Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கின் முதலமைச்சராக பிள்ளையான் பதவியேற்பார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கின் முதலமைச்சராக பிள்ளையான் பதவியேற்பார்

Thursday, 15 May 2008

கிழக்கு மாகாண முதலமைச்சராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவே நியமிக்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் தாம் தமது பதவிகளைத் துறக்கப் போவதாகவும் 12 அமைச்சர்கள் எச்சரித்திருக்கின்ற போதிலும், சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானே கிழக்கு மாகாண முதலமைச்சராக நியமிக்கப் படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் இன்று காலை தெரிவித்தன. இது தொடர்பான அரசாங்கத்தின் முடிவை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ இன்று வெளிப்படுத்துவார் எனத் தெரிகின்றது.

லண்டனில் விஜயத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ சிரேஷ்ட முஸ்லிம் அமைச்சர்கள் இருவருடன் இது தொடர்பாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கின்றார். ஹிஸ்புல்லாவே முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என அவர்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கை தொடர்பான சர்ச்சை தான் கொழும்பு திரும்புவதற்கு முன்னதாகத் தீர்த்துவைக்கப்பட வேண்டும் என அவர் அப்போது கேட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப் படுகின்றது. அத்துடன் பிள்ளையானே முதலமைச்சராக நியமிக்கப்படுவார் எனவும் அரசுத் தலைவர் அப்போது திட்டவட்டமாகத் கூறியிருக்கின்றார்.

ஹிஸ்புல்லாவை முதலமைச்சராக்குவதற்கு முஸ்லிம் அமைச்சர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் தொடர்பாகவும், இவ்விடயத்தில் ஹிஸ்புல்லா மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாகவும் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ பெரும் அதிருப்தியடைந்திருப்பதாகத் தெரிகின்றது. தான் நாடு திரும்புவதற்கு முன்னதாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வைக்காணுமாறு அரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளதையடுத்து, அரசுத் தலைவரின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ நேற்று ஹிஸ்புல்லாவை சந்தித்து இரண்டு மணி நேரம் சமரசப் பேச்சுக்களை நடத்தியிருக்கின்றார்.

பிள்ளையானை முதலமைச்சராக நியமிப்பது என்ற முடிவில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில், முஸ்லிம் அமைச்சர்கள் விதித்துள்ள நிபந்தனைதான் அரசாங்கத்துக்குப் பெரும் தலையிடியைக் கொடுக்கும் விவகாரமாக உருவாகியுள்ளது. இன்று நாடு திரும்பும் அரசுத் தலைவரைச் சந்தித்து இது தொடர்பாகப் பேசுவதற்கு முஸ்லிம் அமைச்சர்களின் குழு திட்டமிட்டுள்ள போதிலும், இப்பிரச்சினையைக் கையாளுமாறு பசில் ராஜபக்ஷவை அரசுத் தலைவர் பணித்திருப்பதாகத் தெரிகின்றது.

முஸ்லிம் அமைச்சர்கள் இருவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அரசுத் தலைவர், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு பிள்ளையான்தான் மிகவும் பொருத்தமானவர் எனவும், அரசாங்கத்தின் அந்த முடிவை மாற்ற முடியாது என உறுதியாகக் கூறியிருப்பதாகவும் தெரிகின்றது. இவ்விடயத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் முன்வைத்துள்ள கோரிக்கையை அவர் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். இவ்விடயத்தில் தன்னுடைய முடிவே இறுதியானது எனவும், அதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது எனவும் அரசுத் தலைவர் உறுதியாகக் கூறியிருக்கின்றார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 18 ஆசனங்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றது. இதில் ஆறு ஆசனங்களைப் பிள்ளையான்குழு கைப்பற்றியது. ஐந்து இடங்கள் ஐ.ம.சு.மு. பெற்றுக்கொண்டது. ஏனைய ஏழு முஸ்லிம் உறுப்பினர்களில் நான்கு பேர்தான் ஹிஸ்புல்லா தரப்பைச் சேர்ந்தவர்கள் எனச் சுட்டிக்காட்டிய அரசுத் தலைவர், ஏனைய மூவரும் அதாவுல்லா குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் பிள்ளையானின் தரப்பினரே அதிகளவு இடங்களைப் பெற்றிருப்பதால் அவரையே முதலமைச்சராக நியமிக்க வேண்டும் என அரசுத் தலைவர் திட்டவட்டமாகக் கூறியிருப்பதாகத் தெரிகின்றது.

அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ இன்று நாடு திரும்பியதும் இவ்விடயத்தை முடிவுக்குக் கொண்டுவருவதில்தான் தனது கவனத்தைச் செலுத்துவார் எனத் தெரிகின்றது. இந்த நிலையில் பிள்ளையான் நாளைய தினம் முதலமைச்சராகப் பதவியேக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகளவுக்கு இருப்பதாகத் தெரிகின்றது. ஹிஸ்புல்லா தரப்பினர் முரண்டு பிடித்தால் அவருக்கு முக்கிய வெளிநாட்டுத் தூதுவர் பதவி ஒன்றை வழங்கி அவரைச் சமாதானப் படுத்துவதற்கும் அரசாங்கத் தலைமை திட்டமிட்டிருப்பதாகத் தெரிகின்றது.

http://www.ajeevan.ch/content/view/2711/1/

  • கருத்துக்கள உறவுகள்

ரண்டு பேரில ஒராளுக்குக் கைக்கெட்டியும் வாய்க்கெட்டேல்ல எண்ட நிலம வரப்போது போல கிடக்குது.

செய்தியைப் பார்த்தவுடன் நெஞ்சுக் குழியின் தண்ணீர் வற்றிவிட்டது. என்ன கொடுமை ஐயா இது. பிள்ளையானை விடவும் புத்தி குறைந்த ஒரு ஜனாதிபதியா இலங்கையை ஆள்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியைப் பார்த்தவுடன் நெஞ்சுக் குழியின் தண்ணீர் வற்றிவிட்டது. என்ன கொடுமை ஐயா இது. பிள்ளையானை விடவும் புத்தி குறைந்த ஒரு ஜனாதிபதியா இலங்கையை ஆள்கிறார்.

எல்லாம் அவன் செயல் இறைவா???

அவரிடம் இருந்து கருணாவைப்பிரித்தோம் என்பவர்களுக்கான

பதிலாக இது இருக்கலாம்

யாரு

யாரிடம்

யாரைப்பிரிப்பது????

ஏனோ தெரியாது

இந்த உலகம்

முழுமையா ஒருநாளும்

திருந்த மாட்டுதாம்...

அட நல்லவங்களா இல்லாட்டாலும் பறவயிலை.

ஆனா மருந்துக்கும் அறிவாளிகளை காணக்கிடைக்கிதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஏனோ தெரியாது

இந்த உலகம்

முழுமையா ஒருநாளும்

திருந்த மாட்டுதாம்...

அட நல்லவங்களா இல்லாட்டாலும் பறவயிலை.

ஆனா மருந்துக்கும் அறிவாளிகளை காணக்கிடைக்கிதில்லை.

உங்கள் கருத்துப்படி

அறிவாளிகள் மட்டும் இருந்தால்

உலகம் மிக ஒழுங்காக இருக்கும்

அப்போ

நீலன் திருச்செல்வம்............

இன்றைய சந்திரகாசன் வரை......

அறிவாளிகள்தானே???

ஏன் இப்படியிருந்தார்கள்???

இருக்கிறார்கள்???

முதலமைச்சராக பிள்ளையான் நாளை சத்திப்பிரமானம்

நாளை மே16ம் திகதி பிற்பகல் சுபநேரமான 2:07 மணிக்கு கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக பிள்ளையானுக்கு முடிசூட்ட முடிவு செய்யபட்டுள்ளதாக அறியவந்துள்ளது.

