Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தளபதி பொன்னாம்மானின் நினைவு நாள் மாசி 14

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தளபதி பொன்னாம்மானின் நினைவு நாள் மாசி 14

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் ஆலமரம் போல் நிழல் விட்டு விடுதலைக்காக வாழ்ந்தவர் லெப்.கேணல் பொன்னம்மான். 1987ஆம் ஆண்டு பெப்ரவரி 14நாள் யாழ்ப்பாணம் தைடிப்பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின் போது லெப்.கேணல் பொன்னம்மான் உட்பட 11போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

1956ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் நாள் யாழ்ப்பணம் கலட்டியில் குடும்பத்தில் மூன்றாவது ஆண்மகனாக யோகேந்திரன் குகன் என்ற பெயருடன் உதித்தார். சிறுவயதில் பல நெருக்கடிகளைச் சந்தித்தார். கருவில் இருக்கும் பிள்ளையைக் கூட அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் கொடுமைக்குள் இவரது குடும்பமும் மிஞ்சவில்லை.

1958 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தில் இவரது தந்தை மிகக் கொடுமையாக சிங்கள இனவெறி பிடித்தவர்களால் தாக்கப்பட்டார். அடித்து அவரைக் குற்றுயிராய் போட்டார்கள். தமிழ் மக்கள் தொடர்ந்து சிங்களவர்களால் தாக்கப்பட்டமை பொன்னம்மானைப போராடத்தூண்டியது.

சிங்கள ஆட்சியாளர்களின் தமிழ் மாணவர்கள் மீதான தரப்படுத்தல், அடக்குமுறைகள் மாணவர்களின் கல்வியில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது. தமிழ் மாணவர்களுக்கான முன்னுரிமைகள் எல்லாம் புறம் தள்ளி விடப்பட்டபோது. ஒவ்வொரு இளம் துடிப்பு மிக்க இளைஞர்களின் வாழ்வும் சீரழியத் தொடங்கியது.

லெப்.கேணல் பொன்னம்;மான் அவர்களின் வாழ்வும் விதிவிலக்காக அமைந்து விடவில்லை. எல்லாவற்றிற்கும் ஒரே வழி தமிழ்மக்கள் தங்கள் சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழவேண்டும். அதற்காகப் போராட வே ண்டும் என்பதை தெளிவாக பொன்னம்மான் புரிந்து கொண்டார்.

கல்வியிலும் சரி விளையாட்டுக்களிலும் சரி மிகவும் துடிப்போடும், எதையும் ஆராய்ந்து பார்க்கும் குணமுள்ள பொன்னம்மான் அரசின் ஒடுக்குமறைக்கு எதிராக அவ்வப்போது எதிர்ப்புக்களை தெரிவித்து வந்தார். 1978ஆம் ஆண்டு தமிழீழ தேசியத்தலைவரை சந்தித்த பொன்னம்மான் தொடர்ந்து விடுதலைப்போராட்டத்தின் ஆதரவாளராக இருந்து பின்பு முழு நேரப்போராளியாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார்.

விடுதலைப்புலிகளிடம் ஆயுதப்பற்றாக்குறை இருந்த காலத்தில் வெடிகுண்டுகள் செய்வதில் பெரிதும் உழைத்தவர் பொன்னம்மான். பலவெடிகுண்டுகளை செய்தும், பல கண்ணிவெடிகளைத் தயாரித்தும் எதிரிகளை கலங்கடித்தார்.

தமிழீழ தேசியத்தலைவருடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டார். விடுதலைப் புலிகளின் பெரும் வளர்ச்சிப் போக்கில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தாக்குதலாக அமைந்த 1983ஆம் ஆண்டு யூலை 23நாள் திருநெல்வேலியில் நடத்தப்பட்ட சிறிலங்கா இராணுவ ரக் மீதான தாக்குலில் 13சிங்களப் படைகள் கொல்லப்பட்டதிலும். காரைநகர் கடற்படைத்தளம் மீதான தாக்குதல்களிலும், பரந்தன் உமையாள்புரத்தில் சிறிலங்கா இராணுவ வாகனம் மீதான கண்ணி வெடித்தாக்குதலிலும் பொன்னம்மான் பங்கு கொண்டார்.

இந்தியா விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி வழங்கிய காலப்பகுதியில் முதல் அணியின் தலைவராக 100பேருடன் இந்தியாவிற்குச் சென்று பயிற்சிகள் எடுத்தார். இதில் தொடச்சியான முறையில் நடந்த பய்றிசிகளில் இவர் போராளிகளுடன் ஒரு முன்னோடியாக இருந்து போராளிகளுக்கு அரவணைப்பை வழங்கினார், போராளிகள் பிழை செய்தால் அவர்கள் உணரும் வகையில் கண்டித்து வளர்த்தார்.

அவர்களுக்கு போராட்டம் பற்றிய சிந்தனைகளை அவர்களுக்கு ஊட்டினார். இந்தியாவிற்குச் சென்ற அணிகள் வரிசையில் 7ஆவது அணி பெண்களின் முதலாவது அணியாகும். இப்பயிற்சப்p பாசறை 1985ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்றது இதையும் இவரே பொறுப்பேற்று வழிநடத்தினார்..

