Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

27 நட்சத்திரக்காரர்களிற்கும் உரிய தெய்வங்கள்

நட்சத்திரங்கள் -- அதிஸ்டம் தரும் தெய்வங்கள்

01. அஸ்வினி -- ஸ்ரீ சரஸ்வதி தேவி

02. பரணி -- ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)

03. கார்த்திகை -- ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)

04. ரோகிணி -- ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு பெருமான்)

05. மிருகசீரிடம் -- ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)

06. திருவாதிரை -- ஸ்ரீ சிவபெருமான்

07. புனர்பூசம் -- ஸ்ரீ ராமர் (விஸ்ணு பெருமான்)

08. பூசம் -- ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)

09. ஆயில்யம் -- ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)

10. மகம் -- ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)

11. பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி

12. உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி

13. அத்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி

14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

15. சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி

16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.

17. அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர்.

18. கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)

19. மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்

20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)

21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.

22. திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணுப் பெருமான்)

23. அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணுப் பெருமான்)

24. சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)

25. பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)

26. உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)

27. ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்.

மேலே குறிப்பிட்டள்ளது ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிஸ்டம் தரக் கூடிய தெய்வங்கள் ஆகும். மேலே தரப்பட்டுள்ள தெய்வங்களின் காயத்திரி மந்திரம், அஸ்டோத்திரம் ஜெபம், அவர்களின் திருக்கோவில் வழிபாடு, அவர்களின் உருவத் தியானம் ஆகியன செய்து வழிபடலாம். இருப்பினும் குல தெய்வ வழிபாடு மிக முக்கியமான வழிபாடாகும். குல தெய்வ வழிபாடிருந்தால் மட்டுமே மற்ற எந்த வழிபாடாயினும் சிறப்பைத் தரும்.

இதனைத் தவிர அவர்அவர்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கிரகமெதுவோ அந்த கிரகத்திற்குரிய அதிதேவதையான தெய்வத்தினையும் வழிபட்டு வாழ்வில் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.

நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம்

1. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - சூரியன் - சிவன்

2. ரோகிணி, அத்தம், திருவோணம் - சந்திரன் - சக்தி

3. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் - செவ்வாய் - முருகன்

4. திருவாதிரை, சுவாதி, சதையம் - ராகு - காளி, துரக்;கை

5. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி - குரு - தட்சிணாமூர்த்தி

6. பூசம், அனுசம், உத்திரட்டாதி - சனி - சாஸ்தா

7. ஆயில்யம், கேட்டை, ரேவதி - புதன் - விஷ்ணு

8. மகம், மூலம், அசுவினி - கேது - வினாயகர்

9. பரணி, பூரம், பூராடம் - சுக்கிரன் - மகாலக்மி

மேற்கூறிய வழிமுறை இல்வாழ்க்கைக் குறியது

“பிறவிப் பெருங்கடல் நீத்துவர்

நீத்தார் இறைவனடி சேராதவர்”

என்ற திருவள்ளுவரின் வாக்குப்படி இறைவன் அடியினை சேர விரும்புபவர்கள் அதாவது இனியொரு பிறவி வேண்டாம் முத்தி – மோட்சம் அடைய வேண்டும் என நினைப்பவர்கள் ஜோதிடப்படி 12ம் வீடு, அதற்குரிய கிரகம், அந்த கிரகம் இருக்கும் வீடு, அந்த வீட்டிற்குரிய கிரகம், 12ம் வீட்டினை பார்க்கும் கிரகம், 12ம் வீட்டில் உள்ள கிரகம், 12ம் வீட்டு கிரகத்துடன் சேர்ந்துள்ள கிரகங்கள், 12ம் வீட்டு கிரகத்தினைப் பார்க்கும் கிரகம் என பல தரப்பட்ட வழிகளிலும் ஆராய்ந்து தனக்குரிய வழிபாட்டு முறையினை தேர்ந்தெடுக்க வேண்டும்.

மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.

இந்துவாக வாழ்வோம் இந்து தர்மம் காப்போம்.

