Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அகரம் கவியாகி..!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

birdonflowercf7.jpg

அகர வரிசை

அடுக்காக்கி

அன்பே

அமுதே

அழகே என்று

அடுக்கு மொழி பேசிலேன்

அன்னைக்கு அடுத்ததாய்

அகத்திலொரு

அணியாய் கொண்டேன்

அருகிருந்து நீ

அன்பு வளர்க்க - இன்று

அவதிப்படுகிறேன்..!

அழகிய மலராய்

அகிலம் வந்தாய்

அகத்திலும் வந்தாய்

அருகிருக்க மட்டும்

அனுமதி மறுக்கிறாய்

அன்பான உறவுக்கு

அவசரம் ஏனோ

அர்த்தமாய் கேள்வி கேட்கிறாய்...!

அவலம் இவன்

அன்பு தாழ் திறக்க

அவதிப்படுவது அறியாயோ

அருமலரே....!

அன்புக்கும் உண்டோ

அடைக்கும் தாழ்

அன்று அரிவரியில்

அவசரமாய் உச்சரித்தது

அர்த்தமாய் இன்று

அதிர்கிறது மனத்திடலெங்கும்..!

அது கேட்டு

அரங்கேறத் துடிக்கிறது

அன்பான குருவியதன்

அருங்கவி..!

அது ஒரு ஜீவகவி

அர்த்தமில்லா ஆயுளதை

அர்த்தமாக்க

அன்பே நீ தந்த

அன்பின் அரிச்சுவடி

அணைத்தெடுக்க

அகத்தோடு அரும்பிய

அருமலர் - நீ

அறியாமல் அலம்பிய

அரும் வரிகள்

அருமையாய்க் கோர்த்தெடுக்க

அரும்பியது

அந்தக் கவி

அகிலத்தில் அது

அடங்காது ஆயுள் வரை..!

அன்பே உன்னைப் பிரியாது

அற்புதன் இவன்

அன்புக் கவி..!

அதுவே தாங்கும்

அற்புத ஆயுள் வரி

அது தரும் என்றும் - இவன்

அன்பின் மொழி...!

http://koluvithaluvi.blogspot.com/2005/06/blog-post_06.html

படித்ததில் பிடித்தது..! :lol:

Edited by nedukkalapoovan

  • Replies 87
  • Views 12.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

குருவிகளின்

காதல் பித்தம் தலைக்கேற

காதல் பித்தத்தில் உளறிய கவிதை அழகு

காரணமில்லாமல் உதிரும்

உன் வார்த்தைகளுள்

ஆயிரம் அர்த்தங்கள் காணுது நினைவு

காலம் அப்படி இருக்க...

கண்டபடி...வரிகளால் பேசி

வஞ்சிக்காதே வஞ்சகியே

காரணமில்லாமல் உதிரும்

உன் வார்த்தைகளுள்

ஆயிரம் அர்த்தங்கள் காணுது நினைவு

காலம் அப்படி இருக்க...

கண்டபடி...வரிகளால் பேசி

வசமாக்கி விடுவாள் வஞ்சிமகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா முன்னர் இப்பிடித்தான் யாழிலை குருவி தமிழினி என்றுஒரு கூட்டணி இருந்தது இப்ப திரும்ப நெடுக்கு கறுப்பி கூட்டு வந்திருக்கு ஏதோ நடக்கட்டும்..... :lol::unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா முன்னர் இப்பிடித்தான் யாழிலை குருவி தமிழினி என்றுஒரு கூட்டணி இருந்தது இப்ப திரும்ப நெடுக்கு கறுப்பி கூட்டு வந்திருக்கு ஏதோ நடக்கட்டும்..... :lol::unsure:

வலையில் உலாவும் போது கிடைச்சு. வாசிக்க நல்லா இருந்திச்சு. அதுதான் போட்டன். :o

நீங்க என்னடான்னா.. பாவம் அந்தக் குருவியும் மலரும். அதுகளையாவது சந்தோசமாக இருக்க விடமாட்டிங்க போல இருக்கே..! பொறுக்காதே..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட நாசமறுப்பு இந்தக்கவிதையிலையும் குருவி வாடை வீசுதப்பா :lol:

