Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுரையில் பெனோட்டோ புள்ளே. திராவிட கழகங்கள் மெளனம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்களை தாக்குவது புலிகள்-இலங்கை

மதுரை: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது விடுதலைப் புலிகள்தான். ஆனால், பழி ராணுவத்தின் மீது விழுகிறது என இலங்கை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஜெயராஜ் பெர்னாட்டோ புலே கூறினார்.

மதுரை வந்த அவர் புனித வெள்ளியை முன்னிட்டு தூய மரியன்னை தேவாயலத்தில் நடைபெற்ற சிறப்பு பிராத்தனையில் கலந்து கொண்டார்.

பின்பு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்கி வருவதாக கூறுவது முற்றிலும் தவறான தகவல்.

தமிழக கடலோர எல்லை பகுதியில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது விடுதலைப் புலிகள்தான். ஆனால், பழியை இலங்கை ராணுவம் மீது போட்டு விடுகின்றனர்.

இலங்கையில் அமைதி திரும்புவதை புலிகள் விரும்பவில்லை. பிரிவினையை ஏற்படுத்துவதுதான் அவர்களது நோக்கம்.

அவர்கள் வெடிகுண்டு கலாச்சாரத்தையே விரும்புகின்றனர். இந்த பிரச்சனையில் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த திறந்த மனதோடு உள்ளோம். இலங்கையில் அமைதியையும், சமாதானத்தையும் 95 சதவீதம் மக்கள் விரும்புகின்றனர்.

கிழக்கு மாகாணத்தில் மாகாணத் தேர்தல் வரும் 28ம் தேதி நடக்க உள்ளது. இதன் மூலம் அவர்கள் சுய ஆட்சி பெற்ற மாநிலமாக செயல்பட உள்ளனர். விடுதலைப் புலிகள் மீதான நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது என்றார்.

http://thatstamil.oneindia.in/news/2008/03...-fishermen.html

-----------------

தமிழ் எம்பிக்களை சந்திக்க நேரம் இல்லாதவர்கள்.. சிங்கள அமைச்சர் தமிழகம் சென்று பொய்களைப் பரப்ப அனுமதிப்பதன் நோக்கம் என்ன..??! திராவிட கழகங்களுக்கு ஒரு அமைச்சர் மதுரை வந்தது கூடத் தெரியாதா. பெரிய பொய்களை அவிழ்த்துவிட்டு தமிழக - தமிழீழ தமிழ் மக்களின் உறவைச் சீர்குலைக்க அனுமதிப்பது ஏன்...??! இவரின் வரவை கண்டிக்காதது.. தடுக்காதது ஏன்..??! :wub::)

Edited by nedukkalapoovan

  • Replies 107
  • Views 10.3k
  • Created
  • Last Reply

All in the game... இது சப்பை மேற்றர்... இதைவிட பெரிய வேலைகள் எல்லாம் இருக்கலாம்....!

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

All in the game... இது சப்பை மேற்றர்... இதைவிட பெரிய வேலைகள் எல்லாம் இருக்கலாம்....!

இதை வாசிக்கத் துயரமாய் இருக்கு. அவர்கள் பசியோடும் சிறை ஆபத்துக்கும் மத்தில்தான் இவ்வளவும் செய்கிறார்கள் என்பதை நான் அறிவேன். எங்களுக்காக போராடிய தோழர்கள் பலர் வளக்காடக்கூட வழியின்றிச் சிறைக கைவிடப் பட்டார்கள் என்கிற கண்ணீர்க் கதைகளை கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் கோடம்பாக்க அம்மன்களுக்கும் சாமிகளுக்கும் கனகாபிசேடம் செய்துகொண்டுருந்ததையும் அறிவேன். எங்களால் நொந்து நூலாகி வேலை சொத்துச் சுகங்களை இழந்து வீதியில் நிற்கிற தமிழகத் தோழர்கலை நான் அறிவேன். எங்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்காக நாம் என்ன செய்தோம் என்கிற கேழ்வி ஒன்று இருக்கிறது. எங்களுக்கும் அதைவிட பெரிய வேலைகள் இருந்திருக்கலாம்.

Edited by poet

இதை வாசிக்கத் துயரமாய் இருக்கு. அவர்கள் பசியோடும் சிறை ஆபத்துக்கும் மத்தில்தான் இவ்வளவும் செய்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.

நான் எழுதினதுக்கு இதுக்கும் என்ன சம்பந்தம்..???? எத்தினை பேர் இப்பிடி கெழம்பி இருகியளோ..??

:wub: அது ஏன் ஒரு கன்னடன் உருவாக்கிய திராவிடக் கழகங்களைப் பார்த்து கேட்கிறார்கள் என்று புரியவில்லை? ஏன் சங்கர மடம் கேட்கக் கூடாதா? பிஜேபி சிவ சேனை துக்களக் சோ இந்து ராம் முதலானோர் கேட்கக் கூடாதா?

இவர்கள் திராவிடக் கழகத்தவர்களையும் பெரியாரையும் இங்கு திட்டித் தீர்பார்களாம் ஆனால் இவர்களிவர்களுக் குரல் கொடுக்க அவர்கள் வேண்டுமாம்,என்ன கேடு கெட்ட பொழைப்பு.

பல புலத்தவர்கள் செய்யாத வேலைகளை தமிழினம் என்ற ஒன்றிற்காக தமிழகத் திராவிடக்கழகத் தோழர்கள் செய்திருகிறார்கள். கேள்வி கேட்பதற்க்கும் ஒரு நீதி நியாயம் யோக்கியதை வேண்டாமா? :)

:wub: அது ஏன் ஒரு கன்னடன் உருவாக்கிய திராவிடக் கழகங்களைப் பார்த்து கேட்கிறார்கள் என்று புரியவில்லை? ஏன் சங்கர மடம் கேட்கக் கூடாதா? பிஜேபி சிவ சேனை துக்களக் சோ இந்து ராம் முதலானோர் கேட்கக் கூடாதா?

நீங்கள்தான் இந்துக்கள் இல்லையே...! அவர்கள் இந்துக்களுக்கு மட்டும்தான் ஆதரவு எண்டு உறுதியாக இருக்கிறார்கள்...! ஒருவேளை உங்களுக்கு சமஸ்கிருதம் தெரிஞ்சு இருந்தாலாவது ஒரே மொழி எண்டு உங்களுக்கு ஆதரவு தரலாம்.... நீங்கள் திராவிடர் அவர்கள் ஆரியர்... எந்த அடிப்படையில் ஆதரவு தருவது...??

எங்களுக்கு திராவிடரின் ஆதரவும் வேண்டாம்... ஆரியரின் ஆதரவும் வேண்டாம்... தமிழர்களின் ஆதரவு இருந்தால் போதும்... உலகிலை வேற நல்லமனிதர்களே இல்லையா என்ன..?

இந்தத் தலைப்பில் திரு நெடுக்கலபோவான் அவர்கள் தான் திராவிடக் கழகத்தவைரிப் பார்த்துக் கேள்வி கேட்டிருகிற்றுகிறார்.அவருக்

நல்ல நண்பர்களை உருவாக்கிக்கொள்வதும் தேவையற்ற எதிரிகளை உருவாக்கி கொள்ளாமல் இருப்பதும் ஒரு விடுதலை இயக்கத்தின் மிகப்பெரிய தேவை.

இங்கே அனேகமான கருத்துக்கள் உணர்ச்சிக் குவியல்களாக உள்ளதே தவிர எதிர்காலம் பற்றிய கண்ணோட்டத்துடன் இருப்பதாக தெரியவில்லை.

நிச்சயம் தமிழீழம் அடையலாம்! அதில் எனக்கு எப்போதும் சந்தேகம் இருந்ததில்லை. அப்படி அமையும் போது அயல் நாடுகளுடன் சரிவர உறவுகள் பேணப்படுவது அவசியம். அதற்கு இந்த ஆரிய திராவிட துவேசங்களும் பேதங்களும் துணை நிற்காது.

