Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அதிசயம் ஆனால் உண்மை???

Featured Replies

போகர் மருத்துவம் பற்றி தெரிந்தால் சொல்லுங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் வளைகாப்பு என்பது கூட கருப்பையில் வளரும் குழந்தையின் விருத்தியில் செல்வாக்குச் செய்கிறது என்பதை ஆய்வுகளூடு ஆதாரமாக்கி இருக்கின்றனர் தானே. ஆனால் அந்த ஆய்வைச் செய்தவர்கள் தமிழர்கள் அல்ல. அமெரிக்கர்கள்.

நாங்கள் எங்களின் பொக்கிசங்களின் அருமை புரியாமல்.. ஆராயாமல்.. அவற்றை கண்ணை மூடிக் கொண்டு மூடநம்பிக்கைக்குள் புதைத்துக் கொண்டு.. வீரப்பிரதாபம் பேசிக் கொண்டதுதான் அதிகம். அதனால் தான் தமிழன் தனித்து வாழ்ந்த காலம் போய் அண்டிப்பிழைக்கும் நிலைக்கு தாழ்ந்தான்..! :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு தான் விஞ்ஞான முன்னேற்றம் ஏற்பட்டாலும் , எங்களை அறியாமல் , எங்களுக்கு அப்பாற்பட்டு ஏதோ ஒரு சக்தி எங்களை இயக்கி கொண்டு இருக்கின்றது என்பது உண்மை .

ஒமென்ன அதிசயம் தான் :rolleyes: ..அது இளையராஜாவின்ட திருவாசகம் எண்டு வடிவா தெரியும் தானே இல்ல இப்பத்தையான் குத்து பாடல்களை கேட்டாலும்,அசையாத பிள்ளையும் அசையும் பாருங்கோ அது தான் கேட்டனா பிறகு ஒருத்தரும் என்னை ஏசி போடாதையுங்கோ என்ன.. :lol:

எனக்கு இந்த திருவாசகம் பத்தி எல்லாம் தெரியா..ஆனா மனதிற்கினிமையான பாடல்களை கேட்டு கொண்டிருந்தால் மனம் சோர்வில்லாமல் இருக்கும்.. :lol:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கையே ஒரு அதிசயம் தான் அதை முதலில புரிந்து கொள்ளு" :unsure:

அப்ப நான் வரட்டா!!

... அத்தோடு மருத்துவத் துறையில் இந்திய இசையால் என்னென்ன அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்ற ஆராச்சியிலும் ஜெமன் டாக்டர்களை இறங்க வைத்திருக்கிறது இந்த சம்பவம்...

ஒரு சிறிய சம்பவத்தை வைத்து கட்டுரையாளர் அளவுக்கதிகமான கற்பனையுடன் எழுதியுள்ளார் ?

இளையராஜாவின் திருவாசகம் இந்திய இசை அல்ல என்பதை அறியவில்லை போலும். திருவாசகத்தைப் பொருள் விளங்கும்படி கேட்டு உணர்வதே கேட்போரை உருகவைக்கும். ஆனால் இளையராஜாவின் திருவாசகத்தில்

என்ன பாடுகிறார்கள் என்பதே புரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உந்தத் திருவாசகம் சிம்போனி இசையைக் கேட்டிருக்கிறன். அது ஒரு சிம்போனி இசைக்கு ஏற்ப திருவாசகத்தை வளைச்சுப் பாடினதா அல்லது திருவாசகத்துக்கு இளையராஜா அவர்கள் அத்தனை வேலைப் பழுவின் மத்தியில சிம்போனியில இசை அமைச்சுப் பாடினதா எண்டு புரியவில்லை.

அப்பிடியொண்டும் விசேடமாக அதில இருக்குது போல தெரியவில்லை. பக்திப் பரவசத்தோடு கேட்கக்கூடியதாக அது இருக்கவில்லை. ஆனால் விளம்பரங்கள் நல்ல முறையில அமைஞ்சதால, அதுவும் இளையராஜா பாடினதால எல்லாரும் நல்லா இருக்கு நல்லா இருக்கு எண்டு சொல்லினம் போல.

