Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"பாஸ்கரனின்" குறும்படம் கான்ஸ் திரைப்பட விழாவில் shortfilm corner பகுதியில் திரையிடப்பட்டது .

Featured Replies

படலைக்கு படலை மூலம் "மன்மதன்" என்று அறியப்பட்ட பாஸ்கரனின் "நதி" குறும்படம் கான்ஸ் திரைப்பட விழாவில் shortfilm corner என்ற பகுதியில் திரையிடப்பட்டது.

ஆர்வம் உள்ள தமிழ் இளைஞர்கள் இந்த விழாவுக்கு தமது குறும்படங்களையும் அனுப்பிவைப்பதன் மூலம் பல வெளிநாட்டவர்கள் அதனைப் பார்ப்பதற்கான வழியை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

திரைப்பட விழாவில் எடுத்த சில புகைப்படங்கள்.

nathismall2ys1.jpgnathi2ho1.jpg

dsc00270tk6.jpg

dsc00321rn4.jpg

dsc00332ef9.jpg

dsc00374el6.jpg

dsc00375uk0.jpg

dsc00397hw7.jpg

dsc00443cj9.jpg

dsc00459th3.jpg

நன்றி அனிதா...

இதனை முன்னரே இணைக்கவேண்டும் என்று நினைத்திருந்தபோதும், நேரப் பிரச்சனை காரணமாக என்னால் இணைக்க முடியவில்லை. அத்துடன் கான்ஸ் திரைப்படவிழாவின் shortfilm corner பற்றியும் ஒரு விளக்கம் எழுதவேண்டும் என்று எண்ணியிருந்தேன். அதுவும் சாத்தியப்படவில்லை. பாஸ்கரனின் நேர்காணல் ஒன்று ஈழமுரசில் வெளிவந்திருந்தது. அதனை இங்கு இணைக்கிறேன். பின்னர் நேரம் கிடைக்கிறபோது shortfilm corner பற்றிய விளக்கத்தையும், மேலதிக படங்கள் சிலவற்றையும் இணைக்கிறேன். நன்றி.

1. இந்த சந்தர்ப்பம் எப்படிக் கிடைத்தது?

என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பிரெஞ்சு நடிகரின் ஆலோசனையின் மூலம் நான் எனது படத்தை கான் படவிழாவுக்கு அனுப்பியிருந்தேன். இன்று என்படம் அங்கு குறும்பட பிரிவில் தெரிவு செய்யப்பட்டு அங்கு போக சந்தர்ப்பம் கிடைத்தது.

2. எத்தனை பேர் சென்றீர்கள் யார்? யார்?

2 பேர் என் படத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து வருமாறு கேட்டிருந்தார்கள் அதில் அனைவரும் செல்வில்லை என் நண்பன் படத்தொகுப்பு செய்தவர் சங்கர் என்னுடன் வந்திருந்தார்.

3.உங்களுடைய படம் எங்கே திரையிடப்பட்டது?

கான் படவிழாவில் குறும்பட பிரிவில் எனது குறும்படம் திரையிடப்பட்டது.

4. யார் யார் பார்த்தார்கள்?

அனைத்து நாட்டவரும் பார்வையிட்டார்கள். எனது தனிப்பட்ட அழைப்பின் மூலமாக தமிழ் சினிமா திரைப்பட தயாரிப்பாளர் தேனப்பன் உட்பட மும்பையில் இருந்து வந்தவர்களும் என் பத்தை பார்வையிட்டார்கள். மேலும் கனடாவில் இருந்த வந்த ஒரு நடிகர்: பார்வையிட்டார். அமெரிக்காவில் இருந்து ஒரு குறும்படம் கொண்டு வந்த பிரபல நடிகர் ஒருவரும் பார்த்து சென்றார். அனைவரும் எனது படத்தை பார்வையிட்டு பாராட்டியும் சென்றார்கள்.

5. எத்தனை பேர் பார்க்கக் கூடிய திரை அரங்கு.

இருவர் பார்க்கக் கூடிய அறை 1. இதற்கு அனைவரும் பார்வையிடலாம் எனது படத்தின் பெயரை அவர்கள் தங்களின் அடையாள இலக்கத்தை கொடுத்து பார்வையிட வேண்டும். அதை விட கான் படவிழாவில் வெளியில் நிற்கும் பார்வையாளர்களை அழைப்பிதழ் கொடுத்து பார்வையிட வைக்கலாம் அதுற்கு தனியாக 9 பேர் கொண்ட அரங்கு தருவார்கள். நாங்கள் நின்ற நாட்களில் பல தடவைகள் காண்பித்திருந்தோம்.

6. என்ன கருத்தினை முன்வைத்தார்கள்.

