Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆண்டான்குள நகரை கைப்பற்றியுள்ளதாக இராணுவம் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் மன்னர் பகுதியில் உள்ள ஆண்டான்குள நரை தாம் கைப்பற்றியுள்ளதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

20080628_Map4.jpg

படம் இலங்கை ராணுவ இணையம்

Sri Lankan military: Soldiers capture Tamil rebel-held town, fighting kills 43

The Associated PressPublished: June 28, 2008

COLOMBO, Sri Lanka: Government troops captured a Tamil Tiger rebel-held town in war-ravaged northern Sri Lanka while infantry clashes across the region killed 40 rebels and three soldiers, the military said Saturday.

Fighting has escalated in this Indian Ocean island in recent months as government forces try to fulfill a pledge to crush the insurgents by the end of this year.

In the latest fighting, army troops took control of Andankulam town in Mannar district after a battle that killed 28 rebels and one soldier Friday, said military spokesman Brig. Udaya Nanayakkara.

The town's capture came a day after the troops seized a key supply base in Vavuniya district that had been used to replenish the Tamil Tigers' front-line troops.

Nanayakkara said the capture of the base and town were strategically important for government troops to gain control of rebels' northern strongholds.

Other battles on Friday killed 12 rebels and one soldier in the Welioya region, while in the northern Jaffna peninsula a soldier died in a roadside bomb blast blamed on rebels, Nanayakkara said.

The military says fighting over the past week has killed 220 rebels and 22 soldiers. Analysts accuse both sides of exaggerating enemy losses and underreporting their own casualties.

Rebel spokesman Rasiah Ilanthirayan was not immediately available for comment.

It was not possible to independently verify the military's claims because journalists are banned from the northern jungles where much of the fighting takes place.

The Tamil Tiger rebels have fought since 1983 to create an independent state for ethnic minority Tamils, who have been marginalized by successive governments controlled by ethnic Sinhalese. More than 70,000 people have been killed in the conflict.

The government vows to capture rebel-held territory and to crush the insurgents by 2009 but diplomats and other observers say the army has faced more resistance than expected.

http://www.iht.com/articles/ap/2008/06/28/...a-Civil-War.php

  • கருத்துக்கள உறவுகள்

மன்னா- வவுனியா கள முனையில் இராணுவம் கண்டுள்ள முன்னேற்றம்.

mannarvavuniya2aq0.jpg

img: nedukks

சிவப்பு தடித்த கோடு - புதிய தற்காலிக முன்னணி நிலைகள்

மஞ்சள் தடித்த கோடு - சமாதான காலத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்த முன்னணி நிலைகள்.

சிவப்பு சரிவுக் கோடு - இராணுவம் பிடித்த மற்றும் பிடிக்க உடனடிச் சாத்தியமுள்ள பகுதிகள்.

பச்சை அம்புக்குறி: இராணுவம் நகர்வுகள் செய்த முனைகள்.

நீலம் அம்புக்குறி: இராணுவம் நகரக் கூடிய அல்லது நகர்ந்திருக்கக் கூடிய முனைகள் என்று கருதப்படுபவை.

(எல்லைகள் பருமட்டானது.)

என்னப்பா குழப்புறாங்கள்.

என்ன இப்பதான் இராணுவம் ஆண்டாங்குழத்தை கைப்பற்றியதா..?? அடம்பன் கையகப்படுத்த பட்ட போதே மடுவுக்கும் அடம்பனுக்கும் இடையில் இருக்கும் ஆண்டான் குளத்தை விட்டு புலிகள் அகன்று விட்டார்கள். அதன் பின் அங்கு சண்டை கூட நடந்ததாக நான் அறியேன்

இராணுவத்தினர் இனிமேல் அவர்களின் முன்னரங்கம் என்பது பள்ளமடு, பாப்பாமோட்டை, ஆட்காட்டிவெளி, சாளம்பன், பெரியவிளாங்குளம் இப்படியான ஊர்கள்.

இதை எல்லாவற்றையும் விட முக்கிய இலக்காக இராணுவம் கொண்டு இருப்பது என்னவோ நாங்கள் 25 போராளிகளை இளந்த சீராட்டியகுளத்துக்கும் அடுத்த பனம்காமம் எனும் ( பண்டாரகவன்னியன்) ஊர்தான்.

