Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தில வாழும் நம்மவர்களின் ஆக்கங்கள், படைப்புக்கள் நம்மவர்களாலேயே நையாண்டி செய்யப்படுவதற்கான காரணங்கள் எவை?

23 members have voted

  1. 1. புலத்தில வாழும் நம்மவர்களின் ஆக்கங்கள், படைப்புக்கள் நம்மவர்களாலேயே நையாண்டி செய்யப்படுவதற்கான காரணங்கள் எவை?

    • மற்றவர்கள் மீது பொறாமை, எரிச்சல்
      2
    • நமது இனம் பற்றிய தாழ்வு மனப்பான்மை
      5
    • ஊரில பட்ட மனக்கசப்புக்கள்
      0
    • நம்மவர்களை நையாண்டி செய்தால் பின்விளைவுகள் ஒண்டும்வராது எண்டுற துணிச்சல்
      1
    • நம்மவர்கள் படைப்புக்களை ரசிக்கும் கலைநயம் இல்லாமல் இருப்பது
      3
    • நம்மவர்கள் ஆற்றல்கள் அற்ற வெற்றுச்சோத்திகள் எண்டுற எண்ணம்
      4
    • தனிப்பட்ட கோப, தாபங்கள்
      1
    • வேறு ஏதாவது பதில்
      7

Please sign in or register to vote in this poll.

Featured Replies

முரளி நான் சினிமாவை மட்டும் சொல்லவில்லை கதை, கவிதை கட்டுரை நாடகம் எதுவாக இருந்தாலும் பொருந்தும். கவிதை கதைகள் எழுதும் கனடாவை சேர்ந்த தமிழ் நதி என்பவரின் வலைப்பதிவை பார்த்திருக்கிறீர்களா? அவரின் எழுத்து நடை தனித்துவமானது. அவரது எழுத்தை பலரும் பாராட்டியே வந்துள்ளார்கள்.

ஒரு உதாரணத்துக்கு இப்படி ஒரு படைப்பை (இது இந்தியாவில் உள்ளவரால் எடுக்கப்பட்டது) கொடுத்துவிட்டு கல்லெறியாதே கேலி செய்யதே என்று சொனால் நான் கேலி செய்யாமல் இருக்கலாம் ஆனால் இதை ஆதரியுங்கள், வளர்த்துவிடுங்கள் என்று யாரையும் கேட்டீர்கள் என்றால் அடிக்க தான் வருவார்கள்.

http://www.youtube.com/watch?v=jW2PgQrymRY

http://www.youtube.com/watch?v=w0iXYpHXWIA

http://www.youtube.com/watch?v=PCRXZJHm9l8

  • தொடங்கியவர்

நன்றி சகீரா உங்கள் கருத்துக்கு..

நன்றி குளக்காட்டன் வீடியோ இணைப்புக்கு,

இந்த வீடியோவில கல்லெறி விழுறமாதிரி என்ன இருக்கிது எண்டு எனக்கு தெரிய இல்ல. இந்த மூன்று வீடியோக்களும் ஒண்டு சுமார் 28,784 தடவைகளும் இன்னொண்டு சுமார் 124,259 தடவைகளும், இன்னொண்டு சுமார் 16,662 தடவைகளும் பார்வையிடப்பட்டு இருக்கிது. இது பெரிய ஒரு விசயம். மேலும் அவர் இத நகைச்சுவைப் பகுதியிலதான் போட்டு இருக்கிறார். சரி அத விடுங்கோ.

நான் கொஞ்சக்காலத்துக்கு முன்னம் சிவாஜி படம் பார்த்தன். அதப்படம் எண்டு சொல்லிறத விட வீடியோ கேம் எண்டு சொல்லலாம். அப்படியான ஒரு படைப்பை நம்மண்ட ஆக்கள் நையாண்டி செய்து பார்க்கட்டும் பாப்பம். அந்த படத்தில பங்கு ஆற்றியவர்களுக்கு சைக்கோ எண்டு நம்மண்ட ஆக்கள் பட்டம் கொடுக்கட்டும் பார்ப்பம்.

அவேளால முடியாது. ஏன் எண்டால் அதப்பற்றி இப்ப சொல்லவெளிக்கிட்டால் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரு பாசிச்சாயத்தாள் சோதனை மாதிரி ஒரு உதாரணம் சொல்லிறன் சிவாஜி படத்தில இருந்து..

ஒரு சண்டைக்காட்சி...

அதில..

அருமந்த - இசைக்கருவிகளை வைத்து பிரளயம் செய்கின்றார்கள்...

அதில ஒரு நிலையில...

