Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்மக்களின் ஆதரவை பெறும்வரை சிறிலங்கா அரசு போரில் வெல்லமுடியாது: எம்.கே.நாராயணன்

Featured Replies

இலங்கை அரசாங்கத்திற்குத் தமிழ் மக்களின் ஆதரவு இன்னமும் கிடைக்கப் பெறவில்லை என இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாரயணன் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூற்றுத் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தியடையக் கூடும் என்றபோதிலும் இதுவே யதார்த்த நிலை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த விசேட செவ்வியில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை அரச படையினர் வெற்றி கொள்ளக் கூடும் எனினும்இ தமிழ் மக்களின் நம்பிக்கையை வெற்றி கொள்ளவதற்கான நடவடிக்கைகள் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நோர்வே அல்லது வேறும் ஓர் தரப்பு வழங்கக்கூடிய பங்களிப்பைவிடச் சிறந்த பங்களிப்பினை இந்தியாவினால் வழங்க முடியும் எனவும்இ மக்கள் பிரச்சினைகளை இந்தியா நன்கு புரிந்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விரிவான அதிகாரப் பகிர்வின் மூலம் தமிழ் மக்களைத் தம்பால் ஈர்த்துக் கொள்வது குறித்து அரசாங்கம் அதிக முனைப்புக் காட்ட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளின் தடை உள்ளிட்ட காரணிகளால் தமிழீழ விடுதலைப் புலிகள் சற்றுப் பலவீனமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் திருப்திப்படக்கூடிய ஓர் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படாத பட்சத்தில் இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு முடிவு கட்டுவதென்பது நடைமுறைச் சாத்தியப்பாடற்ற விடயமே என எம்.கே. நாரயணன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி தமிழ் வின்

தமிழர் மனங்களை வென்றிருந்தால் தமிழர் புலிகளாக மாறியிருக்கமாட்டார்கள். இதை 30 வருடம் கழிந்து தான் தெரிய வேண்டுமா???

முடிவாக என்ன சொல்ல வருகின்றார் இவர்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உடனடியாக வேலைசெய்கிறது சாக்கு மகாநாடு . எப்படியோ எங்கள் நிலையின் உண்மைத்தன்மையை உரைத்திருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே அல்லது வேறும் ஓர் தரப்பு வழங்கக்கூடிய பங்களிப்பைவிடச் சிறந்த பங்களிப்பினை இந்தியாவினால் வழங்க முடியும் எனவும்இ மக்கள் பிரச்சினைகளை இந்தியா நன்கு புரிந்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

ஏற்கனவே அளித்த பங்களிப்பில் தானே அமைதி படை என்று உள்ளே வந்து நாசமறுத்தது .

கபட நோக்கத்துடன் சிந்திப்பவர்களுக்கு , எதுவுமே சரியாக அமையாது .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

முடிவாக என்ன சொல்ல வருகின்றார் இவர்???

1987ல் இந்தியப் படை இதே நோக்கில் வந்துதான் தோற்றது. நாராயணம் மறந்திருக்கலாம். தமிழர்கள் மறக்கத் தயாரில்லை.

இந்திய அரசு இரண்டு அணுகுமுறைகளைச் செய்தது.

1. இராணுவ ரீதியாக விடுதலைப்புலிகளை ஒழித்துக்கட்டுவது.

2. மிதவாத மற்றும் ஒட்டுக்குழுக்களைக் கொண்டு தமிழ் மக்கள் மயங்கக் கூடியதும் சிங்களவர்களை அதிருப்தி அடைய வைக்காததுமான ஒரு அரசியல் தீர்வை முன் வைப்பது. அதன் கீழ் பிறந்ததுதான் வடக்குக்கிழக்கு இணைந்த மாகாண சபை மற்றும் மாகாண சபை அரசியல்.

1987 ஒக்டோபரில் புலிகளுக்கு எதிரான போர் என்ற ரீதியில் இரண்டு விடயங்களை இந்திய இராணுவம் செய்தது.

1. விடுதலைப்புலிகளை சண்டையில் கொல்வது அல்லது முற்றாக அழிப்பது.

2. விடுதலைப்புலிகளை தனிமைப்படுத்தி வைக்கும் அளவுக்கு தமிழ் மக்களை இராணுவ ரீதியில் அச்சுறுத்தி வைப்பது.

அரசியல் ரீதியாக.. இரண்டு விடயங்களில் முனைப்புக் காட்டியது..

1. தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற மிதவாதக் கட்சிகளையும் மற்றும் ஜனநாயக நீரோட்டம் என்ற போர்வையில் ஆயுதங்களுடன் இந்திய அரசிடம் சரணாதிகதியடைந்த தமிழ் குழுக்களையும் கொண்டு வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகத்தை இயக்குதல்.

