Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளாலியில் ஊடுருவித் தாக்குதல் - 21 படையினர் பலி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஞாயிறு அதிகாலை கிளாலியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் ஆழ ஊடுருவி விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 21 படையினர் கொல்லப்பட்டதை யாழ்ப்பாண சிறீலங்கா படைத்தரப்பு ஒத்துக் கொண்டுள்ளது. உயிரிழந்த 14 படையினரின் உடலங்கள் பலாலி தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இத்தாக்குதலில் 2 பெண் போராளிகள் வீரமரணமடைந்து அவர்களின் உடலங்கள் யாழ் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தமை ஏலவே அறிவிக்கப்பட்ட செய்தியாகும்.

இத்தாக்குதல் குறித்து விடுதலைப்புலிகள் தரப்பு இதுவரை எந்த அறிவிப்பையும் விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-------------

Tiger penetration attack kills 21 SLA in Northern Front

[TamilNet, Tuesday, 12 August 2008, 11:44 GMT]

Twenty-one Sri Lanka Army (SLA) soldiers were killed in the early hours of Sunday at Ki'laali in the Northern Front when Liberation Tigers of Tamileelam (LTTE) 'Deep Penetration Units' entered the SLA controlled territory and launched an attack on SLA troopers, according to well-placed Sri Lankan military sources.

The SLA sources said 14 dead bodies were transferred to Palaali base and that two female commandos of the LTTE penetration unit were killed in the clash.

The LTTE is yet to issue details on the clash.

  • Replies 72
  • Views 10.7k
  • Created
  • Last Reply

இச்சம்பவம் பற்றி பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட செய்தி:

LTTE receives heavy beating at Kilali defences: 15 terrorists killed, many injured [updated]

At least 15 LTTE terrorists were killed and twice as numbers injured when troops forced into LTTE forward defence lines at Kilali, Jaffna on Sunday (August 10) at around 4a.m.

The 53 Division troops stormed into LTTE forward defence lines (FDLs) in an early hour surprise assault forcing terrorists to flee with heavy casualties. 15 terrorists were killed and many others injured in the confrontation, military said citing intercepted LTTE communication.

Troops have later returned towards initial positions after holding the LTTE bunkers during the offensive drive as military claimed the mission objectives were successfully achieved.

No damages were caused to own troops during the limited operation, military said.

மனம் தளர்ந்து போயுள்ள புலத்து தமிழர்களுக்கு தெம்பு கொடுக்க முற்படுகிறது தமிழ்நெட்!

தமிழ்நெட்டாவது இப்படியான தாக்குதல்களை நடத்தட்டும்!!

வாழ்த்துக்கள் தமிழ்நெட்!!!

கிளாலியில் விடுதலைப் புலிகள் ஊடுருவித் தாக்குதல் – 21 படையினர் பலி

யாழ் முன்னரங்க நிலைகளில் ஒன்றான கிளாலிக்குள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் சிறீலங்கா படைகள் தரப்பில் 21 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட படையினரின் 14 உடலங்கள் பலாலி படைத்தளம் ஊடாகக் கொழும்பிற்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக, படை உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.tamilseythi.com/tamileelam/21-s...2008-08-12.html

  • கருத்துக்கள உறவுகள்

மனம் தளர்ந்து போயுள்ள புலத்து தமிழர்களுக்கு தெம்பு கொடுக்க முற்படுகிறது தமிழ்நெட்!

தமிழ்நெட்டாவது இப்படியான தாக்குதல்களை நடத்தட்டும்!!

வாழ்த்துக்கள் தமிழ்நெட்!!!

நெல்லையன்,

எதை வைத்து தமிழ்நெட் மீது இப்படி ஒரு தாக்குதலை நீங்கள் மேற்கொள்கிறீர்கள். சிங்கள இராணுவ அறிக்கையை நம்பியா அல்லது விடுதலைப் புலிகள் அறிக்கை விடாததால் செய்தி பொய்யென நினைக்கிறீர்களா?

நான் அறிந்த வரை இதுவரை தமிழ்நெட் உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டதாகத் தெரியவில்லை. ஏதாவது உங்களால் உதாரணம் காட்டமுடியுமா?

