Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவிப்பு

Featured Replies

எட்டாப்பழம் புளிக்கும்!

தற்காப்பு தாக்குதல் நடக்கும் எண்டு குறிப்பிட பட்டுள்ளது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைப்புலிகளின் யுத்தநிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு நிராகரிப்பு

[செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 01:08 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்]

விடுதலைப்புலிகளின் ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு நிராகரித்துள்ளது.வடபோர் முனையில் எதிர்நோக்கிவரும் தொடர்ச்சியான பின்னடைவுகளால் நலிவடைந்துள்ள புலிகளின் தந்திரோபாய நகர்வே இது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகளின் போர்நிறுத்த அறிவிப்பை ஏற்றுக்கொள்வதற்குஅரசு தயாரில்லை என்றும் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டால் வந்தால் மாத்திரமே அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, சிறிலங்கா சமாதான செயலகத்தின் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க கூறுகையில், விடுதலைப்புலிகளின் இந்த அறிவிப்பு சமாதான அனுசரணையாளர்களான நோர்வேயின் ஊடாக விடுக்கப்பட்டிருக்கவேண்டும

எட்டாப்பழம் புளிக்கும்!

எது எட்டவில்லை புளிக்கிறதுக்கு...?? ஒருவேளை புலிக்கும் எண்டதைத்தான் புளிக்கும் எண்று எழுதிவிட்டீர்களோ..?

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இதில் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

சாணக்கிமாக.............ஆராவாரமற்று....

.......தெளிவாக............

இதில் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

உதாரணமாக..........

நாங்கள் இன்னும் வலிந்து தாக்கமுற்படவில்லையென்பது...

எமது அயல்நாடுகள் என்று குறிப்பிடுவதால்...நாங்கள் ஒரு நாடு என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

சர்வதேசம் ஸ்ரீலங்காவின் படையெடுப்பை தடுத்துநிறுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

நாங்கள் இதைக்கூட மதிக்கின்றோம்......அதனால் நாங்களும் உங்களுடன் கலந்து பேசி நிம்மதியாக வாழவிரும்புகின்ற மக்களின் விடுதலைக்காக போராடுகின்ற போராளிகள் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

இப்படி கூறிக்கொண்டே போகலாம்...................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எட்டாப்பழம் புளிக்கும்!

யாருக்கு உங்களுக்கா?

எந்தப்பழம் எட்டாத உயரத்தில் இருக்கிறது.அப்படி பறிக்க முடியாத உயரத்தில் இருந்தால் தமிழ் ஈழ வான் படையை கொண்டு பறிக்கின்றோம்.

எந்த பழம் என்று மட்டும் சொல்லுங்கள் மரத்தின் உயரத்தையும் தெரியபடுத்துங்கள்

எட்டாப்பழம் புளிக்கும்!

நரிகளுக்கு ஏற்ற பழமொழி. புலிகளுக்கு அல்ல!

புலி திராட்சை சாப்பிடுவதில்லை! எட்டி எட்டி பழம் பறிப்பதும் இல்லை. அதுவெல்லாம் நரியின் வேலை :icon_idea:

நீங்கள் என்ன அந்த நரிக்கூட்டத்தை சேர்ந்தவரா! :D

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

நரிகளுக்கு ஏற்ற பழமொழி. புலிகளுக்கு அல்ல!

புலி திராட்சை சாப்பிடுவதில்லை! :icon_idea:

நீங்கள் என்ன நரிக்கூட்டத்தை சேர்ந்தவரா! :D

சரியான பதில்

இதற்குமேல் கூறுவது நாகரீகமான ஒரு இனத்திற்கு அழகல்ல.......

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: சாணக்கியன்,

ரொம்பவும் தான் கொழுப்போ ?!!!!!!

நம்ம ஊர் புலி பசித்தால் புல்லும் தின்னும் போலிருக்கே? :icon_idea:

ஒரு கொடுங்கோலன் தன் கூட்டாளிகளை அழைத்து விருந்து கொடுக்கிறான்!

அவன் பயங்கரவாத ஆட்சியை கண்டு வியந்த சகாக்கள் அவனுக்கு முடி சூட்டப்போகிறார்கள்!

அதற்கு.....

