Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரும்புலிகளை இலக்கு வைத்து கொழும்பில் சுவரொட்டிகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கரும்புலிகள் தங்கள் எண்ண ஓட்டத்தை மாற்றி அரசிடம் சரணடைந்தால் அவர்களுக்கு 10 மில்லியன் ரூபாய்கள் நன்கொடையாக வழங்கப்படுவதுடன் புதிய வாழ்க்கையை உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் ஆரம்பிக்கவும் உத்தரவாதம் அளிக்கப்படும் என்ற பிரச்சாரத்துடன் கொழும்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பாக தென்னிலங்கையில் உள்ள கரும்புலிகளை இலக்கு வைத்து இந்தப் பண ஆசையை அரசு விதைக்க முன் வந்துள்ளது.தமிழீழத் தாயகக் கொள்கைக்காக சயனைட் குப்பியை சுமப்பவர்கள் மத்தியில் இவை எந்தளவுக்கு எடுபடும் என்பது கேள்விக்குறியே..!

பல கரும்புலிகள் தென்னிலங்கையில் பல ஆண்டுகளாக வளமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே இலக்குகளை தேடிச் சென்று தாக்கி அழித்த கடந்த கால அனுபவமானது.. கரும்புலிகள் காசுக்கு ஆசை வார்த்தைகளுக்கு எளிதில் விலை போகக் கூடியவர்கள் அல்ல என்பதை சிறீலங்காவுக்கு உணர்த்தி இருக்கும். இருந்தும் சிறீலங்கா சிலரின் தூண்டுதலின் பேரில் இதை செய்ய விளைந்துள்ளது.

இதே போன்ற அணுகுமுறைகளை ஈராக்கில் அமெரிக்காவும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது..! கொலம்பிய போராளிகளை விலைக்கு வாங்கும் செயலையும் அமெரிக்கா கொலம்பிய அரசினூடு செய்து வருகிறது..!

இதனுடன் தொடர்புபட்ட செய்தி கீழே....

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7318227.stm

Edited by nedukkalapoovan

10 மில்லியன் ருபாய்களா?

கொழும்பில் உள்ள அனைத்து தமிழர்களும் உடனடியாக 10 மில்லியன் ருபாய்களை பெற அற்புதமான வழி.

நல்ல வாழ்க்கைக்கும் உத்தரவாதமாம். பிறகென்ன?

அனைவரும் கரும்புலி என்று சொல்லி சரணடைய வேண்டியதுதான். :mellow::mellow:

அரசின் கையாலாகாதனத்தின் வெளிப்படுதான்..பாவம்......

Edited by Appu

கருணா குழுவுக்கு (( பிள்ளையான் குழுவுக்கு)) அற்புதமான வாய்ப்பு... ***** வெள்ளிதிசை போல கிடக்கு....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10 மில்லியன் ருபாய்களா?

கொழும்பில் உள்ள அனைத்து தமிழர்களும் உடனடியாக 10 மில்லியன் ருபாய்களை பெற அற்புதமான வழி.

நல்ல வாழ்க்கைக்கும் உத்தரவாதமாம். பிறகென்ன?

அனைவரும் கரும்புலி என்று சொல்லி சரணடைய வேண்டியதுதான். :mellow::mellow:

சரணடையும் வரைதான் 10 மில்லியன் பேச்சு. சரணடைந்த பின்னர் பேரா வாவியில் மிதப்பு..! எப்படி உத்தேசம்..! பிரேமதாச காலத்தில் ஜே வி பிக்கு எதிரா இப்படி செய்யப்பட்டது. அப்படிச் சரண்டைந்தவர்களைத்தான் உடுகம்பொல போட்டுத் தள்ளி பேரா வாவியில் விட்டெறிந்தார். இப்ப ஜே வி பி கரும்புலிகளை நோக்கி இப்படி நப்பாசையில் செய்கிறது..! :mellow:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சில கருணாக்கும்பலையோ, டக்ளஸ் கும்பலையோ சரணடைய வைத்து விட்டு, கரும்புலிகளின் உச்சபட்ச தியாகத்தைச் சிங்கள அரசு கொச்சைப்படுத்த முயலக்கூடும். அதுக்குத் தான் இந்த நாடகம்.

