Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

BMW வில் கூட எமன் வரலாம்

Featured Replies

வழமையான ஒரு செவ்வாய்கிழமை. பல்கலைக்கழகத்திற்கு சென்றுவிட்டு வேலைத்தளத்தை நோக்கி காரில் பயணித்து கொண்டிருக்கின்றேன். கைத்தொலை பேசி அலறுகின்றது. கார் ஓட்டும் போது யார் எத்தனை முறை அழைத்தாலும் பதிலளிப்பதில்லை என சமீபத்தில் தான் ஒரு சத்தியம் பண்ணியது நினைவுக்கு வந்து தொலைத்தது. சாலை விளக்கு சிவப்பானதும் யார் என பார்த்தால் என்னுடைய மாமா. (உனக்கிருக்கும் 1000 மாமாவில் இது யார் என கேட்கப்படாது.) அதுவும் எனக்கு அதிகம் செல்லம் தரும் மாமா. காரை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு பேசினால், மாமா மிகவும் பதட்டமாக இருப்பது குரலில் தெரிந்தது. போனை வையுங்க என சொல்லிவிட்டு மாமா வீட்டிற்கு போனால், மாமாவின் கண்களில் கண்ணீர். இதுவரை மாமா அழுது பார்த்ததில்லை என பொய் சொல்ல மாட்டேன். எங்கள் குடும்பத்தில் சில உயிர்கள் போனபோது பார்த்ததுண்டு. ஆனால்? கண்ணீரே எனக்கு மறுபடி ஒரு உயிரா என அதிர்ச்சி தந்தது.

உடைந்து ோயிருந்த மாமாவிடம் பேசுவதற்கு சுவரில் முட்டி கொள்ளலாம். பதில் சொல்லவே மாட்டார். என்ன தான் நடக்குது பார்க்கலாம் என பக்கத்தில் உட்கார்ந்தேன். அந்த நேரம் பார்த்து மாமாவின் வேலைத்தளத்தில் இருந்து தொலைபேசி. எடுத்து பேசிய எனக்கே மூச்சு நின்று விடும் போலிருந்தது.

காரணம் மாமாவுடைய வேலை நண்பர் ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டதாக செய்தி கிடைத்தது தான். மாமா IBM இல் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் மிகவும் இனிய நண்பனாக பழகிய மனிதன். மாமாவுக்கு மேலதிகாரியாக இருந்த போதும் சரி, சரிசமமாக மாமாக்கு பதவி உயர்வு கிடைத்த போதும் சரி; ஒரு மாற்றமும் காட்டாமல் இனிமையாக பழகிய ஒரு அற்புதமான மனிதன். திருமணமாகி ஒரு வருட விழாவிற்கு நிச்சயம் வரவேண்டும் என கேட்டதோடு நிற்காமல், தன் மனைவிக்கு சேலை கட்ட விருப்பம் அதனால் பரிசாக சேலை எடுக்க உதவ வேண்டும் என கேட்ட மனிதன். சேலையோடு நானே வருகின்றேன் என நான் சொன்னதை கேட்டு "bless you sweet heart" என சொன்ன மனிதன், பதவி உயர்வு கிடைத்து புது BMW கார் வாங்கி இரண்டே நாட்களில்.....

தப்பு இவர் காரை இடித்து சென்ற பெரிய வாகன ஓட்டியுடையது தானாம். இன்சுரன்சில் பணம் அதிகம் கிடைக்குமாம். BMW இல் airbags அனைத்து பக்கமும் இருக்கும் போது எப்படி தலையில் அடிபடும் என ஆராய்கின்றார்களாம். அவர்களும் பணம் குடுக்க வேண்டி வருமாம். என்ன வந்து என்ன, ஒருவருடத்தில் கணவனை பிரிந்த அந்த பெண்ணிற்கு கணவன் வருவாரா!