Edited by பொய்கை

  • கருத்துக்கள உறவுகள்

மன்னா- வவுனியா கள முனையில் இராணுவம் கண்டுள்ள முன்னேற்றம்.

mannarvavuniya2aq0.jpg

img: nedukks

சிவப்பு தடித்த கோடு - புதிய தற்காலிக முன்னணி நிலைகள்

மஞ்சள் தடித்த கோடு - சமாதான காலத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்த முன்னணி நிலைகள்.

சிவப்பு சரிவுக் கோடு - இராணுவம் பிடித்த மற்றும் பிடிக்க உடனடிச் சாத்தியமுள்ள பகுதிகள்.

பச்சை அம்புக்குறி: இராணுவம் நகர்வுகள் செய்த முனைகள்.

நீலம் அம்புக்குறி: இராணுவம் நகரக் கூடிய அல்லது நகர்ந்திருக்கக் கூடிய முனைகள் என்று கருதப்படுபவை.

(எல்லைகள் பருமட்டானது.)

இராணுவம் அங்கே முன் நேறி விட்டது இங்கே முன் நேறி விட்டது என்று புலத்தில் பாதுகாப்பாக இருந்து கொண்டு எதோ வெட்டிப் புடுங்குபதைப் போல் எழுதுபவர்களும் சிறிலங்கா இராணுவத்தின் பிரச்சரைத்தை மேற் கொள்ளுகிறவர்களும் ஜெயசிகுரிவின் போது இராணுவம் மாங்குளம் வரையும் முன் நேறியதையும் பின்னர் ஓர் இரு கிழமைகளில் பாரிய பின் அடைவைச் சந்தித்ததையும் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

தற்காப்பின் போது எமக்கு உயிரிழப்புக்கள் குறைவாகவும் முன் நேறும் இராணுவத்திற்கு அதிகமாகவும் இருக்கும்.இராணுவம் பல முனைகளில் முன் நேறும் போதும் பரந்து பட்ட இடங்களைப் பிடிக்கும் போதும் படைச் செறிவென்பது குறைந்து கொண்டு போகும்.அவ்வாறு நிகழும் போது படைத் தரப்பின் பல்வீனமான பல முனைகள் வெளிப்படும்.அத்தகைய நிலையிலேயே புலிகள் தமது எதிர்ச் சமரைத் தொடங்குவார்கள்.ஒரு இராணுவம் வெற்றி பெறுவது என்பது எதிரியின் வளங்கள் தமது வளங்கள் பற்றிய மதிப்பீட்டிலும் முலோபாய நகர்வுகளிலுமே தங்கி இருக்கிறது.சண்டை என்பது இறுதி நிகழ்வு.முலோபாயத்திலையே வெற்றி தோல்வி என்பது நிச்சயிக்கப்படுகிறது.வேலுப்??ிள்ளை பிரபாகரனின் இராணுவ முலோபாயத் திறன் என்பது முன்னரும் பலமுறை நிரூபிக்கப்பட்ட ஒன்று..

இடை இடையே சில துர்ப்பாகியமான இழப்புக்கள் ஏற்படும். போர் என்னும் போது இது நிகழ்த்தான் செய்யும்.அவற்றில் இருந்து பாடக்களைக் கற்று திருத்திக் கொள்ள புலிகளுக்குத் தெரியும்.

ஆகவே இங்கிருந்து அரைகுறை அறிவுடன் தாங்கள் தான் புலிகளின் இராணுவத் தந்திரோபாயங்களை வழி நடாதுவதாகவும் புலிகள் என்ன செய்கிறார்கள் எனவும் பிரசங்கம் செய்பவர்கள் கொன்ச்சக் காலம் பொறுத்து இருங்கள்.களத்தில் இதற்கான பதில்கள் மிக விரைவில் கிடைக்கும்.உங்கள் அவசரத் தனம் மேதாவித் தனம் என்பன எதிரியின் உளவியற் பிரச்சாரதுக்கே உதவுதாக இருக்கும். நீங்கள் நினைப்பதைப் போல் போர் புரிந்து அனியாயமாக உயிர்கள் இழக்கப்பட முடியாது.அதற்கான பொறுப்பு தலமைக்கு இருக்கிறது.

