Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்மோகன் தப்பிப் பிழைப்பார்?

Featured Replies

மன்மோகன் தப்பிப் பிழைப்பார்?

இந்திய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் இந்திரா காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்று நம்பப் படுகிறது.

இன்னும் சொற்ப வாக்குகள் எண்ணப்பட வேண்டிய நிலையில் இந்திரா காங்கிரஸ் முன்னணியில் இருப்பதாகத் தெரிகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்பில் மன்மோகன் சிங் அரசு வெற்றி

ஆதரவாக 253 வாக்குகளும், எதிராக 232 வாக்குகளும் பதிவு

  • கருத்துக்கள உறவுகள்

மன்மோகன் - சோனியா கூட்டணிக்கு முண்டு கொடுத்தவர்களில் திமுக 16 எம்பிகளும் பாமக 6 எம்பிக்களுமாக 22 பேர் அடங்குவார்கள்.

மதிமுக எதிராக வாக்களித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்த 22 பேரின் வாக்குப் பலத்தைப் பயன்படுத்தி தமிழக மீனவர்கள் பிரச்சனை.. ஈழ விவகாரத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான அணுகுமுறைகள் என்று மன்மோகன் அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்து நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்திருக்கலாம்.

ஆனால்..???????!

எல்லோரும் பேச்சளவில் மேடையில் தான்.. இரத்தத்தின் இரத்தங்கள்..! காசு பணம் பதவியைக் கண்டுவிட்டால்.. சுயநலம் தான் மிஞ்சும்..! :rolleyes::wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வாக்குப்பதிவு பின்போடப்பட்டதாக வேறு ஒரு செய்தி சொல்கிறதே???

எது உண்மை???

இது உண்மையானால்

கலைஞர் மீண்டும் அருமையான சந்தர்ப்பம் ஒன்றை தவறவிட்டுள்ளார்

தனக்கிருந்த ஒரேயொரு தகுதியான அரசியல் சாணக்கியன் என்பதனையும் இழந்துள்ளார்............

  • தொடங்கியவர்

மன்மோகன் - சோனியா கூட்டணிக்கு முண்டு கொடுத்தவர்களில் திமுக 16 எம்பிகளும் பாமக 6 எம்பிக்களுமாக 22 பேர் அடங்குவார்கள்.

மதிமுக எதிராக வாக்களித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இந்த 22 பேரின் வாக்குப் பலத்தைப் பயன்படுத்தி தமிழக மீனவர்கள் பிரச்சனை.. ஈழ விவகாரத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான அணுகுமுறைகள் என்று மன்மோகன் அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்து நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்திருக்கலாம்.

ஆனால்..???????!

எல்லோரும் பேச்சளவில் மேடையில் தான்.. இரத்தத்தின் இரத்தங்கள்..! காசு பணம் பதவியைக் கண்டுவிட்டால்.. சுயநலம் தான் மிஞ்சும்..! :rolleyes::wub:

நெடுக்காலைபோவான் அண்ணை

களைஞரைச் சும்மா பேசாதேங்கோ. மீன் பிடிக்கிற ஆக்கள் அதுதான் களைஞரின்ரை உடன் பிறப்புகள் அநியாயமாக் கொல்லப்படுகின்ம் எ;ணட கவலையிலை களைஞர் தன்ரை பிள்ளைகளை ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க வைச்சவர்.

சிங்களக் கடற்படையின்ரை தாக்குதல் பற்றியெல்லாம் மத்திய அரசு தானே முடிவெடுக்க வேணும். அதுகளிலை தலையிடுறதிலை எண்டு களைஞரே சொல்லியிருக்கிறார்.

தன்ரை பிள்ளைகளுக்கு அல்லது சொந்தக் காறருக்கு ஏதாவது பிரச்சினை எண்டால் மட்டும் தான் களைஞர் டில்லிக்குப் பறப்பார். அது மட்டும் ஆகக் கூடினது உண்ணாவிரதம் தான்.

ஆ! இன்னுமொண்டு செய்வார் தன்ரை சொந்தத் தொலைக்காட்சியிலை தோன்றி உடன்பிறப்புகளுக்காகக் அடுக்குமொழிக் கவிதை படிப்பார் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மன்மோகன் - சோனியா கூட்டணிக்கு முண்டு கொடுத்தவர்களில் திமுக 16 எம்பிகளும் பாமக 6 எம்பிக்களுமாக 22 பேர் அடங்குவார்கள்.