நண்பனின் பிரிவால் உடல் நலம் கெடும் நிலைக்கு வந்த என் மாமாவின் இழப்பு தான் ஈடாகுமா? இருவருமாக வேலை விடயமாக வெளியே செல்ல இருந்தார்களாம். சற்றே தூர இடத்தில் இருப்பதால் சீக்கிரமே புறப்பட்ட மனிதர் உயிரற்று 4 நாட்களில் பின்னர் தான் வீடு போய் சேர்ந்தாராம். கிளம்புவதற்கு ஆயத்தமாகி கொண்டிருந்த மாமாவிற்கு காவல் அதிகாரிகள் தான் தகவல் தெரிவித்தார்களாம்.

வாகனம் ஓட்டும் போது மிகவும் கவனமாக ஓட்டுங்கள். உங்கள் பாதுகாப்பு முக்கியம். வீதியில் பல வாழ்க்கைகள்...அழியாதீர்கள்...அ

  • கருத்துக்கள உறவுகள்

நினைச்சுப் பார்க்கவே பயமாக இருக்கிறது. எவ்வளவு கவலைக்குரிய விடயம்..! :icon_idea:

உண்மை தான் தூயா பிறப்பும், இறப்பும் எம் கையில் இல்லை என்பதற்கு உதாரணமாகப் போய் விட்டார் உங்கள் மாமாவின் நண்பர். எனக்கும் இப்படியொரு இழப்பு 2005 இல் ஏற்பட்டது. எனது நண்பரொருவர் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவ பிரித்தானியாவிலிருந்து தாயகம் சென்றிருந்தார். அங்கு அவர் தனது இன்னொரு நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பின் இருந்து சென்ற போது, பின்னால் வந்த பார ஊர்தி மோதி அவர் பலியாகிவிட்டார். பார ஊர்தி ஓட்டுனர் கைத்தொலைபேசியில் கதைத்தபடி வந்ததினால் தான் முன்னால் போன மோட்டார் சைக்கிளை கவனிக்கவில்லையாம். நாம் கவனமாக இருந்தாலும் அடுத்்தவர்கள் கவனக் குறைவாக வரும் பொழுது என்ன செய்ய முடியும்? இந்தச் செய்தி கேட்டு நான் அடைந்த வேதனை சொல்லி மாளாது. நல்லவர்களை இறைவன் விரைவில் தன்னிடம் அழைத்துக் கொள்கின்றான் போலும்.

  • கருத்துக்கள உறவுகள்

மார்க்.... ன் ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் துயரத்தில் நானும் பங்குகொள்கின்றேன் தூயா

  • தொடங்கியவர்

மனிதாபிமானத்துடன் துக்கத்தில் பங்கெடுத்த உறவுகளுக்கு மிக்க நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் ஒரு விடயம்... முடிந்தால் வன்னி மண்ணுக்கு சென்று துப்பாக்கி ஏந்தி போராடுங்கள்.. இல்லை என்றால் உங்கள் பதிவுகளில் நீங்கள் இடும் வாசகங்களை நீக்கி விடுங்கள்...."உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது

உரைத்தது தமிழீழம் - அதை

நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்

நிச்சயம் எடுத்தாள்வோம் "

வரும் பொழுதே உண்மையை சொல்லி ஆட்களை வெறுபேற்றுறது என்றே வாறீங்கள்.அது சரி கனநாளைக்கு பிறகு இங்கால பக்கம்.

மனிதாபிமானத்துடன் துக்கத்தில் பங்கெடுத்த உறவுகளுக்கு மிக்க நன்றிகள்.

மனிதாபிமானத்துடன் நானும் துக்கத்தில பங்கு கொள்கிறேன்.(இன்சுரன்ஸ் இருக்கிற காரை தான் அதிகம் ஓடுறனான் மற்ற ஆட்களுக்காவது காசு கிடைக்கும் என்ற நினைப்பில தான்).

  • கருத்துக்கள உறவுகள்

சோகப்பதிவு.

  • தொடங்கியவர்

காஸில்ஹில்ஸில் தான் நடந்தது கந்தப்பு. பத்திரிகை, வானொலியில் கூட சொல்லியிருந்தார்கள். காஸில்ஹில் சுடுகாட்டில் தான் புதைத்தார்கள். :icon_idea: எனக்கு அந்த பக்கம் இப்ப போகவே பயமாயிருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

எப்பொழுது நடந்தது தூயா?

