Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாருங்கோ அது அம்மாபகவான்?

Featured Replies

இனிய வணக்கங்கள்,

இப்ப கொஞ்ச நாளா கனடாவில தமிழ்ச்சனம் எல்லாம் அம்மாபகவானாம் எண்டு யாரையோ சொல்லி அதுக்கு பின்னால ஓடித்திறியுதுகள். இவ்ளோ காலமும் சாய்பாபா எண்டு சொல்லித் திரிஞ்சுதுகள். இப்ப எல்லாரும் அம்மாபகவானிண்ட விசுவாசிகளா மாறீட்டீனம் போல இருக்கிது.

இண்டைக்கு வீட்டில அம்மா எனக்கு சொன்னா.. இஞ்ச மார்க்கம் எண்டு இருக்கிற ஒரு இடத்தில பெரிய காணி வாங்கி ஆச்சிரமம் கோயில் எல்லாம் கட்டி பஜனை எல்லாம் நடக்க்கிதாம் இந்த அம்மாபகவான் எண்டு சொல்லப்படுற சாமிக்கு..

அப்ப இவ்வளவு காலமும் கும்பிட்ட சாய்பாபாவிண்ட எதிர்காலம் என்ன? இல்லாட்டிக்கு சாய்பாபாதான் அம்மாபகவானா மாறீட்டாரோ?

மற்றது... இப்பிடியே நிலமை போனால் எங்கட பிள்ளையார், முருகன், சிவபெருமான் எல்லாம் என்ன செய்யுறது? உங்கட நாடுகளிலயும் உந்த அம்மாபகவான் எண்டு சொல்லப்படுற சாமி இருக்கிதோ?

இதுகள் பற்றிய உங்கட கருத்துக்கள கொஞ்சம் சொல்லுங்கோ. :wub:

நன்றி! வணக்கம்!

ஓ..அப்படியோ குருவே இந்த "அம்மா பகவான்" என்பவர் வந்து ஆணோ அல்லாட்டி பெண்ணோ குருவே ஏன் கேட்கிறன் எண்டா பேரை வைத்து கண்டு பிடிக்கிறது கஷ்டமா இருக்கு :D ..இப்ப பாருங்கோ குருவே தொடர்ந்து ஒரு "பிராண்ட்" பொருட்களை ஆட்கள் பாவிக்க மாட்டார்கள் தானே புதுசா சந்தைக்கு வந்தா வாங்கி பார்க்கிறதில்ல..அது நன்னா இருந்தா அதை பாவிக்கிறதில்ல அதை போல தான் இதுவும் குருவே.. :wub:

சாய் பாபா சந்தையில நிலைத்து நிற்கும் ஒரு வியாபாரி அவரோட மோத ஏலாது அல்லோ.. :D (ஆன படியா அவருக்கு இதால கவலை எல்லாம் இல்ல)..இப்ப வந்தவா சந்தைக்கு புதுசு தானே மற்றது இன்னொரு விசயம் எப்பவுமே நிறைபோட்டியா இருந்தா தான் வியாபாரமும் நன்னா போகும் பாருங்கோ.. :lol:

ஓ..பிள்ளையார்,முருகனை பத்தி கேட்கிறியளோ யாருக்கு தெரியும் அவையும் இப்படி முந்தி யாராலையும் சந்தையில வியாபாரத்தை பெருக்க உருவாக்கபட்டவையோ..(அச்சோ இப்படி எல்லாம் கதைக்கிறன் பிள்ளையார் என்னை கோவித்து கொள்ள கூடாது)..அதுவும் பயம் தானே குருவே.. :)

எங்கன்ட நாட்டில இன்னும் ஒரு சாமியையும் காணல்ல பேசாம நானே சாமியாகட்டோ எண்டு யோசிக்கிறன் நீங்க இத பத்தி என்ன நினைக்கிறியள்.. :D

நானே கடவுள்...

