Jump to content

தமிழர் புத்தாண்டு தையா? சித்திரையா?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்டைக்்குறிக்க திருவள்ளுவர் தெரிவுசெய்யப்பட்டது ஏன் - ஒலிப்பதிவு

நன்றி - புலிகளின்குரல்

http://www.imeem.com/people/yc3SeEz/music/..._eelamenthimp3/

Link to comment
Share on other sites

  • Replies 123
  • Created
  • Last Reply

பார்ப்பனர்களின் வயிற்றெரிச்சலே நமது வெற்றி !

-கவிஞர் கலி.பூங்குன்றன்

தமிழர் திருவிழாவான பொங்கல் குறித்து தந்தை பெரியார் இவ்வாறு கூறுகிறார்:

``இதன் சரியான பொருள் அறுவடைத் திருவிழாவாகும் இது முழக்க முழுக்க தமிழர்களுக்கே உரிய - பார்ப்பனர் அல்லாதார் பண்டிகையாகும். எப்படியெனில் பார்ப்பான் கலப்பையைத் தொட்டால் பாவம் என்பது அவனது தர்மம். நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம் எப்படியிருந்தாலும், யார் எக்கேடு கெட்டாலும், தாங்கள் மனித சமூகத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல் வாழும் சுகஜீவிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மனித சமுதாயம் முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத, ஆராய்ச்சியைப் பற்றியே சிந்திக்காத முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்ய வேண்டும் என்பதே அவர்களுடைய பிறவி புத்தியானதால் அதற்கேற்ப உலக நடப்பைத் திருப்பிப் பாதுகாத்து வருகிறார்கள்.

பார்ப்பனர்களின் இம்மாதிரியான அட்டூழிய அக்கிரம காரியங்களில் இருந்து விடுபட்டு, மனிதர்களாக நாம் வாழ வேண்டுமானால், பொங்கல் பண்டிகை என்பதை முதல் நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உணவு, அருந்துவதையும், மனைவி மக்கள் முதியவர்களுடன் இன்பமாகக் காலம் கழிப்பதையும் கொண்டு நம்மால் கூடிய அளவு மற்றவர் களுக்கு உதவி, அவர்களுடன் குலாவுவதான காரியங் களையும் செய்வதன் மூலம் விழாக் கொண்டாடுவது அவசியமாகும்3 (14.1.1972) என்று தந்தை பெரியார் அவர்கள் செறிவாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

கலப்பைப் பிடிப்பது பற்றிய பார்ப்பனர்கள் எண்ணத்தை தந்தை பெரியார் படம் படித்திருப்பது விளையாட்டானது அல்ல. அவர்கள் மனுதர்மம் அவ்வாறு தான் கூறுகிறது.

``பயரிடுதலை மேலான தொழிலென்று சிலர் கருது கின்றனர். ஆயினும் பெரியோர் இதனைப் பாராட்டவில்லை. ஏனெனில் இரும்புக் கொழு நுதியுடைய கலப்பை, மண் வெட்டி இவற்றைக் கொண்டு பூமியையும், பூமியில் வாழும் உயிர்களையும் வெட்ட நேரிடுகிறதன்றோ? (மனுதர்மம் அத்தியாயம் 10 சுலோகம் 84).

பார்ப்பனர்களின் இந்த மனுதர்மத்தனத்தைதான் தந்தை பெரியார் எடுத்துக் காட்டுகின்றார்.

1921-ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் இரு பார்ப்பனர்கள் உழவுத் தொழிலை மேற்கொண்டார்கள். பார்ப்பனர்கள் அவர்களை விலக்கி வைத்தார்கள்.

அந்தச் சமயம் கும்பகோணம் சங்கராச்சாரியார் அந்தப் பகுதிக்கு வந்தார். அந்த இரு பார்ப்பனர்களும் சங்கராச்சாரியாருக்குக் காணிக்கை செலுத்த முன் வந்தார்கள். ஆனால் சங்கராச்சாரியாரோ அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. பிழைப்புக்காக உடலால் உழைப்பது என்ற பாவத்தைச் செய்த பிராமணர் களிடமிருந்து தர்ம காணிக்கை எதையும் பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டார்.

அந்த இரு பார்ப்பனர்களும் காந்தியாருக்குக் கடிதம் எழுதி விளக்கம் கேட்டார்கள்.

``கொடுமையான ஒரு சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப் பெறுவதே ஒரு சிறப்புதான். அதை வரவேற்க வேண்டும் என்று காந்தியார் பதில் கொடுத்தார். (``தமிழ்நாட்டில் காந்தி பக்கம் 378).

உடலுழைப்பை வெறுக்கக்கூடிய இந்தச் சோம்பேறிப் பார்ப்பனர்கள் அந்தச் சோம்பேறித்தனத்துக்கு ஒரு சாஸ்திர அந்தஸ்தையும் ஏற்பாடு செய்து கொண்டு விட்டார்கள். - அதுதான் அவாளுக்கே உரிய மிகப் பெரிய சாமர்த்தியம்.

உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் இந்தப் பொங்கல் விழாவுக்கும் மதச் சாயம் பூசி சங்கராந்தி என்று அடிப் படையையே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டனர்.

``சூரியன் தனு ராசியில் சஞ்சரிக்குங் காலம், இது தேவர்களுக்கு விடியற்காலம். மகாசங்கிராமேசக்தி எனும் சத்தி தஷீணாயன ஆறு மாதத்தில் மனிதனை மூதேவி உருவாயும், பசுக்களைப் புலி உருவாயும் வருத்தி வந்த படியினால், அத்துன்பம் ஈஸ்வரானுக்கிரகத்தால் நீங்கின தால், தை மாதம் முதல் தேதி ஜனங்கள் அக்காலத்து விளைந்த புதுப்பொருள்களால் சூரியனை ஆராதித்தனர். அச்சக்தி பசுக்களைப் புலியுருவாய் அதஞ்செய்திருந்த படியால், அப்பசுக்களைக் கொண்டு, அப்புலியுரு கொண்ட சக்தியை ஒட்டின நாள், இதனை மாட்டுப் பொங்கல் என்பர்.

இவ்வாறு அன்றி, இந்திரன் மழை வருஷிப்பவன் ஆதலால், அவன் செய்த நன்மைபொருட்டு தை மாதம் முதலில் அறுத்த,. முதற் பயிரை மழைக் கடவுளாகிய இந்திர னுக்கு ஆராதித்து வந்தனர் எனவும், அது கிருஷ்ணமூர்த்தி அவதரித்தபின், அவர் அதை நாராயணனுக்குப் படைக்கக் கட்டளை இட்டனர் எனவும், அதனால் இந்திரன் கோபித்துக் பெருமழை பெய்விக்க, குடிகள் நிலைகுலைந்து மாடுகள், கன்றுகளை இழந்து தடுமாற, கண்ணன் கோவர்த்தனம் எடுத்துக் குடி மக்களைக் காத்தனர் எனவும், அதனால் இந்திரன் வெட்கி வேண்ட, சங்கிராந்திக்கு முன்னால் அவன் பெயரால் பண்டிகை செய்வித்தனர். அது போகிப் பண்டிகை எனவும், மறுநாள் சங்கிராந்திப் பண் டிகை எனவும், மறுநாள் மழையால் வருந்திய மாடு கன்று களைத் தலை அவிழ்த்துவிட்டுக் களித்தமையால் மாட்டுப் பொங்கல் எனவும், மறுநாள் மழையால் உண்டாகிய சுகாசு கங்களை ஒருவரையொருவர் விசாரித்ததால் காண்பொங்கல் எனவும் கூறுவர். இதுதான் அவர்கள் கற்பித்த சங்கராந் தியின் மகாத்மியம்!

மழை பொழிவது எப்படி என்கிற அடிப்படை அறிவு கூடப் பார்ப்பனர்களுக்கு இல்லை என்பது இதன்மூலம் வெளிப்படை.

இந்திரன் மழையைப் பெய்விக்கின்றானாம் - அதை மலையைக் குடையாக்கித் தடுக்கின்றனாம். கிருஷ்ணன் - ஆரியர்கள் எத்தகைய காட்டு விலங்காண்டிகள் என்பதற்கு இந்த மூடத்தனங்கள் போதாதா?

ஹிந்து மதத்தில் கை வைப்பதுதான் கலைஞரின் வேலை என்று நையாண்டி செய்கிறாரே திருவாளர் சோ - இந்த இந்துமதக் குப்பைகளை வாரி மலையாகச் சூட்டிக் கொள்ள வேண்டுமா?

`சோவோ பார்ப்பனர்களோ கூறுகிறபடி தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்று முடிவு செய்தது கலைஞரோ திராவிடர் கட்சிகளோ அல்ல.

இவற்றிற்கு அப்பாற்பட்ட நிலையில் இருந்த தமிழறிஞர் கள்தான் இந்த முடிவைக் கூறியவர்கள்.

1921 சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆய்வு செய்த தமிழிஞர்கள் மூன்று முக்கிய முடிவுகளை அறிவித்தனர்.

தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றத்தக்கது. திருவள்ளுவர் காலம் கி.மு. 31.

முடிவு செய்த அறிஞர்கள் பெருமக்களுள் முக்கியமானவர். தமிழ்க்கடல் மறைமலை அடிகளார், தமிழ்த் தென்றல் திருவிக, எம்.எல். பிள்ளை என்று பெருமையுடன் போற்றப்படும் கா. சுப்பிரமணியபிள்ளை, சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.

டாக்டர் மு. வரதரானார் அவர்களும் முக்காலத்தில் `தை பிறப்பே ஆண்டு பிறப்பாக இருந்தது என்பதை உறுதிப்படக் கூறினார்.

(1988-ஆம் ஆண்டு கோலாம்பூர் பொங்கல் சிறப்பு மலர்)

இவர்கள்மீது எந்த சாயத்தைப் பூச முடியும்? அறிவார்ந்த பதிலை எதிர்பார்க்கிறோம்.

திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை தைதான் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறியே வந்திருக்கிறது.

சென்னை கலைவாணர் அரங்கில் புரட்சிக் கவிஞர் நூற்றாண்டு விழாவை திராவிடர் கழகப் பகுத்தறிவாளர் கழகம் நடத்தியது (29.4.1990).

அவ்விழாவில் முதல் அமைச்சர் மாண்புமிகு கலைஞர் அவர்கள் பங்கு கொண்டார்கள். அவ்விழாவில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி. வீரமணி அவர்கள் முதல் அமைச்சரிடம் ஓர் வேண்டுகோளை வைத்தார்.

தமிழ்ப் புத்தாண்டு என்று சித்திரை முதல் நடைமுறையில் இருக்கும் ஆண்டு அமைப்பு மாற்றப்பட்டு, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றம் செய்யப்பட்டு, திருவள்ளுவர் ஆண்டுக் கணக்கை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை பிறப்பிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முன் வைத்தார்.

அதற்குப் பதில் அளித்த முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் `தளபதி வீரமணியின் சிந்தனையையும் சிந்தையில் தேக்கி, மற்றவர்களையும் கலந்து பேசி அறிவிக்கப்படும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள்.

(`விடுதலை 30.4. 1990)

18 ஆண்டு காலத்திற்குப்பின் 2008 தையில் இப்பொழுது வழி பிறந்திருக்கிறது. தமிழ்நாடு முதல் கலைஞர் அவர்கள் அந்த வகையில் புதிய சகாபதத்தின் புகழ் மிக்க மலராக வரலாற்றில் என்றென்றும் மணக்கப் போகிறார் என்பதில் அய்யமில்லை.

பார்ப்பனர்களைப் பொறுத்தவரை தமிழ் - தமிழின மறுமலர்ச்சிக்கு என்றென்றும் முட்டுக் கட்டை போடும் முரடர்கள் என்பது வரலாற்று உண்மைதானே!

`கல்கி இதழ் (27.1.2008) கேள்வி ஒன்றுக்குப் பதில் தருகிறது. கேள்வி. தமிழர்களின் புத்தாண்டு தை முதல் தேதி என விரைவில் அறிவிப்பதாகச் சொல்கிறாரே முதலமைச்சர்?

`கல்கியின் பதில்:

எல்லாம் கிடக்க கிழவியைச் மணையில் அமர்த்திய கதைதான்.

`தினமணி தினமலர்களும் இதே திசையில்தான் தமது எதிர்ப்புகளைத் திணிக்கின்றன.

`துக்ளக்கைப்பற்றி கேட்க வேண்டாம். தன் பங்குக்குத் தன் ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்துள்ளது.

கேள்வி: தை மாதத்தை புத்தாண்டின் முதல் மாதமாக அறிவித்திருக்கிறாரே முதல்வர் கலைஞர்! இதனால் ஏற்படக் கூடிய மாற்றங்கள் என்ன? துக்ளக்கின் பதில்:

அவருக்கு ஒரு திருப்தி. மற்றபடி எந்த மாற்றமும் இருக்காது. வழக்கம்போல, ஏப்ரல் மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும் கலைஞர் அறிவிக்கிற புதிய புத்தாண்டு தினத்தன்று, அவர் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கலாம். அவ்வளவுதான் வேண்டுமானால் கிடைத்தது சாக்கு என்று மற்றொரு சங்கமம் நிகழ்ச்சி நடத்தலாம் (`துக்ளக் 30.1.2008)

எவ்வளவு வயிற்றெரிச்சல்! பார்ப்பனர்களைத் தமிழர்கள் என்று பசப்பும் பார்ப்பன அல்லாத `ஜென்மங்கள் இந்த இடத்திலாவது புத்தி கொள்முதல் பெற வேண்டாமா? இடுக்கோடுஇருக்க சென்னை சங்கமத்துக்கும் ஓர் இடி! அவாள்களின் `சபாக்கள் சீசனை முடக்குகின்ற முயற்சியாக சென்னை சங்கமத்தை அவர்கள் வட்டாரம் பொறுமுவதை அடையாளம் காண வேண்டும். தமிழ் - தமிழுணர்வு - முற்போக்குச் சிந்தனைகளின் கூர்மையாக மேலும் சங்கமம் நடைபோடுமானால், மாபெரும் பலனைத் தமிழர்கள் அடைவார்கள் என்பதும் இந்த இடத்தில் சுட்டிக் காட்டபட வேண்டியதாகும். சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்வார்களாக! நமது வெற்றி என்பது பார்ப்பனர்களின் வயிற்றெரிச்சலின் டிகிரியைக் கொண்டு கணக்கிடப்பட வேண்டும்.

தமிழக அரசின் அறிவிப்பால் எந்த மாற்றமும் இருக்காதாம் வழக்கம்போல சித்திரை மாதம் தான் ஏப்ரலில் புத்தாண்டாகக் கொண்டாடப்படுமாம் - எழுதுகிறார் திருவாளர் சோ.

தந்தை பெரியார் அவர்களின் எழுத்துச் சீர்திருத்தத்தை அமல்படுத்திட தமிழக அரசு ஆணை பிறப்பித்தபோதுகூட இப்படித்தான் புலம்பினார் - வலுக் கட்டாயமாக பழைய எழுத்து முறைகளையே கையாண்டார் - கடைசி வரை அவரால் அதனைக் கடைபிடிக்க முடிந்ததா? இப்பொழுது தந்தை பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை அவரே கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டதே ! இதற்கு என்ன பதில்? தைத் திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு ஆணை வந்தபின் தமிழர்கள் அனைவருமே மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டபின் இரண்டரை சதவீதப் பார்ப்பனர்களால் தடுத்துவிட முடியுமா? தினமலர் வாரமலர் எழுதிய ஒரு பதில் இதோ: கேள்வி: தமிழ்மொழியை செம்மொழியாக்கச் சட்டம் கொண்டு வந்தால் என்னென்ன பயன்...

தினமலரின் பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும். ஒரு வேளை கஞ்சிக்கே இல்லாதவருக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும்; தமிழ் மக்கள் அனைவரும் மெட்ரிக்குலேசன் பள்ளிகளை மறந்து தம்பிள்ளைகளை தமிழ்ப் பள்ளிகளில் சேர்ப்பர். சக தமிழர்களுடன் தமிழிலேயே பேசுவர். இவ்வளவும் நடக்கப் போகிறது பாருங்கள்!

(தினமலர் - வாரமலர் 13.6.2004)

பாரதீய ஜனதா கட்சி ஆட்சியில் ஓர் ஆண்டையே சமஸ்கிருத ஆண்டாக அறிவித்து கோடிக்கணக்கான ரூபாய்களைக் கெட்டி அழுதார்களே, அப்பொழுதெல்லாம் இவர்கள் கூறும் இத்தியாதி இத்தியாதி சங்கதிகள் எல்லாம் நடந்தனவா என்று கேள்வி கேட்கும் உணர்ச்சி தமிழர்களிடம் இல்லாமல் போயிற்றே! அந்தத் திமிரில் தமிழ் நாட்டில் இருந்து கொண்டு, தமிழால் வயிறு வளர்க்கும் பார்ப்பனர்கள் இப்படி எழுதுகிறார்கள் இதைவிட தமிழர்களை வேறு எந்த வகையில் சீண்டத்தான் முடியும்?

இந்த வார `துக்ளக்கில் ஆத்திரத்தின் உச்சியில் நின்று குரங்காட்டம் போட்டுள்ளார் திருவாளர் சோ. அட்டைப் படமே இந்தப் பிரச்சினைக்காத்தான்.

சித்திரை - பெரியார்

வைகாசி - அண்ணா

ஆனி - கலைஞர்

ஆடி - மாறன்

ஆவணி - ஸ்டாலின்

புரட்டாசி - அழகிரி

அய்ப்பசி - கனிமொழி

கார்த்திகை -

மார்கழி -

தை

மாசி -

பங்குனி -

முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் இவ்வாறு எழுதுவதாக ஒரு கற்பனையில் மூழ்கி, குரங்கு தன் புண்ணைக் கிளரிக் கொள்வதைப்போல சேட்டை செய்ய ஆசைப்பட்டுள்ளார்.

உள்ளே தலையங்கமும் இதே பிரச்சினைக்காகத்தான். ஆக தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற முதல்வர் கலைஞரின் அதிகாரப் பூர்வ அறிவிப்பு அக்கிரகார வாசிகளை தூங்க விடவில்லை; மன உளைச்சல் சகதியில் புரண்டு புரண்டு படுக்கின்றனர். போலிருக்கிறது.

``இந்த முதல்வருக்கும் அரசுக்கும் வேண்டியது என்ன? ஹிந்து மத நம்பிக்கைகளுடன் ஒன்றிய விஷயங்களை எள்ளி நகையாட வேண்டும். ஹிந்து மத நம்பிக்கையுடன் ஒன்றிவிட்ட பழக்க வழக்கங்களை மதிக்காமல் நடந்து கொள்ள வேண்டும். இந்த ஒரு வகையான `ஸ்டிசம் தவிர இந்தப் புதுவருட மாற்றத்திற்கு எந்தக் காரணமும் கிடையாது என்று ஒரு முடிவுக்கு வந்து எழுதித் தள்ளி விட்டார்.

ஒரு உண்மையை அவர் அறியாமல் இந்த இடத்தில் ஒப்புக் கொண்டு விட்டார்.

ஏற்கெனவே இருந்து வந்த தமிழ் வருடம் சமாச்சாரமானது. ஹிந்து மத சம்பந்தப்பட்டதாகும் என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்.

பழைய ஏற்பாடு ஒழிக்கப்பட்டே தீர வேண்டும் என்பதற்கு இந்த ஒரே ஒரு காரணம் போதாதா?

