Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளைக் கொடியுடன் மஹிந்தவிடம் பிரபாகரன் சரணடைய வேண்டும் - கெஹெலியவின் கேலி

Featured Replies

புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஆயுதங்கைக் கீழே வைத்த விட்டு வெள்ளைக் கொடியை ஏந்தியவாறு மஹிந்தவிடம் சரணடையும் வரை தற்போதைய யுத்தம் நிறுத்தப்படவோ அல்லது அமைதிப் பேச்சுகள் ஆரம்பிக்கப்படவோ மாட்டாது என்று அமைச்சரும், அரச பாதுகாப்பு பேச்சாளனுமான கெஹெலிய தெரிவித்துதுள்ளார்.

சீனா சென்ற மஹிந்த இந்தச் செய்தியை உலக நாடுகளுக்கு உறுதியாகத் தெரிவித்து விட்டுதான் நாடு திருபினார். என்றார் மேலும் :

புலிகளின் தலைவர் பிரபாகரன் 30 வருடங்களாக இந்த நாட்டை அலைக்கழிக்க வைத்துவிட்டார். அவரால் இந்த நாட்டுக்கு எற்பட்ட உயிர்சேதங்களும், பொருட்சேதங்களும் மிக அதிகம். அன்று ஆரம்பிக்கப்பட்ட பிரபாகரனின் வெறியாட்டம் இன்னும் அடங்கவில்லை. புலிகள் பலமிழந்த போதெல்லாம் அவர்கள் யுத்த நிறுத்தத்திற்கு வந்து எம்மை முட்டாளாகி விட்டு அதனுர்டாய் பலமடைந்து வந்துள்ளனர்

யுத்த நிறுத்தங்களையெலெ;லாம் அவர்களாகவே மீறி இந்நாட்டு மக்கள் மீது தாக்குதல் நடத்தினார். சாவதேச நாடுகளையும் ஏமாற்றி வந்துள்ளார். சர்வதேசத்திற்கு முன்பாக இலங்கையையே குற்றவாளியாக்க முற்பட்டனர்.

30 வருடங்காளாக அவர் நடத்தி வந்த இந்த வெறியாட்டம் இப்போது அடங்கி வருகிறது. மஹிந்த ஜனாதிபதியானதும் புலிகள் ஆட்டங் கண்டு விட்டனர்.

எல்லா தலைவர்களையும் ஏமாற்றுவது போல், மஹிந்தவையும் புலிகள் ஏமாற்ற முயற்சித்தனர். மஹிந்த ஜனாதிபதி ஆனதும் முதல் புலிகளே படையினர் மீதும்: அப்பாவி பொதுமக்கள் மீதும் வலிந்த தாக்குதல் நடத்தினர்.

இறுதியில் அவர்கள் மஹிந்தவிடம் வரலாற்றில் என்றுமில்லாவாறு சிக்கிவிட்டனர். புலிகள் முதலில் கிழக்கை இழந்தனர். இப்போது வடக்கையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டு வருகின்றனர்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் ஆயுதங்கைளக் கீNழு வைத்து விட்டு வெள்ளைக் கொடியுடன் மஹிந்தவிடம் சரணடைந்தால் மாத்திரமே எமது யுத்தம் நிறுத்தப்படும். இல்லாது விட்டால் யுத்தம் தொடர்வதை நிறுத்த முடியாது. என்று நேற்றுமுன்தினம் கண்டியில் நடைபெற்ற. வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

நன்றி சுடர்ஒளி

ஒழுக்க விழுமியமுள்ள மனிதர்களாக விடுதலைப் புலிகள் நடந்து கொண்டால் மாத்திரமே சமாதான முயற்சி சாத்தியம் - கெஹலிய

வீரகேசரி நாளேடு - விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு ஒழுக்க விழிமியமுள்ள மனிதர்களாக நடந்துகொண்டால் மாத்திரமே சமாதான முயற்சி தொடர்பில் சிந்திக்க முடியும் என்று அமைச்சரும் அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துக்கூறிய அவர் தெரிவித்ததாவது: விடுதலைப் புலிகள் இயக்கம் பலவீனமடையும்போது சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் பல்வேறு ஆழுதங்கள் பிரயோகித்து பேச்சுவார்த்தை என்ற தோரணையில் தம்மை மீள கட்டியெழுப்புவதே வரலறாகவுள்ளது.

இதனை நான் கூறவேண்டிய அவசியமில்லை. ஊடகவியலாளர் என்ற ரீதியில் நீங்கள் இதனை அறிந்து இருப்பீர்கள் ஜனாதிபதி ரணசிங்க பிரேம தாஸாவின் காலத்தில் ஹில்டன் ஹொட்டலில் பல மாதங்களாக சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்றன. இறுதியில் புலிகளால் 600க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். இந்த உபாயத்தை அடிக்கடி புலிகள் கையாண்டுவருகின்றனர்.