அதற்கு வந்தவர்கள் அனைவருமே வௌ;வேறு நாட்டவர்கள். அதிலும் அதிகமானோர் அகதி வாழ்க்கையின் இன்னல்கள் கஸ்டங்கள் அறிந்தவர்கள். அவர்கள:; அனைவருமே எனது படத்தின் கதையை வாசித்த பின்னர் படத்தை பார்க்க வந்தார்கள்.

அதன் பின்னர் அவர்கள் குறிப்பிட்டது ஆழமான அளவாள கருவைக் கொண்டு நீங்கள் படம் பண்ணியிருக்கிறீர்கள் என்று. உங்கள் கதையின் அமைப்பு எங்களுகு;கு பிடித்திருக்கிறது என்றும் கதையினி கருவும் பிடித்துள்ளது என்றும் கூறினார்கள். கதையின் திரைக்கதை நன்றாக உள்ளது என்றும் கூறினார்கள். மேலும் இதுபோன்று வளர வாழ்த்துகள் கூறினார்கள்.

7.எந்த மொழியில் திரையிடப்பட்டது.

நான் எனது படத்தை தமிழ் மொழியிலே எடுத்தேன் அங்கும் அதே மொழியில் தான்திரையிட்டேன் ஆங்கில சப் ரைற்றிலுடன் வெளியிட்டோம்.

8. இந்த திரைப்பட விழாவுக்கு என்று திரைப்படத்தில் மாற்றங்கள் செய்தீர்களா?

நான் எனது படத்தை கான் படவிழாவில் குடுப்பதற்கு முடிவு பண்ணிய நேரம் மேலும் சில வடிவங்களை மெருகூட்டி வழங்கினோம்.

9.இந்தத் திரைப்பட விழாவுக்குப் பின்னர் இந்தத் துறையில் ஏதும் சாதிக்க வழி பிறந்ததா?

நிச்சயமாக இதுவரைக்கும் நான் எடுத்த குறும்படங்களில் ஒரு சில படங்கள் என் எண்ணத்திற்கு ஏற்பது போல் சரியாக அமையவில்iலை அதில் என்ன பிழைகள் சரிகள் இருப்பதென்றும் நானாகவே அறிந்து இருந்தேன் ஆனாலும் இந்தத் திரைப்பட விழாவுக்கு சேர்ந்து வந்தோம் நானுமு; எனது நண்பன் சங்கரும். இருவருக்குமே அங்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தது. நாங்கள் நிறைய விடயங்களை கற்றுக் கொண்டோம் அதன் மூலமாக திரைப்படத்துறையில் எம்மால் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்தோம். சாதிப்போம் என்ற நம்பிக்கையும் உண்டானது.

10. மொத்தமாக எத்தனை குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

எண்ண முடியாத அளவுக்கு குறுந்திரைப்படங்கள் வந்திருந்தன. 4036 படங்கள் மொத்தமாக

11. எந்த நாட்டு படங்கள் எந்த மொழியில்

அதிகமாக ஆங்கில மொழியில் தான் சில அந்நத்நத நாட்டு மொழிகளில் வந்திருந்தன.

அமெரிக்கா, இங்கிலாந்துஇ பிறேசில், பிரான்ஸ், கனடா, நோர்வே, நெதர்லாந்து, இந்தியா, சீனா, இத்தாலி, ஒஸ்ரேலியா, ஜப்பான், மெக்சிக்கோ, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், போலந்து, ருமேனியா, ரஸ்யா, செனகல், செர்பியா, சியாலியோன், சிங்கப்பூர், ஸ்லோவேனியா, தென்னாபிரிககா, தென்கொரியா, ஸ்பெயின் இன்னும் பல

12. உங்களது அடுத்த கட்டம் என்ன?

கான் படவிழாவில் பங்குபற்றியதில் இருந்து நாம் பேசிக் கொண்டதே எமது அடுத்த கட்டம் பற்றித்தான் அதுவும் கான் படவிழாவில் கலந்து கொண்ட ஏனைய படங்களுக்கு இணையாக நாமும் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடவேண்டும் என்று. அது போல அடுத்த முயற்சியில் அதற்குரிய தொழில்நுட்பங்கள் எமக்கு சரிவருமாக இருந்தால் அவர்களைப் போன்று நாமும் ஈழத்து சினிமாவை வளர்க்க ஒரு உதாரணமான முயற்சியாளர்களாக இருப்போம். எல்லாவற்றுக்கும் எம்மவர்கள் எவ்வளவோ தமிழ்நாட்டு மிரைப்படங்களை யதாரிக்கின்றார்கள். அவர்கள் முன்வந்து எம்மையும் எம்மைப் போன்ற முயற்சியாள்களையும் வளர்த்து ஈழத்து சினிமாவை வளர்க்க தயாரிப்பில் எமக்கும் உதவிகளைச் செய்தால் கான் படவிழாவுக்கு வந்த ஏனைய படங்களாகட்டும், குறும்படங்களாகட்டும் எம்மாலும் எடுக்க முடியும் என்பதை நிருபிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி, இளைஞனுக்கும், அனிதாவுக்கும்.

