Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச யுத்த சட்டங்களுக்கு விடுதலைப் புலிகள் மதிப்பளிக்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை

Featured Replies

  • தொடங்கியவர்

சாணக்கியன் நீங்க எப்ப இருந்து புலிகளின் பேச்சாளராக மாறியிருக்கிறியள் இதை புலிகள்தான் செய்தார்கள் என்றா ஆதாரத்தை மடிக்குள்ள வைச்சுக் கொண்டு போசுறமாதிரியிருக்குது.

இப்பிடி என்னைப் பார்த்து கேக்கிற நீங்கள்...

அரசால் செய்யப் படுகின்ற படுகொலைக்கும் பழி புலிகளின் மேல் சுமத்தப் படுவதும் ஒன்றும் மரபுக்கு மாறான விடயம் இல்லையே. இவை கூட புலிகளின்பால் உள்ள நியாயங்களை உலகம் விளங்க முற்படும் பொறாமையினால்தான் அரசின் நிழல் கரங்களால்தான் இப்படிப் பட்ட படுபாதக படுகொலைகள் அரங்கேற்றப் படுகிறது.

என்று எந்த ஆதாரத்தை எங்கை வைச்சுக் கொண்டு சொல்லுறியள்?

சரி ஒரு உதாரணத்திற்கு கேக்கிறன் யாழ்ப்பாண நூலகத்தை எரிச்சது யார் என்றதுக்கு ஆதாரம் வைச்சிருக்கிறியளே? திட்டமிட்டு செய்யிற வன்முறைகள் எல்லாவற்றிற்கும் ஆதாரத்தை யாரும் விட்டுவைக்கிறதில்லை!

உலகம் இதை எப்பிடி பாக்குது எண்டதை தான் நான் சொல்லவாறன். மற்றும்படி நீங்கள் என்ன நினைக்கிறியள், யாழ்களத்தில என்ன நடக்குது எண்டது உலகத்திற்கு தெரியாது பாருங்கோ!

அரசு எவளவுதான் வெளிப்படையாக மக்களைப் படுகொலை செய்யும் போதும் எந்த அரசாவது அவர்களை குற்றவாளி ஆக்கி இருக்கிறதா?

எந்தக் கள்ளனாவது மற்றக் கள்ளனை தேவையில்லாமல் காட்டித்தருவானோ? அதுக்காக நாங்கள் கள்ளனை உதாரணமா காட்டி களவெடுக்கலாமோ.

பொதுமக்களை கொல்லுறதை தவிர்க்கலாம் தானே?

  • தொடங்கியவர்

இவர்கள் குரல் கொடுக்கிறாதுக்கும் கக்கூஸுக்கு போறதுக்கும் என்னங்கோ வித்தியாசம்?

....

வாயூ பிரச்சனை இருந்தால் கனக்க வித்தியாசம் இல்லைதான் பாருங்கோ!

வாயூ பிரச்சனை இருந்தால் கனக்க வித்தியாசம் இல்லைதான் பாருங்கோ!

அப்போ ஏணுங்கோ இங்க புலம்ப தொடங்கிணீங்கள்? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களப்பகுதியில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மட்டும் எங்கள் கள உறவு ஒருவர் அடிக்கடி களத்தில் அதிக நீதி நியாயங்களை இழுத்து விடுவார்.ஆனால் தமிழ்ப்பிரதேசங்களில் ஏதாவது படு கொலைகள் நடந்தால் மனிசனை வலை போட்டுத்தான் தேடி பிடிக்கவேண்டும் போலிருக்கிறது :lol:

தமிழனுக்கு மனிதாபிமானம் சொல்லிக்கொடுக்கிறவையல் கனபேர் பாருங்கோ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இப்ப நீங்களும் கிளம்பீற்றீன்ங்க,,,,,,,,,,,,,,,,,

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்குப்போய் 16 வரியில ஒரு 3 வரியை மட்டும் தூக்கிப்பிடித்து கீழ மின்குமிழ் வேற போட்டுக்காட்டி.... அப்பப்பா.. படுகிற பாடு கொஞ்ச நஞ்சமில்லை!

16 வரியில மிச்சம் 13 வரியும் புலியைப் பற்றிச் சொல்லுது. எனவே புலிகள் ஆயுதங்களைக் கீழ வைச்சிட்டு.. மகிந்தவிடம் சரணடைந்து சாணக்கியனிடம் மண்டியிட வேண்டும் என்று எழுதவோ எதிர்பார்க்கிறீர்கள் சாணக்கியன்.