வாழ்க வளமுடன்

மித்ராசாமி SMP-DA

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி நுனா.எனக்கு நீங்கள் தந்த தெய்வம் ரொம்ப பிரமாதம் :lol:

எனக்கும் நல்ல கடவுளை டஹ்ந்தீங்க போங்க :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு முழுமுதற் கடவுள்.. ஆனால் எனக்கு முருகனைத்தான் பிடிக்கும். ஏன்னா.. நான் நல்லூர் முருகனையே அதிகம் கும்பிட்டிருக்கிறேன். அடுத்து அம்மனைப் பிடிக்கும். அதிலும் கொழும்பு மயூரபதி அம்மனை ரெம்பப் பிடிக்கும்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு முழுமுதற் கடவுள்.. ஆனால் எனக்கு முருகனைத்தான் பிடிக்கும். ஏன்னா.. நான் நல்லூர் முருகனையே அதிகம் கும்பிட்டிருக்கிறேன். அடுத்து அம்மனைப் பிடிக்கும். அதிலும் கொழும்பு மயூரபதி அம்மனை ரெம்பப் பிடிக்கும்..! :)

திருவாதிரை நட்சத்திர நெடுக்காலபோவன் நமக

கற்பூரதீப நீராஞ்சலி சமர்ப்பயாமே

தொட்டு கும்புடுங்கோ...

தெட்சனை மறக்காமல் தாங்கோ அடுத்தது யார் :lol: ?

எனக்கு முழுமுதற் கடவுள்.. ஆனால் எனக்கு முருகனைத்தான் பிடிக்கும். ஏன்னா.. நான் நல்லூர் முருகனையே அதிகம் கும்பிட்டிருக்கிறேன். அடுத்து அம்மனைப் பிடிக்கும். அதிலும் கொழும்பு மயூரபதி அம்மனை ரெம்பப் பிடிக்கும்..! :)

:lol: ஆமா ஆமா முருகனைத்தான் அதுவும் நல்லைக்கந்தனை அல்லவா பிடிக்கும்

நல்லைக்கந்தன் பற்ரி ஒரு கவிதையே எழுதினியள் எல்லோ சீ உங்க தோஸ்த் குருவிகள் அண்ணா எழுதினவர் எல்லோ

ஒருவேளை இவங்க இரட்டைப் பிறவிகளோ :o

அதுசரி மயூராபதியில் கண்ட எந்த அம்மனை பிடிக்கும் தாத்தா?அவாக்கு வெட்கம் எபப்டி :lol:

திருவாதிரை நட்சத்திர நெடுக்காலபோவன் நமக

கற்பூரதீப நீராஞ்சலி சமர்ப்பயாமே

தொட்டு கும்புடுங்கோ...

தெட்சனை மறக்காமல் தாங்கோ அடுத்தது யார் :) ?

:) கோகுலத்து கடவுள் எப்ப தொடக்கம் பூசாரி ஆனவர்? உது என்ன கொடுமை? நல்ல உழைப்பு சுப்பண்ணை :)

எனக்கு முழுமுதற் கடவுள்.. ஆனால் எனக்கு முருகனைத்தான் பிடிக்கும். ஏன்னா.. நான் நல்லூர் முருகனையே அதிகம் கும்பிட்டிருக்கிறேன். அடுத்து அம்மனைப் பிடிக்கும். அதிலும் கொழும்பு மயூரபதி அம்மனை ரெம்பப் பிடிக்கும்..! :lol:

எனக்கும் அம்பாள் என்றால் மிகவும் பிடிக்கும்! பூஜை அறையில் அபிராமி அந்தாதி, மகிசாசுரமர்த்தினி போன்றவை பாட மிகவும் பிடிக்கும்!!! அடுத்து சூரன் போரில் வென்ற திருச்செந்தூர் முருகன் மிகவும் பிடிக்கும்! விநாயகரும் பிடிக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு முழுமுதற் கடவுள்.. ஆனால் எனக்கு முருகனைத்தான் பிடிக்கும். ஏன்னா.. நான் நல்லூர் முருகனையே அதிகம் கும்பிட்டிருக்கிறேன். அடுத்து அம்மனைப் பிடிக்கும். அதிலும் கொழும்பு மயூரபதி அம்மனை ரெம்பப் பிடிக்கும்..! :lol:

முருகனை பிடிக்குமெண்டால் அவரைமாதிரி வாழவும் பிடிக்குமோ :)im0713_tirutani-murugan.jpg

  • கருத்துக்கள உறவுகள்

முருகனை பிடிக்குமெண்டால் அவரைமாதிரி வாழவும் பிடிக்குமோ :lol:

ஆமாம் பிடிக்கும். இரண்டு பெண்களை பக்கத்தில வைச்சுக் கொண்டல்ல. புத்தியால் சித்தி பெற்று வாழப் பிடிக்கும்..!

