Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்கள் சந்திப்பும் சில பேய்க்கதைகளும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நதி புளொக்கிலிருந்து மேற்படி கட்டுரையை இணைக்கிறேன்.

பெண்கள் சந்திப்பும் சில பேய்க்கதைகளும்

“கேட்ட கேள்விக்குப் பதில் இல்லையெனில் மௌனமாய் இருக்கப் பழகுவது நல்லது”என்ற கவிதை வரிகளை, பெண்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோது எவ்வாறு மறந்திருந்தேன் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கும்போது என்மீதே ஆயாசம் பொங்குகிறது. உரிமைகளைக் குறித்துப் பேசக் கூடிய கூட்டத்திலும் பேச்சுரிமை என்பது தனிநபர்களின் செல்வாக்கு, அவர்களுடைய பின்புலம், சமூகத்தினால்(அன்றேல் அவர்களாலேயே) கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்கள் சார்ந்தது என்பதை அறியநேர்ந்ததில் வருத்தமே.

முற்கூட்டிய தீர்மானங்களுடன் இப்பதிவினை வாசிக்க முனைபவர்கள் தயவுசெய்து வேறு பக்கத்தைக் கிளிக்கிட வேண்டுகிறேன். பெண்கள் சந்திப்பில் நிகழ்ந்ததுபோல – அரசுசாரா நிறுவனங்களின் புள்ளிவிபரங்களினையொத்த விமர்சனக்கட்டுரையன்று இது. ஆதலால் நேரடியாகவே விடயத்திற்குள் இறங்குகிறேன்.

புலிகள் புனிதர்கள்: விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையும் விசுவாசமும் எனக்கில்லை. ஆனால், ஈழம் குறித்த எந்தவொரு அரசியல் அறிவும் தெளிவும் அற்ற ஒருவர் பெண்கள் சந்திப்பிற்குச் சமூகமளித்திருப்பாரேயாகில் கீழ்க்காணும் முடிவுகளுடனேயே அவ்விடத்தை விட்டு நீங்கியிருப்பார்.

1.வன்னியில் இருக்கும் புலிகளுக்கு தங்கள் கருத்துக்களுடன் முரண்படுபவர்களைக் கொன்றுகுவிப்பதன்றி வேறெந்தப் பணிகளும் இல்லை.

2.இலங்கையில் நடந்துகொண்டிருப்பது சகோதரச் சண்டையன்றி இனப்பிரச்சனையல்ல.

3.புலிகளுடன் வாழ்வதைக் காட்டிலும் சிங்கள பௌத்த அரச அதிகாரத்தின் கீழ் வாழ்வது எளிது.

4.அரசியல், சமூக அறிவற்ற முட்டாள்களை போராட்டம் உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது.

‘பெண்கள் சந்திப்பு’என்று இவ்வொன்றுகூடலுக்குப் பெயரிட்டதன் பொருத்தப்பாட்டினை என்னவென்பது?

இலங்கையிலிருந்து நிவேதா, இந்தியாவிலிருந்து மாலதி மைத்ரி, சுவிசிலிருந்து ‘ஊடறு’றஞ்சி,இலண்டனிலிருந்து நிர்மலா ராஜசிங்கம், அமெரிக்காவிலிருந்து மோனிக்கா, பிரான்சிலிருந்து தேவதாஸ், குறமகள், ஜானகி பாலகிருஷ்ணன், ஜோதி பிரபாகரன், சுதா குமாரசாமி, பார்வதி கந்தசாமி, விஜி, யுவனிதா நாதன் ஆகியோர் கலந்துகொண்டு ஆக்கங்களை வழங்கிய இக்கூட்டத்தின் ‘கட்டுப்பாட்டாளராக’த் தொழிற்பட்டவர் நிர்மலா ராஜசிங்கமே.