16 வரியில புலியைப் பற்றி 6 வரி சொன்னா மிகுதி எல்லாம் வன்முறையில ஈடுபடுறவை மிச்சப் பேரையும் தான் சுட்டுது. புலிகளை விட சர்வதேச சட்டங்களை மதிக்க வேண்டிய கடப்பாடு சிறீலங்கா அரசுக்குத்தான் அதிகம். புலிகள் ஒன்றும் ஐநா சாசனத்தில் கைச்சாத்திடவில்லை சிறீலங்காவின் சட்டம் ஒழுங்கை மதிக்க. அல்லது சர்வதேசம் புலிகளை விடுதலை அமைப்பாக அங்கீகரித்து வைச்சிருக்கல்ல.. புலிகள் அவர்கள் சொல்லக் கேட்க. புலிகளைப் பார்த்து AI சிறீலங்கா அரசைக் கேட்பது போல கேட்பது என்பதே புலிகளுக்கு சர்வதேச சட்டங்களை மனித உரிமை விதிகளைக் கடைப்பிடிக்க கடப்பாடு உள்ளது என்பதைச் சொல்லத்தானே தவிர.. அதுவும் அரசை 3 வரியில் கண்டிப்பதுவும் ஒன்றல்ல. அரசை ஒரு வரியில் கண்டித்தாலும் அதன் பரிமானம் பெரியது. இதை உணராமல்.... இங்கு முதலைக் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை..!

எனக்கு உங்களின் கண்ணீர் சோகக் கண்ணீரா இப்ப எல்லாம் புலப்படுகுதில்லை. ஏதோ எரியுற வீட்டில கொள்ளி செருகிற நிலைல நின்று குதிக்கிறப்போலதான் தெரியுது. :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனுக்கு மனிதாபிமானம் சொல்லிக்கொடுக்கிறவையல் கனபேர் பாருங்கோ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

இப்ப நீங்களும் கிளம்பீற்றீன்ங்க,,,,,,,,,,,,,,,,,

இன்று வரைக்கும் இல்லை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சரி ஒரு உதாரணத்திற்கு கேக்கிறன் யாழ்ப்பாண நூலகத்தை எரிச்சது யார் என்றதுக்கு ஆதாரம் வைச்சிருக்கிறியளே? திட்டமிட்டு செய்யிற வன்முறைகள் எல்லாவற்றிற்கும் ஆதாரத்தை யாரும் விட்டுவைக்கிறதில்லை!

யாழ் நூலகத்தை எரிசதுக்கு ஆதாரம் இல்லையெண்ட சொல்லுற அளவிலையே சாணக்கின் உங்கடை தமிழீழப்போராட்டவரலாறின்ரை அறிவு வியக்க வைக்கிது. :lol::lol: அடுத்தாய் இன்னொரு கேள்வியையும் நீங்கள் கேக்கலாம் ஆதாரம் இருந்தால் அரசாங்கம் ஏன் தண்டனை யை குடுக்கேல்லையெண்டு அதுவும் குடுக்க வேண்டியவை குடுத்திட்டினம். : :):rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பிடி என்னைப் பார்த்து கேக்கிற நீங்கள்...

என்று எந்த ஆதாரத்தை எங்கை வைச்சுக் கொண்டு சொல்லுறியள்?

சரி ஒரு உதாரணத்திற்கு கேக்கிறன் யாழ்ப்பாண நூலகத்தை எரிச்சது யார் என்றதுக்கு ஆதாரம் வைச்சிருக்கிறியளே? திட்டமிட்டு செய்யிற வன்முறைகள் எல்லாவற்றிற்கும் ஆதாரத்தை யாரும் விட்டுவைக்கிறதில்லை!

உலகம் இதை எப்பிடி பாக்குது எண்டதை தான் நான் சொல்லவாறன். மற்றும்படி நீங்கள் என்ன நினைக்கிறியள், யாழ்களத்தில என்ன நடக்குது எண்டது உலகத்திற்கு தெரியாது பாருங்கோ!

எந்தக் கள்ளனாவது மற்றக் கள்ளனை தேவையில்லாமல் காட்டித்தருவானோ? அதுக்காக நாங்கள் கள்ளனை உதாரணமா காட்டி களவெடுக்கலாமோ.

பொதுமக்களை கொல்லுறதை தவிர்க்கலாம் தானே?

மீண்டும் மீண்டும் இந்த பச்சைப் பாதகத்தை புலிகளின் தலையில் சுமத்துவது மிகக் கேவலமக இருக்கிறது. தன் கருத்துக்கு ஏற்றவாறு உலகத்தை பார்கவைக்கின்ற வசதியான நிலை அரசுக்கு உண்டு அதனால் பொய் உண்மை ஆகிவிடுமா?

ஒரு விடுதலைப் போரட்டத்துக்குதான் மக்கள்துன்பத்தின் வலிதெரியும் அவர்களை பயங்கரவாதிகளாக காட்டுவதில் நன்மை அடைபவர்கள் எவரோ அவர்கள் பணம் பண்ணும் சூத்திரமாக இந்த அதிகாரங்களை பயன்படுத்துகின்றார்கள். சொந்த இனத்தின் இரத்தத்தைக் கூட அவர்களால் செலவு செய்ய முடியும்!