இராணுவ மூலோபாயம் பற்றிய ஆளமான புரிதல் இன்றி வரைபடம் கீறுபவர்கள் தங்கள் மேதாவித் தனத்தை கொன்சக்காலத்துக் அடைகாக்கவும்.பின்னர் புலிகள் வெற்றி பெறும் போது தாங்கள் தான் களத்தில் நின்று போரிட்டு வெற்றி பெற்றதைப் போல் துள்ளிக் குதிக்கலாம்

இது நெடுக்.....அவர்களுக்கு சமர்ப்பணம்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குகதாசன். சந்தை கூடும் வரை..காகங்கள் கரைந்து விட்டு சந்தை முடிந்ததும் தூங்கப் போயிடுங்கள். ஆனால்.. போரில் இழப்பு என்பது சந்தை கூடுவதும் காகம் கரைவதும் போன்றதல்ல....!

ஒன்றை இலகுவாக எல்லோரும் மறந்து விடுறம். களத்தில் புகலிடத்தில் உள்ள மக்களிடம் போர் தொடர்பான மன நிலையை அறிய வேண்டிய அவசியத்தை மறந்து விடுகிறார்கள்.

மக்கள் இராணுவம் தம்மை நெருங்க நெருங்க போர் பற்றிய நம்பிக்கையீனத்தை அடைவார்கள். முன்னர் ஏ 9 பாதையின் இரு மருங்கிலும் நகர்ந்த இராணுவம் தற்போது அதன் மேற்கு பக்கத்தில் இரண்டு கிளைகளில் நகர்கிறது. மக்களின் இடம்பெயர்வுகள் தொடர்கின்றன. இவை மக்கள் மத்தியில் சலிப்பையே ஊட்டும். இதுவும் எதிரிக்குப் பலம் தான்.

முன்னர் பாவிக்கப்பட்ட தந்திரோபாயங்கள் இப்போதும் பாவிக்கப்பட முடியும் என்றில்லை. எதிரியும் முன்னர் விட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்றே உள்ளான். அவனும் தனது பலவீனங்களை சரி பார்த்தே வருகிறான். அப்படி இன்றேல் இன்று யாழ்ப்பாணம் புலிகளில் கையில் இருந்திருக்க வேண்டும். எனவே பழைய கள நிலவர அடிப்படையில் எதிர்காலக் களமும் அமையும் என்று எதிர்பார்க்க முடியாது. இராணுவத்தின் ஆட்பலம்.. சுடுபலம் எல்லாமே அதிகரித்திருக்கும் நிலையில்.. போர் தந்திரங்கள் எப்போதும் ஒரே வடிவினதாக அமைந்திருக்க முடியாது. எதிரியும் தனக்கான ஆபத்தை உணர்ந்து கொண்டுதான் நகர்கிறான். அவன் அகலக் கால் வைக்கும் போது தனக்குள்ள ஆபத்தை உணராத அளவுக்கு அவன் ஒன்றும் முட்டாள் இல்லை.

இராணுவம் சிராட்டிக்குளம் பகுதிக்கு முன்னேறி இருப்பது மல்லாவி - மாங்குளம் வீதிக்கு ஆபத்தாக அமையும். வன்னிக்குள் ஆழ ஊடுருவும் படையணியின் செயற்பாடுகள் இலகுவாகும். இவை பற்றியும் பரீசிலிக்க வேண்டியவர்களாகவே புலிகள் இருக்கின்றனர்.

இத்திட்டம் முன்னர் சந்திரிக்கா அம்மையாரின் பரிசீலனையிலும் இருந்தது. ஆனால் ரத்வத்தை ஏ 9 இரு மருங்கு நகர்வை தேர்வு செய்து தோற்றார். இப்போ மகிந்த அதற்குச் செயல்வடிவம் கொடுத்துப் பார்க்கிறார். அதில் அவருக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கிட்டியே உள்ளது அதை மறைக்க முடியாது.

வரவிருக்கும் இரண்டு மாகாண சபை தேர்தல்களுக்கு முன்னரும் வன்னியில் ஒரு வெற்றிமுகத்தை தனது படைகள் கொண்டிருப்பதை காட்டியாக வேண்டிய வேகத்தில் இப்போ இராணுவம் நகர்கிறது.