ஹிந்து என்று ஒப்புக் கொண்டால் நாங்கள் சூத்திரங்கள்தானே பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள்தானே! அதனை ஏற்றுத் தான் தீர வேண்டும் என்று இந்த 2008-லும் பார்ப்பனர்கள் திமிருடன் எழுதுவார்களேயானால் அந்தத் திமிரை அடக்குவதைத்தவிர வேறு வழியில்லை. சூத்திரர்களாகிய நீங்கள் அனைவரும் வைப்பாட்டி மக்களாகத்தான் இருந்து தீர வேண்டும்; அதிலிருந்து வெளியேறக் கூடவே கூடாது என்பது `சேடிஸம் அல்லவாம். இந்த இழிவிலிருந்து வெளியேறியே தீருவது என்று தன்மான முடிசறைவதுதான் (ஸடிசமாம்!) பார்ப்பனர்களின் மானவுணர்வுக்கு இலக்கணம் எப்படி இருக்கிறது?

உடம்பு முழுவதும் நெய்யைத் தடவிக் கொண்டு எந்த ஆணுடனும் புணர்ந்து பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்பதைத் தர்மமாகக் கொண்ட கூட்டம் அல்லவா - அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்று பாரதம் படிக்கும் பைத்தியக்காரர்கள் தமிழர்களின் உணர்வோடு பண்பாட்டோடு உரசிடப் பார்க்கிறார்கள். இது என்ன ராமன் காலமா சம்புகனை வதம் செய்ய? இது என்ன துரோணாச்சாரியார்களின் காலமா - ஏகலைவன் கட்டை விரல்களைச் சாவு வாங்க?

இது பெரியார் சகாப்தம் என்பதை மறந்து விட்டுத் துள்ளுகிறார்கள் - எதற்கும் ஓர் அளவு வேண்டும் என்று எச்சரிக்கிறோம்.

ஹிந்துமத சம்பந்தப்பட்டது - மத நம்பிக்கைகளுடன் ஒன்றியது என்றெல்லாம் சுற்றி வளைக்கிறாரே - அந்த இந்து மத சம்பந்தப்பட்ட சமாச்சாரத்தை எடுத்துவிட வேண்டியதுதானே!

சித்திரை முதல் தொடங்கு தமிழ் வருடம் இருக்கிறதே - பிரபவ தொடங்கி அட்சய என்பதில் முடிகிறதே - இந்த அறுபது வருடங்களும் என்ன தெரியுமா? சாதாரணமாக நினைத்த விடாதீர்கள். அது தெய்வாம்சம் பொருந்தியது - அர்த்தமுள்ள ஹிந்துமதக் கடவுளர்களின் காம விஹாரச் சமாச்சாரம்! புல்லர்களே அதை அல்பம் என்று எண்ணி விடாதீர்கள்! கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் நாரதன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்த 60 பிள்ளைகள்தான் அந்த அறுபது வருடங்கள் -இதற்குமேல் என்ன வேண்டும்? `கப்-சிப் என்று எழுதிய `சோ அய்யர்வாளுக்கு என்ன தயக்கம்?

அர்த்தமுள்ள எங்கள் ஹிந்து மதத்தில் இப்படிப்பட்ட சமாச்சாரங்கள் எல்லாம் இருக்கின்றன என்று வெளியில் சொல்ல வெட்கமா?

ஹிந்து மத சம்பந்தப்பட்டவற்றில் தலையிடலாமா என்று கொக்கரிக்கும் இந்தக் குல்லூர்க்ஷகப்பட்டர் கூட்டம் - இந்தக் கேவலச் சமாச்சாரங்களை தங்களுக்கு மட்டுமே உண்மையான முழு குத்தகையான பிதிரார்ஜித சொத்து என்று அறிவித்துக் கொள்ளட்டும் - நமக்கு ஒன்றும் அட்டியில்லை! அதனைத் தமிழர்கள்மீது திணிக்க இவர்கள் யார் என்பதுதான் தன்மான தமிழர்களின் கேள்வி - தந்தை பெரியார் சகாப்தத்தின் கேள்வி - எச்சரிக்கை!

http://viduthalai.com/20080202/snews01.html

Link to comment
Share on other sites

பழைய பஞ்சாங்கத்தில்..கருணாநிதி

Karunanidhi

"ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த பிள்ளையின்

பேரை வைத்துத்தான் ஆண்டுக் கணக்கு வைப்போம்-

அறுவடைத் திருநாளாம் பொங்கல் நாளை

ஆண்டின் தொடக்க நாள் என்று ஆன்றோர் சான்றோர்

அறுதியிட்டுக் கூறிய பின்னும் அதனையேற்று

வள்ளுவர் ஆண்டினை வண்டமிழர் ஆண்டென்று கூறவே,

எள்ளத்தனை இன உணர்வும் கொள்ள மாட்டோம்''-

பள்ளந்தனில் விழுகின்ற பொட்டுப் பூச்சியாய்;

பழைய பஞ்சாங்கத்தில் பதுங்குவதோ பகுத்தறிவு

தமிழ் ஆண்டுத் தொடக்கம் தைத் திங்கள் முதல் நாள் என்பதை

இமிழ் கடல் வேலித் தமிழகப் பேரறிஞர் மறைமலையடிகள் தலைமையில்

அமிழ்தெனும் கருத்தாய் ஆய்ந்தறிந்து கண்டார்-

அறம் பொருள் இன்பம் எனும் அருங்குறள் யாத்த அய்யன்

அரும் பெரும் பெயரால் திருவள்ளுவர் ஆண்டென அரசுச் சார்பில் அன்று;

அறிஞர் மன்றில்-ஆன்றோர் அவையில்-தை முதல் நாள் தமிழ் ஆண்டு

முதல் நாள் என்றோம்

ஆலோசனை சொல்லித் தமிழரை மேலும் வளர்ப்பதற்கு அக்கறையற்றோர்

பூலோகம் இருண்டதெனப் பூனை போல் இரு கண்களை மூடிக்கொண்டு;

"ஆலோலம்'' பாடுகின்றார் அரும்பிவிட்ட தமிழ் உணர்வை விரட்டுதற்கு!

ஆரியத்தைத் தூக்கி நிறுத்துவதே சிலர் குறிக்கோள் என்றால்

அவர்தம் செய்கைக்கு நாம் குறுக்கே நிற்க விரும்பவில்லை-

ஆனாலும் எம் குறிக்கோளாம் குறள்வழித் தமிழ் ஆண்டின் சிறப்பைக்

குலைப்பதற்கு எந்தக் கூட்டத்தின் புலம்பலுக்கும் இடம் தருவது

இல்லை என்போம்!

-கருணாநிதி

http://thatstamil.oneindia.in/art-culture/...l-new-year.html

Link to comment
Share on other sites

தமிழர்களிடம் ஏற்கனவே இருந்த கலண்டரை பல்லவர்கள் தமது செல்வாக்குக்கு உடபட்ட எனைய பகுதிகளுக்கு அறிமுகம் செய்தார்கள். அதை தான் அம்பலம் என்பவர் சொல்கிறார்.

பல்லவர் காலத்தில் இருந்த கலண்டர் தான் சோழர் காலத்திலும் அதற்கு முந்திய பாண்டியர் ஆட்சியிலும் இருந்ததா?

காலக்கணிகைகளின் பொதுவான வரலாற்றைப் பார்த்தால் ஒவ்வொரு கால கட்டததிலும் அந்தக் காலத்தில் இருக்கும் அரசியற் செல்வாக்கின் படியே காலக்கணிகைகள் உருவாகின.

முற்கால பாண்டியர்கள் கிமு 3 ஆம் நூறாண்டு தொடக்கம் கிபி 2 ஆம் நூற்றாண்டு

முற்கால சோழர் கிபி 2 ஆம் நூற்றாண்டு வரை

பல்லவர் காலம் கிபி 4 ஆம் நூற்றான்டு முதல் 10 ஆம் நூற்றாண்டு வரை

பிற்கால சோழர் 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி 13 ஆம் நூற்றாண்டு வரை

பிற்கால பாண்டியர் காலம் 12 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 14 ஆம் நூற்றாண்டு வரை.

இதில் பார்த்தால் கிட்ட தட்ட 6 நூற்றாண்டுகள் பல்லவர்கள் தொடர்ச்சியாக ஆண்டிருக்கிறார்கள். அவர்களின் செல்வாக்கால் எழுந்த கலண்டர் முறை நீடித்திருக்கலாம். அது மாறாமல் இருந்தது என சொல்ல எந்த ஆதாரமும் இல்லையோ அதே போன்று அது மாற்றம் பெற்றதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.

Link to comment
Share on other sites

A response to pseudo Hindus who oppose Thai first as Thamil New Year

By: V.Thangavelu, President Thamil Creative Writers Association

Opposition has been voiced by a small bunch of individuals who are Hindus against the change in the birth of Thamil New Year. They claim the change is against tradition and borders on blasphemy. Such people are superficial and naïve in many ways.

The opposition can be seen as an ad hominem argument – you cannot fault an argument, so you fault the person advancing it. In this instance Chief Minister M.Karunanidhi! He is reviled by Hindu bigots like Thuglak Chow, Ramagopalan, Ela Ganesan (BJP) Ms Jayalalithaa (ADMK MLAs voted for the bill) and few others as anti-Hindu. Strangely, the editor of the TamilNet website in his myopic arrogance and ignorance also joined the anti-nationalist forces to whip up frenzy against the change. Thus making a mockery of the decision of the de facto state of Thamil Eelam that endorsed Thai first as Thamil New Year!

The Thamil Nadu government gave legal status to the observation of Thai first (January 14th) as the beginning of Thamil New Year which will be called Thiruvalluvar Aandu. In an unprecedented act of solidarity, the bill was unanimously passed by the TN State legislature.