2. அதற்கு ஜனநாயக மூலாம் பூச இராணுவ அதிகாரத்தின் கீழ் மக்களை அச்சுறுத்தியபடி தேர்தலை நடத்தி தனக்குச் சார்பானவர்களை மக்கள் தேர்வு செய்துவிட்டார்கள் என்று வெளி உலகுக்கும்.. சிங்கள தேசத்துக்கும் காட்டுதல்.

இவற்றின் மூலம் தமிழ் மக்கள் இந்தியப் படைகளையும் இந்திய அரசு பெற்றுத் தந்த அரசியல் தீர்வையும் ஏற்றுக் கொண்டதாகக் காட்டிக் கொள்ளும் அதேவேளை... தமது கட்டளைக்குப் பணிய மறுக்கும் விடுதலைப்புலிகளை முற்றாக அழித்தல்.

அதன் இறுதிக்கட்டமாகவே வன்னிக் காடெங்கும் குண்டு மழையாய்ப் பொழிந்து தள்ளி இறுதியில் 1989 இல் ஒரு அறிக்கை மூலம் தலைவர் பிரபாகரனையும் கொன்றார்கள்.

மாத்தையாவூடு பிளவை உண்டாக்கி புலிகளில் தலைமையையே முற்றாக அழிக்க நினைத்தார்கள்.

இதையே நாராயணன் இன்று சிறீலங்காப் படையினரிடமிருந்தும்.. சிறீலங்கா அரசிடமிருந்தும் எதிர்பார்க்கிறார்.

உலகில் 4ம் நிலை இராணுவத்தின் முப்படைகளையும் அன்று எதிர்கொண்டு.. இந்தியாவின் சகல அரசியல் இராஜதந்திர நகர்வுகளையும் எதிர்கொண்டு.. இறுதியில் ஒரு சிறிய காட்டுக்குள் இருந்து புலிப்படை புற்றீசலாய் வெளிவந்த போது.. தமிழ் மக்களே ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

இந்தியக் கொள்கைகள் தோற்றுத் தூள் தூளாய் பறந்தன. இது எமது சேதத்தின்.. வீரவரலாறு. கற்பனைக் கதையல்ல..!

அப்படிப்பட்ட தலைவனையும்.. போராளிகளையும் மக்களையும் கொண்ட தமிழீழ தேசத்தை.. இந்த நாராயணன் அல்ல.. இன்னும் ஆயிரம் நாராணயனங்கள் வந்து புலம்பிக் கொட்டினும்.. ஏதும் செய்ய முடியாது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் புலம்பெயர் தமிழ் மக்கள் புதியதொரு உந்து சக்தியை தமிழீழத்துக்கு வழங்க வேண்டும். அன்றிருக்காத ஒரு பலம் இன்று தமிழர்களிடம் இருக்கிறது. அதுதான் புலம்பெயர் தமிழ் மக்களின் பலம். அதை சரியான வகையில் தமிழீழ மக்களுடனும் போராட்ட சக்திகளுடனும் ஒருங்கிணைப்பின் அதுவே உலகின் எந்த எதிரியையும் எதிர் கொண்டு எமது தேசத்தை எல்லாச் சதிகளையும் தந்திரங்களையும் தாண்டி மீட்க உதவும்.

நிலங்கள் இன்றல்ல அன்றும் தான் பறிபோயின. அதற்காக புலிகள் சோர்ந்ததாய் வரலாறில்லை. வெல்லும் வரை வீழ்வதும்.. எழுவதும்.. தமிழர்களின் வீர மரபு. அதை ஒவ்வொரு தமிழனும் அவன் உலகில் எங்கு இருப்பினும் உணர்ந்து ஒற்றுமையோடு செயற்படுவதே இன்றைய தேவை.

தேவையெனில் "நான் நாளை கரும்புலியாவேன் என் தேசத்தின் விடிவுக்காக" என்ற உள்ளுணர்வோடு அனைத்துத் தமிழனும் வாழ வேண்டும். சுயநலத்துக்கு எவ்வளவு முதன்மை அளிக்கிறோமோ அதைவிட மேலாக தேசத்துக்கு எம்மை அர்ப்பணிக்க தயாராக எம்மை வைத்துக் கொள்ள வேண்டும்.