தமிழீழம் அமைவது என்பது, ஒரு இலட்சியத்தின் ஆரம்பம்! முடிவு அல்ல!

அதன் பின்பு நாடுகளின் அரசியல் போக்குகள் இன்று உள்ளது போல் இருக்காது. எதிரிகள் மாறலாம், நண்பர்களும் மாறலாம் !

நீண்ட போராட்டத்தின் பின் விடுதலை அடையும் ஒரு நாடு, இன்னும் ஒரு உள்நாட்டு போரிலோ, அரசியல் சிக்கலிலோ மாட்டிக் கொள்ளாமல் இருந்தால் தான் உறுதியான நிர்வாக கட்டமைப்பும் பொருளாதாரமும் அமைய முடியும். அதற்கு அயல் நாடுகளுடன், முக்கியமாக இந்தியாவுடன் நல்லுறவு பேணப்பட வேண்டும்

ஆகவே நாம் வைக்கும் கருத்துக்கள் வெறும் உண்ர்வுக்குவியல்களாக இல்லாமல், எதிர்காலம் பற்றிய கண்ணோட்டமும் , அரசியல் பக்குவமும் கூடியதாக இருக்க வேண்டியது அவசியம்.

ஒரு பலம் வாய்ந்த எதிரியை நண்பனாக்கி கொள்வது சிறந்த இராஜதந்திரத்தால் சாதிக்க கூடியது தான். அதற்கு சிலரின் ஆரிய திராவிட புலம்பல்கள் நிச்சயம் உதவப்போவதில்லை

Edited by vettri-vel

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தலைப்பில் திரு நெடுக்கலபோவான் அவர்கள் தான் திராவிடக் கழகத்தவைரிப் பார்த்துக் கேள்வி கேட்டிருகிற்றுகிறார்.அவருக்??ு தான் சொல்லப்பட்டது ஏன் ஒரு கன்னடரால் உருவாக்கப்பட்ட நீங்கள் நிராகரிக்கும் நாளும் பொழுதும் இந்தக் களத்தில் திட்டித் தீர்க்கும் திராவிடக் கழகத்தவரைப் பார்த்துக் கேட்கிறீர்கள் என்று.

வழமையா ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாய் காட்டிக் கொண்டு இருப்பவர்கள்.. இதில் ஈழத்தமிழர்களின் நலன் மட்டுமன்றி தமிழக மக்களின் நலனும் பாதிக்கப்படும் வகையில் தமிழ்நாட்டில் இருந்து ஒரு சிங்கள அமைச்சன் பேச இடமளித்திருக்கிறார்களே.. உண்மையில் இவர்களின் குரல் ஈழ ஆதரவுக் குரலா அல்லது ஏதேனும் தேவைகளுக்கு எழுகின்ற குரலா அல்லது சிங்கள அரசு சொல்வது போல புலிகளில் இவர்களும் சந்தேகமா என்பதை தெளிவுபடுத்தத்தான் அக்குறிப்பிட்டேன்.

ஈழத்தமிழர்களை தங்களின் சுயநலனுக்காகப் பாவித்துவிட்டு இன்று ஈழத்தமிழரின் அழிவினைக் கண்டும் காணாதவர்கள் போல கண்மூடிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து கேள்வி கேட்கத் தேவையில்லை. ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுப்பதாகச் சொல்லிக் கொண்டு இன்னும் ஏமாற்றங்களை சந்திக்க வைக்கினமோ என்ற ஏக்கம் எழுந்ததன் அடிப்படையில் இவ்வாறு வினவ வேண்டியுள்ளது.

தமிழகத்தில் பிள்ளையார் சிலைக்கு கல்லால் அடிப்பவர்கள்.. சிங்கள அமைச்சன் அடிக்கல் நட சிங்கள பேரினவாத பெளத்த துறவிகள் பிரித் ஓத பெளத்த ஆலயத்தை தமிழகத்தில் நிறுவி தமிழகத்தில் சிங்கள பேரினவாத உறவாடலுக்கு மெளனமாக இருந்து வழிசமைத்துக் கொடுக்கிறவை.. ஈழத்தமிழர்களுக்காகவும் குரல் கொடுப்பதாய் காட்டிக் கொண்டு உளவு பார்க்கினமோ என்ற சந்தேகம் எழுகிறது. இவர்களின் மெளனங்களால்..!

எதிரியை இனங்காண்பது இலகு. துரோகிகளை கடினம். எதுஎப்படியோ ஈழத்தமிழன் தன்மீது சிங்கள அமைச்சன் தமிழகத்தில் வைக்கும் பொய்க் குற்றச்சாட்டுக்கு ஒரு எதிர்ப்புக் குரல் கூட எழவில்லையே எனும் போது.. தமிழகத்தில் இருந்து எழும் ஆதரவுக் குரல்களின் உண்மைத்தன்மையை சோதிக்க வேண்டி வருவது தவிர்க்க முடியாததே. காரணம் இந்தியாவை நம்பி ஏமாந்தது ஒரு தடவையல்ல பல தடவைகள். அதற்காகக் கொடுத்த விலையும் அதிகம்..!

உண்மையான ஈழத்தமிழ் ஆதரவாளன் ஈழத்தமிழன் மத்தியில் இப்படி ஒரு சந்தேகம் எழுவதை தவிர்த்து இருக்க வேண்டும்... அல்லது விளக்கம் அளித்திருக்க வேண்டும். இக்கேள்வியை தி மு க அல்லது அ தி மு க அல்லது பா ஜ க அல்லது காங்கிரஸைப் பார்த்துக் கேட்கத் தேவையில்லை. ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை ஈழத்தமிழர்கள் தீண்டந்தகாதவர்கள்..! தீண்டிக் கொண்டிருப்பவர்கள் உண்மையில் தீண்டாமையை ஒழிச்சவையா அல்லது ஏதேனும் தேவைக்கா என்றத அறிய வேண்டிய பொறுப்பு ஈழத்தமிழனைச் சாரும். நம்பி ஏமாந்தமே... அது போதாதா... இன்னும் இன்னும்..??! :(:mellow:

Edited by nedukkalapoovan

பெர்னாண்டோ விடயம் உண்மையில் சப்பை மாற்றர்தான்.

திராவிட இயக்கங்கள் செய்கின்ற செய்ய வேண்டிய வேலைகள் இதை விட பல உண்டு. முயலை அடிக்க பீரங்கி எதற்கு?

நல்ல நண்பர்களை உருவாக்கிக்கொள்வதும் தேவையற்ற எதிரிகளை உருவாக்கி கொள்ளமல் இருப்பதும் ஒரு விடுதலை இயக்கத்தின் மிகப்பெரிய தேவை.

இங்கே அனேகமான கருத்துக்கள் உணர்ச்சிக் குவியலாக உள்ளதே தவிர எதிர்காலம் பற்றிய கண்ணோட்டத்துடன் இருப்பதாக தெரியவில்லை.

நிச்சயம் தமிழீழம் அடையலாம்! அதில் எனக்கு எப்போது சந்தேகம் இருந்ததில்லை. அப்படி அமையும் போது அயல் நாடுகளுடன் சரிவர உறவுகள் பேணப்படுவது அவசியம். அதற்கு இந்த ஆரிய திராவிட துவேசங்களும் பேதங்களும் துணை நிற்காது.

தமிழீழம் அமைவது என்பது, ஒரு இலட்சியத்தின் ஆரம்பம்! முடிவு அல்ல!

அதன் பின்பு நாடுகளின் அரசியல் போக்குகள் இன்று உள்ளது போல் இருக்காது. எதிரிகள் மாறலாம், நண்பர்களும் மாறலாம் !