The accusation the TN government has arbitrarily and suddenly made the change in regard to the New Year is not supported by facts. Only half-baked illiterates do so. Thamils need a continuous year count like the Christians or Muslims. They need to discard foreign culture and beliefs imposed on them under the guise of religion. Way back in 1921 Thamil scholars like Maraimalai Adikal, Naavalar Somasundera Bharathiyaar, Prof. Parithimaakalaignar (Prof. Sooriya Narayana Shastri) K.Subramaniyapillai, Thiru V.Kalyanasundera Mudaliyar, Saivait scholar Sachchithanadapillai, Naavalar Na.Mu. Venkadasamy, K.R.P.Visvanatham and scores of others met at Pachchayappan College and resolved to make Thai first Thamil New year instead of Chiththirai. In order to have a continuous year count the birth day of Thiruvalluvar was taken as falling on Thai (Suravam) first. This was given effect by the TN government in 1971 in official calendars, from 1972 in gazettes and from 1981 in all departments. Later it was extended to non-governmental departments as well.

In the Indian civil calendar, the initial epoch is the Saka Era, a traditional era of Indian chronology that is said to have begun with King Salivahana's accession to the throne and is also the reference for most astronomical works in Sanskrit literature written after 500 AD. In the Saka calendar, the year 2002 AD is 1925.

The other popular epoch is the Vikram era that is believed to have begun with the coronation of King Vikramaditya. The year 2002 AD corresponds to 2060 in this system. The Calendar Reform Committee set up India’s present day national calendar in 1957. It is a lunisolar calendar, which has leap years coinciding with the leap years of the Gregorian calendar. The months in the calendar have been named after the conventional Indian months. This calendar came into effect with the Saka Era in Chaitra 1, 1879 (March 22, 1957).

Although we don’t have direct evidence of Thiruvalluvarr’s birth day, this day has been chosen with reference to available (indirect data) from Sangam and post-Sangam Thamil literature.

The opposition to the change in the Thamil New Year from Chiththirai to Thai mostly emanates due to a lack of proper understanding of astronomy. Added is the natural tendency to resist change.

The Earth has three types of motions: motion around its axis, motion around the Sun, and motion of its axis due to wobbling of Earth. The Earth rotates around its axis in 24 hours, which causes day and night. In the Northern Hemisphere we see that all but one of the stars and planets rise in the east and set in the west. The one star that does not rise or set is the polar star (Dhruv Nadchchathiram or Polaris), which is located directly above the Earth's North Pole. The Earth is tilted 23.5 degrees on the plane of orbit around the Sun. This causes changes of seasons during the year. The seasonal changes have nothing to do with star or planets as widely believed by Astrologers and Almanac casters.

The second type of motion is the rotation of the Earth around the Sun in 365 days to complete one revolution in an elliptical orbit. Using modern instruments for exact observations of the universe, the Earth takes 365 days, 6 hours, 9 minutes and 9.50 seconds to complete one revolution with respect to the stars (sidereal year). With respect to the orbit, it takes 365 days, 5 hours, 48 minutes and 45.50 seconds to complete one revolution (tropical year). The difference in time is 20 minutes and 24.00 seconds as follows:

Solar year, 365 d. 5 h. 48 m. 45.50 s.

Sidereal year, 365 6 9 9.50

--------------------------------------------------------------------------------

Difference, 20 m. 24.00 s.

This difference is caused by the third type of motion of Earth, the wobbling of its axis, which astronomers call processional movement (precession of equinoxes) of the pole or axis of the Earth.

The ancient Thamils lived in close touch with nature. Astronomy and astrology very much influenced their lives. With regard to the year, the Thamils started it with the Vernal Equinox. Astronomers have determined the sun transiting Aries at 0 degree as the Vernal Equinox, that is the day when the sun rose exactly in the east, coincided. This was about the year 285AD. With the lapse of centuries, the New Year falls now, about three weeks after the Vernal Equinox. The Hindu solar year is sidereal, and since it is in excess of the tropical year by 20 minutes and 24.00 seconds, it does not keep step with the seasons. The seasons fall back one and half days for every hundred years or one day every 71.6 years.

It is not correct to say that Chiththirai has always been the beginning of Thamil New Year. Nachchinarkiniyar who wrote a commentary to Tholkaappiyam says Thamil New Year started in August (Aavani) and ended in July (Aadi). This demonstrates the fact that Aeries (Medam) is not the start of the reference point in the Zodiac during Tholkappiyar’s time.

The Thamils/Hindus divided the year into "Uttarayanam" the first six months after the winter solstice and "Dhadshanyam" the second six months after the summer solstice. The former was considered health-giving, bright period for man and animals for during that period the days became longer and longer. Thus "Uttarayanam" was celebrated by Thaipongal and Paddippongal (the cattle festival). Most of the temple festivals in the Thamil country were also fixed for this bright period. The beginning of the "Dhadshanayam" was marked by "Adipirapoo" (July 1- Hindu calendar). These six months were considered not a very bright period for men and animals because the days became shorter and shorter.

One of the major drawbacks in counting Chiththirai is that it is not a continuous year. Its cycle consists of 60 years. This cycle of years is useless to record historical events. And their (so are some of the months) names are not Thamil. They are in Sanskrit. The mythological story attached to the birth of the years is extremely vulgar and obscene. As usual with Hindu mythologies a perverted mind must have invented the story.

A close look at the six seasons given in Thamil literature reveals that they are out of sync with the actual seasons experienced at the equator.

Ilavenil Kaalam : mild sunny period : Chithirai, Vahasi - Thingal (mid April to mid June)

Muthuvenil Kaalam : intense sunny period : Aani, Aadi - Thingal (mid June to mid August)

Kaar Kaalam : cloudy rainy Period : Aavani, Purataasi - Thingal (mid August to mid October)

Kuthir Kaalam - cold period : Iyppassi, Kaarthihai - Thingal (mid October to mid December)

Munpani Kaalam - early misty period (evening dew): Maarkali, Thai – Thingal (mid December to mid February)

Pinpani Kaalam - late misty period (morning dew): Maasi, Panguni – Thingal (mid February to mid April)

Definitely Mid June to mid-August is not the rainy season in Northeast of Ceylon or Thamil Nadu. They are in fact hot and humid months. The rainy season is from October to November (Iyppasi to Kaarthikai) and not from mid August to mid October.

The coolest months are December - January (Maarkali - Thai). It is in January (Thai) the farmer harvest the first sheaves of a harvest. They are grinded and mixed with old rice and used for Pongal. The actual harvest season does not take place in January. It takes place in February and March. This is due to change in seasons due to precession.

January 14th too has astronomical significance, in that, the Sun (Earth) commences its Northerly transit. In fact there are four (not three) transits of significance by the Sun in its journey from south to north and north to south. They are -

Winter Equinox – March 20/21

Summer Solstice – June 21

Autumn Equinox – December 22

Spring Equinox – March 20/21

This is true only in regard to the Northern hemisphere. It will be the exact opposite of those living in the Southern hemisphere. When it is summer in the Northern hemisphere, it is winter in the Southern hemisphere. So in regard to spring and autumn.

As already mentioned, the arrivals of the seasons have been changing at the rate of 1 degree per 71.6 years. Westerners found spring coming earlier (March 10) than the Julian calendar showed viz March 21. To adjust the extra days Pope Gregory ordered the deletion of 10 days i.e. October 5th was followed up with October 15th. The Gregorian calendar still has a few seconds difference. But the calendar can hold good fairly accurately for the next 1000 years!

Due to the precession of the equinox, the Sun will be at the 1st degree of Libra at the spring equinox in 11,232 years! Those who think that almanacs and calendars are cast in iron should mark their calendars! The zodiac of the two systems (Tropical and Sidereal) will be exactly opposite one another! Ayanamsha will be 180 degrees 0 minutes!! It would be interesting to those who oppose Thamil New Year shifted to Thai first to incarnate at that time just to join in the debate!

In Vedic or Sidereal astrology the calculation of the Sun passing through the 1st degree of Aries is marked by the Sun actually passing through the observable fixed stars making up the constellation Aries and has nothing to do with the seasons. Because of the precession of equinoxes at a rate of 50.26 seconds per year, .difference between the tropical zodiac and sidereal zodiac increases every 10 years by 8 minutes 22 arc seconds.

The Thamil/Hindu calendar has gone awry and no correction was made for precession of equinoxes. This is the reason why the real seasons are not synchronizing with months mentioned above. Poet Subramanian Bharathiyar has pointed out this discrepancy in one of his essays.

Those who claim that Chiththirai New Year ushers in Spring (Venil) has to re-think. It really falls on March 21st! A good 24 days earlier. So are all the Hindu auspices festival and ceremonial days.

The "wobble" and the precession of the equinoxes were known to the Ancient Egyptians, although the first official "discovery" of it was made by an Ancient Greek astronomer, Hipparchus, who was born sometime around 190 B.C. It was noted because the Sun was in a slightly earlier position at the time of the Spring Equinox each year (as measured against the fixed stars). Because the movement slips backwards (Westwards) through the zodiac, it is called precession (as opposed to a forward-movement which would be called progression).

Now 1° every 71.6 years doesn't sound like too much, but it certainly adds up over 2,000 years or so, and this is where we get into the different Zodiac systems.

The determination of Thai first as Thamil New Year is now a fait accompali. One cannot unscramble a scrambled egg! History is heavily stacked against intellectually discreditable individuals for they live in the past!

The change of Thamil New Year has not altered or modified the Panchangam or Thamil Almanac as some foolishly think or argue. What has changed is the reference point (in a circle any point could be considered the reference point) in the Zodiac. Instead of Aeries 0 degree being considered the birth of Thamil New Year, the reference point has been shifted to Makaram 0 degree the birth of Thamil New Year!

There is reference in Thamil Sangam literature to the celebration of Thai Neeradal, but there is absolutely no reference to Chiththirai New Year in ancient literature!

The shifting of Thamil New Year from Chiththirai first to Thai first is a milestone in the history of Thamils.