சர்வதேச ஊடகங்கள் ஓகஸ்ட்டுக்குள் புலிகளை ஒடுக்க சரத் போட்ட காலக்கெடுவை மீண்டும் மீண்டும் மீட்டி வருகின்றன.

இராணுவம் முன்னேறியுள்ள பகுதிகள்.. எனி இலகுவாக முன்னேறக் கூடிய பகுதிகள் என்பன ஏலவே வந்த வரைபடங்களின் படி செய்திகளில் பாவிக்கப்பட்ட ஊர்களின் பெயரின் படி.. அமைந்திருக்கிறது.

எமக்கு வசதியாக விமர்சனங்களை வைத்துக் கொண்டிருப்பதிலும் யதார்த்தப் புறநிலைகளூடு மக்களுக்கு தேச விடுதலை பற்றிய மன உறுதியை ஏற்படுத்தின் இவ்வாறான தோல்விகளின் போது மக்கள் சோர்வடையும் நிலை ஏற்பட்டிருக்காது.

அதைவிடுத்து.. ஒரு அங்குல நிலமும் பறிபோக அனுமதியோம் என்றுவிட்டு.. கிலோமீற்றர் கணக்கில் விட்டால் மக்கள் என்ன நினைப்பார்கள்..???! மக்கள் போர் தந்திரம் அறிந்தவர்களும் அல்ல. அவர்களுக்கு தமது விடுதலை விரைந்து கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பைத் தவிர வேறு இருக்க வாய்ப்பில்லை இக்கட்டத்தில். அது நீண்டு செல்லும் போது மக்கள் சலிப்படையவும்.. எதிர் தரப்பிடம் ஓடவுமே செய்வர்..! :)

Edited by nedukkalapoovan

ஆமா தெரியாமல்தான் கேட்கிறன் என்ன கிரிக்கட்டா நடக்குது நேர்முக வர்ணனை கொடுக்கிறதிற்கு. . . அங்கை போயிட்டான் இங்கை போயிட்டான் என்று சொல்ல. . அவன் எங்கையும் போகேல்லை. . இருந்த இடத்தில் இருந்துகொண்டு பின்னுக்கும் முன்னுக்கும் போறான். . இதெல்லாம். . .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று பரப்பன்கண்டலை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது.

இந்த செய்தி எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை.

Troops make another breakthrough; Parappakkadantan falls to troops - Mannar front

Security forces personnel operating in Mannar front made another major breakthrough capturing LTTE's stronghold in Parappakkadantan, 4Km north of Giant Tank, in Mannar front this noon, June 28.

According to the military sources, a firing rang used by the LTTE terrorists, probably for training requirements, also found in a search operation conducted in the 2 square Km area captured by the troops. Meanwhile, several tombs erected for terror cadres killed in past gun battles were also found in general area Alkaddiveli, between Andankulam and Parappakkadantan.

These areas were under LTTE clutches for more than two decades and this clearly shows the inability of the LTTE terrorists to face the security forces who are continuously marching towards LTTE strongholds.

Troops are now consolidating their positions in the area.

http://www.defence.lk/new.asp?fname=20080628_04

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்.... அவர்களே

உங்கள் ஆதங்கம் அவசரம் ஏன் உங்கள் எழுத்தின் அவசியமும் எனக்கு புரிகிறது???

ஆனால் என் ஆதங்கம்

நீங்கள் சொல்வதில் எவ்வளவு உண்மையுள்ளது???

உங்கள் ஆருடம் எவ்வளவு மக்களது மனநிலையோடு இணைந்து செல்கிறது???

அல்லது

அவர்களை மேலும் குழப்பாதா???

நீங்கள் முன்வைக்கும் இந்த விளக்கங்கள் களத்தில் நிற்பவர்களுக்கு தெரியாதா???

அல்லது

இப்போ அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை கூறுகின்றீர்கள்???

