Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தை 1 தான் தமிழ்ப் புத்தாண்டு

Featured Replies

தமிழர் தாயகத்தில் நடைமுறைக்கு வந்தது "நல்லளிப்பு"

[செவ்வாய்க்கிழமை, 15 சனவரி 2008, 05:48 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

தமிழ் மக்களின் புத்தாண்டு நாளான இன்று செவ்வாய்க்கிழமை (15.01.08) நல்லளிப்பு என்ற கைவிசேடம் வழங்கும் நடைமுறை தமிழர் தாயகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆரிய அடிப்படையிலான சித்திரைப் புத்தாண்டு தமிழரின் புத்தாண்டு என்று கருதப்பட்டு அதில் கைவிசேடம் வழங்குவது நடைமுறையில் இருந்து வந்தது.

தமிழ் மக்களின் நடைமுறையில் உள்ள வழுக்களை களையும் வகையில் கைவிசேடம் எனப்படுவது தமிழரின் உண்மை புத்தாண்டான தைப்பொங்கல் நாளான புத்தாண்டு அன்று "நல்லளிப்பு" என்று வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது.

இதன் தொடக்கம் இன்று கிளிநொச்சியில் உள்ள தமிழீழ வைப்பகத்தில் தொடங்கி வைக்கப்பட்டதுடன் தனியார் மற்றும் அரச நிறுவனங்களிலும் நல்லளிப்பு வழங்கப்பட்டது.

puthinam

  • Replies 95
  • Views 12.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கைவிசேடம் வழங்கும்போது நல்ல நேரம் பார்ப்பார்களா?

தமிழர்களின் வரலாறு திரிக்கப்படுகிறது. இதுவரை சிங்களவர்கள் தான் அதை செய்து கொண்டிருந்ததாக நினைத்துக் கொண்டிருந்தேன்

Edited by vettri-vel

தமிழர்களுக்கு வரலாறு இருக்கிறது எண்று சொல்லும் வெற்றிவேலை வன்மையாக கண்டிக்கிறேன்...! இருந்தால்தானே திரிக்கிறதுக்கு...!

வரலாறில் (இருந்தால்) அருளிய பார்ப்பான் எவ்வளவு புத்திசாலி, தமிழன் எவ்வளவு முட்டாள்... (கரிகால கடை வளவல் உட்பட) நினைக்கும் போது மனசு சந்தோசமாகிறது... (மூலம் சபேசன் அருளியவை)

ஜமுனா வேறொரு பகுதியில் எனக்கு ஒரு ஆலோசனை சொல்லியிருந்தார். நான் இந்து மதத்தை கடுமையாக சாடுவதால், சாதரண இந்துக்களும் தீவிரமான இந்துக்களாக மாறுகின்றார்களாம்.

நான் இதை வேறு மாதிரிப் பார்க்கின்றேன். நாம் பலமாகின்ற போது, எதிரியின் தாக்குதலும் தீவிரமாவது இயல்பானதுதான்.

எம்முடைய பரப்புரைகள் பல இடங்களை சென்றடைவதும், இதனால் பல தமிழர்கள் உண்மையை உணர்வதையும் காண்கின்ற இந்து மத வாதிகள் தமது தாக்குதலை தீவிரப்படுத்துகின்றார்கள்.

இங்கே யாழ் களத்திலும் அண்மையில் அவர்களுடைய தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. எம்மை நோக்கி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கருத்தக்கள் வருகின்றன.

ஆயிரம் ஆண்டுகளாக ஏமாந்திருந்த தமிழர்கள் இன்று விழிப்படைந்து வருவதை தடுப்பதற்கான முயற்சிகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.

ஆனால் இவர்கள் கட்டிய கோட்டைகள் இவர்களுடைய கண் முன்னாலேயே இடிந்து வீழ்கின்றன.

இன்றைக்கு தமிழீழம் தைத்திருநாளை தமிழர்களின் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றது.

இதற்கு காரணம் என்ன?

தைத் திருநாள்தான் தமிழர்களின் புத்தாண்டு என்று அறிவியல் ரீதியாக நிறுவப்பட்டு விட்டாதா? இல்லை

ஏப்ரல் 14இல் பண்டைய தமிழர்கள் புத்தாண்டைக் கொண்டாடவில்லை என்று அறிவியல்ரீதியாக நிறுவப்பட்டு விட்டதா? இல்லை

அப்படியிருந்தும் தமிழர்கள் ஏப்ரல் 14ஐ உதறிவிட்டு ஜனவரி15 புத்தாண்டாகப் பிரகடனப்படுத்த என்ன காரணம்?

ஒரே காரணம்தான். ஏப்ரல் 14 ஆரிய மயப்படுத்தப்பட்டுவிட்டது. அதனால்தான் தமிழர்கள் அதை உதறித் தள்ளுகிறார்கள்.

இது ஒரு எச்சரிக்கை!

இந்துத்துவ வாதிகளே! நீங்கள் உங்களுடைய மதத்தைக் கட்டிக் காக்க விரும்பினால், அதை தமிழர்கள் பின்பற்ற வேண்டும் என்று விரும்பினால், இந்து மதத்தில் இருந்து ஆரியத்தை நீக்கி விடுங்கள்.