எல்லாமே "அ" வில தொடங்கி "ஆஆஆ" வில தான் போய் முடியும் தாத்தா..தா.. :rolleyes: (விளங்கிச்சோ)..ம்ம் தாங்கள் படித்து சுவைத்த கவி நன்னா தான் இருக்கு..கு.. :lol:

நன்றி..இணைப்பிற்கு தாத்தா..தா..!! :D

அது சரி சாத்திரி..ரி அங்கிள் சொல்லுற..தமிழினி ஆண்டி யார்..எனக்கு தெரியாதே..எனகொருக்கா அறிமுகபடுத்தி வைக்கிறியளோ தாத்தா..தா.. :o

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாமே "அ" வில தொடங்கி "ஆஆஆ" வில தான் போய் முடியும் தாத்தா..தா.. :rolleyes: (விளங்கிச்சோ)..ம்ம் தாங்கள் படித்து சுவைத்த கவி நன்னா தான் இருக்கு..கு.. :(

நன்றி..இணைப்பிற்கு தாத்தா..தா..!! :lol:

அது சரி சாத்திரி..ரி அங்கிள் சொல்லுற..தமிழினி ஆண்டி யார்..எனக்கு தெரியாதே..எனகொருக்கா அறிமுகபடுத்தி வைக்கிறியளோ தாத்தா..தா.. :o

அப்ப நான் வரட்டா!!

எனக்கும் அந்த ஆண்டியத் தெரியாதே. நான் 2006 இல் இருந்துதானே இங்க வாறன்..! ஆனா அந்த ஆண்டியும் முந்தி நிறைய எழுதி இருக்காங்க என்றத பழைய களத்தைப் பார்க்கேக்க விளங்குது. ஆண்டி உங்களை ஜம்முப் பையன் தேடுறான். எங்க இருந்தாலும் வாங்க.. வந்து அறிமுகம் செய்து வையுங்க..! :lol::D

குருவிகளின்

காதல் பித்தம் தலைக்கேற

காதல் பித்தத்தில் உளறிய கவிதை அழகு

காரணமில்லாமல் உதிரும்

உன் வார்த்தைகளுள்

ஆயிரம் அர்த்தங்கள் காணுது நினைவு

காலம் அப்படி இருக்க...

கண்டபடி...வரிகளால் பேசி

வசமாக்கி விடுவாள் வஞ்சிமகள்

முன்னர் இணைத்த கவி ஏலவே இங்கு இணைக்கப்பட்டிருப்பதால் நீக்கிவிட்டு இதனை இணைத்துள்ளேன். நீங்கள் அதற்குள் அந்தக் கவிக்கு பதிலளித்துவிட்டீர்கள்.

நன்றி கறுப்பி. :(

இதோ இங்குள்ளது அந்தக் கவி..!

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry421931

Edited by nedukkalapoovan

குருவிகளின்

காதல் பித்தம் தலைக்கேற

காதல் பித்தத்தில் உளறிய கவிதை அழகு

காரணமில்லாமல் உதிரும்

உன் வார்த்தைகளுள்

ஆயிரம் அர்த்தங்கள் காணுது நினைவு

காலம் அப்படி இருக்க...

கண்டபடி...வரிகளால் பேசி

வசமாக்கி விடுவாள் வஞ்சிமகள்

அன்பின் மொழி இதுவா?

ஆசை மொழி இதுவா?

ஆரணங்கே அவன் நினைவால்

ஆயிரம் பூப்பூக்கிறதா?

ஆதரவாய் தோள் சாய

அடிக்கடி மனம் துடிக்கிறதா?

அழகிய கவி வடிப்பவனா?

ஆராய்ச்சி செய்பவனா?

ஆவி பறந்திடவே ஆதிமுதல் வந்திங்கு

அதிவாதம் செய்பவனா?

ஆரடி அவன் சொல்லிவிடு

ஆறடி கொண்ட நெடியவனா?

