Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிட்லருக்கு படுதோல்வியைக் கொடுத்த ஸ்டாலின் கிராட் சண்டைக்களமாக வன்னிப் போரரங்கு: "விடுதலைப் புலிகள்" ஏடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் வெல்ல முடியாதவர்கள் அதை நான் ஒத்துகொள்கின்ரேன் நெடுக்ஸ் என் பதிவினை வடிவாக வாசியுங்கள் ஆனால் சில ஊடகங்களின் மிகைப்படுத்தல் செய்யும் தமிழர்களின் உளவியல் சோர்வையும் சற்று யோசியுங்கள் அதைத்தான் நான் சொல்லவந்தேன் வீணான மிகைப்படுத்திய ஊடகங்களின் அதீத கற்பனை கலந்த செய்திகள் ஆரோக்கியமானதல்ல.

குடாநாடு புலிகளின் பூரண கட்டுப்பாட்டுள் இருந்த போது புலிகள் மக்களை நோக்கி அன்பான வேண்டுகோளை வைத்தனர். எமது எல்லைகளை நாம் தான் பாதுகாத்து நிற்க வேண்டும். போராளிகளோடு இணையுங்கள் என்று..!

அன்று அந்த அழைப்பை குடாநாட்டில் வாழ்ந்த தமிழர்கள் ஏற்றுக் கொண்டிருப்பின் குடாநாடு 13 வருடங்களுக்கும் மேலாக சிங்கள ஆளுகைக்குள் சென்றிருக்காது. இதேதான் கிழக்கிலும்.. நிலை. அவை அவை தாயக நிலைமையைக் காட்டி.. தாங்க தாங்க எப்படி வெளிநாடு போய் வசதியா பாதுகாப்பா வாழுறது என்று சிந்திச்சிட்டு இருக்கினமே தவிர.. எங்கட தமிழர் படை வெல்லப்பட முடியாது என்று காட்டனும் என்று எத்தனை பேர் களத்தில நின்று சாதிக்க நிக்கிறியள் என்றதுதான் என் கேள்வி..??!

வன்னி மக்கள் தான் மீண்டும் இன்றும் புலிகள் வெல்ல முடியாதது என்று காட்ட வேண்டியவர்களாக நிற்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள். அந்த மக்களுக்கு மட்டும் தானா இக்கடமையை செய்ய வேண்டும் என்ற நியதி..??! மற்றவர்கள் தூர பாதுகாப்பா இருந்து கொண்டு.. புலிகள் வெல்லப்பட முடியாதவர்கள் என்று காட்ட வேணும் என்று வேண்டுகோள்கள் வைக்கத்தானே இருக்கினம்..?! நீங்கள்.. நாங்கள்... புலிகள் வெல்லப்பட முடியாதவர்கள் என்று காட்ட செய்ய வேண்டியவை என்ன.. அதைச் சொல்லுங்கள் என்று தான் கேட்கிறேன்..!

யுரியூப்பில தர வேற்றம் செய்யுறதும்.. யாழில காட்டூண் வரையுறதும் என்று சொல்லிடாதேங்க பிளீஸ்..! இவற்றால நிச்சயம் சிறீலங்காப் படைகளின் நில ஆக்கிரமிப்பை ஒரு மில்லிமீற்றர் தானும் தடுத்து நிறுத்த முடியாது..! போர்க் களத்தில் நின்று கொண்டும் காட்டூண் வரையலாம்.. யுரியூப்பில் தரவேற்றம் செய்யலாம்..! :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வமைப்பு ((University Teachers for Human Rights (Jaffna)) முற்றுமுழுதாக தமிழ் தேசியத்திற்கு எதிராக எதிரிகளால் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு. மனித உரிமை என்பதை பெயரிற்காக இணைத்து வைத்திருக்கிறார்கள். மற்றும்படி மனித உரிமைகளிற்கும் இந்த மண்ணாங்கட்டிகளுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இதில் இருக்கும் சில துரோகிகள் யாழ் பல்கலைகழகத்தின் முன்னாள் விரிவுரையாளர்கள் (எனக்குத் தெரிய 1990 இற்கு முதல்). மற்றும்படி யாழ் பல்கலைகழகத்திற்கும் இவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இதை யாழ் பல்கலைகழகமே பல தடவைகள் கூறியிருக்கின்றது.