மதிமுக எதிராக வாக்களித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

உண்மையில் வை கோ அவர்களைப்பாராட்டத்தான் வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

மன்மோகன் - சோனியா கூட்டணிக்கு முண்டு கொடுத்தவர்களில் திமுக 16 எம்பிகளும் பாமக 6 எம்பிக்களுமாக 22 பேர் அடங்குவார்கள்.

இந்த 22 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் நினைத்திருந்தால் , டெல்லியை ஒரு வழிக்கு கொண்டு வந்திருக்கலாம் .

என்ன செய்வது , இது தான் தமிழனின் சாபக்கேடு ஆகிவிட்டது .

இதுவே வேற்று மாநிலத்தவனுக்கு கிடைத்த சந்தர்ப்பமாக இருக்கவேண்டும் , தன்னுடைய தொப்புள் கொடி உறவின் தாற்பரியத்தை காட்டியிருப்பான் .

இனி டெல்லியிலிருந்து திரும்பி தமிழ் நாட்டுக்கு வந்து அறிக்கை மேல் , அறிக்கை விட வேண்டியதுதான் . அதற்கு பிரதி பலனாக கைதட்டலும் , விசிலடிப்பும் கிடைக்கும் .

போதுமையா ............... உங்கள் தமிழ் பற்று . வெட்கம் கெட்ட அரசியல் பண்ணிக்கொண்டு மற்றவர்களை முட்டாளாக்காதீர்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் தமிழ் பற்று . வெட்கம் கெட்ட அரசியல் பண்ணிக்கொண்டு மற்றவர்களை முட்டாளாக்காதீர்கள்

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை.........

கலைஞர் குடும்பத்திற்கு அமோக விழைச்சல்தான்....................

உண்மையில் கலைஞர் சாணக்கியத் தனமாகவே காய் நகர்த்தியிருக்கின்றார். நம்பிக்கை வாக்கெடுப்பில் அது வேண்டும், இது வேண்டும் என்று கோரிக்கை வைத்து டிமாண்ட் செய்து வாக்களித்திருந்தால் கலைஞரில் சோனியாவும், மன்மோகன்சிங்கும் வைத்திருக்கும் மரியாதையும் குறைந்திருக்கும். அது போல் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் தோல்வியடைந்திருந்தாலும், கலைஞரின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டிருக்காது.

ஆனால் இப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதுபோல் எந்தவித கோரிக்கையும் வைக்காததால் கலைஞரில் இன்னும் மரியாதை சோனியாவிற்கும், மன்மோகன்சிங்கிற்கும் கூடும். இதை வைத்து கலைஞர் தன் கோரிக்கைகளை நிறைவேற்றத் தயங்க மாட்டார். முக்கியமாக சேது திட்டத்தையும் ஒக்கேனேகல் திட்டத்தையும் நிறைவேற்ற முயற்சிப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சார்க் மகாநாட்டிற்கு மன் மோகன்சிங்கும் இந்திய இராணுவமும் போகப்போகினமோ???

ஆனால் இப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதுபோல் எந்தவித கோரிக்கையும் வைக்காததால் கலைஞரில் இன்னும் மரியாதை சோனியாவிற்கும், மன்மோகன்சிங்கிற்கும் கூடும். இதை வைத்து கலைஞர் தன் கோரிக்கைகளை நிறைவேற்றத் தயங்க மாட்டார். முக்கியமாக சேது திட்டத்தையும் ஒக்கேனேகல் திட்டத்தையும் நிறைவேற்ற முயற்சிப்பார்.

மரியாதையை வைத்து இப்ப காய்கறி வாங்குவாரோ கலைஞர்...??

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் கலைஞர் சாணக்கியத் தனமாகவே காய் நகர்த்தியிருக்கின்றார். நம்பிக்கை வாக்கெடுப்பில் அது வேண்டும், இது வேண்டும் என்று கோரிக்கை வைத்து டிமாண்ட் செய்து வாக்களித்திருந்தால் கலைஞரில் சோனியாவும், மன்மோகன்சிங்கும் வைத்திருக்கும் மரியாதையும் குறைந்திருக்கும். அது போல் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் தோல்வியடைந்திருந்தாலும், கலைஞரின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டிருக்காது.

