Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொலைக் களமாகும் லண்டன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_44801044_both_226.jpg

கொல்லப்பட்ட பிரான்ஸ் மாணவர்கள். வயது தலா 23.

இந்த ஆண்டில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட கத்திக் குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் லண்டனில் அரங்கேறியுள்ளன.

அந்த வரிசையில் இறுதியாக பிரித்தானியாவிலேயே சிறந்த பல்கலைக்கழகமான இம்பீரியல் கல்லூரியில் உயிரியல் தொழில்நுட்பத் துறையில் (Bio tech/ bio - engineering) படித்து வந்த இரண்டு பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் தென் கிழக்கு லண்டனில் அவர்களின் வதிவிடத்தில் வைத்து குத்திக் கொல்லப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளனர்.

இவர்களின் வதிவிடம் முன்னர் ஒரு மடி கணணிக்காக சூறையாடப்பட்டும் இருக்கிறது.

அண்மைக்காலமாக கத்திக் குத்துக் கொலைகளும், துப்பாக்கிகள் பயன்படுத்திய கொலைகளும், களவுகளும் லண்டன் மாநகரையே பேரதிர்ச்சிக்கும் அச்சத்துக்கும் உள்ளாக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன..!

தனது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் முன்னாள் பிரதமர் டொனி பிளேயரின் துணைவியார் கூட அண்மையில் கவலை தெரிவித்திருந்தார்.

செய்திக்கான அடிப்படை மூலம்: http://news.bbc.co.uk/1/hi/england/london/7487126.stm

Edited by nedukkalapoovan

கவனமாயிருங்கோ.பக்கதிலயா இருக்கிறீங்க.தவறி சுட்டால்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவனமாயிருங்கோ.பக்கதிலயா இருக்கிறீங்க.தவறி சுட்டால்

எனது வதிவிடத்திலும் களவு நடவடிக்கை ஒன்றை அண்மையில் முறியடித்திருக்கிறேன். மிகவும் நுட்பமான முறையில் கருவிகளைப் பயன்படுத்தி மிகவும் பாதுகாப்பான கதவை உடைக்க முற்பட்டார்கள். அவர்களின் ஆரம்ப செயற்பாட்டை தடுக்காமல் கதவை உடைக்க அனுமதித்துவிட்டு.. மேலும் உடைக்க முற்பட்ட போது எச்சரிக்கையாக இருந்து ஒலி எழுப்ப ஓடிவிட்டார்கள். அவர்கள் இந்திய அல்லது இலங்கையைச் சேர்ந்தவர்களாக தோற்றத்தில் தெரிந்தனர்.

இதற்கு முன்னொரு சம்பவத்தில் சுமார் 500 பவுண் பெறுமதியான பொருட்கள் பணம் என்பவற்றை கொள்ளையிட்டிருந்தார்கள். அதற்காக பொலீஸில் முறையிட பொலிஸ் எமது கைரேகையை எடுத்துக் கொண்டது. குற்றவாளிகளை இன்னும் பிடிக்கவில்லை..! :lol:

இங்கு பொலிஸாரின் மெத்தனப் போக்கே இவ்வாறான சம்பவங்கள் பெருக முக்கிய காரணம்.

இப்போ பொலிஸ் கொஞ்சம் கடும் நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்திருக்கிறது. தமிழ் குழுக்கள் உட்பட பல குழுக்களின் செயற்பாடுகள் ஒடுக்கப்பட்டுள்ளன அல்லது அவற்றின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஓரிருவராக அவர்கள் குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக கடின வேலை செய்யும் தமிழ் இளைஞர்களில் சிலர் ஏதிலிகளாக இரவு வேளைகளில் குடித்துவிட்டு வீதிகளில் கத்தித் திரிகிறார்கள். சிலர் விபச்சாரிகளை அழைத்துக் கொண்டு திரிவர்.

இங்கு போதைப்பொருள் பாவனை அதிகம். பொலிஸார் பார்த்துக் கொண்டு போவார்கள். குறிப்பிட்ட தொகைக்கு மேல் வைத்திருந்தால் தான் பிடிப்பார்கள். அதனால் கனாபிஸ் போன்ற போதைப் பொருட்களோடு சிறுமிகள் கூட வீதிகளில் புகைப்பிடித்தபடி திரிகிறார்கள்.

