் சூரியனை வழிபடத் தயாரா? நாஸ்திக்கக் கொள்கை என்னாகும் என்ற கேள்விக்கு நழுவலான பதில்கள் வேண்டாம். வழிபடுவேன், மாட்டேன் என்ற பதில்களை மட்டும் சொல்லுங்கள்.

கிறிஸ்தவர்களில் சில தேவாலயங்கள் மட்டும் தான் கொண்டாடுகின்ற, முஸ்லீம்கள் அறவாக்க கொண்டாடுவதில்லை. சிலதேவாலயங்களில் இந்துக்கடவுளைக் கூட வைத்து வழிபடுகின்றார்கள். அதற்காக அது இந்து ஆலயம் ஆகிவிட முடியுமா என்ன?

  • Replies 95
  • Views 12.4k
  • Created
  • Last Reply

நான் எதையும் வழிபட மாட்டேன். ஆனால் நான் பொங்கலைக் கொண்டாடுவேன்.

எந்தத் தேவாலயத்தில் இந்துக் கடவுளை வைத்து வழிபடுகிறார்கள் என்று சொல்ல முடியுமா?

இஸ்லாமிய மக்களும் மசூதி வாசலில் பொங்கலைக் கொண்டாடுகிறார்கள். இது பற்றி சென்ற ஆண்டும் செய்தி வந்தது. இந்த ஆண்டும் வரும்.

நான் எதையும் வழிபட மாட்டேன். ஆனால் நான் பொங்கலைக் கொண்டாடுவேன்.

எந்தத் தேவாலயத்தில் இந்துக் கடவுளை வைத்து வழிபடுகிறார்கள் என்று சொல்ல முடியுமா?

இஸ்லாமிய மக்களும் மசூதி வாசலில் பொங்கலைக் கொண்டாடுகிறார்கள். இது பற்றி சென்ற ஆண்டும் செய்தி வந்தது. இந்த ஆண்டும் வரும்.

தைப்பொங்கல் இந்து முறைமையான கால அட்டவணையில்(கலண்டர்) கொண்டாட படுவதால் நீங்கள் பொங்கல் கொண்டாடுவது தவறு...

அதோடு போன வருடம் 17ம் திகதி வந்த பொங்கலை பாப்பான் சதி செய்து இந்தமுறை 15ம் திகதியாக்கி போடாங்களாம்... பாப்பானின் சதியில் வந்த பொங்கலை நீங்கள் கொண்டாடலாமோ...???

கூடவே கூடாது...! :lol:

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்சை புதுசாய் வாற ஆக்கள் இந்த பந்திபந்தியாய் வாற சமாச்சாரங்களை கண்டு பயந்து ஓடீடாதேங்கோ :( உப்புடித்தான் தைப்பொங்கலுக்கு பந்திபந்தியாய் எழுதி சண்டப் பிடிப்பம்.அதுக்குப்பிறகு சித்திரைப்பொங்கலுக்கும் பக்கம்பக்கமாய் எழுதி குத்துப்படுவம். :D

அதுக்குப்பிறகு ஆடிப்பிறப்பு தீபாவளி கந்தசஷ்டி இப்புடியெல்லாம் எல்லாம் வரும் அப்பவும் நாங்கள் இப்புடித்தான் குத்துப்படுவம் அதை விட இன்னொரு விசேசம் மாவீரர் நாளும் வரும் அதுக்கு இந்தவருசம் வித்தியாசமாய் இழுபறிப்படுவம் :lol:

சோ லேடிஸ் அன்ட் ஜென்ரில்மன் நாங்கள் வருசாவருசம் அரைச்ச மாவையேதொடர்ந்து அரைச்சுக்கொண்டிருப்பம் இதை யாரும் கண்டு கண்டுகொள்ளக்கூடாது :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன்,

தாய் மொழி தமிழை நீச மொழியென்றும் சமிஸ்கிருதத்தை தெய்வ மொழியென்று போற்றும் கூட்டத்தோடு பேசி ஏதாவது பயனிருக்கப்போகிறதா?

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

யனவரி முதலாம் திகதி இலங்கை நேரம் 12.00 மணிக்கு இங்குள்ள சிங்களத் தொலைக்காட்சியில் தைப்பொங்கல் ஒத்ததாய் பொங்கல் பொங்குவதை காட்டியிருந்தார்கள்.

சிங்களவர்களும் பொங்குவார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யனவரி முதலாம் திகதி இலங்கை நேரம் 12.00 மணிக்கு இங்குள்ள சிங்களத் தொலைக்காட்சியில் தைப்பொங்கல் ஒத்ததாய் பொங்கல் பொங்குவதை காட்டியிருந்தார்கள்.

சிங்களவர்களும் பொங்குவார்களா?

நக்கல்?

தூயவன் முன்னே சொன்னது போல், தைத்திரு நாள் கணிக்கப்பட்டதே தமிழ்ப்புத்தாண்டிலிருந்துத

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன்,

தாய் மொழி தமிழை நீச மொழியென்றும் சமிஸ்கிருதத்தை தெய்வ மொழியென்று போற்றும் கூட்டத்தோடு பேசி ஏதாவது பயனிருக்கப்போகிறதா?

தமிழனைக் காட்டுமிராண்டி என்று சொன்னவரின் கொள்கையைத் தூக்கிக் கொண்டு திரிந்தால் மட்டும் பலன் இருக்கப் போகுதாக்கும். :D:lol:

உண்மை தான் இதைப்பற்றி அவர்கள் தயாரித்த குறும் படத்தில் சொல்லப்பட்டுள்ளது. சனி கிரகத்திற்கு அருகாமையில் பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவில் ஏதோ பேசுவது போல் உள்ளது. இந்து சமயத்தில் சொல்லப்படுபவை அத்தனையும் ஏதோ காரணத்தோடு தான் சொல்லப்பட்டுள்ளன.