தெரிந்த விடயந்தானே. குண்டுகளை வைத்து அழிவுகளை ஏற்படுத்தி தமிழர் தரப்பின் மீது குற்றங்களைச் சுமத்தினால் தம்மீதான கண்டிப்புகளின் தாக்கத்தைக் குறைக்கலாம் என்பது இலங்கை அரசிற்குத் தெரிந்திருக்காததா என்ன?

ஒவ்வொரு குண்டு வெடிப்பிற்கும் தமிழர்தான் காரஒமென்றால் கொழும்பில் கண்டுபிடிக்க முடியாதளவு பலத்துடன் தமிழர்கள் இருக்கிறார்கள் என்று ஆகிவிடாதா? குண்டு வெடிப்புகள் ஏன் பொது மக்களை நோக்கி நடத்தப்படுகிறது. வெறும் பழிவாங்கல் நிகழ்வுதானே அது. இது தமிழர்தரப்பிற்குத் தெரியாத விடயமா? அப்படியிருந்தும் சர்வதேச மன்னிப்புச் சபையின் கருத்துகளுக்கும் வேண்டுகைகளுக்கும் தமிழர் தரப்பு மதிப்புக் கொடுத்தே வந்துள்ளது. ஆயினும் இன்றைய நிலை உருவகப்படுத்தப்பட்ட ஒன்றே என்பது எனது கருத்து. எத்தனை பொதுமக்கள் அழிந்தாலும் அரசியல் வாதிகளுக்கு நஷ்டமில்லை. பேரினவாதிகளின் சதிதான் இது.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணாடி வீட்டுக்க இன்னும் இருந்தால் வாறவன் போறவன் எல்லம் எறியத்தான் செய்வான். அதனால் கல்வீட்டுக்க போராட்டம் போய் கனகாலமாயிட்டுது கண்டியளோ?

நீங்கள் சொல்லுற சர்வதேசச் சட்டமெல்லாம் நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க நினைக்கும் அரசுக்கும் இருக்குது பாருங்கோ. அவையள் அதை ஒரு மயிராத்தானும் பொருட்படுத்தாமத்தான் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில இருந்து விலகி நீங்கள் சொல்லுகிற "எங்கட சனத்த" கொன்று குவிச்சுக்கொண்டு இருக்கினம் பாருங்கோ. அவையள் அவயின்ர தரப்பைத் திருத்தட்டும், நாங்கள் எங்கட தரப்பைத் திருத்துவம் எண்டு சொல்லுறியள், ஒரு விஷயம் தெரியுமோ, தெற்கில 70 வீதமான சனம் யுத்தம் தான் தீர்வு எண்டு நாண்டு கொண்டு நிக்குது பாருங்கோ. அவையளால அரசாங்கத்தைப் பிழை சொல்ல ஏலாது. ஏனென்டால் அரசாங்கத்தைப் போருக்குப் போ எண்டு அனுப்பி வைச்சதே அவையள் தான் பாருங்கோ. செஞ்சோலையில குண்டுபோட்டு எங்கட பிள்ளையளையும், வன்னியில தினம்தோறும் கிளேமோரில சாய்க்கும் அப்பாவிச் சனத்தையும் நீங்கள் மதிக்கிற சிங்களச்சனம்தான் "புலி" யெண்டு சொல்லிக் கொக்கரிக்குது பாருங்கோ. அப்பாவிகளைக் கொண்டு போட்டு அதைப் புலியெண்டு கூறி" இனிக் கொஞ்சப் புலிதான் மிச்சம், அதுகளையும் கொண்டுபோட்டால் ஈழக்கனவை உடைச்சுப்போடலாம் எண்டு நினைத்துக் கொண்டு திரியும் சனமா அரசாங்கதிட்டப் போய் உந்தக் கொலைகளை நிறுத்துங்கோ எண்டு சொல்லப் போகுது ? எங்க இருக்கிறியள் சாணக்கியன்? சிங்கத்தின்ர குகையில இருந்துகொண்டு அங்க பத்திரிகைகளில தினமும் கொல்லப்படுகிற புலிக்கணக்குத் தெரிந்து கொண்டுமா அரசாங்கத்திடம் சிங்களச்சனம் நீதி கேட்கும் எண்டு நம்புறியள் ? பஸ்ஸில குண்டு வைச்சது புலிகள்தான் எண்டு ஏன் ஒப்புக்கொள்ளவில்லை எண்டு கேக்கிறியள்? வன்னியில் சாகிற சனத்தை சனம்தான் எண்டு அரசு எப்ப ஒத்துக்கொண்டது ? எல்லாம் புலிதான் எண்டுதானே இப்பவும் சொல்லுறாங்கள். அவங்களிட்டப் போய்ச் சொல்லிப்பாருங்கோ, அப்பதெரியும் இந்த மனிதாபிமானப் பாடமெல்லாம் எப்படி இருக்குமெண்டு.