தகவலுக்கு நன்றி..

வாழ்த்துகள்.!

வாழ்த்துகள் பாஸ்கரன் .!

  • தொடங்கியவர்

பாஸ்கரனின் நேர்காணலையும் இணைத்தமைக்கு நன்றி இளைஞன். மேலும் சில தகவல்களை அறியக் கூடியதாக இருந்தது....! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் சரி. அஜித் கூடப் படம் எடுத்திருக்கின்றார். இதற்கு யாழ்களம் எத்தனை பக்கங்களை விலையாக்கப் போகின்றதோ? முன்னர் கடை திறப்புக்கு நடிகர் கூட எடுத்த படத்தால் சிந்திய பக்கங்களின் இரத்தம் காயவில்லை...

Edited by பொன்னையா

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் பாஸ்கரன் ,

தகவலுக்கு நன்றி அனிதா ,இளைஞன்.

அருமை... அருமை... :rolleyes:

எப்பவோ எடுத்த நம் படைப்புக்கள் எல்லாம் இப்ப இப்ப தான் நாங்கள் அங்கு இங்கு என(கனபேர்)பார்க்கிறோம் என்றால்.... படைத்தவர்கள் எவ்வளவு.... எதிபார்த்து ஏமாந்திருப்பர்... (அதுகூடஅவர்களுக்காக அல்ல... :wub: எமக்காக... எமது சூழலில் நின்று.... :) )

நம் விமர்சனம்கள் கட்டாயம் அவர்களை ஊக்குவிக்கும் (சாதகமானதோ... பாதகமானதோ... :) ) அதுதான் அவர்கள் கண்ட லாபம் கூட.... :) (நான் எல்லாவகை ஆக்கங்களுக்கும் பொதுவாக சொல்கிறேன் கதை. கட்டுரை.அரசியல். நாடகம். நடிப்பு.படிப்பு என...எல்லாம் எல்லாவற்றிற்கும்....) :)

படலைக்கு படலை மூலம் "மன்மதன்" என்று அறியப்பட்ட பாஸ்கரனின்"நதி" குறும்படம் கான்ஸ்திரைப்பட விழாவில் shortfilm corner என்ற பகுதியில் திரையிடப்பட்டது.

அனிதா, இளைஞன் இணப்புகளுக்கு மிக்க நன்றி.

பாஸ்கரன் வாழ்த்துக்கள். மிகுந்த சந்தோசமாக இருக்கிறது.. உங்கள் வெற்றிப்பயணங்கள் தொடரட்டும்.

dsc00459th3.jpg

வாழ்த்துகள் மன்மதன்...

உது யாருங்கோ நடுவில நிக்கிறபெடியன்? உவரும் விழாவுக்கு வந்து இருந்தவரோ? யாராக இருந்தாலென்ன.. நீங்கள் தொடர்ந்து கலக்குங்கோ. :(

ஆர்வம் உள்ள தமிழ் இளைஞர்கள் இந்த விழாவுக்கு தமது குறும்படங்களையும் அனுப்பிவைப்பதன் மூலம் பல வெளிநாட்டவர்கள் அதனைப் பார்ப்பதற்கான வழியை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

இந்தாங்கோ எண்ட குறும்படம் இதில இருக்கிது. பல வெளிநாட்டு ஆக்களுக்கு இதப்பார்க்கிறதுக்கான வழிய ஏற்படுத்தி குடுங்கோ.. வேறையும் இருக்கிது. பிறகு தேடி எடுத்துதாறன். நன்றி! வணக்கம்! :icon_mrgreen:

av-4930.jpg

நன்றி தகவலிற்கு அனி(தா) அக்கா..வாழ்த்துக்கள் அந்த இளம் கலைஞனுக்கு.. :lol:

அது சரி அனி(தா) அக்கா நானும் எங்கன்ட குருவை வைத்து ஒரு குறும்படம் எடுக்கலாம் எண்டு நினைத்திருக்கன் இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறியள் எண்டு ஒருக்கா சொல்லுங்கோ.. :o (யாரும் என்னை ஏசி போடாதையுங்கோ என்னை).. :(

அப்ப நான் வரட்டா!!

இந்தாங்கோ எண்ட குறும்படம் இதில இருக்கிது. பல வெளிநாட்டு ஆக்களுக்கு இதப்பார்க்கிறதுக்கான வழிய ஏற்படுத்தி குடுங்கோ.. வேறையும் இருக்கிது. பிறகு தேடி எடுத்துதாறன். நன்றி! வணக்கம்! :wub:

av-4930.jpg

ஓ...இதுவும் குறும்படமா குருவே.. :lol: (சும்மா சொல்ல கூடாது)..கொஞ்சநாளைக்கு அப்புறம் எல்லா பொலிஸ் நிலையத்திலையும் இந்த படம் தொங்கினாலும் தொங்கும் பாருங்கோ.. :D

அப்ப நான் வரட்டா!!