சனிபகவான் கொட்டாவி விட்டு இருப்பார். :lol::D:)

சனிபகவான் கொட்டாவி விட்டு இருப்பார். :(:lol::D

அல்லது கெட்ட ஆவிகளின் விளையாட்டாய் இருக்கும். :):(:(

இஞ்சை புதுசாய் வாற ஆக்கள் இந்த பந்திபந்தியாய் வாற சமாச்சாரங்களை கண்டு பயந்து ஓடீடாதேங்கோ :( உப்புடித்தான் தைப்பொங்கலுக்கு பந்திபந்தியாய் எழுதி சண்டப் பிடிப்பம்.அதுக்குப்பிறகு சித்திரைப்பொங்கலுக்கும் பக்கம்பக்கமாய் எழுதி குத்துப்படுவம். :D

அதுக்குப்பிறகு ஆடிப்பிறப்பு தீபாவளி கந்தசஷ்டி இப்புடியெல்லாம் எல்லாம் வரும் அப்பவும் நாங்கள் இப்புடித்தான் குத்துப்படுவம் அதை விட இன்னொரு விசேசம் மாவீரர் நாளும் வரும் அதுக்கு இந்தவருசம் வித்தியாசமாய் இழுபறிப்படுவம் :lol:

சோ லேடிஸ் அன்ட் ஜென்ரில்மன் நாங்கள் வருசாவருசம் அரைச்ச மாவையேதொடர்ந்து அரைச்சுக்கொண்டிருப்பம் இதை யாரும் கண்டு கண்டுகொள்ளக்கூடாது :D

ஓ இதுவா சங்கதி கு. சா தாத்தா நானும் ஏதோ அறிவுபூர்வமாக கதைக்கீனம் என்று வந்து பார்த்தா ஒரு இலவும் விளங்கவில்லை நீங்க சொன்னா பிறகு நல்லா விளங்குது :) .....அப்ப அரைத்த மாவை அரைப்போம் துவைத்த துணியை துவைப்போம் என்று சொல்லுறியள் சரி அரைகட்டும் அரைகட்டும் :) .....இப்ப அரைத்து பழகினா தானே கல்யாணம் கட்டினா பிறகு ஈசியா இருக்கும் என்ன தாத்தா நான் சொல்லுறது சரி தானே :( ...இப்ப நான் சொல்லுறேன் தீர்ப்பு தமிழர்களின் புதுவருசம் ஏப்பிரல் 1 திகதி (ஆங்கில கலண்டர் படி)...ஏனென்றா அன்றைக்கு தான் முட்டாள்கள் தினமாம்!! :lol:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உப்புடி எங்கடை எல்லா பண்டிகைகளையும் புனித நாட்களையும் பண்பாடுகளையும் மட்டந்தட்டி ஒரு மாதிரி அழிச்சுப்போடுங்கோ.

மேலைத்தேயத்திற்கு சோரம் போனவர்களே நாத்தீகவாதிகளே உங்களால் எப்படி எங்கள் கலைகலாச்சாரம் நியதிகளை மாற்றியமைக்கமுடியும்?

பரிணாமவளர்ச்சி எனும் பெயரில் தாயின் மடிசுகத்தைவிட்டு மாற்றானின் மடி சுகத்தை அனுபவிக்க துடிக்கும் முதுகெலும்பில்லா ஜென்மங்கள் :D

அனைவருக்கும் தமிழ்த் தை புத்தாண்டு வாழ்த்துக்கள்!

:( :( :D

  • கருத்துக்கள உறவுகள்

எனது தைப்பொங்கல் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்( திருவள்ளுவர் ஆண்டு 2039).

  • கருத்துக்கள உறவுகள்

சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா?

-தஞ்சை நாராயணசாமி

பிரபவ முதல் அக்ஷய வரை 60 வருடங்கள் சித்திரை முதல் நாளை ஆண்டு துவக்க நாளாகக் (தமிழ்ப் புத்தாண்டு) கொண்டிருக்கிறார்கள். சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் இந்த நாளை விஷு புண்ணிய காலம் என்பர்.

வடதேசத்தில் பைசாகி என்றும் கேரளத்தில் விஷு என்றும் தெலுங்கு தேசத்தில் ஆண்டு தொடக்க நாளை யுகாதி என்றும் கொண்டாடுகிறார்கள். வருஷப் பிறப்பு என்பது சில தெய்வீகக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டும் அனுஷ்டிக்கப்படுகிறது.

மற்ற பண்டிகைகளைப் போன்றே புத்தாண்டு தினத்திற்கும் தெய்வ வழிபாட்டு நியதிகள் உண்டு. தெலுங்கு தேசத்தவர் வருடப் பிறப்பன்று எண்ணெய்க் குளியல் செய்து புத்தாடை உடுத்தி வடை போளி பாயசத்துடன் சமையல் செய்து பண்டிகை கொண்டாடுவர். கேரளத்தில் முதல் நாள் நடுக் கூடத்தில் அரிசி காற்கறிகள் எல்லாம் சேமித்து வைத்து குத்து விளக்குகளும் ஏற்றி விடிந்து எழுந்ததும் கண்ணை மூடிக் கொண்டே நடுக்கூடத்துக்கு வந்து முதல் முதலாகக் கண்ணாடியில் பார்ப்பார்கள். இதனால் ஆண்டு முழுவதும் யோகம் கூடும் என்பது அய்தீகம். இதை விஷுக்களி காணுதல் என்பர். கேரளாவில் நடைபெறும் இன்னொரு வழிபாடு குருவாயூரப்பனின் தரிசனம். வருடத் தொடக்கத்தில் குருவாயூரப்பன் முகத்திலேயே விழிக்க வேண்டும் எனும் ஆவலோடு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குருவாயூர்க் கோயிலில் முதல் நாள் இரவில் காத்திருப்பார்கள். காலை 2 மணிக்கு அல்லது 3 மணிக்கு கதவுகள் திறந்ததும் குருவாயூரப்பனை தரிசிக்கும் வழக்கம் இன்றும் உண்டு. தமிழ் நாட்டிலும் புத்தாண்டு தினத்தில் கண்ணாடியில் முகம் பார்க்கும் வழக்கம் பல இடங்களில் உண்டு.