உலகின் கவனத்தை திருப்ப முயலும் ஒரு தந்திர விளம்பரம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலகின் கவனத்தை திருப்ப முயலும் ஒரு தந்திர விளம்பரம்

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். சிங்கள ஊடகங்கள் கூட முக்கியத்துவம் கொடுக்காத இச்சுவரொட்டி பற்றி பிபிசி முக்கியம் கொடுக்கக் காரணம் என்ன..??!

அதுமட்டுமன்றி விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் என்று காட்ட இரண்டு விடயங்களை அமெரிக்கா தூக்கிப் பிடித்தது. அதில் 1. சிறுவர் படை சேர்ப்பு. அதை அண்மையில் அமெரிக்காவே கிளியர் செய்து விட்டது.

இப்போ மீதமிருக்கும் ஒரு குற்றச்சாட்டு தற்கொலைத் தாக்குதல். சிறீலங்காவுக்குள்ள

தேவை புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் இருந்து நீக்க அனுமதிக்கக் கூடாது என்பதுதான். புலிகளைப் பயங்கரவாதிகள் என்று காட்டியபடி பயங்கரவாத ஒழிப்புப் போர் என்ற போர்வையின் கீழ் தமிழரின் தாயக இருப்பை சீரழித்து.. தனது பேரினவாதத்தை சிறீலங்கா பூரா விஸ்தரித்து தமிழர் இருப்பை அடிமை இருப்பாக்கி முழு இலங்கையையும் சிங்கள தேசமாக்குவதுதான் அது.

அதற்கேற்ப சர்வதேசத்தின் கவனத்தை தற்கொலைத்தாக்குதல் மீது கவனம் செலுத்த வைக்க இப்படியான செயற்பாடுகள் சிறீலங்காவுக்கு அவசியம். இதை சிறீலங்காவுக்கு ஆலோசனை வழங்கும் அந்நிய சக்திகளும் உபதேசித்திருக்கலாம்..! :wub:

போதக்குறைக்கு பிரபாகரன் என்று படம் வேற...!

கடைசியா சொன்ன அன்னிய சக்தி எண்டு ஆரை சொல்லுறிங்கள்? பக்கத்தில இருக்குறவங்களோ? அல்லது துரத்திலையோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடைசியா சொன்ன அன்னிய சக்தி எண்டு ஆரை சொல்லுறிங்கள்? பக்கத்தில இருக்குறவங்களோ? அல்லது துரத்திலையோ?

இரண்டாம் உலகப் போரின் பின் தற்கொலைத் தாக்குதலை ஒரு போரியல் உக்தியாக பாவிக்க ஆரம்பித்தது தமிழீழ விடுதலைப்புலிகள் தான் என்பது பல மேலை நாட்டு இராணுவப் பேராசிரியர்களின் கணிப்பு. இதை பிபிசி செய்த ஒரு விபரணத்தில் பிரிட்டனை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

தற்கொலைத் தாக்குதலால் தான் சமீப கால அமெரிக்க இராணுவ உக்திகளுக்கும் இஸ்ரேலிய உக்திகளும் பெரிய சவாலை சந்தித்துள்ளன. அதுமட்டுமன்றி விடுதலைப்புலிகள் புதிய புதிய தற்கொலைத் தாக்குதல் வடிவங்களை உருவாக்குவதும் அவை வெற்றிகரமாக அமைவதும்.. அமெரிக்கா போன்ற மற்றும் வல்லாதிக்கத்தை அல்லது பிராந்திய மேலாதிக்கத்தை இராணுவ ரீதியில் நிலைநிறுத்த விரும்புகிறவர்களுக்கு ஏற்புடைய ஒன்றல்ல..!

ஆனால் சிறீலங்காவைப் பொறுத்தவரை இவ்விளம்பரத்தால் பல நன்மைகள் உண்டு.

1. ஒரு சில கரும்புலிகளை குழப்பமடையச் செய்ய இவை முனையலாம்.