மேலும் சிங்களவனின் புத்திசாலித்தனத்தைப் பற்றி புதிதாக இவ்வறிக்கை என்ன சொல்கிறது? காலம் காலமாக எல்லா ஆக்கிரமிப்பாளர்களும் செய்வதையே சிங்களமும் செய்கிறது. குள்ளநரித் தனமெல்லாம் புத்திசாலித் தனமாகாது. உதாரணம்: ஜே.ஆர். உண்மையில் சிங்களம் புத்திசாலியாக இருந்தால் தானும் வாழ்ந்து மற்றவனையும் வாழவிடும்.

புத்தகம் படிக்காமாலேயே விமர்சனம் வைப்பது கைவந்த கலைதான்!

தமிழரின் தாயகக் கோட்பாட்டை அழிக்க சிங்கள அரசும், பிற பேரினவாதிகளும், தமிழர்களை எப்படிப் பாவிக்கின்றார்கள் என்று இணைத்த கட்டுரையில் உள்ளது.. எழுதியவர்கள் தமிழ்த் தேசியத்திற்கு எதிரானவர்களாக இருந்தாலும் இணைக்கப்பட்ட கட்டுரை சில விடயங்களை புரிந்துகொள்ள உதவும்..

தமிழீழப் போராட்டத்தை அழிக்க வடக்கில் டக்ளஸையும், கிழக்கில் கருணா (பிள்ளையான்) ஐயும் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒட்டுக் குழுக்கள் எல்லாவற்றையும் தூசி தட்டுவதுபோல் துடைத்துவிடலாம் என்று முகில்களுக்குள் இருந்து கனவு காணக்கூடாது!

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே உந்த கிருபா அண்ணெ எங்கெருந்து வாறார்?

உவப்பில்லாத ஆனால் உண்மையான கருத்துக்களை எழுதினால் அவர்களை "போட்டுத்தள்ள வேண்டும்" என்று நினைக்கும் இடத்திலிருந்து!

சில ஊடகங்களின் மிகைப்படுத்தல் செய்யும் தமிழர்களின் உளவியல் சோர்வையும் சற்று யோசியுங்கள் அதைத்தான் நான் சொல்லவந்தேன் வீணான மிகைப்படுத்திய ஊடகங்களின் அதீத கற்பனை கலந்த செய்திகள் ஆரோக்கியமானதல்ல.

எப்ப இருந்தாலும் தமிழர் வெல்லுவார் என்பதில் நீங்கள் நம்புவதை போல எல்லா தமிழர்களும் நம்புறார்கள்தான்... அதையும் தாண்டி என்ன செய்கிறீர்கள்..?? தமிழருக்கு ஆயுதங்கள் வேணும் எண்டு தமிழ் மக்களுக்கிடையில் பிரச்சாரம் செய்கிறீர்களா...??

பத்திரிகை பத்திகளில் வருபவை அதிகமாக மிகைபடுத்த படுவதாக கூட இருக்கலாம்... அது அவர்களின் நம்பிக்கை.. சிங்களவன் தமிழனின் பலம் பற்றி பிரச்சார படுத்துத்தும் ஒரு கட்டுரை வந்தால். ஐயோ அப்படி ஒண்டும் எங்களிட்டை இல்லை நாங்கள் வெறும் கையாலைதான் இப்பவும் முழம் போடுகிறம் எண்டு போய் ஒழியுறதுதான் எதிர் பிரச்சார உத்தியா...????

அப்படி புலிகளின் ஆயுதங்கள் பற்றி சிங்களவன் சிங்களவனுக்கு விளிப்புணர்வு ஊட்டுவதுக்காக மட்டும் ஆயுதங்கள் விபரம் வெளியிடுவதில்லை... தாங்கள் வெல்ல முடியாததின் காரணத்தையும், அதன் தாமதத்தையும் தான் சொல்கிறான்...! ஆட்ச்சியை தக்க வைக்க ஒரு உக்தி அது...

பொதுவாக சிங்கள அரசுகளின் பிரச்சாரம் புலம்பெயர்ந்த தமிழர்களை நோக்கியதாகத்தான் இருக்கிறது... புலிகள் ஒழிந்தார்கள், தலைவரை நெருங்கி விட்டோம் இப்படி பல பிரச்சாரங்கள்... இந்த செய்திதான் சர்வதேச நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும் போய் கொண்டு இருக்கிறது... சர்வதேச ஊடகங்கள் எல்லாம் புலிகள் தொலைந்தார்கள் எனும் ரீதியில் எழுதும் பத்திகளை நீங்கள் வாசித்து இருந்தால் உண்மையாக அவர்கள் நம்பும் விடயம் என்ன என்பது புரியும்...!