தமிழகத்தில் பரவலாக புத்தாண்டு தினத்தில் வீட்டை மெழுகி கோலம் செம்மண் இட்டு வாயிற்படிக்கு மஞ்சள் குங்குமம் பூசி மாவிலைத் தோரணம் கட்டி பூஜையறையை அலங்கரித்து விளக்கேற்றி வைத்து வழிபடுவதோடு அன்று பூஜையில் புது வருடப் பஞ்சாங்கம் வாங்கி வந்து அதற்கும் குங்குமப் பொட்டு வைத்து மலர்சூடி பூஜையை முடித்துவிட்டு பெரியவர்கள் பஞ்சாங்கப் பலனை வாசிக்க மற்றவர்கள் கவனமுடன் கேட்பது வழக்கம்.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று சமையலில் வேப்பம்பூ பச்சடி மாங்காய் பச்சடி வடை பருப்பு சேர்த்துப் படைத்து உண்பர். இன்பமும் துன்மும் கலந்து வருவதே வாழ்க்கை என்பதை உணர்த்தவே சமையலில் மேற்கண்ட பதார்த்தங்கள் சேர்த்துப் படைத்து உண்பது அய்தீகம்.

பஞ்சாங்கம் திதிவாரம் நட்சத்திரம் யோகம் கரணம் என்ற பஞ்ச அங்கங்கள் சேர்ந்தது பஞ்சாங்கம். இந்த அய்ந்து அங்கங்களையும் பார்த்து அறிவதால் அஷ்ட அய்சுவரியங்களும் பெருகும் என்பது சாஸ்திரங்களின் கூற்று.

திதி சந்திரனை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப் படுவது. சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடைப் பட்ட தூரமே திதி தினமும் திதி பார்ப்பதால் சம்பத்துகள் பெருகும்.

வாரம் பார்த்து அறிவதால் ஆயுள் விருத்தி ஏற்படும்.

நட்சத்திரம் நான்கு பாதங்களுடன் திகழும் நட்சத்திர நடப்பு விவரங்களை தினமும் அறிவதால் தீவினைகள் அகலும்

யோகம் சூரியனும் சந்திரனும் சுற்றிக் கொள்ளும்போது ஏற்படுவது யோகங்கள். ஒவ்வொரு யோகத்துக்கும் தனித்தனி குணங்கள் உண்டு. தினம் யோக விசேஷன் காண்பதால் பிணிகள் நீங்கும்.

கரணம் திதியில் பாதி கரணம். திதி பற்றி பஞ்சாங்கம் பார்த்தறிவதால் காரிய சித்தி உண்டாகும்.

மகத்துவம் மிக்க பஞ்ச அங்கங்களையும் அனுதினமும் வாசித்தலை முதன் முதலாகக் தொடங்கும் நோக்கில் புது வருடத்தன்று வழிபாட்டோடு பஞ்சாங்கம் வாசிப்பார்கள். இது போன்றே புத்தாண்டு தினத்தில் ஏழைகளுக்கு நீர்மோர் விசிறி தானம் செய்வதால் சுபமங்கள வாழ்வு பெறலாம். (தினகரன் அருள்)

சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள். சித்திரை மாதத்தை வசந்த ராகம் என்பர்.

சித்திரரை மாதத்தின் முதல் நாள்தான் பிரம்மன் உலகத்தைப் படைத்தான் என்று புராணம் கூறுகிறது.

சித்திரை மாத திருதியை திதி அன்று மகாவிஷ்ணு மீனாக (மச்சம்) அவதாரம் எடுத்தார்.

சித்திரை மாதத்தில் சுக்கில பஞ்சமியில் லட்சுமி சத்திய லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாக கூறப்படுவதால் அன்று லட்சுமி பூஜை செய்வது நன்மை தரும்.

சித்திரை சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை பிறந்தால் என்று தேவி பாகவதம் கூறுகிறது.

சித்திரை பவுர்ணமி அன்று காஞ்சிபுரம் சித்திரகுப்தன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பூஜையின் போது இந்திரன் சித்திரகுப்தனை வழிபடுவதாக அய்தீகம்.

சித்திரை முதல் தேதி கோயில்களில் பஞ்சாங்கம் படிப்பார்கள். திதி வாரம் நட்சத்திரம் யோகம் கரணம் என்ற அய்ந்து அங்கங்களைக் கொண்டது பஞ்சாங்கம். திதியை அறிவதால் லட்சுமியின் அருளும் வாரத்தை அறிவதால் நீண்ட ஆயுளும் நட்சத்திரத்தை அறிவதால் வினைகள் தீருவதும் யோகத்தை அறிவதால் நோயற்ற வாழ்வும் கரணத்தை அறிவதால் காரிய சித்தியும் ஏற்படும்.

(குமுதம் பக்தி ஸ்பெஷல்)

(சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தினமாம். பிரபவ முதல் அக்ஷய வரை 60 வருடங்கள் தமிழ் வருடங்களாம். ஒன்று கூட தமிழில் இல்லை. எல்லாம் வட மொழியிலேயே உள்ளன. இதற்கு ஒரு கதை. நாரதன் பெண் ஆசை கொண்டு கிருஷ்ணனிடம் வந்து நீ நிறையப் பெண்களை வைத்திருக்கிறாயே எனக்கு ஒரு பெண்ணைக் கொடு என்று கேட்டானாம். நான் எந்த வீட்டில் இல்லையோ அங்கு உன் எண்ணத்தை நடத்திக் கொள் என்றானாம். நாரதன் எல்லா கோபிகைகளின் வீடுகளுக்கும் சென்று பார்த்து எல்லா வீட்டிலும் கிருஷ்ணன் இருக்க திரும்பி அவனிடமே வந்து தன் இச்சையைத் தெரிவித்தானாம். கிருஷ்ணனும் நாரதனும் சேர்ந்து வாழ்ந்து 60 பிள்ளைகளைப் பெற்றனராம். அவைதான் பிரபவ முதல் அக்ஷய வரையான வருடங்களாம். ஆணும் ஆணும் சேர்ந்து வாழ்ந்து 60 பிள்ளைகளைப் பெற்றனராம். ஓரினச் சேர்க்கையில் எய்ட்ஸ் தானே வரும். எப்படி பிள்ளைகள் பிறந்தன? நல்ல வேடிக்கை.