2. கரும்புலிகள் என்று சிலரை சரணடையச் செய்துவிட்டு அதைப் பிரச்சாரமாக்கி புலிகள் பலவீனமடைந்து விட்டனர் என்று சிங்கள மக்களுக்கு பொய்ப்பரப்புரை செய்யலாம். தமிழர்களையும் குழப்பி புலிகள் மீது நம்பிக்கை இழக்கச் செய்யலாம். கரும்புலிகளையே குழப்ப முனையலாம். ஆனால் கரும்புலிகள் இந்த உக்திகளுக்கு ஏற்கனவே பழக்கப்பட்டவர்கள் என்பதால்.. இவை அவ்வளவு பாதிப்பை அவர்களிடம் ஏற்படுத்தப் போவதில்லை.

3. சர்வதேச சமூகத்தில் வல்லாதிக்க நலன் நோக்கி செயற்படுவர்களின் தேவைகளை இதன் மூலம் திருப்தி செய்து அவர்களிடமிருந்து போருக்கான தேவைகளை நிறைவு செய்ய உதவி கோரலாம்.

4. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று தொடர்ந்து காட்டிக் கொண்டு.. பயங்கரவாதத்துக்கு எதிரான போரின் கீழ் தமிழர்கள் மீது போரைத் திணித்து தமிழர்களின் உண்மையான அரசியல் அபிலாசைகளை சிதறடித்து தமிழர்களை அரசியல் மற்றும் இனத்துவ ரீதியாக பலவீனமாக்கலாம்.

5. வல்லாதிக்க சக்திகளுக்கு புலிகள் மீது ஒரு அழுத்தத்தைப் பிரயோகிக்க வழிசமைத்துக் கொடுக்கலாம்.

6. அண்டை நாட்டுக்கு தலையிடியாக உள்ள புலிகளை அமெரிக்கா போன்ற பலமான சக்திகளோடு சேர்ந்து பயங்கரவாத்துக்கு எதிரான போரின் கீழ் அழிக்க வாய்ப்பு அல்லது பலவீனப்படுத்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருத்தல். இதன் மூலம் பிராந்தியத்தில் ஒரு அச்ச சூழலைப் பேணுதல். இதன் மூலம் இந்தியாவை இராணுவ ரீதியில் சிறீலங்காவுக்கு உதவத் தூண்டச் செய்தல். புலிகளை இந்தியாவிடமிருந்து மீண்டும் மீண்டும் தூர விலகி இருக்க வைத்தல்.

இப்படி பல பரிமானங்கள் இச்சுவரொட்டிக்கு உண்டு. எனினும் 1990 இல் தலைவர் ஒரு உரையில் சொன்னது போல கரும்புலிகள் ஒரு நாள் உலகில் எந்த ஆயுதத்தாலும் முறியடிக்க முடியாத இராணுவ உக்தியாக விளங்குவர் என்பது இன்று உறுதியாகி விட்டுள்ளது.

அணுகுண்டுகளோடும் பல அதிநவீன ஆயுதங்களை வைத்திருந்தும் கரும்புலிகளின் தாக்குதல் இலக்குகளை யாரும் தடுக்க முடியவில்லை. அமெரிக்க ஏவுகணைகள் சாதித்ததை விட கரும்புலிகள் சாதித்தவை அதிகம். அதன் அதிர்வுகள் சர்வதேச போரரங்கிலும் ஒலிக்காமல் இல்லை..! அணு ஆயுதத்தை விட கரும்புலிகளின் உயிராயுதம் பலமானது. அதனால் தான் அதற்கு எதிராக பல மட்டங்களில் மேற்குலகம் பிரச்சாரம் செய்கிறது. காரணம்.. அதன் வல்லாதிக்க விரிவாக்கத்துக்கு நேரடி அச்சுறுத்தலாக தற்கொலைப்படை உலகில் உருவாகி வருவதும் தற்கொலை தாக்குதல் உக்திகள் முறியடிக்கச் சிரமாமனதுடன்.. சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கையை மிக எளிதாக சிதைத்து உலகை ஒரு போரியல் சிந்தனைக்குள் இலகுவாக விழச் செய்துவிடும் ஆற்றல் தற்கொலைத்தாக்குதலுக்கு உண்டு.