யுனி வழிய சொல்லத் தேவையில்லை. அறைகளைப் பூட்டிவிட்டு போதைப் புகைக்குள் மண்டிக்கிடப்பார்கள்.

வெளித் தோற்றத்துக்கு பெரிய நாகரிகமாக தெரியும் உலகத்துள் நுழைந்து பார்த்தால் தான் தெரிகிறது சூத்தை..! :D

நான் சிறீலங்காவில் இப்படி ஒரு நிலையைக் காணவே இல்லை. முன்னேறிய நாடுகளில் மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள்.. மிக மோசமாகவே இருக்கிறது. :D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ம்...........லண்டன்நிலை கவலைக்கிடம்தான்.

குடியேறியவர்கள் நிலையும் அப்படித்தான்

ம்...........லண்டன்நிலை கவலைக்கிடம்தான்.

குடியேறியவர்கள் நிலையும் அப்படித்தான்

சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள் குடி ஏறியவர்களின் நிலையும் அப்படித்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

முந்தநாள் சென்றல் லண்டனிலிருந்து அண்டர் கிரவுண்டில் வந்து பஸ் எடுக்க ஏறிய போது எனக்கு முன்னே நின்றவன் (தெற்காசியன் - ஆனால் இலங்கையில்லை) என்னிடம் இந்த பஸ் வெம்பிளி போகுமா என்று கேட்டான்.. உண்மையில் அவன் எதிர்த்திசையில் போக வேண்டும்.

நான் அவனுக்கு எதிர்த்திசையைக் காட்டி வழிசொல்லும்போது பின்னால் எனது வலட்டை ஒருவன் உருவ முற்பட்டது தெரிந்தது (ஒரு குறுந்தாடி ஆசாமி). பேஸைக் கையால் பிடித்தபடி அவனைத் திரும்பிப் பார்த்தேன். அவன் என்னைக் கடந்து என்னிடம் வழிகேட்டவனோடு பஸ்ஸிலிருந்து இறங்கி எங்கேயோ மாறிவிட்டான்.

இவரும் திட்டம்போட்டு ஒருவன் கவனத்தைத் திசைதிருப்ப மற்றவன் பர்ஸை அடிக்கும் நோக்கமென்பது எனக்குச் சற்றுப் பிந்தித்தான் விளங்கியது.

இங்கு சில தெற்காசியர்கள் அப்படியான நோக்கத்தோடு உலவுகிறார்கள். மெசினில் காசடிக்கும் போதும் ஒரு தடவை இப்படியொருவன் கிட்ட வந்து எதையோ கேட்க மற்றவனும் நெருங்கினான். நான் தள்ளிப் போ என்று சொல்லி ஒருதடவை கலைத்திருக்கிறேன்.

இனிமேல் பஸ்ஸில் ஏறும்போது யாராவது தெற்காசியன் பிழையான திசையில் நின்று கொண்டு வழிகேட்டால் ஜாக்கிரதை. பர்ஸைப் பிடித்துக்கொண்டு பதில் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இனிமேல் பஸ்ஸில் ஏறும்போது யாராவது தெற்காசியன் பிழையான திசையில் நின்று கொண்டு வழிகேட்டால் ஜாக்கிரதை. பர்ஸைப் பிடித்துக்கொண்டு பதில் சொல்லுங்கள்.

வழி கேட்டால் பதில் சொல்வதா? நோ.........நோ

எனது வதிவிடத்திலும் களவு நடவடிக்கை ஒன்றை அண்மையில் முறியடித்திருக்கிறேன். மிகவும் நுட்பமான முறையில் கருவிகளைப் பயன்படுத்தி மிகவும் பாதுகாப்பான கதவை உடைக்க முற்பட்டார்கள். அவர்களின் ஆரம்ப செயற்பாட்டை தடுக்காமல் கதவை உடைக்க அனுமதித்துவிட்டு.. மேலும் உடைக்க முற்பட்ட போது எச்சரிக்கையாக இருந்து ஒலி எழுப்ப ஓடிவிட்டார்கள். அவர்கள் இந்திய அல்லது இலங்கையைச் சேர்ந்தவர்களாக தோற்றத்தில் தெரிந்தனர்.