ஆற்றங்கரையினிலே

அங்கிருக்கும் மரத்தினிலே

அதிகாலை வேளையிலே

ஆயிரமாய் பாட்டிசைக்கும்

அழகான குருவிகளின்

ஆத்மார்த்த காதலனா?

ஆரடி அவன் சொல்லிவிடு

ஆறடி கொண்ட நெடியவனா?

:rolleyes::o:D (அகரம் கேள்வியாக)

Edited by vettri-vel

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பின் மொழி இதுவா?

ஆசை மொழி இதுவா?

ஆரணங்கே அவன் நினைவால்

ஆயிரம் பூப்பூக்கிறதா?

ஆதரவாய் தோள் சாய

அடிக்கடி மனம் துடிக்கிறதா?

அழகிய கவி வடிப்பவனா?

ஆராய்ச்சி செய்பவனா?

ஆவி பறந்திடவே ஆதிமுதல் வந்திங்கு

அதிவாதம் செய்பவனா?

ஆரடி அவன் சொல்லிவிடு

ஆறடி கொண்ட நெடியவனா?

ஆற்றங்கரையினிலே

அங்கிருக்கிக்கும் மரத்தினிலே

அதிகாலை வேளையிலே

ஆயிரமாய் பாட்டிசைக்கும்

அழகான குருவிகளின்

ஆத்மார்த்த காதலனா?

ஆரடி அவன் சொல்லிவிடு

ஆறடி கொண்ட நெடியவனா?

:rolleyes::o:D (அகரம் கேள்வியாக)

அகரக் கேள்வி அசத்தல்..! :lol:

அகரக் கேள்வி அசத்தல்..! :rolleyes:

உங்கள் அகரக் கவிதை அசத்தலோ அசத்தல்! மிகவும் ரசித்தேன்!!

Edited by vettri-vel

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அகரக் கவிதை அசத்தலோ அசத்தல்! மிகவும் ரசித்தேன்!!

எனதல்ல வேல்.. குருவியோடது..! நானும் உங்களைப் போல ஒரு ரசிகன். :)

இதயம்,

இடிக்கிறதே....

இங்கே,

இப்போதே,

இனிதே,

இமைப்பொழுதும் பிரிவின்றியே...

இணைவோம் என்று,

இயம்பியே சென்றவள்,

இருள் கறுக்கும்,

இவ்வேளையில்,

இவன்,

இரவுடன் தனிமையில்,

இரண களமாட,

இவள் எனோ,

இரங்கவும்,

இல்லை,

இரற்சிக்கவும்,

இல்லை.

இவனுக்கோ,

இருப்பும்,

இல்லாததும்,

இரண்டற்ற நிலை.

இனிப்பும் புளிப்பும்,

இசையும் வசையும்,

இம்சையும் களிப்பும்,

இனி வேறில்லை.

இதயம் வெந்தவனுக்கு,

இழி நிலை

இன்றி,

இறப்பு

இங்கில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதயம்,

இடிக்கிறதே....

இங்கே,

இப்போதே,

இனிதே,

இமைப்பொழுதும் பிரிவின்றியே...

இணைவோம் என்று,

இயம்பியே சென்றவள்,

இருள் கறுக்கும்,

இவ்வேளையில்,

இவன்,

இரவுடன் தனிமையில்,

இரண களமாட,

இவள் எனோ,

இரங்கவும்,

இல்லை,

இரற்சிக்கவும்,

இல்லை.

இவனுக்கோ,

இருப்பும்,

இல்லாததும்,

இரண்டற்ற நிலை.

இனிப்பும் புளிப்பும்,

இசையும் வசையும்,

இம்சையும் களிப்பும்,

இனி வேறில்லை.

இதயம் வெந்தவனுக்கு,

இழி நிலை

இன்றி,

இறப்பு

இங்கில்லை.

மிகவும் ரசிக்கக் கூடிய வரிகள்..! நன்றி ஈசா. :)

ஈனர் சிங்களவர்,

ஈவு இரக்கமின்றி எமை வதைப்பர்,

ஈட்டி முனையால் விரட்ட, நாடற்ற,

ஈக்கள் போல் ஏதிலிகள் ஆனோம்.

