Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நட்பு

அவனும் அவளும்

நட்பின் பரந்த வெளியில்

கைகோர்த்து நடந்தனர்.

ஆண், பெண் பால்நிலைக்கு அப்பால்

உன்னதப் பொருளின் விரிதளத்தில்,

கிண்டலாய், கலகலப்பாய், சண்டைகளாய்

அவ்விருவரின் முன் விரிந்தது உலகம்.

ஆயிரங்கண்கள் அவர்களின் புனிதத்தை

அறியாமல் இழிவாகப் பார்த்தன.

ஆண்,பெண் பிம்பங்களுக்கு அப்பால்

நட்பின் வளர்வைச் சமுதாயம் ஏற்கவில்லை.

ஆணைப் பெண்ணும், பெண்ணை ஆணும்

மோகிக்கும் பாலியல் கண்கொண்டே

பார்த்துப் பழக்கப்பட்ட சமுதாயம்

வேறென்ன செய்யும்?

மீள எண்ணாத சமூக எச்சங்களாக,

அவன் காதல் மனையாளின் கண்ணீரும்,

அவள் வாழ்க்கைத் துணைவனின் சந்தேகமும்

நெய்யிட்ட பெருந்தீயாய் சுவாலை வீசிற்று.

கனத்த மனங்களுடன்...

சுருங்காத உன்னத விரிதளத்தில்

தொடர்ந்தும் நடக்க..

நட்பு என்னும் மானுட உணர்வை

சமுதாயப்பேய் கீறிக் கிழித்து

வேடிக்கை பார்த்தது.

  • Replies 54
  • Views 12.6k
  • Created
  • Last Reply

நட்பின் புனிதத்தை நட்பான கவி வரியில் நட்புடன் சொல்லி சென்ற விதம் அழகு சகரா அக்கா வாழ்த்த்துக்கள் :D ..நட்பின் புனிதம் நண்பர்களின் பார்வைக்கு மட்டும் தான் தெரியும் வெளிகண்கள் அதனை உணர்வது கடினம் :) அக்கா..நல்லதொரு கவிதையை நீண்டநாட்களின் பின் சுவைக்க கிடைத்தது மகிழ்ச்சி.. :D

அப்ப நான் வரட்டா!!

சகீரா அக்கா, இப்ப என்ன சொல்ல வாறீங்கள். எனக்கு ஒண்டும் விளங்க இல்ல. சீடன் வேற ஏதோ நீங்கள் பெரிய ஒரு தத்துவம் ஒன்றை கூறிவிட்டமாதிரி ஆகா ஓகோ என்று பாராட்டி இருக்கிறார்.

ஆணும், பெண்ணும் பரந்தவெளியில் கைகோர்த்து நடக்கிறீனமோ நட்புடன்? நல்லது. நல்லா கால் வலிய நடக்கட்டும். அதுக்கு ஏன் சமுதாயத்த திட்டுறீங்கள்?

ஐயோ என்னையும் பிறகு வந்து திட்டிப்போடாதிங்கோ. பிறகு அழுதுடுவன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ என்னையும் பிறகு வந்து திட்டிப்போடாதிங்கோ. பிறகு அழுதுடுவன்.

என்ன கலைஞன் உங்களுக்கும் யம்மு பேபியின் பழக்கங்கள் தொற்றிவிட்டதா?

நட்பின் பரந்த வெளியில் நடந்து பாருங்கள் கால் வலிக்காது.

கலைஞன் உங்களுக்குப் பெண் சிநேகிதிகள் இருக்கிறார்களா?

பால்யம் முதல் நட்பாய் இருக்கும் ஆண்கள் எந்த புறச்சூழல்களாலும் பாதிக்கப்படுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை இறப்புவரைக்கும் நட்புத் தொடரும் அதை எவரும் அலட்டிக் கொள்ளமாட்டார்கள். ஆனால் ஒரு பெண்ணும் ஆணும் நல்ல நண்பர்களாக ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் பழக முடியும். ஒரு பெண் பருவம் அடைந்து விட்டால் சிறுவயதிலிருந்தே நட்பாகப் பழகிய ஆணிடம் இருந்து அந்நியப்படுத்தப்படுகிறாள். அதையும் மீறிச் சில குடும்பங்களில் பிள்ளைகளின் நட்பிற்கு மரியாதை கிடைக்கிறதுதான் ஆனால் அதுவும் எத்தனை வீதம் என்று சொல்வது? சரி ஒரு பெண்ணோ அல்லது ஒரு ஆணோ தங்கள் திருமணவாழ்வில் நுழைந்தபின் அந்தஆண் அல்லது அந்தப்பெண் தத்தம் எதிர்ப்பால் சிநேகிதரிடம் நட்பாய் இருப்பது எத்தனை பேருக்குச் சாத்தியப்படுகிறது? ஏன் சாத்தியமற்றுப் போகிறது?