இவ்வாறு இந்தியாவில் பயிற்சிகளை முடித்துக் கொண்டு தமிழீழம் வந்தவ போராளிகள் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்திற்கு எதிரான் பல தாக்குதல்களை நடாத்தினர். பொன்னம்மான் அவர்கள் ஒட்டுவேலைகள் பயின்று வெடிகுண்டுகளுக்கு ஏற்றவாறு வாகனங்களில் வெடிகுண்டுகளைப் பொருத்தி இராணுவ முகாம்மீதான பல தாக்குதல்களுக்கு வழிவகுத்தார்.

இதேபோன்று தான் 1987.பெப்ரவரி 14நாள் தண்ணீர் இழுக்கும் வாகனம் (தண்ணீர் பவுசர்) போன்ற வடிவில் வெடிகுண்டு ஒன்றைத் தயாரித்தார். தண்ணீரும், வெடிமருந்துகளும் மேலும் கீழுமாக வைத்து நுட்பாக அதனை உருவாக்கினார். சிறு துவாரத்தினூடே கசியத்தொடங்கியதும், அதனை சீர்செய்யும் போருட்டு ஒட்டு வேலைகளில் பொன்னம்மானும் அவருடன் கூட சில போராளிகளும் இருந்தார்கள்.

அப்போது அங்கு பெரும் வெடி ஓசை கேட்டது. லெப். கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ், கப்டன் வாசு, வீரவேங்கை யோகேஸ், வீரவேங்கை குமணன், வீரவேங்கை கவர், 2ஆம் லெப். பரன், வீரவேங்கை தேவன், லெப். சித்தார்த்தன், வீரவேங்கை அக்பர் இவர்களுடன் நாட்டுப்பற்றாளர் ரஞ்சன் ஆகியோர் அங்கு நடந்த தவறுதலான வெடிவிபத்தில் வீரச்சாவெய்தினர்.

தாயின் ஆசிர்வாதத்துடன் விடுதலைப்போராட்டத்தில் இணைந்த பொன்னம்மான் இன்று 20ஆண்டுகள் கடந்த நிலையில் உயிர்ப்புடன் நினைவுகளில் வாழ்கிறார். தமிழீழ விடுதலைக்கு அவர்கள் போட்ட அத்திவாரக்கற்கள் இன்னும் பலம் பெற்று லெப். கேணல் பொன்னம்மான் பெயரால் பொன்னம்மான் கண்ணி வெடிப்பிரிவினர் 8வருடங்களாக எதிரிக்கு எதிரான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.

http://www.tamils.info/index.php?subaction...&ucat=&

லெப்.கேணல் பொன்னாம்மானுடன் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களையும் நினைவு கூருவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

23-12-1956 -14-02-1987

தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா....

என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது.

எமது இயக்கத்தில் புதிதாக இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி முகாமில் நின்று கொண்டிருந்த புதியவர்களுக்கு நெஞ்சில் மெல்லிய சோகத்தை அந்த வரிகள் எழுதியிருக்கக்கூடும்.

ஆனால் அந்த அத்தனை பேருக்கும் தாயாக, தந்தையாக, அண்ணனாக, அம்மானாக, நின்ற பொன்னம்மானே அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். அம்மான் இருக்கும் இடத்தில் எப்போதுமே சந்தோசம் குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போதும் தமிழர் துயரநிலை கண்டு அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. அவர் அந்தப் பாடலை அடிக்கடி பாடும்போது தமிழர் துயரநிலையை சூட்சுமமாகப் பாடுவதாக தோழர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

எமது இயக்கத்தில் எமது தேசியத் தலைவர் பிரபாகரனுடன் அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்தார் அம்மான்.

எழுபதுகளின் நடுப்பகுதியில் எமது தலைவருடன் இணைந்து கொண்டு செயற்படத் தொடங்கி உமையாள்புரம், திருநெல்வேலி தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் தனது துணிவையும், வீரத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.

1983ஆம் ஆண்டு திருநெல்வேலியில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானத்துடனும் வளரத் தொடங்கியது. போர்ப்பயிற்சிகள் இந்தியாவில் ஆரம்பமாகின. அங்கு நடந்த முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான் பயிற்சியின் போதே சகவீரர்களை எமது இயக்கத்தின் விதிமுறைக்கேற்ப உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் பாசறையில் தளபதிகளான கிட்டு, விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் நு}றுபோராளிகள் இருந்தனர். பயிற்சியை முடித்துக் கொண்ட பொன்னம்மான் தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி புதிய வீரர்களை புரட்சியாளர்களாக்கினார். உலகமே வியக்கக்கூடிய வகையில் எமது போராட்டம் வளர்ச்சியடைவதற்குத் தேவையான, புதிய வீரர்களிற்குப் பயிற்சி அளித்தல், வேண்டிய ஆயுதங்களைச் செய்து கொள்ளல் போன்ற முக்கிய விடயங்களில் பொன்னம்மானின் முயற்சி கணிசமாக இருந்தது என்றே சொல்லலாம்.