ஈகை அற்ற உலகோர்,

ஈர் முகங் காட்டுவர்.

ஈசான திசையில் இருப்பதுவே,

ஈழமாம் எம் நாடு. அங்கே,

ஈசன் எம்பெருமான்,

ஈரப்பார்வையில்,

ஈடு இணை அற்ற எம் புலிகள் ,

ஈடேற்ற நம் வாழ்வை,

ஈட்டுவர் வெற்றி. உடைப்பர்,

ஈழத்தாய் கைவிலங்கு.

நன்றி நெடுக்ஸ். :rolleyes:

Edited by esan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காதல்..!

உணர்வோடு உருவாகி

உள்ளத்தை ஆளும் - நோய்

உள்ளவர்கள் சித்தம்

உறங்காமல் சிந்திக்கும் - அறிகுறி

உலகில் காண்பதெல்லாம்

உள்ளத்தில் உள்ளவர்க்காய் ஏங்கும் - ஏக்க நிலை

உறங்கா விழிகள்

உறங்க தொடரும் கனவு - பரவல் நிலை

உளறல் என்பது

உண்மையாகும் - தன்னை உணரா நிலை

உண்பது கூட உணர மறுக்கும்

உண்மை தளரும் - முத்திய நிலை

உண்மைக் காதல் உனையாள

உன்னை நீயே

உன் வாழ்வில் ஓர் உறவுக்காய் இழப்பாய்

உன்னத நிலை.!

உண்மை இதுவும் ஆகலாம்..

உலகில் கலப்படம் என்பது

உண்மை மனிதருக்குள் - ஒரு நிலை

உண்மைக் காதல் என்று உலகை ஏய்த்து

உடல் தேடும் காமம் - அசுர நிலை

உண்மைக்குள் அசுரம் அரசாள

உன்னை மதியால் நீ இழந்து

உடலைக் கலங்கடிக்கும் - ஆபத்து நிலை

உண்மை அறியா உன்னை இழந்து

உயிர் உள்ளவரை

உள்ளம் வருத்தித் துடிக்கும்

உலகில் கொடிய நிலை.!

உண்மைகள் இப்படியும் அமையலாம்..

உலகில் எத்தனை மனிதர் எத்தனை கோலம்

உண்மை எது - யாரும் அறியா நிலை

உள்ளத்தாலன்றி

உணர்வுக்கு வடிகால் தேடும் - ஒரு நிலை

உன்னைக் கண்டதும் கவரும்

உண்மை அறிந்து உன்னை அளந்து - கழரும் நிலை

உண்மையாய் இது

உணர்வுக்கு அடிமையான - இழி நிலை

உன்னை கவர்ந்தழிக்கும்

உலகின் அசிங்க நிலை

உண்மையில் இதுதான்

உலகில் சாதாரணம்

உண்மைக் காதலின் பெயரால்.!

உள்ளத்தே உணரும்

உணர்வுக்கு முன்

உன் அறிவுக்கும் சுயத்துக்கும்

உண்மைக்கும் மதிப்பளி

உண்மையில் காதல்

உண்மையாகி உன்னதமாகும்.!

உன் கண்களால் பேசி

உள்ள கணணியை நம்பி

உள்ளம் இழந்து காதல் என்று உளறாதே

உண்மையில் காதல்தன் புனிதம் அன்றி

உன் உள்ளத்தின் புனிதமிழந்து

உன்னத வாழ்வையே இழப்பாய்.!

உணர்ந்து தெளிந்து

உணர்வுகள் ஆளப்பழகிக் கொள் - அன்றி

உண்மை உணர்ந்து

உள்ளத்தால் காதல் செய்

உண்மைக் காதலுக்கு

உறுதியான ஆயுள் கொடு..!

(அ, ஆ (வேல் படைத்தது), இ, ஈ (ஈசன் படைத்தது), வரிசையில் உ..கவிதை.. இதுவும் குருவிகளதுதான்..!)

http://kuruvikal.wordpress.com/page/3/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேசா மலரே

பேசினாய் முதல் வார்த்தை

பேச்சிற்கு நாலு வார்த்தை

பேதைக் குருவியிவன்

போதை தீர....!