ஒருத்தர ரசனிக்காந்த் அடிக்க அவர் அது பெரிய ஒரு வயலின் எண்டு நினைக்கிறன்... அதிண்ட நரம்புகளில குண்டி சறுக்கிக்கொண்டு மேலயும், கீழயும் போறார். அப்பிடி கலைஞர்கள் தெய்வமாக போற்றுகின்ற ஒரு இசைக்கருவியை வைத்து ரணமாடுறத எல்லாம் நம்மண்ட ஆக்கள் ரசிச்சு பாப்பீனமாம்.

வயலின் நரம்புகளில குண்டி சறுக்க வில்லன் ஒருத்தன் மேலையும் கீழயும் விழுறது நம்மண்ட ஆக்களுக்கு வித்தியாசமா தெரிய இல்ல. ஆனா நாம ஏதாவது புதுமை எண்டு சொன்னால் எமக்கு சைக்கோ பட்டம் தரப்படும்.

என்னைப்பொறுத்தவரையில் நான் சிவாஜி படத்தை பார்த்தபோது பெற்ற அனுபவத்தை விட மேலே நீங்கள் காணொளியில் இணைத்த காட்சிகள் எவ்வளவோ திறம் எண்டு சொல்லுவன்.

  • தொடங்கியவர்

இதயும் ஒருக்கால் பாருங்கோ..

சிவாஜியாம் சிவாஜி... ஒருத்தன் ரசனியிட்ட அடிவாங்கி வாயில ஊதுற வாத்தியத்த குண்டியுக்க சொருகிக்கொண்டு நிக்கிறான். இன்னொருத்தன் ரசனியிட்ட அடிவாங்கி வயலின் நரம்பில குண்டி சறுக்க மேலையும், கீழயும் போய்வாறான்.. கருமம் கருமம்

இதெயல்லாம் ரசிக்கிற நம்மண்ட ஆக்களுக்கு நாம புதுமை செய்யுற பார்க்க பொறுக்க ஏலாம இருக்கிதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தாத்தா வயதுள்ள கதா நாயகனுடன்(ரஜனி தாத்தா, கமல் பாட்டன், விஜயகாந்த் அப்பு) பேர்த்தி வயதுள்ள கதா நாயகி ஓடிப்பிடித்து விளையாடும் இம்சைகள் எம்மவர்களின் படைப்புகளில் இல்லை. ஆனால் தென்னிந்தியப்படைப்புகளில் அதிகம் இருக்கிறது. நாங்களும் ஆ வென்று பார்க்கிறோம். எம்மவர்களின் படைப்புக்களினைப் புறக்கணிக்கிறோம். என்ன கொடுமையப்பா?

ஐயாமாரே! அம்மாமாரே! தம்பிமாரே! தங்கைமாரே! எல்லாருக்கும் அம்பலத்தாரின்ரை வணக்கமுங்கோ!

நிறையப்பேர் ஆளாளுக்கு பலகருத்துக்களையூம் போட்டிபோட்டுக்கொண்டு அள்ளிவிட்டிருக்கிறியள் படிக்கச் சந்தோசமாக்கிடக்கு. நானும் ஏதோ என்ரை அறிவூக்கு எட்டின விசயங்களைக் கொட்டிவிடுறன்.

படைப்புக்கள் எண்டு பார்க்கேக்கை நம்மவர் படைப்புக்களிலை மட்டுமன்றி நாடுமொழி எல்லைகளைத் தாண்டி எல்லாச் சமுதாயங்களிலையிருந்தும் உலகம்போற்றும் நல்ல படைக்புக்களும் வந்திருக்கு இனியில்லையெண்ட கழிசறைக் குப்பையளும் வந்திருக்கு ஆனபடியாலை அந்தநாட்டுப் படைப்பு உதவாது இந்த நாட்டுப் படைப்பு உதவாது அல்லது நம்மவர் படைப்புக்கள் மட்டுமே சிறந்தது எண்டு சொல்லவாறது காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு எண்டகதைதான்.

புலம்பெயர்நாடுகளில் உள்ள நம்மவையளிலை கனபேர் தங்களிட்டைப் போதிய பணம் இருக்கு வசதியிருக்கு தங்களது அந்தஸ்த்தை நிலைநாட்ட எதாவது செய்ய வேண்டுமென்கிற எண்ணத்திலை எழுத வருகினம் . அப்படிப்பட்டவையளிட்டை இருந்துதான் அநேகமான குப்பைகள் வெளிவருகுது.