குறிப்பாக லண்டனில் நடந்த தாக்குதலை அடுத்து லண்டனில் இருந்த பலர் வெளியே புறப்பட்டு தொழிலுக்கு கூடப் போகப் பயப்பிட்டார்கள். மக்கள் மத்தியில் எழுந்த அந்த அச்சத்தை நீக்கவே பல செயற்பாடுகளை செய்ய வேண்டி ஏற்பட்டது. இது உலகம் ஒரு பாதுகாப்பற்றது என்ற சிந்தனையை மக்கள் மத்தியில் விதைத்தால்.. அமெரிக்க வல்லாதிக்கக் கனவுக்கு அது பெரிய அச்சுறுத்தலாக அமைவதோடு பெரும் மக்கள் கிளர்ச்சி அமெரிக்கக் கொள்கைகளுக்கு எதிராக எழுப்பப்படக் கூடும்.

எனவே தான் தற்கொலைத் தாக்குதல்களை இராணுவ ரீதியில் முறியடிக்க முடியாத வல்லாதிக்க சக்திகள்.. பணத்தை, வசதியை, மனித உரிமைகளைக் காட்டி மனித மனங்களை வெல்லலாம் என்று கனவு காண்கின்றனர். எப்படி அமெரிக்க வல்லாதிக்கத்தால் தன்னுள் வல்லாதிக்க உணர்வை தக்க வைக்க முடிகிறதோ அப்படி தற்கொலைப்படைகளாலும் வல்லாதிக்கத்தை எதிர்க்க வல்ல உணர்வுகளை தாங்க முடியும் என்ற சிம்பிள் லொஜிக்கை விளங்க முடியல்ல என்பது வியப்புக் குரியது..! அமெரிக்காவின் நய வஞ்சகத்துக்கு உலகில் வீழ்ந்த ஒவ்வொருவனும் தற்கொலையாளி ஆகி இருப்பின் இன்று அமெரிக்க வல்லாதிக்கம் சிதறிச் சின்னாபின்னமாகி இருக்கும். அமெரிக்கா செய்துவரும் மனித உரிமை மீறல்களோடு ஒப்பிடும் போது தற்கொலைத்தாக்குதல் என்பது ஒன்றும் பாரிய மனித உரிமை மீறல் அல்ல.

அபோசன் என்ற பெயரில் மனித உயிர்களை முளையில் அளிக்க அனுமதி அளிக்கும் அமெரிக்க வல்லாதிக்கம்.. ஏன் தற்கொலை தாக்குதலைக் கண்டதும்.. மனித உரிமை பேசி பரிந்து வழிகிறது.. பல போரரங்குகளில் ஆயிரக்கணக்கில் மக்களைக் குண்டு போட்டுக் கொல்லும் அமெரிக்கா.. அணு குண்டு வீசியே கொன்ற அமெரிக்கா.. தற்கொலைத்தாக்குதலை ஏன் மனித உரிமை மீறலாக எடுத்துக் கத்துகிறது...???! பசியால் பட்டினியால்.. நோயால் ஆபிரிக்காவில் பல்லாயிரம் மக்கள் தினமும் மடிவதை பற்றி கவலைப்படாத அமெரிக்கா.. அங்கு மனித உரிமைகளை முன்னிறுத்தாத அமெரிக்க வல்லாதிக்கம்.. ஏன் தற்கொலைப்படையைக் கண்டு அஞ்சுகிறது..??! அணு ஆயுதங்களை செய்து வைத்துக் கொண்டு.. மனிதப் பேரவலத்துக்கு தயாராக்கி தன்னை வைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா.. ஏன் இது விடயத்தில் மட்டும் மனித உரிமை காக்க வேசம் போடுகிறது..??! இதற்கு எல்லாம் விடை.. அமெரிக்க வல்லாதிக்க விரிவாக்கத்தைப் பாதுகாப்பது என்பதோடு புனைந்திருக்கிறது..! அதன் பின்னணியில் தொடர்சிகள் பல சங்கிலிகளாக வருகின்றன..! :wub:

Edited by nedukkalapoovan

ஒரு விஷயம் எனக்கு விளங்கவில்லை.... யாராவது விளங்கப்படுத்தினால் புண்ணியமாய்போகும்,

நாமும் சிங்கள விமானிகளை சரண் அடைய வைத்து 10 மில்லியன் பொற்காசுகள் கொடுத்து பாதுகாப்பு காரணமாக பெயர் குறிப்பிடாத ஒரு சிறந்த மேலைநாட்டில் குடியுரிமை வழங்கலாமே?

:wub:

அபோசன் என்ற பெயரில் மனித உயிர்களை முளையில் அளிக்க அனுமதி அளிக்கும் அமெரிக்க வல்லாதிக்கம்..

அண்ணே..... இது மனிதம் சம்பந்தப்பட்ட பிரச்சினை.... அல்லது தொந்தரவு. இதை பற்றி அபிப்பிராயம் சொல்ல யாருக்கும் அனுமதி இல்லை..

Edited by Panangkai

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே..... இது மனிதம் சம்பந்தப்பட்ட பிரச்சினை.... அல்லது தொந்தரவு. இதை பற்றி அபிப்பிராயம் சொல்ல யாருக்கும் அனுமதி இல்லை..

மனித உரிமை என்பது வளர்ந்த மனிதனுக்கு மட்டுமல்ல. கருவில் உள்ள சிசுவுக்கும் அடங்கும். ஒரு சிசு பெரியவரைக் கேட்டல்ல முளைப்பதும் விடுவதும். அது இயற்கையான நிகழ்வு. அதை சிதைக்க மனிதனுக்கு அதுவும் செயற்கை முறையில் அழிக்க மனிதனுக்கு உரிமை கிடையாது. இது இரசாயான ஆயுதத்தை மக்கள் கூட்டம் மீது பிரயோகிப்பதற்குச் சமனானது..!

ஒரு வீரன் தனது கொள்கைக்காக தன்னை மாய்ப்பதை தவறென்றும் ஆனால்.. மரணம் வரும் என்று தெரிந்தும் போர் வீரனை தயார் செய்து போருக்கு அனுப்புதல் தவறில்லை என்பவர்கள்.. ஒரு வளர்ந்த மனிதன் தனது வசதிக்காக ஒரு சிசுவை கொல்வது ஏன் தவறாக கருத முடியாது. அது ஏன் மனித உரிமை மீறலாக முடியாது. நீங்கள் விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன முட்டையும் விந்தும் உருவாகும். உங்கள் இச்சைக்கு அப்பாற் பட்ட செயற்பாடுகளாக ஏன் அவை இயற்கையில் இருக்கின்றன. சாப்பிடுவது போன்று இச்சையுள்ள செயற்பாடாக ஏன் அவை இல்லாமல் செய்யப்பட்டது..??! :wub:

Edited by nedukkalapoovan

பெருமெடுப்பில் செய்யப்படும் இந்த பிரச்சார சுவரொட்டிகள் வெறும் சிங்களத்தின் மூளைக்குழந்தை அல்ல. இதன் பின்புலம் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து அமெரிக்கா வரை நீண்டுள்ளது.

1uo40xvqpx4xn5ykcsiuu4mx_08.jpg

தட்டாமல் முட்டாமல் 'பொருளை' கொண்டு நடக்கும் அவர்களின் விளையாடுகளில் ஒரு 'சாம்பிள்' விளையாட்டுதான் மேலுள்ளது.

மனித உரிமை என்பது வளர்ந்த மனிதனுக்கு மட்டுமல்ல. கருவில் உள்ள சிசுவுக்கும் அடங்கும். ஒரு சிசு பெரியவரைக் கேட்டல்ல முளைப்பதும் விடுவதும். அது இயற்கையான நிகழ்வு. அதை சிதைக்க மனிதனுக்கு அதுவும் செயற்கை முறையில் அழிக்க மனிதனுக்கு உரிமை கிடையாது. இது இரசாயான ஆயுதத்தை மக்கள் கூட்டம் மீது பிரயோகிப்பதற்குச் சமனானது..!