இதற்கு முன்னொரு சம்பவத்தில் சுமார் 500 பவுண் பெறுமதியான பொருட்கள் பணம் என்பவற்றை கொள்ளையிட்டிருந்தார்கள். அதற்காக பொலீஸில் முறையிட பொலிஸ் எமது கைரேகையை எடுத்துக் கொண்டது. குற்றவாளிகளை இன்னும் பிடிக்கவில்லை..! :lol:

இங்கு பொலிஸாரின் மெத்தனப் போக்கே இவ்வாறான சம்பவங்கள் பெருக முக்கிய காரணம்.

இப்போ பொலிஸ் கொஞ்சம் கடும் நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்திருக்கிறது. தமிழ் குழுக்கள் உட்பட பல குழுக்களின் செயற்பாடுகள் ஒடுக்கப்பட்டுள்ளன அல்லது அவற்றின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஓரிருவராக அவர்கள் குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.

குறிப்பாக கடின வேலை செய்யும் தமிழ் இளைஞர்களில் சிலர் ஏதிலிகளாக இரவு வேளைகளில் குடித்துவிட்டு வீதிகளில் கத்தித் திரிகிறார்கள். சிலர் விபச்சாரிகளை அழைத்துக் கொண்டு திரிவர்.

இங்கு போதைப்பொருள் பாவனை அதிகம். பொலிஸார் பார்த்துக் கொண்டு போவார்கள். குறிப்பிட்ட தொகைக்கு மேல் வைத்திருந்தால் தான் பிடிப்பார்கள். அதனால் கனாபிஸ் போன்ற போதைப் பொருட்களோடு சிறுமிகள் கூட வீதிகளில் புகைப்பிடித்தபடி திரிகிறார்கள்.

யுனி வழிய சொல்லத் தேவையில்லை. அறைகளைப் பூட்டிவிட்டு போதைப் புகைக்குள் மண்டிக்கிடப்பார்கள்.

வெளித் தோற்றத்துக்கு பெரிய நாகரிகமாக தெரியும் உலகத்துள் நுழைந்து பார்த்தால் தான் தெரிகிறது சூத்தை..! :D

நான் சிறீலங்காவில் இப்படி ஒரு நிலையைக் காணவே இல்லை. முன்னேறிய நாடுகளில் மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள்.. மிக மோசமாகவே இருக்கிறது. :D

உங்களிடமே கைவரிசையை காட்டியிருக்கிறார்கள் என்றால் நம்பவே முடியவில்லை. இருந்தாலும் மணி எல்லாம் கட்டியிருந்ததால் ஓடிவிட்டார்கள். அந்த ஒலிபெறுக்கி எல்லாம் அங்கு அதிக விலை வருமா?

சரியாகத்தான் சொல்லியுள்ளீர்கள் குடி ஏறியவர்களின் நிலையும் அப்படித்தான்.

லண்டன் நம்ம ஊரு மாதிரிதானாமே சார்.

வழி கேட்டால் பதில் சொல்வதா? நோ.........நோ

பஸ்ஸை சே பர்ஸை பிடித்துக் கொண்டு பதில் சொல்வதைவிட நோ பெட்டர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வழி கேட்டால் பதில் சொல்வதா? நோ.........நோ

ஆங்கில வார்த்தையை பாவிப்பது எந்தவிதத்தில் நியாயம் ?

வீட்டுக்கை வந்த திருடனை பிடிச்சு பொலிசிலை குடுத்தால், பக்கத்திலை கிடந்த தும்புத்தடியாலை எடுத்து கள்ளனுக்கு அடிச்சு போட்டன் எண்டு எனக்கு பொலீசிலை 3 வருட எச்சரிக்கை வழங்கினதோட கைவிடல் அடையாளமும், DNA யும் எடுத்து வச்சு இருக்கிறாங்கள்.

