Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தயங்கு, இயங்கு, முயங்கு, மயங்கு,

Featured Replies

ஜஸ்டு ஒரு முட்டையும் விந்தும் சந்திக்க வைக்கிறதிற்கு.. இத்தனை பெரிய ஆர்ப்பாட்டம்.. கவிதை.. காதல்.. கலியாணம்.. நல்லா ஊரை ஏய்க்கிறாங்க..! :D:)

முடியல நெடுக்ஸ்... விழுந்து விழுந்து சிரித்தேன் :unsure:

  • Replies 72
  • Views 13.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை நம்பேலாது பிறகு விறாண்டிப்போட்டான் எண்டு பொலிசிலை கேசைப் போட்டால் நாங்கள் என்ன செய்யிறது பலாத்கார கேசிலை 6 மாதமோ ஒரு வருசமோ இந்த விழையாட்டுக்கு நான் வரேல்லை :):D:unsure:

5 நிமிசம் கண்ணில் நீர் வரும் மட்டும் சிரித்தபின்பும் ஒரு வரி தன்னும்

எழுதாவிட்டால் அழகில்லை.சாத்து சூப்பர்.

எமது விடுதலை போராட்டம் தோற்றதற்கும் நெடுக்ஸ் போல பலர் இருப்பது தான் காரணம்,தியறி வேறு பிறக்டிகல் வேறு.நாங்கள் எத்தனையாயிரம் சயன்ஸ் தியறி மனித உடம்பைப் பற்றி படிததாலும்(ஏ /ல் விலங்கியல் பீ ஆக்கும்)சும்மா பஸ்சில் உஷ்ணகாற்று பட்டாலே உசிப்பி விடுமால்லே,அதுவும் சும்மா படாமலே பட்டிட்டிது என்று நினைத்து சாரம் நனைத்தது எத்தனை நாள்.

ஜெயபாலனின் கதை போல சும்மா சொல்லக்கூடாது, இப்பவும் இன்னமும் இதை விட சொர்க்கம் இருக்கா என்று அலையுது மனம்.

சொறி மறந்து போனன். டைகர் வூட்சை நினைவு படுத்த.மனுசன் கொல்ப் அந்த மாதிரி தான் அடிச்சிருக்கான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ivf.gif

IVF தொழில்நுட்பம் வளர்த்துவிட்ட இந்தக் காலத்திலும் போய்.. தயங்கு.. இயங்கு.. முயங்கு.. மயங்கு என்று கொண்டு நிற்க ஏலாது. கலியாணமே இந்தக் காலத்தில் ஒரு வேஸ்டு. வாடகைக்கு ஒரு அம்மா பிடிச்சமா.. குழந்தையை பெத்துக் கொள்ள ஒப்பந்தம் போட்டமா.. காசக்கொடுத்தமா.. வாரிச எடுத்தமா.. வளர்த்தமா என்றிருக்கனும். ஒரே ஒரு வாரிசு என்றாலும் அம்மா என்றால் என்னென்று தெரியாமல் வளர்க்கனும்.. என்றதுதான் என்ர விருப்பம்..!

ஜஸ்டு ஒரு முட்டையும் விந்தும் சந்திக்க வைக்கிறதிற்கு.. இத்தனை பெரிய ஆர்ப்பாட்டம்.. கவிதை.. காதல்.. கலியாணம்.. நல்லா ஊரை ஏய்க்கிறாங்க..! :):D

ஜயோ முடியலை நெடுக்ஸ் அண்ணா :D :D :D

யாழுக்கு வாறதே உங்களைப் போல சிலரின் காமடியை ரசிக்கத்தான். :unsure:

பேசாமல் தமிழ் சினிமாவுக்கு காமடி ட்ராக் எழுதலாம் போல :)

ஓகே..சீரியசா மேட்டருக்கு வருவம்.

நெடுக்ஸ் அண்ணா மேலுள்ள கருத்தை வைத்துப் பார்த்தால் உங்களுக்கு பெண்கள் மீது வெறுப்பிருந்தாலும்

தாய்மையைப் பழிப்பது போலவும்,உங்கள் ஆண்மையை சந்தேகப் படவும் வைக்குது நெடுக்ஸ் அண்ணா.