வெடிமருந்துகளைக் கையாள்வதில் பொன்னம்மான் மிகவும் வல்லுனராக இருந்தார். அதற்கேற்றவாறு மேலும் பல வீரர்களை, ஆயுதங்கள் செய்யும் பிரிவிற்குத் தகுதியுள்ளவர்களாகவும் ஆக்கியிருந்தார். பேராட்டத்திற்கு கை எறிகுண்டு கணிசமான அளவு தேவையாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் குண்டு தயாரிப்பு வேலைகள் சாத்தியமற்றதாக இருந்தது. பொன்னம்மானின் கடுமையாக முயற்சியினால் 85, 86ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் கைக்குண்டுகள் தயாரிக்க வழிசெய்தார். இந்தியாவில் 2000இற்கும் அதிகமான வீரர்களைத் தோற்றுவித்தது மாத்திரமன்றி இராணுவத் தொழில்நுட்பத் வளர்ச்சிக்கும் முக்கிய காரணியாக பொன்னம்மான் செயற்பட்டார். பெரும் எண்ணிக்கையிலான விடுதலை வீரர்களை உருவாக்கி இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவர் பொன்னம்மான். பல சிறப்புக்களும், தகுதியும், ஆளுமையும் மிக்க பொன்னம்மானின் போராட்ட வாழ்வின் இறுதிக்கணங்கள் வீரம் செறிந்தவை. யாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி எனும் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்த கிட்டண்ணாவும் தோழர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தாக்குதலில் பொன்னம்மானும் முக்கிய பங்கேற்று செயற்பட்டுக் கொண்டிருந்தார். இராணுவ முகாம் மிகவும் பலம் பொருந்திய வெளி அமைப்பைக் கொண்டிருந்தது. அது கடல் நீர் உள்வாங்கிய பகுதி. சுற்றிவர நு}று யாருக்கும் மேலாக ஒரே வெளிப் பிரதேசம். வெட்டை வெளி. சிறு நகர்வும் எதிரிக்குத் தெரிந்து விடக்கூடிய அபாயம் இருந்தது. இராணுவ முகாமைச் சுற்றி நான்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு மண்ணை சுவர்போல குவித்து வைத்திருந்தனர். அவர்களுடைய காவல் அரண்களை உடைத்துக் கொண்டு உட்புகுவது என்பது மிகவும் சிரமத்துக்குரியதும் எமது வீரர்கள் தரப்பில் அதிக சேதத்தை ஏற்படுத்தக் கூடியதுமான முயற்சி. எனவே அவர்களுக்கு அதிர்ச்சியூட்டி அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவர்கள் காவல் அரண்களை பலப்படுத்துவதற்கு முன்னர் நாம் தாக்கி உடபுகக் கூடியதாகத் திட்டம் தீட்டப்பட்டது. தினமும் அந்த இராணுவ முகாமுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு பவுசர் செல்வது வழக்கம். அது வெளியாரின் வண்டி: சம்பளத்திற்கு அமர்த்தப்பட்டு இருந்தது. எனவே அதைப் போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து, அதன் கீழ் அரைவாசிப் பகுதிக்கு தண்ணீரை விட்டு, திட்டமிட்ட நாளில் உள்ளே அனுப்பி வெடிக்க வைத்து முகாமை தாக்கியழிப்பதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கின. பழைய வண்டியைப் போல் ஒரு புதிய வண்டியைத் தயாரிப்பது என்பது மிகவும் கஸ்டமான விடயமாக இருந்தது. அதிலும் அந்த பவுசர் எஙகோ தாக்குதலுக்குள்ளாகி ஒரு பக்கத்தில் நசுங்கியும் இருந்தது. அது மாத்திரமல்ல தோழர்கள் செய்யும் வண்டி வாயில் காவலர்களைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்ததால் அதேபோல் நசுக்கப்பட வேண்டி இருந்தது. இயற்கையாக விபத்துக்குள்ளான வண்டியைப் போல் வெடிமருந்தேற்றிச் செல்லும் வண்டியை மிகச் சிரமத்திற்குப் பின் உருவாக்கினார்கள். புதிதாக மை பூசிய புவுசரை பழைய பவுசரைப் போல் உருமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. ஏன் பழைய வண்டியில் ஏற்பட்டிருந்த துருப்பிடித்த பகுதிகூட தாக்குதலுக்கு தயாரான பவுசரில் இருந்தாக வேண்டும். அதைவிடவும் பவுசர் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கீழ் பகுதி வெடிமருந்து நிரப்பிய பகுதியாகவும், மேல் பகுதியில் தண்ணீர் நிரம்பிய பகுதியாகவும் தயாரித்தோம். ஏனென்றால் முகாம் வாயிலில் உள்ள காவல் அரணில் இருப்பவர்கள் பவுசரின் மேல் ஏறி மூடியைத் திறந்து தண்ணீரைப் பார்த்தபின்தான் உள்ளே அனுமதிப்பார்கள். இத்தனை சிரமங்களின் மத்தியிலும் அந்த பவுசரை மிக நேர்த்தியாக வடிவமைத்தார்கள். பவுசருக்கு வெடிமருந்தை இணைக்கும் பணியை பொன்னம்மான் எடுத்துக் கொண்டார். இம்முயற்சிக்கு வழிகோலி, அயராது உழைத்து வந்தவன் கேடில்ஸ்தான். கேடில்ஸ் அப்போது சாவகச்சேரிப் பகுதிக்கு பொறுப்பளராக விளங்கியவன். மிகத் துல்லியமாக முகாமை வேவு பார்த்து, இராணுவ முகாமினது ஒவ்வொரு நடவடிக்கையையும் அவதானித்து வைத்திருந்தான். கேடில்சும், வாசுவும் சேர்ந்துதான் இரவுபகலாக உழைத்து அந்த பவுசரை உருவாக்கினார்கள். அவர்களுக்குத் துணையாக ரஞ்சன் எனும் பொறியியலாளர் ஒருவர் பணியாற்றினார். அவர் பொன்னம்மானின் உறவினருங்கூட. மிகுந்த மதிநுட்பம் வாய்ந்த ரஞ்சன், வாசுவோடு சேர்ந்து விமானமொன்றைத் தயாரிக்கும் பணியிலும் குண்டு வீச்சு விமானங்களும் தகவல் பெற்று எம்மைத் தாக்கத் தொடங்கலாம். பகல் வேளையானால் மேலிருந்து கண்டுபிடித்து குண்டு வீசுவது அவர்களுக்கு மிகவும் சுலபமான விடயம். ஆனால் பிற்பகல் 6 மணிக்குப் பின் இராணுவ முகாமுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கடைசி சந்தர்ப்பத்தை தோழர்கள் தாக்குதலுக்கான நேரமாக குறித்துக் கொண்டார்கள். 