கலைஞன், உங்கள் பார்வையில் உங்கள் சிநேகிதிகளின் அல்லது உங்கள் நண்பர்களின் ஆண் பெண் என்ற பிம்பங்களுக்கு அப்பாற்பட்ட நட்பு பால்யத்தில் அல்லது பள்ளிச்சாலைகள் இருந்த அளவிற்கு திருமண நுழைவிற்குப் பின் தொடரப்படுகிறதா?

Edited by valvaizagara

உந்த ஆண் பெண் நட்பு பற்றி கதைச்சே யாழில் நான் பட்ட அவஸ்தை இருக்குதே. அப்பப்பா போதும் .

  • 2 weeks later...

வணக்கம் சஹாறா அக்கா! பெரும் விவாதப் பொருளைக் கருவாக எடுத்திருக்கிறீர்கள்.

ஆண் பெண் நட்பில் எத்தனை வீதம் தூய்மையான நட்பாக இருக்கிறது.

தூய்மையான நட்பாக இருந்தாலும் சமுதாயத்தில் எத்தனை பேர் அதனைத் தூய்மையான நட்பாக ஏற்றுக் கொள்வார்கள்.

அதன் காரணமாக இந்த நட்பால் கிடைக்கும் பரிவு பாசம் என்பவற்றிற்கப்பால் கிடைக்கும் துன்பங்கள் பரகாசங்கள் எவ்வளவு?

இத்தனையையும் தாங்கிக் கொண்டு எத்தனை நட்புகளால் நீடித்திருக்க முடியும்.

என்றாலும் கவிதை அழகாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அழகிய கவிதை சோதரி!!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யமுனா, மணிவாசகன், சுவி ஆகியோரின் பாராட்டுக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

மணிவாசகன் உங்கள் கருத்து யதார்த்தமானதே, ஆண், பெண் என்ற பிம்பங்களுக்கு அப்பால் நட்பு என்பதை ஏன் ஏற்கத் துணிவில்லாதவர்களாக இருக்கிறோம் என்பது விளங்கவில்லை.

ஆண், பெண் என்ற உருவபேதங்களால் நாம் எவ்வளவு உன்னதமான நட்பை இழக்கிறோம். என் வாழ்வில் நிகழ்ந்த ஒரு சம்பவம்,

எனது பால்ய நண்பன் மாவீரர் கடற்கரும்புலி கப்டன் வினோத்.... கப்டன் வினோத்தின் இயற்பெயர் திலகராஜ். நானும் வினோத்தும் ஒரே பாலர் பாடசாலையிலேயே ஆரம்பக்கல்வியைக் கற்றோம், பின்னர் வல்வை மகளிர் பாடசாலையில் தரம் ஐந்து வரையும் ஒரே வகுப்பறையிலேயே எங்கள் கல்வி தொடர்ந்தது. அதே நேரம் தனியார் கல்வி நிலையத்திலும் ஒன்றாகவே கற்றோம் எத்தனை சண்டைகள், எத்தனை சிநேக பூர்வமான உதவிகள், எத்தனை ஆசிரியர்களிடம் போட்டுக் கொடுப்புகள் அவையெல்லாம் எவ்வளவு ரம்மியமானவை. எப்போது தரம் ஆறுக்கு வகுப்பேற்றப்பட்டோமோ கொஞ்சம் கொஞ்சமாக அந்நியப்பட்டோம். எனக்கும் அவனுக்குமான நட்பு மனதிலே மட்டும், அப்போதெல்லாம் பரிச்சயமான பார்வைகளில் எனது பால்ய சிநேகிதனை தரிசித்துக் கொள்வேன்.

அந்தக்காலத்திலெல்லாம் நாம் ஏன் இப்படி மாற்றமடைகிறோம் என்ற கேள்வியே முளைத்ததில்லை. காரணம் நாம் வளர்ந்த சூழலும் வளர்க்கப்பட்ட விதமுமாக இருக்கலாம். ஆனால் எத்தனையோ அருமையான நட்புகளை ஆண், பெண் என்ற பால்நிலைப் பாகுபாட்டால் இழந்த பின்னர்தான் வருந்துகிறோம்.

என்னைப் பொறுத்தவரை மாவீரர் கடற்கரும்புலி கப்டன் வினோத் தன்னுடைய இலக்கை அடைய எத்தனித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் பல தடவைகள் அவன் என்னைத் தாண்டித் தனது சைக்கிளில் பயணித்துச் சென்றிருந்தான். அப்போதெல்லாம் அந்தப் பரிச்சயமான பால்ய வயதுச் சிநேகிதனின் பார்வை நில்லடி தோழி! உன்னோடு நான் பேசவேண்டும் என்பதுபோல் இருக்கும் ஆனால் பேச முடிவதில்லை. சைக்கிள் மட்டும் மிக ஆமையைவிட மந்தமாக என்னைத் தாண்டிச் செல்லும். வல்வைக் கடலில் கரும்புலியாக போவதற்கு சில நாட்கள் முன்னரும் என் சிநேகிதனின் அந்தப் பரிச்சயமான அதே பால்ய வயதுப் பார்வை என்னை அண்மித்தபோதும் நான் உணராது போய்விட்டேன். அவன் சாவணைக்கப் போகும் சங்கதியை தன் சிறுபிராயப் பிரியசகியான என்னிடம் கூறவிரும்பினானோ என்னவோ?