அதே போல பெண்களை நீங்கள் இந்தளவுக்கு வெறுக்கிறிங்கள் என்றால் எந்தளவுக்கு நேசித்து இருப்பீர்கள் என்றும் புரியுது.

உங்களை கஸ்டபடுத்த சொல்லவில்லை தப்பாக சொன்னால் மன்னிக்கவும் நெடுக்ஸ் அண்ணா :D

  • கருத்துக்கள உறவுகள்

ivf.gif

IVF தொழில்நுட்பம் வளர்த்துவிட்ட இந்தக் காலத்திலும் போய்.. தயங்கு.. இயங்கு.. முயங்கு.. மயங்கு என்று கொண்டு நிற்க ஏலாது. கலியாணமே இந்தக் காலத்தில் ஒரு வேஸ்டு. வாடகைக்கு ஒரு அம்மா பிடிச்சமா.. குழந்தையை பெத்துக் கொள்ள ஒப்பந்தம் போட்டமா.. காசக்கொடுத்தமா.. வாரிச எடுத்தமா.. வளர்த்தமா என்றிருக்கனும். ஒரே ஒரு வாரிசு என்றாலும் அம்மா என்றால் என்னென்று தெரியாமல் வளர்க்கனும்.. என்றதுதான் என்ர விருப்பம்..!

ஜஸ்டு ஒரு முட்டையும் விந்தும் சந்திக்க வைக்கிறதிற்கு.. இத்தனை பெரிய ஆர்ப்பாட்டம்.. கவிதை.. காதல்.. கலியாணம்.. நல்லா ஊரை ஏய்க்கிறாங்க..! :D:)

தம்பி இந்த பாடம் எல்லாம் நாங்கள் ஆண்டு பத்திலேயே படிச்சிட்டம்...இதில நீங்கள் எழுதினதை வைத்து பார்க்கும் போது நீங்கள் காதலித்தோ அல்லது மணம் முடித்தோ ஒரு பெண்ணால் ஏமாற்றப்பட்டு உள்ளீர்கள் என நினைக்கிறேன் அல்லது மணம் முடித்து சந்தோசமாக இருந்து கொண்டு வித்தியாசமாக எழுத வேண்டும் என்பதற்காக எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன்.

மேலே உள்ள ஒரு கள உறவு சொன்ன மாதிரி பெண்ணின்

மூச்சு காற்று படாமல் வாழ்வதென்பது!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அறம்

பொருள்

கலந்த

போலித்தனமில்லாத

காமத்துப்பால்

  • கருத்துக்கள உறவுகள்

ஓகே..சீரியசா மேட்டருக்கு வருவம்.

நெடுக்ஸ் அண்ணா மேலுள்ள கருத்தை வைத்துப் பார்த்தால் உங்களுக்கு பெண்கள் மீது வெறுப்பிருந்தாலும்

தாய்மையைப் பழிப்பது போலவும்,உங்கள் ஆண்மையை சந்தேகப் படவும் வைக்குது நெடுக்ஸ் அண்ணா.

அதே போல பெண்களை நீங்கள் இந்தளவுக்கு வெறுக்கிறிங்கள் என்றால் எந்தளவுக்கு நேசித்து இருப்பீர்கள் என்றும் புரியுது.

உங்களை கஸ்டபடுத்த சொல்லவில்லை தப்பாக சொன்னால் மன்னிக்கவும் நெடுக்ஸ் அண்ணா :)

நான் பெண்களை வெறுக்கவில்லை. அவங்க தயவில்லாமலும் ஒரு ஆண் தனித்து வாழ முடியும் என்கிறேன். அந்தளவுக்கு இந்த உலகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது.

இப்போ எல்லாம் தயங்கு.. இயங்கு.. முயங்கு.. மயங்கு அவசியமில்லை.