6:30 மணிக்கு சண்டை தொடங்குமானால் சுமார் ஒரு மணி நேரத்தில் இருட்டடித்துவிடும். அதன்பின் தோழர்களுக்கு மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும். முதல்நாள் இரவிரவாக பொன்னம்மான், வாசு, ரஞ்சன் ஆகியோர் மருந்தடைத்தனர். வெடிமருந்தின் நச்சுத்தன்மை அவர்களைப் பாதித்தது. அதனால் மூவரும் மிகச் சோர்வாக வேறு இருந்தார்கள். அதிகாலை வெடிமருந்து இணைக்கப்பட்ட நிலையில் பவுசர் தயாராக நின்றது. அம்மான் அவ்விடத்திலேயே தூங்கியும் விட்டார். வாசுவும் கிட்டண்ணாவும் தாக்குதல் குழுக்களைப் பிரித்து அவரவர்களுக்குத் தேவையான வெடிபொருட்களை இணைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று பெரிய லொறிகள் தயார்ப்படுத்தப்பட்டன. முகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும் ஜொனி, கேடில்ஸ், சூசை தலைமையிலான குழுக்கள் லொறிகளில் விரைந்து முகாமுக்குள் சுட்டுக் கொண்டே உட்புகுவதாகத் திட்டம். லொறியின் முன்புறமும், மேல்பக்கமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. முதல் லொறியில் ரொக்கட் லோஞ்சருடன் நிற்பவன் உட்புகும் போது ரொக்கட்டால் வாயில் காவல அரணை உடைத்தெறிவதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது. நேரம் பிற்பகலை நெருங்கிக் கொண்டிருக்க தாக்குதல் குழுக்கள் தத்தமது நிலைகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். பவுசரை அனுப்பும் பொறுப்பு பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிட்டண்ணா தாக்குதலை நடத்துவதற்காக, சகலருடனும் வாக்கிடோக்கியில் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம் தெரிந்தெடுக்கப்பட்டு அதற்குரிய வசதிகள் செய்திருந்தார். கிட்டண்ணா ஐந்து மணியளவில் எல்லாக் குழுக்களையும் சரி பார்த்து வந்து கொண்டிருந்தார். நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கிட்டண்ணா ஒரு குழுவினர் நின்ற வீட்டில் அவர்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்... மிகப்பெரிய சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை பூமி அதிர்ந்தது. அதிர்ச்சி, வியப்பு, சற்றும் புரியவில்லை. 5:30க்கு வேறு இந்த வெடிச்சத்தம் கேட்டதால் தோழர்கள் மத்தியில் ஒரே குழப்பம். கிட்டண்ணா பொன்னம்மானை வாக்கியில் பலதடவை கூப்பிட்டார். கேடில்சைக் கூப்பிட்டார். வாசுவைக் கூப்பிட்டார். பதில் இல்லை. பல தடவைகள் அழைத்தார். மீண்டும் பதில் இல்லை. ஜொனியை அழைத்தார்: பதில் வந்தது. ஜொனியை அழைத்து உடனடியாக சத்தம் கேட்ட இடத்திற்கு அனுப்பினார். ஜொனி அங்கு சென்ற போது எங்கும் து}சிமயம். பிரளயம் ஒன்று ஏற்பட்டதைப் போல இருந்தது. அவ்விடத்தில் பெரிய குழி, அதற்கருகில் கேடில்சினுடைய கார் நொறுங்கிப் போய் கிடந்தது. இதற்கு 50 யார் து}ரத்தில் லொறி நின்றது. லொறிக்குள் பார்த்தபோது ஐவர் அதற்குள் இறந்து கிடந்தார்கள். தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கையில் பவுசர் வெடித்து விட்டது. ஆனால் அந்த இடத்தில் நின்று சம்பவத்தைப் பார்த்த யாரும் உயிருடன் இல்லை. பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ரஞ்சன் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்ததாக தோழர்கள் கூறினார்கள். பவுசரில் தண்ணீர் நிரப்பும்போது தண்ணீர் சிறிது ஒழுகியதாம். அதைப் பொன்னம்மான் கேடில்சுக்கும் வாசுவுக்கும் தெரிவித்து பொறியியலாளர் ரஞ்சனையும் அழைத்துக் கொண்டு பவுசர் நின்ற இடத்திற்கு சென்றார்கள். பொறியியல் நடவடிக்கையின் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்த, அங்கு நின்ற எவருமே இல்லை. எல்லோரையும் தேடினார்கள். வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கேடில்சின் காற்சட்டையின் ஒரு பகுதியும்தான் கிடைத்தது. பொன்னம்மானை அடையாளம் காணக்கூடியவகையில் அவருடைய உடலோ, உடலின் பகுதியோ எந்தத் தடமும் கிடைக்கவில்லை. குறும்புகள் செய்தும், நடித்தும், சிரிக்க வைத்து, எந்த நேரமும் சந்தோசத்தைக் குடிகொள்ள வைத்திருக்கும் அந்த மனிதன் இன்று இல்லை. 'அம்மான் ஒரு பாட்டுப் பாடுங்கோ" என்று தோழர்கள் அடம் பிடிப்பதும் அவர் எப்போதும் தோழர்களுக்காய் பாடிக் காட்டும் அந்தப் பாட்டும் நினைவில் நனைய கண்கள் பனிக்கின்றன. தந்தையாய், தனையனாய், தாயாய், எல்லாமுமாய் நின்ற எங்கள் அம்மானிடம் வளர்ந்த எத்தனையோ தோழர்கள் இன்றும் அவரது கனவைச் சுமந்தபடி மண்ணில் நிற்கிறார்கள்.