உந்த விளம்பரமும் விற்காமக் கிடக்கிற மிச்சம் சிடிக் களை விற்றுத் தள்ள சிலவேளை உதவலாம்.

ஆனால் எனக்கென்னவோ பிள்ளையார் பால்குடிச்ச கதைபோலவும்,? நல்ல மனிசருக்கு மட்டும்தான் உடுத்திருக்கிறது தெரியுமெண்டு ராசாவை அம்மணமாக்கின பிடவை யாவாரியின் கதை போலவும்தான் உதெல்லாம் தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

சமீப காலங்களில் வெளிவந்த இசைகளில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இந்த திருவாசகம் இன் சிம்பொனி. அமரர் திரு. சுஜாதா அவர்கள் சொன்னது போல, ஹெட்போன் மூலம் கேட்பதுவே அதை இரசிப்பதற்குச சிறந்த வழி. ஆனாலும் எனக்கு அதிலுள்ள எல்லா ஆக்கங்களும் பிடித்தது என்று சொல்வதற்கில்லை. ஆனால் என்னைப் பொறுத்த வரையில் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாதவை பின்வருவன...

1) புற்றில் வாழ் அரவும் அஞ்சேன்

2) பூவார் சென்னி மன்னன்

3) பூவேறு கோனும்

குறிப்பாக அதன் அர்த்தத்தைக் கேட்டு உணரும்போது கிடைக்கும் உணர்வுகள் வார்த்தையால் விபரிக்க முடியாதவை. :lol:

இளையராசாவின் இசை அற்புதமானது தான். அது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் இவ்விடயம் அதிகப் பிரசங்கித் தனமானது. காரணம்.

1) மேலே குறிப்பிட்டது போல் ஜேர்மன் வைத்தியர்களை இவ்விடயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தால், ஜேர்மன் பத்திரிகைகளிலேயே இவ்விடயம் பரபரப்பாக வந்திருக்கும். ஆனால் ஜேர்மனியிலுள்ள தமிழர்கள் கூட இவ்விடயத்தை இந்தியப் பத்திரிகைகளைப் பார்த்தே தெரிந்து கொண்டுள்ளனர்.

2) இளையராசாவின் இசைக்குப் பதிலாக ஏ.ஆர்.இரகுமானின் இசையோ அல்லது வேறொருவரின் இசையோ வைத்திருந்தாலும் இதுதான் நடந்திருக்கும். காரணம் இங்கு சுவிசில் சிலருக்கு இப்படி ஏற்பட்ட போது மகப்பேற்று மருத்துவர்கள் ஒலி அதிர்வுகளை ஏற்படுத்தி வயிற்றிலிருக்கும் குழந்தையை அசைய வைத்தது எனக்குத் தெரியும்.

முன்பு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது இசையில் மூச்சு விடாமல் ஒரு பாடலைப் பாடினார் என்று ஒரு புரளியை இளையராசாவே பரப்பினார். ஆனால் அது பொய்யென எஸ்.பி.பாலசுப்பிரமணியமே ஒரு மேடையில் போட்டுடைத்து அதற்கு விளக்கமும் தந்தது பலரும் பார்த்திருப்பீர்களென நம்புகின்றேன்.

இளையராஜாக்கு ஏன் இந்த புரளி பரப்பும் குணம்??

இளையராஜாக்கு ஏன் இந்த புரளி பரப்பும் குணம்??

எல்லாமே இப்போ விளம்பர மோகமாகி விட்டது.

