Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துணுக்காயிலும் வன்னேரியிலும் சிறிலங்கா சிறப்பு கொமாண்டோ தாக்குதல்கள் முறியடிப்பு

Featured Replies

துணுக்காயிலும் வன்னேரியிலும் சிறிலங்கா சிறப்பு கொமாண்டோ தாக்குதல்கள் முறியடிப்பு

[சனிக்கிழமை, 23 ஓகஸ்ட் 2008, 07:41 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

துணுக்காயிலும் வன்னேரியிலும் சிறிலங்கா சிறப்புப் கொமாண்டோப் படையினரின் தாக்குதல் நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படைத்தரப்பினரின் மூன்று உடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

துணுக்காய் பகுதியில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 4:00 மணியளவில் சிறிலங்கா சிறப்பு கொமாண்டோப் படையினர் முன்நகர்வுத் தாக்குதலை நடத்தினர்.

இத்தாக்குதலை விடுதலைப் புலிகள் முறியடித்தனர். படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டன.

இதில் படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் ஒன்றும் படைப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இரண்டு நாட்களின் முன்னர் வன்னேரிக்கும் அக்கராயனுக்கும் இடையில் சிறிலங்கா சிறப்பு கொமாண்டோப் படையினரின் தாக்குதல் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படைத்தரப்பினரின் இரு உடலங்கள் கைப்பற்றப்பட்டன.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

அதான் சரி.. இந்த மேக்கப் சிறப்பு கொமாண்டோக்கள் கெதியா பையில அல்லது சாரத்தோட திரும்பிப் போக வேணும்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

எனி வரும் தேர்தல்களின் அடிப்படையில் தான் இவர்களின் நகர்வுகள் அமையும். மாகாண சபை தேர்தல்கள் அரசுக்கு சாதகமாயின் அரசு நாடாளுமன்றத் தேர்தல்களையும் நடத்தக் கூடும். அப்படி அமையின்.. அது.. இப்படையினரை இன்னும் ஊடுருவ வகை செய்யும்.

வன்னியில் ஆழ ஊடுருவும் அணி எவ்வழிகளில் நுழைந்ததோ.. அவ்வழிகளிலேயே இவர்கள் ஊடுருவிக் கொண்டிருக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இவர்கள் முன்னேறி நிலைகளை துப்பரவு செய்த பின்னரே பிரதான நகர்வுப்படையணிகள் முன்னேறி வருகின்றன.

இதே மாதிரி யுக்திகளையே ஜெயசிக்குறுவிலும் படையினர் மேற்கொண்டனர். ஆனால் தற்போது படையினர் பலவீனமான வகையில் முன்னேறி வருகின்றனர். பல்குழல் மற்றும் ஆட்லறி சுடுதிறன் வலு மற்றும் விமானப்படையினரை நம்பி இவர்களின் நகர்வுகள் இருக்கின்றன. இவை எப்போதும் படைத்தரப்புக்கு ஆபத்தாகவே முடியும். ஏனெனில் படைத்தரப்பு.. நிலத்தொடர்புகளால் துண்டிக்கப்படின்.. தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் வன்னிக்காடுகளுக்குள் நிற்க நிற்பந்திக்கப்படுவர்.

விடுதலைப்புலிகளுக்கு சவாலாக விமானப்படையும் பல்குழல் எறிகணைகளும் இருக்க வாய்ப்பிருக்கிறது. முன்னேறும் படைகளுக்குள் ஊடுருவித் தாக்க ஆரம்பிப்பின்.. படையினரின் சுடுவலு பயனற்றதாகிவிடும்.. நிலையில்.. படையினர் தொடர்தோல்விகளை சந்திக்கவே அதிகம் வாய்ப்பிருக்கிறது.