கிழக்கில் நடந்த கிளைமோர் தாக்குதலில் 23 படையினர் பலியானதாக தமிழ்நெற் செய்தி வெளியிட்டது. ஆனால் அது எந்த தமிழ் ஊடகத்திலும் வரவில்லை. விடுதலைப் புலிகளும் அப்படி ஒரு அறிக்கையை விடவில்லை.

இப்பொழுது கிளாலியில் 21 படையினர் பலியாம். நவ்வி, குஞ்சுக்குளத்தில் 12 படையினர் பலியானது பற்றி தெரிவித்த புலிகள் இது பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. வேறு தமிழ் இணையத்தளங்களிலும்வரவில்லை.

தமிழ்நெற்றுக்கு என்ன ஆனது? அல்லது தமிழ்நெற் சொல்வது உண்மையென்றால், இந்தச் செய்தியை வெளியிடாத புலிகளுக்கு என்ன ஆனது? அல்லது தமிழ் இணையத்தளங்களுக்கு என்ன ஆனது?

யாருக்கு என்ன ஆனது என்று யாராவது சொல்லுங்களேன்!

சபேசன் அண்ணா நீங்கள் தெரிந்து தான் கதைகிறிங்காளா?

மட்டக்களப்பு தாக்குதல் நடைபெற்றது உண்மை இராணுவம் 1 வருர் என்று தான் சொல்லி இருந்தார்கள் ஆனால் தமிழ் நெற் 23 என்று சொன்னது உண்மை என்றே நான் நினைக்கிறேன்..

இல்லை என்று சொல்ல்வதுக்கு சரியான ஒரு காரணம் சொல்லுங்கள்....

உண்மையில் தமிழ் நெற் தமிழ் நாதம். புதினம் இவர்களின் தேன் நிலவுஎல்லாம் முடிந்து விட்டது..

இப்போதைக்கு இவர்கள் எடுத்த முடிவு சேர்ந்து செயற்ப்படுவது இல்லையாம் தமிழ்த்தேசியத்துக்கும் புலிகளுக்கும் விசுவசமாக இருப்ப்பது தானாம்.

அதாவது புருசனும் பொண்சாதியும் பிரிச்சு தான் படுப்பர்கள் பிள்ளைமட்டும் வருசம் வருசம் பெறுவார்கள் அந்த பிள்ளைக்கு அப்பா யார் அது தமிழ்த்தேசியம்..........

கண்ட கண்ட சிங்கள ஊடகங்களின் செய்திகளை தமிழாக்கம் செய்து போடுவினம் ஆனா தமிழ்நெற்றின் செய்தி தொடக்கூடாத பொண்டாட்டியாம்..............

இந்த கூத்தை எங்கை சொல்லுவது..................

இதை எல்லாம் சொல்ல நான் யாரா?

கருணாவின் பி ஏ

கிழக்கில் நடந்த கிளைமோர் தாக்குதலில் 23 படையினர் பலியானதாக தமிழ்நெற் செய்தி வெளியிட்டது. ஆனால் அது எந்த தமிழ் ஊடகத்திலும் வரவில்லை. விடுதலைப் புலிகளும் அப்படி ஒரு அறிக்கையை விடவில்லை.

இப்பொழுது கிளாலியில் 21 படையினர் பலியாம். நவ்வி, குஞ்சுக்குளத்தில் 12 படையினர் பலியானது பற்றி தெரிவித்த புலிகள் இது பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. வேறு தமிழ் இணையத்தளங்களிலும்வரவில்லை.

தமிழ்நெற்றுக்கு என்ன ஆனது? அல்லது தமிழ்நெற் சொல்வது உண்மையென்றால், இந்தச் செய்தியை வெளியிடாத புலிகளுக்கு என்ன ஆனது? அல்லது தமிழ் இணையத்தளங்களுக்கு என்ன ஆனது?

யாருக்கு என்ன ஆனது என்று யாராவது சொல்லுங்களேன்!

சபேசன் மற்றைய தமிழ் இணையத் தளங்கள் செய்திகளை வெளியிடவில்லையென்றால் தமிழ்நெட்டின் செய்தியில் உண்மையில்லை என்று நினைக்காதீர்கள்.