சர்வதேசத்தின் ஆதரவு புலிகளை அழிக்கும் வல்லமை வாய்ந்த சிங்கள அரசுக்கு இருப்பதில் வேறு காரணங்கள் தேவையே இல்லை... அழிந்து கொண்டு இருக்கும் தமிழர்களின் மனித உரிமைகள் பற்றிய வெளிப்பாடுகள் இருந்தாலும், சர்வதேசம் எதிர்பார்த்து காலம் கடத்துவது முழுமையாக இலங்கை அரசாங்கம் சொல்லும் புலிகளின் அழிவை பற்றி மட்டும்தான்...

தமிழ் மக்களுக்குள்ளேயே எங்களின் தாக்குதல் திறன்களை யும் பலத்தையும் சொல்ல விட மாட்டாதவர்கள்.. சர்வதேசத்துக்கு ஒரு புரிதலை ஊட்டி சிங்கள் அரசுக்காக மிண்டு கொடுக்கும் வேலையை நிறுத்த விடுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை... தமிழீழ சாத்தியத்திலையும் நம்பிக்கை இல்லை...

கூரை ஏறீ கோழி பிடிக்க விடாதவை, வானம் ஏறி வைகுண்டமே போகவே விடுவினம்...??? இல்லை இன்னும் ஒண்டும் சொல்லாம் உள்ளூரிலை ஓணான் பிடிக்க ஏலாதவர் வெளியூர் போய் உடும்பு பிடிக்கவா போகினம்...??

சரியான திட்டமிடலும் தெளிவும் இல்லாத கூட்டத்தால் தமிழ் இனி மெல்ல சாகும்...

Edited by தயா

கிட்லர் ஏற்கனவே அங்கீகாரத்தோடு இருந்த ரஸ்யாவை ஆக்கிரமிக்க முயன்றார்.

சேவியத் ஒன்றியம் ஏற்கனவே அங்கீகாரத்தோடு இருந்த ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது.

அமொரிக்கா ஏற்கனவே அங்கீகாரத்தோடு இருந்த வியட்னாமை ஆக்கிரமித்தது.

அமெரிக்கா ஏற்கனவே அங்கீகாரத்தோடு இருந்த ஈராக்கை ஆக்கிரமித்திருக்கிறது.

அவ்வாறான ஆக்கிரமிப்பை மேற்கொள்பவர்களை ஆக்கிரமிப்பு மூலம் தாம் விரும்பும் நன்மைகளை எதிர்பார்த்த விலைக்குள் பெற முடியவில்லை என்ற நிலையை உருவாக்குவது ஒப்பீட்டளவில் இலகு. மேலதிகமாக இதற்கான அணுகுமுறையாக ஆக்கிரமிக்கப்படுவர்கள் எந்த வழி முறைகளைப் பயன்படுத்தினாலும் அவர்களது அங்கீகாரம் இல்லாது போய்விடப்போவதில்லை. எனவே ஆக்கிரமிப்பாளரின் முயற்சிகள் முடக்கப்பட்டாலே அது வெற்றியாக மாறிவிடும்.

தமிழர் தரப்பை பொறுத்தவரை ஏற்கனவே அங்கீகாரத்தோடு இருக்கவில்லை எந்த வழிமுறைகளிலும் ஆக்கிரமிப்பை எதிர்த்தாலும் அவை எமக்கு எதிராக எதிர்காலத்தில் மாற்றம் பெறாது இருந்துவிட. அத்தோடு சிறீலங்காவின் ஆக்கிரமிப்பு முயற்சிகளை முடக்கினாலேயே அது வெற்றியாக மாறிவிடவும் போவதில்லை.

சிறீலங்காவின் பகுதி என்று சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட பகுதி ஒன்றை எமது என்று உரிமைகோரி அதை மீட்டு பாதுகாத்து இவை எல்லாத்தையும் நியாயப்படுத்தி அங்கீகாரம் பெற வேண்டிய நிலையில் தான் எமது நிலைப்பாட்டில் களம் அதில் உள்ள சவால்கள் இருக்கிறது.

எனவே இலங்கைத் தீவின் சமர்களங்களை இராணுவ கண்ணோட்டத்தில் மாத்திரம் ஏனையவற்றோடு ஒப்பிடலாம். ஆனால் அதன் மூலம் ஒரே மாதிரியான அரசியல் இராஜதந்திர வெகுஜன விளைவுகளை ஏற்படுத்தும் முடிவுகளைத்தரும் என்ற முடிவிற்கு வர முடியாது. அப்படியான எதிர்பார்ப்புகள் மிகைப்படுத்தப்பட்டவையும் தவறானவையும் கூட.