  • தொடங்கியவர்

7 - 8 வாரம் இருக்கும்..

மனைவியார் தங்கள் பிறப்பிடமான குயீன்ஸ்லண்துக்கே சென்றுவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு, நான் சொல்ல வந்ததை நீங்களும் சொல்லியிருக்கின்றீர்கள். தூயா 3 ஆவது பந்தியை கொஞ்சம் பிரித்து எழுதியிருந்தால் மேலோட்டமாக வாசிப்பவர்களுக்கும், தூயா எழுதிய துயர்பகிர்வை கதையாக நினைத்து வாசித்தவர்களுக்கும் குழப்பம் வந்திருக்காது என நினைக்கிறேன்.

அட..இப்ப எமன் எருமையில வாறதில்லையா..?? :o ..ம்ம் அவரும் இப்ப நவீன வாகனத்தில தான் வாறார் போல இருக்கு எனி நான் எருமை மாட்டில தான் பயணிக்கனும்.. :unsure:

கோவிக்காதையுங்கோ தங்கச்சி..சி..(நான் பகிடிக்கு).. :o

பதிவை வாசித்த போது மனம் கணத்தது..து..மார்கின் பிரிவு துயரால் வாடும் உறவுகளுக்கும்..உங்களுக்கும் உங்களது மாமாவிற்கு என்னுடைய ஆழ்ந்த அநுதாபங்கள் :lol: ..நாம் வீதியில காரை ஒழுங்கா ஓட்டினாலும் வாரவன் ஒழுங்கா ஓட்டாட்டி என்ன செய்யிறதப்பா..பா..!! :icon_mrgreen:

ஜம்மு பேபி பஞ் -

"கண்ணா வாழ்க்கை என்பதே ஒரு விபத்து தான்" :blink:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு மோகன் அறிவது.. எனது பதில்கள் இரண்டு நீக்கப்பட்டுள்ளன... நீங்கள் காரணம் கூறினால் உபகாரமாக இருக்கும். எனது பதில்களில் எந்த தவறும் இருப்பதாக தெரிவதில்லை...... Can I take it comments against moderators' pets are not allowed in here? Disappointing is not the right word................... cant be justified. Many thanks.

Edited by chumma....

  • கருத்துக்கள உறவுகள்

என்ர அருமந்த ஒரு வரியும் அடிபட்டுட்டுது..! :D

  • கருத்துக்கள உறவுகள்

அந்த காலத்தில ஊரில அப்புகாத்துமார் கோபம் வந்தால் இங்கீலிஸ்ல்தான் திட்டிரவையள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த காலத்தில ஊரில அப்புகாத்துமார் கோபம் வந்தால் இங்கீலிஸ்ல்தான் திட்டிரவையள்

புத்தன் இதுக்கு எல்லாம் கோபப்பட்டால் என் நிலமை என்ன..... ஒரே ஒரு ஆதங்கம்.......

ஒரு உதாரணம்... ஒரு வேலைத்திட்டத்தை மூன்று குழுக்களிடம் கொடுத்ததாக வைத்துக்கொள்வோம்...

குழு 1 : முழுக்க முழுக்க தெற்காசியர்கள்....

குழு 2: முழுக்க முழுக்க மேற்கத்திய நாட்டவர்கள்...

குழு 3: மேற்கத்திய நாட்டவர்கள் + தெற்காசியர்கள் + மற்றும் வேற்று இனத்தவர்கள் கொண்ட குழு....

வேலைத்திட்டம் முடிந்தவுடன் பார்த்தால் 90% சந்தர்ப்பங்களில் குழு 3 சிறப்பாக செயற்பட்டிருக்கும்....குழு 2 இரண்டாம் நிலையிலும் குழு 1 மூன்றாம் நிலையிலும் தான் இருக்கும்..... இதற்க்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கியமான ஒரு காரணம் குழு 1 ல் இருப்பவர்கள் தமக்குள் இருக்கும் நெருங்கிய பழக்கத்தால் (Or Attitude) உறுப்பினர் தப்பு அல்லது தவறு செய்ய முற்படும் போது அதை மூடி மறைக்க பார்ப்பார்கள்....அதே நேரம் குழு 3 ல் சிறப்பாக செயற்பட்ட உறுப்பினர் யார் என்று பார்த்தால் அதுவும் பெரும்பாலும் தெற்காசியர்களாக தான் இருக்கும்....