ஆனால் இப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதுபோல் எந்தவித கோரிக்கையும் வைக்காததால் கலைஞரில் இன்னும் மரியாதை சோனியாவிற்கும், மன்மோகன்சிங்கிற்கும் கூடும். இதை வைத்து கலைஞர் தன் கோரிக்கைகளை நிறைவேற்றத் தயங்க மாட்டார். முக்கியமாக சேது திட்டத்தையும் ஒக்கேனேகல் திட்டத்தையும் நிறைவேற்ற முயற்சிப்பார்.

வசம்பண்ண நீங்கள் அவரைப் பற்றி பெரிசு பெரிசு நினைச்சு வைச்சிருக்கிறீங்க சரி. ஆனா பெரிசு எதையும் பெரிசா நினைக்கல்ல.. சொந்த வருமானத்தை விட என்றதுதான் உண்மை.

வைகோ கூட ஒரு காலத்தில மன்மோகனை மதிச்சவர். மன்மோகன் வைகோவிட கோரிக்கைகளை மதிக்காத பட்சத்தில் தான் வைகோ எதிரா போனவர்.

திமுக சரி பாமக சரி..எல்லாரும் சொந்தப் பிழைப்புக்கு வழியப் பார்க்கினம்.. சேதுவும் அல்ல ஒக்கேனலும் அல்ல அங்க முக்கியம். அவை முக்கியமென்றால் எப்பவோ கர்நாடக தேர்தல் முடிஞ்சுது. இன்னும் பேசப் போகல்ல... சொன்னது போல.

பாவம் வைகோ மட்டும் பிழைக்கத் தெரியாதவரே அநியாயத்துக்கு நல்லவரா இருக்காரே..! :rolleyes:

பூவோடு சேர்ந்த நாரும் வாசமளிக்குமாம். அதுபோலத்தான், எமது தலைவரின் நட்பால் மிகவும் நல்லவராகவும், கொண்ட கொள்கையில் உறுதியாகவும் இருக்கிறார். :wub::lol::(

வசம்பண்ண நீங்கள் அவரைப் பற்றி பெரிசு பெரிசு நினைச்சு வைச்சிருக்கிறீங்க சரி. ஆனா பெரிசு எதையும் பெரிசா நினைக்கல்ல.. சொந்த வருமானத்தை விட என்றதுதான் உண்மை.

வைகோ கூட ஒரு காலத்தில மன்மோகனை மதிச்சவர். மன்மோகன் வைகோவிட கோரிக்கைகளை மதிக்காத பட்சத்தில் தான் வைகோ எதிரா போனவர்.

திமுக சரி பாமக சரி..எல்லாரும் சொந்தப் பிழைப்புக்கு வழியப் பார்க்கினம்.. சேதுவும் அல்ல ஒக்கேனலும் அல்ல அங்க முக்கியம். அவை முக்கியமென்றால் எப்பவோ கர்நாடக தேர்தல் முடிஞ்சுது. இன்னும் பேசப் போகல்ல... சொன்னது போல.

பாவம் வைகோ மட்டும் பிழைக்கத் தெரியாதவரே அநியாயத்துக்கு நல்லவரா இருக்காரே..! :wub:

நெடுக்கு

நீங்கள் இப்படித் தவறாக புரிந்து கொண்டது வியப்பாகவிருக்கின்றது. திமுக கூட:டணியில் வைகோ இருந்த போது மத்திய அரசுடன் பிரைச்சினை ஏற்படவில்லையே?? ஆனால் தேர்தலில் தனக்கு ஒதுக்கிய இடங்கள் போதாது என்று கலைஞருடன் பிரைச்சினை ஏற்பட்டபின் ஜெயலலிதாவின் அணிக்கு மீண்டும் தாவினார். கலைஞர் மதிமுகவை மத்திய அரசின் கூட்டணியிலிருந்து வெளியேற்றுமாறு கோரிக்கை வைத்தபின் மத்திய அரசும் அதை ஆதரிப்பது போலவே மத்திய அரசின் கூட:டணிக்கட்சிகளின் ஒன்றுகூடலிற்கு அழைப்புக்கள் அனுப்பாமல் தவிர்த்தது. இவற்றைப் பார்த்து ஆத்திரமுற்ற வைகோ அதன் பின் தான் மத்திய அரசை விமர்சிக்கத் தொடங்கினார். மற்றும் படி வைகோவும் சந்தர்ப்பவாதி தான்.