குத்து.. உறிஞ்சு.. கலக்கு.. செலுத்து போதும். அந்தளவுக்கு அறிவியல் வளர்ந்து நிற்கிறது. அதை ஏன் பயன்படுத்தத் தயங்குவான்..??! :D

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள ஒரு கள உறவு சொன்ன மாதிரி பெண்ணின்

மூச்சு காற்று படாமல் வாழ்வதென்பது!!!

பெண்களின் மூச்சுப்பட்ட எந்த ஆணும் உருப்பட்டதா வரலாறில்லை.

அந்தப் பெரிய ஜேசு கூட உந்த மூச்சு வேணாம் என்று இருந்ததன் மர்மம் என்னவோ..??!

பெண்களின் மூச்சுக்காற்றில் வாழ்ந்து சளித்து.. புத்தன் துறந்தது ஏன்..???!

உலகையே கலக்கிய விவேகானந்தர்.. பெண்களின் மூச்சுக்காற்றில் காய்ந்தபடியா தத்துவங்களைச் சொன்னார்.. இல்லையே.

இன்றைய போலிச்சாமிகள் போன்று எல்லா ஆண்களையும் எடை போடக்கூடாது.

அவர்கள் எல்லாம் பெண்களின் மூச்சுக்காற்றுப்பட வாழத்தெரியாமலா இருந்தார்கள். மனித குலத்துக்கு இந்தளவு தத்துவங்களை இயற்றிய அவர்கள் எல்லாம்.. எப்படி வாழ்ந்தார்கள்..!

இன்றும் வத்திக்கானில்.. வாழ்கிறார்கள் தானே. அவர்கள் மனிதர்கள் இல்லையா.. வாழவில்லையா..???!

இப்படி எழுதுவதால் நான் கேய் கிடையாது. மனிதனாக சுயத்தோடு வாழ விரும்பும் மனிதன். :)

ஜஸ்டு ஒரு முட்டையும் விந்தும் சந்திக்க வைக்கிறதிற்கு.. இத்தனை பெரிய ஆர்ப்பாட்டம்.. கவிதை.. காதல்.. கலியாணம்..

அதாவது காதல், கலியாணம் எல்லாம் பிள்ளையை உருவாக்கிறதிலபோய் முடியவேணும்.. இல்லாட்டிக்கு அவை அர்த்தம் அற்றவை எண்டு சொல்லுறீங்கள்? அப்பிடியெண்டால்.. பிள்ளையை இதுவரை உருவாக்காத ஆக்கள் எல்லாம் சுத்தவேஸ்டு.. சுவாமி விவேகானந்தர், நான், நீங்கள் உட்பட.. :lol:

பெண்களை நம்பேலாது பிறகு விறாண்டிப்போட்டான் எண்டு பொலிசிலை கேசைப் போட்டால் நாங்கள் என்ன செய்யிறது பலாத்கார கேசிலை 6 மாதமோ ஒரு வருசமோ இந்த விழையாட்டுக்கு நான் வரேல்லை :lol::D:D

சாத்திரியார் நகத்தை வெட்டி விட்டு ஒரு தடவை முயற்சித்து பாருங்களேன்

அதாவது காதல், கலியாணம் எல்லாம் பிள்ளையை உருவாக்கிறதிலபோய் முடியவேணும்.. இல்லாட்டிக்கு அவை அர்த்தம் அற்றவை எண்டு சொல்லுறீங்கள்? அப்பிடியெண்டால்.. பிள்ளையை இதுவரை உருவாக்காத ஆக்கள் எல்லாம் சுத்தவேஸ்டு.. சுவாமி விவேகானந்தர், நான், நீங்கள் உட்பட.. :lol:

அடடா மச்சி!!! சுவாமி விவேகானந்தரை உங்களுடன் ஒப்பிடாதீர்கள் அவர் ஒரு மகா ஞானி

தியான சக்தியால் இயற்கையாக மனிதரில் எழுகின்ற சிருங்கார ரசத்தை ஆன்மீக ரசமாக மடை மாற்றம் செய்த மகான்