தலைவர் தீர்மானிக்கிற விதத்தில் படை நடவடிக்கைகளை புலிகள் அணிகள் எடுக்கும் போது.. படைத்தரப்பு நிச்சயம் பல பலவீன முனைகளில் அடிவாங்குவது தவிர்க்க முடியாததாக இருக்கும்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவம் தென்மராட்சி சாவகச்சேரியைப் பிடிக்க அதிகமாக பல்குழல் எறிகணைகளைப் பாவிக்கத் தொடங்கிப் புலிகளை பின்வாங்கச் செய்தனர். இந்த உத்தி வேலை செய்வதால்தான் அவர்களால் பல இடங்களைப் பிடிக்கமுடிந்தது. 10000 எறிகணைகளைப் பாலிஸ்தானில் இருந்து தருவித்துள்ளபடியால் அவர்கள் பொழிந்து தள்ளி மேலும் நகரலாம். வன்னி சுடுகாடாவது பற்றி சிங்கள அரசுக்குக் கவலையில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவம் தென்மராட்சி சாவகச்சேரியைப் பிடிக்க அதிகமாக பல்குழல் எறிகணைகளைப் பாவிக்கத் தொடங்கிப் புலிகளை பின்வாங்கச் செய்தனர். இந்த உத்தி வேலை செய்வதால்தான் அவர்களால் பல இடங்களைப் பிடிக்கமுடிந்தது. 10000 எறிகணைகளைப் பாலிஸ்தானில் இருந்து தருவித்துள்ளபடியால் அவர்கள் பொழிந்து தள்ளி மேலும் நகரலாம். வன்னி சுடுகாடாவது பற்றி சிங்கள அரசுக்குக் கவலையில்லை..

புலிகளின் ஓயாத அலைகளின் யாழ்ப்பாண நகர்வுக்குப் பின்னர் விடுதலைப்புலிகளின் வலிந்த தாக்குதல் பல முறியடிக்கப்பட்டதில் பல்குழல் எறிகணைகளின் பாவனை பெருமளவு பங்களிப்புச் செய்துள்ளது.

ஆனாலும் படையினரின் வலிந்த தாக்குதல்களை பலமான நிலைகளில் இருந்து கொண்டு முறியடிப்பதில் விடுதலைப்புலிகள் வடபோரரங்கில் யாழ் குடாவிலும்.. மணலாறிலும் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி கண்டுள்ளனர். ஆனால் மன்னார் அரங்கில் அப்படி அவர்கள் ஆரம்பத்தில் செய்தாலும் பின்னர் படையினரை நுழைய அனுமதித்துவிட்டனர். அதன் விளைவு படை விரிவாக்கம் வன்னியின் கிழக்குக் கரையூடே அக்கராயன் வரை வந்திருப்பதுதான்..!

கவசப்படையணியற்ற விடுதலைப்புலிகள் பாரிய அளவு தேசங்களை உருவாக்கவல்ல பல்குழல் எறிகணை வீச்சில் இருந்து தப்பி ஒரு வலிந்த படை நடவடிக்கையை எடுப்பது என்பது சிரமமான காரியமே. பல்குழல் எறிகணை செலுத்திகளை தகர்த்து அல்லது கைப்பற்றிக் கொள்ளும் ஊடுருவல் தாக்குதல்களை நடத்தியபடிதான் அவர்கள் வலிந்த தாக்குதல்களை ஆரம்பிக்க வேண்டும்.

அல்லது விடுதலைப்புலிகள் பல்குழல் எறிகணை செலுத்திகளை தகர்க்கக் கூடிய ராங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை பாவிக்கும் திறனைப் பெற வேண்டும்.

படையினரிடமுள்ள பல்குழல் செலுத்திகள் வாகனங்கள் கொண்டு நகர்த்தப்படுவதால்.. அவற்றை அழிப்பதற்கு டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் உகந்தனவையாக அமையும். ஆனால் அந்தப் பலம் விடுதலைப்புலிகளிடம் இருக்கா இல்லையா என்பதுதான் பிரச்சனையே..! அதுமட்டுமன்றி படைத்தரப்பு பல்குழல் எறிகணை செலுத்திகளை நங்கு பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளன. அவற்றை ஊடுருவித் தாக்குவது என்பது இலகுவான காரியமன்று.

படையினரின் பல்குழல் எறிகணைகள் செயலிழக்கச் செய்யப்படின்.. அவை நிச்சயம் படையினருக்கு பெரும் பின்னடைவாகும். படையினரின் சூட்டு வலு அதிகரிப்பே அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவியாக அமைந்திருக்கிறது.

ஓயாத அலைகள் 3இல் கடும் ஆட்லறி.. விமானத்தாக்குதல்கள் மத்தியிலும் விடுதலைப்புலிகள் பெரும் தளங்களைக் கூட தாக்கி அழித்து முன்னேறி கைப்பற்றினர் என்பது நிதர்சனமான உண்மை.

புலிகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு கடும் இழப்பையும் சவாலையும் கொடுப்பதாக பல்குழல் எறிகணைகளே அதிகம் விளங்குகின்றன. அவற்றின் சுடுவலுவை குறைப்பின் மட்டுமே விடுதலைப்புலிகளால் குறைந்தளவு இழப்புடன் வலிந்த தாக்குதல்களை நடத்த வாய்ப்பு உருவாகும்.