அரசியல் ‘ஞானம்’ பொருந்திய அறிவுஜீவியும்- பெண்ணிய ஆய்வாளரும்- தனது கருத்துக்களை வெளிப்படுத்துமளவிற்கு தமிழ் தகைமையுடைத்ததன்று என்ற கருத்தினாலோ என்னவோ அடிக்கடி மேட்டுக்குடி மொழியென நம்பப்படும் ஆங்கிலத்திற்குத் தாவிவிடுகிறவருமான நிர்மலாவின் ‘உரத்த’ குரல் பலருடைய கேள்விகளை விழுங்கிச் செரித்தது. ‘பேச்சுரிமை’, ‘கருத்துரிமை’, ‘வாழ்வுரிமை’ இன்னபிற புண்ணாக்குகளைப் பற்றி இத்தகையோர் பேசிக்கொண்டிருப்பது வியப்பளிக்கிறது. நேர மட்டுறுத்தல் மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படவேண்டுமென இக்கூட்டத்தை ஒழுங்கமைத்த சுமதி ரூபனால் ஆரம்பத்தில் சொல்லப்பட்டிருந்தபோதிலும், நேரம் செல்லச் செல்ல அதை அவரே மறந்துவிட்டதாகத் தோன்றியது. குறிப்பாக நிர்மலா பேசியபோதெல்லாம் கடிகார முட்கள் அசையாது நின்றன. தனது சகோதரியின் கவிதைகளை ஆனந்தித்து வாசித்தபோதும், ஒரு நொடியில் பதில் சொல்லியிருக்கக்கூடிய ‘எத்தனையாம் ஆண்டு நீங்கள் இயக்கத்தில் இருந்தீர்கள்?’என்ற கௌசல்யாவின் கேள்விக்கு அவர் தன்வரலாறு உரைத்தபோதும் காலம் உறைந்துபோயிற்று. ‘தேசியவாதமும் பெண்ணியமும்’என்ற தலைப்பின் கீழ் பேசுகிறேன் பேர்வழி என்று கிளம்பி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது பெண்களை எவ்வாறு அஞ்ஞான இருளுள் கட்டிக்காத்து வருகிறது என்று பேசியபோது முரளி கீழ்க்கண்டவாறு கேட்டார். “நீங்கள் தமிழீழத் தேசியவாதமும் பெண்ணியமும் என்றல்லவா இவ்வுரைக்குத் தலைப்பிட்டிருக்கவேண்டும்?” - கூட்டத்தின் தலைப்பே பொருத்தமற்றிருக்கும்போது, உரையின் தலைப்பைக் குறித்தெல்லாம் யாரையா கவலைப்படப்போகிறார்கள்? நிர்மலாவை நோக்கி வைக்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் ‘நீ அப்பனைப் பற்றிக் கேட்டால் நான் சுப்பனைப் பற்றித்தான் பேசுவேன்’என்ற பாணியிலேயே அவரது பதில்கள் அமைந்திருந்தன.

ஆகஸ்ட் 3ஆம் திகதிய அமர்வில் நிர்மலா தனது உரையை ஆரம்பித்த விதமே அலாதியானது. ‘இந்தச் சந்திப்பானது ஒருபக்கச்சார்பாகப் போய்க்கொண்டிருக்கிறது@ இங்கே புலிகளின் அராஜகம் பற்றித்தான் பேசப்படுகிறதேயன்றி, அரசபயங்கரவாதம் கவனமாக மறக்கப்பட்டிருக்கிறது’என்ற

சாந்தி அக்கா மனநிலை பிறழ்ந்தவர்களை பற்றி பேசுவதால் என்ன பயன் கிடைக்கப் போகிறது.

மனநோயாளிகளை உசுப்பி விட்டால் என்ன பேசுகிறோம் என்பதையோ தாங்கள் வாழும் சூழலின் யதார்த்தம் என்ன என்பதையோ உணராமல் கண்டபடி வாய்க்கு வந்தபடி பேசுவார்கள்.

உண்மையில் மனப்பிறழ்வு அல்லது மனச்சிதைவு நோய்க்கு உள்ளாகியிருக்கும் இந்த மேட்டக்குடி அம்மணிகளுக்கு உண்மையான பெண்ணியம் என்றால் என்ன? பெண்விடுதலை என்பது என்ன என்பது பற்றி எல்லாம் நீங்கள் என்னதான் காட்டுக் கத்தல் கத்திச்; சொன்னாலும் விளங்கப்போவதில்லை. சிறீலங்கா அரச புலனாய்வுத்துறை பணம் கொடுத்து பக்கபலமாக இருந்து மேடை போட்டுக்கொடுக்கிறது. தவளை மாதிரி அதுவும் கிணற்றுத் தவளையாக இருந்து கத்துகிறார்கள்.இன்னும் எத்தனை காலம் கத்துவார்கள்.நோய் முற்றி கைவிடப்பட்ட ஜென்மங்களாக தெருவில் அலையாமல் இருந்தால் சரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம் நல்லதொரு விமர்சனம்இணைத்தற்கு நன்றி சாந்தி. நாங்கள் புரட்சியாளர்கள், புதுமைவாதிகள் என்றால் வித்தியாசமாக எதையும் சொல்லவேண்டும் என்ற மனநோய் கொண்டவர்கள் தான் இவர்கள். ஆனால் ஒரு விடயம், புலியை ஆதரித்தல் என்பதை விட எதிர்த்தால் பிரபல்யம் அடையலாம் என்பதே இவர்களின் சிந்தனை.

