Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இதயத்தை ரணமாக்கிய ******இருண்ட நாட்கள் ..******

Featured Replies

aisheh1.jpg

நட்பாய் என்னில் அமர்ந்து

காதலாய் என்னில் உறங்கி

இன்று கானலான

எனது நாட்குறிப்பின்

நனைந்து போன பக்கங்கள்

கண்ணீரில்....

கடந்த காலத்தின்

கசப்பில்

மனப்புண்களால்

முடமாகித்தானே

முதலில் வந்தாய்

என் முன்னில்....

எத்தனை இன்னல்களை

எனதாக்கி

உயிர்பித்தேன் உன்னை ,..

ஆழமாய் காதல்செய்

பிரிந்து போனாலும்

அவள் அடையும்

அளவிலா தண்டனை

அது மட்டுமே ..

பொன்மொழியாய்

உலகிற்கு

நீயும் சொல்லி...

என் உயிரதனை சிறகாக்கி

பறந்து சென்றாய்....

புனிதமான நட்புக்கு கூட

ஆண்வர்க்கத்தையே

அணுக விடாமல்

என் மனதை

கல்லாக்கி விட்டு

நீயும்

காணாமல் போன

மாயம் தான் என்னடா ...

என்

இதயத்தில்

நெருடும் புழுக்களாய்

உன் நினைவுகள் ....

அருவருப்பும்

கூச்சமும்

அடங்காமல் எனை

சித்ரவதை செய்ய

வெட்கி தலைகுனிகிறேன் ....

நீயும் கபடத்தோடு

என்னில்

நட்டு வைத்த ...

காதலை

நினைக்கையில்...

  • கருத்துக்கள உறவுகள்

என்

இதயத்தில்

நெருடும் புழுக்களாய்

உன் நினைவுகள் ....

மற்றுமொரு இனிய காதல் கவிதை. யார் தான் காதலுக்கு விதிவிலக்காய் வாழ முடியும்? .இனியவள் இனிய கவிதை.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியும் ஒரு கவிதை

பெயர், மதம், ஜாதி என்று

ஆயிரம் பொருத்தம் பார்த்தும்

உன் மனப் பொறுத்தம் பாராமல்

வெறும் பணப்பொருத்தம் மட்டும் பார்த்து

நடந்தது நம் திருமணம்.

கொழுத்த சீதனம், ஜாதிதிமிர் என்று

போலிகள் மலிந்த அந்த கூட்டத்தில்

உன் திருமணம் பற்றிய

உனது அபிப்பிராயம்

பதிவேட்டில் முற்றுப்புள்ளி இடமுதல்

நீ விட்ட கண்ணீர்ப்புள்ளி தான் என்பதை

நான் அப்போது புரிந்துகொள்ளவில்லை

தோற்றுபோன ஒரு ஆணின் காதல்

மதுவுடன் சென்று முடிகிறது.

தோற்றுப்போன ஒரு பெண்ணின் காதல்

இரண்டு ஆண்களின் வாழ்வை

மதுவால் நிறைக்கின்றது.

அடி பெண்ணே

உன் தோளில் பச்சை குத்தப்பட்ட

நான் அல்லாத ஒருவனின்

பெயரை பார்த்தபின்

உன்னை தொட எனக்கு

அருவறுப்பது போல தான் உனக்கும்

அருவறுத்திருக்கும்

என் ஒவ்வொரு தீண்டலிலும்.

தோற்கடிக்கப்பட்ட ஒரு காதலை

வாழவைக்கும் உன்னை

ஒரு மனைவியாக அல்லாது

பெண்ணாக இன்னமும் நேசிக்கிறேன்

அதனால்தான் கேட்கிறேன்

வா! இப்போதாவது பிரிந்து போவோம்

http://reader.feedshow.com/show_items-feed...b271facae6f6469

  • கருத்துக்கள உறவுகள்

" என்

இதயத்தில்

நெருடும் புழுக்களாய்

உன் நினைவுகள் ..."

வணக்கம் இனியவள் .........

நினைவுகள் என்றும் நீங்காதவை .காலம் தான் ஆற்றும் மருந்து

.காலம் செல்ல மனதின் ரனம் ஆறும் .......