Published: Apr 17, 2008 10:46:37 GMT

http://www.tamilcanadian.com/page.php?cat=189&id=5469

Link to comment
Share on other sites

மாறாமல் இருந்தது என்பதற்கான எந்த ஆதரமும் இல்லை என்று ஏற்றுக் கொன்டதற்க்கு நன்றிகள்.ஆனால் மாற்றங்கள் இருந்தது என்பதற்கான ஆதாரம். கீழுள்ள கட்டுரையில் உள்ளது.

//

It is not correct to say that Chiththirai has always been the beginning of Thamil New Year. Nachchinarkiniyar who wrote a commentary to Tholkaappiyam says Thamil New Year started in August (Aavani) and ended in July (Aadi). This demonstrates the fact that Aeries (Medam) is not the start of the reference point in the Zodiac during Tholkappiyar’s time.

//

//There is reference in Thamil Sangam literature to the celebration of Thai Neeradal, but there is absolutely no reference to Chiththirai New Year in ancient literature! //

:D

Link to comment
Share on other sites

"The April New Year may not be an important festival for the Tamils of Tamil Nadu. But, the date and the festival are of utmost importance to others.

In Sri Lanka it is one of the main symbols for maintaining the Tamil – Sinhala equlibrium."

:D K TR தோத்துப் போவார் போல கிடக்கு.

Link to comment
Share on other sites

"The April New Year may not be an important festival for the Tamils of Tamil Nadu. But, the date and the festival are of utmost importance to others.

In Sri Lanka it is one of the main symbols for maintaining the Tamil – Sinhala equlibrium."

:D K TR தோத்துப் போவார் போல கிடக்கு.

தமிழ் சிங்கள சம நிலை இல்லை என்று தான் போராட்டமே நடக்குது.இவர் இல்லாத கற்பனைகளை அள்ளி வீசி இருகிறார்.

தமிழர்களுக்கு தமிழர் என்னும் தேசிய அடையாளம் முக்கியமா, தமிழ் சிங்கள சம நிலை முக்கியமா?

அம்பலதாருக்கு அறளை பேர்ந்திட்டு, ஓய்வெடுபதே நன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5தரம் ஆட்சியில் இருந்தபோது மறந்திருந்த புத்தாண்டுச் சிந்தனை திடீரென்று கருணாநிதி ஐயாவிற்கு ஞாபகம் வந்திட்டுதாம்.

அவர் தமிழ்-சிங்கள சமநிலை என்றது சொன்னது பிழையாக இருக்கலாம். ஏனென்றால் தமிழரிடம் இருந்து பெற்றுக் கொண்ட சித்திரை வருடப்பிறப்பை அவர்கள் கொண்டாடுவதற்காக அதை விட்டுப் போகவேண்டுமா? என்பது தான் அவரது தொனியென நம்புகின்றேன். எதிரிக்குப் பயந்து எம் தமிழ் அடையாளங்களை இழக்கவேண்டுமா?

தமிழருக்குத் தமிழ் என்ற அடையாளம் முக்கியமா என்று கேட்டால் என்ன அர்த்தம்? அடுத்தவன் எம் காணிக்குள், எம் கலாச்சாரத்துக்குள் புகுந்தால் எம் கலாச்சாரத்தைக், காணியை விட்டு விட்டு ஓடுவதா தமிழரின் அடையாளம்??

Link to comment
Share on other sites

5தரம் ஆட்சியில் இருந்தபோது மறந்திருந்த புத்தாண்டுச் சிந்தனை திடீரென்று கருணாநிதி ஐயாவிற்கு ஞாபகம் வந்திட்டுதாம்.

அவர் தமிழ்-சிங்கள சமநிலை என்றது சொன்னது பிழையாக இருக்கலாம். ஏனென்றால் தமிழரிடம் இருந்து பெற்றுக் கொண்ட சித்திரை வருடப்பிறப்பை அவர்கள் கொண்டாடுவதற்காக அதை விட்டுப் போகவேண்டுமா? என்பது தான் அவரது தொனியென நம்புகின்றேன். எதிரிக்குப் பயந்து எம் தமிழ் அடையாளங்களை இழக்கவேண்டுமா?

தமிழருக்குத் தமிழ் என்ற அடையாளம் முக்கியமா என்று கேட்டால் என்ன அர்த்தம்? அடுத்தவன் எம் காணிக்குள், எம் கலாச்சாரத்துக்குள் புகுந்தால் எம் கலாச்சாரத்தைக், காணியை விட்டு விட்டு ஓடுவதா தமிழரின் அடையாளம்??

தூயவன்,

சங்ககால இலக்கியங்கள் எவற்றிலும் சித்திரைப் புத்தாண்டைப் பற்றி ஒரு குறிப்பும் இல்லை.ஆனால் தைநீனீராடல் பற்றி இருக்கிறது. நச்சினகினியாரின் தொல்காப்பிய உரையில் புத்தாண்டு ஆவணியில் வந்ததாகக் கூறப்படுகிறது.இதில் இருந்து தெரிவது என்ன சித்திரைப் புத்தாண்டு என்பது பின்னர் வந்த ஒன்று என்று.இப்போ தமிழர்களின் புத்தாண்டு என்பதை நாங்கள் நிர்ணயம் செய்வதாயின் எமது பண்டைய மரபுகளுக்கு அமைவாகத் தானே நிர்ணயம் செய்ய வேண்டும்? இங்கே அது தானே தமிழரின் அடையாளம் ஆக இருக்கமுடியும்?

அத்தோடு அது அர்த்தம் உள்ளதாகவும் ஆபாசாம் இல்லாததாகவும் இருக்கிறது, மதச் சார்பற்ற தமிழரின் அடையாளத்தை நிலை நிறுத்துவதாகவும் இருக்கிறது.ஆகவே இதை மாற்றுவதால் எங்கனம் எமது கலாச்சாரும் மாறுகிறது? எமது கலாச்சாராம் இன்றைய தேவைகளுக்கு ஏற்ப மீள் நிர்மாணம் செய்யப்படுகிறது.கலாச்சாராம் என்பது எப்போதும் நவீனத்தை உள் வாங்கி மாறிக் கொண்டிருப்பது.எந்தக் காலத்திலும் கலாச்சாரம் என்பது உறை நிலையில் இருப்பதில்லை.

மேலும் கலாச்சாரமும் அடையாளமும் தமிழ் மக்களின் இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.மக்களுக்கு எந்தப் பயனும் இல்லாத கலாச்சராத்தால் எதுவித பிரயோசனும் இல்லை.மதச் சார்பற்ற அற்ற தமிழரின் அடையாளம் என்பது தமிழத் தேசிய அரசியலின் முன் நிபந்தனையாக இருக்கிறது.அது தமிழ் நாடு என்றாலும் தமிழீழம் என்றாலும் ஒன்று தான்.ஆகவே ஒரு மதச் சார்பற்ற புள்ளியை நாங்கள் தமிழரின் பண்டைய மரபில் இருந்து எடுத்து மீளப் புதுப்பித்திருக்கிறோம்.அவ்வ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தைநீராடலுக்கும் தைப் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம்? எவ்வாறு இதற்கு முடிச்சுப் போடுகின்றீர்கள். சொல்லப் போனால் எந்த சந்தர்ப்பத்திலும் தைப்பொங்கல் பற்றிய எவ்வித குறிப்பும் சென்றநூற்றாண்டு வரை கிடைக்கவில்லை. அதற்காக அதைப் பண்டிகை இல்லை என்று சொல்லவரவில்லை. அது தமிழனுக்குரிய பண்டிகை ஆனால் சித்திரைப் புத்தாண்டை விட முக்கியத்துவத்தை அது பெற்றுவிடவில்லை.

தொல்காப்பியரின் ஆவணிப் புத்தாண்டு என்பது அதை வைத்துக் கணிக்கப்பட்டதல்ல. ஒவ்வொரு ஆயிரம் வருடங்களுக்கும் ஒரு தடவை ஒவ்வொரு மாத அதிகரிப்பு என்பது நிகழும். அதாவது லீப் வருடத்தால் ஒருநாள் கூடுவது போல அன்று ஆயிரம் ஆண்டுக்கு மாதம் கூடும்.( எனக்கு அது பற்றிய போதிய விளக்கம் குறைவு. ஆனால் அவ்வகையில் தான் கணிப்பீடு)

இதை வைத்தும் தொல்காப்பியர் கிமு 6000 ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்றும் சிலர் சொல்வதுண்டு.

வழமைபோல ஆபாசம் என்றால் என்ன? அதில் இருக்கின்ற பெயர்களையும், அற்பமான புராணங்களையும் பற்றிக் கதைக்கப் போகின்றீர்கள். புத்தாண்டு தினத்தையே மாற்றலாம் என்று அகங்காரத்தோடு செயற்படுகின்ற உங்களுக்கு, அதற்கான ஆண்டுப்பெயரைத் தமிழாக்கவோ, அல்லது புராணக்கதைகளை நீக்கவோ அதிகாரம் இல்லாமல் போய்விட்டதோ? இதில் முரணாக இல்லையா?

5தரம் ஆட்சி பற்றிய கருணாநிதியின் கருத்தில் என்ன தவறு உண்டு. அவர் புரிந்த 5 தர ஆட்சியிலும் தோன்றாத நடைமுறைப்படுத்தல் இப்போது ஏன் திடீரென்று வரவேண்டும்? என்னவென்றால் இது தான் அவரது கடைசி ஆட்சியாக இருக்கலாம். அதற்குள் தன்னுடைய பெயரை நிலைநிறுத்தத் தமிழனைப் பலிக்கடா ஆக்குகின்றார்.

எமது புத்தாண்டு என்பது 2009ம் ஆண்டில் இருந்து தான் கொண்டாடப்படுகின்றது என்று சொல்லிக் கொள்ள எமக்கு விருப்பமில்லை. எனவே இதை ஏற்றுக் கொள்வதாகவும் இல்லை.