நாராயணன் உளறலாம்.. கோத்தபாய கொக்கரிக்கலாம்... அதுவல்ல எமக்கு முக்கியம். அவர்கள் சொல்வதைப் புறக்கணிக்காது அவதானித்துக் கொண்டு எமது போராளிகளினதும் போராடும் மக்களினதும் ஆன்ம பலத்தை மனோதிடத்தை அதிகரிப்பதே.. வெற்றிக்கு வகை செய்யும். அதற்கு எல்லா வழியிலும் புலம்பெயர்ந்த மக்களும் உலகத் தமிழ் சொந்தங்களும் இன உணர்வோடு தளராது உதவிக் கொண்டே இருக்க வேண்டும். :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா விடுதலைப்புலிகளுடனான சண்டையில் வெல்ல முடியாத நிலை எழக்கூடும் என்று நாராயணன் எச்சரித்திருக்கிறார்.

விடுதலைப்புலிகள் பலவீனமடைந்திருந்தாலும்.. பயங்கரமாக திருப்பித் தாக்கும் சக்தியை இழந்துவிடவில்லை என்று அவர் கூறி சிங்களப்படைகளை எச்சரித்துள்ளார்.

India warns SL it might not win war with LTTE

India has warned Sri Lanka that it may not be able to win an ongoing war against separatist LTTE despite recent military gains, a report said today.

Indian National Security Advisor M.K. Narayanan told the Straits Times newspaper that Sri Lanka's Liberation Tigers of Tamil Eelam (LTTE) had been weakened but retained the ability to stage terror strikes.

டெயிலிமிரர்.

இதற்கு சிங்களவர்கள் அளித்துள்ள பதிலைப்படிக்க நேரடி இணைப்பைத் தருகிறேன்..

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections...spx?ARTID=23114

--------------

இப்படி நாராயணன் சொல்லி இருக்கிறார்.. என்பதற்காக நாம் மகிழ்ச்சிப்படக் கூடாது. இவற்றைக் கூர்ந்து நோக்கிக் கொள்ள வேண்டுமே தவிர.. இந்தியாவின் அணுகுமுறைகள் தெளிவாகும் வரை.. இந்தியாவின் நகர்வுகளை நம்பக் கூடாது. இது சிங்களப் படைகள் கண்மூடித்தனமாக முன்னேறி பேரழிவுகளை எதிர்கொள்வதைத் தவிர்க்க என்று வழங்கப்படும் எச்சரிக்கையாகக் கூட இருக்கலாம். :rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நிலங்கள் இன்றல்ல அன்றும் தான் பறிபோயின. அதற்காக புலிகள் சோர்ந்ததாய் வரலாறில்லை. வெல்லும் வரை வீழ்வதும்.. எழுவதும்.. தமிழர்களின் வீர மரபு. அதை ஒவ்வொரு தமிழனும் அவன் உலகில் எங்கு இருப்பினும் உணர்ந்து ஒற்றுமையோடு செயற்படுவதே இன்றைய தேவை.

இக்காலத்துக்கேற்ற நல்லதொரு விளக்கமான பதிவு. நன்றிகள் நெடுக்காலபோவான்..!

Edited by Danguvaar

சொந்தபுத்தியுமில்லை சொற்புத்தியுமில்லை நாராயணன் போன்றோருக்கு பட்டுத்தான் திருந்தவேண்டும்.

தலைவர் சாக்மானாட்டுக்கு போர்நிறுத்தம் அறிவித்தது இதற்காகத்தானோ ?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசாங்கத்திற்குத் தமிழ் மக்களின் ஆதரவு இன்னமும் கிடைக்கப் பெறவில்லை என இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாரயணன் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூற்றுத் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிருப்தியடையக் கூடும் என்றபோதிலும் இதுவே யதார்த்த நிலை என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த விசேட செவ்வியில் அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை அரச படையினர் வெற்றி கொள்ளக் கூடும் எனினும், தமிழ் மக்களின் நம்பிக்கையை வெற்றி கொள்ளவதற்கான நடவடிக்கைகள் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நோர்வே அல்லது வேறும் ஓர் தரப்பு வழங்கக்கூடிய பங்களிப்பைவிடச் சிறந்த பங்களிப்பினை இந்தியாவினால் வழங்க முடியும் எனவும், மக்கள் பிரச்சினைகளை இந்தியா நன்கு புரிந்து கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விரிவான அதிகாரப் பகிர்வின் மூலம் தமிழ் மக்களைத் தம்பால் ஈர்த்துக் கொள்வது குறித்து அரசாங்கம் அதிக முனைப்புக் காட்ட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.