அவரை போய் நம்முடன் ஒப்பிடாதீர்கள் மச்சி

இதன் அடிப்படை விஞ்ஞான தத்துவம் என்னவென்றால் புணர்ச்சி/கலவிக்கான தேவை என்பது ஒரு அடிப்படை உயிரியல் இயல்பூக்கம் அதை Basic Instinct என்று சொல்வார்கள். எல்லோரும் திருமணம் செய்வதற்கு சொல்லும் காரணம் சந்ததி விருத்தியும் வாழ்க்கை துணையின் தேவையும்.. ஆனால் உண்மையான காரணம் அடிப்படை பாலியல் தேவை. ஆனால் இயற்கை இனப்பெருக்கத்துக்காக இந்த புணர்ச்சியில் ஒரு மகிழ்ச்சியை விதைத்து இருக்கிறது. புணர்ச்சியில் ஒரு மகிழ்ச்சி இல்லாவிடின் நீங்கள் சந்ததி பெருக்கத்துக்காக புணர்ச்சியில் ஈடுபடுவீர்களா?

எமது விடுதலை போராட்டம் தோற்றதற்கும் நெடுக்ஸ் போல பலர் இருப்பது தான் காரணம்,தியறி வேறு பிறக்டிகல் வேறு.நாங்கள் எத்தனையாயிரம் சயன்ஸ் தியறி மனித உடம்பைப் பற்றி படிததாலும்(ஏ /ல் விலங்கியல் பீ ஆக்கும்)சும்மா பஸ்சில் உஷ்ணகாற்று பட்டாலே உசிப்பி விடுமால்லே,அதுவும் சும்மா படாமலே பட்டிட்டிது என்று நினைத்து சாரம் நனைத்தது எத்தனை நாள்.

ஜெயபாலனின் கதை போல சும்மா சொல்லக்கூடாது, இப்பவும் இன்னமும் இதை விட சொர்க்கம் இருக்கா என்று அலையுது மனம்.

அரிச்சுன் அண்ணா அடடா பஸ்ஸில உஷ்ண காற்றுக்கே சாரம் நனையுதா? உங்களுக்கு premature ejaculation பிரச்சினை இருக்குதாவேன்று ஒரு தடவை பரிசோதித்து பார்க்கவும். அது சரி சாரம் நனைந்தவுடன் மெசின் தோயலா? அல்லது கைத்தோயலா?

"அரிச்சுனர் வில்லு

அரிச்சந்திரன் சொல்லு

எதிரியை கொல்லு

இமயத்தை வெல்லு"

சொறி மறந்து போனன். டைகர் வூட்சை நினைவு படுத்த.மனுசன் கொல்ப் அந்த மாதிரி தான் அடிச்சிருக்கான்.

அரிச்சுன் அண்ணா சும்மா சொல்ல கூடாது ... மனிசன் பலே கில்லாடி தான் 13 பேருக்கு கோல்ப் அடிச்சிருக்கிறான் என்றால் பாருங்கோவன்...

அது சரி இதுவரை நீங்கள் எத்தனை பேருக்கு கோல்ப் அடிச்சனீங்கள்?

நான் பெண்களை வெறுக்கவில்லை. அவங்க தயவில்லாமலும் ஒரு ஆண் தனித்து வாழ முடியும் என்கிறேன். அந்தளவுக்கு இந்த உலகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது.

இப்போ எல்லாம் தயங்கு.. இயங்கு.. முயங்கு.. மயங்கு அவசியமில்லை.

குத்து.. உறிஞ்சு.. கலக்கு.. செலுத்து போதும். அந்தளவுக்கு அறிவியல் வளர்ந்து நிற்கிறது. அதை ஏன் பயன்படுத்தத் தயங்குவான்..??! :lol:

அடடா நெடுக்கால போவாரே

குத்து.. உறிஞ்சு.. கலக்கு.. செலுத்து.... உங்கட அறிவியல் சரிதான் தலைவா....

ஆனால் உறிஞ்சு.. குத்து.. கலக்கு.. செலுத்து..இதிலிருக்கும் சுவாரசியம் குத்து உறிஞ்சு கலக்கு செலுத்துவில் இருப்பதில்லை தலைவரே..