நீண்ட போராட்டத்தின் பின் விடுதலை அடையும் ஒரு நாடு, இன்னும் ஒரு உள்நாட்டு போரிலோ, அரசியல் சிக்கலிலோ மாட்டிக் கொள்ளாமல் இருந்தால் தான் உறுதியன நிர்வாக கட்டமைப்பும் பொருளாதாரமும் அமைய முடியும். அதற்கு அயல் நாடுகளுடன், முக்கியமாக இந்தியாவுடன் நல்லுறவு பேணப்பட வேண்டும்

ஆகவே நாம் வைக்கும் கருத்துக்கள் வெறும் உண்ர்வுக்குவியல்களாக இல்லாமல், எதரிகாலம் பற்றிய கண்ணொட்டமும், அரசியல் பக்குவமும் இருக்க வேண்டியது அவசியம்.

ஒரு பலம் வாய்ந்த எதிரியை நண்பனாக்கி கொள்வது சிறந்த இராஜதந்திரத்தால் சாதிக்க கூடியது தான். அதற்கு சிலரின் ஆரிய திராவிட புலம்பல்கள் நிச்சயம் உதவப்போவதில்லை

நலன்களின் அரசியலே இராஜதந்திரம். ஈழத் தமிழரின் முதுகில் தொடர்ந்து குத்திவருவது இந்திய ஆளும் வர்க்கம். இந்திய ஆளும் வர்க்கம் ஈழப்போராட்டத்திற்கு எதிராக என்றும் செயற்படுவது அதன் சுய நலனின் பாற்பட்டது.தேசிய இனங்கள் விடுதலை பெறுவதோ, இந்திய உபகண்டத்தில் தேசிய இன விடுதலைப் போராட்டம் ஒன்று வெற்றி பெறுவதோ இந்திய மத்திய ஆளும் வர்க்கத்தின் நலங்களைப் பாதிக்கும்.இதன் அடிப்படையிலையே அது செயற்பட்டு வருகிறது.இதனை நாம் மாற்ற வேண்டுமாயின் தமிழ் நாட்டுத் தமிழர்களின் அரசியற் செல்வாக்கினூடாக இந்திய ஆழும் வர்க்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குவதே எமக்கான அரசியற் பாதையாக இருக்கிறது. நாம் பலம் பெறுவதும் தமிழ் நாட்டு மக்களிடம் எமது ஆதரவுத் தளத்தை வளர்ப்பதனாலையே இவை சாத்தியமாகும்.தமிழ் நாட்டில் எமது ஆதரவு சக்திகளைனூடாகவே இது சாத்தியமாகும்.இந்த ஆதரவுச் சக்திகளை நாளும் பொழுதும் பகைத்துக் கொண்டு இது சாத்தியப் படப் போவதில்லை.

பெரியாரையும் திராவிடக் கழகத்தவரையும் திட்டிக் கொண்டு தமிழ் நாட்டில் ஒரு ஆதரவுத் தளத்தை நீங்கள் ஏற்படுத்தி விட முடியாது.யாரையும் பகைக்க வேண்டும் என்று நாம் இங்கே செயற்பட முடியாது.ஆனால் பகைவன் யார் நண்பன் யார் என்று தெரிந்து கொண்டு அதற்க்கு ஏற்ற வகையிலையே செயற்பட முடியும்.அரசியல் சாணக்கியத் தனம் என்பது அது தான்.

இந்தியாவை நோக்கிய விடுதலைப் புலிகளின் அண்மைய அறிக்கையும் நடேசனின் பேட்டிகளும் புலிகளின் குரலும் இந்த அரசியல் நிதர்சனத்தைத் தான் சுட்டிக் காட்டி உள்ளது.இதனைத் தான் நான் இங்கு தொடர்ந்தும் சொல்லி வருகிறேன்.அரசியல் என்பது ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி.திராவிட இயக்கம் ஏன் தோன்றியது என்பதற்க்கு ஒரு அரசியல் வரலாறு இருக்கிறது.இவற்றைப்புரிந்து கொள்ளாமால் உங்கள் சொந்த நலங்களின் அடிப்படையில் (அதாவது புலத்தில் இருந்து புலம்பும் இந்து சமய வெறியர்களின்) ஈழ விடுதலைப் போராட்டம் செயற் பட முடியாது.

பெர்னாண்டோ விடயம் உண்மையில் சப்பை மாற்றர்தான்.

சபேசனா இப்படி தமிழில் எழுதுவது?

இன்னாப்பா இது நம்பவே முடியலே! :mellow::(:D

Edited by vettri-vel

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெர்னாண்டோ விடயம் உண்மையில் சப்பை மாற்றர்தான்.

திராவிட இயக்கங்கள் செய்கின்ற செய்ய வேண்டிய வேலைகள் இதை விட பல உண்டு. முயலை அடிக்க பீரங்கி எதற்கு?

இப்படியே சப்ப மற்றர் என்று சொல்லிச் சொல்லி.. இறுதியில் தமிழக மீனவர்களைப் புலிகள் தான் சுடுகினமோ என்ற சந்தேகத்தை வளர்த்துவிட்டாலே போதும். ரோவுக்கு புலிகள் பற்றிய பயப்பிராந்திய தமிழகத்தில் விதைத்து வைத்திருக்க வசதியா இருக்கும். இந்திய - சிறீலங்கா உறவும் இராணுவ ஒத்துழைப்பும் பலப்படும்...! இது ஒருவகையில் ரோவுக்கும் இந்திய மத்திய அரசின் ஈழத்தமிழர் விரோத நிலைப்பாட்டுக்கும் உதவும் ஒரு செயலே. அமைச்சர் டெல்லியில் இருந்து சொல்லி இருப்பின் மன்னிக்கலாம். தமிழகத்தில் தமிழ் மாவட்டத்தில் இருந்து சொல்லி இருப்பது சப்ப மாற்றர்... முடியல்ல..!

இது ஒரு சப்ப மாற்றர் என்றால் இந்திய நாடாளுமன்றம் முன் பனர் தூக்கிறது செம சப்ப மாற்றர்.. என்று சொன்னா ஏத்துக்குவினமா..??! :mellow:

Edited by nedukkalapoovan

//ஈழத்தமிழர்களை தங்களின் சுயநலனுக்காகப் பாவித்துவிட்டு //

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தருவதால் திராவிடக்கட்ச்சிகல் பெறும் பயன் என்ன?

அவை அவ்வாறு தான் தமது சுய நலனுக்காக ஆதரவு தருகின்றன என்றால் நீங்கள் மீண்டும் மீண்டும் ஏன் அவர்களிடம் ஆதரவைக் கோருகிறீர்கள்?

அதரவு தந்தால் சுய நலன் என்பீர்கள் ஆதரவு தராவிட்டால் இவர்கள் ஏன் ஆதரவு தரவில்லை என்பீர்கள்

அவர்களைத் திட்டித்தீர்க்கும் நீங்கள் ஏன் அவர்களிடம் ஆதரவை எதிர்பார்க்கிறீர்கள்?.வெட்கமாகவில்லை?

அடிப்படையில் சிலருக்கு சில விடயங்களில் போதிய புரிந்துணர்வு இல்லை என்று நினைக்கின்றேன்.

அமெரிக்காவின் சில கொள்கைகளை வெறுக்கிறம் என்றதுக்காக ஒட்டுமொத்த அமெரிக்காவையும் வெறுக்கிறம் என்பதல்ல அர்த்தம். அதுபோலவே மாயைத் தனமான திராவிடக் கொள்கைகளூடும்.. ஈ வெ ராமசாமியிசும் என்ற 60 ஆண்டு காலத்துக்கும் பழமையான வாதங்களூடும்.. தி க வினர் சொல்ல வருகின்ற சில விடயங்களில் மற்றும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளில் அடங்கும் மதச் சுதந்திரத்துக்கு எதிரான சில நிலைப்பாடுகளுக்கும் எதிராக தி க வினரின் செயற்பாடுகளை எதிர்ப்பது என்பது தி க வினரை முற்றாக எதிர்ப்பது என்பதல்ல. தி க வினரையும் சரி தி மு கவையும் சரி அதிமுக வையும் சரி பாஜக வையும் சரி சிவசேனையையும் சரி... யாரும் முற்றாக எதிர்க்கவில்லை. அவர்களின் சில சம கால மற்றும் நிரந்தர நிலைப்பாடுகளில் உள்ள பிறழ்வுப் போக்குகள் தொடர்பில் எதிர்ப்புக்கள் கொள்கை முரண்பாடுகள் உள்ளன.