அவன் தாயகத்திற்காக ஆகுதியான பின்னரே அவன் பார்வையின் சேதியைத் புரிந்து கொண்டேன். நான் எவ்வளவு முட்டாள்... சிறுவயதிலிருந்தே என்னுடன் பேசி விளையாடி, சண்டைகள் பிடித்த தோழனிடம் பேசாமல் அறிவற்ற சமூகவிலங்காக நெடிதுயர்ந்த உன்னத நட்பை அந்நண்பனின் இழப்பிற்குப் பின்னால் நின்று எண்ணிப்பார்க்கிறேன். ஆண், பெண் என்ற உருவத்தின் மீதிருக்கும் எங்கள் சமுதாயக் கண்ணோட்டம், இதிலிருந்து விடுபட முடியாத விட்டில்களாக இன்னும் நாங்களும் இன்னும் பயணித்துக் கொண்டே இருக்கிறோம். இப்போதெல்லாம் எனது பால்ய நண்பர்களைக் கண்டால் வலியவே சென்று பேசுகிறேன். அடேய், வாடா, போடா என்று அவர்களை நான் அழைக்கும் போது அவர்களில் பிறக்கும் மகிழ்ச்சியில் எங்கள் நட்பின் தளம் விரிவடைகிறது. உலகம் ஆயிரம் சொல்லட்டும் நட்பின் உன்னத விரிதளத்தை ஆண், பெண் என்ற பாகுபாட்டைக் கடந்து காண்போம்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் புனிதமான நட்பு இருக்க முடியும் என்பது எல்லாம் பொய்.

முதலில் புனிதம் என்றால் என்ன என்ற ஒரு கேள்வி இருக்கிறது. அடுத்தது நட்பு என்றால் ஒரு கேள்வி இருக்கிறது.

எனக்கு ஒரு கேள்வி உண்டு. யாரவது பதில் சொல்வீர்கள் என்று நினைக்கிறேன்.

காதலியாக இல்லாது தோழியாக மட்டும் இருக்கின்ற ஒரு பெண் மீது காம உணர்வு வந்தால், அங்கே நட்பு இல்லை என்று ஆகிவிடுமா?

ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஒரு கவிதையில் நினைவில் உள்ள வரிகள் (இப்பொழுது இப்படி எழுதினால் வீட்டில் அடி விழும்)

உன் பருத்த முலைகளை

நான் ரசிப்பதை

இயற்கை எனக் கொள்ளும்

உயந்த நட்பை

தருவாயா தோழி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
:):unsure::(
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுதான் புரிகிறது நட்பு எப்போது நரகத்தில் தள்ளப்படுகிறது என்று.....

குறிகெட்ட ஒன்றை உன்னதமாக்கிப் பார்க்கமுடியாது.

ஆணுக்கும் பெண்ணுக்கும் புனிதமான நட்பு இருக்க முடியும் என்பது எல்லாம் பொய்.

முதலில் புனிதம் என்றால் என்ன என்ற ஒரு கேள்வி இருக்கிறது. அடுத்தது நட்பு என்றால் ஒரு கேள்வி இருக்கிறது.

எனக்கு ஒரு கேள்வி உண்டு. யாரவது பதில் சொல்வீர்கள் என்று நினைக்கிறேன்.

காதலியாக இல்லாது தோழியாக மட்டும் இருக்கின்ற ஒரு பெண் மீது காம உணர்வு வந்தால், அங்கே நட்பு இல்லை என்று ஆகிவிடுமா?

ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய ஒரு கவிதையில் நினைவில் உள்ள வரிகள் (இப்பொழுது இப்படி எழுதினால் வீட்டில் அடி விழும்)

உன் பருத்த முலைகளை

நான் ரசிப்பதை

இயற்கை எனக் கொள்ளும்

உயந்த நட்பை

தருவாயா தோழி!

Be your self Sabesan.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்போது ஒருவனுக்கோ ஒருத்திக்கோ நீ ஆண், நான் பெண் என்றும் பாகுபாடு தோன்றி ஆணைப் பெண்ணும், பெண்ணை ஆணும் ரசிக்கத் தூண்டுகிறதோ, அல்லது காமுற வைக்கிறதோ அதன்பின் எப்படி நட்பாகப் பயணிக்கமுடியும்?

ஐயா சபேசன்,

நட்புத் தோன்றும் காலம் எது?

காமம் தோன்றும் காலம் எது?

நட்பு எதுவரை பயணிக்கும்?

காமம் எதுவரை பயணிக்கும்?