கண்ட இடத்திலை எல்லாம் "அண்ணை நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறன். படிச்சுப் பார்த்திட்டுச் சொல்லுங்கோ." எண்டு தந்தவையளின்ரையூம் கடிதத்தில அனுப்பிப்போட்டு " அண்ணை உங்கட அபிப்பிராயம் என்ன" எண்டு கேக்கிறவையளின்ரையூம் ஒவ்வொரு விழா முகப்பிலையூம் வைச்சு வித்தவையளிட்டை வாங்கின புத்தகங்களுமே என்னட்டை ஒரு அலுமாரி நிறையக்கிடக்கு. நான் ஆரின்ரையூம் மனத்தைப் புண்படுத்திறதுக்காகச் சொல்லேலை ஆனால் அந்த அலுமாரி முழுக்கத் தேடினால் விரல்விட்டு எண்ணக்கூடிய தரமான படைப்புக்களே கிடைக்கும்.

போராட்டத்தை ஆவணப்படுத்தப்படுவது என்பது அடுத்த கருத்துக்கு இடமின்றி பூரணமாக செய்யப்பட வேண்டியதே . ஆனால் இதைத் தவிரவூம் நல்ல இலக்கியங்கள் படைக்க எத்தனையோ அம்சங்களும் கருப்பொருட்களும் இருக்கின்றன என்பதை தம்மை இலக்கியவாதிகள் என இனங்காட்டிக்கொள்ள முயலும் பலரும் ஏனோ மறந்துவிடுகிறாகள்.

ஒரு இனம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள எத்தனையோ தனித்துவமான பண்புகள் இருக்க இவ்வாறான எழுத்தாளர்கள் மீண்டும் மீண்டும் அநேகமாக ஒரே விடயத்தையே ஒரே பாணியில் எழுதுவதால் இவர்களில் அநேகரது எழுத்துக்களும் ஒன்றுபோலக் காணப்பட்டு படிப்பவர்களுக்கும் பல சமயங்களில் இவ்விலக்கியங்கள் எல்லாம் ஒன்றுபோலக் காணப்படுகின்றன.

நாங்களே குறுகிய வட்டத்தைக் கீறிக்கொண்டு இதுக்குள்ளைதான் இப்படித்தான் எழுத வேணும் எண்டு எழுதாமல் எழுத்தாளா;கள் மாறுபட்ட சிந்தனைகளுடன் எழுதினால் இன்னும் பல நல்ல இலக்கியங்கள் நம்மவரி டமிருந்து பிறக்குமென நம்பலாம்.

ஈழத்து இலக்கிய வரலாற்றில் சர்வதேச ரிதியில் இனங்காணப்பட்ட செ.யோகநாதன் எஸ்.பொ (எஸ் .பொன்னுத்துரை) புதுவை இரத்தினதுரை முத்துலிங்கம் டொமினிக் ஜீவா காசியானந்தன் செங்கை ஆழியான்.......... போன்றவர்களது ஆக்கங்களைப் படித்தல் புரியூம் அவர்களெல்லாம் இப்படிக் கண்ட குப்பைகளையூம் கொட்டி நம்மவர் இலக்கியத்தை நாறடிக்காமல் எவ்வளவூ அழகான இலக்கியங்கள் படைத்திருக்கிறாh;களென்பது.

அவர்களோடு ஒப்பிடும்போது இங்கு பல எழுத்தாளரது ஆக்கங்களும் தரமான இலக்கியங்களே இல்லை வெறுமனே வார்த்தைகளின் குவியல்களே!

வெறுமனே நாங்கள் நல்ல இலக்கியங்கள் படைக்கிறௌம் என்று எமக்கு நாமே புகழாரங்கள் சுட்டிக்கொண்டு இருப்போமேயானால் சங்க கால சங்கமருவிய கால மூத்த தலைமுறையினர் நமக்கு விட்டுச் சென்றதுபோல அடுத்த சந்ததியினருக்கு விட்டுச் செல்வதற்கு எம்மிடம் நல்ல இலக்கியமெதுவூம் இருக்காது. இதை உணர்ந்து இன்றைய எம் தமிழ் எழுத்தாளர்களும் நல்ல தமிழ்க்காவியம் படைப்பார்களா? அல்லது வெறுமே தம் பெயருக்கும் புகழுக்குமாக இலக்கிய வியாபாரம் செய்வார்களா?

இரண்டு வரி எழுதுவம் எண்டு எழுதத் தொடங்கி இவ்வளவூ எழுதினதிலை மூச்சு வாங்குது.

கிழவன் வயசுபோன காலத்திலை இப்படிப் போட்டுத்தள்ளுறானே எண்டு ஆளாளுக்குப் பாய்ஞ்சு குதறிக் கிழிச்சுப்போடாதையூங்கோ! வயசான காலம் எங்கையாவது படக்கூடாத இடங்களிலை பட்டிட்டால் பொசுக்கெண்டு போனாலும் போடுவன். பிறகு அநியாயத்துக்கு அம்பலத்தாரைக் கொண்ட பாவம் உங்களைச் சும்மாவிடாது.