நன்றி தகவலிற்கு அனி(தா) அக்கா..வாழ்த்துக்கள் அந்த இளம் கலைஞனுக்கு.. :D

அது சரி அனி(தா) அக்கா நானும் எங்கன்ட குருவை வைத்து ஒரு குறும்படம் எடுக்கலாம் எண்டு நினைத்திருக்கன் இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறியள் எண்டு ஒருக்கா சொல்லுங்கோ.. :lol: (யாரும் என்னை ஏசி போடாதையுங்கோ என்னை).. :o

அப்ப நான் வரட்டா!!

அனி அக்கா எண்டு கூப்பிடலாம். அனிதா அக்கா எண்டும் கூப்பிடலாம். இல்லாட்டிக்கு அனிதா எண்டே கூப்பிடலாம். அனி(தா) அக்கா எண்டால் என்ன குருவுக்கு கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கோ. ஓ பேஷா படம் எடுக்கலாமே குருவவச்சு... ஆனா அது குறும்படமா எடுக்கிறது எண்டால் கஸ்டம் பாருங்கோ. ஏன் எண்டால் குருவிண்ட வாழ்க்கையில ரெண்டு வசனத்தில சொல்லி முடிக்கிறமாதிரி ஒரு சம்பவமும் நடக்க இல்ல. எல்லாம் இராமாயணம், மகாபாரதம் மாதிரி நீளமான தொடர்கதைகள். அப்பிடி எண்டால் குரு எண்டுற பெயரில ஒரு சீரியல் செய்வமோ?

ஓ...இதுவும் குறும்படமா குருவே.. :wub: (சும்மா சொல்ல கூடாது)..கொஞ்சநாளைக்கு அப்புறம் எல்லா பொலிஸ் நிலையத்திலையும் இந்த படம் தொங்கினாலும் தொங்கும் பாருங்கோ.. :(

அப்ப நான் வரட்டா!!

சர்வதேச அளவில முன்னுக்கு வாறது எண்டால் இதுகள எல்லாம் கண்டுகொள்ளக்கூடாது. கீழ இருக்கிற குறும்படம் எப்பிடி இருக்கிது எண்டு பாத்து சொல்லுங்கோ.

av-4930.jpg123623814843335f5304067.gifav-2789.png

நான் போலிசுநிலையத்துக்கு போனால்.. யாழில இருக்கிற மிச்சம் 4500 பேரையும் மறக்காமல் கூட்டிக்கொண்டுதான் போவன். கவலைப்படாதிங்கோ. :lol:

Edited by முரளி

இத் திரைப்படத் தயாரிப்பில் பங்குகொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள்.

இலங்கை - இந்தியா மற்றும் சுவிஸில் நடைபெற உள்ள தமிழ் குறும்பட விழாவில் பங்கு கொள்ள உலகின் அனைத்து பகுதியிலிருந்தும் குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் கோரப்படுகின்றன. குறும்படங்களின் அல்லது ஆவணப்படங்களின் கதைக் கருக்கள் குறித்த கட்டுப்பாடுகள் இல்லை. இலங்கை - இந்தியா போன்ற நாடுகளிலிருந்து அனுப்பப்படும் குறும்படங்களை அந்தந்த நாடுகளிலேயே ஒப்படைக்கலாம். குறும்படங்களுக்கு பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

உங்கள் குறும்படங்கள் குறித்த தகவல்களை அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் : info@ajeevan.

குறும்படங்கள் அல்லது ஆவணப்படங்கள் 30 நிமிடத்துக்குள் இருத்தல் வேண்டும்.

http://www.ajeevan.ch/content/view/3170/1/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக்குறும்படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் சிறியேனின் வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புகளுக்கு நன்றிகள் அனிதா, இளைஞன். படலைக்குப் படலை 'மன்மதன்' பாஸ்கரனுக்கு வாழ்த்துகள்.

ஏன் எண்டால் குருவிண்ட வாழ்க்கையில ரெண்டு வசனத்தில சொல்லி முடிக்கிறமாதிரி ஒரு சம்பவமும் நடக்க இல்ல. எல்லாம் இராமாயணம், மகாபாரதம் மாதிரி நீளமான தொடர்கதைகள். அப்பிடி எண்டால் குரு எண்டுற பெயரில ஒரு சீரியல் செய்வமோ?