இதை விரைவாகச் செய்யுங்கள். எம்மோடு நின்று மல்லுக்கட்டுவதை விட்டு விட்டு, ஆபாசங்களுக்கும் அருவருப்புக்களுக்கும் சப்பைக் கட்டுக் கட்டுவதை விட்டு விட்டு, உங்களுடைய மதத்தை சீர்திருத்துங்கள்

இல்லையென்றால்

தமிழர்கள் இந்து மதத்தையும் விரைவில் உதறித் தள்ளுவார்கள்

விடுதலைபுலிகள் தமிழர் புத்தாண்டாக பொங்கல் தினத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. இது போன்ற பொய் பிரசாரங்கள் செய்து விடுதலை புலிகளை இந்து மதத்திற்கு எதிரானவர்களாக காட்டுவதன் மூலம் தமிழீழத்தின் பெரும்பான்மை மக்களான இந்துக்களை எங்கள் தேசிய விடுதலை போராட்டத்திற்கு எதிராக திருப்பும் சதி நடக்கிறது.

இந்துக்களுக்கு எதிரானவர்களாக விடுதலைபுலிகளை சித்தரித்து தொடர்ந்து இந்திய மக்களின் உண்ர்வுகளை விடுதலைபுலிகளுக்கு எதிரானதாக வைத்திருக்கும் ரோவின் சதி திட்டத்திற்கு துணை போகும் இவர்களில் சிலர் ரோவின் ஏஜென்டுகளாக கூட இருக்க கூடும். தமிழ் மக்கள் இவர்களிடம் கவனமாக இருப்பார்களாக.

விடுதலைக்காக போராடும் ஒரு இயக்கம் தேவையற்ற மத பூசல்களையும், பிளவுகளையும் ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபடப் போவதில்லை.

எங்கள் விடுதலை வேள்வியின் முக்கியமான ஒரு காலகட்டத்தில் ஈழத்தில் வாழும் இந்துக்களை, விடுதலை போரையும் அதன் பின்னான மத சுதந்திரத்தையும் சந்தேக கண்கொண்டு பார்க்க செய்வதன் மூலம் போராட்டத்தை பலவீனப் படுத்த முயற்சிக்கும் இவர்கள், தமிழனத் துரோகிகளே.

யாழ் இணையத்தில் இந்து மதத்துவேசம் கக்கும் சில கட்டுரைகளை பார்த்து விட்டு, சில ஈழத்து பெரியவர்கள் என்னிடம் கேட்ட சில பாரதூரமான கேள்விகளின் பின்னணியிலேயே இதை அவசர அவசரமாக எழுதுகிறேன். முழு விபரமும் அடுத்த சில நாட்களில் எழுதுகிறேன்.

Edited by vettri-vel

ஏப்ரல் 14 ஆரியமயப்படுத்தப்பட்டதே போதுமானதா தமிழ்ப்புத்தாண்டையும், பொங்கலையும் குழப்பியடிக்க. என்னே ஓர் முடிவு.

அப்படியா செய்தி வெற்றிவேல்!

தமிழீழ வைப்பகத்தில் செயற்படும் ரோவின் ஏஜண்டையும் இனம் காட்டி எழுதுங்கள்! :unsure::wub::wub:

தமிழர்களின் அடையாளங்களை மீட்பதால், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போக மாட்டார்கள். தமிழர்கள் அவ்வளவு முட்டாள்கள் அல்ல.

தைத் திருநாளை ஈழத் தமிழர்கள் புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு நீங்கள் ஏன் துள்ளிக் குதிக்கிறீர்கள்?

விடுதலைப் புலிகள் இந்து மதத்திற்கோ, வேறு எந்த மதத்திற்கோ எதிரிகள் அல்ல.

அவர்கள் தமிழர்களின் அடையாளங்களை பாதுகாக்க முனைகின்றார்கள். ஆரியத்தில் இருந்து தமிழை மீட்க முனைகின்றார்கள்.

அப்படிச் செய்வது இந்து மதத்திற்கு எதிரானது என்று நீங்கள் சொல்கின்றீர்களா?

விடுதலைப் புலிகளுக்கு எதிராக நீங்கள்தான் இந்துக்களை திருப்ப முனைகின்றீர்கள். சமஸ்கிருத அறிவு உள்ள நீங்கள் இப்படிச் செய்வது, நிறைய சந்தேகங்களை எழுப்புகிறது. நீங்கள் யார் என்ற கேள்வியை எமக்குள் எழச் செய்கிறது

மீண்டும் சொல்கிறேன். நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றது. இங்கே நின்று மாரடிக்காதீர்கள். ஓடிப் போய் உங்களுடைய மதத்தை சீர்திருத்துங்கள்.

அது ஒன்றுதான் இந்து மதத்தை காப்பதற்கும், உயர்த்துவதற்கும் உள்ள ஒரே வழி

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் திருநாளான உழவர் திருநாளை.. தமிழர்களின் புத்தாண்டு என்று விடுதலைப்புலிகளோ அல்லது எந்த ஒரு தரப்புமோ உலகில் உத்தியோக பூர்வமாகப் பிரகடனப்படுத்தவில்லை. புலம்பெயர்ந்த சிலர் நடத்தும் புல்லுருவிகள் ஆதிக்கம் செய்யும் ஊடகங்கள் தங்கள் இஸ்டத்துக்கு வழமை போல செய்தியைத் திரித்து வழங்குகின்றன.