நீங்கள் தனியச் சிந்தித்து, எவ்வித தர்க்கமும் இன்றி, நான் சொன்னால் நீங்கள் கேட்கத் தான் வேண்டும் என்று அகங்காரத் தோரணையில் எம் மீது திணிப்பதற்கு உரிமையில்லையே. நாங்களும் தமிழர்கள். எமக்கும் தீர்மானிக்கின்ற உரிமையுண்டு. குறைந்தபட்சம் வட இந்தியர்கள் கொண்டாடாத, தமிழன் மட்டுமே ஆண்ட பிரதேசங்களில் கொண்டாடப்படுகின்ற தமிழர் புத்தாண்டாம், சித்திரைப் புத்தாண்டைத் தொடர்ந்து கொண்டாடுவதில் எமக்குள்ள உரிமையைக் கருணாநிதியோ, அவரின் கும்பலோ தீர்மானிக்கமுடியாது.

Link to comment
Share on other sites

நீங்கள் தனியச் சிந்தித்து, எவ்வித தர்க்கமும் இன்றி, நான் சொன்னால் நீங்கள் கேட்கத் தான் வேண்டும் என்று அகங்காரத் தோரணையில் எம் மீது திணிப்பதற்கு உரிமையில்லையே. நாங்களும் தமிழர்கள். எமக்கும் தீர்மானிக்கின்ற உரிமையுண்டு. குறைந்தபட்சம் வட இந்தியர்கள் கொண்டாடாத, தமிழன் மட்டுமே ஆண்ட பிரதேசங்களில் கொண்டாடப்படுகின்ற தமிழர் புத்தாண்டாம், சித்திரைப் புத்தாண்டைத் தொடர்ந்து கொண்டாடுவதில் எமக்குள்ள உரிமையைக் கருணாநிதியோ, அவரின் கும்பலோ தீர்மானிக்கமுடியாது.

நீங்கள் தொடர்ந்து கொண்டாடுவதை தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை அதே போல் விரும்பியவன் மாற்றிக்கொண்டாடும் உரிமையை மறுதலிக்கும் உரிமையும் யாருக்கும் இல்லையே.

கருணாநிதி அறிவிப்பை செய்தபடியால் அவரை எதிர்க்கின்றீர்கள். ஆனால் இந்த கருத்துருவாக்கம் சைவத்தமிழ் அறிஞர்களிடம் இருந்தே ஆரம்பிக்கப்பட்டது என்பதையே சுட்டிக்காட்டியுள்ளனர். உங்கள் ஒருவிரல் கருணாநிதியை நோக்கி சுட்டினாலும் மிச்சவிரல்கள் உங்களை நோக்கி சுட்டுகின்றது நீங்கள் சைவராக இருந்தால்.

எல்லாம் அரசியல் விழையாட்டு என்று நுனிப்புல் மேய முடியாது. கருணாநிதி திருவள்ளுவர் சிலையை நிறுவியதும் ஜெயலலிதா கண்ணகி சிலையை அகற்றியதும் அரசியல் விழையாட்டுக்கள் என்ற முற்றுப்புள்ளிக்குள் அடங்கிவிட மாட்டாது. அதற்கப்பாலும் சில தொடுப்புக்கள் உண்டு.

இந்த வருடப்பிறப்பு விசயம் பலகோணங்களில் ஆராயப்படவேண்டியது. எமது பிரதேசத்துக்குரிய காலநிலை முக்கியமானது அதனூடான வாழ்க்கைமுறை முக்கியமானது. முன்னோர் எவ்வகையான ஒரு காலத்தை வருடப்பிறப்பாக முன்நிறுத்தியிருப்பார்கள் என்ற கோணத்தில் ஆராய வேண்டும்.

தமிழ்க்கலண்டரை காரணம் காட்டுவதோடு இது முடிவாகுமா? கலண்டரில் சுட்டப்படும் மத்திய ரேகைக்கு சூரியன் வரும் காலம். (மேச ராசியில்) தமிழ் வருடப்பிறப்பு. இது ஏன்? உதயம் மதியம் மாலை இதில் காலை தானே புதிய பிறப்பை சுட்டும் எவ்வாறு மதியம் சுட்டுகின்றது? அப்படியாயின் எமது பிரந்தியத்தில் சூரியன் நுழைவது தையில் தானே?

ஆடி உழவு தேடி உழ வேண்டும் என்பது பழமொழி. அடுத்தடுத்த மாதங்கள் பண்படுத்தலும் விதைத்தலும். பின்னர் மழைகாலம் கெற்போட்டம். இவ்வாறு தையில் விழைச்சல் அறுவடை என்று அந்த காலப்பகுதியில் உழவர் திருநாள் காரணங்களுடன் இருக்கின்றது.

இதே நேரம் சித்திரையில் அதக வெப்பம் இதன் காரணமாக குழந்தை பிறக்க கூடாது என்று ஆடியில் தம்பதியர் கூடுவதில்லை. இக்காலாம் கத்தரி வெயில் காண்டாவனம் என்று இருப்பதால் அவ்வாறு அந்த காலப்பகுதியை தவிர்த்தனர். சாஸ்திர ரீதியில் சித்திரையில் புத்திரன் பிறந்தால் தந்தைக்கு மாரகம் என்ற வழக்கம் உண்டு. இவ்வாறான ஒரு காலத்தை எவ்வாறு புத்தாண்டாக முன்னோர் அமைத்திருப்பார்கள்?

ஒரு நாளின் பிறப்பு காலை என்றால் ஒரு வருடத்தின் பிறப்பு ஏன் மதியத்தை சுட்டுவதாக உள்ளது?

ஒருவேளை காலையை விடியல் என்று மகிழ்ந்த தமிழனை உச்சியை விடியல் என்று உசுப்பேத்தி விட்டதால்தான் தமிழன் இன்னமும் கண்கெட்டு அலைகின்றானோ? அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு அதுபோல் அதிக வெப்பகாலம் மேலான கெடுதல்.

தைப்பிறப்புக்கு ஆழமான காரணத்தையும் பொருளையும் முன்வைத்த தமிழன் இதை எப்படி குழப்பகரமாக வைத்தான்? ஏன் மறைமலை அடிகள் உட்பட பல பழுத்த வைவப்பழங்கள் இந்த வருடப்பிறப்பை மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரின் வரலாற்றை தமிழின் வரலாற்றை நல்லா திரிக்கலாம். ஏனென்றால் அவைட வரலாறுக்கும் தமிழ் மொழியின் வரலாற்றுக்கும் இன்னும் சரியான சான்றுகள் இல்லை.

தமிழ்நெட் வெளியிட்ட கட்டுரை ஏற்படுத்திய கடுப்பில.. தமிழ் கனேடியனுக்கு ஆரோ ஒரு பேமாளித்தனமான கட்டுரையை எழுதி அனுப்பி இருக்கினம்.. என்பது கட்டுரையை வாசிக்கவே தெரியுது.

குறித்த கட்டுரைக்கு பாவித்த உசாத்துணைகள் கூட சொல்லப்படேல்ல. இதெல்லாம் ஒரு கட்டுரை..! :D

நான் நினைக்கவில்லை.. தமிழ்நெட் இதையெல்லாம் மதிக்கும் என்று. கொண்டுபோய் குப்பையில போடத்தான் இவை சரி.

உப்படி கனக்க தமிழில எழுதி வந்திட்டுது.. இப்ப தமிழ்நெட் வழங்கிய தாக்கத்தின் பயனாக அவை ஆங்கிலத்துக்கு உருமாறி இருக்கின்றன. எனவே இவற்றைப் பற்றி அதிகம் அலட்டிக்கத் தேவையில்லை. ஆதாரபூர்வமற்ற கட்டுரைகளை கொண்டு.. தமிழ்நெட் குறிப்பிட்ட வியங்களை நிராகரிக்க வாய்ப்பில்லை..!

தமிழ்நெட்டின் பணி தொடர வேண்டும்..! நல்ல ஒரு முயற்சியது. இன்னும் விரிவாக்கி இன்னும் இன்னும் ஆதாரத்தேடல்களுடன் இன்னும் விளக்கமாக இது விடயத்தில் தமிழ்நெட் கட்டுரைகளை வழங்குவது.. திரிக்கப்பட்ட போலிக்கட்டுரைகள் சமூகத்தில் குப்பை போல வீசப்படுவதை தவிர்க்க உதவும்..! :lol:

தமிழகத்தில் மக்கள் தமிழ்புத்தாண்டை எப்படிக் கொண்டாடினர்... தமிழக மற்றும் ஈழப் பெரியார்களின் செவ்விகள் இங்கு...

செவ்வியில் கருத்துத் தெரிவித்த.. பேராசிரியர்... க. சிவத்தம்பி அவர்கள்.. சித்திரையிலேயே தமிழர் புத்தாண்டு கொண்டாடப்படுவதாகவும்.. தையில் காலமாற்றம் அடையாளப்படுத்தப் படுவதாகவும் தெரிவித்து.. இவ்விவாதங்களை நிறைவுறுத்தி இருக்கிறார்..!

http://www.bbc.co.uk/tamil/highlights/stor...ilnewyear.shtml

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செவ்வியில் கருத்துத் தெரிவித்த.. பேராசிரியர்... க. சிவத்தம்பி அவர்கள்.. சித்திரையிலேயே தமிழர் புத்தாண்டு கொண்டாடப்படுவதாகவும்.. தையில் காலமாற்றம் அடையாளப்படுத்தப் படுவதாகவும் தெரிவித்து.. இவ்விவாதங்களை நிறைவுறுத்தி இருக்கிறார்..!

http://www.bbc.co.uk/tamil/highlights/stor...ilnewyear.shtml

அதோட கீழ இருக்கிற இணைணப்பில இருக்கிறதையும் கேட்டுப் பகுத்தாராய முடிந்தால் பகுத்தாராய்வோம்.

ஒலிப்பதிவு - புலிகளின்குரல்

http://www.imeem.com/people/yc3SeEz/music/..._eelamenthimp3/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதோட கீழ இருக்கிற இணைணப்பில இருக்கிறதையும் கேட்டுப் பகுத்தாராய முடிந்தால் பகுத்தாராய்வோம்.