ஜம்முபேபி பஞ் -

"கண்ணா உன்னில தான் கடவுள் இருக்கிறார் நீ ஏன் கடவுளை தேடுறாய்" :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பு உந்த அம்மா பகவான் அப்பா பகவான் என்ற ஆசாமி எல்லாத்தையும் விட்டுட்டு இருக்கிற சாமியை மட்டும் கும்பிடுங்கோ எல்லாம் சரியாப் போகும்.

இது தான் அம்மா பகவானாம் (கூகில் சொல்லுது)

http://bp2.blogger.com/_-ytEcM-tA3s/R2YX0l...0-h/images1.jpg

Edited by இன்னிசை

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த அம்மா பகவான்கள். நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் முரளி?

imagesys8.jpg

jeyalx4.jpg

amma18125ac6bdt0ed7.jpg

simhasanammabhagavanvh0.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

amma18125ac6bdt0ed7.jpg

இவவை அம்மாச்சி என்டு சொல்லுறவை. இங்க பிறிஸ்பனுக்கு வந்திருக்கிறா என்டு நினைக்கிறன். சிட்னிக்கும் வந்தவா

இப்படி ஆளுக்காள் கிளம்பினால் விலைவாசி ஏறாமல், என்ன செய்யுமாம்.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

பிழைக்கிறது நல்ல வழி

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு போட்டிருக்கிற படத்திலை சோடியாய் இருக்கிறவைதான் அம்மா பகவானாம். எனக்கும் அண்மையிலை லண்டனுக்கு போனபோதுதான் தெரிந்தது.தெரிந்த ஒருவர் வீட்டிற்கு போயிருந்தன் அவையின்ரை வரவேற்பறையிலை இந்தப் படம் பெரிதாய் மாட்டியிருந்தது. அந்த வீட்டுக்காரரை கேட்டன் இந்தப் படத்திலை இருக்கிறவை யார்?? உங்களுக்கு சொந்தக் காரரா?? எண்டவும் அவை என்னட்டை ஆச்சரியமாய் கேட்டிச்சினம் இவர்களைத் தெரியாதா?? இவைதான் அம்மா பகவான். இவையளை கும்பிட்டால் நினைச்சது நடக்கும் நிங்களும் கும்புடுங்கோ எண்டு எனக்கு வேறை உபதேசம் நடந்தது.நான் சொன்னன் எனக்கு கண் கண்டதெய்வம் டென்மார்க் லலிதா மட்டும்தான் வேறை யாரையும் நான் மனசாலையும் நினைக்க மாட்டன் எண்டிட்டு வந்திட்டன். :D:D

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாபவகவானிற்கு பக்கத்தில இருக்கிறவர் என்ன அப்பா பகவானோ?

இந்த காலகட்டதிலேயே நாட்டிற்கு நாடு சாமி உருவாகும் போது

அந்த காலங்களிள் எமக்கு ஆயிரம் சாமிமார் தோன்றினதில தப்பில்லை. :icon_mrgreen:

கந்தப்பு போட்டிருக்கிற படத்திலை சோடியாய் இருக்கிறவைதான் அம்மா பகவானாம். எனக்கும் அண்மையிலை லண்டனுக்கு போனபோதுதான் தெரிந்தது.தெரிந்த ஒருவர் வீட்டிற்கு போயிருந்தன் அவையின்ரை வரவேற்பறையிலை இந்தப் படம் பெரிதாய் மாட்டியிருந்தது. அந்த வீட்டுக்காரரை கேட்டன் இந்தப் படத்திலை இருக்கிறவை யார்?? உங்களுக்கு சொந்தக் காரரா?? எண்டவும் அவை என்னட்டை ஆச்சரியமாய் கேட்டிச்சினம் இவர்களைத் தெரியாதா?? இவைதான் அம்மா பகவான். இவையளை கும்பிட்டால் நினைச்சது நடக்கும் நிங்களும் கும்புடுங்கோ எண்டு எனக்கு வேறை உபதேசம் நடந்தது.நான் சொன்னன் எனக்கு கண் கண்டதெய்வம் டென்மார்க் லலிதா மட்டும்தான் வேறை யாரையும் நான் மனசாலையும் நினைக்க மாட்டன் எண்டிட்டு வந்திட்டன். :icon_mrgreen::icon_idea:

டென்மார்க் லலிதாவோட அப்படி என்ன காதல் உங்களுக்கு. சாத்திரிக்கே மந்திரிச்சிட்டார் போல :rolleyes:

அம்மாபவகவானிற்கு பக்கத்தில இருக்கிறவர் என்ன அப்பா பகவானோ?