இப்போ மாற்றர்.. ஈழத்தமிழர் ஆதரவு என்பதை தமிழகம் பூராவும் எதிர்பார்த்து நிற்கும் போது வெளிப்படையா அவ்விடயத்தில் ஆதரவு தரும் தி க வினர்.. இப்படியான விடயங்களில் மெளனம் சாதிப்பதன் பின்னணி என்ன என்று அறிவது முக்கியமானது என்பதாலேயே இவ்வினவல். இதற்கும்.. தி கவின் சில கொள்கைகளுடன் முரண்படுவதற்கும் உள்ள வேறுபாட்டை சிலர் புரிந்து கொள்வதாக இல்லை..! மீண்டும் மீண்டும் சுற்றிச் சுற்றி ஆக்களை வெறுப்பூட்டும் வகையில் கருத்துப் பகர முற்படுகிறார்களே தவிர.. தேவைகளை உணர்பவர்களாக இவர்கள் உருவாகப் போவதே இல்லை என்பது தெளிவாகிறது..!

தி க வினரின் ஈழத்தமிழ் ஆதரவுக்கு ஈழத்தமிழ் மீது அக்கறை ஒரு 10% என்றால் மிகுதி.. அவர்களின் அரசியல் நிலையிருப்புக்கு என்று கொள்வதில் தவறே இல்லை..! :mellow:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை வாசிக்கத் துயரமாய் இருக்கு. அவர்கள் பசியோடும் சிறை ஆபத்துக்கும் மத்தில்தான் இவ்வளவும் செய்கிறார்கள் என்பதை நான் அறிவேன். எங்களுக்காக போராடிய தோழர்கள் பலர் வளக்காடக்கூட வழியின்றிச் சிறைக கைவிடப் பட்டார்கள் என்கிற கண்ணீர்க் கதைகளை கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் புலம் பெயர்ந்த தமிழர்கள் பலர் கோடம்பாக்க அம்மன்களுக்கும் சாமிகளுக்கும் கனகாபிசேடம் செய்துகொண்டுருந்ததையும் அறிவேன். எங்களால் நொந்து நூலாகி வேலை சொத்துச் சுகங்களை இழந்து வீதியில் நிற்கிற தமிழகத் தோழர்கலை நான் அறிவேன். எங்களுக்காக குரல் கொடுப்பவர்களுக்காக நாம் என்ன செய்தோம் என்கிற கேழ்வி ஒன்று இருக்கிறது. எங்களுக்கும் அதைவிட பெரிய வேலைகள் இருந்திருக்கலாம்.

60 மில்லியன் தமிழர்களில் 60 தமிழர் மட்டுமே ஈழத்த்கமிழருக்கு ஆதரவு என்கின்ற நிலமை இருக்கும் வரைக்கும் அடக்கி சிறையில போடத்தான் செய்வாங்கள்

நலன்களின் அரசியலே இராஜதந்திரம். ஈழத் தமிழரின் முதுகில் தொடர்ந்து குத்திவருவது இந்திய ஆளும் வர்க்கம். இந்திய ஆளும் வர்க்கம் ஈழப்போராட்டத்திற்கு எதிராக என்றும் செயற்படுவது அதன் சுய நலனின் பாற்பட்டது.தேசிய இனங்கள் விடுதலை பெறுவதோ, இந்திய உபகண்டத்தில் தேசிய இன விடுதலைப் போராட்டம் ஒன்று வெற்றி பெறுவதோ இந்திய மத்திய ஆளும் வர்க்கத்தின் நலங்களைப் பாதிக்கும்.இதன் அடிப்படையிலையே அது செயற்பட்டு வருகிறது.இதனை நாம் மாற்ற வேண்டுமாயின் தமிழ் நாட்டுத் தமிழர்களின் அரசியற் செல்வாக்கினூடாக இந்திய ஆழும் வர்க்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குவதே எமக்கான அரசியற் பாதையாக இருக்கிறது. நாம் பலம் பெறுவதும் தமிழ் நாட்டு மக்களிடம் எமது ஆதரவுத் தளத்தை வளர்ப்பதனாலையே இவை சாத்தியமாகும்.தமிழ் நாட்டில் எமது ஆதரவு சக்திகளைனூடாகவே இது சாத்தியமாகும்.இந்த ஆதரவுச் சக்திகளை நாளும் பொழுதும் பகைத்துக் கொண்டு இது சாத்தியப் படப் போவதில்லை.

பெரியாரையும் திராவிடக் கழகத்தவரையும் திட்டிக் கொண்டு தமிழ் நாட்டில் ஒரு ஆதரவுத் தளத்தை நீங்கள் ஏற்படுத்தி விட முடியாது.யாரையும் பகைக்க வேண்டும் என்று நாம் இங்கே செயற்பட முடியாது.ஆனால் பகைவன் யார் நண்பன் யார் என்று தெரிந்து கொண்டு அதற்க்கு ஏற்ற வகையிலையே செயற்பட முடியும்.அரசியல் சாணக்கியத் தனம் என்பது அது தான்.

இந்தியாவை நோக்கிய விடுதலைப் புலிகளின் அண்மைய அறிக்கையும் நடேசனின் பேட்டிகளும் புலிகளின் குரலும் இந்த அரசியல் நிதர்சனத்தைத் தான் சுட்டிக் காட்டி உள்ளது.இதனைத் தான் நான் இங்கு தொடர்ந்தும் சொல்லி வருகிறேன்.அரசியல் என்பது ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி.திராவிட இயக்கம் ஏன் தோன்றியது என்பதற்க்கு ஒரு அரசியல் வரலாறு இருக்கிறது.இவற்றைப்புரிந்து கொள்ளாமால் உங்கள் சொந்த நலங்களின் அடிப்படையில் (அதாவது புலத்தில் இருந்து புலம்பும் இந்து சமய வெறியர்களின்) ஈழ விடுதலைப் போராட்டம் செயற் பட முடியாது.

நீங்கள் நினைப்பது போல் தமிழகத்தில் எழும் திராவிட இயக்கங்களின் குரல்கள் டெல்லி அரசுக்கு எப்போதும் பெரும் நெருக்கடி கொடுத்து விடப்போவதில்லை.

இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான குரல்களாக ஒரு காலத்தில் ஒலித்த இந்த திராவிட இயக்கங்களுடனான நெருக்கம் தான், ஈழப் போராட்டத்தை டெல்லி சந்தேக கண்கொண்டு பார்க்கத் தொடங்கிய முதல் காரணம்.

மேற்குவங்கத்தின் பக்கத்தில் வங்க தேசம் உருவாவதை அனுமதித்த இந்தியா தமிழ் நாட்டின் பக்கத்தில் தமிழீழம் அமைவதை ஏன் விரும்பவில்லை? அதன் அரசியல் பின்னணி என்ன? அரசியல் அறிந்தவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

இந்திய எதிர்ப்பையும் மீறி நிச்சயம் தமிழீழம் அமையும். அந்த நம்பிக்கை உறுதியாக

இருப்பதால் தான் அடுத்த கட்ட அரசியல் உறவுகளை பற்றி என்னால் சிந்திக்க முடிகிறது.