ஒண்டுமட்டும் உண்மை கண்டியளோ, இங்க நான் எழுதியோ அல்லது நீங்கள் எழுதியோ எதுவும் நடக்கப்போவதில்லை. நடப்பதெல்லாம் நன்றாகவே நடக்குது, இனியும் நன்றாகவே நடக்கும். நாங்கள் பாடம் எடுத்துத்தான் புலிகள் போராட்டம் நடத்த வேண்டிய தேவையில்லை. இப்படி ஆளாளுக்கு புலிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தால் இண்டைக்கு எல்லாத்தையும் தொலைச்சுப்போட்டுத்தான் நிக்க வெண்டி இருந்திருக்கும். நல்லவேளை எங்கள் கருத்துக்கள் புலிகளை ஒன்றும் செய்யப்போவதில்லை.அவர்களுக்க

எனக்கென்னமோ கொளும்பில வெடிக்கிற குண்டெல்லாம் நான் முன்னம் சொன்னமாதிரி இந்திய றோவும் இந்திய எண்ணெய்க்கம்பனிகளும் தான் போலகிடக்கு....

நாய்க்கு எங்க அடிச்சாலும் அது முன்னங்காலைத்தான் தூக்கிப்பிடிக்குமாம்... அதைமாதிரி சிறிலங்காவில குண்டுவெடிச்சா புலிகள் எண்டுபோட்டு.. இருக்கிறாங்கள். அதுசரி இனி புலிகள் வெரேலாது குளும்பில ஒரு கோ%*$..யும் புடுங்கேலாதெண்டு விளாசித்தள்ளினவேயல் தானே.. பிறகென்ன புலிவருது பூனைவருதெண்டு உளரினம்.... முன்னம் சொன்னது அல்லது இப்ப சொன்னது ஏதோ ஒண்டு பச்ச போய்..

அந்தப்பொய்யை மனிதாபிமானம் நடுநிலையாளர்கள்தான் புரிந்து கொள்ளவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

:lol: சாணக்கியன், இப்போது கொக்கிளாயையும் பதவி ,சிறிபுர( ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலங்கள்) பகுதிகள் அடங்கும் சிங்கள நிர்வாகப் பிரதேசத்துடன் இணைத்திருக்கிறார்கள். முடியுமானால் உங்கள் மனிதாபினாத்தைப் பயன்படுத்தி அதை நியாயம் கேடுப் பாருங்கள்.

பிற்குறிப்பு : கொக்குளாய் என்பது தமிழரின் தாயகமான வடக்கும் கிழக்கும் இணையும் பகுதியில் அமைந்துள்ள தமிழ்க் கிராமம். மணலாறு, மண்கிண்டிமலை போன்று மனிதாபிமானம் மிக்க சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்படக் காத்திருக்கும் இன்னொரு தமிழ்க் கிராமம் !!!!!

  • தொடங்கியவர்

சிங்களப்பகுதியில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் மட்டும் எங்கள் கள உறவு ஒருவர் அடிக்கடி களத்தில் அதிக நீதி நியாயங்களை இழுத்து விடுவார்.ஆனால் தமிழ்ப்பிரதேசங்களில் ஏதாவது படு கொலைகள் நடந்தால் மனிசனை வலை போட்டுத்தான் தேடி பிடிக்கவேண்டும் போலிருக்கிறது :lol:

எல்லோரையும் போல "ஆழ்ந்த அனுதாபங்கள்" என்று ஒப்பாரி வைக்கவும், "இதுக்கெல்லாம் விரைவில் பதில் சொல்ல வேண்டி வரும்!" என்று வீரவசனம் பேசவேணும் என்று எதிர்பாக்கிறீங்கள் போலிருக்கிறது!

மற்றது எனது கருத்துகளுக்கு நியாயமான பதில்களை சொல்லத்தெரியாமல், நான் வன்னி யாழ்ப்பாணத் தமிழர்களின்டை மரணத்தில சந்தோசப்படுகிறவன் என்றும், அரசாங்க உளவாளி என்றும், சிங்ளவருக்காக பரிந்து பேசுறன் என்றும் கூறி சிலர் விரிக்கிற வலையில நீங்கள் விழுந்திடாதையுங்கோ!

யாழ் நூலகத்தை எரிசதுக்கு ஆதாரம் இல்லையெண்ட சொல்லுற அளவிலையே சாணக்கின் உங்கடை தமிழீழப்போராட்டவரலாறின்ரை அறிவு வியக்க வைக்கிது. wub.gif wub.gif அடுத்தாய் இன்னொரு கேள்வியையும் நீங்கள் கேக்கலாம் ஆதாரம் இருந்தால் அரசாங்கம் ஏன் தண்டனை யை குடுக்கேல்லையெண்டு அதுவும் குடுக்க வேண்டியவை குடுத்திட்டினம்.

உங்களளவுக்கு எனக்கு அறிவில்லை சாத்திரி!