இந்த காலகட்டதிலேயே நாட்டிற்கு நாடு சாமி உருவாகும் போது

அந்த காலங்களிள் எமக்கு ஆயிரம் சாமிமார் தோன்றினதில தப்பில்லை. :icon_idea:

இப்பவே இப்படியென்றால். வெளிநாடு வந்தும். அப்ப எங்கட கூட்டம் எப்படி இருந்திருக்கும் என்று பின்னால போய் யோசிச்சால் விடை கிடைக்கும் :lol:

பிள்ளையார் முருகன் சிவன் போன்ற தெய்வங்கள் எல்லாம் இப்போ ஓய்விலை இருக்கினமாம். எவ்வளவு காலத்திற்குத்தான் நாங்கள் பிறிச்சிலை வைச்ச பாலை ஊத்தி அவங்களை கஸ்டப்படுத்துறது. பாவம்தானே. . .

நானும் ஒரு சாமி ஆகலாம் என்று இருக்கிறன். அதுக்கு முதல்லை ஆசாமியா மாறனுமாம். ஏதாவது ஜடியாக்கள் இருந்தால் தந்துதவீர்களா . . .

  • கருத்துக்கள உறவுகள்

முரளி சொன்னது போல் கனடாவில் ஒரு சதத்துக்கு ஒரு இடியப்பம் வாங்கலாம் . அந்தளவுக்கு கஸ்டப்பட்டு இடியப்பத்தை அவித்தும் வியாபாரத்தில் பலத்த போட்டி நிலவுகிறது. அதனால் தான் இப்படி கொஞ்ச பேர் வித்தியாசமாக சிந்தித்து இப்படி ஒரு வியாபாரம் செய்யலாம் என வெளிக்க்கிட்டிருக்கினம். :icon_mrgreen::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார் முருகன் சிவன் போன்ற தெய்வங்கள் எல்லாம் இப்போ ஓய்விலை இருக்கினமாம். எவ்வளவு காலத்திற்குத்தான் நாங்கள் பிறிச்சிலை வைச்ச பாலை ஊத்தி அவங்களை கஸ்டப்படுத்துறது. பாவம்தானே. . .

நானும் ஒரு சாமி ஆகலாம் என்று இருக்கிறன். அதுக்கு முதல்லை ஆசாமியா மாறனுமாம். ஏதாவது ஜடியாக்கள் இருந்தால் தந்துதவீர்களா . . .

ஆஆஆஆஆஆஆ........வேண்டாமே இந்த விசபரீட்சை

நான் கொழும்பில் இருந்த போது எனது பக்கத்து வீட்டுக்காரர்கள் இவருடைய பக்தர்கள், அவர்கள் கூறுவார்கள் மொரட்டுவ ஒரு வீட்டில அம்மாபகவானின் படதில் இருந்து குங்குமம் சந்தனம் எல்லாம் கொட்டுப்படுதாம் என்று எதோ கொண்டுவந்து தருவார்கள். எதோ அவாவைப்பற்றி நிறைய கூறுவார்கள், இவர் உலக மக்களை காக்க வந்த மனித உருவில் உள்ள அவதாரமாம் என்று. அப்ப நான் கேட்டன் சுனாமி வந்த போது இவர்கள் எங்க போட்டினம் என்று அப்ப அவர்கள் ஒன்றுமே கூறவில்லை. எல்லாம் ஒரு எமாற்று வித்தை தான் ^_^