பிள்ளையானுக்கே இந்த மவுசு என்றால்

பிரபாகரனுக்கு?????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதொ எல்லோரும் துடுப்பாட்ட ஓட்டங்களைச் சொல்வது போல அங்கே பிடித்துவிட்டான், இங்கே பிடித்துவிட்டான் என எழுதிக் கொண்டிருக்கின்றீர்கள். ஒரு எதிரி இவ்வளவு தூரம் முன்னேறுகின்றான் என்றால் அதற்கு புலத்தில் உள்ள நாம் செய்த தவறு தான் காரணமாக இருக்கும் என்பதை மறக்காதீர்கள். எதிரி ஒவ்வொரு காலடி முன்னெடுத்து வைக்கின்றபோதும், போராட்டத்தைப் பலப்படுத்தாத நம் தவறு தான் காரணமாக இருக்க முடியும்.

களத்தில் கேணல் தீபன் அண்ணா சொன்னது போல 4 ஜெயசுக்குறு சமர்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். எதிரி புலிகளுக்கு திட்டம் போட விடக்கூடாது என்பதற்காக தொடர்சமர்களைச் செய்து கொண்டிருக்கின்றான். கிட்த்தட்ட ணன்றரை வருடமாக மன்னார், மணலாறு பகுதிகளில் சண்டை நடந்து கொண்டிருக்கின்றது. புலிகளுக்கு நேரம் கொடுத்தால் அவர்கள் எங்காவது தாக்கிவிடுவார்கள் என்ற அச்சமே, அவன் தொடர் சமர்களைச் செய்யக் காரணமாகும்.

புதிதாக வவுனியாக்களமுனை தொடங்கியதற்குக் காரணமும், தொடர் அழுத்தங்களைப் பிரயோகிக்கவே. இப்படி இந்தப் பக்கம் தொடராக கவனத்தை செலுத்த வைக்கின்ற அவன், முகமாலையில் அமைதியாக இருக்கின்றான். ஏனென்றால் புலிகளின் கவனத்தை இங்கு மாற்றிவிட்டு, முகமாலையில் பாரிய படையெடுப்பை அவன் செய்யக் கூடும்.

இவ்வாறு 4 பக்கம் உடைப்பெடுக்க முயற்சிக்கின்றன இராணுவத்திற்கு ஒரு அவசியமற்ற பகுதியைத் திறந்து விட்டால் அவன் அப்பகுதியில் அதிக கவனத்தைச் செலுத்த முனைவான். இந்த வகையில் முகமாலை, மணலாறு, வவுனியாவை விட மன்னாரே அவசியமற்றது. இதனால் அப்பகுதியில் உள் புக விடப்படுகின்றது.

இதுது எதிரியை அகலக்கால் வைக்க விடுவதற்குமாகும். நாளை வெள்ளாங்குளம் வரைக்கும் இராணுவம் வந்தான் என்று சொன்னாலும் ஏற்க வேண்டியதே அவசியமாகும்.

ஆனால் இப்படி இடத்தை விட்டுக் கொடுப்பதை நாங்கள் இராணுவ தந்திரம் என்று சொல்லி எங்களை நாங்களே ஏமாற்ற முடியாது. 2 இலட்சம் இராணுவத்தோடு, வெளிநாட்டு உதவிகள் கொண்ட இராணுவத்தோடு சிறுபான்மைத் தமிழினப் போராளிகள் போராடுகின்றார்கள். அதுவும் எம் மக்களை மட்டுமே நம்பித் தான். குறைந்தவளத்தைப் பெருக்க நாம் தான் கைகொடுக்க வேண்டும்.

ஒவ்வொரு இடத்தையும் இராணுவம் கைப்பற்றுகின்றபோது, அது எம் தவறுகளைக் சுட்டிக் காட்டுகின்றது. வெல்லும்போது உதவுவதற்ற ஆதரவு, பின்னடைவைச் சந்திக்கின்றபோது கைகொடுப்பவனே உண்மையான தேசப்பற்றாளன்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்.... அவர்களே

உங்கள் ஆதங்கம் அவசரம் ஏன் உங்கள் எழுத்தின் அவசியமும் எனக்கு புரிகிறது???

ஆனால் என் ஆதங்கம்

நீங்கள் சொல்வதில் எவ்வளவு உண்மையுள்ளது???

உங்கள் ஆருடம் எவ்வளவு மக்களது மனநிலையோடு இணைந்து செல்கிறது???

அல்லது

அவர்களை மேலும் குழப்பாதா???

நீங்கள் முன்வைக்கும் இந்த விளக்கங்கள் களத்தில் நிற்பவர்களுக்கு தெரியாதா???