லெப்.கேணல் பொன்னம்மானுடன் வீரச்சாவடைந்த போராளிகள்

மேஜர் கேடில்ஸ் ( திலீபன்), கப்டன் வாசு (சுதாகர்), லெப். சித்தாத்தர் (வசீகரன்), 2ம்லெப். பரன் (அர்ச்சுணன்), வீரவேங்கைகளான யோகேஸ்(பாலன்), கவர்(நகுலேஸ்வரன்), அக்பர் (லோகநாதன்), குமணன்(மோகனலிங்கம்), தேவன்(வசந்தகுமார்)

மூலம் - எரிமலை

  • கருத்துக்கள உறவுகள்

கப்ரன் வாசு (கண்ணாடி வாசு.ஜடியா வாசு)வல்வெட்டிதுறை

1985 ம் ஆண்டு ஒரு கோடைகாலத்தின் மாலை நேரத்தில் யாழ் அராலி வீதி கல்லுண்டாய் வெளியில் ஒருவர் மட்டுமே அமரகூடிய ஒரு சிறிய விமானம் உள்ளே அதனை இயக்க தயாராய் வாசு அமர்ந்திருக்கிறான். அதனருகே மாவீரர்களான லெப்.கேணல்அப்பையா அண்ணை குட்டிசிறி. கப்ரன் பாரத் மேஜர் சுபாஸ் இவர்களுடன் மேலும் பல போராளிகள் நிற்கிறார்கள். வாசு மற்யை போராளிகளை பார்த்து எல்லாம் சரி எல்லாரும் சேர்ந்து வேகமா தள்ளுங்கோ இந்த முறையாவது பிளேன் பறக்கவேணும் என்று சொல்லவும் எல்லா போராளிகளும் சேர்ந்த்து விமானத்தை தள்ள அது வீதியில் உருள ஆரம்பிக்கவும் வாசு மற்றவர்களிடம் இன்னும் இன்னும் வேகமா என்று கத்தியபடி அந்த விமானம் மேலே கிழம்ப வசதியாய் அதன் இறக்கைகளை இயக்குகிறான்.அந்த நேரம் பார்த்து ஒரு போராளி ஏலேலோ அய்லசா என்று பாடவும் விமானத்தை தள்ளிய மற்றறைய போராளிகள் தள்ளுவதை நிறுத்தி விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டனர். வாசு அவர்களை பார்த்து கோபமாய் கத்துகிறான் மேலை எழும்பினா காணும் நான் எப்பிடியாவது கோட்டைக்குள்ளை கொண்டு போய் இரண்டு ஆமிகாரன்ரை தலையிலையாவது விழுத்துவமெண்டா இவங்களோடைஒண்டும் செய்ய ஏலாது பகிடியை விட்டிட்டு தள்ளுங்கோடா என்கிறான்.

போராளிகள் தொடர்ந்து விமானத்தை தள்ள விமானம் சில அடிகள் மேலே எழுவதும் கீழே விழுவதுமாய் கடைசியில் அந்த வீதியோரத்தில் நின்ற ஒரு பூவரசு மரத்துடன் மோதி ஒரு பக்க இறக்கை உடைந்து போக வாசு சில சிராய்ப்பு காயங்களுடன் விமானத்தை விட்டு இறங்குகிறான். ஆனாலும் விமானம் செய்கின்ற முயற்சி தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

வாசு எப்பவுமே தன்னைபற்றியோ தன்னுயுரிரைபற்றியோ கவலைபடாமல் எப்படியாவது எங்கேயாவது எதிரிக்கு இழப்பை ஏற்படுத்துவதை பற்றியே சிந்திப்பவன். அது மட்டுமல்ல கண்ணிவெடிகள் தயாரிப்பது ரவைகட்டுவது(ஆரம்பகாலத்தில் 9 மி.மீ.துப்பாக்கி ரவைகூடுகளை சேகரித்து திரும்ப அவைகளை ரவைகளாக தாயாரிப்பார்கள்) அன்றைய காலகட்டத்தில் புலிகள் இயக்கத்தின் பழுதடைந்த ஆயுதங்கள் அனைத்தையும் திருத்துபவனாகவும் இருந்தான். ஈழத்தில் இருந்த போராட்ட குழுக்களிற்கு இந்தியா அன்று ஆயுதங்கள் வழங்கிய போது புலிகள் இயக்கத்திற்கும் ஒரு தொகுதி ஆயுதங்களை வழங்கியது ஆனால் அவை பெரும்பாலும் ஏன் 80 வீதம் பாவிக்க முடியாத ஆயுதங்களையே கொடுத்திருந்தது.