பிடிபட்ட கள்ளன் குடிவெறியிலை எனது வீடு எண்டு வேற வீட்டை திறப்பை துலைச்சதாலை பின்வேலியால பாஞ்சு வீடு மாறி போய் விட்டன் எண்று கதை சொல்லி தப்பீட்டான்.

எல்லாம் காலம்.

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் எல்லாம் ஒரு இடமே..! எப்பிடித்தான் அங்கையெல்லாம் குப்பை கொட்டுறீங்களோ தெரியாது..! :D

லண்டன் எல்லாம் ஒரு இடமே..! எப்பிடித்தான் அங்கையெல்லாம் குப்பை கொட்டுறீங்களோ தெரியாது..! :D

வழமைபோல குப்பை வாளியிலையும் கறுப்பு பையிலையும்தான் . அதை லொறியிலை வந்து எடுத்து கொண்டு வேற போறவங்கள்.

அரைகுறையா அடிக்கக் கூடாது.. ஒழுங்கா குடுத்தா ஒரு பிரச்சனையும் வராது.

  • கருத்துக்கள உறவுகள்

வழமைபோல குப்பை வாளியிலையும் கறுப்பு பையிலையும்தான் . அதை லொறியிலை வந்து எடுத்து கொண்டு வேற போறவங்கள்.

லண்டன்ல எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் வீட்டில ஏணி வச்சு ஒருத்தன் பின்பக்கமா ஏறியிருக்கிறான். இவர் சத்தம் போட அவன் கூலா இறங்கி ஏணியையும் எடுத்துக்கொண்டு போனானாம்.. :lol:

இன்னொருத்தர் வீட்டில் அவையள் வெளிய போயிருக்கினம். கள்ளன் உள்ள வந்திட்டான். இவையளும் எதையோ எடுக்க திரும்பி வந்திருக்கினம். அவன் கதவுக்குப் பின்னால ஒளிச்சிருந்திட்ட எழும்பி ஓட்டிட்டானாம். :D

இப்பிடி லண்டனில எண்டர்டெயின்மெண்டுக்கு குறைவே இல்லை போலை..! :D

அரைகுறையா அடிக்கக் கூடாது.. ஒழுங்கா குடுத்தா ஒரு பிரச்சனையும் வராது.

நீங்கள் பொய்கையை ஒரேயடியா உள்ள அனுப்பாமல் விடமாட்டியள் போலை..! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கை வந்த திருடனை பிடிச்சு பொலிசிலை குடுத்தால், பக்கத்திலை கிடந்த தும்புத்தடியாலை எடுத்து கள்ளனுக்கு அடிச்சு போட்டன் எண்டு எனக்கு பொலீசிலை 3 வருட எச்சரிக்கை வழங்கினதோட கைவிடல் அடையாளமும், DNA யும் எடுத்து வச்சு இருக்கிறாங்கள்.

பிடிபட்ட கள்ளன் குடிவெறியிலை எனது வீடு எண்டு வேற வீட்டை திறப்பை துலைச்சதாலை பின்வேலியால பாஞ்சு வீடு மாறி போய் விட்டன் எண்று கதை சொல்லி தப்பீட்டான்.

எல்லாம் காலம்.

இதையேன் சொல்லுறீங்க.. ஒரு வெள்ளை சைக்கிளில வேகமா ஓடி வந்து ஒருவருக்கு முகத்தில அடிச்சிட்டான். அவருக்கு மூக்கால இரத்தம் ஓடுது. பக்கத்தில போன பொலிஸை மறிச்சு விசயத்தைச் சொல்ல.. அவங்கள் என்ர விபரத்தை எடுத்திட்டு நிற்கிறாங்கள்.. அடிச்சிட்டுப் போனவனைப் பிடிப்பம் என்றில்ல..! என்ர விபரத்தையும் அடிவாங்கினவரின்ர விபரத்தையும் எடுத்திட்டு.. "துரித முதலுதவிப் படை - பராமெடிக்ஸ்" வர அவை விட்டிட்டுப் போயிட்டினம்.