குழப்பமாக இருந்தால் விட்டு விடுங்கள்.......

கொஞ்சம் குழப்பமாக தான் இருக்கிறது இரண்டு தரம் வாசித்தன் ஜம்முவிட்டையும் கேட்டு பார்த்தன் உதுக்கு கருத்து எழுதாம போனா கெளரவ பிரச்சினை.

என்னுடைய கருத்தையும் சொல்லிடுறன்.மூன்றாம் குழுவில இருக்கிற ஆட்கள் ஒவ்வொருத்தன் மீது ஒவ்வொருத்தன் பிழை கண்டு பிடித்து தாங்கள் முன்னுக்கு வர பார்பார்கள் அதில் தெற்காசியர்கள் சளைக்காமல் மற்றவன் மேல் குற்றம் கண்டு பிடித்து முன்னுக்கு வந்திடுவான் என்று சொல்லுறியள்.சரியா.

ஆகவே கடைசி குழுவில் குறிப்பிட்ட ஆட்கள் தங்களுகுள்ள பிரச்சினைபட்டு கொண்டு வெளியேறிய வேண்டிய சந்தர்பங்களும் அதிகம் என்று எடுத்து கொள்ளளாம் என்ன சும்மா.

இப்ப தான் இன்னும் குழப்பமா இருக்கு. :D

பின்வரும் குழுக்கள் வெவ்வேறு கருத்தாடல் தளத்தை பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம்.

  • குழு 1: நம்மவர்கள்
  • குழு 2: முழுக்க முழுக்க மேற்கத்திய நாட்டவர்கள்
  • குழு 3: மேற்கத்திய நாட்டவர்கள் + நம்வர்கள் + மற்றும் வேற்று இனத்தவர்கள் கொண்ட குழு

நம்மவர்களின் கருத்தாடல் தளத்தை கண்காணித்தால் அங்கு தெரிவது என்ன?

நம்மவர்களின் கருத்தாடல் தளம்:

  • வைக்கற் பட்டறை நாய் மாதிரி தாங்களும் எதையாவது சுயமாக எழுதாது மற்றவனையும் சுயமாக எழுதவிடாது குழப்பம் செய்துகொண்டு இருப்பார்கள்.
  • ஒருத்தனை ஒரு பெயரில் வந்து பாராட்டிவிட்டு மீண்டும் இன்னொரு பெயரில் வந்து திட்டுவார்கள்.
  • ஓசியில் பொழுதுபோக்கிக்கொண்டு Common Sense (துடைப்பங்கட்டை) பற்றியும், Attitude (விளக்குமாறு) பற்றியும் விளக்கம் கேட்பார்கள் அல்லது வியாக்கியானம் செய்வார்கள்.
  • நண்பன் என்றால் என்ன என்ற அர்த்தமே தெரியாது தமது நண்பர்கள் பட்டியலில் எழுந்தமானமாக யாரையாவது இணைத்து இருப்பார்கள் அல்லது எழுந்தமானமாக பல்வேறு வண்ணங்களில் பலரை இணைத்து இருப்பார்கள். நண்பர்களையே (?) துவம்சமும் செய்வார்கள்.
  • ஒருத்தன் தம்மை பாராட்டி எழுதும்போது மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். அவனை/அவளை இன்னொருத்தன் முறைகேடான முறையில் துவம்சம் செய்யும்போது பொத்திக்கொண்டு பார்வையாளர்களாக மட்டும் இருந்து வேடிக்கை பார்ப்பார்கள்.