மற்றும்படி கலைஞரைப் பற்றி நான் எதையும் நினைக்கவில்லை. ஆனால் இப்போதுள்ள அரசியல்வாதிகளில் சமயோசிதமாக சிந்தித்து காய் நகர்த்துவதில் கலைஞர் கில்லாடி. அது போல் கர்நாடகத் தேர்தலின் பின் ஒக்கேனேகல் திட்டத்தை தொடர்வேன் என்று தானே சொன்னார் அதுபோல் தற்போது அவ்வேலைகளை ஆரம்பித்தும் விட்டார். கர்நாடகம் தமிழக அரசை வேலைகளைத் தொடர வேண்டாம் என்றும் பேச்சுவார்த்தைக்கு வருமபடியும் அழைப்பு விட்டுள்ளது. தமிழக அரசு வேலைகளைத் தொடர்ந்தால் தாம் உச்சநீதிமன்றம் மூலம் தடை போடுவோம் என்றும் எடியூரப்பா அறைகூவல் விட்டிருப்பதையும் நீங்கள் இணையத்தளங்களில் பார்க்கவில்லையா?? அதுபோல் மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் சேது திட்டத்திற்கு இடைக்காலத்தடையை நீக்கி வேலைகளைத் தொடர அனுமதியளிக்கமாறும் மனுச் செய்துள்ளது. இவற்றையெல்லாம் நீங்கள் அறியாதது வினோதமே!!!!!

பூவோடு சேர்ந்த நாரும் வாசமளிக்குமாம். அதுபோலத்தான், எமது தலைவரின் நட்பால் மிகவும் நல்லவராகவும், கொண்ட கொள்கையில் உறுதியாகவும் இருக்கிறார். :lol::(:(

:rolleyes:அப்ப அதற்கு முதல் வைகோ ரொம்ப மோசமாக இருந்தவரோ??? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாக்கெடுப்பில் மன்மோகன்சிங் வென்றுவிட்டார். ஆதரவு 275 எதிர்ப்பு 256 என நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு,

நீங்கள் இப்படித் தவறாக புரிந்து கொண்டது வியப்பாகவிருக்கின்றது. திமுக கூட:டணியில் வைகோ இருந்த போது மத்திய அரசுடன் பிரைச்சினை ஏற்படவில்லையே?? ஆனால் தேர்தலில் தனக்கு ஒதுக்கிய இடங்கள் போதாது என்று கலைஞருடன் பிரைச்சினை ஏற்பட்டபின் ஜெயலலிதாவின் அணிக்கு மீண்டும் தாவினார். கலைஞர் மதிமுகவை மத்திய அரசின் கூட்டணியிலிருந்து வெளியேற்றுமாறு கோரிக்கை வைத்தபின் மத்திய அரசும் அதை ஆதரிப்பது போலவே மத்திய அரசின் கூட:டணிக்கட்சிகளின் ஒன்றுகூடலிற்கு அழைப்புக்கள் அனுப்பாமல் தவிர்த்தது. இவற்றைப் பார்த்து ஆத்திரமுற்ற வைகோ அதன் பின் தான் மத்திய அரசை விமர்சிக்கத் தொடங்கினார். மற்றும் படி வைகோவும் சந்தர்ப்பவாதி தான்.

மற்றும்படி கலைஞரைப் பற்றி நான் எதையும் நினைக்கவில்லை. ஆனால் இப்போதுள்ள அரசியல்வாதிகளில் சமயோசிதமாக சிந்தித்து காய் நகர்த்துவதில் கலைஞர் கில்லாடி. அது போல் கர்நாடகத் தேர்தலின் பின் ஒக்கேனேகல் திட்டத்தை தொடர்வேன் என்று தானே சொன்னார் அதுபோல் தற்போது அவ்வேலைகளை ஆரம்பித்தும் விட்டார். கர்நாடகம் தமிழக அரசை வேலைகளைத் தொடர வேண்டாம் என்றும் பேச்சுவார்த்தைக்கு வருமபடியும் அழைப்பு விட்டுள்ளது. தமிழக அரசு வேலைகளைத் தொடர்ந்தால் தாம் உச்சநீதிமன்றம் மூலம் தடை போடுவோம் என்றும் எடியூரப்பா அறைகூவல் விட்டிருப்பதையும் நீங்கள் இணையத்தளங்களில் பார்க்கவில்லையா?? அதுபோல் மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் சேது திட்டத்திற்கு இடைக்காலத்தடையை நீக்கி வேலைகளைத் தொடர அனுமதியளிக்கமாறும் மனுச் செய்துள்ளது. இவற்றையெல்லாம் நீங்கள் அறியாதது வினோதமே!!!!!