தமிழீழ வைப்பம்.. விசேட தினங்களில் மக்களுக்காக விசேட வைப்புத் திட்டங்களை ஆரம்பிப்பது வழமை. அந்த வகையில் பொங்கல் திருநாளில் பண வைப்பை ஊக்கிவிக்கும் வையில் இந்த நல்லளிப்பு என்பது அறிமுகமாக்கப்படுகிறதே அன்றி.. தைப் பொங்கலை தமிழர் புத்தாண்டாக பிரகடனப்படுத்தி.. நல்லளிப்பை செய்யவில்லை..!

புலம்பெயர்ந்தவர்கள் சிலர் நடத்தும் ஊடகங்களின் திருகுதாளங்களை இது அப்பட்டமாக இனங்காட்டுகிறது..! புதினம் செய்தியைத் திரித்து வெளியிட்டுள்ளது என்றே தோன்றுகிறது. தன்னிஸ்டத்துக்கு தமிழர் புத்தாண்டு என்ற தனது சுய நிலைப்பாட்டை அதற்குள் திணித்து செய்தி வெளியிட்டுள்ளது..!

அப்படி ஏதேனும் உத்தியோக பூர்வ மாற்றங்கள் வந்திருப்பின் சர்வதேச கவனம் மிக்க தமிழ்நெற் போன்ற ஊடகங்கள்.. இதைக் குறிப்பிட்டு புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி இருக்கும். ஆனால்ல் தமிழ்நெற் வழமை போல பொங்கல் வாழ்த்து மட்டுமே தெரிவித்துள்ளது..!

pongal_front.jpg

TamilNet wishes its readers a Happy Pongkal 2008

http://www.tamilnet.com/ :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எம்முடைய பரப்புரைகள் பல இடங்களை சென்றடைவதும், இதனால் பல தமிழர்கள் உண்மையை உணர்வதையும் காண்கின்ற இந்து மத வாதிகள் தமது தாக்குதலை தீவிரப்படுத்துகின்றார்கள்.

இங்கே யாழ் களத்திலும் அண்மையில் அவர்களுடைய தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. எம்மை நோக்கி மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கருத்தக்கள் வருகின்றன.

இதெப்படி இருக்கென்றால்.. சிங்கள அரசு.. புலிகள் தோற்று ஓடிக் கொண்டிருப்பதால் தான் கொழும்பின் மீதும் படையினர் மீதும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர் என்பது போல இருக்குது..! :unsure:

அதெப்படியோ தெரியல்ல.. தான் தான் ஏதோ பெரிசா வெட்டி விழுந்துறன் என்ற கற்பனையில்... ஆணவத்தோட இருக்கிறவங்க எல்லாம் ஒரே மாதிரித்தான் சிந்திக்கிறாங்க. :wub:

ஈழத்தில் உள்ள 70% இந்துக்களில் 1% கூட.. சபேசன் அண்ணாச்சியின் உளறலுக்கு செவி மடுத்ததாத் தெரியல்ல. ஆனால்.. அண்ணாச்சி என்னென்றால்.. தான் 69% பேரை இந்துமதத்துக்கு எதிரா திருப்பிட்டன்.. இன்னும் 1% தான் இருக்கு என்றாப் போல நினைச்சிட்டு கற்பனை உலகத்தில சஞ்சாரிச்சிட்டு இருக்கிறார். அதன் படியே செயற்படுறார். இது அப்படியே சரத் பொன்சேகா போல.. 60% புலிகள் அழிந்தனர்.. இன்னும் ஒரு 5% தான் இருக்கு என்று யுத்தம் செய்தபடி.. மன்னார் முன்னரங்க நிலைக்கு அப்பால் நகர முடியாத நிலையில இருக்கிறது போல தான் இருக்குது..! :lol::wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வெற்றிவேல், தமிழரின் தலைமையையும் போராட்டத்தையும் ஒரு சில மதங்களோடு அடையாளப் படுத்தும் முயற்சியை நீங்கள் தான் செய்வது போல நான் காண்கிறேன். தமிழர் தலைமையும் புயலின் மையத்தில் வாழும் தாயக மக்களும் மதங்களின் அடிப்படையிலான கருத்துக்களை வைத்துக் கொண்டு தமது தேச விடுதலை ஆதரவைத் தீர்மானிக்கக் கூடும் என்று நீங்களும் நம்பி மற்றவர்களையும் நம்ப வைப்பது முட்டாள் தனம். நீங்கள் ஈழத்தமிழர் தானா என்ற சந்தேகம் தான் உங்கள் தடித்த எழுத்திலுள்ள கருத்தை வாசிக்கும் யாருக்கும் முதலில் ஏற்படும். கவலைப் படாதீர்கள், ஒரு மதப் பிரிவினரில் தமிழர் தேசியப் போராட்டம் எப்போதுமே ஊசலாடும் நிலை வராது. இது போன்ற காரணங்களால் தான் சபேசன் போன்றோர் தமிழையும் இந்துத்துவத்தையும் இப்போதே பிரித்து வைத்து மலரப் போகும் தமிழீழம் மதச்சார்பற்ற அரசாக அமைய ஊக்கமளிக்கிறார்கள். மேலும் உங்கள் கருத்தும் என் கருத்தும் சில மணி நேரங்களில் கருத்துக் களத்திலிருந்து நீக்கப் படலாம் எனவும் நான் நம்புகிறேன்