Edited by ampalathar

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூறிய காரணம் எதுவும் அல்ல முக்கிய காரணம் தமிழனின் ஜின்ஸ் (மரபணு) கல்தோன்றி மண் தோன்றா காலதிற்கு முன் தோன்றிய மூத்த குடி தமிழன் அப்ப இருந்து இப்ப வரையும் அவனின் மரபணுவில் அது இருக்கின்றது இதற்கு போய் நாங்கள் ஆராய்ச்சி செய்வது அவ்வளவு புத்திசாலிதனம் இல்லை என்பது என்னுடைய கருத்து. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கருத்துக்களத்தில் எனது கருத்துகளையும் பதிவு செய்கிறேன்.

ஆலம்பழத்தைப் பார்த்தால் ஆலமரம் இதிலிருந்துதான் தோன்றிதென்றால் முதலில் ஆச்சாரியமாகத்தான் இருக்கும். அந்த விதைக்குள் விருட்சம் மறைந்திருந்ததை புறக்கண்ணால் காண முடியாதுதான்! முளைவிட்ட பின்தான் அதன் தனத்துவம் தெரியும்.

இதைப் படைப்பாளிகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம் - இவர்களிடம் படைப்பாற்றல் இப்படியாக வெளிப்படும். பொதுவாக படைப்புகள் அல்லது வெளிப்பாடு, 1. யார் (படைப்பாளி) 2. யாருக்கு (வாசகர்கள், நோக்கர்கள், நேயர்கள் இன்ன பிற...) 3. எதை (படைப்பு அல்லது ஆக்கம்) ஆக்கிய முப்பரிமாணத் தளத்திலிருந்துதான் வெளிவரும்.

இங்கே படைப்பாளியின் இருப்பை நிலைநாட்டும் 'யார்?' என்பதே பல்வேறு வினாக்களாகி விரிவுறும் சூழலில் வாழும்போது எதிர்கொள்ளவேண்டியவை பல.

நாம் யார்?

எமது தனித்துவ அடையாளங்கள், நமது மூலம், நமது இருப்பின் யதார்த்தம்... இப்படியாக எழும் இயல்பான உந்துதல்கள் தரும் உண்மைகள் ஆக்கதாரரை படைக்க வைக்கிறது.

- காய்க்கிற மரத்திலதான் கல்லெறி விழும்!

:D

படைப்புகள் எமக்கான தனித்துவத்துடன் இருக்கவேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகின்றது. பொதுமைப்பட்ட தனித்துவத்தை ஏற்றுக்கொள்ளும் நிலமை வந்தால் அதுவே தேசியத்தை வலிமைப்படுத்தும் சக்தியாக இருக்கும்

பல கூறுகளாக பிளந்துபட்ட சமூக அமைப்பில் பொதுமைப்பட்ட தனித்துவம் என்பது மிக சிக்கலான விடயம். தனி மனிதனின் உளவியல் தன்மைபோல் ஒரு சமூகத்தின் உளவியல் தன்மையை அதன் சாரங்களை விளங்குவதன் ஊடாகவே இதை அணுக முடியும்.

படைப்புக்கள் பிளந்துபட்ட சமூகங்களின் ஏற்ற தாள்வுகளை இயல்பாக வெளிப்படுத்துவனவாக இருக்கும் போது அவைகளுக்கு பொவான ஒரு அங்கிகாரம் அல்லது ஆதரவு எதிர்பார்க்க முடியாது உள்ளது.

நாம் எமது சமூகத்துள் இருக்கும் இடைவெளிகளையும் ஏற்ற தாள்வுகளையும் எவ்வளவு தூரம் குறைக்கின்றோமோ அப்போதே எமக்கான படைப்புகள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் நிலமை வரும்.

தென்னிந்திய சினிமா பற்றிய கருத்துக்கள் பலதும் பகிரப்பட்டது. இதில் ஒரு விடயம் முக்கியமானது. உதாரணமாக ஒரு சினிமா பாடல் காட்சியை எடுத்துக்கொண்டால் அவ்வாறான ஆடலும் பாடலும் எந்த சமூகத்தின் நடைமுறை வாழ்விலும் இல்லை. அது ஒரு தூரத்து கனவாக உள்ளது. இதையே அனைத்து சமூகத்திற்கும் பொதுவானதாக முன்வைக்க முடிகின்றது. சமூகத்தின் நடைமுறையில் இல்லாத ஒன்றை முன்நிறுத்த வேண்டியுள்ளது. நடைமுறையில் உள்ளதை முன்நிறுத்தும் போது எல்லா சமூகமும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. இதற்கு சமூகங்களுக்கு இடையே உள்ள பிளவுகள் ஏற்ற தாள்வுகள் பிரதான காரணமாக உள்ளது. ஒரு சமூகத்தின் இயல்பை என்னுமொரு சமூகம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.