கவிதையில் சோகம் மிகுதியாய் இருக்கிறது .

  • கருத்துக்கள உறவுகள்

" தோற்றுபோன ஒரு ஆணின் காதல்

மதுவுடன் சென்று முடிகிறது.

தோற்றுப்போன ஒரு பெண்ணின் காதல்

இரண்டு ஆண்களின் வாழ்வை

மதுவால் நிறைக்கின்றது.

வணக்கம் நுனாவிலான் .........

சுட்டு தந்த கவிதை நன்றாக இருக்கிறது .மதுவை நாடுபவர் எல்லோரும் காதலில் தோற்றவர்களா ?

இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான் ....

...உறவும் வரும் பிரிவும் வரும் வாழ்கை ஒன்று தான் ....என்று ஏன் எடுக்க கூடாது ?

நன்றி நிலாமதி ..

  • கருத்துக்கள உறவுகள்

மதுவை நாடுபவர் எல்லோரும் காதலில் தோற்றவர்களா ?

இல்லை. ஆனால் காதலில் தோற்றவர்கள் (ஆண்கள்) மதுவை நாடுகிறார்கள்.

சோகமான கனமான வரிகள்... கவிதை நல்லா இருக்கிது எண்டு சொல்ல முடிய இல்ல. ஆழ்ந்த அனுதாபங்கள்... தொடர்ந்து நம்பிக்கையுடன் இருங்கோ இனியவள்... வாழ்க்கை நம்மோட கையிலதான் இருக்கிது. மற்றவன் வந்து எங்களுக்காக வாழப்போவது இல்லை.. மற்றவன் எங்களுக்காக அக்கறைப்படப்போவது இல்லை. நாமதான் நம்மில அக்கறையுடன் இருக்கவேணும். நாமாதான் நம்மில இரக்கம் காட்டவேணும்... அனுதாபப்பட வேணும்.. காதல் கைகூடினால் மகிழ்ச்சி. கைகூடாவிட்டால்.. முன்பு நாம் இருந்த நிலமையை விட இன்னும் எம்மை சகலவழிகளிலும் முன்னேற்றிக்கொள்வதே, வாழ்வில் முன்னேறுவதே நாம் செய்யக்கூடிய புத்திசாலித்தனமான வேலை. :icon_mrgreen: வேற என்ன இந்த கவிதைய மன்னிக்கவும்... சோகக்கதைய வாச்சிச்ச பிறகு சொல்லிறதுஎண்டு எனக்கு தெரிய இல்ல.. :lol::(:D

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடின்

மனிதரின் மொழிகள் தேவை இல்லை !

இதயத்தின் மொழிகள் புரிந்து விடின்

மனிதர்க்கு மொழியே தேவை இல்லை !

மண் குடிசை வாசல் என்றால்

தென்றல் வர மறுத்திடுமா !

வான நிலா ஏழை எனறால்

ஒளி கொடுக்க மறந்திடுமா !

மானம் என்ற உயிர் காக்க

மனக்கதவை மூடிக் கொண்டேன் !

அது நாலு பக்கம் திறந்து கொண்டால்

நான் அதற்கு என்ன செய்ய !

புத்தம் புது பூமி வேண்டும் !

நித்தம் ஒரு வானம் வேண்டும் !

தங்க மழை பொழிய வேண்டும் !

தமிழில் குயில் பாட வேண்டும் !

நெற்றி வியர்க்கின்ற போது

அந்த நிலவில் மழை பொழிய வேண்டும் !

உனக்கும் எனக்கும் எல்லாம்

பிடிக்கும் என்றாய் ! அடி ஏன்

என்னை மட்டும் பிடிக்காதென்றாய் !

உள்ளே போன அத்தனை பேரும்

குற்றவாளி இல்லேங்க !

வெளியே உள்ள அத்தனை பேரும்

புத்தன் காந்தி இல்லேங்க !

நடந்தா இரண்டடி

இருந்தா நாலடி

இறந்தா ஆறடி

இது அத்தனை பேருக்கும்

இறைவன் கொடுத்த வரம் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட பட்டியலில கன பேர் இருக்கினம் போல :icon_mrgreen: ! இனியவள் உங்கள் கவிதை பழைய நினைவுகளை மீட்டிச்செல்கிறது. வாழ்த்துக்கள் :lol:

என்

இதயத்தில்

நெருடும் புழுக்களாய்

உன் நினைவுகள் ....