கொஞ்சம் வித்தியாசமாக குறுக்கால போய் பாருங்கோவன்....

அடடா மச்சி!!! சுவாமி விவேகானந்தரை உங்களுடன் ஒப்பிடாதீர்கள் அவர் ஒரு மகா ஞானி அவரை போய் நம்முடன் ஒப்பிடாதீர்கள் மச்சி. புணர்ச்சியில் ஒரு மகிழ்ச்சி இல்லாவிடின் நீங்கள் சந்ததி பெருக்கத்துக்காக புணர்ச்சியில் ஈடுபடுவீர்களா?

அப்ப சுவாமி விவேகானந்தர் மனுசன் இல்லையோ? நெடுக்காலபோவானிடம் கேட்கவேண்டிய பல கேள்விகளை என்னிடம் கேட்டு இருக்கின்றீர்கள். புணர்ச்சியில் மகிழ்ச்சி இல்லாதுவிடினும் பெரும்பாலானோர் சந்ததிப்பெருக்கத்திற்காக நிச்சயம் புணர்ச்சியில் ஈடுபடுவார்கள், ஈடுபடுகின்றார்கள் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. மகாஞானி பற்றி அறிந்தனீங்கள்.. திருமணம் செய்து குழந்தைகள் இல்லாதவர்கள் படுகின்ற வேதனைகள்பற்றி அறியவில்லையோ?

முடியல நெடுக்ஸ்... விழுந்து விழுந்து சிரித்தேன் :lol:

ஜஸ்டு ஒரு விந்துவையும் ஒரு முட்டையும் சந்திக்க வைப்பதற்கு இத்தனை ஆர்ப்பாட்டமும் நடப்பதில்லை..

விந்துவும் முட்டையும் சந்திப்பதல்ல பிரச்சினை.....

விந்துவும் முட்டையும் எக்கேடு கெட்டாலென்ன

இயங்கினமா முயங்கினமா அவ்வளவுதான்....

அப்ப சுவாமி விவேகானந்தர் மனுசன் இல்லையோ? நெடுக்காலபோவானிடம் கேட்கவேண்டிய பல கேள்விகளை என்னிடம் கேட்டு இருக்கின்றீர்கள். புணர்ச்சியில் மகிழ்ச்சி இல்லாதுவிடினும் பெரும்பாலானோர் சந்ததிப்பெருக்கத்திற்காக நிச்சயம் புணர்ச்சியில் ஈடுபடுவார்கள், ஈடுபடுகின்றார்கள் என்பதில் எதுவித சந்தேகமும் இல்லை. மகாஞானி பற்றி அறிந்தனீங்கள்.. திருமணம் செய்து குழந்தைகள் இல்லாதவர்கள் படுகின்ற வேதனைகள்பற்றி அறியவில்லையோ?

அறிவேன் மச்சி அறிவேன் எனது உறவினர் ஒருவரே டெஸ்ட் டியுப் முலம் குழந்தை பெற்றவர்.

அதற்கு முன்னர் குழந்தையின்றி அவர்கள் பட்ட வேதனை எனக்கு புரியும்.

சுவாமி விவேகானந்தர் மனிதர் ஆயினும் ஆன்ம ஞானம் பெற்று எம்மிலும் வேறு பட்ட ஒரு தளத்தில் வாழ்ந்தவர் இயங்கியவர்.

மச்சி உங்கள் கருத்தில் உண்மை இருப்பினும் புணர்ச்சியில் மகிழ்ச்சி இல்லாது விடினும் குழந்தை பெறுவதற்காக எல்லோரும் புணர்ச்சியில் ஈடுபடுவார்கள்

என்றால் இயற்கை புணர்ச்சியில் ஒரு மகிழ்ச்சியை வைத்ததன் ரகசியம் என்ன?

நானும் ஒரு சூப்பர் வீடியோ டெமோ போடுவன் ஆனால் மோகன் அண்ணா சங்கூதி விட்டுடுவார்

http://www.youtube.com/watch?v=Qxn7dtW5_tUhttp://www.youtube.com/watch?v=Qxn7dtW5_tU

இதுதான் முயங்குதலா?