கந்தப்பு என்பதில் கந்தன் அப்பு என்பது கூட, ஸ்கந்தன் என்ற வடமொழிச் சொல்லின் திரிபாகும். பெயர் வைத்திருப்பதில் தவறு என்று சொல்லவில்லை. ஆகலும், நுணுக்கம் பார்க்கப் போனால் தமிழன் என்று யாருமே கிடைக்கப் போவதில்லை

என்னவொரு துள்ளிக்குதிப்பு !! சிங்களவனும் தன்னை ஆரியனாம் இங்கே தமிழன் என்று யாருமே கிடைக்கப்போவதில்லையாம் எல்லாம் பார்ப்பானியம் தானாம் பிறகேனையைா தமிழனுக்கும் சிங்களவனுக்கும் சண்டை?

கந்தன் என்பது தமிழ்சொல். தமிழர் வழிபாட்டு தெய்வம் இதுவே பின்னாளில் ஸ்கந்தனாக்கப்பட்டது. கந்தனுக்கு குறத்தி என்ற மனைவி இருக்கும் போது தான் தெய்வானை என்ற என்னுமொருத்தி செருகப்பட்டாள். இதை தலைகீழக்க முனைபவர்கள் கடவுள் விசுவாசத்தையும் தாண்டிய பார்ப்பன விசுவாசிகள்.

பார்ப்பானிய வக்காலத்து குறையாது. அவன் சாதிகளின் உச்சத்தில் இருப்பதால் அவனுக்கு வக்காலத்து வாங்கவேண்டிய தேவை ஏன் என்பது தெளிவானது. ஆனால் எல்லாத்தமிழனும் முதுகெலும்பில்லாதவன் என்று எதிர்பார்க்கமுடியாது. ஏன் இவர்கள் பார்ப்பானை விட மோசமாக துள்ளி குதிக்கிறாங்கள் என்று புரியவில்லை. கொஞ்சம் இறுக்கி கதைச்சா வைச்சிருக்கினம் ஒரு ஆயுதம் புலிகளையும் இழுத்து றோவையும் இழுத்து இந்தியாவில் இந்துக்களுக்கு எதிராக புலிகளை காட்டுகினம் என்று ஒரு போடு போடுவார்கள்.

பார்ப்பான் அவனாகவே இருக்கின்றான். கொஞ்சப்பேர் நாங்கள் தமிழனே இல்லை . தமிழ் தமிழ் மொழி கடவுள் அனைத்தும் நீங்கள் தந்தது தான் என்று கெஞ்சி கூத்தாடினம். இந்த பிழைப்புக்கு பேசாம ஒரு வெள்ளை நுலை வேண்டி எல்லத்தமிழனுக்கும் புணூல் போட்டு விட வேண்டியது தானே? எல்லாருக்கும் சமஸ்கிருதம் கற்றுக்கொடுக்க வேண்டியது தானே? சிங்களவனெட்ட போய் நாங்களும் ஆரியன் என்று சொன்னால் அவன் சண்டையை நிப்பாட்டி கட்டி அணைத்துக்கொள்வான். அவனும் தன்னை ஆரியன் என்று தான் சொல்லி திரியிறான்.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் போல் எல்லைதாண்டிய பார்ப்பன வக்காலத்து. அதிகமாக வக்காலத்து வாங்கியவர்களுக்கு முதல் பரிசு ஒரு சோடி பூணூல் .

தமிழீழ வைப்பகத்தில் மட்டும் அல்ல. வேறு பல நிறுவனங்களிலும் நல்லளிப்பு வழங்கப்பட்டிருப்பதாக செய்தி தெரிவிக்கின்றது.

பொதுவாக ஏப்ரல் 14 அன்றுதான் இப்படிச் செய்வார்கள். தைப் பொங்கல் நாளில் அல்ல.

இரண்டு வருடங்களுக்கு முன்பு விடுதலைப் புலிகள் பெரும் எடுப்பில் தைப் பொங்கலைக் கொண்டாடினார்கள். அது பற்றிய படங்கள் அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டது.

ஆனால் இப்படி எந்த ஒரு ஆரியமயப்படுத்தப்பட்ட எந்தப் பண்டிகைகளையும் (எப்ரல் புத்தாண்டு, தீபாவளி) விடுதலைப் புலிகள் கொண்டாடியது இல்லை.

இப்பொழுது தைத் திருநாளில் தமிழீழத்தில் நல்லளிப்பு வழங்குவது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எம்மைப் போல் தீவிரமாக இல்லாது, நீங்கள் விரும்பியது போன்று நிதானமாக, மெதுவாக மாற்றங்களைக் கொண்டு வருகின்றார்கள்.

இது நல்லதுதானே!