மட்டக்களப்பில் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு விடுதலைப் புலிகள் இதுவரை உரிமை கோரவேயில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். கிளைமோர் தாக்குதல் நடைபெற்றமையை படைத்தரப்பே அறிவித்தது.

அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்கள் குறித்த செய்திகள் உடனுக்குடன் வெளிவருகின்றன. அதற்குக் காரணம் அங்கேயிருக்கும் புலிகளின் கட்டமைப்பு. அம்பாறை வனப்பகுதியில் போராளிகள் போராளிகளாவே செயற்படுகிறார்கள். தாக்குதல்கள் நடத்தப்பட்டால் அவற்றை தலைமைக்கோ ஊடகங்களிற்கோ அறிவிக்கும் வசதிகள் அவர்களிற்கு இருக்கிறது. மட்டக்களப்பில் இந்த நிலை இருக்காது. மக்களோடு மக்களாக இருந்து செயற்படும் போராளிகள் படையினருக்கு எதிரான தாக்குதல்களை நடத்திவிட்டு அத்தாக்குதல்கள் பற்றிய விபரங்களை சந்தர்ப்பம் கிடைக்கும்போதே தலைமைக்கு அறிவிக்க முடியும். அவ்வாறு உடனடியாகத் தலைமைக்கு அறிவிக்கும் வசதியிருந்தாலும் கிளைமோர் தாக்குதலை நடத்திய போராளியால் இலக்குத் தாக்கப்பட்டது என்பதை மட்டுமே அறிவிக்க முடியும். அவர் தாக்குதல் நடந்த இடத்தில் நின்று படையினரின் இழப்பை கணக்கிட முடியாது. தாக்குதல் முடிந்தவுடன் அவர் தன்னைப் பாதுகாக்க துரிதகதியில் அங்கிருந்து வெளியேறவேண்டும்.

எனவே கிளைமோர் தாக்குதல்களில் ஏற்படும் இழப்புக்களின் விபரம் படைத்தரப்பிற்கு மட்டும்தான் முழுமையாகத் தெரியும். எனவே படைத்தரப்பலிருந்து கசியப்பெற்ற செய்தியைத் தமிழ்நெட் வெளியிட்டிருக்கலாம். நன்றாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாகவே தமிழ்நெட் அந்தச் செய்தியில் குறிப்பிட்டது.

இதேவேளை கிளாலித் தாக்குதல் புலிகளின் அழ ஊடுருவும் அணியின் தாக்குதலென தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி புலிகள் இதுவரை உரிமை கோராமை அவர்களின் வழமையான செயற்பாடின் ஒரு அங்கமாக இருக்கலாம். அதாவது புதிதாக களமிறங்கும் படையணி சில தாக்குதல்களை நடத்திய பின்னரே அத்தாக்குதல்கள் குறித்த அறிவிப்பை வெளியிடுவது. இந்தச் செய்தியில் தமிழ்நெட் படைத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டியிருக்கிறது.

படைத்தரப்பினால் அதிகாரப+ர்வமாக வெளியிடப்படாத தகவல்களையோ அல்லது சில முக்கய தகவல்களையோ அவற்றுடன் தொடர்புடைய வட்டாரங்களிலிருந்து பெறக்கூடிய வல்லமை தமிழ்நெட்டைத் தவிர வேறு எந்தத் தமிழ் ஊடகத்திடமும் குறிப்பாக இணையத்தளங்களிடம் இல்லை. என்பது குறிப்பிடத்த தக்கது.

Edited by மின்னல்

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் நடந்த கிளைமோர் தாக்குதலில் 23 படையினர் பலியானதாக தமிழ்நெற் செய்தி வெளியிட்டது. ஆனால் அது எந்த தமிழ் ஊடகத்திலும் வரவில்லை. விடுதலைப் புலிகளும் அப்படி ஒரு அறிக்கையை விடவில்லை.

இப்பொழுது கிளாலியில் 21 படையினர் பலியாம். நவ்வி, குஞ்சுக்குளத்தில் 12 படையினர் பலியானது பற்றி தெரிவித்த புலிகள் இது பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. வேறு தமிழ் இணையத்தளங்களிலும்வரவில்லை.