வாசுதேவன் சொல்ல வருவது எனக்குப் புரியவில்லை. ஆண் பெண் நட்புக் குறித்து மிக ஆழமான கருத்துக்களை வைக்கக் கூடிய வாசுதேவனிடம் இருந்து மேலும் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

வல்வைசகறா,

ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் நெருங்கிய நட்பை கொண்டிருக்கும் பொழுது, அங்கே காமம் ஒரு துளியும் இல்லை என்ற சொல்வதை நான் நம்புவது இல்லை.

இரண்டு எதிர்ப் பாலினங்கள் நெருங்கும் போது, அங்கே காமம் உருவாகுவது மிக மிக இயல்பானது.

ஆனால் காமத்தை "புனிதம்" என்ற மாயையான கருத்துருவாக்கம் அடக்கி வைத்திருக்கும். நாம் காமம் அற்ற நட்பைக் கொண்டிருக்கிறோம் என்ற தவறான புரிதல் ஏற்படுத்துகின்ற தற்பெருமை காமம் பற்றி சிந்திப்பதை தடுத்துக் கொண்டிருக்கும்.

சிலர் காதலிலே கூட காமத்திற்கு இடம் இல்லை என்று "புனிதக் கதை" பேசுகின்ற போது, நட்பைச் சுற்றி கட்டப்பட்டிருக்கு புனிதத்தை பற்றி சொல்லத் தேவையில்லை.

நாம் உணராது இருப்பதனாலேயே அங்கே காமம் இல்லை என்று அர்த்தம் இல்லை.

அவள் மீது அவனுக்கு காம உணர்வு இருக்கலாம் அல்லது ஏற்படலாம் என்பதையும், அவன் மீது அவளுக்கு காம உணர்வு இருக்கலாம் அல்லது ஏற்படலாம் என்பதையும் இருவரும் ஏற்று அங்கீகரித்து நட்பாக இருப்பதே உண்மையான நட்பு.

இயற்கையாக வருகின்ற ஒரு உணர்வாகிய காமம் நட்பை எந்த விதத்திலும் களங்கப்படுத்தாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ஆணும், ஆணும் நட்பாய் இருக்கும் போது காமம் ஊடுருவது இல்லையே... பெண்ணும் பெண்ணும் நட்பாய் இருக்கும் போது அங்கும் பாலியல் உணர்வு தூண்டப்படுவதில்லையே...

எதிர்ப்பாலினங்கள் என்பதற்காக மிருகங்கள்போல் மனிதர்களும் புணரும் நிலைக்கு மாற்றமடைவதாய் இருந்தால் மனிதர்களுக்கு இருக்கும் ஆறாவது அறிவு எதற்கு?

ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்பு என்பதை மிருகங்களால் பகுத்தாய்ந்து உணரமுடியுமா?

சபேசன், உங்கள் கருத்தை என்னால் ஏற்க முடியவில்லை. உங்கள் கருத்துப்படி பார்த்தால் ஆண், பெண் என்ற இருபாலருக்குள் ஏற்படும் நட்பை சமுதாயம் கேவலப்படுத்தும் ஒரு நிலையைத்தான் தோற்றுவிக்கும். நட்பை நட்பாகப் பார்ப்பதால் எனக்கு அது உன்னதமாகப்படுகிறது. நீங்கள் நட்பையும், காமத்தையும் குழப்பிக் கொள்வதால் காமத்துடனான நட்பு என்பது களங்கமில்லாதது என்கிறீர்கள். மிருகங்களால் உணரமுடியாத ஒன்றான நட்பை மனிதர்கள் உணர்கிறார்கள். நீங்கள் ஏன் மனிதர்களாக சிந்திக்க மறுக்கிறீர்கள்?

வல்வைசகறா,

நீங்கள் சொன்னது போன்று ஆணுக்கும் ஆணுக்குமான நட்பில் காமம் தோன்றுவது இல்லை. பெண்ணுக்கும் பெண்ணுக்குமான நட்பில் காமம் தோன்றுவது இல்லை.

காரணம் அவர்கள் ஒரே பாலினமாக இருக்கிறார்கள். அங்கே காமம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. (ஓரினச் சேர்க்கை பற்றிய விடயத்தை தவிர்த்து விட்டே நான் இதை சொல்கிறேன்)

ஆனால் ஆண் பெண் என்ற இரண்டு எதிர்ப் பாலினங்கள் நெருங்குகின்ற இடத்தில் காமம் வருவது இயல்பானது.

ஒன்றைக் கவனித்துப் பாருங்கள். யாரும் ஆணும் ஆணும் கொண்டிருக்கம் நட்பை "புனிதமான நட்பு" என்று சொல்வது இல்லை. அதே போன்று பெண்ணும் பெண்ணும் கொண்டிருக்கும் நட்பையும் "புனிதமான நட்பு" என்று அழைப்பதில்லை.

ஆனால் ஒரு ஆணும் பெண்ணும் நட்புக் கொண்டிருக்கும் போது மட்டும் "புனிதம்" என்ற கவசம் தேவைப்படுகிறது. இது ஏன்?