அந்தப் பிரபல்யம் அடைவதற்காக என்ன வேண்டுமானாலும் பிதற்றுவார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல வருடங்களுக்கு முன்னர், மார்புக்கச்சை கட்டுவதை தவிர்ப்பதன் மூலம் பெண்கள் உரிமையை பேணிக் காக்கலாம் என்று தமிழ்ப் பெண்களுக்கு அறிவுறுத்தியவர்தான் இந்த நிர்மலா. இந்த மறை கழண்டதை ஒரு சிலரைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் கவனத்தில் எடுக்கவில்லை. நல்லவேளை நிர்மலாவை பின் பற்றியிருந்தால், மார்புக்கச்சையை மட்டுமல்ல அவர்களது துணைவர்கள உட்பட வேறு என்ன என்னவோ எல்லாம் கழற்ற வேண்டியிருந்திருக்கும்.

இங்கே கவனிக்கத்தக்க விடயம் என்னவெனில். ஒப்புக்கேனும் பெண்கள் உரிமை சம்பந்தமாக ஒரு கூட்டத்தைத்தானும் நடாத்த மற்றய பெண்கள் தயாராய் இல்லாதபோது, இவர்கள் அந்த இடைவெளியை நன்றாக பயன்படுத்துகிறார்கள்.

மற்றய பெண்கள் "கோலங்கள்" பார்த்து கண்ணையும் மனசையும் கெடுக்கிறதை விட்டுட்டு தமிழ்நதி போல் தட்டிக் கேட்க வேண்டும்.

Edited by MI7

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களுக்கு முன்னர், மார்புக்கச்சை கட்டுவதை தவிர்ப்பதன் மூலம் பெண்கள் உரிமையை பேணிக் காக்கலாம் என்று தமிழ்ப் பெண்களுக்கு அறிவுறுத்தியவர்தான் இந்த நிர்மலா. இந்த மறை கழண்டதை ஒரு சிலரைத் தவிர வேறு எந்தப் பெண்ணும் கவனத்தில் எடுக்கவில்லை. நல்லவேளை நிர்மலாவை பின் பற்றியிருந்தால், மார்புக்கச்சையை மட்டுமல்ல அவர்களது துணைவர்கள உட்பட வேறு என்ன என்னவோ எல்லாம் கழற்ற வேண்டியிருந்திருக்கும்.

இங்கே கவனிக்கத்தக்க விடயம் என்னவெனில். ஒப்புக்கேனும் பெண்கள் உரிமை சம்பந்தமாக ஒரு கூட்டத்தைத்தானும் நடாத்த மற்றய பெண்கள் தயாராய் இல்லாதபோது, இவர்கள் அந்த இடைவெளியை நன்றாக பயன்படுத்துகிறார்கள்.

மற்றய பெண்கள் "கோலங்கள்" பார்த்து கண்ணையும் மனசையும் கெடுக்கிறதை விட்டுட்டு தமிழ்நதி போல் தட்டிக் கேட்க வேண்டும்.

பதில் எழுதத்தான் நினைச்சன் எழுதினாலும் வெட்டிப்போடுவாங்கள் அதாலை மனசுக்குள்ளை சிரிச்சிட்டு மெளனமாய் போயிடுறன். :(:D:D

  • கருத்துக்கள உறவுகள்

இனைப்புக்கு நன்றிகள் ..இப்ப எல்லாம் சிலர் நினக்கினம் புலிகளை பற்றி எதாவது தப்பா சொன்னத்தான் தங்களுக்கு புகழ் கிடைக்கும் என்று....

  • கருத்துக்கள உறவுகள்

இனைப்புக்கு நன்றிகள் ..இப்ப எல்லாம் சிலர் நினக்கினம் புலிகளை பற்றி எதாவது தப்பா சொன்னத்தான் தங்களுக்கு புகழ் கிடைக்கும் என்று....