சர்வதேச அளவில முன்னுக்கு வாறது எண்டால் இதுகள எல்லாம் கண்டுகொள்ளக்கூடாது. கீழ இருக்கிற குறும்படம் எப்பிடி இருக்கிது எண்டு பாத்து சொல்லுங்கோ.

av-4930.jpg123623814843335f5304067.gifav-2789.png

நான் போலிசுநிலையத்துக்கு போனால்.. யாழில இருக்கிற மிச்சம் 4500 பேரையும் மறக்காமல் கூட்டிக்கொண்டுதான் போவன். கவலைப்படாதிங்கோ. :lol:

மருமேன்! இராமாயணம், மகாபாரதம் எண்டால் நீங்கள் கூனியோ இல்லாட்டி சகுனியோ? தப்பா நினைக்காதீங்க.. இவங்களாலதான் இராமாயணமும் மகாபாரதமும் இவ்வளவூ பெரிசா வந்ததுன்னு பேசிக்குறாங்க.. :wub:

அப்பிடி இல்லப் பாருங்கோ சோழியன் மாமா... உண்மையில நான் மகாபாரதத்தில பகவான் கிருஷ்ணன் மாதிரியான வேசத்திலயும்... இராமாயணத்தில இராமர் மாதிரியான வேஷத்திலயும் வாறமாதிரியான பாத்திரம். ஆனா ஒரு கொஞ்சம் வித்தியாசம் என்ன எண்டால் இந்தக்கால நவீன உலகோட ஒத்துப்போறமாதிரியும் மற்றது.. கொஞ்சம் நல்ல பிள்ளையாட்டமாயும், குடும்பங்களின் காவலனாகவும் இதில வாறன்.. :wub:

அனி அக்கா எண்டு கூப்பிடலாம். அனிதா அக்கா எண்டும் கூப்பிடலாம். இல்லாட்டிக்கு அனிதா எண்டே கூப்பிடலாம். அனி(தா) அக்கா எண்டால் என்ன குருவுக்கு கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கோ. ஓ பேஷா படம் எடுக்கலாமே குருவவச்சு... ஆனா அது குறும்படமா எடுக்கிறது எண்டால் கஸ்டம் பாருங்கோ. ஏன் எண்டால் குருவிண்ட வாழ்க்கையில ரெண்டு வசனத்தில சொல்லி முடிக்கிறமாதிரி ஒரு சம்பவமும் நடக்க இல்ல. எல்லாம் இராமாயணம், மகாபாரதம் மாதிரி நீளமான தொடர்கதைகள். அப்பிடி எண்டால் குரு எண்டுற பெயரில ஒரு சீரியல் செய்வமோ?

என்ன குருவே இப்படி கேட்டு போட்டியள் :lol: ..சரி விளக்கம் தானே பேஷா தாறன் என்ன..அதுவென்னவெண்டா நீங்க சொன்ன மாதிரி எல்லாம் அனி(தா) அக்காவை எல்லாரும் கூப்பீடினம் தானே ஆனபடியா நான் வித்தியாசமா கூப்பிடுறன் அவ்வளவு தான் :wub: . முதலில அனிபாட்டி எண்டு கூப்பிட்டனான் அல்லோ..(பிறகு அவா பாவம் எண்டு போட்டு இப்ப உப்படி கூப்பிடுறேன்) :D ..ஏன் பிடிகலையா குருவே..??

உந்த விளக்கம் காணுமோ குருவே.. :lol:

மற்றது..குருவே பேஷா குரு எண்டு சீரியல் எடுக்கலாம் ஆனா என்ன நீங்க அதில பதினொரு அவதாரத்தில வரவேண்டும் சொல்லிட்டன் :D அப்ப தான் தசாவாதார படத்தை கூட நாம முறியடித்த மாதிரி இருக்கும் இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறியள் குருவே..ஆனா என்ன நானும் ஒரு காச்சியிலையாவது எண்ட முகத்தை காட்டுவன் சொல்லிட்டன்.... :o

அப்ப நான் வரட்டா!!

சர்வதேச அளவில முன்னுக்கு வாறது எண்டால் இதுகள எல்லாம் கண்டுகொள்ளக்கூடாது. கீழ இருக்கிற குறும்படம் எப்பிடி இருக்கிது எண்டு பாத்து சொல்லுங்கோ.

av-4930.jpg123623814843335f5304067.gifav-2789.png

நான் போலிசுநிலையத்துக்கு போனால்.. யாழில இருக்கிற மிச்சம் 4500 பேரையும் மறக்காமல் கூட்டிக்கொண்டுதான் போவன். கவலைப்படாதிங்கோ.