நன்றி வீரகேசரி

எதற்கும் வெள்ளைத் துணி கொஞ்சம் அதிகமாகவே உற்பத்தி பண்ணி வையுங்கள். சீக்கிரம் உங்களுக்கு தேவை வரும்.

கமல் போல் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஅவ்வ்வ் என அழுதாலும் அடங்காது போல இருக்கே!!!

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் ஆயுதங்கைக் கீழே வைத்த விட்டு வெள்ளைக் கொடியை ஏந்தியவாறு மஹிந்தவிடம் சரணடையும் வரை தற்போதைய யுத்தம் நிறுத்தப்படவோ அல்லது அமைதிப் பேச்சுகள் ஆரம்பிக்கப்படவோ மாட்டாது என்று அமைச்சரும், அரச பாதுகாப்பு பேச்சாளனுமான கெஹெலிய தெரிவித்துதுள்ளார்.

மவனே பிச்சை கார றம்பு என்னவென நினைத்தாய் புலிப்படையை. புறமுதுகு காட்டி ஓடும் உங்களது கூலிப்படை இன்னும் வெகு தூரத்திலில்லை . செயலில் காண்பாய். உனது கூலிப்படை துண்டை காணோம் துணியை காணோம் என ஓடும் போது. நிச்சயமாக எண்ணுக்கணக்கான கூலிப்படையை புலிகள் கைப்பற்றுவார்கள். 30 வருடத்தில் நீங்கள் பல வற்றை கற்றிருக்கலாம். ஆனால் கற்க வேண்டியது நிறையவே உள்ளது. கற்பிப்பார்கள் பாடம். அது உங்களுக்கு புதுப்பாடமாக இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கென்னவோ ஜெயராஜ் பெனார்ண்டோப் பிள்ளையின் ஆவி இவருக்குப் பிடிச்சிட்டுது போலக் கிடக்குது.

அவரை மாதிரியே கொஞ்சநாளாகக் கதைக்கின்றார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்க்கையில் நாம் பெறும் அனுபவம் தான் எங்களுக்கு கை கொடுக்கின்றது. ஆனால் இந்த பாழாய் போன அரசாங்கமும் அதன் அமைச்சர்கள் பலரும் எவ்வளவு தான் புலிகள் தங்கள் பலத்தை பலமுறை நிருபித்திருந்தாலும் சொறணை இல்லாதவர்களாய் சிங்கள சனங்களையும் சர்வதேசத்தையும் பேய்க்காட்டிக்கொண்டிருக்கி

வேறு வேறு கட்சிகள் ஆட்சியை பிடிப்பதால் தான் இந்த அறியாமை

  • கருத்துக்கள உறவுகள்

றம்புக்வெல தான் ஒரு கோமாளி என நிருபித்துள்ளார்

றம்புக்வெல தான் ஒரு கோமாளி என நிருபித்துள்ளார்

கேவலத்துக்குரிய ரம்புக்கவெல பல தடவைகள் நீ பிதற்றி அவமானப்பட்டிருக்கின்றாய். மீண்டும் நீ மூக்குடைபடுவாய். அந்த நல்நாள் விரைவில் வரும் அன்று நாம் பலபல சொல்வோம்.

ஒரு போராளியே ஒருபோதும் புல்லை தின்னாது..தாய்ப்புலி புல்லை மணந்துகூட பார்க்காது.

நீயும் உன் மகிந்தனும்தான் கட்டியிருக்கிற வெள்ளைச்சாரத்தை அவிட்டுகாட்டி புலிப்படைகளுடன் சமாதானம் பேசுவீர்கள். சூரியன் விடிய உதிப்பது விதியோ அப்படி நமதுபடை வெல்வதும் விதி

நீங்கள் இருவரும் கோவணமும் இல்லாமல் சமாதானத்துக்காக வெள்ளைக்கொடி பிடிக்கும் நாளுக்காக பத்திரிகைகள் காத்திருக்கின்றன. :wub::lol::o:D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பதிலடி கொடுக்கும் போது றம்புக்கவெல போன்றோரை பூதக்கண்ணாடி வைத்தும் கண்டுபிடிக்க முடியாது .

  • கருத்துக்கள உறவுகள்

தாடி மாமாக்கு 6மனி என்டா போதை எறிடுமாம்

அது தான் இந்த புலம்பள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளைக் கொடியுடன் மஹிந்தவிடம் பிரபாகரன் சரணடைய வேண்டும் - கெஹெலியவின் கேலி

இது போன்ற பேச்சை கேட்கும் அளவிற்கு தமிழினம் இன்று :wub:

புலிகள் திருப்பி அடிக்கும் நாளில் சிங்கள ராணுவம் புறமுதுகிட்டு ஓடும் பொழுது இவனை ஊடகத்துறையினர் இதே கேள்வியை திருப்பி கேட்கவேண்டும். அவனின் கோணல் முகத்தை காணவேண்டும் என்பது என் அவா.