அதனாலைதான் கேட்கிறன் அதிகாரமும், ஆயுதமும் வைச்சிருக்கிறவை செய்யிறத்திற்கு ஆதாரம் கேக்கிறது சரியே? அவையும் கட்டுநாயக்கா தாக்குதலுக்கு உரிய தண்டனையை குடுத்திருக்கினமாம் என்று யாழ்கள செய்திகள் சொல்லுது!

இப்பிடி இருவரும் தங்கள் தங்கள் நியாயங்களுக்கு ஏற்றபடி தண்டனைகள் வழங்கிக் கொண்டிருக்க, பொதுமக்களை நேரடியாக தாக்கிறதை தவிர்க்க வேணும் என்றதுதான் என்ற கருத்து என்றதை மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புறன்!

ரகுநந்தன்,

ஒண்டுமட்டும் உண்மை கண்டியளோ, இங்க நான் எழுதியோ அல்லது நீங்கள் எழுதியோ எதுவும் நடக்கப்போவதில்லை. நடப்பதெல்லாம் நன்றாகவே நடக்குது, இனியும் நன்றாகவே நடக்கும்......

என்று நீங்கள் உறுதியா நம்பிறதால இனி நான் உங்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை. இருந்தாலும்.....

சிங்களச்சனம் போருக்கு ஆதரவு!

தமிழ்ச் சனம் சாகிறது அவைக்கு விருப்பம்!

அவையாவது தங்கடை அரசை அழுத்தம் கொடுக்கிறதாவது!

அவையள் எங்களை அழிச்சா நாங்கள் அவையளை அழிப்பம்!

என்ற உங்கடை வாதங்களை கொண்டு என்று மாறி மாறி நடக்கிற இந்த அழிவுகளை அது போகிற திசைக்கே கொண்டுபோறதில ஆர்வமா இருக்கிறீங்கள்!

ஆனா நான் என்ன திடமா நம்பிறன் என்றால்,

மிகுதி இருக்கிற மக்களை பாதுகாக்கிறத்திற்காக நாங்கள் புதிய வழி ஒன்றை நாடவேணும்! அந்த மக்களுக்கும் எங்களை போல வாழுற ஆசை நிறையவே இருக்கு! அதை நாங்கள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு கதைக்க ஏலாது!

சிங்களத்தால கொல்லப்படுகிற மக்களைக் காப்பாற்றுவதற்கு உங்களிடம் பதில் இல்லை. ஆனால் புலிகள் நடத்துவதாக நீங்கள் நினைக்கும் தெற்கின் குண்டுவெடிப்புகள் நிக்க வேண்டும் எண்டு மட்டும் ஆசை.

கருத்துப் பலவீனமான ஒரு சிலரின் திசை திருப்பும் சதிக்கு ஆளாகீட்டீங்கள்!

யுத்தத்தை காலத்திலும் கூட நேரடியாக இலக்கு வைக்கப்பட்டு இருதரப்பாலும் கொல்லப்படுகின்ற பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும்! என்பது தான் என் ஆசை!

மீண்டும் மீண்டும் இந்த பச்சைப் பாதகத்தை புலிகளின் தலையில் சுமத்துவது மிகக் கேவலமக இருக்கிறது. தன் கருத்துக்கு ஏற்றவாறு உலகத்தை பார்கவைக்கின்ற வசதியான நிலை அரசுக்கு உண்டு அதனால் பொய் உண்மை ஆகிவிடுமா? ஒரு விடுதலைப் போரட்டத்துக்குதான் மக்கள்துன்பத்தின் வலிதெரியும் அவர்களை பயங்கரவாதிகளாக காட்டுவதில் நன்மை அடைபவர்கள் எவரோ அவர்கள் பணம் பண்ணும் சூத்திரமாக இந்த அதிகாரங்களை பயன்படுத்துகின்றார்கள். சொந்த இனத்தின் இரத்தத்தைக் கூட அவர்களால் செலவு செய்ய முடியும்!

தெரிந்த விடயந்தானே. குண்டுகளை வைத்து அழிவுகளை ஏற்படுத்தி தமிழர் தரப்பின் மீது குற்றங்களைச் சுமத்தினால் தம்மீதான கண்டிப்புகளின் தாக்கத்தைக் குறைக்கலாம் என்பது இலங்கை அரசிற்குத் தெரிந்திருக்காததா என்ன?

எனக்கென்னமோ கொளும்பில வெடிக்கிற குண்டெல்லாம் நான் முன்னம் சொன்னமாதிரி இந்திய றோவும் இந்திய எண்ணெய்க்கம்பனிகளும் தான் போலகிடக்கு....

நல்ல மாற்றம்!

நேற்றுவரை குண்டு வெடிப்புகளை நியாயப்படுத்தி, புகழ்ந்து பாடிய யாழ்களம் இன்று உரிமைகோர தயங்கி நிற்கிறது!