ஏதோ குரைக்குது என்கிறீர்கள்............என்ன புத்தன்

பிரபலமாக இது ஒரு வழியா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நதி,

எங்கள் இனமே ஒரு இனவாத அரசின் கொடூரங்களுக்குள் சிக்கிக் கிடந்து,

வாழ்க்கைக்காகத் தினம் தினம் போராடிக் கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில்,

புலம் பெயர் தேசங்களில் வந்து எங்கள் வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொண்டவுடன்

தாயகமக்களின் குறிப்பாக பெண்களின் வாழ்வுபற்றித் தெரிந்த விடயந்தானே,

ஆதலால்,

நாம் பெண்களுக்கு எதிரான இனவாத அரசபடைகளின் வன்முறைகளைப்பேசாது,

பெண்களுக்கெதிரான மற்றைய வன்முறைகளைப் பேசுவோம் என்று

கண்ணெதிரே ஒவ்வொரு மணித்துளியும் தமிழீழப்பகுதியில்,

இனவாத அரசின் வன்முறைகளுக்கு உள்ளாகும் பெண்களுக்காக குரல் கொடுக்காது விட்டுவிட

நாங்கள் ஒன்றும் புண்ணாக்குத் தின்னிகள் அல்ல,

மனிதர்கள் அதிலும் ஒரு ஒடுக்கப்படும் இனத்தின் உயிர்ச்சிதறல்கள்.

மார்புக் கச்சையை பிடுங்கி எம்மினத்துப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திச்

சிங்கள இராணுவர்கள் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கும் பொழுதில்

மார்புக் கச்சையைக் கழட்டிவிட்டு அதுவே பெண்கள் சுதந்திரம் என்று பேசும்

மானங்கெட்ட பிழைப்புகளுடன் சங்கம் வைத்துச் சல்லாபிக்க!!!

எங்களுக்கு அவசியம் இல்லை.

ஒருவேளை,

பெண்ணியம் என்பதற்கு எமக்கு அர்த்தம் தெரியாமல் உள்ளது என்று எவரேனும் நினைக்கக் கூடும்.

நினைத்தாலும் எம்போன்றவர்கள் கவலைப் படப்போவதில்லை.

வேதங்களை ஓதிக் கொண்டு வீதியிலே அம்மனை அம்மணமாக விடுவதற்கு

நாங்கள் நாகரீமற்ற காட்டுமிராண்டிகள் அல்ல.

பேச்சளவில் மாநாடு வைத்து ஒப்புக்குக் கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதிவிட்டு,

காணாமல் போய் மீண்டும் இன்னொரு சந்திப்பில் எத்தகைய கட்டுரையை எழுதலாம் என்றிருப்பவர்களல்ல நாம்.

அக்கையும், தங்கையும் பக்கத்துவீட்டுப் படித்த தோழியும்

எம்நாட்டில் இனவாத சிங்கள இராணுவ வெறியர்களுக்கு மத்தியில் வாழ்க்கையை அல்லாடி அல்லாடி

வாழ்க்கைச்சுழலில் மாய்வதைத் தடுக்கக் காப்புச் சுவர்களாய் எழுவதே எங்களுக்கானதான இன்றையநிலை.

எம் வீட்டில் சாவு.... எதிர் வீட்டில் போய் நிர்வாணக்கூத்துப் பார்க்க எம்மால் முடியாது.

இனம், மொழி, நாடு என்று அத்தனையையும் அப்பால் தள்ளிவிட்டு,

அம்மணமாய் திரிவதற்கு நாங்கள் நிர்வாணிகள் அல்ல.

விடுதலைப்புலிகள் பெண்களைத் துன்புறுத்துகிறார்கள் என்று ஏதோ ஒருசில வேதாளங்கள்

27பேர் உள்ள அவையில் கூக்குரலிடலாம்.

வேதாளங்களுக்கு முருங்கைகளைத் தவிர வேறென்ன தெரியும்?

விடுதலைப் புலிகளின் தாயகப் போராட்டமே,

நீண்ட காலமாக அடுப்படியில் நெருப்பிற்குள் தீய்ந்தும்,

படுக்கையறையில் ஆணியத் திமிருக்குள் மிதியுண்டும் கிடந்த பெண்களை

வெளியே தலைநிமிர்த்தி ஆண்களுக்கும் ஆணையிடும் ஆளுமையை பெண்களுக்குக் கொடுத்துள்ளது

என்பது இந்த உலகமே அறிந்த உண்மை.

இந்நிமிர்வைப் பற்றி அறியாத அல்லது

அறியவில்லை என்று அடம் பிடிக்கும் சிலரின் ஊனக்கண்களை என்ன என்பது?