இதற்காக நாளை பிற்பகல் 1;:30 மணிக்கு மஹிந்தவின் காரியாலயத்திற்கு வருகை தரும் படி மஹிந்தவின் உத்தரவுப்படி அக் கரியாலய உயரதிகாரி ஒருவரின் மூலம் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இச் செய்தியை உறுதிப்படுத்தி சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் 'லங்கா டீசென்ட்' இணையதளத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.

இன்று மாலை அரலிமாளிகையில் நடைபெறவிருக்கும் முஸ்லிம் அமைச்சர்களுடனான சந்திப்பில் இச் செய்தியை மஹிந்த உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அவ்வமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

Pillayan to be sworn in tomorrow?

[2008-05-12 5.00pm] TMVP leader Sivanesathurai Chandrakanthan alias Pillayan will be sworn in as chief minister of the Eastern Province at the auspicious time of 2.07 pm tomorrow (May 16th), a senior government minister told 'Lanka Dissent.'

Mr. Chandrakanthan has been invited by an official of the Presidential Secretariat to be at the venue by 1.30 pm for his oath taking.

The president will announce his choice for the post of East CM at a meeting with Muslim government ministers at Temple Trees this evening, the senior minister added.

  • கருத்துக்கள உறவுகள்

நாளை பிற்பகல் பிள்ளையான் 2.07 மணியளவில் பதவியேற்க உள்ளார் என ஜனாதிபதி செயலகத் தகவல்கள்

தெரிவிக்கின்றன.

[ வியாழக்கிழமை, 15 மே 2008, 11:42.41 AM GMT +05:30 ]

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையான் நாளைய தினம் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாகத் தெரியவருகிறது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நாளை பிற்பகல் 2.07 மணியளவில் பதவியேற்க உள்ளார் என ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக நாளை பிற்பகல் 1.30 அளவில் ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு பிள்ளையானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் எமக்குத் தெரிவித்தார்.

இன்று மாலை முஸ்லிம் அமைச்சர்களுடன் நடைபெறும் கூட்டத்தில் கிழக்கின் முதலமைச்சராக யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்து ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளதாகத் தெரியவருகிறது.

tamilwin.com

கிழக்கு முதலமைச்சர் தெரிவில் சிங்கள மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது - ஜாதிக ஹெல உறுமய

[ வியாழக்கிழமை, 15 மே 2008, 07:01.53 AM GMT +05:30 ]

கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவின் போது சிங்கள பிரதிநிதிகளிடம் கருத்து கோரப்படாமல் சிங்கள மக்களுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் பிரதான கூட்டணி கட்சிகளில் ஒன்றான ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க இணையதளமொன்றுக்கு அளித்த நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.

சிங்கள பிரதிநிதிகளின் கருத்துக்கள் அறியப்படாது, தமிழ் முஸ்லிம் உறுப்பினர்களின் விருப்பத்தின்படி முதலமைச்சர் தெரிவு செய்யப்படுவதற்கு தமது கட்சி கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சிங்களத் தலைவர்களது கருத்துக்களும் அறியப்பட வேண்டும் என தமது கட்சி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என தமிழர்களும், ஹிஸ்புல்லாவிற்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என முஸ்லிம்களும் கோரிக்கை விடுக்கின்றனர். எனினும், சிங்களப் பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 25 வருட காலமாக கிழக்கு வாழ் சிங்களவர்கள் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலைமையின் கீழ் சிங்களவர்கள் தமிழ், முஸ்லிம்களின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டவர்களாக மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் 316,101 சிங்களவர்கள் வாழ்ந்து வருகின்றனர். 21.63 வீதமான சிங்களவர்கள் கிழக்கில் வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களில் 4 சிங்கள உறுப்பினர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கில் நான்கு உறுப்பினர்கள் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளதனால் அவர்களிடம் முதலமைச்சர் தெரிவு குறித்து கலந்தாலோசிக்கப்படவில்லை. இது சிங்கள மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகவே கட்சி நோக்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, முதலமைச்சர் தெரிவின் போது சிங்களப் பிரதிநிதிகளிடமும் கருத்து அறியப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுப்பதாக கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