அல்லது

இப்போ அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று ஆலோசனை கூறுகின்றீர்கள்???

பிள்ளையானுக்கே இந்த மவுசு என்றால்

பிரபாகரனுக்கு?????

சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சில் 6 வீடுகள் சேதம்

[சனிக்கிழமை, 28 யூன் 2008, 05:14 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்கில் உள்ள துணுக்காய் ஒட்டன்குளப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சில் பொதுமக்களின் ஆறு வீடுகள் சேதமடைந்துள்ளன.

துணுக்காய் உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிக்குள் இன்று சனிக்கிழமை பிற்பகல் 12:45 மணியளவில் பொதுமக்களின் வீடுகளை நோக்கி படையினர் எறிகணை வீச்சுத்தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதலில் ஆறு வீடுகள் சேதமடைந்தன.

puthinam.

-----------------

துணுக்காயும் செல்வந்த இடமாப் போச்சுது. மடுவில விழுந்த செல் இப்ப துணுக்காய் வரைக்கும் வரேக்க மக்கள்.. கேள்வி கேட்காமல் இடம்பெயர்ந்து ஓடுவினம் என்றீங்க.

நம்புவோமாக..! :):D

Edited by nedukkalapoovan

நெடுக்ஸ் நன்றாகத்தான் உங்களுடைய பிரச்சாரம் வேலை செய்கின்றது. இன்னும் இன்னும் எழுதுங்கள் அப்போதுதானே உங்களிற்கான வருமதிகள் அதிகரிக்கும்.

என்ன கவலையென்றால் இன்னும் ஓரிருதினங்களில் எல்லாவற்றையும் மூடிவைத்துவிட்ட உறங்கப்போகின்றீர்கள் ஏனெனில் முருங்கை மரத்தில் ஏறுகின்றீர்கள் விழுந்தால் எழும்பவே மாட்டீர்கள். .

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் நன்றாகத்தான் உங்களுடைய பிரச்சாரம் வேலை செய்கின்றது. இன்னும் இன்னும் எழுதுங்கள் அப்போதுதானே உங்களிற்கான வருமதிகள் அதிகரிக்கும்.

என்ன கவலையென்றால் இன்னும் ஓரிருதினங்களில் எல்லாவற்றையும் மூடிவைத்துவிட்ட உறங்கப்போகின்றீர்கள் ஏனெனில் முருங்கை மரத்தில் ஏறுகின்றீர்கள் விழுந்தால் எழும்பவே மாட்டீர்கள். .

துணுக்காயில செல் விழுகிறதும் எனது பிரச்சாரமா. அப்படியே ஆகட்டும். :D:)

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி என்ன ஆ ஒ என்டா வெளிநாட்டில இருக்கிற ஆக்களுக்கு கள நிலைமையை பற்றி கதைக்க உரிமை இல்லை என்றது அப்போ எங்க ஒருத்தருக்குமே தான் உரிமை இல்லை நெடுக்ஸ்சோட கருத்துக்கள யாவும் ஒரு சாதாரண தமிழனின் என்னங்களில் எழுகின்ற கருத்துக்க.ள் தான்

அது சரி என்ன ஆ ஒ என்டா வெளிநாட்டில இருக்கிற ஆக்களுக்கு கள நிலைமையை பற்றி கதைக்க உரிமை இல்லை என்றது அப்போ எங்க ஒருத்தருக்குமே தான் உரிமை இல்லை

சுண்டல் அண்ணா நீங்களோ நானோ களநிலைமைகளைப் பற்றிக் கதைக்க வேணும் அது தப்பில்லை.