இவ்வாறான சிக்கல்களுக்கு புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களும் அவர்களின் படைப்புக்களும் விதிவிலக்கல்ல.

ஒரு வானொலியில் ஒரு ஊரின் நடைமுறை பேச்சுவளக்கு ஆதிக்கம் செலுத்துகின்றது என்று வைத்துக்கொள்வோம், ஒருவர் படைப்பில் ஒரு ஊரின் பேச்சுவளக்கு இயல்பாக வெளிப்படுகின்றது என்று வைத்துக்கொள்வோம் , இங்கே படைப்புகளையும் அதன் கருவையும் இருப்பில் இருக்கும் ஏற்றதாள்வுகள் ஊக்கப்படுத்தவும் ஆதரிக்கவும் பின்னடித்து விடுகின்றது. எல்லாம் எமது பொதுவான தனித்துவத்தின் அலகுகள் எல்லாம் ரசனைக்குரியவை என்ற எண்ணம் படைப்பாளிக்கும் படிப்பவருக்கும் முதலில் வரவேண்டும். அவற்றை சமூகப்பிளவுகளும் அதனால் காலாகாலம் வளர்ந்து விட்ட சமூக உளவியலும் சிதைத்த வண்ணம் உள்ளது.

சமூகத்தின் இலக்கியத்தை எவரும் இயல்பாக படைக்க முடியும். அதனுடாகவே எமது சமூகத்தை உறுதியாக நிலைநாட்ட முடியும். ஆனால் படைப்புகள் செய்வதற்கு தகுதி தேவை என்ற எண்ணம் எம்மிடம் வலுவாக உள்ளது. படைப்புக்களை சமூக ஏற்ற தாள்வுகளை அடிப்படையாக கொண்டு அவற்றில் ஆதிக்கம் கொண்டு அலட்சியம் செய்வதும் சுய தனித்துவத்தை நிலைநாட்ட இவ்வாறான காரியங்களை பாடைப்பாளிகள் செய்வதும் மலிந்து விட்ட ஒன்றாக எமது சமூகம் உள்ளது. முப்பதாண்டுகால ஈழத்து இலக்கிய வரலாற்றை போர்க்கால இலக்கியங்கள் இன்றி அடுத்த தலைமுறை இனம்காண முடியாது. அனால் போர்க்கால இலக்கியங்களை புறந்தள்ளிவிடும் எத்தனையோ இலக்கிய படைப்பாளிகளும் அவர்களின் சந்திப்புகளும் நடந்தவண்ணம் தான் உள்ளது.

என்று ஒரு படைப்பாளி சாதி மத வர்க்க பிரதேசவாதங்களை கடந்து ஈழத்தின் அனைத்து சமூகத்தின் வாழ்வியல் முறையையும் அதன் இயல்பையும் மனதார நேசித்து அதற்கொரு பொதுமைப்பட்ட தனித்துவத்தை தன்னளவில் உணர்கின்றானோ அவற்றுக்கு மரியாதை செய்கின்றானோ அன்றே படைப்புகளில் பொதுமைப்பட்ட தனித்துவம் வெளிப்படும். அவ்வாறான ஒரு பொதுமைப்பட்ட தனித்துவத்தை மக்களும் உணர்கின்ற போது ஏற்றுக்கொள்கின்ற போது தமிழினம் வலுவுள்ள ஒரு இனமாக இருக்கும். இவ்வாறான ஒரு நிலமைக்கு போர்க்கால இலக்கியங்கள் கணிசமான அளவு பங்களிப்பை செய்துகொண்டிருக்கின்றது என்பது எனது ஆழமான நம்பிக்கை.

  • தொடங்கியவர்

ஆக மொத்தத்தில நம்மவர்கள் படைப்புக்கள் செய்வதா இருந்தா திருஞானசம்மந்தர் சுவாமிகள் மாதிரி

தோடுடைய செவியன் எண்டு பாடவேணும் எண்டு சொல்லிறீங்கள். ஆனால்..

மற்ற நாட்டுக்காரன் தமிழங்கள் எப்பிடியான படைப்புக்கள் செய்தாலும் காசக்கொண்டுபோய் கொட்டுவீங்கள்.

இஞ்ச நாம செய்யுறத ஓசியில பார்க்கிறதுக்கு நையாண்டி வேற...

சரி அத விடுங்கோ..

நீங்கள் சொன்னமாதிரியான படைப்புக்கள் செய்த ஆக்கள் உதாரணமா நையாண்டி மேளம், படலைக்கு படலை ஆக்கள் எத்தின மில்லியன் ஸ்ரேலிங் பவுண்டு உழைச்சவேள்? அவேள் செய்தது எல்லாம் உங்களுக்காக ஓசியிலதானே?