சும்மா அதிருதில்லலல குறும்படமே.. :unsure: (இதை பேசமா நாங்க அனுப்பினா என்னவாம்)..ஏன் சொல்லுறன் எண்டா அப்படி இப்படி கிறுக்கி போட்டு நவீன ஓவியம்(மொடர்ன் ஆர்ட்) எண்டு சொல்லீனம் அந்த கிறுக்கலிற்கு விளக்கமும் கொடுக்கீனம் அல்லோ நாங்களும் உதை அனுப்பி அதற்கு ஒரு விளக்கம் கொடுத்தா என்னவாம்.. :lol:

இதை பத்தி தாங்கள் என்ன நினைக்கிறியள் மற்றது நவீன ஓவியம் வரையிறவை எல்லாம் என்னோட கோவித்து போடாதையுங்கோ... :lol:

ஓ..அப்ப ஒரு முடிவோட தான் இருக்கிறியள் எண்டு சொல்லுங்கோ..பொலிஸ் நிலையதிற்கு 4500 பேர் எங்க வாறது சுத்தி பார்த்தா நீங்களே 1000 தடவை வரணும் என்ன குருவே.. :(

அப்ப நான் வரட்டா!!

வாழ்த்துக்கள் பாஸ்கரன்

என்ன குருவே இப்படி கேட்டு போட்டியள் ..சரி விளக்கம் தானே பேஷா தாறன் என்ன..அதுவென்னவெண்டா நீங்க சொன்ன மாதிரி எல்லாம் அனி(தா) அக்காவை எல்லாரும் கூப்பீடினம் தானே ஆனபடியா நான் வித்தியாசமா கூப்பிடுறன் அவ்வளவு தான் . முதலில அனிபாட்டி எண்டு கூப்பிட்டனான் அல்லோ..(பிறகு அவா பாவம் எண்டு போட்டு இப்ப உப்படி கூப்பிடுறேன்) .ஏன் பிடிகலையா குருவே..??

உந்த விளக்கம் காணுமோ குருவே..

ஓ அப்பிடியோ..? :lol: நானும் உங்கள ஒரு மாற்றத்துக்கு பே(பி) இல்லாட்டிக்கு சீ(டன்) எண்டு கூப்பிடவோ? அதுக்காக நீங்களும் ஒரு மாற்றத்துக்கு என்னை கு(ரு) எண்டு கூப்பிடவோ எண்டு கேக்ககூடாது. பிறகு அது வேற அர்த்தத்தில வந்திடும். :D:lol::D

ஓ..அப்ப ஒரு முடிவோட தான் இருக்கிறியள் எண்டு சொல்லுங்கோ..பொலிஸ் நிலையதிற்கு 4500 பேர் எங்க வாறது சுத்தி பார்த்தா நீங்களே 1000 தடவை வரணும் என்ன குருவே..

அப்ப நான் வரட்டா!!

ஓம் அப்பிடி ஒரு பிரச்சனையும் இருக்கிது என. அத நான் நினைக்க இல்ல மறந்துபோனன். நான் யாழுல வச்சு இருக்கிற ஆயிரம் ஐடிக்காக ஒரு ஐடீக்கு ஒரு தடவை எண்டு பாத்தால் ஆயிரம் தடவை போலீசுகாரனிட்ட அடிவாங்க எண்ட உடம்பு தாங்காது. அப்ப எதிர்காலத்தில போலீசால ஏதாவது சிக்கல் வந்தால் இப்பிடி செய்வமோ? வலைஞன் மாமாதான் எங்கட தலைவர் - குரு - வழிகாட்டி எண்டு போலீசிட்ட போட்டுக்குடுப்பமோ? :rolleyes:

மற்றது... பாஸ்கரன் எண்டு சொல்லப்படுகிற, பிரான்சில இருக்கிற படலைக்கு படலை மன்மதன் (GATE TO GATE MANMATHAN) தான் இப்பிடி எல்லாம் ஆக்களுக்கு நக்கல் அடிக்கிறதுக்கு பழக்கிவிட்டது, எங்களுக்கு எழுதக்காட்டித் தந்தது எண்டு எல்லாம் போலிசிட்ட சொல்லி அவரையும் குழுவினரையும் போட்டுக்குடுப்பம் என. :lol::):lol:

  • தொடங்கியவர்

எனக்கு தனிமடலில் மன்மதன் இதை எழுதி அனுப்பியிருந்தார் , அவரின் கருத்தை இங்கு இணைக்கின்றேன்.

அனைவருக்கும் வணக்கம்,

நான் கான்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றேன் என்பதில் சந்தோசமும் மகிழ்வும் கொள்கிறேன்.

ஈழத்திலிருந்து புலம்பெயர் வாழ்வியலில் நடக்கும் படைப்புகளை , நாங்கள் இது போன்ற விழாக்களுக்கு கொண்டு சென்று அங்கு அனைவருக்கும் காண்பிக்கவேண்டும்.