மேற்குலக நாடுகளின் தடை உள்ளிட்ட காரணிகளால் தமிழீழ விடுதலைப் புலிகள் சற்றுப் பலவீனமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் திருப்திப்படக்கூடிய ஓர் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படாத பட்சத்தில் இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு முடிவு கட்டுவதென்பது நடைமுறைச் சாத்தியப்பாடற்ற விடயமே என எம்.கே. நாரயணன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

www.tamilwin.com

சிறிலங்கா அரசு தமிழ் மக்களை தமது பக்கம் இழுத்து அவர்களது முழுமையானஆதரவை பெற்றுக்கொள்ளும்வரை விடுதலைப்புலிகளை போரின் மூலம் வெல்லமுடியாது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா அரசு தமிழ் மக்களை தமது பக்கம் இழுத்து அவர்களது முழுமையானஆதரவை பெற்றுக்கொள்ளும்வரை விடுதலைப்புலிகளை போரின் மூலம் வெல்லமுடியாது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வாசிக்க

ஏன் முழுச்செய்தியும் போட கஸ்டமோ?

Edited by snegi

India, Sri Lanka war on war

நாராயணன் சொல்லும் பொது ... இலங்கை இராணுவம் கடந்த வாரங்களில் முக்கியமான சில முன்னேற்றங்களை கண்டு உள்ளது.. ஆனாலும் களங்களை அவர்கள் வெண்று இருந்தாலும் ( முழுமையான ) போரில் வெல்வார்களா என்பது சந்தேகமே எண்று சொல்லி இருக்கிறார்...

The (Sri Lanka Army) has made a lot of progress in the last few weeks. But even if they win the battle I am not sure they will win the war

MK Narayanan

http://www.bbc.co.uk/sinhala/news/story/20...narayanan.shtml

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் நான்காவது ஆட்பலம் கொண்ட இந்தியப் படைகளால் செய்யமுடியாததை சிங்கள இராணுவத்தினர் செய்வதால் உண்டான எரிச்சலில் நாராயணன் இப்படிக் கூறியிருக்கலாம். கோத்தபாயாவும், சரத் பொன்சேகாவும் திட்டம் போட்டு வெட்டை வெளிகளை விட்டு பற்றைக் காடுகளால் முன்னேறுகின்றார்கள்.. நாராயணனுக்கு நாமம் சாத்தாமல் விடமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாராயணன் சொல்லும் பொது ... இலங்கை இராணுவம் கடந்த வாரங்களில் முக்கியமான சில முன்னேற்றங்களை கண்டு உள்ளது.. ஆனாலும் களங்களை அவர்கள் வெண்று இருந்தாலும் ( முழுமையான ) போரில் வெல்வார்களா என்பது சந்தேகமே எண்று சொல்லி இருக்கிறார்...

நாராயணசாமிக்கு இலங்கை பாதுகாப்பு படையினரால் தகுந்த பாதுகாப்பு கொடுக்காத தனிப்பட்ட கோபமும் இத்தகைய கருத்துக்களை விட ஒரு காரணமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் 4ம் நிலை இராணுவத்தின் முப்படைகளையும் அன்று எதிர்கொண்டு.. இந்தியாவின் சகல அரசியல் இராஜதந்திர நகர்வுகளையும் எதிர்கொண்டு.. இறுதியில் ஒரு சிறிய காட்டுக்குள் இருந்து புலிப்படை புற்றீசலாய் வெளிவந்த போது.. தமிழ் மக்களே ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

இந்தியக் கொள்கைகள் தோற்றுத் தூள் தூளாய் பறந்தன. இது எமது சேதத்தின்.. வீரவரலாறு. கற்பனைக் கதையல்ல..!

இதே போல தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் 4வது ஈழப்போரில் பல ஆச்சரியங்கள் வரப் போகிறது.

இது எமது சேதத்தின்.. வீரவரலாறு. கற்பனைக் கதையல்ல..!

நெடுக்ஸ், உண்மையான வரிகள்....எழுதப்பட்டு கொண்டிருப்பது ஒரு வீரவரலாறு..

நாராயணசாமிக்கு இலங்கை பாதுகாப்பு படையினரால் தகுந்த பாதுகாப்பு கொடுக்காத தனிப்பட்ட கோபமும் இத்தகைய கருத்துக்களை விட ஒரு காரணமாக இருக்கலாம்.

பிறகென்ன கொள்கையை மாற்றி அமைக்க வேண்டியதுதானே...

நாரயணனின் கரிசனை புலிகள் தோற்று விடக்கூடாது எனும் அக்கற்றையின் வெளிப்பாடு அது....!! புலிகள் தோற்றுவிட்டால் இலங்கை அரசுக்கு இந்தியாவின் உதவி தேவையேஎ இல்லை... அதனால் இலங்கை அரசை கையுக்குள் வைத்து இருக்கும் சந்தர்ப்பம் இந்தியாவுக்கு கைநழுவி போய்விடும் எனும் கவலையில் எழுந்த ஆராட்ச்சியாக இருக்கலாம்....!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.