ஒருதலைப்பட்சமாகப் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, மாநாடு வெற்றிபெற ஒத்துழைப்போம் என்பதை எமது விடுதலை இயக்கம் மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றது.

மழைக்குள்ள மரநிழலுக்கை காயுற மக்களுக்கும், அத்தியாவசியத் தேவைகளுக்காக போக்குவரத்து செய்ய முடியாம தவிக்கும் மக்களுக்கும் உங்கள் வாழ்த்துகளை தெரியப்படுத்தி விடுங்கள்!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

:icon_idea: சாணக்கியன்,

புலிகள் இப்போதுதான் முதல் தடவையாக யுத்த நிறுத்தம் செய்கிறார்களா என்ன ? இது முன்னரும் நடந்ததுதானே ?

அதுமட்டுமல்லாமல் சந்தர்ப்பத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ள விரும்பாத எந்த போராட்டமும் காலத்தில் அடித்துச் செல்லப்படும் அபாயமு இருக்கிறதல்லவா ?

புலி பசித்தால் புல்லைத் தின்பதில் தப்பில்லை. மாமிசம் கிடைக்காத போது புல்லையாவது தின்று உயிர்வாழ்வது மேல். கவுரவம் பார்த்தால் பட்டினி இருந்து சாகத்தான் வேண்டும்.

சோக்கான வேலை பாருங்கோ ! செவிடன்ர காதில சங்கில்ல பெரிய குழல் கட்டி ஊதினாலும் கேளாது என்று தெரிஞ்சு கொண்டும் செய்யுற வேலை தான் அந்த அறிவிப்பு !

அது மட்டுமல்ல அந்த மகிழ்ச்சியை போய் மன்னாரில விடத்தல் தீவு பகுதிகளில இருந்து இடம்பெயாந்து மரத்திற்கு கிழ அந்த வெய்யிலுக்குள்ளளையும் மழைக்கள்ளையும் துன்பப்படுகிற மக்களிட்ட போய் சொன்னால் நல்ல சந்தோசமா வாழ்த்திவிடும் பாருங்கோ !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திய சிங்கள தரப்பு இராஜ தந்திரம் மீண்டும் ஜெயித்துள்ளது. :rolleyes: .

இனி வரும் நாட்களில் சிங்கள இராணும் பாரிய தளபாட விநியோகத்தை வடக்கு மற்றும் மன்னார் பகுதிகளில் மேற்கொள்வதை காணலாம். இக்காலபப் பகுதியில் புலிகளின் கடல் விநியோகப் பாதைகள் முற்றாக தடுக்கப்படும் இந்திய கடற்படையின் உதவியுடன்.

இதற்கான பதில்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=42009

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு கொடுங்கோலன் தன் கூட்டாளிகளை அழைத்து விருந்து கொடுக்கிறான்!

அவன் பயங்கரவாத ஆட்சியை கண்டு வியந்த சகாக்கள் அவனுக்கு முடி சூட்டப்போகிறார்கள்!

மழைக்குள்ள மரநிழலுக்கை காயுற மக்களுக்கும், அத்தியாவசியத் தேவைகளுக்காக போக்குவரத்து செய்ய முடியாம தவிக்கும் மக்களுக்கும் உங்கள் வாழ்த்துகளை தெரியப்படுத்தி விடுங்கள்!

சாணக்கியன்???? :rolleyes:

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்வதிற்கு ஒன்றுமில்லை, மௌனம் தான் தற்பொழுது பதிலாக உள்ளது. மௌனம் கலையும்போது எமது மண் மீட்கப்படும் என்ற நம்பிக்கை களத்தின் மத்தியில் வாழும் மக்களிடம் உள்ளது, போராளிகளிடமும் உள்ளது. ஆனால் இங்கே? எம்மால் இயன்றளவு அவர்களிற்கு பக்கதுணையாக நின்று அவர்களின் சுமைகளை குறைக்க முயற்சிப்போம்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சார்க்" மாநாட்டுக்காக தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவித்திருந்த யுத்தநிறுத்தம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது

[ திங்கட்கிழமை, 04 ஓகஸ்ட் 2008, 05:55.06 PM GMT +05:30 ]

“சார்க்” மாநாட்டிற்காக தமிழீழ விடுதலைப்புலிகள்ää அறிவித்திருந்த ஒருதலைப்பட்சமான யுத்தநிறுத்தம் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது.