இயல்பாக எழுகின்ற உணர்வை இந்த "புனித பிம்பம்" அடக்கி வைக்கிறது.

நான் புணர்தல் பற்றி பேசவில்லை. நட்பு என்பதில் இருவரும் ஒருவரை ஒருவர் அவரவராகவே ஏற்றுக் கொள்ளுதல் முக்கியம்.

காதல், திருமணம் போன்றவைகள் எழுதப்படாத மற்றும் எழுதப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வருகின்ற உறவுகள். இந்த உறவுகள் தளைகளும், தடைகளும் மிக்கவை.

நட்பு என்பது அப்படி அல்ல. நட்பின் பெயரில் எதைக் கட்டுப்படுத்தினாலும் அது உண்மையான நட்பாக இருக்காது.

என் தோழியின் அழகான அங்கங்கள் எனக்குள் காம உணர்வை ஊற்றெடுக்கச் செய்கின்றது என்ற இயற்கையான உண்மையை அங்கீகரிக்க மறுத்து, அதைக் கேவலம் என்ற கருதுகின்ற ஒரு நட்பு எந்த வகையில் உன்னதமான நட்பாக முடியும்?

சமூகத்தை விடுங்கள்! முதலில் அந்தத் தோழனும் தோழியும் ஒருவரை ஒருவர் அவரவர் உள்ளபடியே அங்கீகரிக்கிறார்களா என்பது என்னுடைய கேள்வி

மாய பிம்பங்களால் கட்டப்பட்ட எந்த ஒரு உறவையும் "நட்பு" என்று என்னால் அழைக்க முடியாது.

என்னைப் பொறுத்தவரையில், மற்றும் சபேசனும் சொன்னதை வைச்சு யோசிச்சு பார்க்கும்போது எனக்கு என்ன விளங்கிது என்றால் காமம் என்பதை நாங்கள் மிகவும் கீழ்த்தரமான உணர்வாக நினைக்கின்றோம். இதேபோல் காதல் என்பதையும் பலர் கீழ்த்தரமாக நினைக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்.

அடிப்படையில் உள்ள மனித உணர்வுகளை கீழ்த்தரமாக நினைப்பது மிகவும் தவறானது. ஒன்றை தவறாகப் புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் இன்னொன்றை கட்டி எழுப்புவது இதைவிட இன்னும் தவறானது.

ஆகவே...

அன்பர்களே...

முதலில்.. நட்பு, காதல் என்று கதை அளக்கமுன்னம்

அடிப்படை மனித உணர்வுகளை மதிக்கப் பழகுங்கள். காமம் என்பது மனித உணர்வுக் கலவையின் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

உணர்வுபூர்வமாக உள்ள அன்பை காதல், நட்பு என்று ஒவ்வொரு பிரிவுகளில் அடக்கி, அவற்றை அறிவுபூர்வமாக அணுகி கட்டி ஆள்வது என்பது எவ்வளவு தூரம் சாத்தியமானது என்று தெரியவில்லை.

சமூக அங்கீகாரம் பெறுவதற்காக அடிப்படை மனித உணர்வுகளை ஒளிக்கத் (HIDE) தேவையில்லை என்று நினைக்கின்றேன். நான் ஒரு நல்லவன், அல்லது தூய்மையானவன் என்று சமூகம் எமக்கு பட்டங்கள் ஒன்றும் தரத் தேவையில்லை. அப்படி எதிர்பார்க்கவும் தேவையில்லை. எமது மனச்சாட்சிப்படி நாம் மற்றவர்களுடன் அன்புடன், பாசத்துடன், மகிழ்வுடன் வாழ்ந்தாலே போதுமானது.

சபேசன், சகீரா சரி மிச்சம் தொடருங்கோ. என்ன சொல்லிறீங்கள் என்று பாப்பம்..

Edited by முரளி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் சபேசன்,

நாம் பழகும் நண்பர்களைப் பொறுத்தே நட்பின் இயல்பு இனக்காணப்படுகிறது. ஒரு திருமணமான ஆணுக்கு இன்னொரு திருமணமான பெண்ணுடன் நட்பு என்பதை சாதாரண சமூகம் பிரச்சனையானதாகவே பார்க்கிறது. ஏன் அந்தத் திருமணமானவர்களுக்கான தேவைகள் ரசிப்புகள் எல்லாம் அவரவர் குடும்பத் துணையிடமே கிடைக்கும் போது பழகும் தோழியிடமோ, தோழனிடமோ அங்கங்களை ரசிக்கத் தோன்றுகிறது என்று கூறும் உங்கள் கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு வேளை நான் பழகும் நண்பர்களிடம் அப்படியான தன்மைகள் குறைவாக இருக்கலாம். உங்கள் கருத்தை வைத்துப் பார்த்தால் உண்மையான நட்புக்குப்பதில் சந்தேகமும், அவ நம்பிக்கைகளும் மாத்திரமே வளர்ந்து நட்பை விழுங்கிவிடும். தொடர்ந்து நட்பின் வெளிகளில் கைகோர்த்துப் பயணிக்க முடியாமல் ஆண், பெண் என்ற பிம்ப வரையரைக்குள்ளேயே ஆணுக்கும் பெண்ணுக்குமான நட்பு நசுங்குண்டு போகவேண்டியதா?