ஒக்கேனகல் திட்டத்தை அவர் இன்னும் உருப்படியா ஆரம்பிக்கவில்லை. விஜயகாந், சரத்குமார் போன்றவர்கள் அண்மையில் இது குறித்து கண்டன அறிக்கைகளை விட்டதை நீங்கள் காணவில்லையா..??!. போட்டி அரசியல்வாதிகளிடமிருந்து வரக்கூடிய கண்டனக் குரலை சமாளிக்க என்று சில நடவடிக்கைகளைச் செய்வது என்பது பெரியவருக்கு கைவந்த கலை. ஆனால் அதற்காக தமிழக மக்களின் மீதான அதீத அக்கறையில் எப்போதும் செயற்படுகிறார் என்று சொன்னீர்கள் என்றால்.. இவருடைய 5 தடவை முதலமைச்சர் பதவிக்காலத்தைக் கண்ட தமிழகம் இப்போ சிங்கப்பூர் போல இருக்க வேண்டும். :wub:

கச்சதீவுப் பிரச்சனையில் ஏனைய கட்சிகளுக்கு இருக்கும் மத்தியில் பேரம் பேசக் கூடிய செல்வாக்கைவிட இவருக்கு அதிகம் உண்டு. ஆனால் இவரும் உண்ணாவிரதம் இருந்து நேரத்தை வீணடிக்கிறார். அதுவும் இந்திரா காங்கிரஸ் காலத்தில் உருவான ஒரு பிரச்சனைக்கு. இவரின் நடவடிக்கை குறித்து ஜெயலலிதா.. விஜயகாந் போன்ற பலரும் விசனம் வெளியிட்டிருக்கின்றனர்.

சேதுசமுத்திரத்திட்டம்.. இப்போதைக்கு சாத்தியமாகப் போவதில்லை. இது தொடர்பில் ஏலவே அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி இந்துக்களின் மனதை புண்படுத்தப் போய்.. அதை கண்டும் காணாமலும் இருந்து.. கர்நாடகாவில் ஆட்சி வாய்ப்பை நழுவவிட்டு நிற்கும் காங்கிரஸ்.. தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில்.. தனது தேசிய செல்வாக்கை இவருக்காக இழக்க இடம் கொடுக்காது. சேதுசமுத்திரத்திட்டம்.. பெரியவர் அரியணையில் இருக்கும் வரை நடந்தேறவே மாட்டுது. அது நிச்சயம். ஆனால் அதற்கான பேரத்தில் அவருக்கு கோடிக்கணக்கான பணம் வந்து சேரும்.

பாமக கூட திமுக கூட இருந்தே குழிபறித்ததாகச் சொல்லி வெளியேறிவிட்டது. ஒரு நல்ல அரசியல்வாதியை விட்டு ஏன் இடையில ஓடினம் எல்லாரும்..???! :lol::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பண்ணாவின் நம்பிக்கைக்குரிய பெரியவர் கவுத்துப்போடாரே வசம்பண்ணா...!

மன்மோகனின் வெற்றிக்குப் பின் டெல்லி விரையும் பெரியவரை.. செய்தியாளர்கள் அப்படிக் கேட்க.. அவர் இப்படி பதில் அளித்திருக்கிறார்...

"இந்த வெற்றியால் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறுமா என்ற கேள்விக்கு என்னால் இப்போது பதில் சொல்ல முடியாது. காரணம் அது நீதிமன்றத்தில் தற்போது உள்ளது.

டெல்லி செல்லும்போது மீனவர்கள் பிரச்சினை குறித்து நான் பேசுவேன்.

கனிமொழிக்குப் பதவி கேட்பேனா என்று அசட்டுத்தனமாககேட்கப்படும் கேள்விகளுக்கெல்லாம் இப்போது பதில் சொல்ல முடியாது."