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்திய வல்லரசுக்கு பக்கத்தில் தான் தமிழீழம் இருக்கப் போகிறது. ஆகவே எதிர்காலத்தில் இந்தியவுடன் நல்லுறவு பேணப்பட வேண்டியது அவசியமாகும். அதற்கு ஆரிய திராவிட துவேசங்களை வளர்ப்பது நிச்சயம் உதவப்போவதில்லை. அதை விடுதலை புலிகளும் புரிந்தே வைத்துள்ளார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

நாளை தமிழீழம் மலரும் போது டெல்லியில் தான் தமிழீழ தூதரகம் அமையும். ஆரியருடன் எங்களுக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை, ஈரோட்டில் தான் தமிழீழ தூதரகம் அமைப்போம் என்று விடுதலை புலிகள் சொல்லப்போவதில்லை. அப்படி சொல்வது இராஜதந்திர நடைமுறையும் அல்ல

Edited by vettri-vel

நெடுக்கலபோவான் இங்கே நீங்கள் எழுதுவது தமிழ் நாட்டிலும் வாசிக்கப்படுகிறது.

இங்கே நீங்கள் பெரியாரையும் திராவிடக்கழக்த்தவரையும் கீழ்த்தரமான முறையில் பல தடவைகள் எழுதி உள்ளீர்கள்.பெரியார் தமிழ் நாட்டில் மதிக்கப்படும் ஒரு அரசியற் தலைவர்.அவர் போராடியது தமிழகத் தமிழ்களுக்காக அவர்கள்ன் போராட்டதைக் கொச்சைப் படுதிக்கொண்டு .அவர்களைத் தூற்றிக் கொண்டு( விமர்சினம் அல்ல) நீங்கள் இப்போது எந்த முகத்தோடு அவர்களிடமே கையேந்துவீர்கள்?

அவர்கள் தங்கள் சுய நனலனில் ஆதரவு செய்கிறார்கள் என்று எழுதியவர்கள் நீங்கள்.அப்படியாயின் ஏன் நீங்கள் இங்கே எழுதிக் குவித்த இந்துத்வாவைப் பின் பற்றும் பிஜேபியும் சிவசேனையிடமும் நீங்கள் உதவி செய்யும் படி கேட்கக் கூடாது?

உங்களுக்கே தெரியும் அது நடாவாது என்று.

நாண்பன் யார் எதிரி யார் என்பதை நாமும் அறிவோம் தமிழீழத் தேசியத் தலமையும் அறியும்.இங்கே இந்து மத வெறியில் எழுதும் உங்களைப் போன்றவர்களுக்குத் தான் என்ன நடக்கிறது என்று தெரியாமல் புலத்தில் இருந்து புலம்பிக் கொண்டிருகிறீர்கள். :mellow:

நீங்கள் நினைப்பது போல் தமிழகத்தில் எழும் திராவிட இயக்கஙகளின் குரல்கள் டெல்லி அரசுக்கு எப்போதும் பெரும் நெருக்கடி கொடுத்து விடப்போவதில்லை.

இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான குரல்களாக ஒரு காலத்தில் ஒலித்த இந்த திராவிட இயக்கங்களுடனான நெருக்கம் தான், ஈழப் போராட்டத்தை டெல்லி சந்தேக கண்கொண்டு பார்க்கத் தொடங்கிய முதல் காரணம்.

மேற்குவங்கத்தின் பக்கத்தில் வங்க தேசம் உருவாவதை அனுமதித்த இந்தியா தமிழ் நாட்டின் பக்கத்தில் தமிழீழம் அமைவதை ஏன் விரும்பவில்லை? அதன் அரசியல் பின்னணி என்ன? அரசியல் அறிந்தவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

இந்திய எதிர்ப்பையும் மீறி நிச்சயம் தமிழீழம் அமையும். அந்த நம்பிக்கை உறுதியாக

இருப்பதால் தான் அடுத்த கட்ட அரசியல் உறவுகளை பற்றி சிந்திக்க முடிகிறது.

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்திய வல்லரசுக்கு பக்கத்தில் தான் தமிழீழம் இருக்கப் போகிறது. ஆகவே எதிர்காலத்தில் இந்தியவுடன் நல்லுறவு பேணப்பட வேண்டியது அவசியமாகும். அதற்கு ஆரிய திராவிட துவேசங்களை வளர்ப்பது நிச்சயம் உதவப்போவதில்லை. அதை விடுதலை புலிகளும் புரிந்தே வைத்துள்ளார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

//மேற்குவங்கத்தின் பக்கத்தில் வங்க தேசம் உருவாவதை அனுமதித்த இந்தியா //

மேற்க்கு வங்கம் இந்தியாவின் நிரந்தரப் பகை யாழியான பாக்கிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்தது.இந்து மத வாதா ஆளும் வர்க்கம் அதனலையே வங்க தேசத்தைப் பிரித்தது.இது அவர்களின் நலன்களின் பாற்பட்டது.ஆரிய திராவிடத்து துவேசங்களை நாங்கள் வளர்க்கவில்லை, வளர்த்தவர்களுக்கு எதிராக அதன் அடிப்படையில் செயற்படுபவர்களுக்கு எதிரகாவே நாங்களும் செயற்படுகிறோம்.

இந்திய ஆளும் வர்க்கத்தின் செயற்பாடுகளைப் புரிந்தமையால் தான் புலிகளும் அண்மையில் ஒரு அறிக்கை விடிருந்தார்கள் அதனைப் படித்திருபீர்கள் என்று நம்புகிறேன். முதுகில் குத்துக்களை வாங்கிக்கொண்டே அய்யோ இவன் என் நண்பன் என்று சொல்லும் உங்களைப் போன்றவர்களின் இந்து சமய வெறியைப் பார்துத்தான் இலங்கை மண் வெளியீட்டில் தலைவர் ஒரு அணிந்துரை எழுதி இருகிறார்.படித்துப் பாருங்கள்.

//நீங்கள் நினைப்பது போல் தமிழகத்தில் எழும் திராவிட இயக்கங்களின் குரல்கள் டெல்லி அரசுக்கு எப்போதும் பெரும் நெருக்கடி கொடுத்து விடப்போவதில்லை//

அப்படியாயின் ஏன் இந்தத் தலைப்பைத் திறந்து இரந்துகொண்டிருகிறீர்கள்?

உங்களுக்கு குரல் கொடுக்கும் ஒரு சிலரையும் குரல் கொடுக்க வேண்டாம் என்று சொல்வதன் மூலம் புலத்தில் இருக்கும் நீங்கள் உங்கள் இந்து சமய வெறியைத் தீர்த்துக்கொள்ளலாம்,ஆனால் போராடும் ஈழத் தமிழர்களுக்கு இந்தக் குரல்களை விட்டால் வேறு யார் குரல் கொடுப்பார்கள்?

நீங்கள் நினைப்பது போல் தமிழகத்தில் எழும் திராவிட இயக்கங்களின் குரல்கள் டெல்லி அரசுக்கு எப்போதும் பெரும் நெருக்கடி கொடுத்து விடப்போவதில்லை.

இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரான குரல்களாக ஒரு காலத்தில் ஒலித்த இந்த திராவிட இயக்கங்களுடனான நெருக்கம் தான், ஈழப் போராட்டத்தை டெல்லி சந்தேக கண்கொண்டு பார்க்கத் தொடங்கிய முதல் காரணம்.

மேற்குவங்கத்தின் பக்கத்தில் வங்க தேசம் உருவாவதை அனுமதித்த இந்தியா தமிழ் நாட்டின் பக்கத்தில் தமிழீழம் அமைவதை ஏன் விரும்பவில்லை? அதன் அரசியல் பின்னணி என்ன? அரசியல் அறிந்தவர்களால் புரிந்து கொள்ள முடியும்.

இந்திய எதிர்ப்பையும் மீறி நிச்சயம் தமிழீழம் அமையும். அந்த நம்பிக்கை உறுதியாக

இருப்பதால் தான் அடுத்த கட்ட அரசியல் உறவுகளை பற்றி என்னால் சிந்திக்க முடிகிறது.