சபேசன் உங்கள் வாதத்தை நீங்கள் ஆணித்தரமாக கூற ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் என்னுடைய கருத்தை என் உணர்வு பூர்வமானதாகத்தான் வைக்கமுடியும். நீங்கள் கட்டுரையாளன் எப்பொருளையும் ஆய்வது உங்களுக்குப் பிடித்தமானதாக இருக்கலாம். ஆனால் நான் அப்படியல்ல என் உணர்வு கவிதை, இரும்பிற்கும் இறக்கை கட்டி பறக்கவைப்பது எனக்கானது. அதுவே எனக்கானதும் கூட..... எனது வட்டம் வித்தியாசமானது. என் வட்டத்திற்குள் இருப்பவர்களால்த்தான் அதனை உணரமுடியும்.

சபேசன் உங்களிடம் ஒரு கேள்வி, உங்களுக்கு ஒரு சிநேகிதி கிடைத்து அச்சிநேகிதியிடம் நீங்கள் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தால் 'உன் பருத்தமுலைகளை நான் ரசிப்பதனை இயற்கை எனக் கொள்ளும் உயர்ந்த நட்பைத் தருவாயா தோழி" என்றா கேட்பீர்கள்?

உண்மையாக இருப்பதே நட்பு.

என்னுடைய தோழியின் அங்கங்களை நான் ரசிக்கிறேன் என்றால், அதை வெளிப்படையாக சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

ஆனால் இங்கே ஆண் பெண் நட்பு என்பது பொய்களில் கட்டப்பட்டதாக இருக்கிறது. இருவரும் நடித்து, ஒரு கட்டத்தில் அந்த நடிப்பை உண்மை என்று அவர்களே நம்பி, சமூகத்தையும் அப்படி நம்பும்படி கோருகிறார்கள்.

காமம் என்பது கேவலம் அல்ல. அது ஒரு இயல்பான உணர்வு. ஆனால் காமம் என்பதை கேவலம் என்று கருதும் இருவரும், மற்றவரை காமக் கண் கொண்டு பார்ப்பது "பாவம்" என்ற உறுதியான கருத்துக்குள் செல்கிறார்கள். ஒரு மாயையை நம்புவதற்கு இதுவே அவர்களை தூண்டுகிறது.

நாம் சில விடயங்களை கேள்விகள் மூலம் தர்க்கிக்கலாம்.

ஒரு ஆணும் ஆணும் பாலியல்நகைச்சுவை சொல்லி சிரிக்கலாம்

"புனிதமான" நட்பைக் கொண்டிருக்கும்ஆணும் பெண்ணும் அப்படி பாலியல் நகைச்சுவைகள் சொல்லி மகிழ்வார்களா?

ஒரு ஆண் தன்னுடைய நண்பனின் முன்னால் ஆடை மாற்றுவான்

"புனிதமான" நட்பைக் கொண்டிருக்கும் ஆணும் பெண்ணும் ஒருவர் முன்னால் ஒருவர் ஆடை மாற்றிக் கொள்வார்களா?

நட்பு என்பது கட்டுபாடுகள் அற்றது. ஆனால் ஆண், பெண் என்பதற்காக எத்தனையோ கட்டுப்பாடுகளை போட்டுக் கொண்டுதான் இந்தப் "புனிதமான" நட்பை கடைப்பிடிக்கிறார்கள்.

எதற்கு கட்டுப்பாடு போட்டிருப்பார்கள் என்று பார்த்தால், அவைகள் காமம் சார்ந்த விடயங்களாக இருக்கும்.

இருக்கின்ற ஒன்றுக்குத்தானே கட்டுப்பாடு போட முடியும்? காட்டுப்பாடுகள் போடுகின்ற போதே, அங்கே காமம் இருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்

நான் அப்பா அம்மா முன்னையே ஆடை மாத்த மாட்டன்... வெட்கம்.

சிலபேருக்கு வெட்கம் என்றது காமமாப் படுகுது என்ன செய்யுறது. நண்பியிடம் போய் பருத்த முலையா என்று ஆராய நிற்கிறவை கிட்ட நட்பு எங்க காமந்தான் நிக்கும்..!