இனத்துவத் துவேசத் தாக்குதல் என்று இது உண்மையில் ஒரு முக்கிய விடயம். ஆனால்.....????! இதுவே ஒரு வெள்ளைக்கு நடந்திருந்தால் பத்திரிகைகளில் கொட்டை எழுத்தில் போடுவார்கள்..! :icon_mrgreen::icon_idea:

Edited by nedukkalapoovan

கொல்லப்பட்ட மாணவரைப் பற்றி தொலைக்காட்சிச் செய்தியில், அவரது உடலில் 240 தடவை கத்தியால் குத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்கள்.

ஆங்கில வார்த்தையை பாவிப்பது எந்தவிதத்தில் நியாயம் ?

லண்டனில் தமிழில் சொன்னால் புரியும் போது நோ சொல்லாமல் விடுறேன். தமிழ்நாட்டிலேயே இல்லை என்றா புரியுதில்லை.நோண்ணு சொன்னாத்தான் பரியுது. வெளிநாட்டில இருந்து வரும் ஆட்கள் கூட ஆங்கிலத்தில்தான் பேசுறாங்க சார். தமிழனாக வாழ்வோம். தமிழ் வெறியனா வேணாம்யா. :icon_mrgreen:

வீட்டுக்கை வந்த திருடனை பிடிச்சு பொலிசிலை குடுத்தால், பக்கத்திலை கிடந்த தும்புத்தடியாலை எடுத்து கள்ளனுக்கு அடிச்சு போட்டன் எண்டு எனக்கு பொலீசிலை 3 வருட எச்சரிக்கை வழங்கினதோட கைவிடல் அடையாளமும், DNA யும் எடுத்து வச்சு இருக்கிறாங்கள்.

பிடிபட்ட கள்ளன் குடிவெறியிலை எனது வீடு எண்டு வேற வீட்டை திறப்பை துலைச்சதாலை பின்வேலியால பாஞ்சு வீடு மாறி போய் விட்டன் எண்று கதை சொல்லி தப்பீட்டான்.

எல்லாம் காலம்.

இங்கே கதைக்கிறீங்க. அதுமாதிரி அங்க கதைக்காம என்ன வெள்ளியா பார்த்தீங்க.அடிச்சு பேச வேண்டியதுதானே ஐயா. நல:ல காலம் உங்களை உள்ள தள்ளாம விட்டாங்க.

Edited by Thalaivan

இதையேன் சொல்லுறீங்க.. ஒரு வெள்ளை சைக்கிளில வேகமா ஓடி வந்து ஒருவருக்கு முகத்தில அடிச்சிட்டான். அவருக்கு மூக்கால இரத்தம் ஓடுது. பக்கத்தில போன பொலிஸை மறிச்சு விசயத்தைச் சொல்ல.. அவங்கள் என்ர விபரத்தை எடுத்திட்டு நிற்கிறாங்கள்.. அடிச்சிட்டுப் போனவனைப் பிடிப்பம் என்றில்ல..! என்ர விபரத்தையும் அடிவாங்கினவரின்ர விபரத்தையும் எடுத்திட்டு.. "துரித முதலுதவிப் படை - பராமெடிக்ஸ்" வர அவை விட்டிட்டுப் போயிட்டினம்.

இனத்துவத் துவேசத் தாக்குதல் என்று இது உண்மையில் ஒரு முக்கிய விடயம். ஆனால்.....????! இதுவே ஒரு வெள்ளைக்கு நடந்திருந்தால் பத்திரிகைகளில் கொட்டை எழுத்தில் போடுவார்கள்..! :icon_mrgreen::icon_idea:

இங்க எழுதுற மாதிரி ஆங்கில பத்தரிகையில நீங்களும் எழுதவேண்டியதுதானே? அந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டுட்டீங்ளோ என்று ஆதங்கமா இருக்கு. நீங்க இருக்கிறது மோசமான நாடுதான். அதுசரி ஆளப்புடிச்சாங்களா?

இங்கே கதைக்கிறீங்க. அதுமாதிரி அங்க கதைக்காம என்ன வெள்ளியா பார்த்தீங்க.அடிச்சு பேச வேண்டியதுதானே ஐயா. நல்ல காலம் உங்களை உள்ள தள்ளாம விட்டாங்க.