ஒரு வீரன் தனது கொள்கைக்காக தன்னை மாய்ப்பதை தவறென்றும் ஆனால்.. மரணம் வரும் என்று தெரிந்தும் போர் வீரனை தயார் செய்து போருக்கு அனுப்புதல் தவறில்லை என்பவர்கள்.. ஒரு வளர்ந்த மனிதன் தனது வசதிக்காக ஒரு சிசுவை கொல்வது ஏன் தவறாக கருத முடியாது. அது ஏன் மனித உரிமை மீறலாக முடியாது. நீங்கள் விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன முட்டையும் விந்தும் உருவாகும். உங்கள் இச்சைக்கு அப்பாற் பட்ட செயற்பாடுகளாக ஏன் அவை இயற்கையில் இருக்கின்றன. சாப்பிடுவது போன்று இச்சையுள்ள செயற்பாடாக ஏன் அவை இல்லாமல் செய்யப்பட்டது..??! :wub:

டொபிக் மாறுகின்றது........

இன்டைக்கு நாட்டில் உள்ள முக்காவாசி பிரச்சினைக்கும் காரணமே உந்த முட்டள்தனம்தான்.. சும்மா வழத்தெடுக்கஏலம பெத்துபோட்டு தெருவில விடுறதுகள் நாளைக்கு உங்க தலையை உடைத்துதான் தனக்கு கிராக் வாங்கும்... அல்லது குட்டை பாவாடையோட ரோட்டில நிக்கிற 16 வயசுகள் கூட உங்க பேச்சகேட்டு பெத்துபோட்டு வாழவைக்கதெரியாம உறுப்ப வாடக்கி விடுதுகள்... எல்லம் கதைக்கி நல்லாஇருக்கும்.. நிஜத்தில் இக்கரைக்கு அக்கரை பச்சைதான்..

மனித உரிமை மனிதர்களுக்கே இல்ல... இதில... சிசுவும் கொசுவும். :(

நீங்கள் விரும்பினால் என்ன விரும்பாவிட்டால் என்ன முட்டையும் விந்தும் உருவாகும். உங்கள் இச்சைக்கு அப்பாற் பட்ட செயற்பாடுகளாக ஏன் அவை இயற்கையில் இருக்கின்றன. :wub:

:( நீங்க விரும்பாமல் எப்படி விந்தும் முட்டயும் ஒன்ருசேரும்? :(

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

அபோசன் என்ற பெயரில் மனித உயிர்களை முளையில் அளிக்க அனுமதி அளிக்கும் அமெரிக்க வல்லாதிக்கம்.. ஏன் தற்கொலை தாக்குதலைக் கண்டதும்.. மனித உரிமை பேசி பரிந்து வழிகிறது.. பல போரரங்குகளில் ஆயிரக்கணக்கில் மக்களைக் குண்டு போட்டுக் கொல்லும் அமெரிக்கா.. அணு குண்டு வீசியே கொன்ற அமெரிக்கா.. தற்கொலைத்தாக்குதலை ஏன் மனித உரிமை மீறலாக எடுத்துக் கத்துகிறது...???! பசியால் பட்டினியால்.. நோயால் ஆபிரிக்காவில் பல்லாயிரம் மக்கள் தினமும் மடிவதை பற்றி கவலைப்படாத அமெரிக்கா.. அங்கு மனித உரிமைகளை முன்னிறுத்தாத அமெரிக்க வல்லாதிக்கம்.. ஏன் தற்கொலைப்படையைக் கண்டு அஞ்சுகிறது..??! அணு ஆயுதங்களை செய்து வைத்துக் கொண்டு.. மனிதப் பேரவலத்துக்கு தயாராக்கி தன்னை வைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா.. ஏன் இது விடயத்தில் மட்டும் மனித உரிமை காக்க வேசம் போடுகிறது..??! இதற்கு எல்லாம் விடை.. அமெரிக்க வல்லாதிக்க விரிவாக்கத்தைப் பாதுகாப்பது என்பதோடு புனைந்திருக்கிறது..! அதன் பின்னணியில் தொடர்சிகள் பல சங்கிலிகளாக வருகின்றன..!