இருந்தாலும் எம்மவர்களைக் கண்டால் இந்தியர்கள் என்பதே பலரின் பார்வைகள் அதை நாம் அகற்ற வேண்டுமானால் இது போன்ற விழாக்களுக்கு செல்ல வேண்டும்.பங்கு கொள்ள வேண்டும், எமது படைப்புகளையும் ,எம் ஈழம் சார்ந்த பிரச்சனைகளையும் கொண்டு சென்று அங்கு காண்பிக்க வேண்டும். இதன் நோக்கமாகவே நான் சென்றேன்.

ஆனாலும் இந்தியர்களை நான் பிரித்துப்பார்க்கவில்லை. இருப்பினும் எமெக்கென்றொர் சினமா உருவாக வேண்டும் .அதற்காகவே உழைப்போம்.

அஜித்துடன் போட்டோ எடுத்ததைப் பற்றி இங்கு கேட்டிருந்தார்கள். அஜித் என்பவர் இந்தியா முழுவதும் தெரியக் கூடிய ஒரு நடிகர். கான்ஸ் திரைப்படவிழாவில் நாமும் அவரும் சமனே ஆனாலும் கூட அவரை விட ஒரு படி நாங்கள் மேல் என்று சொல்லலாம்.ஏன் என்றால் எனது குறும்படம் கான்ஸ் திரைப்படவிழாவில் தான் உள்ளே திரையிடப்பட்டது.அஜித் பில்லா அவர்களே ஒரு சினிமா தியட்டரை வாடகைக்கு எடுத்து அதற்கு வரும்படி ஒரு சில வேலைக்காரர்களையும் அங்கு வந்திருந்த ஹிந்தி ஆட்களையும் அழைத்து அந்த படத்தை போட்டுக் காட்டி உள்ளார்கள் .இதுதான் உண்மை இப்படி செய்து விட்டு அஜித் இன்று தான் கான்ஸ் திரைப்படவிழாவில் படத்தைக் காட்டியதாக சென்னையில் இருக்ககூடிய தொலைக்காட்சிகள் ,புத்தகங்களுக்கு பதில் கொடுத்திருக்கின்றார்.

இதற்கு உதாரணங்களாக நாங்களும் சளைத்தவர்களில்லை என்பதற்காகத்தான் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. அஜித்துடன் போட்டோ எடுக்க வேண்டும் என்று ஆசையில் எடுக்கவில்லை. :o

எனது கருத்தில் குற்றம் குறையிருப்பின் மன்னியுங்கள்.

நன்றி வணக்கம்!!

  • தொடங்கியவர்

இந்தாங்கோ எண்ட குறும்படம் இதில இருக்கிது. பல வெளிநாட்டு ஆக்களுக்கு இதப்பார்க்கிறதுக்கான வழிய ஏற்படுத்தி குடுங்கோ.. வேறையும் இருக்கிது. பிறகு தேடி எடுத்துதாறன். நன்றி! வணக்கம்! :o

av-4930.jpg

ஆ , இப்படியும் ஒரு குறும்படமோ ? இதுவரைக்கும் பார்த்ததேயில்லை ...... அருமை, மிக மிக அருமை...வெற்றி பெற வாழ்த்துக்கள்... :)

நன்றி தகவலிற்கு அனி(தா) அக்கா..வாழ்த்துக்கள் அந்த இளம் கலைஞனுக்கு.. :D

அது சரி அனி(தா) அக்கா நானும் எங்கன்ட குருவை வைத்து ஒரு குறும்படம் எடுக்கலாம் எண்டு நினைத்திருக்கன் இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறியள் எண்டு ஒருக்கா சொல்லுங்கோ.. :o (யாரும் என்னை ஏசி போடாதையுங்கோ என்னை).. :D

அப்ப நான் வரட்டா!!

அதுதான் உங்க குரு ஏற்கனவே ஒரு குறும்படத்தை எடுத்து வச்சிருக்காரே.... :lol: பத்தாதுக்கு உங்க படங்களுமெல்லோ இணைச்சிருக்கார் :D

அனி அக்கா எண்டு கூப்பிடலாம். அனிதா அக்கா எண்டும் கூப்பிடலாம். இல்லாட்டிக்கு அனிதா எண்டே கூப்பிடலாம். அனி(தா) அக்கா எண்டால் என்ன குருவுக்கு கொஞ்சம் விளக்கம் சொல்லுங்கோ.