அதேன் முலையை மட்டும் பார்க்க விரும்புறீர்கள் சபேசன். முலை என்ன.. காமப் பொருளா. அது வெறும் அங்கம்..! பாற் சுரப்பிகளின் தொகுப்பிடம்..! முலை பெண்களிடம் மட்டுமல்ல.. ஆண்களிடமும் பதாங்கமாக இருக்கிறது. யாராவது தோழி.. சபேசன் உன் சிறுத்த முலைகளைக் காட்டு என்று கேட்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறனீங்களா..??! அடுத்தவன் உடம்பை ரசிக்கிறதல்ல நட்பு மிஸ்டர் சபேசன்..! :mellow::mellow:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் எதிர்ப்பாலினங்கள் நெருங்குகின்ற இடத்தில் காமம் உருவாவது இயல்பானது என்று கூறுகிறீர்கள். ஒரு அண்ணனும் தங்கையும், அல்லது ஒரு அக்காவும் தம்பியும் அல்லது ஒரு அப்பாவும் மகளும் என்று எதிர்ப்பாலினங்களாக இருக்கக்கூடிய இவர்களிடத்தில் காமம் இயல்பாக பிறப்பெடுத்து வந்துவிடுமா?

ஒரு அண்ணன் முன் ஒரு தங்கை தனது ஆடைகளை முழுமையாகக் களைந்து மாற்றுவாளா? அல்லது தம்பியின் முன்னால் அக்காவோ, ஏன் அம்மாவின் முன்னால் வளர்ந்த மகனோ தங்கள் உடைகளைக் களைந்து மாற்றுவார்களா?

இரு ஆண்கள் சேர்ந்து பேசி இரசிக்கும் பாலியல் நகைச்சுவையை ஒரு ஆணும் பெண்ணும் பேச முடியுமா? என்று நீங்கள் எந்த யுகத்தில் நின்று கேள்வி கேட்கிறீர்கள்? ஏன் நீங்கள் சினிமாக்களே பார்ப்பதில்லையா? எத்தனை சினிமாக்களில் சென்ஸார் தடைகளைக் கடந்து அப்பட்டமான பாலியல் நகைச்சுவைகளை அவை சுமந்து வருகின்றன. அவற்றை வயதுவந்தவர்கள் மட்டுமல்ல குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஒன்றாகப் பார்த்து ரசிக்கின்ற உலகத்தில்தானே நீங்கள் வாழ்கிறீர்கள். நட்பு என்பது கட்டுப்பாடற்றது என்று நீங்கள் கூறுவதை நான் மறுக்கவில்லை. அதற்காக தனி ஒருவரின் அந்தரங்கத்திற்குள் தலையிடும் உரிமை நட்பிற்கும் கிடையாது. எனக்கு சைனிஸ் நண்பன் இருந்தால் அவனின் பழக்கவழக்கமோ அல்லது உணவு முறைகளோ எனக்கு பிடிக்காமல் இருக்கலாம். என்னுடைய நட்புக்காக அவனை அவ்விடயங்களை ஒதுக்கு என்று ஒரு நல்ல நண்பி எதிர்பார்க்கமுடியுமா? நட்பு என்பது தனி மனிதனின் அந்தரங்க வாழ்விற்குள் அம்மனிதனின் அனுமதியின்றி நுழையக்கூடாது.

ஆண், பெண் நட்பு என்பதற்குள் நீங்கள் காமம் வந்தே தீரும் என்று குடுகுடுப்பைக்காரன் போல் குறிசொல்லவே முற்படுகிறீர்கள். நல்லநோக்காக எடுத்து வாதாடமாட்டீர்களா? மேம்பாட்டுக்குரிய சிந்தனைகளைவிட உங்கள் கருத்தை நிலைநாட்டும் பிடிவாதமே உங்களுக்குள் மிகையாகிக்கிடக்கிறது. தயவு செய்து வெளியே வாருங்கள் உங்களைப்பபோன்றவர்கள் நற்சிந்தனைகளின் களமாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

நான் வெட்கம் என்பது பற்றி பேசவில்லை. வெட்கம் உள்ள ஒரு ஆண் தன்னுடைய நண்பனின் முன்பு கூட ஆடை மாற்றுவது இல்லை.

நட்பு பற்றி பேசுகின்ற போது, அங்கே அண்ணன் தங்கை உறவை நீங்கள்உதாரணத்திற்கு எடுக்கின்ற போதே உங்கள் வாதம் ஆட்டம் காணத் தொடங்கி விடுகின்றது.

ஆணும் பெண்ணும் பால் வேறுபாடுகள் கடந்து நண்பர்களாக பழக முடியுமா என்பதைப் பற்றித்தானே நாம் விவாதிக்கின்றோம்.

வல்வைசகறா,

மிகவும் நல்ல முறையில் ஆழமாக கருத்தை வைக்கக் கூடியவர் நீங்கள். ஆனால் இதில் சற்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கருத்தை வைக்கின்றீர்கள்.

உங்களுடைய கவிதையில் நீங்கள் ஒரு பாத்திரமாக இருந்து, என்னுடைய வாதங்கள் உங்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்துவதாக இருந்தால், நான் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆணும் பெண்ணும் பால் வேறுபாடுகள் கடந்து நண்பர்களாக பழக முடியுமா என்பதைப் பற்றித்தானே நாம் விவாதிக்கின்றோம்.