தமிழ்நெற்றுக்கு என்ன ஆனது? அல்லது தமிழ்நெற் சொல்வது உண்மையென்றால், இந்தச் செய்தியை வெளியிடாத புலிகளுக்கு என்ன ஆனது? அல்லது தமிழ் இணையத்தளங்களுக்கு என்ன ஆனது?

யாருக்கு என்ன ஆனது என்று யாராவது சொல்லுங்களேன்!

அப்போ சபேசனின் வன்னி செய்தியாளருக்கு இச்செய்தி எட்டவில்லையோ? :icon_idea:

ஒரே குளப்பமா இருக்கு....

போரில் முன்னேற்றம் கண்டுவரும் அரசு பொய்தகவல் வழங்குவதை குறைத்துக் கொண்டுள்ளது!

போரில் முன்னேற்றம் கண்டுவரும் அரசு பொய்தகவல் வழங்குவதை குறைத்துக் கொண்டுள்ளது!

அப்பிடியா?????????????????????????????????????????????????????????????????

இப்போதைக்கு இராணுவத்தினை நீளக் கயிற்றில் விட்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போரில் முன்னேற்றம் கண்டுவரும் அரசு பொய்தகவல் வழங்குவதை குறைத்துக் கொண்டுள்ளது!

அதெப்படி அப்படி உறுதியாககச் சொல்கின்றீர்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் நடந்த கிளைமோர் தாக்குதலில் 23 படையினர் பலியானதாக தமிழ்நெற் செய்தி வெளியிட்டது. ஆனால் அது எந்த தமிழ் ஊடகத்திலும் வரவில்லை. விடுதலைப் புலிகளும் அப்படி ஒரு அறிக்கையை விடவில்லை.

இப்பொழுது கிளாலியில் 21 படையினர் பலியாம். நவ்வி, குஞ்சுக்குளத்தில் 12 படையினர் பலியானது பற்றி தெரிவித்த புலிகள் இது பற்றி ஒன்றுமே சொல்லவில்லை. வேறு தமிழ் இணையத்தளங்களிலும்வரவில்லை.

தமிழ்நெற்றுக்கு என்ன ஆனது? அல்லது தமிழ்நெற் சொல்வது உண்மையென்றால், இந்தச் செய்தியை வெளியிடாத புலிகளுக்கு என்ன ஆனது? அல்லது தமிழ் இணையத்தளங்களுக்கு என்ன ஆனது?

யாருக்கு என்ன ஆனது என்று யாராவது சொல்லுங்களேன்!

ஒரு பேப்பரின் தாயகக் கள நிலவர பந்தி எழுத்தாளர் சபேசனுக்கு புலிகளின் குரலில் கிழக்கில் நடந்த தாக்குதலில் 23 படையினர் கொல்லப்பட்டது சொல்லப்பட்டது தெரியவில்லை எனும் போது.. பந்தி எழுத்துக்களின்.. யதார்த்தத் தன்மை கேள்விக்குரியதாகவே அமைகிறது. :D:wub::o

கிளாலிச் சமர் பற்றி தமிழ்நெட்.. நம்பத்தகுந்த வட்டாரக்கங்களை மேற்கோள் காட்டிச் செய்தி வெளியிட்டுள்ளது மட்டுமன்றி விடுதலைப்புலிகள் இதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறது. இதற்கு மேல் கிடைக்கும் செய்தியை தமிழ்நெட் எப்படி வெளியிட முடியும் என்று சபேசன் எதிர்பார்க்கிறார் என்று சொன்னால் தமிழ் நெட் காரர்கள்.. அந்த வழிமுறையை எதிர்காலத்தில் பின் பற்ற உதவியாக இருக்கும்..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போரில் முன்னேற்றம் கண்டுவரும் அரசு பொய்தகவல் வழங்குவதை குறைத்துக் கொண்டுள்ளது!

இது முற்றிலும் தவறான கருத்து.

முல்லைத்தீவு நகர் மீது தான் செல் தாக்குதல் நடத்தவில்லை என்று அறிக்கை விட்ட அரசு.. பின்னர் வன்னிக் கட்டளைத் தளபதியூடு வன்னியில் வாழும் அரச அதிகாரிகளுக்கும் அரச சார்பற்ற அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று அறிக்கை விட்டிருக்கிறது. அதுமட்டுமன்றி முல்லைத்தீவு நகர் இலக்கு வைக்கப்பட்டதை இராணுவ தரப்பு பின்னர் ஏற்றுக் கொண்டுள்ளது.