முருகன் அருகில் வைத்திருப்பது பெண்களை அல்ல. பெண்ணுருவில் காட்டப்பட்டிருப்பினும்.. அவை புத்தியும்.. சித்தியும் (வெற்றி) ஆகும்..! :):lol:

ஆமாம் பிடிக்கும். இரண்டு பெண்களை பக்கத்தில வைச்சுக் கொண்டல்ல. புத்தியால் சித்தி பெற்று வாழப் பிடிக்கும்..!

முருகன் அருகில் வைத்திருப்பது பெண்களை அல்ல. பெண்ணுருவில் காட்டப்பட்டிருப்பினும்.. அவை புத்தியும்.. சித்தியும் (வெற்றி) ஆகும்..! :):lol:

தல..! புத்தியும் சித்தியும் பிள்ளையாருக்கு... !! ஆனால் மன்னன் முருகனுக்கு வள்ளியும் தெய்வானையும்...!!

சரி விடுங்கோ.. சின்ன பெடியன் என்னவாவது செய்யுங்கோ....!!! அறிவுரை சொன்னால் எல்லாம் இப்ப ஏறாது... :lol::):)

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய நட்சத்திரத்துக்கும் எனக்கு பிடித்த கடவுள் தான் வந்திருக்கு .

எனக்கு சிவபெருமான் , அம்பாள் , பிள்ளையார் , முருகன் என்றால் மிகவும் பிடிக்கும் .

தல புத்தியும் சித்தியும் பிள்ளையாருக்கு... !! ஆனால் மன்னன் முருகனுக்கு வள்ளியும் தெய்வானையும்...!!

புத்தியும் , சித்தியும் பிள்ளையாருடையது என்று தான் நானும் கேள்விப்பட்டேன் .

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னமோ தெரியவில்லை, வீட்டுக்கு முன்னால் உள்ள அம்மனை :lol: கும்பிட்டு விட்டு போனால் போன காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னமோ தெரியவில்லை, வீட்டுக்கு முன்னால் உள்ள அம்மனை :unsure: கும்பிட்டு விட்டு போனால் போன காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை.

அந்த அம்மன்ரை பேரை சொன்னால் நானும் மனசாலை கும்புட்டுட்டு வேலைக்கு போவனல்லே :lol:

முருகன் தான் எனக்கும் பிடிக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

தல..! புத்தியும் சித்தியும் பிள்ளையாருக்கு... !! ஆனால் மன்னன் முருகனுக்கு வள்ளியும் தெய்வானையும்...!!

வள்ளியையும், தெய்வானையையும் இச்சாசக்தி, ஞானசக்தி என்று சொல்லுவார்கள்.

இச்சா சக்தி, கிரியா சக்தி என நான் கேள்விப்பட்டுள்ளேன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வள்ளி - இச்சா சக்தி

தெய்வானை - கிரியா சக்தி

வேல் - ஞான சக்தி

என்று வாசித்ததாக ஞாபகம்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஈழத்தில் படிக்கும் காலத்தில் சரஸ்வதியைதான் அதிகம் பிடிக்கும்......

இப்போது சரஸ்வதியை பார்த்தால் ஏதோ விதவை மாதிரி வெள்ளை சேலயை கட்டி கொண்டு நிற்கிற மாதிரி தெரிகின்றது. இப்போது லக்ஸிமிதான் நல்லாய் பிடிக்கும்..... பிங்தான்(pink) எனக்கு பிடிச்ச கலரு.

எனக்கு 100% கந்தப்புக்கு 50% :unsure:

இச்சா சக்தி (வள்ளி) கிரியா சக்தி (தெய்வானை) ஞானசக்தி (வேல்). இவையே முருகன் வைத்திருப்பவை.

இதன் தத்துவம்:

ஒரு செயலை வெற்றியுடன் நிறைவேற்ற அதன் மேல் ஈடுபாடு தேவை (இச்சா சக்தி). ஈடுபாடு மட்டும் இருந்தால் போதுமா? அந்த குறிப்பிட்ட செயலை நிறைவேற்ற தேவையான செயற் திட்டங்களில் ஈடுபடவேண்டும் (இது கிரியாசக்தி). அந்த செயற் திட்டங்களை திறமையாக வடிவமைக்க அறிவும் அனுபவமும் தேவை (இது ஞானசக்தி)

வெற்றியின் சூத்திரத்திற்கு தமிழன் வரைந்த வரைபடம் (Graphical Representation) தான் முருகனின் திருவுருவம்!!!