நல்ல கேள்வி , நானும் நினைச்சனான் கேட்கனும் எண்டு , யமுனா எல்லாரையும் விட வித்தியாசமா எண்ட பெயரைக் கூப்பிடுறாராம் :lol:

சர்வதேச அளவில முன்னுக்கு வாறது எண்டால் இதுகள எல்லாம் கண்டுகொள்ளக்கூடாது. கீழ இருக்கிற குறும்படம் எப்பிடி இருக்கிது எண்டு பாத்து சொல்லுங்கோ.

av-4930.jpg123623814843335f5304067.gifav-2789.png

நான் போலிசுநிலையத்துக்கு போனால்.. யாழில இருக்கிற மிச்சம் 4500 பேரையும் மறக்காமல் கூட்டிக்கொண்டுதான் போவன். கவலைப்படாதிங்கோ. :D

அப்படியே இந்தப்படததையும் சேர்த்துக் கொள்ளுங்க .... :D1690076442056055wd3.gif

( ஜமுனா கோவிக்கிறயில்லை , சும்மா பகுடிக்கு இந்தப்படம் செய்தனான் )

ஓ அப்பிடியோ..? நானும் உங்கள ஒரு மாற்றத்துக்கு பே(பி) இல்லாட்டிக்கு சீ(டன்) எண்டு கூப்பிடவோ? அதுக்காக நீங்களும் ஒரு மாற்றத்துக்கு என்னை கு(ரு) எண்டு கூப்பிடவோ எண்டு கேக்ககூடாது. பிறகு அது வேற அர்த்தத்தில வந்திடும்.

ம்ம்..குருவே அதுவே தான்..நீங்க என்னை சீடன் எண்டு கூப்பிடுறதே ஒரு மாற்றமா தான் இருக்குது அல்லோ குருவே பிறகு ஏன் இன்னொரு மாற்றம்.. :o (அப்படி எண்டாலும் பரவால்ல)..பே(பி) எண்டு கூப்பிடுங்கோ ஆனா சீ(டன்) எண்டு மட்டும் கூப்பிட்டு போடாதையுங்கோ பிறகு எல்லாமே "டண்டணக்கா" ஆகிடும் ஏன் எண்டு விளங்குது தானே குருவிற்கு.. :lol:

சா..சா நான் உங்கள் குரு எண்டு மட்டும் கூப்பிடுவன் வேற மாதிரி எல்லாம் கூப்பிடமாட்டன் பயப்பிடாதையுங்கோ..ஏன் இப்ப அழுறியள் உதுகெல்லாம் போய்.. :o

"ஆசை பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம்

குருவ வாங்க முடியுமா...

நா..நா..நா.நா"

அப்ப நான் வரட்டா!!

ஓம் அப்பிடி ஒரு பிரச்சனையும் இருக்கிது என. அத நான் நினைக்க இல்ல மறந்துபோனன். நான் யாழுல வச்சு இருக்கிற ஆயிரம் ஐடிக்காக ஒரு ஐடீக்கு ஒரு தடவை எண்டு பாத்தால் ஆயிரம் தடவை போலீசுகாரனிட்ட அடிவாங்க எண்ட உடம்பு தாங்காது. அப்ப எதிர்காலத்தில போலீசால ஏதாவது சிக்கல் வந்தால் இப்பிடி செய்வமோ? வலைஞன் மாமாதான் எங்கட தலைவர் - குரு - வழிகாட்டி எண்டு போலீசிட்ட போட்டுக்குடுப்பமோ? :)

மற்றது... பாஸ்கரன் எண்டு சொல்லப்படுகிற, பிரான்சில இருக்கிற படலைக்கு படலை மன்மதன் (GATE TO GATE MANMATHAN) தான் இப்பிடி எல்லாம் ஆக்களுக்கு நக்கல் அடிக்கிறதுக்கு பழக்கிவிட்டது, எங்களுக்கு எழுதக்காட்டித் தந்தது எண்டு எல்லாம் போலிசிட்ட சொல்லி அவரையும் குழுவினரையும் போட்டுக்குடுப்பம் என. :

ம்ம்...நீங்க மறந்து போனாலும் நான் மறக்கமாட்டன் குருவே.. :D (நீங்களும் எத்தனை தரம் தான் அடி வாங்கிறது)..நீங்க ரொம்ப நல்லவர் :D ..நன்ன யோசனையா தான் இருக்கு அப்ப நீங்க சொன்ன மாதிரியே "வலைஞன் மாமா" எங்கன்ட தலைவரா இருந்திட்டு போகட்டும்..(ஆனா என்ன நீங்களே ஆயிரம் தடவை வாறியள் எண்டா அவர்)...நினைத்து கூட பார்க்க முடியல்ல..சரி நாங்க அத விடுவோம் என்ன.. :D

பேஷா..அந்த பாஸ்கரன் அண்ணாவையும் இழுத்திடுவோம் எப்பவுமே கூட்டமா சேர்ந்து அடி வாங்கிறது தனி சுகம் என்ன குருவே.. :D (குருவே நாங்க கதவிற்கு கதவு எண்டு ஒன்டை செய்தா எப்படி இருக்கு இத பத்தி நீங்க என்ன நினைக்கிறியள் எண்டு ஒருக்கா சொல்லுங்கோ).. :lol:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.