கனிமொழிக்கு பதவி கேட்க விரைகிறார் போலும். அதுதான் இத்தனை கடுப்பு செய்தியாளர்கள் மீது.

சேதுதான் அப்படியென்றால்.. தமிழக மீனவர்கள்.. கச்சதீவு மீட்புப் பற்றி என்ன சொல்கிறார்..

டெல்லியில் போய் மீனவர் பிரச்சனை பற்றித்தானாம் பேசப்போறார். ஆனால் தமிழகத்தில் உண்ணாவிரமிருந்து கச்சதீவை மீட்கப் போறன் என்றார். கச்சதீவை மீட்கிறது பற்றி பேசப் போறன் என்று சொல்லக் கூட மனசு வரல்ல பாருங்க. பாவம் தமிழக மக்கள்.. ஏன் தமிழ் மக்கள். :wub:

Edited by nedukkalapoovan

ஒக்கேனகல் திட்டத்தை அவர் இன்னும் உருப்படியா ஆரம்பிக்கவில்லை. விஜயகாந், சரத்குமார் போன்றவர்கள் அண்மையில் இது குறித்து கண்டன அறிக்கைகளை விட்டதை நீங்கள் காணவில்லையா..??!. போட்டி அரசியல்வாதிகளிடமிருந்து வரக்கூடிய கண்டனக் குரலை சமாளிக்க என்று சில நடவடிக்கைகளைச் செய்வது என்பது பெரியவருக்கு கைவந்த கலை. ஆனால் அதற்காக தமிழக மக்களின் மீதான அதீத அக்கறையில் எப்போதும் செயற்படுகிறார் என்று சொன்னீர்கள் என்றால்.. இவருடைய 5 தடவை முதலமைச்சர் பதவிக்காலத்தைக் கண்ட தமிழகம் இப்போ சிங்கப்பூர் போல இருக்க வேண்டும். :wub:

கச்சதீவுப் பிரச்சனையில் ஏனைய கட்சிகளுக்கு இருக்கும் மத்தியில் பேரம் பேசக் கூடிய செல்வாக்கைவிட இவருக்கு அதிகம் உண்டு. ஆனால் இவரும் உண்ணாவிரதம் இருந்து நேரத்தை வீணடிக்கிறார். அதுவும் இந்திரா காங்கிரஸ் காலத்தில் உருவான ஒரு பிரச்சனைக்கு. இவரின் நடவடிக்கை குறித்து ஜெயலலிதா.. விஜயகாந் போன்ற பலரும் விசனம் வெளியிட்டிருக்கின்றனர்.

சேதுசமுத்திரத்திட்டம்.. இப்போதைக்கு சாத்தியமாகப் போவதில்லை. இது தொடர்பில் ஏலவே அவசரப்பட்டு வார்த்தைகளைக் கொட்டி இந்துக்களின் மனதை புண்படுத்தப் போய்.. அதை கண்டும் காணாமலும் இருந்து.. கர்நாடகாவில் ஆட்சி வாய்ப்பை நழுவவிட்டு நிற்கும் காங்கிரஸ்.. தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில்.. தனது தேசிய செல்வாக்கை இவருக்காக இழக்க இடம் கொடுக்காது. சேதுசமுத்திரத்திட்டம்.. பெரியவர் அரியணையில் இருக்கும் வரை நடந்தேறவே மாட்டுது. அது நிச்சயம். ஆனால் அதற்கான பேரத்தில் அவருக்கு கோடிக்கணக்கான பணம் வந்து சேரும்.

பாமக கூட திமுக கூட இருந்தே குழிபறித்ததாகச் சொல்லி வெளியேறிவிட்டது. ஒரு நல்ல அரசியல்வாதியை விட்டு ஏன் இடையில ஓடினம் எல்லாரும்..???! :wub::wub:

நீங்கள் கலைஞரைக் குறைசொல்ல வேண்டுமென்பதற்காக பொய்யுரை எழுதாதீர்கள். இராமதாஸ் திமுக கூட:டணியிலிருந்து வெளியேற்றப் பட்டாரா?? அல்லது வெளியேறினாரா?? தனது கட்சி மக்கள் நலனிற்காகவே பாடுபடுமன்றி ஒருபோதும் பதவிகளை பெறமாட்டோம் என்று கூறி வந்த இராமதாஸ், பேரம் பேசி முக்கிய அமைச்சுப் பதவிகளைப் பெறவில்லையா?? திமுக 16 எம்எல்ஏக்களையும் பாமக 6 எம்எல்ஏக்களையும் வைத்திருந்த போது தனக்கு இணையாக பாமக விற்கும் திமுக அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொடுத்துது தானே. ஆனால் இராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?? அதுபோல் சிலமாதங்களுக்கு முன் குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கான நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடந்தபோது, தனக்கும் ஒரு சீட் தரவேண்டுமென்று இராமதாஸ் பிரைச்சினை செய்தார். அவர் தனது மகளுக்கும் பதவி கேட்டார் என்ற உண்மையை திமுகவும், காங்கிரசும் போட்டுடைத்ததும் அடங்கிப் போனார். இது தான் இன்றைய அரசியல் நிலைமை ஊழலில்லாத அரசியல் வாதியோ குடும்ப அரசியல் நடத்தாத அரசியல் வாதியோ தற்போது இல்லையென்ற நிலையாகிவிட்டது. அப்படியிருக்க கலைஞர் மட்டும் தான் குடும்ப அரசியல் நடாத்துகின்றார் என்பது வெறும் வாதம்.

ஒக்கேனேகல் திட்டத்தை என்ன விஜயகாந்தும், சரத்குமாரும் சொல்லியா ஆரம்பித்தார். அரசு தானாக ஆரம்பித்தது. அதில் அரசியல் இடையூறுகள் சில வந்தபோது ஒத்தி வைத்து மீண்டும் ஆரம்பித்துள்ளார். ஒக்கேனேகல் திட்டம் என்ன இன்று அறிவித்து நாளை ஆரம்பித்து நாளைமறுநாள் முடித்துவிட முடியுமா?? குறைந்தது 2, 3 ஆண்டுகள் ஆகும். ஆனால் திட்டம் ஆரம்பித்ததை நிறுத்துமாறு கர்நாடகா அறிக்கை விட்டதையும் மறந்து, திட்டமே ஆரம்பிக்கவில்லை என்று ஏதாவது அறிக்கைகள் விட்டால் தானே அவர்களும் அரசியல் நடாத்த முடியும். ஆளுங்கட்சிக்கு நற்சான்றிதழ் வழங்கிக் கொண்டிருந்தால் பின் இவர்கள் எப்படி அரசியல் பண்ண முடியும்??

கச்சதீவு இலங்கைக்கு கையளிக்கப்பட்ட போது திமுகவின் எதிர்பையும் மீறித்தான் இந்திரா காந்தி கையளித்தார். இது விடயத்தில் மத்தியஅரசு எடுக்கும் முடிவே இறுதி முடிவு. இது எல்லாருக்கும் தெரிந்தது. இன்று திமுகவை குறை சொல்லும் ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் இதையும் செய்து காட்டியிருக்கலாமே?? ஏன் செய்யவில்லை. திமுக ஆட்சியைக் கலைக்கவில்லை என்பதற்காக தனது ஆதரவை வாபஸ் பெற்று வாஜ்பாய் அரசை மண் கவ்வ வைத்த ஜெயலலிதா, கச்சதீவை மீட்க இப்படிச் செய்திருக்கலாமே?? அப்படிச் செய்திருந்தால் பாராட்டியிருக்கலாம்.

மேலும் கனிமொழிக்கு பதவி பல தடைவைகள் கற்பனையில் பத்திரிகைகள் கொடுத்துவிட்டன: ஒவ்வொரு முறையும் இப்படி எழுதி கடைசியில் மூக்குடைபட்டது தான் மிச்சம்.

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கலைஞரைக் குறைசொல்ல வேண்டுமென்பதற்காக பொய்யுரை எழுதாதீர்கள். இராமதாஸ் திமுக கூட:டணியிலிருந்து வெளியேற்றப் பட்டாரா?? அல்லது வெளியேறினாரா??

வசம்பண்ணா உங்களுக்கு பெரிசு மேல ரெம்ப நம்பிக்கை போல.

ராமதாஸே சொல்லியிருக்கிறார்.. நாங்களா கூட்டணியில் இருந்து விலகல்ல... விலக்க நடவடிக்கை எடுக்கிறார் பெரியவர் என்று. அதுபோலவே பழைய விசயத்தைக் கிளறி.. கைது அது இதென்று செய்து ஒரு மாதிரி கலைச்சு விட்டிட்டார்.