கட்டுரைகளை எழுதத் தெரியும் என்பதற்காக யதார்த்தங்களை மூடி மறைத்து

தத்தமக்குச் சாதகமாக எழுத நினைத்தலே அவர்களை அடையாளங்காட்டும் கண்ணாடி என்பதே உண்மை.

இந்தியாவில் அதிகம் பேசப்படும் 'தலித்" அண்மைக் காலங்களில் எம்ஈழத்து மாற்றுக் கருத்தாளர்களிடையே அதிகம் பேசப்படுகிறது.

இவர்கள் எந்த யுகத்தில் இருக்கிறார்கள்?

இந்தியாவில் உள்ளது போன்று எம் ஈழத்தில் சாதிப்பிரிவினைகள் அதிகம் இல்லை.

அதிலும் இன்றைய ஈழப்போராட்டம் சாதிகள் என்கின்ற

இழிநிலைகளைக் கடந்து எங்கோ வளர்ந்து சென்று கொண்டிருக்கிறது.

இதை உணராமல் எழுபதுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சிலர்

ஏதோ புலம்புகிறார்கள் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

தமிழ்நதி,

இந்த ஆரோக்கியமிழந்த சிலரின் அலட்டல்களை கேட்பதற்காக உங்களின் நேரத்தையும்,

நல்ல மனநிலையையும் பறி கொடுத்துள்ளீர்கள் அதற்காக அனுதாபப்படுகிறேன்.

Edited by valvaizagara

இப்படியான ஆக்கள் வெளினாடுகளில் இயங்கும் இலங்கையரசு ஆதரவு(பணம்) கூட்டங்கள்.

அத்துடன் வெளினாட்டு பெண் ஒட்டுக்குழுக்களாக இருக்கலாம்....

இதிலிருந்து தமிழ் மக்கள் தங்களுக்குள் மிக அவதானமாக இருக்கவேண்டும்...

எதிரி எவ்வளவுக்கு நிர்கதியான ஒரு இனத்திற்குள் ஊடுருவி ஆட்டிப்படைக்கிறான்

என்பதை புரிந்து மற்றையவர்களுக்கும் உசாராக வைத்து இருங்கள்....

இவர்கள் நடவடிக்கைகளும் தொடர்சியாக அவதானிக்கப்பட்வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

valvaizagara

மார்புக் கச்சையை பிடுங்கி எம்மினத்துப் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திச்

சிங்கள இராணுவர்கள் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கும் பொழுதில்

வல்வைசகாரா இப்பதானே புரியிது நிர்மலா ஏன் மார்புக்கச்சை அணிவதுகூட தமிழ் பெண்களிற்கு அடிமைத்தனம் என்று சொன்னாரெண்டு காரணம் சிங்கள இராணுவத்திற்கு அதை புடுங்கிற வேலையை கூட சுலபமாக்கிறதுக்காகத்தான் அணிய வேண்டாம் என்டு சொல்லியிருக்கிறார்.மட்டக்க

வல்வைசகாரா இப்பதானே புரியிது நிர்மலா ஏன் மார்புக்கச்சை அணிவதுகூட தமிழ் பெண்களிற்கு அடிமைத்தனம் என்று சொன்னாரெண்டு காரணம் சிங்கள இராணுவத்திற்கு அதை புடுங்கிற வேலையை கூட சுலபமாக்கிறதுக்காகத்தான் அணிய வேண்டாம் என்டு சொல்லியிருக்கிறார்.மட்டக்க
  • கருத்துக்கள உறவுகள்

அட அந்த நிர்மலாவா இது :lol: பாவிகள்

  • கருத்துக்கள உறவுகள்

அட அந்த நிர்மலாவா இது :icon_idea: பாவிகள்

ஏன் சஜீவன் இந்த நிர்மலாவை உங்களிற்கு ஏற்கனவே தெரியுமா?? :rolleyes::(

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சஜீவன் இந்த நிர்மலாவை உங்களிற்கு ஏற்கனவே தெரியுமா?? :wub::lol:

அய்யோ ஆளை விடுங்கோ சாமி :o

அட அந்த நிர்மலாவா இது :) பாவிகள்

சொல்லுறதை பார்த்தா..சகிவன் தாத்தாவிற்கு பல நிர்மலாக்களை தெரியும் போல இருக்கு.. :lol: (என்ன கொடுமை இது நிர்மலா).. :wub:

அப்ப நான் வரட்டா!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.