அதைவிட இன்னொரு சேதியையும் சொல்கின்றேன். இதையும் பலர் அறிந்திருக்கக்கூடும். இந்தத் திருவாசகத்தை இளையராசாவை வைத்து இசை வடிவமாக உருவாக்குவதற்கு, ஒரு அமைப்பின் மூலம் இந்தியப் பணத்தில் 45 இலட்சத்திற்கு மேல் செலவு செய்தவர் கஸ்பார் அடிகளார். ஆனால் இளையராசா தான் இசையமைத்த திருவாசகத்தை 65 இலட்சத்திற்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு, கஸ்பார் அடிகளாருக்கும் தெரியாமல் விற்றது மட்டுமல்ல கஸ்பார் அடிகளார் மூலம் தனக்குதவிய அமைப்பிற்கு 5 சதமும் கொடுக்கவுமில்லை. இதை கஸ்பார் அடிகளாரே ஒரு இந்தியப் பத்திரிகையின் (ஆனந்த விகடன் என நினைக்கின்றேன்) பேட்டியின் போது சொல்லியிருந்தார்.

இசை ஞானம் இருந்தும் நியாயம் தெரியாதவராக இருக்கார்களே...

சிலவேளை திருவாசகத்தை வாங்கிய அந்தத் தனியார் நிறுவனமும், இளையராசாவும் சேர்ந்து இசைத்தட்டின் விற்பனைக்காக ஆடும் நாடகமோ யாரறிவார்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னயிருந்தாலும் ஊரிலை எங்கடை பழசுகள் கோயில் மண்டபத்திலையிருந்து அந்தமாதிரி ராகமிழுத்து திருவாசகம் படிப்பினமெண்டால் இளையராசாவெல்லாம் பிச்சை வாங்கோணும்.அதோடை உந்த ஸ் ரீயோ,சுத்துறசவுண்ட்( Surround) எல்லாம் எந்தமூலைக்கு ?

என்னயிருந்தாலும் ஊரிலை எங்கடை பழசுகள் கோயில் மண்டபத்திலையிருந்து அந்தமாதிரி ராகமிழுத்து திருவாசகம் படிப்பினமெண்டால் இளையராசாவெல்லாம் பிச்சை வாங்கோணும்.அதோடை உந்த ஸ் ரீயோ,சுத்துறசவுண்ட்( Surround) எல்லாம் எந்தமூலைக்கு ?

:lol:அப்ப உந்த பழசுகள் பாட, துடிக்காம வயித்திலை இருக்கிற பிள்ளை துடிக்குமோ?? முதலிலை அதைச் சொல்லுங்கோ?? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாடி புடிச்சுப்பாத்தே வைத்தியம் பாத்த பூமியப்பா எங்கடை பூமி :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது இசையில் மூச்சு விடாமல் ஒரு பாடலைப் பாடினார் என்று ஒரு புரளியை இளையராசாவே பரப்பினார். ஆனால் அது பொய்யென எஸ்.பி.பாலசுப்பிரமணியமே ஒரு மேடையில் போட்டுடைத்து அதற்கு விளக்கமும் தந்தது பலரும் பார்த்திருப்பீர்களென நம்புகின்றேன்.

வசம்பண்ணை... இந்தப் பாடலை எப்படிப் பதிவு பண்ணினார்களோ தெரியாது. ஆனால் கீழுள்ள இணைப்பில் பாலா அவர்கள் தொடர்ச்சியாகவே பாடுகிறார். அது micro breathing மூலம் சாத்தியப்படும் என்று சொல்கிறார்கள்.

இதேபோன்றதொரு பாடல் கண்மணியே காதல் என்பது என்ற பாடல். கணினி மூலம் விளையாட்டுக் காட்டமுடியாத அந்தக் காலத்திலேயே இப்பாடலையும் செய்திருக்கிறார்கள். இதெல்லாம் பாடகர்களின் திறமையே.

வசம்பண்ணை... இந்தப் பாடலை எப்படிப் பதிவு பண்ணினார்களோ தெரியாது. ஆனால் கீழுள்ள இணைப்பில் பாலா அவர்கள் தொடர்ச்சியாகவே பாடுகிறார். அது micro breathing மூலம் சாத்தியப்படும் என்று சொல்கிறார்கள்.