விடுதலைபுலிகள் தமிழர் புத்தாண்டாக பொங்கல் தினத்தை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. இது போன்ற பொய் பிரசாரங்கள் செய்து விடுதலை புலிகளை இந்து மதத்திற்கு எதிரானவர்களாக காட்டுவதன் மூலம் தமிழீழத்தின் பெரும்பான்மை மக்களான இந்துக்களை எங்கள் தேசிய விடுதலை போராட்டத்திற்கு எதிராக திருப்பும் சதி நடக்கிறது.

இந்துக்களுக்கு எதிரானவர்களாக விடுதலைபுலிகளை சித்தரித்து தொடர்ந்து இந்திய மக்களின் உண்ர்வுகளை விடுதலைபுலிகளுக்கு எதிரானதாக வைத்திருக்கும் ரோவின் சதி திட்டத்திற்கு துணை போகும் இவர்களில் சிலர் ரோவின் ஏஜென்டுகளாக கூட இருக்க கூடும். தமிழ் மக்கள் இவர்களிடம் கவனமாக இருப்பார்களாக.

விடுதலைக்காக போராடும் ஒரு இயக்கம் தேவையற்ற மத பூசல்களையும், பிளவுகளையும் ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபடப் போவதில்லை.

எங்கள் விடுதலை வேள்வியின் முக்கியமான ஒரு காலகட்டத்தில் ஈழத்தில் வாழும் இந்துக்களை, விடுதலை போரையும் அதன் பின்னான மத சுதந்திரத்தையும் சந்தேக கண்கொண்டு பார்க்க செய்வதன் மூலம் போராட்டத்தை பலவீனப் படுத்த முயற்சிக்கும் இவர்கள், தமிழனத் துரோகிகளே.

யாழ் இணையத்தில் இந்து மதத்துவேசம் கக்கும் சில கட்டுரைகளை பார்த்து விட்டு, சில ஈழத்து பெரியவர்கள் என்னிடம் கேட்ட சில பாரதூரமான கேள்விகளின் பின்னணியிலேயே இதை அவசர அவசரமாக எழுதுகிறேன். முழு விபரமும் அடுத்த சில நாட்களில் எழுதுகிறேன்.

மேற்கண்ட கருத்தை பின்வரும் காரணங்களுக்காக கண்டிக்கிறேன்,

1) பெரும்பான்மை என்ற ஓரே ஒரு வாதத்தால் தான் நாம் இன்று இத்தனை அழிவுகளுக்கும் பிரிவுகளுக்கும் முகம் கொடுத்து நிற்கின்றோம்! மனிதம் தொலைந்து போனது! அதே பெரும்பான்மை என்ற அருவருக்கத்தக்க கருத்தை புரட்சிகர இலட்சியமான தமிழீழத்திலும் திணிக்க முயல்வது அச்சத்தையும் அவநம்பிக்கையையும் தருகிறது.

2) இனவாதிகள் போன்றே மதவாதிகளும் இறுதியில் தமது கருத்துக்கு எதிரான கருத்து கொண்டவர்கள் மீது றோ என்றும் துரோகிகள் என்றும் முத்திரை குத்த முயல்வது தவறாகும்.

3) மதசுதந்திரம் என்பது போலியான வாதம், மதசார்பின்மை ஒன்றே ஏற்றம் தரும். புலிகள் இயக்கமும் அதனையே வலியுறுத்த வேண்டும். மதசார்பின்மைக்கு இந்தியாவை உதாரணமாக காட்டுவது அல்லது அந்நாட்டின் அரசியல் மதசார்பு சக்திகளை திருப்திப்படுத்த முயல்வது பாதகமானது.

4) சில கருத்தாளர்களின் பெயரில் உள்ள தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக அவர்களின் கருத்தில் உள்ள உண்மைகளை சில நல்ல கருத்தாளர்களும் கண்ணைமூடிக் கொண்டு எதிர்ப்பது கவலைக்குரியது!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் போன்றோர் தமிழையும் இந்துத்துவத்தையும் இப்போதே பிரித்து வைத்து மலரப் போகும் தமிழீழம் மதச்சார்பற்ற அரசாக அமைய ஊக்கமளிக்கிறார்கள்.

சபேசன் அங்க ஒன்றும் வெட்டி வீழ்த்தல்ல. தமிழரின் விடுதலைப் போராட்டம் மதச் சார்ப்பற்ற ஒன்றாகத்தான் உதயமாகி வளர்ந்து வந்து இன்று தமிழீழ உதயத்தை நோக்கி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழீழம் மதச் சார்பற்ற தேசமாக இருக்குமே தவிர மத விரோத தேசமாக இருக்காது. மதச் சார்பின்மை என்பது மத விரோதம் அல்ல. சபேசன் மத விரோதி. அவர் மதச் சார்பின்மைக்கு உரியவரல்ல..! அவரை மதச் சார்பின்மையின் அடிப்படையாகக் காட்டுவது தவறு.

தமிழகத்தில் ஆட்சியில் இருப்பவர்களும் இந்து மத விரோதிகள் என்பதால் தான் அவர்களின் மதச்சார்பின்மை என்பது மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மதச் சார்பின்மை என்பது ஒரு அரசு எந்த மதத்தையும் முன்னிலைப்படுத்தாத தன்மை. அரசு எந்த மதத்தையும் அரச அல்லது தேசிய மதமாக இனங்காட்டாத நிலையே அன்றி.. மக்கள் மத வழிமுறைகளின் கீழ் வாழ்வதை தடை செய்வதல்ல.