வம்புக்வெல நீ பயத்தில்தான் பிதற்றுகிறாய் என்று எமக்குத்தெரியும். கனவில்கூட நடக்கமுடியாத ஒன்று உன்கற்பனையில் நீ கூறுவதால் மகிந்தஅனகோ வில் உன்பதவி நீடிக்கும். ஆனால் பதவியில் இருக்க உன் உயிர் இருக்காது. மகிந்தா சாறத்தோடு எருமைமாடு பிடித்து வயலுழுது பழகுகிறானாம் ஏனெனில் உன்போன்ற புண்ணாக்குகளை வைத்துக்கொண்டிருக்கும் அந்த எருமைக்கு மலிந்தசிந்தனையில் இறுதியில் கிடைப்பது இதுதான் என்று. அதுவும் தோளிலிருக்கும் துண்டை எடுத்து கோவணமாய்க்கட்டிக்கொண்டு வேட்டியை உருவி வெள்ளைக் கொடியாய் பிடித்துக்கொண்டு எம்தலைவன் காலில் விழுந்தால் சிலவேழை மகிந்தவை மன்னிக்கலாம். ஆனா றம்புக்கு உனக்கிருக்கடி ஆப்பு

தன்னைச் சுற்றியிருப்பவர்கள் கேட்டுச் சிரிப்பதற்காக ஒரு ஜோக் விட்டிருக்கிறார். இதில் அதிசயம் என்னவென்றால் உலகமே இதைக் கேட்டுச் சிரித்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை காலம் தான் ஏமாறுவாய் இந்த நாட்டை ......"அப்படி ஒரு நினைப்பு "தான் பிழைப்பை கெடுகிறது .

ஓடும் சிங்கள ரத்தம் சொல்ல வைக்கிறது . நாங்கள் கேட்கும் காலம் ....ம் ம் ம் ... காலம் பதில் சொல்லும்

இப்படி பேசியவர்கள் எத்தனையோ பேர் அன்று முதல் இன்றுவரை யாரும் நிலைத்து நின்றது இல்லை அதுதான் வரலாறு. ஊதாரணத்திற்க்கு சில:

1956--- எஸ்.டப்லியூஆர்டி. பண்டாரநாயக்கா. புத்தபிக்குவாலேயே சுட்டுகொல்லப்பட்டார்.(இலங்கை

யில் முதலாவது அரசியல் படுகொலை) ஆரம்பித்துவைத்தவரே ஒரு புத்ததுரவி. பின்னர் சிரிமாவோ. 7வருடகாலம் இலங்கை குடியுரிமையை இழந்து வாழவேண்டிய நிலை. மற்றவர் கே.எம்.பீ.ராஜரட்ன இவர் முன்னால் தம்பதெனிய எம்பீ இவர் அந்த காலங்களில் தமிழர்களை கள்ளதோனிதெமலா என்று தானழைப்பார். தமிழ் எம்பீக்களையும் பாராளுமன்றத்தில் கூட அப்படியே தான் அழைப்பார். இவர்கடைசி காலங்களில் கண்டி நகரில் ஒருவேலை சாப்பட்டுக்கும் வழி இல்லாமல் கை ஏந்தி அலைந்தார். அடுத்தவர் டி.பீ. இலங்கரத்னா இவர் கண்டி மாவட்ட ஹேவாஹெட்ட தொகுதி எம்பீயாக தேர்ந்தெடுக்கபட்டவர். மலையக மக்கலை பல இன்னல்களுக்கு ஆளாக்கியவர். கண்டி மாவட்டத்திள் பல தமிழர்களின் சொத்துக்களை அரசுடமையாக்கி அநுபவித்த்தவர் .. 1977 தேர்தலில் அதே தொகுதியில் நின்று படுதோல்வியடைந்து தான் இருக்கும் இடம் தெரியாமலேபோய்விட்டார். அடுத்து ஆர்.ஜீ.சேநாநாயக்க இவரும் கண்டி மாவட்டம் செங்கடகல தொகுதி எம்பீ யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மலையகப் பகுதிகளில் தமிழ் மானவர்களின் கல்வி அறிவை சீர்அழிப்பதில் பெரும் பங்கு வகித்தவர் அதுமட்டுமல்ல திருக்கோணமலை மாவட்டத்தில் சிங்களவர்கலை குடிஅமர்த்துவதிலும் பெரும் பங்காற்றினார். இவர் 1977 தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு (திருகோனமலை மற்றும் செங்கடகலை) இரண்டிலுமே படு தோல்வி. திருகோனமலை தொகுதியில் கட்டுபணத்தையும் இழந்தார் எண்பதுதான் வரலாறு.

அதன் பின் லலித். நிரஞ்ஞன் விஜயரத்ன. அனுருத்த.ஆர். பிரேமதாஸ. ஏன் சந்திரிக்கா (ஒற்றைக்கன்னைஇழந்தார்) இப்படி பட்டும் இன்னும் திருந்துகிரார்கள் இல்லை.

ஒரு காலமும் திருந்தமாட்டார்கள். எல்லாம் அனுபவிப்பார்கள் நம் கண்முன்னாலேயே.

Edited by thanga

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.