வலிந்த தாக்குதல் எதனையும் செய்யாது இப்படியே தந்திரோபாய பின்வாங்கல் எண்டு இடங்களை விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கினம் எண்டு திட்டுறது. பொது மக்களை இலக்கு வைத்து படையினர் மேற்கொள்ளும் கிளைமோர் தாக்குதல்களை தடுக்காது வேடிக்கை பார்க்கினம் எண்டு ஆதங்கப்படுறது. வலிந்த தாக்குதல் எதனையும் செய்யாது தற்காப்புத் தாக்குதல் எண்டு எத்தனை காலத்திற்குத்தான் போராளிகளைப் பலி கொடுக்கப்போயினம் எண்டு நீங்கள் புலம்புவது, மொத்தத்தில் புலிகளிற்கு பாடம் படிப்பிக்க வெளிக்கிடுறது எல்லாம் நல்லதில்லையுங்கோ. கணினிக்கு முன்னால் குந்திக்கொண்டிருந்து அறிவுரை புலிகளிற்குச் சொல்லாதையுங்கோ. அவர்களிற்கு சொல்லும் அறிவுரைக்குப் பதிலாக செய்ய வேண்டிய எங்களின் பங்களிப்புகளை சரிவரச் செய்தால், ஆண்டான்குளத்திற்கு வந்தல் என்ன விடத்தல் தீவிற்கு வந்தால் என்ன, ஏன் வெள்ளாங்குளம்வரை வந்தால்தான் என்ன எல்லாவற்றை மீளப்பிடிக்கும் வல்லமை களத்தில் உள்ளவர்களிற்கு இருக்கிறது. அவர்கள் உயிரைக் கொடுத்து செய்யவேண்டியதைதச் செய்வார்கள். நாங்கள் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துக் கொண்டு களநிலவரம் பற்றிக் கதைப்பம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்க என்ன நடக்குது முடியல என்னால யாரு யாரைப்பற்றி கதைக்குறது

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் அண்ணா நீங்களோ நானோ களநிலைமைகளைப் பற்றிக் கதைக்க வேணும் அது தப்பில்லை.

வலிந்த தாக்குதல் எதனையும் செய்யாது இப்படியே தந்திரோபாய பின்வாங்கல் எண்டு இடங்களை விட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கினம் எண்டு திட்டுறது. பொது மக்களை இலக்கு வைத்து படையினர் மேற்கொள்ளும் கிளைமோர் தாக்குதல்களை தடுக்காது வேடிக்கை பார்க்கினம் எண்டு ஆதங்கப்படுறது. வலிந்த தாக்குதல் எதனையும் செய்யாது தற்காப்புத் தாக்குதல் எண்டு எத்தனை காலத்திற்குத்தான் போராளிகளைப் பலி கொடுக்கப்போயினம் எண்டு நீங்கள் புலம்புவது, மொத்தத்தில் புலிகளிற்கு பாடம் படிப்பிக்க வெளிக்கிடுறது எல்லாம் நல்லதில்லையுங்கோ. கணினிக்கு முன்னால் குந்திக்கொண்டிருந்து அறிவுரை புலிகளிற்குச் சொல்லாதையுங்கோ. அவர்களிற்கு சொல்லும் அறிவுரைக்குப் பதிலாக செய்ய வேண்டிய எங்களின் பங்களிப்புகளை சரிவரச் செய்தால், ஆண்டான்குளத்திற்கு வந்தல் என்ன விடத்தல் தீவிற்கு வந்தால் என்ன, ஏன் வெள்ளாங்குளம்வரை வந்தால்தான் என்ன எல்லாவற்றை மீளப்பிடிக்கும் வல்லமை களத்தில் உள்ளவர்களிற்கு இருக்கிறது. அவர்கள் உயிரைக் கொடுத்து செய்யவேண்டியதைதச் செய்வார்கள். நாங்கள் கொடுக்க வேண்டியதைக் கொடுத்துக் கொண்டு களநிலவரம் பற்றிக் கதைப்பம்.

தயவுசெய்து இவர் எழுதியதில் உள்ள கனதியை உணருங்கள்

அதற்கு எதிராக எழுதும் நேரத்தை அள்ளிக்கொடுக்க உழையுங்கள்

ஏன் இன்றும் தற்கொடைத்தாக்குதலை செய்யும் நிலையில் இருக்கிறார்கள் என்பது

எம்மெல்லோருக்கும் கேவலம்தானே???