நான் படலைக்கு படலை மன்மதனுடன் ஒருமுறை எம்.எஸ்.என் இல கதைக்கேக்க கேட்டன் இதால ஏதாவது வரும்படி வருதோ? இத நீங்கள் முழுநேர வேலையா செய்யுறீங்களோ எண்டு. அதுக்கு அவர் இல்லையாம் தான் வயிற்று பிழைப்புக்கு வேற வேலை ஏதோ செய்யுறதாம் எண்டு சொன்னார்.

ஆக மொத்தத்தில கூட்டிக்கழிச்சு பார்த்தால் நம்மண்ட ஆக்கள் படைப்புக்கள் செய்யுற நேரம் திருப்பதிக்கு போய் மொட்டை போட்டுக்கொள்ளுறது நல்லது.

ஐயோ முடியல சாமி..

திருச்சிற்றம்பலம்

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடிக்

காடுடைய கடலைப் பொடி பூசியென்னுள்ளங்கவர் கள்வன்

ஏடுடையமலரான் முனை நாட்பணிந் தேத்தவருள் செய்த

பீடுடையபிர மாபுர மேவிய பெம்மானிவனன்றே

திருச்சிற்றம்பலம்

சிவசிவா சிவசிவா..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முந்தியெல்லாம் தமிழ்ச்சேவை இரண்டிலை ஈழத்துப்பாடல் போகேக்கை அதை விட்டுட்டு திருச்சியிலை வயலும்வாழ்வும்,சென்னையிலை தேன்கிண்ணம் எண்டு இரசித்து கேட்டது ஞாபகமிருக்கு

எதுவாயினும் ஈழத்தவரின் இரசிப்புத்தன்மை முற்றிலும் மாறுபட்டது.

ஓ..உந்த தலைப்பை நான் இப்ப தான் பார்க்கிறன் :D ..(நன்னா தான் இருக்கு)..ஆனா குருவே என்னையும் நீங்க ஒரு "படைப்பாளி" என்டு சொன்னா தான் உதுக்கு நான் விடை சொல்லுவன் :D ..(என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள்)..நானும் பாவம் தானே.. :D

நான் குருவே உங்களை சிறந்த படைப்பாளி என்டு சொல்லுறன் அத போல நீங்களும்..அட என்னை "சிறந்த படைப்பாளி" என்று எல்லாம் சொல்ல வேண்டாம் ^_^ ...கடசி ஒரு படைப்பாளி என்டு சொன்னாலே போதுமப்பா.. :) (என்னையும் யாரும் அப்படி சொல்லனும் என்டு கன நாள் விருப்பம்) :lol: ..அது தான் கேட்டனான் நான் அங்கால போன பிறகு என்ன ஒருத்தரும் ஏசுறதில்ல சொல்லிட்டன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

கு.சா அண்ணா உண்மையை எடுத்துரைத்ததற்கு நன்றி!! :wub:

ஜமுனா, ஆனந்தவிகடன், யூனியர்விகடன், குமுதம், மங்கையர்மலர், நக்கீரன் மற்றும் இன்னோரன்ன மஞ்சள் பத்திரிகைகளில எழுதினால்தான் படைப்பாளிகளோ? யாழில எழுதினாலும் படைப்பாளிகள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழில இருக்கிற படைப்புக்களத்தையும் கருத்துக்களம் மாதிரி லேசாகத் திறந்து விசயங்களைப் பதியக் கூடியமாதிரி ஆக்குங்கோ கனபேர் எழுதுவினம். அதைத்திறந்தால் பெரிய லிஸ்டாக நீளுது.

  • தொடங்கியவர்

கரு அண்ணை நீங்கள் என்ன சொல்லிறீங்கள்? விளங்க இல்ல. முற்றம் பகுதி பற்றி சொல்லுறீங்களோ?

அம்பலத்தார் குறிப்பிட்டது போல எல்லாச் சமுதாயங்களிலும் தரமான படைப்புக்களும் வருகிறது. குப்பைகளும் வருகிறது. ஆனால் நம்மவர்கள், தங்களது படைப்புக்களின் ஆரம்பத்திலேயே தங்களுக்கு வரவேற்பு இருக்கவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள பத்திரிகைகளில் எழுதுபவர்களின் ஆக்கங்கள், பல தேர்வுகளுக்குப் பின்னர்தான் பிரிசுரிக்கப்படுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? புகழ்பெற்ற பல எழுத்தாளர்கள் எல்லோரும் இந்தவகையில் வந்தவர்கள்தான்.