கள நிலமைகளில் வார இறுதியில் துணுக்காய் சந்திக்கு மேற்கேயும்.. துணுக்காய் சந்திக்கு வடக்கேயும் படையினர் தாண்டி துணுக்காய் சந்தியில் இருந்து வடக்கே 6.5 கிலோமீற்றர்கள் கைப்பற்றிக் கொண்டதாகச் சொன்னார்கள்.

ஆனால் இன்று வெள்ளாங்குளம் - துணுக்காய் சந்தியில் துணுக்காய்க்கு மேற்கே கல்விளானை மீட்டதாகச் சொல்கிறார்கள். துணுக்காய்க்கு மேற்கே உள்ள கல்விளானை மீட்காது.. எப்படி துணுக்காய் மேற்கையும் மீட்டு.. வடக்கே துணுக்காய் சந்தியை கடந்து 6.5 கிலோ மீற்றர்கள் போனார்கள்..!

குறுக்காலபோவன் என்பவர் ஏற்கனவே துணுக்காயின் மேற்கும் போயிட்டுதாம் என்று சென்ற வாரம் இட்ட தலைப்பு இப்போதும் இங்கிருக்கிறது..! :o:D

வெள்ளாங்குளம் சந்தி, துணுக்காய் சந்தி மீட்க்கப்படின்.. அதற்கு இடைப்பட்ட வீதியை பிடிப்பதற்கு ஒன்றும் அசாத்திய இராணுவ நடவடிக்கை அவசியமன்று. புலிகளின் அணிகள் இரண்டு பக்கமும் இராணுவத்தை வைத்துக் கொண்டு நடுவில் நின்று அடிபடமாட்டார்கள்.. என்பது குழந்தைக்கும் தெரியும்..!

இப்படியெல்லாம் கள நிலவரம்.. முன்னுப் பின் முரணாக வெளியிடப்பட்டுக் கொண்டிருக்க.. நீங்கள்.. அரச பாதுகாப்பமைச்சகத்துக்கு அருச்சந்திர சான்றிதழ் வழங்குவதன் நோக்கம்.. அரச பிரச்சாரத்துக்கு.. நம்பகத்தன்மை அதிகம் என்று சொல்லவா...??! :wub::lol::D

Edited by nedukkalapoovan

போரில் முன்னேற்றம் கண்டுவரும் அரசு பொய்தகவல் வழங்குவதை குறைத்துக் கொண்டுள்ளது!

ஓ! அப்படியா?!!! :o:wub::D

ஓ சரிதான்! பெயருக்கு தான் நீங்கள் சாணக்கியன் என்று நீங்களே சொல்லி இருக்கிறீர்களே!!! அதற்காக அதை இப்படியா அடிக்கடி நிரூபிப்பது?!!! :lol::D

Edited by vettri-vel

வவுனியாவில் குடிசைகள் தீ பிடித்ததுக்கு புலிகள் தான் காரணம் என்று ஓரு சிங்களவன் கருத்தெழுதுகின்றான்.ஆனால் இங்கு ஒரு தமிழன் இப்படி கருத்தெழுதுகின்றான்.

வவுனியாவில் குடிசைகள் தீ பிடித்ததுக்கு புலிகள் தான் காரணம் என்று ஓரு சிங்களவன் கருத்தெழுதுகின்றான்.ஆனால் இங்கு ஒரு தமிழன் இப்படி கருத்தெழுதுகின்றான்.

ஆற்றில் வெள்ளம் புரண்டு ஓடினாலும், நாய் தண்ணீரை நக்கித்தான் குடிக்கும். அது அதற்கு அது அதன் குணம்!

அவற்றை விட்டு விட்டு விடுதலையை மட்டுமே குறிக்கோளாய் கொள்வோம்!!

இப்போது குரைப்பவை வாலை குலைத்து வர அதிக நாள் போகாது!!!