______________________________________________________

குழப்பமாக இருந்தால் உங்கள் கணணியை உடைத்துவிடுங்கள்..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் மாப்பு இப்போது கருத்துக்கள்,ஆக்கங்கள் ஒன்றும் எழுதுவதில்லை?யார்மேல் கோபம் :D

Edited by குமாரசாமி

புத்தன் இதுக்கு எல்லாம் கோபப்பட்டால் என் நிலமை என்ன..... ஒரே ஒரு ஆதங்கம்.......

ஒரு உதாரணம்... ஒரு வேலைத்திட்டத்தை மூன்று குழுக்களிடம் கொடுத்ததாக வைத்துக்கொள்வோம்...

குழு 1 : முழுக்க முழுக்க தெற்காசியர்கள்....

குழு 2: முழுக்க முழுக்க மேற்கத்திய நாட்டவர்கள்...

குழு 3: மேற்கத்திய நாட்டவர்கள் + தெற்காசியர்கள் + மற்றும் வேற்று இனத்தவர்கள் கொண்ட குழு....

வேலைத்திட்டம் முடிந்தவுடன் பார்த்தால் 90% சந்தர்ப்பங்களில் குழு 3 சிறப்பாக செயற்பட்டிருக்கும்....குழு 2 இரண்டாம் நிலையிலும் குழு 1 மூன்றாம் நிலையிலும் தான் இருக்கும்..... இதற்க்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கியமான ஒரு காரணம் குழு 1 ல் இருப்பவர்கள் தமக்குள் இருக்கும் நெருங்கிய பழக்கத்தால் (Or Attitude) உறுப்பினர் தப்பு அல்லது தவறு செய்ய முற்படும் போது அதை மூடி மறைக்க பார்ப்பார்கள்....அதே நேரம் குழு 3 ல் சிறப்பாக செயற்பட்ட உறுப்பினர் யார் என்று பார்த்தால் அதுவும் பெரும்பாலும் தெற்காசியர்களாக தான் இருக்கும்....

குழப்பமாக இருந்தால் விட்டு விடுங்கள்.......

ம்ம்..உதாரணம் நன்றாக தான் இருக்கின்றது சும்மா..மா அண்ணா..ணா..!!.. :)

ஆனா பாருங்கோ இந்த மூன்று குழுவிலையும் "டீம் லீடர்" ஒரு தெற்காசியனா இருந்திருந்தா அந்த குழு உருபடுறதிற்கு வாய்ப்பே :lol: இல்ல அதுவே..

மேற்கத்திய நாட்டவரா இருந்தா..

குழுவில் ஒருவர் பிழை விட்டால் அவரை கூட்டி கொண்டு போய் எனி இப்படி செய்ய வேண்டாம் இப்படி செய்யுங்கோ எண்டு உற்சாகபடுத்துவார்..(எனக்கு நடந்த அனுபவம்).. :)

ஆனால் அதுவே..!!

ஒரு தெற்காசியனா இருந்தா..தா எல்லோர் முன்னிலையிலும் அந்த பிழை விட்ட ஆளை அவமானபடுத்துவார்..(இதுவும் எனக்கு நடந்தது).. :)

அதன் பின் அந்த குறிப்பிட்ட ஆள் சோர்வடைந்து நிறுவனமா இருந்தா அந்த நிறுவனத்தில் உற்பத்தியில் கூட பாதிப்புகள் ஏற்படலாம்..என்ன நான் சொல்லுறது சரியோ..?? :(

ஆகவே..இதுவும் குழப்பமா இருக்கலாம் சும்மா அண்ணாவிற்கு..கு..அதுகாக உங்கள் கருத்தில் நியாயமில்லை எண்டு நான் முத்திரை குத்தவில்லை..நன்றி..!! :D

தம்பி... இங்க இருந்து அப்ப நான் வரட்டா போகட்டா என்று அடிகிற நேரம்...... நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் சட்ட திட்டங்களை ஒரு முறை படிக்கலாமே? எந்த ஒரு மேலை நாட்டிலும் எந்த ஒரு நிறுவனமோ அல்லது அரசாங்கமோ எவரையும் சக வேலையாள் மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதை அனுமதிப்பதில்லை... நான் வேலை செய்யும் நிறுவனத்தில் இப்படி நிலமை என்றால்... எந்த வித பாகுபாடும் இன்றி உடனே அந்த நபர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் குழப்பமாக தான் இருக்கிறது இரண்டு தரம் வாசித்தன் ஜம்முவிட்டையும் கேட்டு பார்த்தன் உதுக்கு கருத்து எழுதாம போனா கெளரவ பிரச்சினை.