மெனமாக அதை ஆதரித்து வந்த பலர் இன்று தங்கள் தலையை காட்டி மறுப்பு தெரிவிக்கின்றனர்!

இதை தவறு என்று உணர்ந்து மறுப்புரைக்கும் பலரும், தாம்சார்ந்த தரப்பெனினும் பெருந்தன்மையுடன் கண்டிக்க முன்வரவேண்டும்.

இது சிங்களத்திற்கும் பொருந்தும்!

கருத்துப்பகிர்வுக்கு நன்றி!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா நான் என்ன திடமா நம்பிறன் என்றால்,

மிகுதி இருக்கிற மக்களை பாதுகாக்கிறத்திற்காக நாங்கள் புதிய வழி ஒன்றை நாடவேணும்! அந்த மக்களுக்கும் எங்களை போல வாழுற ஆசை நிறையவே இருக்கு! அதை நாங்கள் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு கதைக்க ஏலாது!

அந்த புதிய வழியை எடுத்து விடுகிறது தானே...........................

நல்ல மாற்றம்!

நேற்றுவரை குண்டு வெடிப்புகளை நியாயப்படுத்தி, புகழ்ந்து பாடிய யாழ்களம் இன்று உரிமைகோர தயங்கி நிற்கிறது!

மெனமாக அதை ஆதரித்து வந்த பலர் இன்று தங்கள் தலையை காட்டி மறுப்பு தெரிவிக்கின்றனர்!

இதை தவறு என்று உணர்ந்து மறுப்புரைக்கும் பலரும், தாம்சார்ந்த தரப்பெனினும் பெருந்தன்மையுடன் கண்டிக்க முன்வரவேண்டும்.

இது சிங்களத்திற்கும் பொருந்தும்!

கருத்துப்பகிர்வுக்கு நன்றி!

சில சமயம் எதிரிகளுக்கு எங்களுக்குள் நாங்கள் செய்வது சந்தோசமாய் இருக்கும். உதாரணமாய் குண்டு வைச்சது எங்கட ஆக்கள்தான் என்று நீங்கள் சொல்லுற மாதிரியான விடயங்கள். அவர்கள் ஏதும் செய்யாமல் அவர்கள் நினைக்கும் பலன் கிட்டுவது மாதிரி அது.

அதேபோலத்தான் எதிரிகள் குண்டு வைப்பது தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கு. உதாரணமாய் யானை தன் தலையிலை மண் அள்ளி போடுகிற மாதிரி.

சில வசனங்களிலை என்னால் உங்களுக்கு புரிய வைக்க முடியாது. ஆனாலும் முயற்ச்சி செய்து இருக்கிறேன்.

Edited by பொய்கை

சாணக்கியன் அண்ணை,

தனி ஆளாக நின்று கள மாடிக்கொண்டு நிக்கிறீங்கள். பாராட்டுக்கள்! :lol:

நான் இங்கே வாசிக்கப்பட்ட மற்றும் உங்கட பதில் கருத்துக்கள பார்த்த பின்னர் ஒரே ஒரு விசயத்த மட்டும் கூறலாம் எண்டு நினைக்கிறன்.

அதாவது நீங்கள் குறுகிய கால நோக்கில கதைக்கிறீங்கள், இஞ்ச இருக்கிற ஆக்கள் நீண்ட கால நோக்கில கதைக்கிறீனம் எண்டு நினைக்கிறன்.

அதாவது,

இப்ப சமாதானம் வந்தாலும் சிங்களவன் நீண்டகால நோக்கில தமிழர விட்டு வைக்கப்போறது இல்ல. ஒட்டாண்டியாக்கி நடுத்தெருவில பாடை கட்டி சுடலைக்கு அனுப்பித்தான் வைப்பான்.

சார்ல்ஸ் டார்வின் என்ன சொன்னவர்?

இந்த உலகம் போட்டி மயமானது. இந்த போட்டி மயமான உலகத்தில போட்டி போடக்கூடிய ஆற்றல் உள்ள விலங்குகள் மட்டும் தப்பிப் பிழைக்கும் அல்லாதன எல்லாம் செத்து மடியும் எண்டு.

இப்ப தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையில நடக்கிறதும் ஒரு வாழ்க்கைப் போட்டியாகத்தான் எடுக்கவேணும்.

தமிழர் படை போட்டி போட்டு அதில வெல்ல முடியாத நிலமையில இருந்தால் அதாவது தோற்றால் இது.. தமிழினத்திண்ட அழிவாகவே அமையும்.

குறுகிய கால சமாதானம் சார்ல்ஸ் டார்வினிண்ட கோட்பாட்டுக்கமைய எந்தவிதமான சாதகமான சூழ்நிலையை தோற்றுவிக்கும் எண்டு தெரிய இல்ல.

எண்டபடியால் சண்டைபிடிச்சாவது எமது இருப்பை காப்பாற்றிக்கொள்வதுதான் தமிழினத்திற்கு நீண்டகால நோக்கில சாதகமான வழிமுறை எண்டு நான் நினைக்கிறன்.