எப்ப பால் வேறுபாட்டை மனசில இருத்திட்டு நட்பு என்ற வேசத்தைப் போட முனையுறீங்களோ அப்பவே அதில நட்பு இல்லை என்பது தெளிவாகிறது. அதற்கு பிறகு.. எதற்கு ஆராய்ச்சி என்ற பெயரில்.. அங்கங்கள் பற்றிய உங்கள் தனிப்பட்ட பார்வைகளை நட்புக்குள்ள புகுத்துறியள்..??! :mellow:

சிறுவர் சிறுமியரா இருக்கும் போது வரும் நட்பில் பால் வேறுபாடு என்பது இருப்பதில்லை. அது தான் நட்பு. அந்த நிலை வளர வளர இல்லாமல் போகிறது.அங்கு நட்பு என்ற நிலை அருகிச் செல்கிறது. அதுதான் யதார்த்தம்..! ஆண் - பெண் என்ற நிலைகள் பெருகுகின்றன. சும்மா கூட விளையாடிவள்.. பொத்திப் பிடிக்க வெளிக்கிடும் போது.. நட்பு என்பது போய்.. ஏண்டா பொத்துறாள் என்ற நிலைதான் தோன்றுகிறது..! பொத்திப் பிடிக்கச் செய்வது யார்..??! ஏன்..??! இதற்கெல்லாம் விடை காணும் போது.. உடல் உறுப்பை வைச்சு ஆபாசமா விமர்சனம் செய்வதை ஏற்பவள் நண்பியாவாள் என்ற வரைவிலக்கணம் தேட முனைய மாட்டியள்..??!

ஒவ்வொரு மனிதனுக்கும் தன்ர பிரைவேசி என்ற ஒன்று கொஞ்சம் என்றாலும் இருக்கும். நட்புக்கு இடையிலும் அது இருக்கும். அதை ஆணோ பெண்ணோ மீற அனுமதிக்க மாட்டார்கள்..! அதை ஏற்றுக் கொண்டால்.. நட்பும் ஒரு வரையறையோடு இருக்கும்.. தித்திக்கும். மீறின் எல்லாமே நாசம் தான். எல்லை உள்ள வரைக்கும் தான் வானும் கடலும் நிலமும். எல்லை இன்றேல்...???! பாகுபாட்டுக்கு இடமில்லை. நட்புக்கும் அங்கு இடமில்லை..! :mellow:

Edited by nedukkalapoovan

பொத்திப் பிடிக்க வெளிக்கிடும் போது.. நட்பு என்பது போய்.. ஏண்டா பொத்துறாள் என்ற நிலைதான் தோன்றுகிறது..! பொத்திப் பிடிக்கச் செய்வது யார்..??! ஏன்..??!

நல்லா அனுபவப்பட்டு இருக்கிறீங்கள் போல இருக்கிது. :

அதுசரி...

சபேசனிண்ட சிறுமுளையை காட்டச்சொல்லி அவரது நண்பி ஏன் கேட்க வேண்டும். சபேசன் கோயிலுக்கு போய் வெறும் மேலோட நிக்கேக்க தாராளமாக அவரது இரண்டு சிறுமுளைகளையும் அவ கண்டுகளிக்கலாம் தானே?

நட்பில துவங்கி கடைசியில இது முளைபற்றிய ஆராய்ச்சியாகப் போய்விட்டது. :wub:

சகீரா தான் ஒரு கவிதையை எழுதிவிட்டு அதன் அடிப்படையில் ஏதோ விவாதம் ஒன்றை கட்டி எழுப்பிக்கொண்டு இருப்பதுபோல், வாசுதேவன் எழுதிய இன்னொரு கவிதையின் அடிப்படையில் சபேசன் இன்னொரு விவாதம் ஒன்றை கட்டி எழுப்பிக்கொண்டு போகின்றார். ஆக அடிப்படையில் இருவருமே பிழையான கோணங்களில் போவது மாதிரித்தான் எனக்கு இருக்கிது.

சுறுசுறுப்பாக விவாதத்தில் பங்குபற்றியமைக்காக நாங்கள் சபேசனுக்கும், நெடுக்காலபோவானுக்கும், சகீராவுக்கும் யாழ் இணணயம் சார்பில் கீழ்வரும் பட்டங்கள் கொடுத்து மகிழ்கின்றோம்.

சபேசன் - முளைப்பிரியன்

நெடுக்காலபோவான் - முளைநோக்கான்

சகீரா - நட்பரசி (கவிதை ஒன்றை எழுதியதற்காகவும், இவ்வளவு கஸ்டப்பட்டு சபேசனுடன் வாதம் செய்ததற்காக)..

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ சொன்னதாக நினைவு.

உங்களிடம் உண்மையான நட்பிருந்தால் அது ஒருவர் கூட மட்டும் ஏன் வருகின்றது? அதுவும் எதிர்பாலினத்தில் மட்டும் வருகின்றது.

நட்பு என்பது உண்மையாக இருக்க வேண்டும் தான். ஆனால் நடைமுறையில் இவ்வாறு எந்தளவு முடியும் என்பது விவாதத்துக்குரிய ஒன்று

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.