நீண்ட நாட்களின் பின் சோகமான கவிதையோடு வந்திருக்கிறீங்க இனியவள்.

இருண்ட நாட்கள் வெளிச்சமடைய வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

மற்றுமொரு இனிய காதல் கவிதை. யார் தான் காதலுக்கு விதிவிலக்காய் வாழ முடியும்? .இனியவள் இனிய கவிதை.

வணக்கம் ,

ஆமாம் காதல் இல்லாமல் இங்கு யாறும் இல்லை!!

நன்றி உங்கள் வருகைக்கு!!

  • தொடங்கியவர்

சோகமான கனமான வரிகள்... கவிதை நல்லா இருக்கிது எண்டு சொல்ல முடிய இல்ல. ஆழ்ந்த அனுதாபங்கள்... தொடர்ந்து நம்பிக்கையுடன் இருங்கோ இனியவள்... வாழ்க்கை நம்மோட கையிலதான் இருக்கிது. மற்றவன் வந்து எங்களுக்காக வாழப்போவது இல்லை.. மற்றவன் எங்களுக்காக அக்கறைப்படப்போவது இல்லை. நாமதான் நம்மில அக்கறையுடன் இருக்கவேணும். நாமாதான் நம்மில இரக்கம் காட்டவேணும்... அனுதாபப்பட வேணும்.. காதல் கைகூடினால் மகிழ்ச்சி. கைகூடாவிட்டால்.. முன்பு நாம் இருந்த நிலமையை விட இன்னும் எம்மை சகலவழிகளிலும் முன்னேற்றிக்கொள்வதே, வாழ்வில் முன்னேறுவதே நாம் செய்யக்கூடிய புத்திசாலித்தனமான வேலை. :) வேற என்ன இந்த கவிதைய மன்னிக்கவும்... சோகக்கதைய வாச்சிச்ச பிறகு சொல்லிறதுஎண்டு எனக்கு தெரிய இல்ல.. :(:(:(

வணக்கம் முரளி!!

நீண்ட நாட்களின் பின் , நீங்கள் அனைவரும் நலம் நானே

ஆமாம் முரளி கவிதை மிகவும் சேகமாகிவிட்டது,என்ன செய்ய இப்படி ஒரு பெண்னின் வாழ்க்கை ஆகிவிட்டது!!

தனது வேதனையை என்னிடம் கூறினால் ,இப்படி ஒரு கவி உறுவாகிவிட்டது!!வாழ்க்கை என்பது ஒரு பேர்க்களம்!!

ஆமாம் அதி இருந்த அவளை மீட்டு விட்டதில் எனக்கும் ஒரு சந்தேசம் தான்!!

உங்கள் கருத்துக்கு நன்றி,!! அதை பார்த்து அவள் மகிழ்வாள்!!

இனியவள் கவிதை நன்றாக இருக்கின்றது

இருந்தும் புழுக்களாய் நெளியும் நினைவுகள் என்பது சற்று அருவருப்பாக இருக்கின்றுது.

நினைவுகள் கொடுமையானவையாக இருந்தாலும் அவை அருவருப்பை தரக்கூடாது. காதல் நினைவுகள் அதுவும் முதல் காதல் நினைவு . என்றும் என்றென்றும் காலத்தால் மட்டுமல்ல யாராலும் அழிக்க முடியாதது. கொடியதாயினும் அது அழகிய இன்பம்

யாராக இருந்தாலும் ஆழ்ந்த அனுதாபங்கள் இனியவள். ஓம்... காயத்துக்கு மற்ற ஆக்களிண்ட ஆறுதல் வார்த்தைகள் சுகமாக இருக்கும். கீழ காயப்பட்டவர் ஒருவர் காயப்படப் போற ஆக்களுக்கு ஆறுதல் வார்த்தை சொல்லுறார். நண்பியிடம் இதை முடிந்தால் முழுமையாக பார்க்கச் சொல்லுங்கோ. வாழ்க்கைக்கு பல தேவையான பல விசயங்கள இதில சொல்லுறார். நன்றி!