போ... மலரே

போன காலம் மெளனத்தால்

போனதே வீணா...

பேரன்பு உனை மலரவைக்க

போனதோ வீராப்பு

போனதை எண்ணி வருந்தி

பேசினாயோ அன்பு வார்த்தை..!

பேசியது தேனினும் இனிப்பாய்

பேசாச் செவிகூடச் சுவை அறிந்து

போதை கொண்டு

பேச்சுக்கு அடிமையாகிறது....!

பேசாமல் தொடர்வாயோ

பேச்செனும் அமுதம் தினமும் ஊட்டாயோ..??!

போதை எனித் தீராது

பேசியதும் இங்கினி

போகாது வீணே...!

பேதையெனினும் போதையெனினும்

போகும் அவை

பேதையிவன் மூச்சில் கலந்து...!

பேச்சின் மொழியும்

பேதையே உன் ஞாபகம் தந்து

போகும் இவன் இறுதி மூச்சுவரை...!

பேசியதை இங்கு பேசியதற்காய்

பேசாமல் பேசிடு என்ன

பேச்சதில் நீயும் மலர்வாய்

பேதையிவன் நெஞ்சில்

பேரழகு மலராய்...!

http://koluvithaluvi.blogspot.com/2005/06/blog-post_06.html :rolleyes:

யார் இவள் ?

------------------

ஊர் பழிக்கெல்லாம்,

ஊமை ஆனாள்,

ஊனை உருக்கியே தவங்கள் செய்தாள்.

ஊழித்தீயின் உறைவிடம் ஆனாள்.

ஊதாப்பூக்களை மித்தித்தே நடந்தாள்.

ஊட்டி வளர்த்தவள் உயிர்,

ஊசல் ஆட,

ஊடுருவும் படையினை,

ஊர் எல்லையில் பகை அறுத்தாள்.

ஊகங்களுக்கு அப்பாற்பட்டவள்.

ஊசியும் நூலும் என ஆண் பெண் இங்கு இருக்க,

ஊன் சிதறி காப்பரனில் வித்தானாள்.

  • கருத்துக்கள உறவுகள்

காதல் என்பது புனிதமானது

காதல் உள்ளத்தில் பிறக்கும்

காதல் கண்ணில் தொடங்கும்

காதல் தியாகம் செய்யும்

காதல் காத்திருக்கும்

காதல் உணவு மறக்கும்

காதல் தூக்கத்தை கெடுக்கும்

காதல் கடிதம் வரையும்

காதல் ஏக்கம் நிறைந்தது

காதல் நோய் கொடுக்கும்

காதல் புத்துணர்ச்சியும் தரும்

காதல் நாடு விட்டு நாடு சேரும்

காதல் ,தன் காதலுக்காக உயிரையும் தரும்

காதல் உண்மையாயிருந்தால்

காதல் என்றும் வாழ்க .

  • கருத்துக்கள உறவுகள்

என் உள்ளம் கவர்ந்தவளே

என்னை மாற்ற வந்தவந்தவளே

எத்தனை இசை கேட்டாலும்

என்னவளின் சிரிப்புக்கு ஈடாகுமோ

எட்ட நின்றவள் வீசும் பார்வையால்

என் மனம் சிறகின்றி பறக்குமே

என்னருகில் அவளிருக்கும் கணங்களே

என்னை நானே உணரும் கணமாகும்

எதுவரை பயனிக்கும் நம் காதல்

என்றில்லாமல் மரனிக்கும் வரை

என்று தொடர்ந்திருப்போம்.

ஏனோ விதிக்கு அன்று குதூகலம்....

ஏககாலத்தில் எம்மிரு விழிகள் உரசியதில்,

ஏற்கனவே முற்பிறப்பில் என்னை நீ,

ஏற்றுக்கொண்டவள் போல் பிரமை.

ஏலேலங்கிளியே....உண்ணால்,

ஏகாந்த கடலில் மூழ்கிறேன்,

ஏக்க நெருப்பில் வேகிறேன்,

ஏதொ பெயருக்கு வாழ்கிறேன்.