நீங்கள் வளர்த்த உங்கள் குஞ்சை உங்களாலேயே கொன்றோல் பண்ண முடியவில்லை என்றால் என்னத்த சொல்லி என்னத்த பண்ண.

:lol::D:D:D:D

எனக்கு கோழிக்குஞ்சு என்றா ரெம்பப் பிரியம். ஒரு தடவை உறவினர் வீட்டிலிருந்து ஒரு அழகிய கோழிக்குஞ்சை வாங்கி வந்து வளர்த்தேன். அது வளர்ந்

Edited by seeman

தயங்கு, இயங்கு, முயங்கு, மயங்கு,

arianabartwed1yu0.jpg

தழுவும் சேலை முகட்டில் விம்மி

விழட்டும் அதுவரை தயங்கு.

பருவச் சிலிர்ப்பில் கனியிதழ் கவ்வி

உணர்வினைக் கிளறி இயங்கு.

குறி நகம் பதித்து குவித்து அணைத்து

கொஞ்சிக் கெஞ்சி முயங்கு.

உருகிய பனித்துளி உயிருக்குள் இணைந்ததும்

இணையின் அணைவில் மயங்கு.

அற்புதமான அழகான கவிதை. வார்த்தை பிரயோகம் அருமை பாராட்டுகள் சாகரா அக்கா தொடர்ந்து எழுதுங்கள்

சாகரா அக்காவின் கவிதையை பார்த்தவுடன் குறும்புத்தனமாக எனக்குள் சிறகடித்த ஒரு Hikoo கவிதை..........

"கவட்டு துவக்கின் மரண தாக்குதலில்

ஒரு இனிய நிலாவின்

புதிய ஜனனம்"

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களின் மூச்சுப்பட்ட எந்த ஆணும் உருப்பட்டதா வரலாறில்லை.

அந்தப் பெரிய ஜேசு கூட உந்த மூச்சு வேணாம் என்று இருந்ததன் மர்மம் என்னவோ..??!

பெண்களின் மூச்சுக்காற்றில் வாழ்ந்து சளித்து.. புத்தன் துறந்தது ஏன்..???!

உலகையே கலக்கிய விவேகானந்தர்.. பெண்களின் மூச்சுக்காற்றில் காய்ந்தபடியா தத்துவங்களைச் சொன்னார்.. இல்லையே.

இன்றைய போலிச்சாமிகள் போன்று எல்லா ஆண்களையும் எடை போடக்கூடாது.

அவர்கள் எல்லாம் பெண்களின் மூச்சுக்காற்றுப்பட வாழத்தெரியாமலா இருந்தார்கள். மனித குலத்துக்கு இந்தளவு தத்துவங்களை இயற்றிய அவர்கள் எல்லாம்.. எப்படி வாழ்ந்தார்கள்..!

இன்றும் வத்திக்கானில்.. வாழ்கிறார்கள் தானே. அவர்கள் மனிதர்கள் இல்லையா.. வாழவில்லையா..???!

இப்படி எழுதுவதால் நான் கேய் கிடையாது. மனிதனாக சுயத்தோடு வாழ விரும்பும் மனிதன். :unsure:

உங்களை நான் ஓரினச் சேர்க்கையாளர் என எவ்விடத்திலும் கூறவில்லை அப்படி நீங்கள் தவறாக விளங்கிக் கொண்டால் என்னை மன்னியுங்கள்.திருமணம் முடிப்பதென்பதும் அவரவர் விருப்பம் இதிலும் மற்றவர் தலையீடு கூடாது. பெண்கள் மூச்சு காற்று படாமல் சில பேர் வாழ்ந்திருக்கிறார்கள் தான் ஆனால் அவர்கள் துற‌விகள்.இராஜ குமர‌னாய் இருந்த சித்தார்த்த‌ன் தனது தந்தையின் விருப்பத்தின் பேரில் கல்யாணம் கட்டி தனது மனைவியிட‌ம் நேரில் சொல்லக் கூட‌ முடியாமல் நடு ராத்தியில் துறவறம் செய்ய புறப்பட்டவர் தான் சித்தார்த்த‌ன் என்கிற புத்த‌ர்.ஒரு பெண்ணுக்கு ஒழுங்காய் வாழ்க்கை கொடுக்காமல் அகிம்சை போதிக்க வெளிக்கிட்டவர் இவர்...வத்திக்கானில் வாழ்பவர்கள் எல்லாம் புனிதர்கள் என எதை வைத்து சொல்கிறீர்கள்...இங்கு நான் சொல்ல வந்ததே பெண்களின் மூச்சு படாமல் ஆண்களால் வாழ முடியாதென்பது [ஓரினச் சேர்க்கையாளரை விடுங்கள்] ஆண்கள் திருமணம் முடிக்கிறார்களோ இல்லையோ வாழ்க்கையில் ஒரு த‌ர‌மாவது பெண் சுகம் கண்டிருப்பார்கள் என்பது என் கருத்தாகும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இருக்கும் கேள்வி இதுதான்

ஏன் மிகச் சில வரிகளில் இந்தக் கவிதையை முடித்தீர்கள்...? தமிழ் பெண்கள் தம் ஆடவருடன் செய்யும் கலவியை அதிகம் பாடக்கூடாது எனும் மரபியலாலா? அப்படி எனில், இந்தக் கவிதையையே படைத்திருக்க கூடாது. காமம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி சமன்.... கந்தகக் கவிதை பாடுபவர் அந்த வாழ்வியலின் அடிப்படையான காமத்தையும் தெளிவுற பாடவேண்டும். காமம் உணராத எவரும் சுதந்திரம் பற்றி உரைக்கும் உரிமை இழப்பர்.. தன் தாயும் தந்தையும் எவர் நிர்பந்தமும் இன்றி உடலுறவு கொண்டே தாம் பிறந்தோம் என உணராதவருக்கு விடுதலை என்பது வெறும் வாக்கியமே. தலைவருக்கு பிறந்த தின கவிதை எழுதுபவர் தன் பேரின்பத்தையும் பாடவேண்டும். கால அடுக்குகளில் இருந்து பீறிடும் பெண் கவியாய் சாகரா மாற வேண்டும்.

ஆணின் தொடுகையை விரும்பும் எந்தப் பெண்ணுக்கும் காமம் ஒரு அற்புதம்...

பெண்ணின் காமம் இன்றேல் உலகில் எந்த சீவனும் இல்லை என உயிரியல் அறிந்தவருக்கு பெண் காமம் என்பது வராலாற்றை கொண்டு செல்லும் ஜீவ நதி என புலப்படும்

மரபுகள் என்பது என்றும் மாற்றத்திற்கே

சாகரா இன்னும் பாடுங்கள்....

இந்தக் கவிதையைத் தூசுதட்டி மீண்டும் இங்கு இரத்தநாளங்களை முறுக்கெடுக்க வைத்த பெருமைக்குரிய நிழலிக்கு,

இங்கு வந்த பதில்களைப் பார்க்கும்போது இந்த நான்கு வரிகளே அதிகரித்து விட்டதுபோல் உள்ளது. தமிழ்ப்பெண்கள் ஏன் தம் ஆடவருடன் செய்யும் கலவியைப் பற்றி கவிதை வரைவதில்லை என்று கேள்வி கேட்டிருக்கிறீர்கள். பாடக்கூடாது என்று எந்த மரபும் இல்லை. அவர்களுக்குள் அழகான அந்தரங்கங்கள் புதைந்திருக்கின்றன. ஒரு சின்ன உதாரணம் கவிஞர் தாமரை எழுதிய அழகான பாடல் (வசீகரா .....) சந்தர்ப்பம் கிடைக்கக்கூடியவர்கள் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள் சுவிஸில் வதியும் நளாயினி தாமரைச்செல்வன் நல்ல அழகான காதல் கவிதைகளை எழுதியிருக்கிறார். என்ன ஆண்களுக்குக் கிடைத்த திரையுலகம் போன்ற வலிமை மிக்கதான ஒரு தளம் பெண்களுக்குக் கிடைக்கும் சாத்தியம் குறைவாக இருக்கிறது. காமம் அசிங்கம் என்று பெண்கவிஞர்கள் யாரும் சொன்னதாகத் தெரியவில்லை. அப்படியே யாரேனும் கூறியிருந்தால் விருப்பமில்லாப் பெண்ணின் மீது தனது புணர்ச்சியின் ஆளுமையை வெளிப்படுத்தும் ஆணின் மீதான வெறுப்பின் உணர்வே காமத்தை அசிங்கமாக எங்கேனும் முன்மொழியப்பட்டிருக்கும்.