இதேபோன்றதொரு பாடல் கண்மணியே காதல் என்பது என்ற பாடல். கணினி மூலம் விளையாட்டுக் காட்டமுடியாத அந்தக் காலத்திலேயே இப்பாடலையும் செய்திருக்கிறார்கள். இதெல்லாம் பாடகர்களின் திறமையே.

உங்கள் கருத்திற்கு நன்றி. ஆனால் இவ்விடயத்தை பாடலைப் பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியமே, இது பொய்யான தகவல் என்று கூறி அப்பாடலை எப்படிப் பாடினார் என்றும், அப்போது எப்படி மூச்சை உள்வாங்கினார் என்பதையும் மேடையிலேயே செய்து காட்டினார். பாடிய பாடகரே இத்தகவலைத் தரும் பொழுது, உங்களால் அதை நம்ப முடியவில்லையா??

அது மட்டுமன்றி இப்புரளி வெளியான போது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மூச்சுவிடாமல் பாடியது உண்மை என்றால், அதை முன்பே ரி.எம்.சௌந்தரராசன் செய்து விட்டாரென்றும், அப்பாடல் சிவாஜி நடித்த அம்பிகாபதி திரைப்படத்தில் இடம்பெற்ற "சிந்தனை செய் மனமே" என்ற பாடல் என்ற ஒரு தகவலையும் ஒருவர் வெளியிட்டிருந்தார். அப்பாடலை பின்பு நானும் கேட்டுப் பார்த்தேன். அந்த மாதிரி ரி.எம்.சௌந்தரராசன் பாடியிருந்தார். நீங்களும் கேட்டுப் பாருங்கள் புரியும். ஆனால் ரி.எம்.சௌந்தரராசனோ அம்பிகாபதி படத்திற்கு இசையமைத்த ரி.இராமநாதனோ இப்படியொரு புரளியை கிளப்பி விடவில்லை.

உங்களுக்கு ஞாபகம் இருக்குமென நம்புகின்றேன். "கிழக்கு வாசல்" திரைப்படத்தில் "வள்ளி வள்ளி என வந்தாள்" என்ற பாடலை ஜெயசந்திரன் மிகவும் அழகாக பாடி இசைத்தட்டும் வெளியிடப்பட்டது. ஆனால் திரைப்படத்தில் அதே பாடலை இளையராசா தானே பாடி இணைத்திருந்தார். பேராசை பிடித்த சுயதம்பட்டக்காரர் இளைய ராசா!!

Edited by Vasampu

  • கருத்துக்கள உறவுகள்

பாடிய பாடகரே இத்தகவலைத் தரும் பொழுது, உங்களால் அதை நம்ப முடியவில்லையா??

வசம்பண்ணை.. நான் எழுதியதை நன்றாகப் படித்துப் பாருங்கள். நான் நீளமாகப் பாடுவது பாடகர்களின் திறமையென்று சொல்லியிருக்கிறேனே தவிர என்னால் நம்ப முடியவில்லை என்று ஏதும் சொல்லவில்லையே? :lol:

மற்றும்படி இளையராஜாவின் தனிப்பட்ட குணத்தைப் பற்றி எனக்குப் பெரிய அபிப்பிராயம் எல்லாம் இல்லை. அவருக்குள்ள ஈகோ சிறு குழந்தைக்குக் கூடத் தெரியும். :lol:

மற்றும்பட்டி சிந்தனை செய் மனமே பாடல் பற்றிய தகவலுக்கு நன்றி. அந்தப் பாடலில் எந்த இடத்தில் மூச்சு வாங்குவது தெரியாமல் நீளமாக வருகிறது?

சிந்தனை செய் மனமே பாடல் பற்றிய தகவலுக்கு நன்றி. அந்தப் பாடலில் எந்த இடத்தில் மூச்சு வாங்குவது தெரியாமல் நீளமாக வருகிறது?

வடிவேலும் மயிலும் துணை என்று தொடங்குவதிலிருந்து கேளுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.