புலம்பெயர் மக்கள் தான் அதற்கான பங்களிப்பை அளிக்க வேண்டும். போரின் திசையை மாற்றும் சக்தி புலம்பெயர் மக்களின் கையில் தான் இருக்கிறது. :)

Edited by nedukkalapoovan

அல்லது விடுதலைப்புலிகள் பல்குழல் எறிகணை செலுத்திகளை தகர்க்கக் கூடிய ராங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை பாவிக்கும் திறனைப் பெற வேண்டும்.

படையினரிடமுள்ள பல்குழல் செலுத்திகள் வாகனங்கள் கொண்டு நகர்த்தப்படுவதால்.. அவற்றை அழிப்பதற்கு டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் உகந்தனவையாக அமையும். ஆனால் அந்தப் பலம் விடுதலைப்புலிகளிடம் இருக்கா இல்லையா என்பதுதான் பிரச்சனையே..! அதுமட்டுமன்றி படைத்தரப்பு பல்குழல் எறிகணை செலுத்திகளை நங்கு பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளன. அவற்றை ஊடுருவித் தாக்குவது என்பது இலகுவான காரியமன்று.

செலுத்திகளை இடம் மற்றலாம் ஆனால் வெடிபொருள் களஞ்சியங்களையும் மாற்ற முடியாது தானே...???

கடினமான வேலை தான் ஆனால் துல்லியமாக வேவு பார்க்க முடிந்தால் எல்லாம் சாத்தியமே...!!!

இலங்கை படைகளிடம் ரஸ்யாவின் தொழில் நுட்பத்தை சார்ந்த செக்குடியரசின் தாயாரிப்பான முப்பது RM-70 M வகையை சேர்ந்த செலுத்திகள் உள்ளனவாம்... (இதேவகையை ஜோர்ஜியாவும் வைத்து இருக்கிறது)

RM-70M வகை செலுத்திகள் 40 பது குண்டுகளை 20 வினாடிகளில் செலுத்த வல்லது... ஆறு பேர் கொண்ட அணியால் இயக்கபடும் செலுத்தியானது . குண்டுகளை ஒருதடவை செலுத்தி முடிந்து இரண்டரை நிமிடங்களில் அடுத்த தாக்குதலுக்கு தயார் படுத்தி விடலாம்...

இந்த குண்டுகளை 20 KM வரை செலுத்த முடியும்... 8x8 வாகனமொண்றில் பொருத்தப்பட்ட வாகனம் 85 KM வேகத்தில் செல்ல வல்லது....

lorrymountedmbrl.jpg

பலவீனம் என்பது குண்டுகளும் ,அதன் நீளம் பருமனும்தான்.... ஒரு குண்டின் நிறை 66.8 KG யும் நீளம் 9.2 அடியும் ஆகும்... ஆகவே இரு குண்டுகள் ஒரு பெட்டி விதம் வந்தாலும் ஓரு முறைசெலுத்த 20 பெட்டிகள்..

  • கருத்துக்கள உறவுகள்

தயா நீங்கள் இப்பிடி எழுதுறியள் ஆனால் எங்கடை ஆய்வாளர்மார் ஏதோ இது சாதாரண ஈக்கு வாணம் மாதிரியும்இதை கையாலை தட்டிப்போட்டு தாக்குதல்களை நடத்தலாமெண்டெல்லோ எழுதினம். அப்பிடிப்பாத்தால் உங்களுக்கு ஆயுதங்கள் பற்றின அறிவு இல்லையெண்டு விளங்குது.முடிஞ்சால் அவையளின்ரை ஆய்வுகளிலை ஆயுத களமுனை அனுபவங்களை பெற்றுக்கொண்டு வந்து எழுதவும். :):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்

பரபரப்பு வன்னியில இறக்கிய மிக் விமானம் எப்ப எழும்பும்?

இது கூட தெரியாதா உங்களுக்கு சமீபத்தில் புலிகள் முல்லைதீவில் நீளமான ஓடுபாதை அமைப்பதாக சிங்கள நாளேடை மேற்கோள் காட்டி புதினத்தில் செய்தி வந்தது படிக்கவில்லையா?

இந்த மிக்குக்காகத்தான் நீளமான ஓடு பாதை

:wub::(:D:lol::lol:^_^

Edited by THEEPAN0007

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரபரப்புக்காரர் திருந்தமாட்டார்கள் என்றால் ஒரே வழி. முதலில் நேரே 2 தரம் சொல்லிப் பார்ப்போம். அதுவும் முடியவில்லை... நாங்கள் இப்படித் தான் எழுதுவோம் என்று செய்தால் பொது இடத்தில் பரபரப்பு 4 பேப்பரைப் போட்டு எரிக்க வேண்டியது தான்.