உயிருக்கு விலைபேசாதீர்கள் மின்னல்

கிளிநொச்சியில ஆமி, மாங்குளத்தில ஆமி, முல்லைத்தீவில ஆமி, மணலாறு முக்கால் பிரதேசம் ஆமியிட்ட இருந்த போது நானும் வன்னியில் தான் இருந்தேன் இப்படி யாரும் கதைத்ததில்ல . மடுவில நிக்கிற ஆமிக்கு இங்கு துணுக்காய்க்கு செல்வருது , கிளிநொச்சிக்கு செல் வருது எண்டு வெளிநாட்டில் இருந்து புலம்பவேண்டாம், அதைவிட இடம் பெயர்வு என்பது 50வருடமாக நடக்கிறது ஏதோ இப்பதான் புதுசா நடக்கிற மாதிரி கதைக்கிறியல் , இராணுவம் முன்னேறும் பின் பின்னால் ஓடும் , ஆனால் நீங்கள் சந்தேகமாக எழுதியதுகள் எழுதியதுதான் என்பது நிணைவில் வைத்திருங்கள்

இராணுவத்தின்ர அறிக்கையை வைத்துக்கொண்டு ஏனப்பா புடுங்குப்படுறியல்?

உயிருக்கு விலைபேசாதீர்கள் மின்னல்

அண்ணை எண்ட கருத்தை தயவு செய்து படித்து அதிலை என்ன சொல்லப்பட்டிருக்கு எண்டு விளங்கிப் போட்டு உங்களது பதிவை எழுதுங்கோ.

இராணுவத்தின்ர அறிக்கையை வைத்துக்கொண்டு ஏனப்பா புடுங்குப்படுறியல்?

அண்டான்குளத்தைப் பிடித்துவிட்டோம் என்ற இராணுவத்தின்ர அறிக்கை உண்மைதானே!

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், நீங்கள் கழுவுற மீனுக்குள்ளே நழுவுற மீன் . ஒன்று மட்டும் உறுதி. உங்களை போல பலரை தமிழ் மக்கள் கண்டு விட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ், நீங்கள் கழுவுற மீனுக்குள்ளே நழுவுற மீன் . ஒன்று மட்டும் உறுதி. உங்களை போல பலரை தமிழ் மக்கள் கண்டு விட்டார்கள்.

நான் மீனுமல்ல கருவாடும் அல்ல. சராசரி தமிழ் மகன்..!

வீரகேசரியில் சுபத்திரா எழுதியதை படிச்சிட்டு.. அவரும்.. இப்படி மீன் என்று சொல்லாத வரைக்கும்....??! :wub:

"The army clamed that the LTTE cadres killed belonged to the Charles Anthony Brigade and 19 of them had identity tags.

The LTTE was informed by the ICRC on Friday night that there were 25 bodies at the Vavuniya Hospital. Vavuniya District Magistrate M.Y.M. Irshadeen visited the hospital and ordered that the bodies be handed over after the post mortems."

சண்டேரைம்ஸ்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகளில் ஒரு போரளி எந்தப் படையணி என்று முத்திரை ஒருபோதும் குத்தியதில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும், இலக்கங்களில் தான் அவர் இனம் காணப்படுவார். சிறுத்தைப்படையணி, ஆர்பீஜி அணி ,துணைப்படை அணிகள் தான் உடைகளில் மாற்றத்தைக் கொண்டிருக்கின்றன. மற்றும்படி இவர் எந்த அணி என்று கண்டு பிடிப்பது எல்லாம் சும்மா ஏமாத்து..

விடுதலைப்புலிகளில் ஒரு போரளி எந்தப் படையணி என்று முத்திரை ஒருபோதும் குத்தியதில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும், இலக்கங்களில் தான் அவர் இனம் காணப்படுவார். சிறுத்தைப்படையணி, ஆர்பீஜி அணி ,துணைப்படை அணிகள் தான் உடைகளில் மாற்றத்தைக் கொண்டிருக்கின்றன. மற்றும்படி இவர் எந்த அணி என்று கண்டு பிடிப்பது எல்லாம் சும்மா ஏமாத்து..

படை அணிகளுக்கு கழுத்தில் ஒரு தகடு கட்ட கொடுப்பார்களே அதில் 'க' எனும் எழுத்தோடு தொடர் இலக்கம் வந்தால் சாள்ஸ் அன்ரனியாம்.

இதை பாதுக்காப்பு அமைச்சு சொல்லுது அதுக்கு நீங்கள் என்ன சொல்லுறீயள்.?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகடு கையில் தான் கட்டுவார்கள். இலக்கத்தின் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக இணைந்த கால வரிசை அடிப்படையில் தான் தொடரிலக்கம் வழங்கப்படுவதுண்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.