அத்தோடு வேல் என்பது அறிவுக்கு வரையப்பட்ட சூத்திரம். ஏன் தெரியுமா?

1. அறிவு எப்படி இருக்கவேண்டும்? கூர்மையாக!! - ஆகவே வேலின் முனை கூர்மையாக ^ வரையப்பட்டுள்ளது

2. அடுத்து அறிவு எப்படி இருக்கவேண்டும்? பரந்ததாக!! - ஆகவே வேலின் முனையை அடுத்து வரும் பிரதேசம் பரந்ததாக (^) வரையப்பட்டுள்ளது

3. மேலும் அறிவு எப்படி இருக்கவேண்டும்? ஆழமாக!! - வேலின் தலை பிரதேசத்தை அடுத்து வரும் தண்டு |ஆழமாக கிழிறங்கி செல்கிறது

ஆகவே கூர்மை மிகுந்த, பரந்த, ஆழமான அறிவுடன் இச்சா சக்தியும் (ஈடுபாடும்) கிரியா சக்தியும் (செயற்திறனும்) சேர்ந்தால் வெற்றி நிச்சயம் என்பதையே முருகனின் திருவுருவம் காட்டி நிற்கிறது

One picture is equal to thousand words என்று ஆங்கிலத்தில் சொல்வதுண்டு இதையே இந்துக்களின் இறைவடிவங்கள் பல காட்டி நிற்கின்றன!!!

வெற்றிவேல் எப்போதும் வெற்றியையே கொண்டுவரும்! மிகுந்த தைரியமும் தரும் என்பது ஐதீகம்!!!

Edited by vettri-vel

  • கருத்துக்கள உறவுகள்

தல..! புத்தியும் சித்தியும் பிள்ளையாருக்கு... !! ஆனால் மன்னன் முருகனுக்கு வள்ளியும் தெய்வானையும்...!!

சரி விடுங்கோ.. சின்ன பெடியன் என்னவாவது செய்யுங்கோ....!!! அறிவுரை சொன்னால் எல்லாம் இப்ப ஏறாது... :unsure::lol::o

நல்லது சொன்னா நாங்களும் கேட்பமாக்கும்..!

சித்தியும் புத்தியும் விநாயகரின்.. பக்க பலமாக மட்டுமன்றி.. முருகனிடத்திலும் அவையே இச்சா சக்தி கிரியா சக்தி என்று அமைகின்றன என்று ஒரு சமயப் பேச்சாளர் பேசக் கேட்டிருக்கிறேன். அதன்படிதான் எழுதினேன். பலர் நினைப்பது போல.. முருகன் இரண்டு பொண்டாட்டிக் காரன் என்று காட்டுவதற்கல்ல.. அந்தத் திருத்தோற்றம். நேரடியாக சித்தி புத்தி விநாயகரின் பக்க பலம் என்பது உண்மை. :(

Edited by nedukkalapoovan

இணைப்பிற்கு நன்றி நுணா அண்ணா :lol: ,

பார்த்தியளே சித்தப்பு..எனக்கு யார் வந்திருக்கிறார் தெரியுமோ..சாட்சா ராமர்..(விஷ்ணு பெருமான்) :o ..எப்பவுமே நான் இராமன் தானே அது தான் பாருங்கோ..எனக்கும் விஷ்ணுவிற்கு ஏதோ தொடர்பு இருக்கிறது எண்டு மட்டும் விளங்குது அது என்னவெண்டு தான் விளங்கள்ள சித்தப்பு.. :lol:

ஒண்ணு செய்வோமோ..விஸ்ணுவிற்கு எனக்கு ஒரு பாலம் அமைப்பொமா அது தான் "ஜம்மு பாலம்" எப்படி இருக்கு உந்த யோசனை... :huh:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா சாமி "பொக்கட்டில" இருக்கனும் மனசில நிம்மதி இருகனும்" :wub:

அப்ப நான் வரட்டா!!

திருவாதிரை நட்சத்திர நெடுக்காலபோவன் நமக

கற்பூரதீப நீராஞ்சலி சமர்ப்பயாமே

தொட்டு கும்புடுங்கோ...

தெட்சனை மறக்காமல் தாங்கோ அடுத்தது யார் ?

அடுத்து..வேற யார் நான் தான்..தான்..பக்கத்து வீட்டு பொண்ணு கோத்திரம் வந்து அனுசம் நாமம் வந்து அனுஷா :lol: ..அம்பாளிற்கு நன்னா ஆராதனை காட்டுங்கோ.. :huh:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.