என்ன விளையாடுறீயளா ? ஒருவரை தடி போண்ற ஆயுதத்தாலை தாக்குவது கிரிமினல் குற்றம், அதுவே அவன் வீடு மாறி உங்களின் வீட்டுக்குள் வருவது சிவில் குற்றமாம். ( 8 மணிநேரம் வச்சு உதைத்தான் விளங்கப்படுத்தினார்கள்)

திருடன் ஒரு கத்தியை கொண்டுவந்து அதைப்பறித்து அவனை நீங்கள் குத்தி இருந்தாலும் அது குற்றம் இல்லை. அது தற்காப்பு, ஆனால் உங்கள் வீட்டில் இருந்து சிறு குச்சியை எடுத்து அவனை அடித்தாலும் அது குற்றம். ஏனெனில் அது தாக்குதலாம்.

Edited by பொய்கை

கராத்தே ஏதாவது தெரிந்திருந்தால் எதை வச்சு வழக்கு போடுறது. இருக்கு ஆனா இல்ல. இல்ல ஆனா இருக்கு என்று மாறி மாறி குழப்ப வேண்டியதுதானே. :rolleyes: அட பாவிமனுசா, சட்டப்புத்தகத்தை கையில வச்சிருந்தா அடி வாங்கி சாகவேண்டியதுதான். :lol: . இல்ல அதாலயாவது அடிக்க வேண்டிடியதுதானே? :icon_idea: ஊரிலயிருந்து ஓடிவந்தவங்க வெளிநாட்டிலயும் ஓடித்தரியிறாங்க எனும் போது மனசு வலிக்குதய்யா :icon_idea::icon_mrgreen: சே

Edited by Thalaivan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று மீண்டும் ஒரு கத்திக் குத்துக் கொலை.

தெற்கு லண்டனில் 16 வயது பள்ளிச் சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளான். இவர் இவ்வாண்டில் கொல்லப்படும் 18வது பருவ வயதுப் பையனாவார்.

ஞாயிறு நடந்த பிரான்ஸ் மாணவர்களின் கொலைக்குப் பின்னர் திங்கள் செவ்வாய் கிழமைகளிலும் வேறு இருவர் தென் கிழக்கு லண்டனில் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளனர்.

தகவல் ஆதாரம்: http://news.bbc.co.uk/1/hi/england/london/7489039.stm

Edited by nedukkalapoovan

இலண்டனில் பொலிஸாரின் நிலையும் கவலைக்கிடம் தான். எனது நண்பரொருவருடன் வெள்ளைகள் நடாத்தும் உணவு விடுதியொன்றிற்கு சென்றிருந்தேன். அங்கு சுமார் 12, 13 வயது மதிக்கத்தக்க 7, 8 பேர் கொண்ட குழுவொன்று வந்து பிரைச்சினை செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவர் கையிலும் பியரும் சிகரெட்டும் இருந்தன. உணவுவிடுதி உரிமையாளர் பொலிசாரை அழைத்தார். பின் பொலிசார் வந்தனர். பொலிசார் அந்தச் சிறுவர்களை விசாரிக்க முற்படும் போது சிறுவர்கள் சிகரெட் புகையை பொலிசாரின் முகத்திலேயே விட்டார்கள். பொலிசார் அடையாள அட்டைகளை கேட்டபோதும், அவர்கள் அவை தம்மிடம் இல்லையென்றார்கள்.

நானும் பொலிசார் எல்லோரையும் குண்டுக்கட்டாக தூக்கிச் செல்லப் போகின்றார்கள் என நினைத்தேன். ஆனால் பொலிசார் கெஞ்சிமன்றாடி அவர்களை உணவுவிடுதியை விட்டு வெளியேறச் செய்தனர். பிறகு எப்படித் தவறு செய்வோர் திருந்துவார்கள். இதுபற்றி நண்பரிடம் கேட்டபோது அவர் சொன்னார் இங்கு பொலிசாருக்கு எதையும் கையாள அதிகாரமில்லை. பிறகு எப்படி அவர்கள் நடவடிக்கை எடுப்பது??