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?

இப்போதைக்கு கொழும்பில... நீங்கள் சொன்னமாதிரி

உடம்புக்கு வழுக் வழுக் எண்டு எண்ணை பூசிப்போட்டு, வீட்டில இருக்கிற வாளிகளை ஒளிச்சு வச்சுப்போட்டு, வீட்டு வாசலில புத்தர், தேவானந்தா, மகிந்த, ஆனந்தசங்கரி இவேண்ட படங்கள், சிலைகளை மாட்டி வச்சுப்போட்டு, மீசைய வழிச்சுப்போட்டு சிங்களத்தில கதைச்சுக்கொண்டு சமயோசிதாமான முறையில உங்கட வாழ்க்கைப் போராட்டத்தில வெல்லுறதுதான் எனக்கு நல்ல வழிமுறையா தெரியுது.

சிங்கத்திண்ட குகையுக்க சமயோசிதமாக இருந்து வாழ்க்கைப்போராட்டத்தில வெற்றி பெற வேணும். தமிழரிண்ட குகையுக்க சண்டைபிடிச்சு போராடி வாழ்க்கைப்போராட்டத்தில வெற்றி பெற வேணும். இதுதான் தற்போதை களநிலவரம் எண்டு நினைக்கிறன்.. ஹிஹி :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களச்சனம் போருக்கு ஆதரவு!

தமிழ்ச் சனம் சாகிறது அவைக்கு விருப்பம்!

அவையாவது தங்கடை அரசை அழுத்தம் கொடுக்கிறதாவது!

இவற்றுள் ஒன்றையாவது நீங்கள் மறுப்பீர்களாக இருந்தால் நான் தொடர்ந்து உங்களுடன் வாதிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. உங்களின் வாதங்கள் உங்களுக்குச் சரியென்று படுமிடத்து நீங்கள் யார் சொல்லியும் கேட்கப்போவதில்லை.

வாழ்க உங்கள் மனிதாபிமானம் ! இத்துடன் இது சம்பந்தமான எனது கருத்துக்களை நிறைவு செய்துகொள்கிறேன்.

இறுதியாக, "உண்மையின் முன்னால் நடுநிலமை என்று ஒன்றில்லை" !

சாணக்கியன் அண்ணை,

தனி ஆளாக நின்று கள மாடிக்கொண்டு நிக்கிறீங்கள். பாராட்டுக்கள்! <_<

நான் இங்கே வாசிக்கப்பட்ட மற்றும் உங்கட பதில் கருத்துக்கள பார்த்த பின்னர் ஒரே ஒரு விசயத்த மட்டும் கூறலாம் எண்டு நினைக்கிறன்.

அதாவது நீங்கள் குறுகிய கால நோக்கில கதைக்கிறீங்கள், இஞ்ச இருக்கிற ஆக்கள் நீண்ட கால நோக்கில கதைக்கிறீனம் எண்டு நினைக்கிறன்.

அதாவது,

இப்ப சமாதானம் வந்தாலும் சிங்களவன் நீண்டகால நோக்கில தமிழர விட்டு வைக்கப்போறது இல்ல. ஒட்டாண்டியாக்கி நடுத்தெருவில பாடை கட்டி சுடலைக்கு அனுப்பித்தான் வைப்பான்.

சார்ல்ஸ் டார்வின் என்ன சொன்னவர்?

இந்த உலகம் போட்டி மயமானது. இந்த போட்டி மயமான உலகத்தில போட்டி போடக்கூடிய ஆற்றல் உள்ள விலங்குகள் மட்டும் தப்பிப் பிழைக்கும் அல்லாதன எல்லாம் செத்து மடியும் எண்டு.

இப்ப தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையில நடக்கிறதும் ஒரு வாழ்க்கைப் போட்டியாகத்தான் எடுக்கவேணும்.

தமிழர் படை போட்டி போட்டு அதில வெல்ல முடியாத நிலமையில இருந்தால் அதாவது தோற்றால் இது.. தமிழினத்திண்ட அழிவாகவே அமையும்.

குறுகிய கால சமாதானம் சார்ல்ஸ் டார்வினிண்ட கோட்பாட்டுக்கமைய எந்தவிதமான சாதகமான சூழ்நிலையை தோற்றுவிக்கும் எண்டு தெரிய இல்ல.

எண்டபடியால் சண்டைபிடிச்சாவது எமது இருப்பை காப்பாற்றிக்கொள்வதுதான் தமிழினத்திற்கு நீண்டகால நோக்கில சாதகமான வழிமுறை எண்டு நான் நினைக்கிறன்.

நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்?