20071022pp_pausch_500.jpg

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,

இண்டைக்கு யூரியூப் இணையத்தில மிகவும் பயனுள்ள காணொளிகள் பார்த்தன். இந்த காணொளிகளில அமெரிக்கா Carnegie Mellon University (CMU) Pittsburgh, Pennsylvania வை சேர்ந்த கணணியில் பேராசிரியர் ஒருவர் வாழ்வில் பற்றி அருமையாக உரை நிகழ்த்தி இருக்கிறார். இவர் 1960ம் ஆண்டு பிறந்தவர். இப்போது புற்றுநோயுக்கு உள்ளாகி இருக்கிறார். மருத்துவர்கள் இவரிண்ட நாட்கள எண்ணத்துவங்கி இருக்கிறீனம்.

இந்த சுமார் 1.30 மணித்தியாலம் நீளமான காணொளிகள் இரண்டையும் முடியுமானால் பொறுமையுடன் முழுவதுமாக பாருங்கோ. எங்கட வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளவை. ஏற்கனவே இதைப்பார்க் காதவர்களுக்காக இங்கு இணைக்கின்றேன். இந்த காணொளிகள் - பேராசிரியரின் இந்த இறுதி உரை - உலகப்புகழ் பெற்று உள்ளன.

இதப்பார்த்து முடிஞ்சதும், மற்றும் பார்த்துக்கொண்டு இருக்கேக்க எனக்கு கண்களில கண்ணீர் வந்திச்சிது. வாழ்க்கை பற்றி வித்தியாசமான ஒரு கோணத்தில உரை ஆற்றுகின்றார்.

Randy Pausch பற்றி மேலதிகமாக அறிய: http://en.wikipedia.org/wiki/Randy_Pausch

நன்றி!

">

நட்பாய் என்னில் அமர்ந்து

காதலாய் என்னில் உறங்கி

இன்று கானலான

எனது நாட்குறிப்பின்

நனைந்து போன பக்கங்கள்

கண்ணீரில்....

அட..இனியின் "இருண்ட நாட்கள்" கவி..இருளாகி போனதொரு காதலின் விம்பம் வாழ்த்துக்கள் இனியவள் :wub: ..ஓ உங்களின் நாட்குறிப்பின் பக்கங்கள் நனைந்து போய்விட்டதோ..அப்ப அடுத்த வருசம் இன்னொரு நாட்குறிப்பு வரும் அல்லோ அதில எழுத தொடங்குங்கோ..(நான் பகிடிக்கு பிறகு கோவிக்கிறதில்ல)... :wub:

இப்படி ஏதாச்சும் ஆகும் எண்டு தெரிந்து தான் நான் நாட்குறிப்பே எழுதுறதில்ல... :wub:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

இனியவள் கவிதை நன்றாக இருக்கின்றது

இருந்தும் புழுக்களாய் நெளியும் நினைவுகள் என்பது சற்று அருவருப்பாக இருக்கின்றுது.

நினைவுகள் கொடுமையானவையாக இருந்தாலும் அவை அருவருப்பை தரக்கூடாது. காதல் நினைவுகள் அதுவும் முதல் காதல் நினைவு . என்றும் என்றென்றும் காலத்தால் மட்டுமல்ல யாராலும் அழிக்க முடியாதது. கொடியதாயினும் அது அழகிய இன்பம்

வணக்கம் பரணி!!

முதல் உங்கள் உண்மையான கருத்துக்கு எனது நன்றிகள்!!

நீங்கள் கூறுவது கூட ஒரு வகையில் உண்மையாக இருக்கலாம்!!

ஆனால் நல்ல இருக்கும் என்பதுக்காக மனதில் படும் வேதனை மறைப்பதால் யாறுக்கு பயன்

இப்படி பட்ட வேசம் பேடுவதுக்கு அவளுக்கு விருப்பம் இல்லை!!

அழகான நினைவுகளை எவளவுக்கு மறக்க முடியாதோ அது பேல துன்பங்களையும் பறக்க முடியாது!!

இது தான் உண்மை கூட!!

காதல் சோகமாய் வரைந்த கவிதை நன்றாக இருக்கின்றது இனியவள்.