ஒலிப்பதிவு - புலிகளின்குரல்

http://www.imeem.com/people/yc3SeEz/music/..._eelamenthimp3/

திருவள்ளுவர் ஆண்டை யாரும் நிராகரிக்கவில்லை. அதேபோல் தைத்திருநாள் என்ற உழவர் திருநாளையும் யாரும் நிராகரிக்கவில்லை. அதேபோல்.. தமிழர் புத்தாண்டு பிறப்பான சித்திரைத் திருநாளையும் யாரும் நிராக்கவில்லை. ஒரு சிறு கும்பல் மட்டும் தான் நிராகரிக்கிறது..!

ஐயா க. சிவத்தம்பி அவர்கள் தனது கருத்தில் மிகத் தெளிவாக தமிழர் புத்தாண்டு எக்காலத்திலும் தைத் திங்களில் கொண்டாடப்படவில்லை என்பதை ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்..! :D

இப்ப நடக்கிற விடயத்துக்கு காரணம் என்ன என்றால்.. திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம் என்பது எப்போ என்பதற்கு ஆதாரம் இல்லாத நிலையில்.. அதற்குள் பொதிந்திருக்கும் தமிழினத்துவத்தை கருணாநிதி என்பவர் தனது அரசியலுக்குப் பயன்படுத்தி.. திருவள்ளுவர் ஆண்டின் தொடக்கம்.. தைப் பொங்கல் அன்றுதான் என்று வரையறுத்தது தான். அந்த வரையறைக்கு எந்த வரலாற்றுக் காரணமும் இல்லை.. சான்றுகளும் இல்லை. அதைத்தான் தவறு எங்கின்றனரே தவிர.. திருவள்ளுவர் ஆண்டு நிர்ணயம்.. தைத்திருநாள்.. தமிழர் திருநாள் என்பதையெல்லாம் எவரும் எந்தத் தமிழனும் நிராகரிக்கவில்லை. அதேபோல்.. தமிழ் புத்தாண்டு சித்திரையில் என்பதையும் நிராகரிக்கவில்லை.

ஆணும் ஆணும் கூடி பிறந்ததுதான் 60 மாதம் என்ற புராணக்கதையை நிராகரிக்க.. தமிழ் புத்தாண்டை மாற்றியிருக்கிறதாம் பகுத்தறிவுக் கூட்டம். உண்மையில் பகுத்தறிவிருந்தா ஆணும் ஆணும் கூடி பிள்ளைதான் பிறக்குமா..???! என்பதை சிந்தித்தித்து இருக்குமே அக்கூட்டம். மக்களே அறியாத புராணங்களை அல்லது மக்களே நிராகரித்துவிட்ட புராணங்களை.. இந்தப் பகுத்தறிவுக் கூட்டம் ஆராய்வதன் நோக்கம் தான் என்ன..???! இவர்களின் பகுத்தறிவு.. மக்களைப் பகுத்தரிய நிற்பதாலா...??!

ஆணும் ஆணும் கூடி.. குழந்தைதான் பிறக்குமா.. அதன்படி.. 60 மாதங்களுக்குத்தான் பெயர் சூட்டி இருக்க முடியுமா..??! எவனோ இடைச்செருகலா.. தன்ர வக்கிரத்தை எழுதி வைச்சதை அடிப்படையா வைச்சு.. தமிழர் பாரம்பரிய சித்திரை வருடப் பிறப்பை நிராகரிப்பது என்பது முட்டாள் தனமானது. இதுதான் தமிழகத்தில் பகுத்தறிவின் நிலை. 8ம் வகுப்புக் கூட படிக்காதவர்கள் எல்லாம் பகுத்தறிவை நிர்ணயிக்க வெளிக்கிட்டா இதுதான் விளைவு..! தமிழரின் தலைவிதியை.. உலகெங்கும் வாழும் தமிழ் அறிஞர்கள் ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டும்.. என்பது இதற்குத்தான்..! :lol:

இந்து மதத்தின் மீது காழ்புணர்வு கொண்ட பலர் இந்துக்களாக இருந்தே அடுத்த மதத்தவரின் செல்வாக்கு வேண்டி.. அதை இழிவுபடுத்த புராணங்களைப் பாடினர் என்பதற்கு.. சமணரும்... திருநாவுக்கரசரும்.. காரைக்கால் அம்மையாரும் சான்று..! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருவள்ளுவர் ஆண்டை யாரும் நிராகரிக்கவில்லை. அதேபோல் தைத்திருநாள் என்ற உழவர் திருநாளையும் யாரும் நிராகரிக்கவில்லை. அதேபோல்.. தமிழர் புத்தாண்டு பிறப்பான சித்திரைத் திருநாளையும் யாரும் நிராக்கவில்லை. ஒரு சிறு கும்பல் மட்டும் தான் நிராகரிக்கிறது..!

ஐயா க. சிவத்தம்பி அவர்கள் தனது கருத்தில் மிகத் தெளிவாக தமிழர் புத்தாண்டு எக்காலத்திலும் தைத் திங்களில் கொண்டாடப்படவில்லை என்பதை ஆணித்தரமாகக் குறிப்பிட்டுள்ளார்..! :D

நுனிப்புல் மேய்ந்துவிட்டு பதிலெழுதக்கூடாது.

42நிமிடம் 30 செக்கன்கள் கொண்ட உரையாடல் ஒலிப்பதிவிற்கு அதைப்பதிவிட்ட 10 நிமிடத்தில் பதில் அளித்திருக்கிறீர்கள். அதில் பேராசிரியர் ஈழமேந்தி அவர்கள் சித்திரையில் புத்தாண்டு கொண்டாடுவது எவ்வாறு இழுக்கானது என்றும் விளக்கியிருக்கிறார். சிறு கும்பலல்ல ஒரு நாடே பின்னால் நிற்கிறது. சிறுகும்பல் சித்திரைதான் புத்்தாண்டெண்டு மதங்கொண்டு அலைகிறது! :lol:

ஒலிப்பதிவு தரவிறக்கத்திற்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத ஓரு குழப்பபகரமான விடயமாக இருக்கிறது!

எனது தனிபட்ட கருத்தும் விருப்பும் சித்திரையில் கொண்டாடுவதே சிறந்தது என்ப்படுகின்றது காரணம் தமிழர்களுடையது என தனித்துவப்பட்டபட்டிருப்பது மட்டுமல்லாது. சூரியனை சுற்றும் பூமியும் ஏதோ சித்திரையில்தான் தனது அடுத்த சுழற்சியை ஆரம்பிப்பதுபோல் உள்ளது. காரணம் அனேக மரங்கள் செடிகள் எல்லாம் மீண்டும் துளிர்பெற்று பூக்கின்றன ஒரு புதிய வருடத்திற்குள் புகுவது போன்ற மனநிலை தானாகவே ஏற்படுகின்றது. பூமியும் பல விதங்களில் புதிதாக்கப்படுகின்றதை கண்காணகூடியதாக இருக்கின்றது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நுனிப்புல் மேய்ந்துவிட்டு பதிலெழுதக்கூடாது.

42நிமிடம் 30 செக்கன்கள் கொண்ட உரையாடல் ஒலிப்பதிவிற்கு அதைப்பதிவிட்ட 10 நிமிடத்தில் பதில் அளித்திருக்கிறீர்கள். அதில் பேராசிரியர் ஈழமேந்தி அவர்கள் சித்திரையில் புத்தாண்டு கொண்டாடுவது எவ்வாறு இழுக்கானது என்றும் விளக்கியிருக்கிறார். சிறு கும்பலல்ல ஒரு நாடே பின்னால் நிற்கிறது. சிறுகும்பல் சித்திரைதான் புத்்தாண்டெண்டு மதங்கொண்டு அலைகிறது! :icon_mrgreen:

ஒலிப்பதிவு தரவிறக்கத்திற்கு!

நீங்கள் நுனிப்புல் என்பது.. என்னையல்ல.. பேராசிரியர் க. சிவத்தம்பி அவர்களை. நான் அவரின் செவ்வியைத் தான் பிரதிபலித்துள்ளேன்..! :(

பேராசிரியர் ஈழமேந்திக்கு எப்படி சான்றுகளற்ற விளக்கங்களை அள்ளித் தெளிக்க முடியுமோ அதைவிட 1 மணித்தியாலத்துக்கு நானும் அளப்பேன். பிரச்சனை அதுவல்ல. எமக்கு சான்றுகளுடனான குறிப்புகளே அவசியம். பேராசிரியர் க.சிவத்தம்பி போன்றவர்கள்.. மிக திறமையானவர்கள். அவர்கள் எந்த அடிப்படை ஆதாரமும் இன்றி இவற்றை ஒரு சர்வதேச தரம் வாய்ந்த வானொலிக்கு சொல்லமாட்டார்கள் என்பதை நினைவிருத்திக் கொள்வது சிறப்பு.

ஆமாம் ஆமாம் ஒரு நாடே பின்னால் நிற்கிறது. தமிழ்நாடு என்ற ஒரு மாநிலமே பின்னால் நிற்கல்ல.. நாடு.. எப்படி.. இப்படியெல்லாம் பொய் சொல்ல முடியுது. பிபிசி செய்தியாளர் தமிழகத்தில் திரட்டிய செய்தியில் அவரே சொல்லிவிட்டார் மக்கள் இந்த சட்ட அறிவிப்பை ஒரு பொருட்டாகக் கருதவில்லை.. வழமை போன்று புத்தாண்டைக் கொண்டாடினர் என்று.இதற்குப் பின்னரும் ஒரு நாடே என்பது கேட்பவனை கேணயன் என்று நினைத்துச் செய்யும் பிரச்சாரமே அன்றி வேறல்ல..! இது மக்களை ஏமாற்றும் செயல்..!