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்திய வல்லரசுக்கு பக்கத்தில் தான் தமிழீழம் இருக்கப் போகிறது. ஆகவே எதிர்காலத்தில் இந்தியவுடன் நல்லுறவு பேணப்பட வேண்டியது அவசியமாகும். அதற்கு ஆரிய திராவிட துவேசங்களை வளர்ப்பது நிச்சயம் உதவப்போவதில்லை. அதை விடுதலை புலிகளும் புரிந்தே வைத்துள்ளார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

நாளை தமிழீழம் மலரும் போது டெல்லியில் தான் தமிழீழ தூதரகம் அமையும். ஆரியருடன் எங்களுக்கு ஒட்டும் இல்லை உறவும் இல்லை, ஈரோட்டில் தான் தமிழீழ தூதரகம் அமைப்போம் என்று விடுதலை புலிகள் சொல்லப்போவதில்லை. அப்படி சொல்வது இராஜதந்திர நடைமுறையும் அல்ல

அது தான் சிறிலங்கா தமிழ் நாட்டில் துணைத் தூதரகம் வைத்திருக்கிறது.அவனுக்கு இருக்கும் புத்தி உங்களுக்கு இல்லை.இன்னும் டில்லி தடையே எடுக்க வில்லை.அதற்க்குள் டில்லியில் துதரகமாம்.

டில்லி எப்பாடு பட்டாவது போராட்டத்தை சிதைக்க எண்ணுகிறது.அனால் அதற்கு எதிராக எழும் ஒரு சில குரல்களும் வேண்டாம் எமக்கு எனெனில் அவை இந்து மத வெறிக்கு எதிரான குரல்கள்.எமக்கு எமது இன விடுதலையிலும் இந்து மத வெறியேயே முக்கியம் என்னும் உங்களைப் போன்ற வெறியர்கள் இருக்கும் வரைக்கும், டெல்லி என்றும் எமக்கு அடி பணியாது.

//மேற்குவங்கத்தின் பக்கத்தில் வங்க தேசம் உருவாவதை அனுமதித்த இந்தியா //

மேற்க்கு வங்கம் இந்தியாவின் நிரந்தரப் பகை யாழியான பாக்கிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்தது.இந்து மத வாதா ஆளும் வர்க்கம் அதனலையே வங்க தேசத்தைப் பிரித்தது.இது அவர்களின் நலன்களின் பாற்பட்டது.ஆரிய திராவிடத்து துவேசங்களை நாங்கள் வளர்க்கவில்லை, வளர்த்தவர்களுக்கு எதிராக அதன் அடிப்படையில் செயற்படுபவர்களுக்கு எதிரகாவே நாங்களும் செயற்படுகிறோம்.

இந்திய ஆளும் வர்க்கத்தின் செயற்பாடுகளைப் புரிந்தமையால் தான் புலிகளும் அண்மையில் ஒரு அறிக்கை விடிருந்தார்கள் அதனைப் படித்திருபீர்கள் என்று நம்புகிறேன். முதுகில் குத்துக்களை வாங்கிக்கொண்டே அய்யோ இவன் என் நண்பன் என்று சொல்லும் உங்களைப் போன்றவர்களின் இந்து சமய வெறியைப் பார்துத்தான் இலங்கை மண் வெளியீட்டில் தலைவர் ஒரு அணிந்துரை எழுதி இருகிறார்.படித்துப் பாருங்கள்.

//நீங்கள் நினைப்பது போல் தமிழகத்தில் எழும் திராவிட இயக்கங்களின் குரல்கள் டெல்லி அரசுக்கு எப்போதும் பெரும் நெருக்கடி கொடுத்து விடப்போவதில்லை//

அப்படியாயின் ஏன் இந்தத் தலைப்பைத் திறந்து இரந்துகொண்டிருகிறீர்கள்?

உங்களுக்கு குரல் கொடுக்கும் ஒரு சிலரையும் குரல் கொடுக்க வேண்டாம் என்று சொல்வதன் மூலம் புலத்தில் இருக்கும் நீங்கள் உங்கள் இந்து சமய வெறியைத் தீர்த்துக்கொள்ளலாம்,ஆனால் போராடும் ஈழத் தமிழர்களுக்கு இந்தக் குரல்களை விட்டால் வேறு யார் குரல் கொடுப்பார்கள்?

அது தான் சிறிலங்கா தமிழ் நாட்டில் துணைத் தூதரகம் வைத்திருக்கிறது.அவனுக்கு இருக்கும் புத்தி உங்களுக்கு இல்லை.இன்னும் டில்லி தடையே எடுக்க வில்லை.அதற்க்குள் டில்லியில் துதரகமாம்.

டில்லி எப்பாடு பட்டாவது போராட்டத்தை சிதைக்க எண்ணுகிறது.அனால் அதற்கு எதிராக எழும் ஒரு சில குரல்களும் வேண்டாம் எமக்கு எனெனில் அவை இந்து மத வெறிக்கு எதிரான குரல்கள்.எமக்கு எமது இன விடுதலையிலும் இந்து மத வெறியேயே முக்கியம் என்னும் உங்களைப் போன்ற வெறியர்கள் இருக்கும் வரைக்கும், டெல்லி என்றும் எமக்கு அடி பணியாது.

தமிழீழம் அமைவது இந்தியாவிற்கு பாதகம் இல்லை என்ற ஒரு நிலைப்பாடு இந்திய ஆளும் வர்க்கத்திடம் ஒரு காலத்தில் இருந்ததை அறீவீர்களா? அப்போதும் இந்தியா இந்து நாடாகத்தானே இருந்தது.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முடிவுகள் மதம், இனம் சார்ந்து இருப்பதை விட இந்திய ஒருமைப்பாடு, இந்திய வல்லாண்மை சார்ந்து இருப்பதே நிஜம்.

அதை சார்ந்தே தமிழீழம் பற்றிய கொள்கை முடிவுகளையும் இந்தியா கையாள்கிறது. அரசியலில் காலைவாருவதும் முதுகில் குத்துவதும் எல்லா வல்லரசுகளும் செய்தே இருக்கின்றன.

ஒரு காலத்தில் வியட்னாமிய விடுதலை போருக்கு உதவி செய்த சீனாவும் ரஷ்யாவும், இன்று இனவாத சிறீலங்காவிற்கு போட்டிபோட்டுக் கொண்டு ஆயுத உதவி செய்கிறதே. அது கம்யூனிசத்தின் குற்றமா? அல்லது அரசியல் வல்லாதிக்கம் சார்ந்ததா?

ஒரு சீனா இராணுவ உதவி செய்யும் போது கம்யூனிசத்தையும், ஒரு பாகிஸ்தான் இராணுவ உதவி செய்யும் போது இஸ்லாத்தையும் குற்றம் சுமத்தாத நீங்கள், இந்தியா அரசியல் சார்ந்து எடுக்கும் முடிவுகளுக்கு மட்டும் இந்து மதத்தை குற்றம் சாட்டுவதேன்.

அதன் காரணம் உங்கள் நாடி நரம்புகளில் ஊறிப்போன இந்து மத துவேசம்!

யாரிடம் மத துவேசம் இருக்கிறது? எல்லா மக்களின் மத நம்பிக்கைகளையும்

மதிக்கக் கற்றுக் கொண்ட எங்களிடமா?, பொய்யையும் புரட்டையுமே கொள்கையாக வைத்துக் கொண்டு இந்து மதத்தின் மேல் சேறு வாரித் தூற்றும் திருடர்களிடமா? திராவிட வட்டத்தை விட்டு வெளியில் வந்து வேற்று மொழி அறிஞர்களின் (வடமொழி உட்பட) நூல்களையும் வாசித்துப் பாருங்கள். அறிவாவது கொஞ்சம் தெளிவு பெறும்

நல்ல சுழியோடியின் திறமை சுறாவை தவிர்த்து செல்வது. முத்தை அடைவது தான் இலட்சியம். சுறாவுக்கு தலையை கொடுப்பது அல்ல

Edited by vettri-vel

தமிழீழம் அமைவதற்கு ஆதரவாக இந்தியாவின் கொள்கை என்றுமே இருந்தது இல்லை. இந்திராகாந்தி காலத்தில் கூட அப்படி இருந்தது இல்லை.