அவற்றையெல்லாம் வாசு இரவு பகலாக இருந்து முடிந்தவரை திருத்தி போராளிகளிடம் கொடுப்பான். அந்த ஆயுதங்கள் யுத்த களத்தில் சில நெரங்களில் இயங்க மறுக்கும்.யுத்தகளத்தில் ஒரு போராளியின் ஆயுதம் இயங்கா விட்டால் அது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அனைவரிற்கும் தெரியும். அந்த போராளிகள் வாசுவை திட்டியபடியே அந்த ஆயுதங்களை அவனிடம் கொண்டு போய் கொடுப்பார்கள்.அவன் சிரித்தபடியே என்ன மச்சான் செய்யிறது இந்தியா ஆயுதத்தை தந்த நேரம் அதை இரும்பா தந்திருந்தா நான் அதை உருக்கி ஒரு நல்ல ஆயுதமா செய்து தந்திருப்பன்.ஆனால் என்ன செய்ய அவங்கள் இப்பிடி தந்திட்டாங்கள் நானும் முடிஞ்சவரை திருத்திறன் எனறவாறே மீண்டும் அவற்றை திருத்த தொடங்கிவிடுவான்.அப்போது 1987ம் ஆண்டு தொடக்கத்தில் யாழ் நாவற்குழி இராணுவ முகாம் மீது புலிகள் ஒரு தாக்குதலை நடாத்த திட்டமிட்டனர்.

அந்த இராணுவ முகாமிற்கு தண்ணீர் வெளியில் இருந்து ஒரு பெளசர் முலமே எடுத்து செல்லபடுவது வழைமை எனவே அதே போல ஒரு பெளசரை தயாரித்து அதன் உள்ளே வெடிமருந்தை நிரப்பி அதனை முகாம் உள்ளே அனுப்பி வெடிக்க வைப்பது பின்னர் அது வெடித்ததும் அதிர்ச்சியில் இருக்கும் இராணுவத்தினரை தாக்குவது என்று திட்டம் தீட்டப்பட்டு.அதற்கான அந்த முகாம் மீதான வேவுபார்த்தல் மற்றும் இராணுவ நடமாட்டங்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் பொறுப்பு அன்றைய சாவகச்சேரி பொறுப்பாளராக இருந்த கேடில்சிடமும். வெடிமருந்து நிரப்பிய பெளசரை தயாரிக்கும் பொறுப்பு வாசுவிடமும் ஒப்படைக்க பட்டது. அதுவும் எதிரிக்கு எந்தவித சந்தேகமும் வந்து விடாதபடி தண்ணீர் கொண்டு போகின்ற அதேபோன்றதொரு அச்சுஅசலாக இன்னொரு பெளசரை தயாரிக்க வேண்டும்.சிரமமானதும் சவாலானதமான ஒரு பணி ஆனால் வாசு ரஞ்சன் என்கிற ஒரு பொறியியலாளரின் உதவியோடு ஆர்வத்துடன் செயற்பட்டான். அசல் தண்ணி பெளசரில் எங்கெங்கு கறள் பிடித்திருக்கின்றது.

எங்கெங்கு நெளிந்திருன்றது என்று பார்த்து பார்த்து நகலை அசல் போல ஒரு மாதங்களிற்கு மேலாக செய்து முடித்தான்.அது மட்டுமல்ல தண்ணீர் பெளசர் இராணுவ முகாமிற்கு உள்ளே போகும் போது இராணுவத்தினர் பெளசரின் உள்ளெ தண்ணீர் தானா உள்ளது என்று பரிசோதித்து தான்அனுப்புவார்கள்.அதனால் அந்த பெளசரின் மேல் பாதியில் தண்ணீரும் கீழ் பாதியில் வெடிமருந்தும் நிரப்பி தயாரிக்கப்பட்டது.தாக்குதலுக??r />??கான நாளாக 14.02.87 அன்று மாலை தீர்மானிக்கபட்டது.அந்த தாக்குதலிற்கு பொறுப்பாக அன்றைய யாழ் மாவட்ட தளபதி கிட்டு பொறுப்பேற்றிருந்தார்.அவர் போராளிகளிற்கு அன்று காலை தாக்குதல் பற்றிய விழக்கங்களை அளித்து மாலை 6.30 மணியளவில் முகாமின் உள்ளே அந்த பெளசர் வெடிக்கும் அதை தொடர்ந்து தொலைதொடர்பின் ஊடாககட்டளை வந்ததும் முகாம் மீதான தாக்குதலை தொடங்கும்படி வழியனுப்பி வைத்தார்.