தற்கொலை தாக்குதல்களால் இஸ்ரேலில் இருந்து மேற்குலக நாடுகள் வரை தாங்கள் நினைத்த இலக்குகளை அரசியல் ரீதியாகவோ, இராணுவரீதியாகவோ அடைய மிகுந்த தடையாக உள்ளது. ஒன்று மட்டும் தான் அவர்களால் செய்யமுடிகிறது. அது மக்கள் மத்தியில் தற்கொடையாளிகளை அவதூறாக பிரச்சாரம் செய்தல் என்ற உக்தியை கையாளுகிறார்கள்.இதனையே சிறிலங்கா அரசும் செய்கிறது.

newsposter-suicide-bomber.jpg

10 மில்லியன் ருபாய்களா?

அனைவரும் கரும்புலி என்று சொல்லி சரணடைய வேண்டியதுதான். :wub::(

சரனடைபவர்கள் உத்தியோகபூர்வமக காணாமல்போவர்கள்....................:(

  • கருத்துக்கள உறவுகள்
:wub: ஜயோ ...ஜயோ...பத்து மில்லியனா???? மகிந்தா ..... இவள் முனியம்மா பாக்கிறதுக்கு கறுப்பாத்தான் இருப்பாள் பிடிச்சு கொண்டு போய் குடுத்திட்டு பத்து மில்லியனோடை பறக்கப்போறன். :(:(

சாத்து நீர் ஒரு மக்குப்பிள்ளை.. பிடிச்சுக்கொண்டுபோய் குடுத்தா

காசில்லை.. சரணடைஞ்சால்தான் காசு... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலைதாரி மனதை மாற்றினால் 1 கோடி ரொக்கப் பணம்: கொழும்பில் சுவரொட்டிகள்

தற்கொலை குண்டுதாரி தனது மனத்தை மாற்றிக்கொண்டால் அவருக்கு ஒரு கோடி ரூபா ரொக்கம் பணம் தரப்படும் என கொழும்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கொழும்பில் தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதியில் இச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சுவரொட்டியில் தற்கொலைதாரி ஒருவரின் துண்டிக்கப்பட்ட தலை போடப்பட்டு அதன் அருகே ''' நீங்களும் வாழப் பிறந்வர் தானே? ஏன் குண்டுதாரியாக மடிய வேண்டும்?'' என எழுதப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியில் சேர எண்ணம் கொண்டவர்கள் தங்களது மனதை மாற்றிக்கொள்ள வேண்டும். இவ்வாறு மனதை மாற்றுபவர்கள் உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ நல்ல ஒரு வாழ்வைத் தொடர 1 கோடி ரூபாக்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறு மனதை மாற்றியவர்கள் 118 என்ற தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளுமாறும் வேண்டப்பட்டுள்ளது.

ஒட்டப்பட்ட சுவரொட்டி குறித்து, தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும் இது அரசாங்கத்தினால் ஒட்டப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் மேலும் தொவித்துள்ளனர்.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

எல்லோருமே பதறுகிறார்கள். அதைப்பார்த்த எனக்கும் பதட்டம். 10 மில்லியன் கிடைக்காதா என்றுதான். அது இலங்கை ரூபாக்கள் என்றதும், பிரித்துப்பார்த்த போது பதட்டம் ஒருமாதிரி குறைந்து போனது. :rolleyes:

உயிர் விலைமதிக்க முடியாத ஒன்று. உயிரையே துச்சமென நினைத்து விடுதலைக்காக போராடுகறவர்கள் தான் புலிகள். அதிலும் கரும்புலிகள் மனவலிமை அதிகம் படைத்தவர்கள். பணமென்றால் வாயை பிளக்கிறதற்க்கு அவர்கள் என்ன மகிந்த, டக்லஸ் ,கருணா போன்றவர்களா :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.