Edited by vettri-vel

நான் நினைக்கின்றேன் புலிகள் இல்லாவிட்டால் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று நினைக்கின்றார்கள் போல்.இப்படி நினைப்பார்களேயானால் இவர்களை விட முட்டாள்கள் இல்லை.புலிகள் இல்லாவிட்டால் இவர்களை சுட்டு கொல்ல மாட்டார்கள் கல்லால் அடித்தே கொல்வார்கள் என்று?

இது முற்றிலும் தவறான கருத்து.

முல்லைத்தீவு நகர் மீது தான் செல் தாக்குதல் நடத்தவில்லை என்று அறிக்கை விட்ட அரசு.. பின்னர் வன்னிக் கட்டளைத் தளபதியூடு வன்னியில் வாழும் அரச அதிகாரிகளுக்கும் அரச சார்பற்ற அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று அறிக்கை விட்டிருக்கிறது. அதுமட்டுமன்றி முல்லைத்தீவு நகர் இலக்கு வைக்கப்பட்டதை இராணுவ தரப்பு பின்னர் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆக ராணுவம் உண்மையான தகவல்களை வழங்கும் அளவிற்கு முன்னேறிவிட்டதை நீங்களே ஒப்புக் கொண்டு விட்டீர்கள்!

புலிகள்தான் இப்போது இராணுவத்தின் இழப்புக்களை துல்லியமாக தெரிவிப்பதோடு, தங்கள் இழப்புகள் தெரியாமல் தவிக்கிறார்கள்.

துணுக்காய், வெள்ளாங்குளம், கல்விளான் என்று நீங்கள் படம்வரைந்து கதையளந்து கொண்டிருக்க இராணுவம் நிதானமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

100 இராணுவம் பலி, 50 சடலம் மீட்பு போன்ற அதிரடி செய்திகள் தேடி ஒரு கூட்டம் இங்கே யாழில் தினமும் அலைந்து திரிகிறது!

அவர்கள் விரக்தியடைந்து விடாதிருக்க நீங்களும், தமிழ் தேசிய ஆய்வாளர்களும், ஊடகங்களும் இடையிடையே குளுக்கோஸ் ஏற்றிக் கொண்டிருக்கிறீர்கள்!

"இராணுவம் வன்னி மண்ணுக்குள் காலடி எடுத்துவைப்பதைதான் நாங்கள் விரும்புகிறோம்" என்று அறிக்கை விட்டவர்கள் இருக்க, மக்கள் படும் அவலத்திற்கு அந்த மக்களையே குற்றம்சாட்டி திட்டுகிறீர்கள் நீங்கள்.

பொருமாள் கோவிலடியாட்கள் எல்லாம் ஈ.பி.ஆர்.எல்.எவ் என்று கூறிக்கொண்டே தமிழ்தேசியம், ஒற்றுமை என்று ஏதோ ஏதோ எல்லாம் புசத்துகிறீர்கள்!

Edited by சாணக்கியன்

எங்களுக்குள்ளே ஒற்றுமையும் நம்பிக்கையும் இல்லாட்டி?............................................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக ராணுவம் உண்மையான தகவல்களை வழங்கும் அளவிற்கு முன்னேறிவிட்டதை நீங்களே ஒப்புக் கொண்டு விட்டீர்கள்!

புலிகள்தான் இப்போது இராணுவத்தின் இழப்புக்களை துல்லியமாக தெரிவிப்பதோடு, தங்கள் இழப்புகள் தெரியாமல் தவிக்கிறார்கள்.

துணுக்காய், வெள்ளாங்குளம், கல்விளான் என்று நீங்கள் படம்வரைந்து கதையளந்து கொண்டிருக்க இராணுவம் நிதானமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

100 இராணுவம் பலி, 50 சடலம் மீட்பு போன்ற அதிரடி செய்திகள் தேடி ஒரு கூட்டம் இங்கே யாழில் தினமும் அலைந்து திரிகிறது!

அவர்கள் விரக்தியடைந்து விடாதிருக்க நீங்களும், தமிழ் தேசிய ஆய்வாளர்களும், ஊடகங்களும் இடையிடையே குளுக்கோஸ் ஏற்றிக் கொண்டிருக்கிறீர்கள்!