இப்போதைக்கு கொழும்பில... நீங்கள் சொன்னமாதிரி

உடம்புக்கு வழுக் வழுக் எண்டு எண்ணை பூசிப்போட்டு, வீட்டில இருக்கிற வாளிகளை ஒளிச்சு வச்சுப்போட்டு, வீட்டு வாசலில புத்தர், தேவானந்தா, மகிந்த, ஆனந்தசங்கரி இவேண்ட படங்கள், சிலைகளை மாட்டி வச்சுப்போட்டு, மீசைய வழிச்சுப்போட்டு சிங்களத்தில கதைச்சுக்கொண்டு சமயோசிதாமான முறையில உங்கட வாழ்க்கைப் போராட்டத்தில வெல்லுறதுதான் எனக்கு நல்ல வழிமுறையா தெரியுது.

சிங்கத்திண்ட குகையுக்க சமயோசிதமாக இருந்து வாழ்க்கைப்போராட்டத்தில வெற்றி பெற வேணும். தமிழரிண்ட குகையுக்க சண்டைபிடிச்சு போராடி வாழ்க்கைப்போராட்டத்தில வெற்றி பெற வேணும். இதுதான் தற்போதை களநிலவரம் எண்டு நினைக்கிறன்.. ஹிஹி :icon_idea:

தமிழர் போராட்டத்தில் அதன் வழித்தடங்கலில் செய்யப்படும் தாக்குதல்கள் குண்டு வெடிப்புகளை உரிமை கோருவதற்குப் பின்னிற்கத் தேவையில்லை. அத போராட்டத்தின் வழிகளில் ஒன்றாகி விட்டது. ஆனால் தற்போதைய இந்தக் காலகட்டம் தமிழர் தரப்பிற்கு சாதகமான ஓரு தோற்றத்தைக் கொண்டதாக இருப்பதனால் அதனைத் தகர்ப்பதற்காக பலவழிகளை எதிர்த்தரப்பு மேற்கொள்வதற்கான சந்தேகங்கள் எழ வாய்ப்புண்டு.

அவ்வாறான சந்தேகமே எனக்கும். அதை மாற்றம் என்று கொள்ள வேண்டாம்.

" அவலத்தைத் தந்தவனுக்கே அதைத் திருப்பிக் கொடு" -தேசியத் தலைவர்-

  • கருத்துக்கள உறவுகள்

உரிமை மீறல் தொடர்பாக சர்வதேசத்தின் கவலையும் கரிசனையும் அதிகரித்து வரும் நிலையில், இலங்கையும் அவதானிக்கப்படுகிறது - சர்வதேச மன்னிப்புச் சபை!

உரிமை மீறல் தொடர்பாக சர்வதேசத்தின் கவலையும் கரிசனையும் அதிகரித்து வரும் நிலையில், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை ஜனாதிபதி மேற்கொள்வாரென்று சர்வதேச மன்னிப்புச் சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சர்வதேச சமூகம் இலங்கையை மறந்துவிடவில்லையென்பதை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டுமென மன்னிப்புச் சபையின் தெற்காசியாவுக்கான பணிப்பாளர் சாம்ஷரிபி பிரிட்டிஷ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சிங்கள சேவையான சந்தேசியவுக்கு தெரிவித்தார்.

இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலண்டனில் பொதுநலவாய செயலகத்திற்கு முன்னால் சர்வதேச மன்னிப்புச் சபை ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. அங்கு இடம்பெறும் பொதுநலவாய உச்சிமாநாட்டில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டிருக்கிறார்.

இலங்கையில் ஊடகத்துறையினர் கொல்லப்படுவது, தாக்கப்படுவது, தடுத்து வைக்கப்படுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துவருவதற்கு ஆர்ப்பாட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

கடந்த இருவாரங்களில் யாழ்ப்பாணத்தில் பி.தேவகுமார் என்ற பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளார். சிரேஷ்ட பத்திரிகையாளர் கீத் நொயார் கொடூரமாகத் தாக்கப்பட்டார். சண்டேரைம்ஸ் பத்திரிகை எழுத்தாளர் கே.எஸ்.திசைநாயகம் மார்ச் ஏழு முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நிலைமை வேகமாக மோசமடைந்துவருவதால் இலங்கையின் நிலைவரம் தொடர்பாக உலகளாவிய ரீதியில் கவலை அதிகரித்துள்ளது.

மனித உரிமை கண்காணிப்பாளர்கள் மற்றும் சர்வதேச சமூகம் தெரிவித்துவரும் கவலைகளுக்கு பதிலளிக்க விருப்பமுடையதாக அரசாங்கம் இருப்பதாக காணப்படவில்லை என்று சாம் ஷரிபி தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உட்பட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக புலிகள் மீதும் சர்வதேச மன்னிப்புச்சபை குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கை மோதல் மறந்துவிடப்பட்டதொன்று அல்ல என்பதை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ புரிந்துகொள்வாரென நாங்கள் கருதுகிறோம் என்றும் ஷரிபி கூறியுள்ளார்.

http://www.theepori.com/newsfull.php?newsid=3455

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.