இந்தியாவின் அனைத்துக் கொள்கை முடிவுகளும் ஆரிய இந்துத்துவம் சார்ந்ததே.

சீனா சிறிலங்காவிற்கு உதவி செய்வதற்கு கொம்யூனிஸம் காரணம் இல்லை. பாகிஸ்தான் உதவி செய்வதற்கு இஸ்லாம் காரணம் இல்லை.

ஆனால் இந்தியா சிறிலங்காவிற்கு உதவி செய்வதற்கு ஆரிய பார்ப்பனிய இந்துத்துவ சிந்தனைதான் காரணம். இதை விட வேறு எந்தக் காரணமும் இல்லை.

தமிழர்கள் தமது எதிரிகளை இனம் காண வேண்டும்.

திராவிட இயக்கங்கள் எமக்காக போராடிக் கொண்டுதான் இருக்கின்றன. அவர்கள் யாரும் மௌனமாக இல்லை. இன்றைக்கும் பழ.நெடுமாறன் தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் திராவிட இயக்கங்களை சேர்ந்தவர்கள்தான்.

மார்ச் 28ஆம் திகதி திராவிட கழகம் தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்திருக்கிறது.

ஆகவே எமக்காக போராடுபவர்கள் பற்றி அவதூறுப் பிரச்சாரம் செய்ய வேண்டாம்.

திராவிட இயக்கங்களுக்கு நிறைய வேலை உண்டு. அவர்கள் பகுத்தறிவாளர்களுக்காக மட்டும் போராடுபவர்கள் அல்ல. அப்படி தந்தை பெரியார் அவர்களை உருவாக்கவில்லை.

இந்துப் பக்தர்களுக்கு கோயில் கதவை திறந்து விடவும் அவர்கள்தான் வர வேண்டும். சிதம்பரத்தில் தமிழ் நுழைவதற்கு துணை நிற்பதற்கும் அவர்கள்தான் வர வேண்டும்.

இப்படி நிறைய பணிகளை செய்கின்றவர்கள் எமக்காகவும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

வெறும் காழ்ப்புணர்வுகளோடு செய்திகளை திரிக்க வேண்டாம். இன்றைக்கு பெர்னாண்டொ சொன்னதை தமிழ் நாட்டில் யாரும் நம்பவில்லை. பத்திரிகைகள் பெர்னாண்டோ சொன்னதாக செய்தி வெளியிட்டாலும் மக்கள் நம்பவில்லை.

அப்படி ஒரு உறுதியான நம்பிக்கை தமிழக மக்களிடம் உண்டு. இதற்கு காரணம் திராவிட இயக்கங்களின் பரப்புரைதான்.

சிங்கள அரசின் பொய்யான பரப்புரைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளும் ஒவ்வொரு முறையும் பதில் சொல்வது இல்லையே. எங்கே தேவையோ அங்கே பதில் சொல்வார்கள்.

திராவிட இயக்கங்கள் தமது வேலையை சரியாகத்தான் செய்கிறார்கள். அதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை.

Edited by சபேசன்

தமிழீழம் அமைவது இந்தியாவிற்கு பாதகம் இல்லை என்ற ஒரு நிலைப்பாடு இந்திய ஆளும் வர்க்கத்திடம் ஒரு காலத்தில் இருந்ததை அறீவீர்களா? அப்போதும் இந்தியா இந்து நாடாகத்தானே இருந்தது.

இந்தியா ஒரு போதும் தமிழீத்திற்க்கு ஆதரவாக இருந்ததில்லை.அண்றைய இரட்டைத்துருவ சர்வதேச அரசியல் நிலையில் சிறிலங்கா அமெரிக்காவின் பக்கம் சாய்ந்த போது சிறிலங்காவை வழிக்குக்கொண்டு வரும் நோக்கிலையே தனது கட்டுப்பட்டுக்குள் இருக்கும் இயக்கங்களுக்குப் பயிற்ச்சியும் ஆயுத உதவியும் செய்தது. திராவிடக் கோரிக்கையினால் தான் இந்தியா ஆதரவு வழங்க்கவில்லை என்று நீங்கள் சொல்வதும் அப்படியாயின் தவறானது.ஏனெனில் திராவிடக் கட்சிளும் திராவிட நாட்டுக் கோரிக்கையும் ஏற்பட்ட பிறகே இந்தியா நீங்கள் சொல்லும் ஆதரவை வழங்கியது.இந்தியாவின் ஆளும் வர்க்கம் எப்போதுமே தனது நலங்களில் இருந்தே செயல் ஆற்றும்.

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முடிவுகள் மதம், இனம் சார்ந்து இருப்பதை விட இந்திய ஒருமைப்பாடு, இந்திய வல்லாண்மை சார்ந்து இருப்பதே நிஜம்.

அதைத் தான் நானும் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.இந்திய ஒருமைப்பாடு என்பது என்ன? இந்திய உபகண்டத்தில் இருக்கும் தேசிய இனங்கள் சுய நிர்ணய அடிப்படையில் பிரிந்து போவதைத் தடுப்பதே இந்திய ஒருமைப்பாடு என்பது.இந்தியா ஒன்றாக இருந்தால் தான் மத்தியில் ஆளும் குமபலால் ஆள்வதற்கு ஒரு நாடு இருக்கும்.தேசிய இனங்கள் பிரிந்து போனால் அவர்கள் என்ன செய்வார்கள்?

அதை சார்ந்தே தமிழீழம் பற்றிய கொள்கை முடிவுகளையும் இந்தியா கையாள்கிறது. அரசியலில் காலைவாருவதும் முதுகில் குத்துவதும் எல்லா வல்லரசுகளும் செய்தே இருக்கின்றன.

ஒரு காலத்தில் வியட்னாமிய விடுதலை போருக்கு உதவி செய்த சீனாவும் ரஷ்யாவும், இன்று இனவாத சிறீலங்காவிற்கு போட்டிபோட்டுக் கொண்டு ஆயுத உதவி செய்கிறதே. அது கம்யூனிசத்தின் குற்றமா? அல்லது அரசியல் வல்லாதிக்கம் சார்ந்ததா?

அதைத் தான் நானும் சொல்கிறேன் அரசியல் என்பது நலங்கள் சார்ந்தது.இன்று இந்திய வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பது யாரோ அவர்களின் நலன் சார்ந்தே அது வகுக்கப்படும்..இந்திய உபகண்டத்தில் இருக்கும் மானில அரசுகளால் என்று இந்திய வெளியுறவுக் கொள்கை தீர்மானிக்கப்படுகிறதோ அன்று தான் அது தேசிய இன விடுதலைக்குச் சார்பானதாக இருக்கும்.தேசிய இன அடிப்படியிலான திராவிடக் கட்சிகளைப் பார்த்து இந்திய ஆளும் வர்க்கம் மிரள்வது அதனால் தான். தமிழ் நாடு தனி நாடாக இருந்திருந்தால் அதன் வெளியுறவுக்கொள்கை தமீழீழம் சார்ந்ததாகவே இருந்திருக்கும்.சோழப்பேரரசு தொடர்ந்திருந்தால் சிறிலாங்கா இந்தியா என்னும் நாடுகள் இருந்திருக்காது.ஆகவே வரலாறு என்பதைத் தீர்மானிப்பது யார் அரசிய அதிகாரமுடையவர்களாக அந்தத் தருணத்தில் இருகிறார்கள் அவர்கள் நலன்ங்கள் என்ன என்ன என்பதைப் பொறுத்தது.ஆகவே தமிழ்த் தேசியத்தின் நலங்களின் அடிப்படையிலையே தமிழீழ வெளியுறவுக் கொள்கை இருக்கமுடியுமே தவிர.புலத்தில் இருந்து புலம்பும் ஒரு சில இந்து சமய வெறியர்களின் விருப்பங்களுக்கு அமைய இல்லை.