யாரும் தோற்கிறோம் பலவீனமாக இருக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு போர் புரிவதில்லை. இது அமெரிக்கா, சோவியத் ஒன்றியம் முதல் விடுதலைப் புலிகள் வரை எல்லோருக்கும் பொருந்தும். ஆனால் ஒவ்வொருவரும் தத்தமது தரப்பின் தேவைகள் பலவீனங்கள் என்ன என்பதை உணர்ந்து பங்களித்துப் பலம் சேர்க்க வேண்டும். கொள்கை இலட்சியத்தில் நம்பிக்கையில்லாது தமது பிரச்சாரத்தை தாமே நம்பி அதில் பொழுது போக்குவதும் எதிர்ப் பிரச்சாரங்களையே நியாப்படுத்தல்களாக வைப்பதும் மிகவும் நகைப்புக்குரியவை.

குறுக்கண்ணா நீங்கள் சொல்வதுதான் சரி... ஆனா பாவம் இந்த பாழாபோன எங்கட சனங்கள் இன்னும் எதையோ எல்லாம் கற்பனை பண்ணி நாசமா போகபோகுதுகள்.

பாவம் நீங்கள் தான் ஏதாவது பார்த்து செய்யவேணும்..

:rolleyes: அப்படிப் போடுங்கள்

முடிவுகள் அனைத்தையும் வெளிப்படுத்தும்.

Edited by Iraivan

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்று சொந்தக்கருத்து எதுவும் கிடையாது, ஆனால் என்னை எல்லோரிலும் சிறந்த அறிவாளி என்று காட்டிக்கொள்ள எல்லாக்கருத்துக்கும் எதிர்க்கருத்து எழுதியே தீருவேன். என்னில் எனக்கு நம்பிக்கையில்லை, என் இனத்திலும் எனக்கு நம்பிக்கையில்லை. உள்ள நம்பிக்கை எல்லாம் சிங்களவன் விரைவில் வன்னியைப் பிடிப்பான் என்பதுதான். அதற்காக நான் தொடர்ந்தும் போராட்டத்தினைச் சிதைக்கும் வகையில் கருத்து எழுதுவேன். நான் யார் ?....முடிந்தால் கண்டுபிடியுங்கள்.விடை அவ்வளவு ஒன்றும் கடிணமானது இல்லை.

தமிழர் தரப்பு அங்கீகாரம் உடையதல்ல என்ற பிரச்சனை, எவருக்கம் வராது. அது அங்கீகரிக்கப்பட்டு நெடுநாளாகிவிட்டது. ஒப்பந்தங்கள் என்ற நிலையில் தமிழர் தரப்போடு எப்போது கைச்சாத்திடுதல் , பேச்சுவார்த்தை என்ற நிலைப்பாடு ஏற்பட்டதோ அப்போதே தமிழர்தரப்பு அங்கீகாரத்திற்கு உரித்துடையதாகிவிட்டது.

கொள்கையளவில் எந்த ஆக்கிரமிப்பும் உலகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. தமிழர் பிரதேசத்தின் மீதான ஆக்கிரமிப்பும் அத்தகையதுதான். மக்களை இடம்பெயரச் செய்தமைக்காக எழுப்பப்பட்ட கண்டனங்கள் இந்தவகையைச் சார்ந்தவைதான்.

உலக நாடுகளின் அங்கீகரித்தல் அவற்றின் தேவைகளுக்கேற்பவே அமைகின்றன. எங்களை அங்கீகரிப்பதன் மூலம் அவர்கள் அடையப்போகும் தேவைகள் உயர்வானதாயிருந்தால் நிச்சயமாக அங்கீகரிப்பதில் உலக நாடுகள் பின்னிற்காது.

தமிழர் தரப்பிற்கான தேவையென்பது போராடும் தரப்பால் முதன்மைப்படுத்தப்படுகின்றத

  • கருத்துக்கள உறவுகள்

குடாநாடு புலிகளின் பூரண கட்டுப்பாட்டுள் இருந்த போது புலிகள் மக்களை நோக்கி அன்பான வேண்டுகோளை வைத்தனர். எமது எல்லைகளை நாம் தான் பாதுகாத்து நிற்க வேண்டும். போராளிகளோடு இணையுங்கள் என்று..!

அன்று அந்த அழைப்பை குடாநாட்டில் வாழ்ந்த தமிழர்கள் ஏற்றுக் கொண்டிருப்பின் குடாநாடு 13 வருடங்களுக்கும் மேலாக சிங்கள ஆளுகைக்குள் சென்றிருக்காது. இதேதான் கிழக்கிலும்

மிகவும் ஆழமான

ஆனால் உண்மையான கருத்துக்கள்

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.