வேறு இடங்களில் புத்தாண்டுகள் வேறு வேறு நாட்களில்தான் உள்ளன. சித்திரை முதல் நாள் புத்தாண்டு அல்ல. தமிழர்களுக்கு புத்தாண்டு ஆரம்பம் தை முதல் நாள்தான். பார்ப்பான் அதில் தன் வேலையைக் காட்டி சித்திரை முதல் நாள் என்றும் 60 ஆண்டுகளும்

12 மாதங்களும் வடமொழியாகவே மக்கள் மனதில் திணித்து நடந்து வருகிறது.

கேரளத்தில் கண்ணாடி பார்ப்பதும் குருவாயூர் கோயிலில் முதல் நாளே சென்று காத்திருந்து குருவாயூரப்பனை வணங்குவதும் பழக்கத்தின் அடிப்படையிலேதான். தமிழ்நாட்டில் வீடுகளில் தோரணம் முதலியன கட்டி அலங்கரித்து வழிபடுவதும் பஞ்சாங்கம் தானும் படித்து மற்றவர்களுக்கும் வாசிக்க வேண்டுமாம். பஞ்சாங்கம் அய்ந்து அங்கங்களாம். திதி பார்த்தால் செல்வம் பெருகுமாம். வாரம் ஆயுள் அதிகரிக்கவும் நட்சத்திரம் தீவினைகள் தீர்க்கவும் யோகம் பிணிகள் நீங்கவும் கரணம் காரிய சித்திக்கும் படிக்க வேண்டுமாம். அதற்காகவே தினமும் பஞ்சாங்கம் படிக்கும் நோக்கில் ஆண்டின் முதல் நாளில் படித்து நலம் அடைய வேண்டுமாம். மக்களின் ஆசையைத் தணிக்க இவை உதவும் என்று பொய் சொல்லி மக்களை முட்டாள்களாகவே வைத்துவிட்டனர். மக்களும் சிந்திக்காமலே பார்ப்பான் விரித்த வலையில் வீழ்ந்து மானமும் அறிவும் அற்றவர்களாகவே இருக்கின்றனர். இந்த மூடப்பழக்கங்கள் மாறவேண்டும்.

-விடுதலை (13.4.2007)

  • கருத்துக்கள உறவுகள்

எது தமிழ்ப் புத்தாண்டு? -- அறிவியல் மற்றும் வரலாற்று முடிவு

--மஞ்சை வசந்தன்

திராவிட இயக்கத்துக்கு பார்ப்பனரைத் தலைமைத் தாங்கச் சொல்லி இன்றைக்குத் தமிழன் எப்படி தரம் கெட்டு இழிந்து கிடக்கின்றானோ அதேபோல அன்றைக்கும் ஏமாந்து வாழ்ந்ததன் விளைவு சமஸ்கிருத ஆண்டை தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடும் மடமை.

தமிழாண்டு என்று 60 ஆண்டுகளைக் கூறுகிறார்களே அதில் ஏதாவது ஒன்று தமிழாண்டு என்றோ தமிழ்ச்சொல் என்றோ காட்ட முடியுமா? அத்தனையும் சமஸ்கிருதப் பெயர்கள் அல்லவா?

தன் இனப் பெருமையை எல்லாம் இழந்து அடுத்தவன் அடையாளங்களை ஏற்று அலைகின்ற அவலம் நீங்கும்போதுதான் தமிழன் வாழ்வான்; தமிழும் வாழும்!.

நாடார் சங்கத்திற்கு வன்னியர் தலைவர் என்றால் நாடே சிரிக்காதா? அது பைத்தியக்காரத்தனம் என்று சொல்லமாட்டார்களா? அப்படியிருக்க சமஸ்கிருத ஆண்டைத் தமிழாண்டு என்று மட்டும் எப்படி ஏற்றுக் கொண்டாடுகின்றனர்? அப்போது மட்டும் ஏன் சிந்திப்பதில்லை? அறிவைப் பயன்படுத்துவது இல்லை?

மரபை மீறலாமா என்கின்றனர். எது மரபு? சமஸ்கிருத ஆண்டை தமிழாண்டு என்று சொல்லி தொல்காப்பியக் காலத் தமிழன் கொண்டாடினானா?

தண்ணீர் என்பதற்கு ஜலம் என்று சொல்வதிலும் சோறு என்பதற்கு சாதம் என்று சொல்வதிலும் பெருமை கொண்ட ஏமாளித் தமிழன் ஏற்றுக்கொண்டதல்லவா இந்தத் தமிழ்ப்புத்தாண்டு?

உண்மையில் தமிழ்ப்புத்தாண்டு என்பது தை முதல் நாளே யாகும். உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்.

உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள்!

உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்!

உயரிய கலைகளைக் கொடுத்தவர்கள்!

உயரிய பண்பாட்டைக் கொடுத்தவர்கள்!

அவ்வகையில் உலகிற்குச் சரியான ஆண்டுக் கணக்-கீட்டைக் கொடுத்தவர்களும் தமிழர்களேயாவர்!. அதுவும் அறிவியல் அடிப்படையில் இயற்கையோடு இயைந்து கணக்கிட்டுச் சொன்னவர்கள்.

ஒரு நாள் என்பது என்ன?

சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்றுவதற்கு ஆகும் காலம்.

ஒருமாதம் என்பது என்ன?

ஒரு முழு நிலவுத் தோன்றி மீண்டும் ஒரு முழு நிலவு தோன்ற ஆகும் காலம். அதனால் தான் மாதம் என்பதற்கு திங்கள் என்ற தமிழ் சொல் உள்ளது. திங்கள் என்றால் நிலவு என்று பொருள். திங்களை (நிலவை) அடிப்-படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் மாதம் திங்கள் என்று அழைக்கப்பட்டது.