ஐ நா பிரமானங்களின் கீழ் மதச் சார்பின்மை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத விரோதம் அங்கீகரிக்கப்படவில்லை. எந்த அரசும் மதங்களை தழுவும் மக்களுக்கு எதிரா செயற்பட முடியாது. அப்படி செயற்பட்டால் அது மோசமான மனித உரிமை மீறல்களாகும். ஐ நா விதிமுறைகளின் கீழ் எல்லா மனிதருக்கும் அவரவர் விரும்பும் மதத்தை அவரவர் விரும்பும் வடிவில் அனுஷ்டிக்க உரிமை உண்டு. அரசுகள் மதச் சார்பின்மையை கொண்டிருப்பினும் மக்கள் தங்கள் மத அனுஷ்டானங்களைச் செய்ய அனுமதிக்க வேண்டும்.

இஸ்லாமிய நாடுகள் சில இவற்றில் இருந்து விலகி இருப்பதால் தான் அவர்கள் தீவிர இஸ்லாமிய நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

மேற்குநாடுகள் பல மதச் சார்பின்மை நாடுகளாக இருப்பினும்.. அவை மதங்களைப் பின்பற்றும் மக்களின் மத உரிமையை மறுதலிக்கவோ.. மதங்களைப் பற்றி.. தவறான அரச பிரச்சாரங்களை முன்னெடுப்பதோ இல்லை..!

மதச் சார்பின்மை என்பது அரசு எந்த மதத்தையும் சாராது இருத்தலே அன்றி.. மனிதனுக்குள்ள மத உரிமையை நிராகரித்தல் அல்ல..!

இதை தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள்.

சபேசன் இந்து மதத்தை துவேசிக்கும் ஒரு இந்து மதத் துவேசி. அவரை மதச் சார்பின்மைவாதியாக இனங்காட்டவோ.. நாத்தியகவாதியாகவோ இனங்காட்டவோ முனைய வேண்டாம்..!

இந்து மதத்தை துவேசிப்பவர்களாயினும் சரி எந்த மதத்தை துவேசிப்பவராயினும் சரி.. மக்களின் மத உரிமையை அங்கீகரிக்கும் எந்த மனிதனும் அவன் மதச் சார்பின்மை என்ற நிலையில் நின்று கொண்டிருப்பினும்.. அடுத்த மனிதருக்குள்ள மத உரிமைகளை துவேசிப்பவர்களை எதிர்க்க போதுமான நியாயத்தைக் கொண்டிருக்கிறான். அதன் படியே எமது செயற்பாடுகள் அமைகின்றன.

உண்மையில்.. சபேசனின் இந்து மத துவேசியச் சிந்தனைகளை எதிர்ப்பவர்களில் பலர் மதச் சார்பின்மைக்குரியவர்களே. அதேவேளை அவர்கள் உலக மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மதச் சுதந்திரத்தை மறுக்காத கொள்கையையும் கொண்டிருக்கின்றனர் என்பதால் தான் சபேசனின் இந்து மத துவேசிய, இந்து மதத்தவருக்கு எதிரான நாசியச் சிந்தனையைப் போக்கை செயற்பாடுகளை கடுமையாக விமர்சிக்கின்றனர்..! :wub:

--------------------------

தமிழீழ வைப்பகத்தில் மட்டும் அல்ல. வேறு பல நிறுவனங்களிலும் நல்லளிப்பு வழங்கப்பட்டிருப்பதாக செய்தி தெரிவிக்கின்றது.

பொதுவாக ஏப்ரல் 14 அன்றுதான் இப்படிச் செய்வார்கள். தைப் பொங்கல் நாளில் அல்ல.

நல்லளிப்பு என்பதை தமிழர் திருநாளாக இனங்காட்டப்படும் உழவர் திருநாளான தைப் பொங்கலுக்கும் அறிமுகப்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் நல்லளிப்பை தைப் பொங்கலுக்கு அறிமுகம் செய்ததற்காக அதுதான் தமிழ் புத்தாண்டு என்று பிரகடனப்படுத்தப்பட்டதாக கருதி செய்தி வெளியிடுவதுதான் தவறானது. :lol::lol:

பிறந்த நாள் கொண்டாடும் போதும் நல்லளிப்பு செய்கின்றனர்.. திருமணத்துக்கும் நல்லளிப்புச் செய்கின்றனர்... புதுக்கடை திறக்கும் போது.. வீடு குடிபுகும் போது.. சாமத்தியவீட்டுக்கு.. நூல் வெளியீடு .. இப்படிப் பலவற்றுக்கு.. நல்லளிப்புக்கள் (கைவிசேசம்) வழங்குவது தமிழர்களிடை வழமையானது..! அதற்காக அவற்றையும் தமிழரின் புத்தாண்டுகள் என்று பிரகடனம் செய்வீர்களா..??! :unsure::wub::lol:

Edited by nedukkalapoovan

சாமத்தியவீடு, குடிபுகுதல் போன்றைவகளில் கொடுப்பதை "மொய்" என்று சொல்வார்கள்.