:icon_mrgreen: இதுவே சுவிசாக இருந்திருந்தால.............................; :icon_idea::icon_idea:

இதே எங்கடை நாடாக இருந்தால் beat_him.gif

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பிரான்சில் நடக்கின்ற சில சம்பவங்களை எழுதுகின்றேன்

உதாரணமாக

இங்கு இளைஞர்களுக்கும் பொலிசாருக்கும் சிறுபிரச்சினையொன்றில் தகராறு வந்து முற்றி அடிதடி ஆரம்பித்தது

போக்குவரத்து வாகனங்கள் எல்லாம் எரிக்கப்பட்டன

ஒரு வீதியால் போய்க்கொண்டிருந்த புகையிரத வண்டியை 12 பேர்கொண்ட ஒரு கும்பல் மறித்தது

46 பெரியவர்கள் வயது வந்தோர் உள்ளே இருந்தனர்

வண்டியை எரிக்கப்போகின்றோம்

எல்லோரும் இறங்குங்கள் என்றவுடன் அனைவரும் இறங்கிவிட்டனர்

வண்டி கொழுத்தப்பட்டது

தீயணை;க்கும்படை வந்தும் தீயை அணைக்க முடியவில்லை

சரி இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா???

வழிமறித்த கும்பலில் இருந்தவர்கள் அனைவரும் 8ஆம் வகுப்புப்படிக்கும் அருகிலுள்ள பாடசாலை மாணவர்கள் வயது 13-14.

வண்டியைவிட்டு வெளியேறியோர் அனைவரும் பெரியவர்கள்.....

வானொலியில் இதைப்பற்றி கதைத்துக்கொண்டிருந்த பொழுது நான் வானொலியில் வந்து சொன்னேன்

நானென்றால் வண்டியைவிட்டு இறங்கியிருக்கமாட்டேன்

இது உங்களின் தப்பு

பிரஞ்சு மக்களுக்கு தாய்நாட்டின் மீதான பற்றை விட எனக்கேன் வம்பு என்ற நிலை மேலோங்கி வருவதுதான் இதற்கு காரணம்

எங்கள் நாட்டிலென்றால் இப்படி பெரியோர் முன் எதிர்த்துக்கதைக்கவே முடியாது

அப்படி இல்லையென்றால் அப்படியே அவ்வளவு பேரையும் தூக்கிக்கொண்டுபோய் பாடசாலையில் கொடுத்துவிடுவோம்

பொதுச்சொத்தை அழிக்க அனுமதியோம் என்றேன்........

வானொலி நடத்துனரும் பல நேயர்களும் என் கருத்தை ஆதரித்து கதைத்தார்கள்....

கு. சா!

எங்கட நாட்டை விட லண்டன் பறவாயில்லை... லண்டனில கத்தியால தானே குத்துறாங்கள்.. கெட்டித்தனமா இருந்தா ஓடித்தப்பலாம். இஞ்ச வானிலவாறங்கள்... துவக்கால இல்லோ சுடுறாங்க.... பொலிஸுல சொன்னா புடிச்ச வெளியெ இல்லோ துரத்துராங்கள்.

நான் இங்கிலாந்துக்கு பட்டப்படிப்பு படிக்கிற ஆசையில் பல்கலைக்கழத்துக்கு வந்து ஒருநாள் இரவு தனிய நடந்து வரும்போது என்னை 10ம் மேல வெள்ளையல் துரத்தினவங்கள்... நான் ஓடிப்போய் ஒரு கடையில தஞ்சம் கோர அவன் என்னை வெளியில போட்டு மூடிட்டான்... பிறகென்ன. துரத்திவந்தவங்கள் வடிவேலுக்கு சாத்தினமாதி சாத்தி இரத்தம் ஒழுக ஒழுக இருக்க போலீஸுக்காரங்கள் வந்து அவங்களைப்பிடிக்கவில்லை.. என்னை விசாரித்து கொண்டுபோய் யூனி காவலாளிகளிட்ட குடுத்து மருந்து போட்டு... இரவில தனிய போகவேண்டாமெண்டு அட்வைஸ் வேற....

நியாயத்துக்காக ஒருமுறை முன்றுபாத்து.. சரிவராமல் அடுத்த தவணையே வெளியேறிவெட்டேன்.

சொன்னாப்போல அது லண்டன் இல்லை சரே, கில்போர்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.