முன்பு கல்கி பகவான் என்று பெயரில் வலம் வந்தவர் தான் இவர். இப்போது ஒரு பெண்ணையும் சேர்த்துக்கொண்டு அம்மா பகவான் என்ற பெயரில் வலம் வருகிறார். அதற்கு முன்பு இன்சுரன்ஸ் ஏஜென்ட்டாக தொழில் புரிந்தவர் என்று நினைக்கிறேன்

சில சித்துக்களை கற்றுக்கொண்டு அப்பாவிகளை ஏமாற்றி வருகிறார் என்றே நினைக்கிறேன். கடவுள் என்பது உன்னை கடந்து உள்ளே சென்றால் காணக்கூடியது (கட + உள்). வெளியே தேடினால் கிடைப்பதில்லை

முரளியின் தகவல் சுவாரசியம்,

நீங்கள் நினைப்பது போல் பயப்பிட தேவையில்லை.

இதிலே முதலுக்கு ஒரு நாளும் பாதகம் வராது,

ஆகவே முருகன்,பிள்ளையார்,சிவன்

இவர்கள் இருக்க நமக்கு பயமேன். ^_^

எனக்கு நல்ல தமிழ் வருகின்றது. நிர்வாகம் விடாது வெட்டிடும். . . இவங்களையெல்லாம் . . . . செய்யவேணும். சாமியாம் சாமி எத்தனையோ உயிர்கள் அனியாயமாக கொல்லப்படுகின்றது எம் தேசத்தில் அதைப்பற்றி அணுவளவேனும் சிந்திக்காமல் சுயநலம் கொண்ட . . .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா இந்த பகவான் என்டா என்ன? நாளைக்கு நான் அப்பா பகவான் ஆகினா நல்லா உழைக்கலாமோ யாழ்கள நண்பர்கள் வந்து சாமிக்கு விஸ்கி பிறாந்தி பியர் என்டு எல்லாம் படைப்பியலோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"நான் நீ சிவம் வாழ்வே தவம்"...

மனிதனை மனிதனாக மதிக்கும் ஒவ்வொருவரும் கடவுளே;.....

அன்பே சிவம்.

உங்களுக்கும் கடவுளுக்குமான உறவில் எந்த இடைத் தரகர்களும் தேவையில்லை. எனக்கும் இந்த விடயங்களில் நம்பிக்கை இல்லை ஆனாலும் ஏடாகூடாமாக கதைக்க மனம் விரும்புதில்லை

பிள்ளையார் முருகன் சிவன் போன்ற தெய்வங்கள் எல்லாம் இப்போ ஓய்விலை இருக்கினமாம். எவ்வளவு காலத்திற்குத்தான் நாங்கள் பிறிச்சிலை வைச்ச பாலை ஊத்தி அவங்களை கஸ்டப்படுத்துறது. பாவம்தானே. . .

நானும் ஒரு சாமி ஆகலாம் என்று இருக்கிறன். அதுக்கு முதல்லை ஆசாமியா மாறனுமாம். ஏதாவது ஜடியாக்கள் இருந்தால் தந்துதவீர்களா . . .

ஒரு கொத்து வேப்பிலையை எடுத்து கையிலை வச்சு கொண்டு ஆடிக்கொண்டே கண்ணா பின்னா எண்டு உளறினால் சாமி ஆகீடலாம்.

சாமி ஆகிறதுக்கு முக்கிய அடையாளமே ஊங்களுக்கு அறிவே இருக்கப்படாது. கண்ணை மூடிக்கொண்டு மயக்கத்திலை சொல்லுறது மாதிரி எதையாவது சொல்ல வேணும். நீங்கள் பூடகமாய் எதையோ சொல்லூறீயள் எண்டு பக்தர்கள் நினைத்து கொள்ளுவினம்.

  • கருத்துக்கள உறவுகள்

நினை நல்லதை

செய் நினைத்ததை

பெறுவாய் நன்மை....

__________

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.

Edited by Valvai Mainthan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.