ஒரு சினிமா இயக்குனர், பல வருடங்கள், பல படங்களுக்கு உதவி இயக்குனராக இருந்துவிட்டுத்தான் தனியாக ஒரு படத்தை இயக்கத் தொடங்குகிறார்கள். அப்படியிருந்தும் பலர் வெற்றி பெறுவதில்லை. ஆனால் எம்மவர்களோ, அதற்குரிய கல்வித்தகைமையோ, அனுபவமோ இன்றிப் படத்தை எடுத்துவிட்டு, நாம் அவர்கள் படத்தைப் பாராட்டவேண்டுமென எதிர்பார்ப்பது எவ்விதத்தில் சரி? தங்கர்பச்சான் ஒரு நிகழ்ச்சியில், அவரது படைப்பான "பள்ளிக்கூடம்" படம் எடுப்பதற்கு இருபத்தியொரு வருடங்கள் எடுத்ததாகக் கூறினார். 1980ஆம் ஆண்டுகளின் ஆரம்பகாலப்பகுதியில் அவர் திரைப்படக் கல்லூரியில் படிக்கும்போது இந்தக் கதையை எழுதினார். அப்போது, ஆனந்தவிகடன் பத்திரிகையில் இக்கதை பிரசுரமானது. அன்றே அவருக்கு இந்தக் கதையை திரைப்படமாக்க வேண்டுமென விரும்பினார். ஆனால் இருபத்தியொரு வருடங்களுக்குப் பின்னர்தான், அது நிறைவேறியது. சரி அவரை விடுங்கள். ஹொலிவூட்டில் கொடிகட்டிப் பறக்கும் ஸ்ரீபன் ஸ்பீல்பேர்க்கிற்கு அவர் விரும்பிய திரைப்படப் பல்கலைக்கழகத்தில் மூன்று தடவை விண்ணப்பித்தும் இடம் கிடைக்கவில்லை. அதன்பின்னர், அவர் சம்பளமின்றிய வேலையாக யூனிவர்சல் ஸ்ருடியோவில் வேலை செய்தார். தொடர்ந்து பணியாற்றியபோது, சில வருடங்களின்பின்தான், அவருக்கு தொலைக்காட்சிக் குறும்படங்கள் இயக்கும் வாய்ப்புக் கிடைத்தது. பல வருட அனுபவங்களின் பின்னரும், படைப்புக்களின் பின்னரும்தான் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது. முறையான கல்வியைப் பெற்ற, அவர்களுக்கே ஒரு தரமான படைப்பை அளிக்க பல வருடங்கள் தேவைப்பட்டது எனில், நம்மவர்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். பல படைப்பாளிகள் இவ்வாறுதான் உருவாகியவர்கள். இவ்வாறு உருவாகியவர்கள்தான் அதிகம். ஒருசிலர் மட்டுமே, முதல்சிறு படைப்புகளிலேயே அங்கீகாரம் பெற்றிருக்கிறார்கள்.

நம்மவர்களில் எத்தனை பேர் தங்கள் துறை சார்ந்த முறையான கல்வியைப் பெற நினைக்கிறார்கள்? அப்படியே இருந்தாலும் முறையானவர்களிடம் பயிற்சி பெற்றார்களா? அவர்களின் ஆர்வத்தை மட்டும் வைத்துக் கொண்டு, அவர்கள் தரும் படைப்புக்களை ரசிக்கவேண்டுமென நினைப்பது அவர்களின் முட்டாள்தனத்தையே காட்டுகிறது. தரமான படைப்புக்கள் வெளிவரும்போது, அவை நிச்சயம் ரசிக்கப்படும்.

ஹொலிவூட் படங்களில் வராத குப்பையா நமது தமிழ்ப்படங்களில் வருகின்றன. பொழுதுபோக்கு என்று வரும்போது பலநேரங்களில், யதார்த்தத்தை எதிர்பார்க்க முடியாது.

முரளி, நீங்கள் குறிப்பிட்ட குமுதம் குழுமத்திலிருந்துதான் "தீராநதி" என்ற சஞ்சிகையும் வெளிவருகிறது. வாசகர்களின் ரசிப்புத்தன்மைக்கேற்ற படைப்புக்களை உரிய பத்திரிகையில் பிரசுரிக்கிறார்கள். இதுதான் இன்றைய நிலை.

  • தொடங்கியவர்

நன்றி தமிழச்சி உங்கட கருத்துக்கு.

மற்றது,

இந்தக்கருத்தாடலிண்ட பிரதான கருப்பொருள் நம்மண்ட ஆக்களுக்கு ஆதரவு தாங்கோ எண்டு மடிப்பிச்சை கேட்கிறது இல்ல, நமக்கு கல்லெறிய முன்னம் கொஞ்சம் சிந்திச்சு பாருங்கோ எண்டுறது / நமக்கு மட்டும் ஏன் கல்லு எறியுறீங்கள் என்பது பற்றியது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கு மட்டும் ஏன் கல்லு எறியுறீங்கள் என்பது பற்றியது.