நீண்ட நாட்களின் பின் உங்களை சந்திக்கிறேன் என்று நினைக்கிறேன்.

சோகத்தை சொல்லும் வரிகள் அருமை!

தோற்றுபோன ஒரு ஆணின் காதல்

மதுவுடன் சென்று முடிகிறது.

தோற்றுப்போன ஒரு பெண்ணின் காதல்

இரண்டு ஆண்களின் வாழ்வை

மதுவால் நிறைக்கின்றது.

நுணாவிலன் சுட்ட கவியில் இந்த வரிகள் வித்தியாசமானதாக இருக்கின்றது.

அந்த ஒரு ஆணை அவள் தேர்ந்தெடுத்தாக இருக்கலாம்.ஆனால் இரண்டாவது ஆணையும் அவள் தான் தேர்ந்தெடுத்தாளா இல்லை பெற்றோரா? என்பது தான் கேள்வி. ஆனால் இரு ஆண்களின் வாழ்வை,மனதை நோகடித்த பழி என்னமோ பெண் மேல் தான் விழுகின்றது.!

(எல்லா பெண்களும் இல்லை சிலர்! அப்புறம் நெடுக்ஸ் சண்டைக்கு வந்திட வேணாம்!)

இனியவள் கவிதை நன்றாக இருக்கின்றது

இருந்தும் புழுக்களாய் நெளியும் நினைவுகள் என்பது சற்று அருவருப்பாக இருக்கின்றுது.

நினைவுகள் கொடுமையானவையாக இருந்தாலும் அவை அருவருப்பை தரக்கூடாது. காதல் நினைவுகள் அதுவும் முதல் காதல் நினைவு . என்றும் என்றென்றும் காலத்தால் மட்டுமல்ல யாராலும் அழிக்க முடியாதது. கொடியதாயினும் அது அழகிய இன்பம்

நன்றாக சொன்னீர்கள் பரணி அண்ணா.

அருவருப்பு தருவது,ஆறுதல் தருவது கதலித்தவரை,நடந்தவற்றை,நபரின் மன காயத்தை பொறுத்தது என நினைக்கிறேன்.

அதை விட உங்கள் " சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரை போல் வருமா?" என்பதை எப்போதும் பார்க்கையில் எனக்கு நம்ம ஊர் ஞாபகம் தான் வருகின்றது. உங்கள் கருத்தை கடந்து செல்கையில் எப்போதும் அந்த வரிகளை வாசிக்கையில் உங்கள் வீட்டை கடந்து நம்ம வீட்டுப்பக்கம் செல்வது போல் தோணுகிறது. :icon_mrgreen:

வணக்கம் பிரியசகி

உண்மையை சொன்னால் காதல் நினைவுகள் என்பது அது கசப்பாயினும் இனிப்பாயினும் நினைக்கும்போது ஒர்; இன்பம்தான். எனது முதல்காதல் தோல்விதான். ஆனாலும் இன்றுவரை (எனது மனைவியிடம் கூட சொல்லி நினைவுகூருவேன்) என்னால் அதை மறக்க முடியாது. நினைத்து நினைத்து ஏதோ ஓர்; வகையில் மகிழ்ந்துகொள்வேன். கசப்பான நினைவென்றாலும் நினைக்கும்போது ஓர்; இன்பம் அதை மறக்கவோ மறுக்கவோ முடியாது.

நான் களத்தில் வந்த காலத்தில் இருந்து இன்றுவரை அந்த கையெழுத்தை மறக்கவில்லை இன்றல்ல என்றுமே எனக்கு என் தாய்மண்ணை மறக்க மாட்டேன். எத்தனை சொத்துக்கள் சுகங்கள் வந்தாலும் அந்த மண்தான் எனக்கு சுவாசம். . தற்போது தாயகத்தில் யாரும் இல்லை என நினைக்கும்போது கவலையாக இருக்கும். எப்போது சென்று நம் மண்ணில் புரண்டு விழுவேனோ என்று ஏக்கத்திலேயே காலம் கழிகின்றது.

புழுக்கள் நெளியத்தானே செய்யும். இதுல அருவருக்க என்ன இருக்கிது. இதுவும் ஒரு வித்தியசமான கற்பனைதான் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தோற்றுபோன ஒரு ஆணின் காதல்

மதுவுடன் சென்று முடிகிறது.