“சார்க்” நாடுகளின் மாநாட்டுக்காக தமிழீழ விடுதலைப்புலிகள் இந்த யுத்தநிறுத்தத்தை அறிவித்திருந்த போதும். அரசாங்கம் அதனை நிராகரித்திருந்தது. இந்தநிலையில் அரசாங்கப்படையினர் வன்னியில் தமது தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்தனர். இதேவேளை, யாழ்ப்பாணம் முகமாலையில் படையினர் நேற்று தமது சந்தோசத்தை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் வடமுனைத்தளபதி கேனல் தீபன், வன்னிக்களமுனைக்கு அழைக்கப்பட்டதாக சிங்கள செய்திதாள் ஒன்றில் வெளியான செய்தியை அடுத்தே படையினர் எறிகனைகளை வீசியும் துப்பாக்கி வேட்டுக்களை தீhத்தும் தமது சந்தோசத்தை பகிர்ந்துக்கொண்டதாக யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கின்றன

http://www.tamilwin.com/view.php?2ae8E9Nhb...G7fbd0e0Fh2gEde

அப்ப இண்டையிலை இருந்து சொக்கபானை கொழுத்துவினமோ...??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்ம ஊர் புலி பசித்தால் புல்லும் தின்னும் போலிருக்கே? :lol:

ஒரு கொடுங்கோலன் தன் கூட்டாளிகளை அழைத்து விருந்து கொடுக்கிறான்!

அவன் பயங்கரவாத ஆட்சியை கண்டு வியந்த சகாக்கள் அவனுக்கு முடி சூட்டப்போகிறார்கள்!

அதற்கு.....

மழைக்குள்ள மரநிழலுக்கை காயுற மக்களுக்கும், அத்தியாவசியத் தேவைகளுக்காக போக்குவரத்து செய்ய முடியாம தவிக்கும் மக்களுக்கும் உங்கள் வாழ்த்துகளை தெரியப்படுத்தி விடுங்கள்!

புலிச்சாணக்கியம் யாழ்களசாணக்கியத்துக்கு கிட்ட நெருங்கேலாது என்று மட்டும் தெரியுது!

இந்த உலகமே தமிழன்ர துன்பத்தை துரும்புக்கு மதிக்கவில்லையே என்ன செய்யலாம்?

சிங்களவர்களுக்கு கொடுக்கும் அதே மதிப்பு, உலகம் தமிழர்களுக்கும் தரபோவதில்லை என்று தெரிந்தும் போரை தெரிவு செயததுதான் எமது முட்டாள்த்தனம் இல்லையா சாணக்கியன்?

  • கருத்துக்கள உறவுகள்

:lol: ஆனால் கொழும்பில் ஏதாவது ஒரு குண்டு வெடிப்பில் ரெண்டு சிங்களச்சனம் செத்தால் போதும், உடனேயே ஓடி வந்து இது கொய்யோ முறையோ எண்டு அழ ஆரம்பித்து விடுவார்கள். அப்பாவிச் சிங்களச் சனத்தையெல்லோ சாக்காட்டிப் போட்டாங்கள் எண்டு கதற ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் வன்னியில் ஒவ்வொருநாளும் சிங்களவன்ர குண்டில எங்கட சனம் ஆயிரக்கணக்கில செத்தால் ஆளும் வராது, சத்தத்தையும் காணேலாது. ஏனெண்டு கேட்டால்,"சுதந்திரத்துக்காகப் போராடிக்கொண்டிருக்கிறமாம், அதனால சிங்களவன் எங்களைக் கொல்லுற மாதிரி நாங்களும் செய்யக் கூடாதாம்" அப்ப வன்னியில் நடக்கிற கொலைகளைத் தடுக்க என்ன வழி எண்டு கேட்டால்" நீங்கள் முதலில புலிகளிட்ட போய்ச் சொல்லுங்கோ தெற்கில குன்டு வைக்க வேண்டாம் எண்டு, பிறகு மற்றதெல்லாம் தானாச் சரிவரும்" எண்டமாதிரிக் கதைப்பினம்.

பிரயோசனமில்லை, நான்களைச்சதுதான் மிச்சம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.