"இராணுவம் வன்னி மண்ணுக்குள் காலடி எடுத்துவைப்பதைதான் நாங்கள் விரும்புகிறோம்" என்று அறிக்கை விட்டவர்கள் இருக்க, மக்கள் படும் அவலத்திற்கு அந்த மக்களையே குற்றம்சாட்டி திட்டுகிறீர்கள் நீங்கள்.

பொருமாள் கோவிலடியாட்கள் எல்லாம் ஈ.பி.ஆர்.எல்.எவ் என்று கூறிக்கொண்டே தமிழ்தேசியம், ஒற்றுமை என்று ஏதோ ஏதோ எல்லாம் புசத்துகிறீர்கள்!

அப்போ இராணுவம் குளுக்கோஸ் ஏத்தாமல்.. 10000 புலி பலி என்று "குடுவா" கொடுக்கிறது. அப்போ இராணுவம் "குடுக்" கொடுக்கிறது என்றதை ஒப்புக் கொள்கிறீர்கள்.

புலிகளின் குரலில் தினமும் வீரச்சாவு அறிவிக்கிறார்கள். அவர்கள் அதை மறைப்பதில்லை. கடந்த காலங்களைப் போலன்றி.. மாவீரர்களுக்குரிய அக வணக்க நிகழ்வுகள் வன்னிப் பரப்பெங்கும் கடும் விமானத்தாக்குதல்கள் மற்றும் இராணுவத்தின் விமானப்படையின் தீவிர உளவு நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் நடக்கின்றன தான்.

நீங்கள் அரசின் செய்தியை மட்டும் கேட்க விரும்புவதால்.. உங்களுக்கு உண்மைகள் தெரியாமல் இருக்கலாம்.

பெருமாள் கோவிலடி பின் புறம் இந்தியப் படைகள் இயங்கிய காலத்தில் பெரிய "ஈ பி" காம் இருந்தது மட்டுமன்றி.. மண்டையன் குழுவினரால் அப்பாவி இளைஞர்கள் கொல்லப்பட்டு பெருமாள் கோவிலடியை அண்டிய இரயில் பாதையில் போட்டும் இருந்தனர். நான் அவற்றை எல்லாம் தாண்டித்தான் சின்னப் பையனா.. பாடசாலை சென்று வந்தனான். அவை பசுமரத்தாணிகளாய் இன்னும் நினைவில் இருக்கின்றன.

ஆனால் பெருமாள் கோவிலடியில் இருந்து புலிகளான மக்களும் பெருமளவில் இருக்கிறார்கள்.. என்பதை இங்கு நினைவூட்டிக் கொள்கிறேன். அப்பையா கடைச் சந்தியில் மாவீரரின் முழு நீளப் படம் வைக்கப்பட்டிருந்தது.. தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்..!

ஆனால்.. உங்கள் சிங்கள அரச விசுவாசக் கதையைப் பார்த்தால்.. மண்டையன் குழுவில் இருந்துவிட்டு.. கொழும்பில் பிரேமதாசாவோடு இணைந்து "பச்சைப் புலிகள்" என்ற பெயரில் ஜே வி பி என்று அப்பாவிச் சிங்கள இளைஞர்களை கொன்று ஆற்றில் எறிந்து விட்டு அதில் கிடைத்த கூலிப் பணத்தில்.. கொழும்பு நட்சத்திர விடுதிகளில் குடித்துக் கும்மாளமிட்ட.. ஆட்கள் போல எல்லோ கதைக்கிறீர்கள்..! :lol::wub:

Edited by nedukkalapoovan

ஓ! அப்படியா?!!! :o:wub::D

ஓ சரிதான்! பெயருக்கு தான் நீங்கள் சாணக்கியன் என்று நீங்களே சொல்லி இருக்கிறீர்களே!!! அதற்காக அதை இப்படியா அடிக்கடி நிரூபிப்பது?!!! :lol::D

என்ன இருந்தாலும் வேற்றிவேல் அண்ணன், நான் போகும் இடம் எல்லாம் எனக்கு பின்னால் வந்து பதிலெழுதுவதை ஒரு கௌரவமாக கருதுகிறேன்! நன்றி அண்ணன்!

Edited by சாணக்கியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.