தோற்றுப்போன ஒரு பெண்ணின் காதல்

இரண்டு ஆண்களின் வாழ்வை

மதுவால் நிறைக்கின்றது.

பலர் காதலின் வெற்றி என்பதை திருமணம் செய்வதோடு இணைத்துப் பார்க்கின்றனர். அது தவறு.

பல முன் பின் அறியாதவர்கள் திருமணம் செய்து வெற்றி கண்டுள்ளனர்.. திருமண வாழ்வில். அது காதலின் வெற்றி என்று சொல்ல முடியுமா..??!

நீங்கள் காதலித்தவர் எப்போ உங்களையும் காதலித்தாரோ அப்பவே உங்களின் காதல் வெற்றி பெற்றுவிட்டது என்பதே உண்மை. அதாவது உங்களின் காதல்.. நீங்கள் காதலித்தவரால் உங்கள் மீதும் அவர் மீதும் உணரப்பட்டிருக்கிறது. அதுதான் காதலின் வெற்றி..!

அது இடையில முறியிறது.. விட்டிட்டு இன்னொருத்தரோட ஓடிக்கிறது.. இன்னொருத்தரை திருமணம் செய்துக்கிறது.. அதெல்லாம்.. காதல் அல்ல. அது பேராசையின் விளைவுகள்..! இவற்றைக் காதல் தோல்வியாக எண்ணப்படாது. அது அவரவர் மனப் பலவீனங்களின் வெளிப்பாடுகள்.

நீங்கள் காதலிக்கிறது தெரிஞ்சும்.. இன்னொருத்தருக்கு உங்க மேல காதலே வரல்ல என்றுங்க.. அது உங்களளவில் தோல்வி தான்..! அதற்காக உங்களை வருத்திக்க தேவையில்லை. காரணம்.. நீங்கள் காதலிச்சவருக்கு.. உங்களைக் காதலிக்கிற மன நிலை இல்லாமல் இருக்கலாம்.

எனவே.. ஒரு மனிதனாக காதலில் தோல்வி என்பது இருப்பதாக என்னால் உணர முடியல்ல..! வெற்றியைத் தான் உணர முடிகிறது..! :rolleyes:

இனியவள்.. நுணாவிலான்.. இருவரின் கவிதைகளும் அழகு. :wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலன் சுட்ட கவியில் இந்த வரிகள் வித்தியாசமானதாக இருக்கின்றது.

அந்த ஒரு ஆணை அவள் தேர்ந்தெடுத்தாக இருக்கலாம்.ஆனால் இரண்டாவது ஆணையும் அவள் தான் தேர்ந்தெடுத்தாளா இல்லை பெற்றோரா? என்பது தான் கேள்வி. ஆனால் இரு ஆண்களின் வாழ்வை,மனதை நோகடித்த பழி என்னமோ பெண் மேல் தான் விழுகின்றது.!

(எல்லா பெண்களும் இல்லை சிலர்! அப்புறம் நெடுக்ஸ் சண்டைக்கு வந்திட வேணாம்!)

நீண்ட நாட்களுக்கு பின் பிரியசகி! .

அது இருக்கட்டும் பிரியசகி, எந்த பெற்றோர்தான் தன் பிள்ளையை காதலிக்க விட்டிருக்கினம்? அப்படி தெரிஞ்சுகொண்டும் (பெற்றோர்கள் கைகளில் தான் தன் முடிவு என்று) எந்த பெண் தான் தான் விரும்பு பையனை காதலிப்பாள்? அப்ப யாரின் தவறு பெற்றோரின் தவறா? இல்லை அந்த பெண்னின் தவறா? பிறகு எப்படி சொல்லுவீங்க பெண் மேல் பழி விழுது எண்டு? (என்ன எழுதினன் எண்டு எனக்கே புரியல்ல புரியாவிட்டால் புரிஞ்சுகொள்ளுங்க....)

புலத்தில இப்ப இப்படித்தான் கனக்க நிகழ்கின்றது, அதிலும் சோமாலியாவில் சொல்லி வேலை இல்லை போங்க.....