சரி இனி எல்லாருக்கும் கல் எறிவோம்- திருப்தியா

கனடாலை கொம்பியுட்டரும் கமராவும் இருந்தால் படமெடுக்கிறாங்கப்பா..

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சிட்னியில் தமிழை வளர்ப்பது பற்றிய பட்டிமன்ற்ம் ஒன்றில் ஈழத்து மாணவி ஒருத்தி சன் தொலைக்காட்சி தான் தமிழை வளர்க்கிறது என்று சொல்லிக் கைதட்டல் பெற்றுக் கொண்டு போய்விட்டா? பெஸ்டு கண்ணா பெஸ்டு என்று தமிழைக் கொலை செய்யும் சன் தொலைக்காட்சி தான் இம்மாணவிக்கு கண்ணுக்கு தெரிந்ததா?. மக்கள் தொலைக்காட்சி கண்ணுக்குத் தெரியவில்லையா?. தரிசனம் தொலைக்காட்சியினூடாக சிட்னியில் மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். இம்மாணவிக்கு தரிசனமும் தெரியாது, மக்கள் தொலைக்காட்சியும் தெரியாது. சன் தான் தெரியும். இப்படித்தான் எம்மவர்களில் பலர் புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கிறார்கள். இவர்களைப் போன்றவர்கள் தான் எம்படைப்புக்களை ஏளானம் செய்வதும் உண்டு.

இப்படியானவர்களால்தான் உண்மையிலேயே திறமை உள்ளவர்களும் வெளிவரமுடியாமல் இருக்கிறது. கனடாவில், ஒருசிலரின் ஆதரவும் கொஞ்சம் பணமும் இருந்தால் போதும். பொன்னாடைகள் தாமாக வந்து குவியும். தாங்களே தங்களுக்குள் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, ஒருவருக்கொருவர் புகழ்ந்து, பொன்னாடைகள் போர்த்திப் பத்திரிகைகளில் படங்களும் வெளியிட்டுவிடுவார்கள். புலம்பெயர் நாடுகளில் அதிகம் நடப்பது இதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

தீபம் தொலைக்காட்சியில் பெரும்பாலான விளம்பரங்களில் தென்னிந்திய நடிகைகள், சின்னத்திரை நடிகைகள் வருவார்கள். இத்தனைக்கும் அந்த விளம்பரங்கள் வரும் வர்த்தக நிலையங்கள் ஈழத்தமிழர்களுக்கு சொந்தமானவை. நடிகைகள் வந்து ஆ வென்றால் தான் எம்மவர்கள் அந்த வர்த்தக நிலையங்களுக்கு செல்வார்களா?. ஏன் விளம்பரங்களுக்கு நடிகைகள் தேவை?.

கனடாவிற்கு சிலவருடங்களின் முன்பு கோடைகாலத்தின் போது சென்றிருந்தேன். அங்குள்ள பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களைப் பார்த்தால் தலை சுற்றும். ஈழத்தமிழர்களின் வர்த்தக நிலையத்தின் திறப்புவிழாவுக்கு தென்னிந்திய சின்னத்திரை நடிகர் அபிசேக் வருகை என்ற விளம்பரம் இருந்தது. ஏன் பொன் சுந்தரலிங்கம், கே.எஸ்.பாலச்சந்திரன் போன்ற கலைஞர்களினால் வர்த்தக நிலையங்களை திறந்து வைக்க முடியாதா?. இசை நிகழ்ச்சி என்றால் தென்னிந்தியக் கலைஞர்களைத் தான் கூப்பிடுகிறார்கள். மொழி விளங்காத தெழுங்கு கீர்த்தனைகளைப் பாடி விட்டு செல்கிறார்கள். எம்மவர்களும் மொழி விளங்காது விட்டாலும் ஆகா ஒகா என்று இக்கச்சேரிகளுக்குத் தான் செல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்


கரு அண்ணை நீங்கள் என்ன சொல்லிறீங்கள்? விளங்க இல்ல. முற்றம் பகுதி பற்றி சொல்லுறீங்களோ?
  • தொடங்கியவர்

நீங்கள் முற்றம் பகுதியப்பற்றி கேட்கிறீங்கள் போல இருக்கிது கரு அண்ணை. மோகனுக்கு ஒரு மடல் அனுப்பினால் முற்றத்துக்க போகமுடியும். அல்லது உங்கட ஆக்கங்கள மோகனுக்கு அனுப்பிவைத்தாலும் அவற்றை அவர் முற்றம் பகுதியில பிரசுரிப்பார் எண்டு நினைக்கிறன். சில பாதுகாப்பு காரணங்களுக்காக முற்றம் பகுதியில கருத்தாடல் செய்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று மோகன் ஒருமுறை கூறி இருந்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.