அதன்படி போராளிகள் எல்லோரும் அன்று மாலை 4 மணியளவிலேயே தயாராய் நாவற்குழி முகாம் தாக்குதலிற்காக அவரவர் இடங்களில் நிலையெடுத்து காத்திருந்தனர்.இறுதியாக அந்த பெளசரை வெடிக்க வைப்பதற்காக நேர கணிப்பு பொறியை லெப். கேணல் பொன்னம்மானும் வாசுவும் இணைத்து முடித்திருந்தனர். எல்லா போராளிகளும் தங்களிற்கு தந்தவிடயங்களையும் எதிரியை எப்படியெல்லாம் தாக்கலாம் என்று தங்கள் மனங்களிலேயே ஒத்திகை பார்த்தபடி அந்த வெடி வெடிக்க போகும் 6.30 மணி எப்போவரும் என தங்கள் கை கடிகாரங்களை அடிக்கடி ஒரு பரபரப்புடன் பார்த்து கொண்டிருந்த வேளை 5.30 மணியவில் அந் பகுதியையே அதிர வைக்கும் ஒரு வெடியொசை கேட்டது. எல்லா போராளிகளின் முகங்களிலும் ஒரு வித கேள்வி குறி யுடன் தொலை தொடர்பு கருவி வைத்திரந்தவர்களை பார்த்தனர்.

தொலை தொடர்பில் எல்லோரும் கிட்டுவை அழைத்தபடி இருந்தனர்.அண்ணை என்ன நடந்தது. அங்கை வாசு பென்னம்மான் ஒரதரின்ரை தொடர்பும் கிடைக்கேல்லை என்ன நடந்ததெண்டு தெரியேல்லை எல்லாரும் அப்பியே நில்லுங்கோ நான் இடத்திற்கு போய் பாத்திட்டு உங்களை தொடர்பு கொள்ளுறன்கிட்டுவின் குரல் ஒலித்தது. அரை மணி நெரத்தின் பின்னர் அனைவரையும் தங்கள் முகாம்களிற்கு திரும்பும்படி கிட்டுவின் கட்டளை கிடைத்தது. ஆம் 5.30 மணிக்கே அந்த பெளசர் வெடித்து சிதறிவிட்டது. எப்படி எங்கே தவறு நடந்தது என்று யாருக்கும் தெரியாது காரணம் அதனருகில் நின்றிருந்த பொன்னம்மான் கேடில்ஸ் ரஞ்சன் அகியோருடன் வாசுவும் கந்தக காற்றுடன் கலந்து எங்கள் தேசத்தில் வீசும் காற்றாகி போனான். வாசு மட்டுமல்ல அவனது குடும்பத்தில் அவனது சகோதரன் மேஜர் ஜேம்ஸ். சகோதரி கப்ரன் சுந்தரி ஆகியோரும் எங்கள் மண்ணிற்காய் மாவீரர்களாகி போனார்கள். அவர்களிற்காய் எனது தலை தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்து கொண்டு நினைவுகளை தொடர்வேன்...

மேலே நான் இணைத்த கட்டுரை சுவிசில் இருந்து வெளியாகும் நிலவரம் பத்திரிகைக்காக எழுதியது அந்த கட்டுரையை எழுதி பத்திரிகைக்கு அனுப்பிய பின்னர் புலிகளின் வான்படை நடாத்திய தாக்குதல் செய்திகள் வெளிவந்தபோது ஒருகணம் புலிகளிற்கு ஒரு வான் படை உருவாக்கும் கனவுகளுடன் அயராது உழைத்த வாசு.அப்பையா அண்ணை .குட்டிசிறி .பாரத். போன்றவர்களுயும் பின்னர் சங்கரண்ணாவும் ஒரு கணம் நினைவில் வந்து போயினர்

http://eu-avalam.com/kathai/nakaisuvai/ninaivu4.htm

Edited by sathiri

கப்டன் வாசு அவர்களின் சகோதரர்கள்

மேஜர்.ஜேம்ஸ்.

கப்டன் ் சுந்தரி

ஸ்கூல் வான் வராவிட்டால் ஸ்கூலில் இருந்து என்னை வீட்டுக்கு கூட்டி வருவது கேடில்ஸ் அண்ணர்தான்......

அஞ்சலிகள்........ :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மேஜர் கேடில்ஸ்

போராட்டத்தின் நிழலில்

பனை, தெங்கு தோப்பாய் அணிவகுத்திருக்க கனிமரங்கள் நிரை கட்டி நிற்கும் பிரதேசம் யாழ்.குடாநாட்டின் தென்மராட்சிப் பிரதேசம். இப்பிரதேசத்தில் ஆனையிறவும், நாவற்குழியும் என கடல் நீரேரியும் சதுப்பு நிலங்களும் நிறைந்த புவியியல் அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளனாக மேஜர் கேடில்ஸ் விளங்கினார். பதினெட்டு வயதிலேயே இப்பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

கண்டாவளையிவ் மகாலிங்கம் தம்பதியரின் புதல்வனாக அவதரித்த கேடில்சிற்கு பெற்றோர் இட்ட பெயர் திலீபன். இயல்பாய் சுறுசுறுப்பும், துருதுருவென இருந்த கேடில்ஸ் புலமைப் பரிசில் தேர்வில் சித்தியடைந்து யாழ்.இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார். பாடசாலை நாட்களில் கல்வியில் மாத்திரமின்றி விளையாட்டுத் துறையிலும் பிரகாசித்தார். தடைகள விளையாட்டுகளில் பல சாதனைகளைப் படைத்தார். க.பொ.த. உயர்தரம் வரை கல்வி பயின்ற கேடில்ஸ் சிறீலங்கா இராணுவத்தின் கொடூரத்தனங்கள் கண்டு உள்ளங் கொதித்து, தாயக விடுதலையை இலட்சியமாக வரித்து விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார்.