tamilwin.com

Edited by nunavilan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதாவது யாகம் நடத்தி பிள்ளையான் பதவி ஏற்காமல் தடுக்க ஏற்பாடு செய்ய முடியுமா என யாராவது கேட்டுப்பார்த்தீர்களா? ஏனென்றால் எங்கள் ஊரில் செயலலிதா என்பவர் இது போல யாகங்கள் செய்து கொண்டிருப்பதில் வல்லவர். நம்பூதிரியிடம் சென்று சோளி உருட்டி சோசியம் பார்க்கலாம். இப்படி பலப்பல விசயங்கள் இருக்கின்றன. :rolleyes:

நாளை பிற்பகல் பிள்ளையான் 2.07 மணியளவில் பதவியேற்க உள்ளார் என ஜனாதிபதி செயலகத் தகவல்கள்

தெரிவிக்கின்றன.

இவருக்கு நாளை பிற்பகல் 2.07 இலிருந்து எமகண்டம் ஆரம்பம் :rolleyes:

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு நாளை பிற்பகல் 2.07 இலிருந்து எமகண்டம் ஆரம்பம் :lol:

அப்படிச் சொல்ல ஏலாது. முன்னாள் வடக்குக்கிழக்கு முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் இருக்கேக்க.. இவருக்கு மட்டும்..?!

எங்கிணையன்.. புகலிடமும்.. ஓசிச் சாப்பிடும்.. பாதுகாப்பும் தருவம் என்ற படியாத்தானே துணிஞ்சு நிற்கினம். துரோகம் செய்வம் என்று.

இவ்வளவு நாளும் கிழக்கு புறக்கணிக்கப்படுகுது என்றுதான் புலி எதிர்ப்பைப் பற்றிக் கதைச்சவர்.. இப்ப தேர்தல் வெற்றிக்குப் பிறகு தமிழ் தேசியமோ மாயை என்ற மகான் அல்லவா.. பிள்ளையான் என்ற கிழக்கின் விடிவெள்ளி.

மகிந்தருக்கு நல்ல முட்டாள் ஒன்று தேவையா இருக்குது கிழக்கில அமர்த்த. அதுதான்...! :D:rolleyes:

Edited by nedukkalapoovan

அண்ணா குகதாசன்... நான் ஏதோ என்ர புலம்பலைச்சொன்னேன் அவ்வளவுதான்

நீலன் திருச்செல்வங்கள்.. புத்திசாலிதான்.. நாங்கள் முட்டள்களாக இருக்கும்வரை.

நீங்கள் ஏன் பிள்ளையான்ரகதைக்குள்ள நீலனை கொணந்தனிங்கள்?

Edited by Sooravali

நாளைய பதவி ஏற்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதா டெய்லிமிரர் சொல்கிறது

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

நாளைய பதவி ஏற்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதா டெய்லிமிரர் சொல்கிறது

Swearing-in of CM postponed

The swearing-in ceremony of the new Chief Minister for the eastern province scheduled to take place tomorrow before President Mahinda Rajapaksa has been postponed, the Presidential Secretariat said . - டெயிலிமிரர்.

மகிந்தருக்கு ஏதோ குழப்பமான நிலை போல..! எல்லாப் பக்கத்தாலும் இடி விழுகுதாக்கும்..! வேலில போன ஓணானை பிடிச்சு மடில விட்ட கதையாப் போச்சு..! :lol::rolleyes:

Edited by nedukkalapoovan

மகிந்தருக்கு ஏதோ குழப்பமான நிலை போல..! எல்லாப் பக்கத்தாலும் இடி விழுகுதாக்கும்..! வேலில போன ஓணானை பிடிச்சு மடில விட்ட கதையாப் போச்சு..! :lol::rolleyes:

அது இன்னும் கொஞ்ச நாளில் மகிந்தரின் வேட்டிக்குள் போய் விளையாடப் போகிறது. அப்போது பாருங்கள் வேடிக்கையை!!! :D:D:D

இப்ப இதுகும் பிள்ளையா(ன்)ர் பிடிக்கப் போய் குரங்காக முடிஞ்ச கதை தான் போல .....