அதேபோல் ஆண்டு என்பது என்ன?

சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி நகர்வதாய்த் தோன்றும் (உத்ராயணம் தொடங்கும்) நாள் முதல் மீண்டும் அதே நிலை (உத்ராயணம் மீண்டும்) தொடங்கும் வரையுள்ள

கால அளவு ஓர் ஆண்டு.

அதாவது சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற எடுத்துக் கொள்ளும் காலம் ஒருநாள்.

சூரியன் தென் கோடியில் தோன்றி மீண்டும் தென் கோடியில் தோன்றும் வரையிலான காலம் ஓராண்டு.

சுருங்கச் சொன்னால் ஓர் உத்ராயணத் தொடக்கத்திலிருந்து மீண்டும் அடுத்த உத்ராயணத் தொடக்கம் வரும் வரையுள்ள காலம் ஓர் ஆண்டு.

உத்ராயணம் என்றால் வடக்கு நோக்கல் என்று பொருள். தட்சணாயனம் என்றால் தெற்கு நோக்கல் என்று பொருள்.

சூரியன் தை மாதத் தொடக்கத்தில் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் பங்குனி சித்திரையில் உச்சியில் இருக்கும் பின் ஆடியில் வடகோடியில் இருந்து தென்கோடி நோக்கும் பின் தென் கோடிக்கு வந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு சூரியன் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் வரையிலான கால அளவு ஓர் ஆண்டு.

சூரியன் நகர்வதில்லை என்பது அறிவியல் உண்மை. ஆனால் நம் பார்வைக்கு நகர்வதாகத் தெரிவதை வைத்து அவ்வாறு கணித்தனர்.

இவ்வாறு சூரியனின் இருப்பைக் கொண்டுதான் நாளும் கணக்கிடப்பட்டது. ஆண்டும் கணக்கிடப்பட்டது. நிலவைக் கொண்டு மாதம் கணக்கிடப்பட்டது. ஆக காலக் கணக்கீடுகள் என்பவை இயற்கை நிகழ்வுகளை வைத்தே கணக்கிடப்பட்டன. இவ்வாறு முதலில் கணக்கிட்டவர்கள் தமிழர்கள்.

தை முதல் நாள் அன்றுதான் சூரியன் வடதிசை நோக்கி (உத்ராயணம் நோக்கி) நகரத் தொடங்கும். எனவே தை முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்-டாடப்பட்டது. ஆனால் சித்திரை முதல் நாளை ஆண்டின் முதல் நாள் என்பதற்கு எந்தக் காரணமும் அடிப்படையும் இல்லை.

தை முதல் நாளைக் கொண்டு ஆண்டுக் கணக்கீட்டைத் தமிழர்கள் தொடங்கியதை ஓட்டியே ஆங்கில ஆண்டின் கணக்கீடும் பின்பற்றப்பட்டது. தமிழாண்டின் தொடக்கத்தை (தை மாதத் தொடக்கத்தை) ஒட்டியே ஆங்கில ஆண்டின் தொடக்கம் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். 12 நாள்கள் வித்தியாசம் வரும். அந்த வித்தியாசம் கூட ஆங்கில நாட்டின் இருப்பிடம் தமிழ்நாட்டின்

இருப்பிடத்திலிருந்து வட மேற்கு நோக்கி 6000 மைல்களுக்கு அப்பால் இருப்பதால் ஏற்பட்டது.

ஏசு பிறப்பை வைத்து கணக்கீடு என்பது சரியன்று. காரணம் ஏசு பிறந்தது டிசம்பர் 25. மாறாக சனவரி 1ஆம் தேதியல்ல. 2006 ஆண்டுகள் என்பதுதான் ஏசு பிறப்பைக் குறிக்குமே தவிர சனவரி என்ற ஆண்டின் தொடக்கம் ஏசு பிறப்பை ஒட்டி எழுந்தது அல்ல.

ஆக இயற்கை நிகழ்வுகளின் சுழற்சியை அடிப்படையாக வைத்துத்தான் காலக்-கணக்கீடு என்பது உறுதியாவதோடு தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதும் உறுதியாகிறது.

மாறாக பிரபவ தொடங்கி அட்சய வரையிலுள்ள 60 ஆண்டுகள் எந்த அடிப்படையில் உருவானவை? ஏதாவது அடிப்படை உண்டா? கிருஷ்ணனுக்கும் நாரதருக்கும் 60 ஆண்டுகள் பிறந்தன என்ற நாற்றப் புராணத்தைத் தவிர வேறு ஆதாரம் இல்லையே!

அதுமட்டுமல்ல அந்த அறுபது ஆண்டு-களில் எந்தப் பெயரும் தமிழ்ப் பெயர் அல்ல. எல்லாம் சமஸ்கிருதப் பெயர். தமிழாண்டு என்றால் தமிழ்ப் பெயரல்லவா இருக்க-வேண்டும்?

தமிழர்களும் தமிழர் தலைவர்களும் அறிஞர்களும் தமிழ் வரலாற்றாளர்களும் இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டிலிருந்தாவது தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட ஆவன செய்ய வேண்டும்! தமிழக அரசும் அதை அதிகாரப்பூர்மாக அறிவிக்க வேண்டும்! தமிழாய்ந்த தலைவர் கலைஞர் காலத்திலே இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கலைஞர் இதை நடைமுறைப்படுத்துவார் என்று தமிழர்கள் குறிப்பாக அயல்-நாடுகளில் வாழும் தமிழர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். தமிழறிஞர்கள் ஒன்று சேர்ந்து 1921-இல் எடுத்த இந்த முடிவை இந்த ஆண்டாவது அரசு ஏற்று அறிவிக்க வேண்டும். அதை யாரும் எதிர்க்கப்-போவதில்லை. எதிர்ப்பவன் தமிழனாக இருக்கமாட்டான்!

சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி நமக்கு வழி காட்டுகிறார்கள்; உணர்வூட்டுகிறார்கள். கலைஞர் வார்த்தை-களில் சொல்ல வேண்டுமானால் கடல் கடந்த அந்தத் தமிழுணர்வு காலங்-கடந்தாவது நமக்கு வரவேண்டுமல்லவா?

சொந்த அப்பனுக்குப் பிறந்தேன் என்பது தானே ஒருவனுக்குப் பெருமையாக இருக்க முடியும்? அடுத்தவனுக்குப் பிறந்தால் அவமானம் அல்லவா?

தமிழன் ஆண்டு சமஸ்கிருத ஆண்டாய் இருப்பது அதுபோன்ற அவமானத்தின் இழிவின் அடையாளம் அல்லவா?

உலகிற்கு வழிகாட்டிய வாழ்ந்து காட்டிய தமிழன் அடுத்தவனுடையதை இரவல் பெறவேண்டிய இழிவு ஏன்? இழிவு என்று தெரிந்தும் உண்மை என்பது விளங்கியும் இழிவைச் சுமப்பது இந்த இனத்திற்கு அழகாகுமா? எனவே தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடி தலை நிமிர்ந்து தமிழனாக வாழ்வோம்!

1971 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதனால்தான் தமிழனுக்கு ஒரு தொடர் ஆண்டு கிடைத்துள்ளது.

அதேபோல் தமிழனுக்கு உரிய ஓர் ஆண்டுப் பிறப்பு உறுதி செய்யப்பட வேண்டும் அல்லவா? அதை உறுதி செய்த பெருமையும் வழக்கம் போல் கலைஞரையே சேரவேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.

தமிழ் ஆண்டு (திருவள்ளுவர் ஆண்டு)

தமிழ் உலகில் தமிழ் ஆண்டு என்னும் பெயரில் வழக்கில் இருக்-கின்ற பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டுகளின் பெயர்கள் தமிழ் இல்லை. அவை பற்-சக்கர முறையில் இருப்-பதால் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதை அறிவு அறிவியல் தமிழ் மண் மரபு மாண்பு பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாக இல்லை.

எனவே தமிழ் அறிஞர்கள் சான்-றோர்கள் புலவர்கள் 1921-ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது திருவள்ளுவர் காலம் கி.மு. 31 தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்-தார்கள்.

இந்த முடிவை 18.1.1935 ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் உறுதி செய்து அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்து ஆண்டுடன் 31 கூட்டல் வேண்டும் என்றுகூறி திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார். 193531=1966. அதை அறிஞர் அவை ஏற்றுக் கொண்டது. அன்று தொட்டு அறி-ஞர்களால் அவ்வாண்டு நடைமுறைப்-படுத்தப்பட்டு வருகிறது. (பக்கம் 117 திருவள்ளுவர் நினைவு மலர் 1935)

- வ. வேம்பையன்

- உண்மை(ஜனவரி 16-30, 2007)

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டைக்கடிச்சு, மாட்டைக்கடிச்சு, உழவர்களின் பொங்கலைக் கொச்சைப்படுத்த வெளிக்கிட்டார்கள் இந்த்த திராவிட வாதிகள்.

அவர்களுக்கும், சூரியனுக்கும் கொடுக்கின்ற மரியாதையைக் கெடுக்கப் போகின்றார்கள்.

ஏற்கனவே புதுவருடம் என்று ஒன்று இருக்கின்றபோது, இதை மாற்றுவதன் மூலம், காலங்காலமாகத் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றான தைப்பொங்கலின் மரியாதை அழிந்து போய்விடுமா??

அழியத் தான் போகின்றது.

இது புதுவருடமாக மாற்றினால் பொங்கலின் கதி.

இந்த இலட்சண்ததில் தமிழ்ப் பாதுகாவலர்களாம்.

எல்லோருக்கும் எனது இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தை புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டைக்கடிச்சு, மாட்டைக்கடிச்சு, உழவர்களின் பொங்கலைக் கொச்சைப்படுத்த வெளிக்கிட்டார்கள் இந்த்த திராவிட வாதிகள்.

அவர்களுக்கும், சூரியனுக்கும் கொடுக்கின்ற மரியாதையைக் கெடுக்கப் போகின்றார்கள்.

ஏற்கனவே புதுவருடம் என்று ஒன்று இருக்கின்றபோது, இதை மாற்றுவதன் மூலம், காலங்காலமாகத் தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றான தைப்பொங்கலின் மரியாதை அழிந்து போய்விடுமா??

அழியத் தான் போகின்றது.

இது புதுவருடமாக மாற்றினால் பொங்கலின் கதி.

இந்த இலட்சண்ததில் தமிழ்ப் பாதுகாவலர்களாம்.

சேற்றில் கிடப்பவனுக்கு என்னத்துக்கு ஒரு தனித்துவம்.. அவைக்கு என்று ஏன் ஒரு பொங்கல். நகரத்தில் இருக்கும் நாங்கள் எஜமானர்கள் தீர்மானிக்கிறதுதான்.. அறிவியல்...??! சட்டம், சம்பிரதாயம். அதுதான் நாங்களே மதுபானக் கடைகளைத் திறந்து புதிய தமிழ் கலாசாரம் வளர்க்கிறமே தெரியல்லையா..??! :(:D

அவையும் அவையிட அறிவியலும்.. அங்கால இங்கால போனா திராவிடம் என்றதை விட்டா இவைக்குப் பிழைப்புக்கு வழி கிடையாது. திராவிடத்தை வைச்சு.. அறிவியல் என்று பேசுறதே அறிவிலித்தனம்..! காரணம்.. திராவிடம் என்பதே தமிழரின் தனித்துவத்தை குலைக்க என்று புகுத்தப்பட்ட ஒரு சொல்லே தவிர... அதற்கு அறிவியல் ரீதியான எந்த விளக்கமும் கிடையாது..!

இவர்களால் வலிந்து புகுத்தப்படும் எதனையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் மக்களுக்குக் கிடையாது.