நுனிப்புல் அடிப்புல் என்ற தனிநபர் விரோத சொல்லாடல்களைத் தவிர்த்து பேராசிரியருக்கு உரிய மரியாதை செய்வது யாழுக்கு நன்று..! :lol::icon_mrgreen:

Link to comment
Share on other sites

தமிழர் புத்தாண்டு என்று நீங்கள் கருதுகின்ற சித்திரைப் புத்தாண்டில் தமிழர்கள் புதிய தொழிலையோ, திருமணத்தையோ வேறு புதிய முயற்சிகளையோ செய்வது இல்லை. இதற்கு காரணம் என்ன?

Link to comment
Share on other sites

ஒவ்வொருநாளும் புத்தாண்டு சித்திரையில கொண்டாடினா என்ன தையில கொண்டாடினா என்ன கொண்டாடுறதிற்கு ஒரு நாள் கிடைத்தது என்று சந்தோசபடுங்கோ :icon_mrgreen:

Link to comment
Share on other sites

ம்ம்ம்...நன்ன டவுட்..(தமிழர் என்றா யாருங்கண்ணா எப்படி இருப்பீனம் அவையள் :D )...அத ஒருக்கா சொல்லுங்கோ பார்போம் அதுக்கு பிறகு பார்போம் எப்ப கொண்டாடுறது என்று...(என்ன பார்க்கிறியள் ஏதாச்சும் பிழையா கேட்டு போட்டனோ :D )...

ம்ம்..இப்ப நான் ஒன்னு கேட்கட்டோ..அக்சுவலா நீங்க ஏப்பிரல் மாதத்தில பிறந்து இருக்கிறீங்க என்று வையுங்கோவேன் பட் ஏப்பிரல் மாதத்தில உங்க பேர்டே கொண்டாட கூடாது ஜனவரியில கொண்டாட வேண்டும் என்றா கொண்டாடுவீங்களோ :o ..(என்ன பார்க்கிறியள் டவுட்டு தான் பாருங்கோ)..

அட...அட தமிழர் புத்தாண்டோ..(அட வருசம் வந்து பிறக்கும் போது "அம்மா" என்று சொல்லி கொண்டு தானே பிறக்குது தமிழ் வருசம் என்று சொல்ல :o )..என்ன கொடுமை இது..ம்ம்ம் அது தானா பிறக்குது நாம வந்து அதை செலிபிரேட் பண்ணுறோம் இதில என்ன இருக்கு என்று அச்சோ..(உதை எல்லாம் கேட்க வேண்டிய நிலைமை பாருங்கோ :D )..

என்னவோ நீங்க தான் வருசம் என்றும் ஒன்ற கண்டு பிடித்தியள்..(இப்ப அது ஜனவரியிலையும் என்று சொல்லுறியள் என்ன கொடுமை இது)..எனிவே யார் என்ன சொன்னாலும் பேஷா நான் கொண்டாடுவன் ஏப்பிரலில பாருங்கோ :D ..(ஜனவரியில ஒரு கை விசேசம் ஏப்பிரலில ஒரு கைவிசேசம் கிடைக்கும் என்று பார்த்தா அதிலையே கையை வைக்கிறது கொஞ்சம் கூட நன்னா இல்ல சொல்லிட்டன்)...இதை நான் வன்மையாக கண்டிக்கிறன்... :D

ஜம்மு பேபியை பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் சூரியன் உதிக்கும் போதும் வருசம் தான் பாருங்கோ...(ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிகரை பார்க்கிறது தான் நன்னா இருக்கும் அத போல தான் இதுவும் பாருங்கொ).. :o

எல்லாம் சரி அண்ணண்மார்களிட்ட எல்லாம் ஒரு கேள்வி...(ம்ம்ம்..தமிழ் புத்தாண்டு வந்து ஜனவரியில என்று எல்லாம் கதைத்தா தான் பொபியூலர் ஆக முடியுமா )...அப்ப நான் இப்ப கேட்கிறன் தமிழர் முறை படி அண்ணன்மார்களே முதலிரவு வந்து காலம தானாம் கொண்டாட வேண்டுமாம்..இதை வேற யாரும் சொல்லவில்லை நான் தான் சொல்லுறன் பாருங்கோ இதை பற்றி என்ன நினைக்கிறியள்.. :D

என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்கிறியள்...நான் பேபியாக்கும் ஆனா நிசமா இது உண்மை பாருங்கோ..(அப்பாடா நானும் ஒரு மாதிரி பொபிலுயர் ஆகிடலாம் போல இருக்கு)..

ம்ம்...அவனவன் புத்தாண்டை கொண்டாடுறதே பெரிய விசயம் இதில..இது வேற எனி இப்படி காமேடி கீமேடி பண்ணிணா பிறகு நிசமாவே தமிழர் முறைபடி முதலிரவு கொண்டாட கூடாது என்று சொல்லி போடுவன் சரியா :D ...(என்னேன்ன தங்களுக்கு வசதியோ அதுக்கு ஏற்ற மாதிரி நம்ம ஆட்கள் எல்லாத்தையும் செட் பண்ணி தான் வைத்திருக்கீனம்)..நிசமா என்னால முடியல...

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வருசம் என்பது தானா பிறக்கிறதில்ல நீங்க தான் பிறக்க வைக்கிறீங்க"

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் அடுத்த வருடம் இதே பகுதியில் அரைத்த மாவையே திருப்பி அரைப்போம்.

நன்றி வணக்கம்.

Link to comment
Share on other sites

மீண்டும் அடுத்த வருடம் இதே பகுதியில் அரைத்த மாவையே திருப்பி அரைப்போம்.

நன்றி வணக்கம்.

ம்ம்..கு.சா தாத்தா..(நானும் வருவேன் அடுத்த முறை :) )...அது தான் அரைத்த மாவை அரைக்க..தாத்தா ஏன் இப்ப ஆம்பிளைமார் எல்லாம் மாவரைக்கீனம் :wub: ..(பொண்ணுகள் எல்லாம் எங்க)...தாத்தா.. :)

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்ப். இன்.   முதல் கையெழுத்தால் லட்சக்கணக்கான இந்தியார்கள்.  பாதிக்கப்படுவார்கள்  என்று     செய்திகள் சொல்கின்றன     உங்கள் பொன்னான கருத்துகள் எதிர்பார்கப்படுகிறது 🤣
    • ஒம். உண்மை தான் ஆனால்  ஜேர்மனியன்.  ஆள்வான்    ஆளப் போகிறாரன். 🤣😂
    • இங்க இப்படி நடந்து கொள்வது பாகிஸ்தானிகள். அண்ணன், தம்பி, மச்சான், மாப்பிள்ளை, மகன் என கூட்டாக சேர்ந்து அரசின் பராமரிப்பில் இருக்கும் 12-19 வயது சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பல சம்பவங்கள் இப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக விசாரிக்க படுகிறது. ஏனைய கலாச்சார பெண்கள் என்றால் போக பொருட்கள் என சொல்லி கொடுக்கும் மதம், கலாச்சாரம், சமூகம்தான் காரணம். நீங்கள் ஆறரை அடி உயரத்தில், எம் ஜி ஆர் கலரில் தக தக என மின்னுவதால் உங்களை ஆப்கானி என நினைக்கிறார்கள் போலும்🤣. 
    • இல்லை நுணாவிலான் வீடியோவில் 4:40 லிருந்து, போதியளவு பொலிஸ் இல்லையாம் மூன்றே மூன்று கார்கள் மட்டும்தான் நின்றிருக்கின்றன, இல்லையென்றால் எல்லோரையுமே விலங்கடிச்சு ஏத்தியிருப்பான். இதில் உலகின் பெரும் நகரமொன்றின் பாதுகாப்பு குறைபாடும் வெளிச்சத்துக்கு வந்திருக்கு. நான் நினைக்கிறேன் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை சத்தமில்லாமல் அடையாளம் காணும் வேலையில் பொலிஸ் இப்போது இறங்கியிருக்கலாம். அப்படியே விடமாட்டாங்கள். குமாரசாமியண்ணை,  ஜேர்மனி மட்டுமல்ல ஐரோப்பா அமெரிக்கா கனடா அவுஸ்திரேலியா உட்பட  உலகின்  அனைத்து பகுதிகளிலும் வேலைவாய்ப்பு விசா, மாணவர்கள் விசா ,அகதி அந்தஸ்து கோருவோர் அனைவருக்கும் பெரும் நெருக்கடி நெருங்கி வந்துவிட்டது, இனிவரும் காலங்கள் இவர்களுக்கு அவ்வளவு இலகுவானதாக இருக்காது என்றே நினைக்கிறேன்.
    • இரெண்டு வருடத்தில் இனி போட்டி இல்லை என சொல்லி இருந்தால், கவின் நீயூசம் அல்லது இன்னுமொரு வெள்ளை ஆண் போட்டியிட முடிந்திருக்கும். அவரால் டிரம்பை வெல்லவும் முடிந்திருக்க கூடும். ஒரு அதிபராக டிரம்ப் எப்படி தகவல்களை ரஸ்ய உளவாளிகளுக்கு அவரின் கோல்ப் ரிசார்ட்டில் வைத்து கொடுத்தார் என்பதை இதை விட கடுமையான ஆதாரங்களை பைடன் அறிந்திருப்பார். இருந்தும் கமலா போல சோப்பிளாங்கியை அதுவும் அமெரிக்கர்கள் ஹிலரி போன்ற இயலுமை மிக்க பெண்ணையே நிராகரித்த பின், வேறு தெரிவின்றி வேட்பாளர் ஆக்கும் வரைக்கும் காலம் தாழ்த்திய பதவி வெறியர் பைடன். டிரம்பை விட மோசமான சுயநலமி பைடன். ஓபாமா கூப்பிட்டு சொல்லி இராவிட்டால், அந்த மொக்கேனப்பட்ட டிபேட்டுக்கு பின்னும் போட்டியில் இருந்து விலகி இருக்க மாட்டார். அமெரிக்காவின் மைத்திரிபால சிறிசேனதான் பைடன். அநேகமாக மகனை பொது மன்னிப்பில் விடுவார் என்றே நான் நினைக்கிறேன்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.