பிள்ளையான் நாளை பதவியேற்க உள்ளார்

Thursday, 15 May 2008

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நாளை பிற்பகல் 2.07 மணியளவில் பதவியேற்க உள்ளதாகத் தெரியவருகிறது.

இதற்காக நாளை பிற்பகல் 1.30 அளவில் ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு பிள்ளையானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் எமக்குத் தெரிவித்தார்.

இன்று மாலை முஸ்லிம் அமைச்சர்களுடன் நடைபெறும் கூட்டத்தில் கிழக்கின் முதலமைச்சராக யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்து ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளதாகத் தெரியவருகிறது.

http://www.ajeevan.ch/content/view/2725/1/

Edited by AJeevan

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் அமைச்சர்களின் அழுத்தத்தால் மகிந்த நல்லாய் குழப்பி போயுள்ளார். தனது பதவிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் ஆப்பு வைக்கலாம் என மகிந்த பயப்படுகிறார் போல உள்ளது. எப்படியோ குட்டை குழப்பப்பட்டுள்ளது. :rolleyes::lol:

இப்ப இதுகும் பிள்ளையா(ன்)ர் பிடிக்கப் போய் குரங்காக முடிஞ்ச கதை தான் போல .....

பிள்ளையான்(ர்) பிடிக்க குரங்கானால் அதை விட்டு விட்டு இன்னொரு பிள்ளாயான் பிடிக்க வேண்டியது தான்! என்ன நான் சொல்றது!!! :rolleyes:

கடைசியில் ஒரு சிங்களவர் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில் ஒரு சிங்களவர் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக நியமிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

கவியா, கெல உறுமையாவும் அதை தானே சொல்கிறது

பிள்ளையான் நாளை பதவியேற்க உள்ளார்

Thursday, 15 May 2008

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நாளை பிற்பகல் 2.07 மணியளவில் பதவியேற்க உள்ளதாகத் தெரியவருகிறது.

இதற்காக நாளை பிற்பகல் 1.30 அளவில் ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு பிள்ளையானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் எமக்குத் தெரிவித்தார்.

இன்று மாலை முஸ்லிம் அமைச்சர்களுடன் நடைபெறும் கூட்டத்தில் கிழக்கின் முதலமைச்சராக யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்து ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளதாகத் தெரியவருகிறது.

http://www.ajeevan.ch/content/view/2725/1/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Eastern CM swearing-in put off

[TamilNet, Thursday, 15 May 2008, 13:02 GMT]

Sri Lanka's President had initially decided to appoint Sivanesathurai Chandrakanthan alias Pillaiyan, the de-facto leader of the paramilitary-cum-political party, the TMVP, as the Chief Minister for Eastern Province, informed sources in Colombo said. However, due to strong objection from Muslim ministers supporting M.L.A.M.Hizbulla for the post, there were discussions on the issue at Temple Trees till late Thursday evening. The swearing-in ceremony scheduled for Friday has been postponed, sources said.

As the news of the appointment of Pillayan as CM spread, there were celebrations by the TMVP paramilitary personnel in Batticaloa where fire crackers were lit in a provocative way near the Muslim villages.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிள்ளையான் நாளைய தினம் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாகத் தெரியவருகிறது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நாளை பிற்பகல் 2.07 மணியளவில் பதவியேற்க உள்ளார் என ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக நாளை பிற்பகல் 1.30 அளவில் ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு பிள்ளையானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் எமக்குத் தெரிவித்தார்.

இன்று மாலை முஸ்லிம் அமைச்சர்களுடன் நடைபெறும் கூட்டத்தில் கிழக்கின் முதலமைச்சராக யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்து ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவிக்க உள்ளதாகத் தெரியவருகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது

எது நடக்கவேண்டுமோ........

அதை அவன் தீர்மானிப்பான்........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.