கைவிசேசம் என்பது தமிழர்கள் தங்களுடைய புத்தாண்டு என்று நம்புகின்ற ஏப்ரல் 14இல் வழங்குகின்ற ஒன்று.

இரண்டும் ஒன்று அல்ல.

புத்தாண்டு என்று நம்புகின்ற ஒரு நாளில்தான் இந்தக் கைவிசேசம் கொடுப்பாhகள்.

தைத்திருநாள்தான் தமிழர் புத்தாண்டு என்ற குரல் பல இடங்களில் இருந்து ஒலிக்கின்ற இந்த வேளையில் நல்லளிப்பு வழங்குவது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வரவேற்கத்தக்க மாற்றம். அனைத்துவிதமான மாற்றங்களும் நிதானமாக, மெதுவாக ஆனால் நிச்சயமாக வரும்

  • கருத்துக்கள உறவுகள்

சாமத்தியவீடு, குடிபுகுதல் போன்றைவகளில் கொடுப்பதை "மொய்" என்று சொல்வார்கள்.

கைவிசேசம் என்பது தமிழர்கள் தங்களுடைய புத்தாண்டு என்று நம்புகின்ற ஏப்ரல் 14இல் வழங்குகின்ற ஒன்று.

இரண்டும் ஒன்று அல்ல.

புத்தாண்டு என்று நம்புகின்ற ஒரு நாளில்தான் இந்தக் கைவிசேசம் கொடுப்பாhகள்.

தைத்திருநாள்தான் தமிழர் புத்தாண்டு என்ற குரல் பல இடங்களில் இருந்து ஒலிக்கின்ற இந்த வேளையில் நல்லளிப்பு வழங்குவது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வரவேற்கத்தக்க மாற்றம். அனைத்துவிதமான மாற்றங்களும் நிதானமாக, மெதுவாக ஆனால் நிச்சயமாக வரும்

தமிழர்கள் கைவிடேசம் என்பதை.. சித்திரப்புத்தாண்டுக்கு என்றுதான் வழங்குவதில்லை.

வீடு குடிபுகும் போது கூட கைவிசேசம் என்று முதலில் வெற்றிலை பாக்கு வைத்து சுவாமி அறைக்குள் வைத்துக் கொடுப்பார்கள். "மொய்" என்பது வெகுமதியளிப்பு. அது வேறானது..!

சாமத்தியச் சடங்கின் போதும் பெண்ணின் தாய் மாமனால் கைவிசேசம் வழங்கப்படும்.

தமிழ் கடைகளில் தினமும் காலையில் கடை திறக்கும் போது வெற்றிலை பாக்கு வைத்து பணம் கொடுப்பர். அதன் பின்னரா கடைக்கணக்குகள் தொடரும்.

புதுக்கடை திறக்கும் போது இவ்வாறு செய்வர்.

இவையெல்லாம் நல்லளிப்புக்களே. வெகுமதியளிப்பு என்பது வேறு. அதற்கு நேர காலம் பார்ப்பதில்லை..!

பிறந்த தினத்தின் போதும் பெற்றோர் நல்ல நேரம் பார்த்து கைவிசேசம் கொடுப்பர்..!

இது வழமை. பொங்கல்.. என்பது அறுவடைத் திருநாள் என்பதுடன் சூரியனுக்கு நன்றி செலுத்துதல் என்பதை முதன்மைப்படுத்தி வருவதால்.. அங்கு இந்த நடைமுறைகளை மக்கள் பின்பற்றுவதில்லை. மாறாக.. பாரம்பரிய விளையாட்டுக்களின் போது பரிசில்கள் வழங்கி மகிழ்வர்.

நல்லளிப்பு என்பதை தைப் பொங்கலுக்கும் அறிமுகம் செய்வதால் மக்களிடம் நிதிப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்யலாம் அல்லது பகிர உதவலாம் என்ற வகையில் இது நடைமுறைக்கு வந்திருக்கும்.

ஆனால்.. அதற்காக தைப் பொங்கலே தமிழர் புத்தாண்டு என்பது அபந்தமான கற்பனை..! பாரம்பரியத்தைச் சிதைக்கும் செயல்.

மாவீரர் தினத்தையே.. களியாட்டம் போல நடத்தும் புலம்பெயர்ந்தவர்களுக்கு... இதுவும் அப்படியானாலும் ஆச்சியப்படத் தேவையில்லை. இருந்தாலும் எமது மூதாதையோரின் உன்னத நோக்கம் பாழடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது..! :unsure:

Edited by nedukkalapoovan

பொங்கல் திருநாளான உழவர் திருநாளை.. தமிழர்களின் புத்தாண்டு என்று விடுதலைப்புலிகளோ அல்லது எந்த ஒரு தரப்புமோ உலகில் உத்தியோக பூர்வமாகப் பிரகடனப்படுத்தவில்லை. புலம்பெயர்ந்த சிலர் நடத்தும் புல்லுருவிகள் ஆதிக்கம் செய்யும் ஊடகங்கள் தங்கள் இஸ்டத்துக்கு வழமை போல செய்தியைத் திரித்து வழங்குகின்றன.