என்னைப் பொறுத்தவரை சேற்றில் கிடக்கும் மக்களுக்கான இப்பெருநாளை அவர்களுடன் இணைந்து கொண்டாடுவனே தவிர... இடையில புகுத்திறதுகளை, அநாவசிய இடைச் செருகல்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

இப்படித்தான் இந்து தர்மமும் இடையில் எழுந்த மாற்று மதத்தவராலும் ஆட்சியாளர்களாலும் திரிபுகளை.. இடைச் செருகல்களை சந்தித்து.. அதன் ஆழமிக்கம் ஆன்மீக மெய்யியல் தன்மை மறைக்கப்பட்டு.. அதற்கு தூசண விளக்கம் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது...! இப்படியான இடைச் செருகல்களை ஏற்றுக் கொள்ள ஒட்டு மொத்த தமிழனும் இழிச்ச வாயல் இல்லை.

உலகுக்கு என்றுள்ள புதிய ஆண்டு ஜனவரி 1 இல் உதயமாகிறது.. அதன்படிதான் உலகமே கருமமாற்றுகிறது. அதைத் தொடர்வோம். அதற்காக அதுதான் தமிழர் புத்தாண்டு என்று வரையறுக்கப் போவதில்லை.

சித்திரைதான் எமது மக்களின் முழு இளவேனில்... அவர்கள் அதில் தமிழ் புத்தாண்டை வரவேற்கட்டும்..! :(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு நீங்கள் அறிவியல் என்று சும்மா சுத்துமாத்து கட்டுரைகளை கொண்டு வருகிறீர்கள்.

எனவே உங்களிடம் ஒரு கேள்வி.. வள்ளுவர் இத்தனையாம் ஆண்டுதான் பிறந்தார் என்பதை எப்படித் தீர்மானித்தார்கள்..??! எந்த அறிவியல் வழிமுறைகள் அதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்று விளக்கத்தை எங்காவது இருந்து பெற்றுத்தர முடியுமா..???!

வள்ளுவன் என்ற தமிழன் வாழ்ந்தான் என்பது உண்மை. அவன் உலகப் பொதுமறையான திருக்குறளை தமிழில் தந்தான் என்பதும் உண்மை. ஆனால் வள்ளுவன் எப்போது எத்தனையாம் மணித்தியாலத்தில் எத்தனையாம் நிமிடத்தில் எத்தனையாம் செக்கனும் பிறந்தான் என்பதை எப்படி அறிந்தனர் என்பதுதான் கேள்வியே..???! :(:D

விகிபிடியாவின் தகவலின் படி.. குறித்த கால இடைவெளிக்குள் வள்ளுவன் பிறந்திருக்க வேண்டும் என்று எதிர்வு கூறப்படுகிறதே தவிர.. அவனின் பிறந்த திகதி நேரம்.. அச்சொட்டாகக் கூறப்படவில்லையே ஏன்..???!

Thiruvalluvar's period (based on the Thirukkural per se) is between the second century BCE and the eighth century CE. [3]

http://en.wikipedia.org/wiki/Thiruvalluvar

Edited by nedukkalapoovan

அறுவடை திருநாளில் புத்தாண்டு கொண்டாட தமிழர்கள் ஒன்றும் பைத்தியக்காரர்கள் இல்லை.

இந்துக்களின் 60 வருடங்களில் தமிழ் பெயர் இல்லை என்று கூறும் மேதாவிகளே சித்திரை முதல் பங்குனி வரையிலான மாதங்கள் மட்டும் தமிழ் பெயர்களா? அவையும் வடமொழி பெயர்கள் தான்.

தமிழுக்கென்று எத்தனையோ பெருமைகள் உள்ளன. ஆனால் உங்கள் பொய்யாலும் புரட்டாலும் இல்லாதை இருப்பதாக கூறுவதால் தமிழுக்கு பெருமை சேர்க்கவில்லை. சேறு பூசுகிறீர்கள்.

Edited by vettri-vel

எது தமிழ்ப் புத்தாண்டு? -- அறிவியல் மற்றும் வரலாற்று முடிவு

--மஞ்சை வசந்தன்

தமிழாண்டு என்று 60 ஆண்டுகளைக் கூறுகிறார்களே அதில் ஏதாவது ஒன்று தமிழாண்டு என்றோ தமிழ்ச்சொல் என்றோ காட்ட முடியுமா? அத்தனையும் சமஸ்கிருதப் பெயர்கள் அல்லவா?

தமிழ் ஆண்டுகள் மட்டும் அல்ல, தை, மாசி, பங்குனி முதலிய மாதங்களின் பெயரும் புதன், சனி போன்ற கிழமைகளின் பெயரும் சமஸ்கிருத சொற்கள் தான் ஐயா?

நாடார் சங்கத்திற்கு வன்னியர் தலைவர் என்றால் நாடே சிரிக்காதா? அது பைத்தியக்காரத்தனம் என்று சொல்லமாட்டார்களா?

நாடார் சங்கத்தையும், வன்னியர் சங்கத்தையும் ஒன்று சேர்த்து தமிழர் சங்கம் செய்யுங்கள். அதற்கு ஒரு தமிழனை தலைவன் ஆக்குங்கள். இன்னும் எத்தனை நாளைக்கு நாடான் என்றும் வன்னியன் என்றும் தமிழனை கூறு போட்டே வயிறு வளர்க்கப் போகிறீர்கள். இதில் உங்களை போன்றவர்களுக்கு பகுத்தறிவாளர்கள் என்ற ஒரு பட்டம் வேறு

அப்படியிருக்க சமஸ்கிருத ஆண்டைத் தமிழாண்டு என்று மட்டும் எப்படி ஏற்றுக் கொண்டாடுகின்றனர்? அப்போது மட்டும் ஏன் சிந்திப்பதில்லை?
சமஸ்கிருத சொற்களாக தை, மாசி, பங்குனி, போன்ற மாதங்களின் பெயரும் புதன், சனி போன்ற கிழமைகளின் பெயரும் இருப்பதை நீங்கள் ஏன் சிந்திப்பதில்லை.