ஏழையின் இதயம் தான் துடிக்க,

ஏற்பாடு தான் செய்யடி நிலவே....

ஏழு பிறப்பிற்கும் நான் தான் துனைவன்,

ஏட்டிலே இருக்குதடி எழிழே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயம் தொலைத்து

ஐவிரல் தான் சேர்த்து

ஐராவதமுனை

ஐந்து வேளையும்

ஐங்கரன் சந்நிதியில்

ஐயர் வேதமோத தொழுது

ஐக்கியமானேன்..!

ஐயகோ..

ஐயமாய் உன் காதலை இடு..! :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுதலைக்காய் - தேசம்

விடியும்வரை

விடாமுயற்சியாய் நின்று

வியர்வை சிந்தச் சிந்த

வில்லனோடும் போராடி

விடுவிப்பேன் நம்

விரிந்த தமிழ்மண்ணை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விழி பேசினால்...

ஓசையின்றி எழுதிய

ஓராயிரம் சரித்திரங்கள்..

ஓயாமல் படம்பிடித்த

ஒளிவுமறைவில்லாக் காட்சிகள்..

ஓங்கிய ராஜ்சியங்கள்

ஓரிரவுள் சரித்த வரலாறுகள்..

ஒருவனுக்குள் ஒருத்தியை

ஒருத்திக்குள் ஒருவனை

ஓங்க வைத்து தொலைத்த நிம்மதிகள்..

ஓயாமல் அடுக்கலாம் என் சாதனைகள்....!

ஓங்கும் வீரம்

ஓரிருவருக்குள் என்னோடு..

ஓசையின்றி ஒருத்தன்

ஓரமாயிருந்து மனமாள

ஒடுங்கிடுவேன் அவன் முன்...!

ஒய்காரம் காட்டி

ஓரங்கட்டும் கன்னியோடும் என்னுறவு..

ஓயாமல் போராடி

ஓங்கும் கள வீரனும் என்னுறவு..

ஓர் நிலை நின்று

ஓங்கும் மாணவனும் எந்தோழன்..

ஓர் நிலை இன்றி

ஓடி அலையும் காமனும் என்னோடு...!

ஓய்வின்றி உழைக்கும் ஒருவனுக்கு

ஓர் வைத்தியன்..

ஓடி உழைத்து

ஓயாமல் குடித்தழிக்கும்

ஒருவன் உண்மை சொல்வேன்..

ஒளிக்க நினைக்கும்

ஒரு மனதை

ஓர் நொடியில் கண்டுணரும் உளவாளி நான்...!

ஓயாமல் தொடரும் என்சேவை

ஒருநாள் ஒருவன் ஆட்டம் முடிப்பேன்

ஓயாமல் நான் போடும் நர்த்தனம் நிறுத்தி.

ஒருவேளை என்னுதவி

ஒரு தவறானால்

ஓயாமல் கலங்கிடுவேன்.

ஒருத்தி அதையே

ஒரு தயவுதேடித் தப்பாக்கிக் கொள்கிறாள்

ஓ.... அங்கு நான்

ஓர் ஊமை விழி..!

கவிவரிகள்: குருவிகள்

(சிறிய மாற்றம் அகரவரிசைக்காகச் செய்தது நெடுக்ஸ்.)

http://www.yarl.com/forum/index.php?act=Pr...f=36&t=2091

(இது வரை அ,ஆ,இ,ஈ,உ, ஊ,எ, ஏ, ஐ,ஒ, ஓ ) என்று அகரவரிசைக்கு கள உறவுகள் தந்த கவிகள் வந்து சேர்ந்துள்ளன. எனி... :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரும் கலக்குறிங்க எல்லோருக்கும் வாழ்த்துக்கள் :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் கலக்குறிங்க எல்லோருக்கும் வாழ்த்துக்கள் :)

உங்கள் போன்ற கவி வடிப்பவர்களின் பங்களிப்பையும் எதிர்பார்க்கின்றோம். :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.