தமிழீழ வைப்பம்.. விசேட தினங்களில் மக்களுக்காக விசேட வைப்புத் திட்டங்களை ஆரம்பிப்பது வழமை. அந்த வகையில் பொங்கல் திருநாளில் பண வைப்பை ஊக்கிவிக்கும் வையில் இந்த நல்லளிப்பு என்பது அறிமுகமாக்கப்படுகிறதே அன்றி.. தைப் பொங்கலை தமிழர் புத்தாண்டாக பிரகடனப்படுத்தி.. நல்லளிப்பை செய்யவில்லை..!

புலம்பெயர்ந்தவர்கள் சிலர் நடத்தும் ஊடகங்களின் திருகுதாளங்களை இது அப்பட்டமாக இனங்காட்டுகிறது..! புதினம் செய்தியைத் திரித்து வெளியிட்டுள்ளது என்றே தோன்றுகிறது. தன்னிஸ்டத்துக்கு தமிழர் புத்தாண்டு என்ற தனது சுய நிலைப்பாட்டை அதற்குள் திணித்து செய்து வெளியிட்டுள்ளது..!

அப்படி ஏதேனும் உத்தியோக பூர்வ மாற்றங்கள் வந்திருப்பின் சர்வதேச கவனம் மிக்க தமிழ்நெற் போன்ற ஊடகங்கள்.. இதைக் குறிப்பிட்டு புத்தாண்டு வாழ்த்துச் சொல்லி இருக்கும். ஆனால்ல் தமிழ்நெற் வழமை போல பொங்கல் வாழ்த்து மட்டுமே தெரிவித்துள்ளது..!

pongal_front.jpg

TamilNet wishes its readers a Happy Pongkal 2008

http://www.tamilnet.com/ :unsure:

நெடுக்காலபோவான் சொன்னத நானும் ஏற்றுக்கொள்ளுறன்.

சும்மா ஆரியம், திராவிடம் எண்டு சொல்லிகொண்டு இராமல் ஒழுங்கா மனுசரா வாழுற வழியப்பாருங்கோ.

மற்றது, விடுதலைப் புலிகள் போராட்டத்திற்கு நாங்கள் ஆதரவு கொடுப்பது இருக்க, தமிழ்த்தேசியம் சார்பாக நாம் ஒன்றாக இணைவது ஒருபுறம் இருக்க, பொதுவான விடயங்களை எல்லாம் ரூல்ஸ் அண்ட் ரெகுலேசனுக்க போட்டு பிசையுறது சுத்த கோமாளித்தனம்.

உதாரணத்துக்கு தலைவருக்கு பிடித்தனமான உணவு தோசையும் சம்பலுமா இருக்கலாம். இதுக்காக உலகத்தில இருக்கிற அனைத்து தமிழரும் தோசையும் சம்பலையும் விரும்பிச் சாப்பிடவேண்டிய தேவை இல்லை.

எங்க எங்க என்னத்த, எப்படி கேக்கிறது, பின்பற்றுறது எண்டுறதுக்கு ஒரு விவஸ்தை இல்லையா?

புதினம் ஏதோ எழுதி இருக்கிது எண்டால் அதுதான் தமிழரின் தலைவிதியா?

விருப்பம் ஆன ஆக்கள் புத்தாண்டு தினமா ஜனவரி 01 ஐ கொண்டாடுங்கோ. மற்ற ஆக்கள் சித்திரையில கொண்டாடுங்கோ. இல்லாட்டி வேற ஏதாவது மாதத்தில கொண்டாடுங்கோ. ஏன் சும்மா ஆரியம், திராவிடம் எண்டு போட்டு சனத்த குழப்பிக்கொண்டு இருக்கிறீங்கள்>??

சென்னை: தை மாதம் ஒன்றாம் தேதியே (பொங்கல்) இனிமேல் தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுவரை சித்திரை மாதத்தின் முதல் நாள் தான் (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு தினமாகக் கொண்டப்பட்டு வந்தது.

இந் நிலையில் கடந்த பொங்கல் தினத்தன்று வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டு தினமாக்க திட்டமிட்டிருப்பதை முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் இன்று சட்டசபையில் ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையாற்றுகையில் கூறியதாவது,

தை மாதத்தின் முதல் நாள், அதாவது பொங்கல் தினம், தான் தமிழர்களின் புத்தாண்டு தினமாகக் கருதப்பட வேண்டும் என பெரும்பாலான தமிழறிஞர்கள் கோரி வருகின்றனர். இதில் ஒருமித்த கருத்து நிலவுவதால், இனிமேல் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பதிலாக (அதாவது சித்திரை மாதத்தின் முதல் நாள்) பொங்கல் தினம் தான் தமிழர்களின் புத்தாண்டு தினமாக கொண்டப்படும்.

இதன் மூலம் பொங்கலையும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தையும் சேர்ந்து இரட்டிப்பு மகிழ்ச்சியோடு தமிழர்கள் கொண்டாடலாம்.

:(:(:(:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன்,

தாய் மொழி தமிழை நீச மொழியென்றும் சமிஸ்கிருதத்தை தெய்வ மொழியென்று போற்றும் கூட்டத்தோடு பேசி ஏதாவது பயனிருக்கப்போகிறதா?

வைச்சீங்க ஒரு ஆப்பு.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தினால் மட்டும்தான் நம்புவாய்ய்ய்ய்ங்களோ???? :(:(:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.