தமிழன் ஆண்டு சமஸ்கிருத ஆண்டாய் இருப்பது அதுபோன்ற அவமானத்தின் இழிவின் அடையாளம் அல்லவா?

ஐயா பெரியவரே மஞ்சை வசந்தன்! வசந்தன் என்ற உங்கள் பெயர் கூட சமஸ்கிருத சொல் தான். அது மட்டும் எப்படி உங்களுக்கு அவமானத்தின் அடையாளமாகத் தெரியவில்லை!

தை முதல் நாள் அன்றுதான் சூரியன் வடதிசை நோக்கி (உத்ராயணம் நோக்கி) நகரத் தொடங்கும். எனவே தை முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்-டாடப்பட்டது. ஆனால் சித்திரை முதல் நாளை ஆண்டின் முதல் நாள் என்பதற்கு எந்தக் காரணமும் அடிப்படையும் இல்லை.

என்ன சித்திரை முதல் நாள் புத்தாண்டாக கொண்டாட எந்த அடிப்படையும் இல்லையா :( ? vernal-equinox, sidereal days போன்ற வானியல் நிகழ்வுகளை பற்றி எல்லாம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதுபோன்ற கட்டுரைகள் எழுத முன்பு கொஞ்சம் வானியல் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்போது தெரியும் சித்திரைக்கும் தமிழர்கள் வாழும் புவி மத்திய கோட்டை அண்டிய அயணமண்டல பிரதேசங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று

தை முதல் நாளைக் கொண்டு ஆண்டுக் கணக்கீட்டைத் தமிழர்கள் தொடங்கியதை ஓட்டியே ஆங்கில ஆண்டின் கணக்கீடும் பின்பற்றப்பட்டது. தமிழாண்டின் தொடக்கத்தை (தை மாதத் தொடக்கத்தை) ஒட்டியே ஆங்கில ஆண்டின் தொடக்கம் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். 12 நாள்கள் வித்தியாசம் வரும். அந்த வித்தியாசம் கூட ஆங்கில நாட்டின் இருப்பிடம் தமிழ்நாட்டின்

:(:(:(

ஐயா பெரியவரே! இந்த ஆங்கில புத்தாண்டுக்கும் தை பிறப்புக்கும் இடையிலான 12 நாள் வித்தியாசம் எல்லாம் 2 செப்டெம்பர் 1752 இல் இருந்து தான். அதற்கு முன் பிரிட்டிசாரின் வழக்கிலிருந்த ஜூலியன் கலண்டருக்கும் தை பிறப்புக்கும் கிட்டத்தட்ட 23 நாள் வித்தியாசம் வரும்.

ஜூலியன் கலண்டரில் இருந்து பிரிட்டிசார் தற்போதை கிரகோரியன் கலண்டருக்கு மாறிய 2 செப்டெம்பர் 1752 அன்று 11 நாட்களை கூடுதலாக சேர்த்து 2 செப்டெம்பர் 1752 இன் அடுத்த நாளை 14 செப்டெம்பர்1752 ஆக மாற்றியதை அறிவீர்களா? எதையும் அறிந்து கொள்ள முயற்சி செய்யாமல், கேள்விகள் எதுவும் கேட்காமல் வாசிக்க சில அப்பாவிகள் கிடைப்பார்கள் என்ற தைரியத்தில் கையில் பேனை கிடைத்ததும் நினைத்ததை எல்லாம் கிறுக்கித் தள்ளுவது தான் பகுத்தறிவா? :(

இவ்வளவு தப்பும் தவறுமாக எழுதிவிட்டு உங்கள் கட்டுரையை "அறிவியல் மற்றும் வரலாற்று முடிவு" என்று அழைக்கிறீர்கள். இதை எங்கு போய் சொல்வது? :D

Edited by vettri-vel

வெற்றிவேல்!

இன்றைக்கு எங்களுடைய பெயர்களும், எங்களுடைய கொண்டாட்டங்களும், எங்களுடைய மாதங்களும், வருடங்களும் எதுவுமே தமிழ் இல்லை என்று எமக்குத் தெரியும்.

ஆனால் வருகின்ற தலைமுறைகளாவது தமிழர்களாக வாழட்டும் என்று போராடுகின்றோம். அதன் ஒரு வடிவம்தான் மத சார்பற்ற நிகழ்வான தைப் பொங்கலை தமிழர் புத்தாண்டு என்று பிரகடனப்படுத்தும் முயற்சி.

இன்றைக்கு பல தமிழர்கள் தைத் திருநாளை புத்தாண்டாக மனமுவந்து ஏற்றுக் கொள்கின்றர்கள்.

ஏப்ரல் 14 இல்லாது போய்விட்டால் தங்களுடைய ஒரு நாள் பிழைப்பு இல்லாது போய்விடுமே என்று பார்ப்பனர்கள்தான் இதைத் தடுக்க துடியாய் துடிக்கின்றார்கள்.

தைத் திருநாளே தமிழர்கள் கொண்டாடக் கூடிய புத்தாண்டு

அனைவருக்கும் பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு என்பதில் கந்தன் அப்பு என்பது கூட, ஸ்கந்தன் என்ற வடமொழிச் சொல்லின் திரிபாகும். பெயர் வைத்திருப்பதில் தவறு என்று சொல்லவில்லை. ஆகலும், நுணுக்கம் பார்க்கப் போனால் தமிழன் என்று யாருமே கிடைக்கப் போவதில்லை.

ஏப்ரல் 14ம் திகதியை அழிப்பது மட்டுமல்லாமல், தைப் பொங்கலையும் அழிக்கவல்லவா முனைகின்றனர் இந்தத் திராவிட வாதிகள். தைப் பொங்கல் எதற்காகக் கொண்டாடுகின்றோம் என்ற நோக்கம் அழிந்து போய், கடைசியில் புதுவருடம் என்ற போலித்தனத்தை அதற்குள் புகுத்தி எல்லாத் தமிழரின் அடையாளங்களையும் சிதைக்க முனைகின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.