ஒரு சீனா இராணுவ உதவி செய்யும் போது கம்யூனிசத்தையும், ஒரு பாகிஸ்தான் இராணுவ உதவி செய்யும் போது இஸ்லாத்தையும் குற்றம் சுமத்தாத நீங்கள், இந்தியா அரசியல் சார்ந்து எடுக்கும் முடிவுகளுக்கு மட்டும் இந்து மதத்தை குற்றம் சாட்டுவதேன்.

சீனாவிலோ பாக்கிஸ்தனிலோ இந்து மதம் இல்லை.இந்து மததிலேயே வர்ணாச்சிரமம் இருக்கிறது.இந்திய உபகண்டத்திலே வர்ணாச்சிரமத்தின் அடிப்படையில் கட்டியமைக்கப்பட்ட ஒரு சமுக்க கட்டமைப்பு இருக்கிறது.ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தம்மை ஒரு மதத்தின் மூலம் ஆட்ச்சியாளர்களாக உயர்த்திய ஒரு சாதிய வர்க்கம் இந்தியாவில் மட்டுமே உண்டு.அதன் கையிலையே இந்தியா என்னும் தேசம் சிக்குண்டு இருக்கிறது.அதன் பிடியைத் தளர்த்த வல்லது இந்திய தேசிய இனக்களின் எழுச்சி.அந்த எழிச்சி ஏற்படா வண்ணம் அது தன்னைப் பாதுகாக்க எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.அதற்கு எதிராக நாம் போராட வேண்டுமெனில் எமது நேச சக்திகளான தேசிய இனங்களின் அரசியல் அதிகாரத்தை நிலை நாட்ட அதன் பாற்பட்ட சக்திகளினூடாக நாமும் போராட வேண்டி உள்ளது.

அதன் காரணம் உங்கள் நாடி நரம்புகளில் ஊரிப்போன இந்து மத துவேசம்!

யாரிடம் மத துவேசம் இருக்கிறது? எல்லா மக்களின் மத நம்பிக்கைகளையும்

மதிக்கக் கற்றுக் கொண்ட எங்களிடமா?, பொய்யையும் புரட்டையுமே கொள்கையாக வைத்துக் கொண்டு இந்து மதத்தின் மேல் சேறு வாரித் தூற்றும் திருடர்களிடமா? திராவிட வட்டத்தை விட்டு வெளியில் வந்து வேற்று மொழி அறிஞர்களின் (வடமொழி உட்பட) நூல்களையும் வாசித்துப் பாருங்கள். அறிவாவது கொஞ்சம் தெளிவு பெறும்

நல்ல சுழியோடியின் திறமை சுறாவை தவிர்த்து செல்வது. முத்தை அடைவது தான் இலட்சியம். சுறாவுக்கு தலையை கொடுப்பது அல்ல

அது தான் நீங்களே எங்களைத் தின்ன வரும் சுறா என்று சொல்லி விடீர்களே பிறகு எதற்குக் கேட்கிறீர்கள் இந்து மத துவேசம் ஏன் எங்களிடம் இருக்கிறது என்று.

எனது மக்களின் விடுதலைக்குத் தடையாக இருக்கும் எந்தச் சக்தியுடனும் எனக்குக் கோவம் இருப்பது இயல்பு தானே. உங்களிக்கு உங்களை விழுங்க நினைக்கும் சுறாவிடம் அன்பு இருக்கிறது என்றால் உங்கள் கண்களை மறைப்பது உங்கள் மதம் மீதான் உங்கள் வெறி அல்லாமல் வேறு என்ன? :mellow:

நீங்கள் நினைப்பது போல் தமிழகத்தில் எழும் திராவிட இயக்கங்களின் குரல்கள் டெல்லி அரசுக்கு எப்போதும் பெரும் நெருக்கடி கொடுத்து விடப்போவதில்லை.

இந்த உண்மை இந்திய அரசிற்கும் நன்கு தெரியும். ஆயினும் தமிழர் பிரச்சினைக்கு அமைதி வழியில் அரசியல் தீர்வே காணவேண்டும் எனக் கூறிக்கொண்டு, அதற்கு மாறாக இராணுவ ரீதியாக சிறிலங்கா அரசிற்கு நம்பிக்கையூட்டும் இந்திய அரசின் செயற்பாடுகள் தமிழின அழிப்பிற்கே வழிகோலும்.

இந்திய அரசின் இந்த வரலாற்றுத் தவறானது, ஈழத்தமிழர்களைத் தொடர்ந்தும் இன்னல்களுக்குள்ளாக்கி, ஒரு பாரிய இன அழிவு அபாயத்துக்குள் அவர்களைத் தள்ளிவிடும் என்பதை இந்திய அரசிற்கு சுட்டிக்காட்ட புலிகள் இயக்கம் விரும்புகின்றது. இந்திய அரசு புரியும் இந்த தமிழின விரோதச் செயலை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொண்டு அதற்கு தமது கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும் என ஈழத்தமிழ் மக்கள் சார்பில் புலிகள் இயக்கம் அன்பாகக் கேட்டுக்கொள்கின்றது.

http://www.puthinam.com/full.php?2a48QP84b...df5ev2cc0Bg1k3e

நாரதரினதும், சபேசனினதும் கருத்துக்கள் மிக சரியானவை.... தமிழ் தேசிய தலைமையின் கருத்தோட்டதிற்கு இணைவாக போகின்றன. இந்து மத வெறித்தனம் ஒரு போதும் தமிழ் தேசியத்தையும் அதன் போராட்டத்தையும் ஏற்றுக்கொள்ள போவது இல்லை

இங்கே இன்னொன்றையும் சொல்ல வேண்டும்.

தமிழத் தேசியம் என்பது எந்த ஒரு மததிற்கும் ஆதரவானதோ எதிரானதோ இல்லை.மாற்றாக அது மத அடையாளம் அற்ற தமிழ்த் தேசிய அடையாளத்தையே கோருகிறது.அது தேசிய விடுதலையுடன் சமூக விடுதலையையும் கோருகிறது.சாதியத்தை துறப்பது சமூக விடுதலையின் அத்தியாவாசியமானா கூறாக இருக்கிறது.

மத வழிபாட்டுச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் அதே நேரம் மனித அடிப்படை உரிமைகளுக்கு முரணான எந்தச் சமூக சமய வழக்கங்களையும் அது தடை செய்யும்.மனித உரிமை என்பது இன்னொரு மனிதனை மதத்தின் பெயரால் அடக்கி ஆள நினைக்கும் உரிமை அல்ல என்பதை சிலர் இங்கு புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ் நாட்டுத் தமிழரிடம் நெடு நாளைய உறவை கொண்ட நாம் அவர்களிடம் எமது போராட்டதிற்கான தார்மீக ஆதரவைக் கோரும் போது , அவர்களின் போராட்டங்களுக்கானா தார்மீக ஆதரவையும் வழங்க வேண்டும். தமிழ்னாட்டின் தலைவிதியைத் தீர்மானிப்பது தமிழ் நாட்டு மக்களே.இந்திய ஆளும் வர்க்கம் இதனை உணராது செயற்படுமாயின் அவர்களுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ் நாட்டுத் தமிழர்களும் ஈழத் தமிழர்களும் ஒன்றிணைவார்கள்.இதனை இந்திய ஆளும் வர்க்கம் புரிந்து கொண்டு தமிழ்னாட்டு மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யாதுவிடின், தமிழ்த் தேசிய எழுச்சி என்பது சிறிலங்காவைப்போல் தமிழி நாட்டிலும் மேல் எழுவது தவிர்க்க முடியாதது ஆகி விடும்.சிறிலங்கா ஆட்சியாளர் விட்ட தவறை இந்திய ஆட்சியாளர்கள் விட மாட்டார்கள் என்று நம்புவோமாக.ஏனெனில் மொழி வாரி மானிலங்களை அவர்கள் அத்தகைய தூர நோக்கிலயே இந்திய சுதந்திரத்தின் பின் அமைத்தார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.