பரபரப்பு இறக்கின மிக்27 எழும்பினா அது திருப்பி வந்து இறங்கிறதை உறுதிப்படுத்திறதுக்கு மிக்27 இக்கு ஏற்ற ஒரு உலங்குவானூர்தி பறப்பில் ஈடுபட வேணுமாம். மிக்27 இக்கு ஏற்ற ஒரு உலங்குவானூர்திய யாராவது வன்னியில கொண்டுபோ இறக்கினியள் எண்டா மிக்27 உம் வளமையான தாக்குதல் நடவடிக்கைகளில் பங்கு கொள்ளத் தொடங்கும்.

பரபரப்பு இப்ப விமானங்கள் இறக்கிற வேலையை விட்டுட்டு கொசு மருந்தடிக்க தயாராகிக் கொண்டிருக்கு. ஆனபடியா வேறையாரும் தான் செய்ய வேணும் போல கிடக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிக்27 இக்கு ஏற்ற ஒரு உலங்குவானூர்திய யாராவது வன்னியில கொண்டுபோ இறக்கினியள் எண்டா

ஏன்.. அடுத்த கிழமை பேப்பரிலோ அல்லர் ஜர்னலிலோ கொண்டு போய் இறக்க முடியாதா..?

பரபரப்பு இப்ப விமானங்கள் இறக்கிற வேலையை விட்டுட்டு கொசு மருந்தடிக்க தயாராகிக் கொண்டிருக்கு. ஆனபடியா வேறையாரும் தான் செய்ய வேணும் போல கிடக்கு.

:):D:D

எட அவனவன் வன்னியில இந்தா புலி தேளா மாதிரி மாறி கொடுக்களால கொடுக்க போகுது எண்டு ஏதோ புலம்புறாங்கள் ! இப்ப நீங்கள் வன்னியல பரபரப்பு இரக்கின விமானத்தi பற்றி கதைக்கிறியள் ஓ,,,,,, சில நேரம் கருணா சொன்ன மாதிரி கம்புச்சியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் போகத் தான் எழும்புமாக்கும்......ஊட்ரா உட்'ரா உட்ரா

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று திருமலயில் நடைபெற்ற வான்புலிகளின் தாக்குதல் நடைபெற்றது தெரியும் தானே. விமானத்துக்குத் தேவையான எரிபொருளை அதிக நாட்கள் சேமித்து வைக்க முடியாது. அப்படியானால் அவர்களின் கப்பல் போக்குவரத்து தொடர்ந்து நடைபெறுகிறது.1999ல் சாவகச்சேரியில் சிறிலங்கா அரசு பல்குழல் எறிகணைகளைப் பயன்படுத்தியது. இப்பொழுது 9 வருடங்கள் ஆகிவிட்டது. சென்றவருடத்தில் வான்படைகளை உலகுக்கு அறிமுகம் செய்த விடுதலைப்புலிகள், பல்குழல் எறிகணைகளையும் வாங்கியிருப்பார்கள் அல்லது அதே போல தயாரித்தும் இருப்பார்கள். 2ம் ஈழப்போரில் புலிகள், பசீலன் 2000த்தைத் தயாரித்து இராணுவத்தைக் கிலி கொள்ளச் செய்தது தெரிந்ததே. தேவையான நேரத்தில் இதுவரை உபயோகிக்காத ஆயூதங்களையும் உபயோகிப்பார்கள். விரைவில் நடக்கவிருக்கும் அதிசய நிகழ்வில் இவற்றைக் காணலாம்.

அப்பு கந்தப்பு நல்லா பரபரப்புப் படிக்கிறியள் போல.

மல்ரி பரல் வாங்கியிருப்பினம், அதற்கு மாற்றீடாக செய்திருப்பினம் எல்லாம் இருக்கட்டும்.

இண்டைக்குத் திருமலையிலை போட்ட குண்டிலை ஒண்டு வெடிக்கேல்லையாம். ஏனெண்டு தெரியுமோ?

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்குத் திருமலையிலை போட்ட குண்டிலை ஒண்டு வெடிக்கேல்லையாம். ஏனெண்டு தெரியுமோ?

விரைவில் நடக்கவிருக்கும் அதிசய நிகழ்வுக்கு இது கூட பரிட்சார்த்த நடவடிக்கையாக இருக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.