பாமகவுக்கு திமுக அல்ல அமைச்சர் பதவி வேண்டிக் கொடுத்தது. மன்மோகன் தான் கொடுத்தார். மதிமுகவுக்கும் கொடுக்க முன் வந்தார். ஆனால் வைகோ தான் நிராகரித்தார். இப்போ திமுக கூட்டணியில் இருந்து பாமக விலகிய பின்னரும் மத்தியில் கூட்டணியில் இருக்கிறது. அமைச்சுப் பதவிகளும் இருக்கின்றன.

சொந்த மகன்களுக்காக.. தனக்கு சேவகம் செய்த சன் நிறுவனத்தையே கைவிட்டவர் தானே இந்தப் பெரியவர்..!

கச்சதீவுவை சிறீலங்காவிடம் கையளித்த போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவர் பெரியவராமே. அதுதான் ஜெயலலிதா வாங்கு வாங்கென்று வாங்கி இருந்தாரே. அப்ப எல்லாம் வேடிக்கை பார்த்திட்டு இருந்தவர்.. இப்போ விஜயகாந்துக்கு கூட்டம் சேருது என்ற உடன.. தானும் உண்ணாவிரதம் இருக்கிறார் என்று. கச்சதீவை மீட்கப்போறன் என்று முழங்கிறார் என்று.. பெரிசின்ர போலி முகத்தை அப்படியே உரிச்சுக்காட்டினாரே வசம்பண்ணன்..!

ஜெயலலிதா கில்லாடி நம்பர் 1 என்றால் பெரிசு அதைவிட வெண்டது..! :wub:

Edited by nedukkalapoovan

ஜெயலலிதா கில்லாடி நம்பர் 1 என்றால் பெரிசு அதைவிட வெண்டது..! :wub:

திட்டம் போட்டு திருடுற கூட்டம்

திருடிக்கொண்டே இருக்குது!

அதை பார்த்தும் கைய தட்டுற

கூட்டம் தட்டிக்கொண்டே இருக்குது! :wub:

திருடராய் பார்த்து திருந்தாவிட்டால்

திருட்டை ஒழிக்க முடியாது!

இந்த திருட்டை ஒழிக்க முடியாது!! :wub:

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞர் மதிமுகவை மத்திய அரசின் கூட்டணியிலிருந்து வெளியேற்றுமாறு கோரிக்கை வைத்தபின் மத்திய அரசும் அதை ஆதரிப்பது போலவே மத்திய அரசின் கூட:டணிக்கட்சிகளின் ஒன்றுகூடலிற்கு அழைப்புக்கள் அனுப்பாமல் தவிர்த்தது. இவற்றைப் பார்த்து ஆத்திரமுற்ற வைகோ அதன் பின் தான் மத்திய அரசை விமர்சிக்கத் தொடங்கினார். மற்றும் படி வைகோவும் சந்தர்ப்பவாதி தான்.

அதுதானே நீங்களே சொல்லிவிட்டீர்கள் வை.கோ வை வெளியேற்றும் முயற்சி கலைஞர்மூலம் இடம்பெற, அதை மத்திய அரசும் ஏற்றுக்கொண்டதாக! அழையா விருந்தாளி கூட்டணியில் இன்னும் எதற்கு? இதிலே எங்கே வைகோவிடம் தப்பு கண்டீர்கள்? பா.ஜ.க கூட்டணியில் இருந்தபடியே காங்கிரஸ் உடன் கள்ளக்காதல் செய்து பா.ஜ.வை கழட்டிவிட்டவர் கலைஞர். காங்கிரஸ் மௌனமாக இருந்தும், தான் காங்கரஸ் கூட்டணிணில்தான் உள்ளேன் என்று அறிக்கை விட்டவர் வை.கோ. இதில் யார் சுயநலவாதி?

வாஜ்பேயிடம் ஜெயலலிதா, தி.மு.க அரசை கலைக்கச்சொல்லியும் கலைக்காமல் அ.தி.மு.க ஆதரவை இழந்த வாஜ்பேயி தி.மு.க'விற்காக ஆட்சியையும் இழந்தது. அதற்காக இறுதிவரை பா.ஜவுடன், தி.மு.க இருந்ததா?

Edited by snegi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.