நீங்கள் காதலிக்கிறது தெரிஞ்சும்.. இன்னொருத்தருக்கு உங்க மேல காதலே வரல்ல என்றுங்க.. அது உங்களளவில் தோல்வி தான்..! அதற்காக உங்களை வருத்திக்க தேவையில்லை. காரணம்.. நீங்கள் காதலிச்சவருக்கு.. உங்களைக் காதலிக்கிற மன நிலை இல்லாமல் இருக்கலாம்.

அழகான விளக்கம் நெடுக்ஸ்!

என்ன இருந்தாலும் அனுபவம் பேசுவது போல் வருமா என்ன :lol:

Edited by பிரியசகி

நீண்ட நாட்களுக்கு பின் பிரியசகி! .

அது இருக்கட்டும் பிரியசகி, எந்த பெற்றோர்தான் தன் பிள்ளையை காதலிக்க விட்டிருக்கினம்? அப்படி தெரிஞ்சுகொண்டும் (பெற்றோர்கள் கைகளில் தான் தன் முடிவு என்று) எந்த பெண் தான் தான் விரும்பு பையனை காதலிப்பாள்? அப்ப யாரின் தவறு பெற்றோரின் தவறா? இல்லை அந்த பெண்னின் தவறா? பிறகு எப்படி சொல்லுவீங்க பெண் மேல் பழி விழுது எண்டு? (என்ன எழுதினன் எண்டு எனக்கே புரியல்ல புரியாவிட்டால் புரிஞ்சுகொள்ளுங்க....)

புலத்தில இப்ப இப்படித்தான் கனக்க நிகழ்கின்றது, அதிலும் சோமாலியாவில் சொல்லி வேலை இல்லை போங்க.....

:lol::lol::lol: ம் புரிஞ்சிடுச்சு!

நான் சொன்னது அந்த ஒரு வரிக்கு. 'ஒரு பெண்ணின் காதலால் 2 ஆண்களின் வாழ்க்கை மதுவில் நிறைகின்றது! '

அது தப்பு பெண்ணில் மட்டுமில்லை...பெற்றோரிலும் சில சமயங்களில் தங்கி இருக்கென்று சொன்னேன்.

...................

நெடுக்ஸ் வருவாரென்று பயந்தால் இப்போ புதுசு புதுசா வாறாங்க.

ஏனுங்க நெடுக்ஸ் சிப்பாய்களை சேர்த்திட்டீங்கள் உங்க படையில? :o

  • கருத்துக்கள உறவுகள்

aisheh1.jpg

புனிதமான நட்புக்கு கூட

ஆண்வர்க்கத்தையே

அணுக விடாமல்

என் மனதை

கல்லாக்கி விட்டு

நீயும்

காணாமல் போன

மாயம் தான் என்னடா ...

இனியவள்,

காதல் தந்த இரணத்தால் நட்பை வெறுத்தல் ஆகாது. நட்பின் வெளியில் உங்கள் இரணத்தை ஆற்றும் மருந்து இருக்கும். எவரோ ஒருவர் செய்த தவறுக்காக ஆண்வர்க்கத்தையே நட்பு நிலையிலிருந்து விலத்தி வைத்தல் என்பது முழுமையாக உங்களை நீங்களே முடக்குதலுக்கு ஒப்பானது. காதல் என்பது கையிணையாது தோற்குமாகில் புனிதமாகும். நினைவுச்சுழிக்குள் வலம் வந்து வந்து மானுட உன்னதத்தின் உச்சமாகி உயிர் தொலையும் வரை தொடரும் அதிசய உணர்வு.

உங்கள் கவிதையைப் பார்க்கும் போது உண்மையற்ற ஒருவரிடம் மனதைப் பறிகொடுத்த பேதமை தெரிகிறது. வெளியே வந்து இந்தப் பிரபஞ்சத்தைப் பாருங்கள். இயற்கை எவ்வளவு உன்னதங்களைத் தன்வசம் வைத்திருக்கிறது. மண்புழுவிலிருந்து மனிதர்கள் வரை வாழ்வதற்காகவே படைக்கப்படுவதை பாருங்கள். மனதில் ஏற்படும் தளர்ச்சியும் சோகமும் கண்காணாத தூரத்திற்து ஓடிவிடும்.

Edited by valvaizagara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.