Edited by valvaizagara

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

IVF தொழில்நுட்பம் வளர்த்துவிட்ட இந்தக் காலத்திலும் போய்.. தயங்கு.. இயங்கு.. முயங்கு.. மயங்கு என்று கொண்டு நிற்க ஏலாது. கலியாணமே இந்தக் காலத்தில் ஒரு வேஸ்டு. வாடகைக்கு ஒரு அம்மா பிடிச்சமா.. குழந்தையை பெத்துக் கொள்ள ஒப்பந்தம் போட்டமா.. காசக்கொடுத்தமா.. வாரிச எடுத்தமா.. வளர்த்தமா என்றிருக்கனும். ஒரே ஒரு வாரிசு என்றாலும் அம்மா என்றால் என்னென்று தெரியாமல் வளர்க்கனும்.. என்றதுதான் என்ர விருப்பம்..!

ஜஸ்டு ஒரு முட்டையும் விந்தும் சந்திக்க வைக்கிறதிற்கு.. இத்தனை பெரிய ஆர்ப்பாட்டம்.. கவிதை.. காதல்.. கலியாணம்.. நல்லா ஊரை ஏய்க்கிறாங்க..! :D:unsure:

நெடுக்கு..

உயிர்களின் உருவாக்கமே வேஸ்டு என்பதுபோல்த்தான் உங்கள் கருத்து அமைந்திருக்கிறது. ஒவ்வொரு உயிருக்கும் புணர்ச்சி என்பது இருக்கிறது. இதில் மனிதர் மட்டுமே இயற்கைக்குப் புறம்பான முறையில் எல்லாவற்றிலும் இயந்திரத்தனத்தை கடைப்பிடிக்கும் நிலையில் உள்ளனர். ஒரு பெண்ணை நேசித்து, அன்பில் இரண்டறக் கலந்து பெறுகின்ற வாரிசு வேஸ்டு ஆனால் ஒப்பந்தம் போட்டு கருமுட்டையையும், விந்தையும் இணைத்து அதனை வளர்த்து வாரிசாக்கி?.... ஆமா தெரியாமல் தான் கேட்கிறேன் நேசிப்பே வேஸ்டு என்று நினைக்கிறவர்களுக்கு வாரிசு எதற்கு? உயிர்ப்புள்ள அத்தனைக்கும் உணர்வுகள் இருக்கும் அந்த உணர்வுகள் வேஸ்டு என்று இயந்திரத்தனமாக வாழ்தல் என்றால் உயிர்ப்புள்ள வாரிசு எதற்கு?

அற்புதமான அழகான கவிதை. வார்த்தை பிரயோகம் அருமை பாராட்டுகள் சாகரா அக்கா தொடர்ந்து எழுதுங்கள்

சாகரா அக்காவின் கவிதையை பார்த்தவுடன் குறும்புத்தனமாக எனக்குள் சிறகடித்த ஒரு Hikoo கவிதை..........

"கவட்டு துவக்கின் மரண தாக்குதலில்

ஒரு இனிய நிலாவின்

புதிய ஜனனம்"

சீமான்,

"கவட்டுத் துவக்கு' என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு யாரும் எழுதக்கூடும் எதற்கும் பதிலை ஆயத்தமாக வைத்திருங்கள். தயவு செய்து டெமோ போட்டுக் காட்டி விடாதீர்கள். :unsure:

Edited by valvaizagara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.