1980களின் நடுப்பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட கேடில்சின் எதையும் இலகுவில் விளங்கிக் கொள்ளும் ஆற்றலையும், நிர்வாகத்திறனையும், ஆளுமையையும் இனங்கண்ட மூத்த தளபதி கேணல் கிட்டண்ணா, அவரைத் தென்மராட்சிப் பிரதேசத்திற்கான பொறுப்பாளராக நியமித்தார். நாவற்குழியிலிருந்தும் ஆனையிறவிலிருந்தும் சிறீலங்கா இராணுவம் புறப்படுகின்ற வேளைகளிலெல்லாம் எண்ணிச் சில தோழரோடு எண்ணற்ற சிங்களப்படையை எளிதாய் விரட்டியடிப்பார். தென்மராட்சிப் பிராந்தியத்தில் மாத்திரமன்றி சிங்கள இராணுவம் யாழ். குடநாட்டில் எப்பகுதியில் முன்னேறினாலும் அங்கு கிட்டண்ணாவோடு இந்த இளைய பொறுப்பாளனும் தனது குழுவினரோடு நிற்பார். களமுனைகளில் தேர்ந்த தாக்குதல் தலைவனாக விளங்கினார்.

அது மாத்திரமன்றி தென்மராட்சிப் பகுதியில் மக்கள் மத்தியில் இருந்து செவ்வனே அரசியல் கடமைகளை ஆற்றினார். தேர்ந்த போராளிகளை போராட்டத்திற்கு தென்மராட்சியிலிருந்து எடுத்துத் தந்தார். மக்களோடு மக்களாக நின்று மக்களின் பிள்ளையாகக் கடமையாற்றிய கேடில்ஸ் மக்களின் பிரச்சினைகளைப் பூர்த்தி செய்வதில் முன்னின்று உழைத்தார்.

தென்மராட்சி வாழ் மக்களின் நல்வாழ்விற்காக தும்புத் தொழிற்சாலைகளை ஏற்படுத்தி உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவித்தார். எமது தாயகம் தன்னிறைவுள்ள, பொருண்மிய மேம்பாடுள்ள நாடாக மலர வேண்டும் என்ற தலைவரின் கனவை நனவாக்க அல்லும் பகலும் பாடுபட்டார். நெருக்கடியான சூழ்நிலைகளிலும் கடமை தவறாத நிதானம் பிசகாது தாயகப்பணியாற்றியவர் கேடில்ஸ். இன்றும் இவர் பெயரோடு விளங்கும் கேடில்ஸ் தும்புத் தொழில் நிறுவனம் தமிழீழ கயிற்றுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் முன்னின்று செயற்படுகிறது.

தாயகத்தின் விடுதலையை நேசித்த இந்த இளைய பொறுப்பாளன் எதிர்காலத்தில் தேர்ந்த பொறுப்பாளனாக சிறந்த தளபதியாக வருவானென விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகள் இவனை ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் காத்திருந்த நேரத்தில் நாவற்குழி முகாம் தகர்ப்பிற்குத் திட்டமிடப்பட்டது. தனது பிரதேசத்தில் வருகின்ற முகாமாகையால் கண் துஞ்சாது மெய்வருத்தம் பாராது முகாம் தகர்ப்பிற்கான ஏற்பாடுகளில் முன்னின்று செயற்பட்டார். விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு ஆகியோரோடு இணைந்து இராணுவத்திற்கு குடிநீர் கொண்டு செல்லும் பவுசரைப் பயன்படுத்தி இராணுவத்தைத் தகர்ப்பதில் முன்னின்று ஈடுபட்டார். அதன் போது ஏற்பட்ட விபத்தில் லெப். கேணல் பொன்னம்மானோடு, கப்டன் வாசு, லெப். சித்தார்த்தன் உட்பட ஏழு போராளிகளோடு காற்றோடு காற்றாகிப் போனார்.

தமிழீழ மலர்விற்காய் அயராது உழைத்த இவ்வீரமறவனதும், இச்சம்பவத்தில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய ஏழு மாவீரர்களினதும் 14ஆம் ஆண்டு நினைவில் நினைந்துருகி நின்று தாயக விடுதலைப் பணியில் எம்மை இணைத்து எம்பணி தொடர்வோம்.

நன்றி எரிமலை

18 அகவை இளஞன்தான் கேடில்ஸ்.

தென்மராட்சிக் கோட்டத்தின் தளபதியாக இருந்தபோது தனியே இயக்க நடவடிக்கைகளை மாத்திரமல்ல மக்களிற்கான கட்டுமானங்கள் என்று பல வேலைத்திட்டங்களையும் மிக நேர்த்தியாக மேற்கொண்டவர்.

மேஜர் கேடில்சினால் உருவாக்கப்பட்ட கைதடி தும்புத்தொழிற்சாலை அவர் வீரச்சாவை அணைத்து பல ஆண்டுகள் கழிந்தபோதும் தொடர்ந்து இயங்கி யாழ். குடாவிற்கான கயிற்றுத்தேவையின் பெரும் பகுதியை ஈடுசெய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கேடில்ஸ் ன் தம்பியார் கப்டன் காண்டிபன் மோட்டார் விபத்தில் இறந்தார்...

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் நினைவு மறக்க முடியாதது. இழப்பு மதிப்பிட முடியாதது.

பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவின் வெளியீடான "வாகையின் வேர்கள்" குறுவட்டு வெளியீட்டு நிகழ்வு நேற்று நடைபெற்றது.

தொடர்ந்து வாசிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.