என்னுடைய கருத்தையும் சொல்லிடுறன்.மூன்றாம் குழுவில இருக்கிற ஆட்கள் ஒவ்வொருத்தன் மீது ஒவ்வொருத்தன் பிழை கண்டு பிடித்து தாங்கள் முன்னுக்கு வர பார்பார்கள் அதில் தெற்காசியர்கள் சளைக்காமல் மற்றவன் மேல் குற்றம் கண்டு பிடித்து முன்னுக்கு வந்திடுவான் என்று சொல்லுறியள்.சரியா.

ஆகவே கடைசி குழுவில் குறிப்பிட்ட ஆட்கள் தங்களுகுள்ள பிரச்சினைபட்டு கொண்டு வெளியேறிய வேண்டிய சந்தர்பங்களும் அதிகம் என்று எடுத்து கொள்ளளாம் என்ன சும்மா.

இப்ப தான் இன்னும் குழப்பமா இருக்கு. :lol:

மன்னிக்க வேண்டும் புத்தன்... நீங்கள் சொல்வது எல்லாம் ஒரு வேளை 10 ஆண்டுகளுக்கு முன்னர் அல்லது தொழில் நுட்பத்தில் பின் தங்கிய நிறுவங்களில் வேண்டுமானால் சாத்தியம்.

புத்தன், ஜமுனா நான் சொல்ல வந்ததை தமிழில் சொல்ல முடியவில்லை.......அதனால் ஆங்கிலத்தில்...

.....................Predominantly Asians are biased in most occasions.......................

Edited by chumma....

தம்பி... இங்க இருந்து அப்ப நான் வரட்டா போகட்டா என்று அடிகிற நேரம்...... நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் சட்ட திட்டங்களை ஒரு முறை படிக்கலாமே? எந்த ஒரு மேலை நாட்டிலும் எந்த ஒரு நிறுவனமோ அல்லது அரசாங்கமோ எவரையும் சக வேலையாள் மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதை அனுமதிப்பதில்லை... நான் வேலை செய்யும் நிறுவனத்தில் இப்படி நிலமை என்றால்... எந்த வித பாகுபாடும் இன்றி உடனே அந்த நபர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்....

சும்மா..மா அண்ணா..!!

உங்க நான் சும்மா வாற நேரம் சும்மா..சும்மா வரட்டே..போகட்டா எண்டு சொல்லுறனான் பாருங்கோ ஆனா யாழை விட்டு போறன் எண்டிட்டு வாறதில்லை தானே நான்..!! :D

மற்றது..!!

இங்க முதலில நிறுவனத்தின்ட சட்ட திட்டங்களை பற்றி தான் படிப்பீனம் பாருங்கோ..கோ ஆனாலும் நான்..(என்னை போன்ற இளையவர்கள் உள்நுளையும் போது)..குறிப்பாக அவர்கள் முதலில் இவ்வாறான சட்டதிட்டங்களை அசட்டையீனம் செய்கிறார்கள்.. :D

இதில நான் எல்லாரையும் குற்றம் சாட்டம் விருப்பமில்லை ஏன் எண்டா இப்படி செய்யிறவை எங்கன்ட ஆட்களும் இந்தியர்களும் தான்..ன் வெள்ளையர்கள் அப்படி இல்லை..லை..!! :D

இப்படி இருக்கக்க நாங்கள் போய் முறையிட்டால்..ல் முதலில் பெரிதாக அவர்கள் கண்டுப்பதில்லை..லை அதுக்காக அவர்கள் அதனை முற்று முழுதாக அசட்டையீனம் செய்கிறார்கள் எண்டு சொல்லவில்லை அத்துடன் நீங்கள் சொல்வது போல் குறிப்பிட நபரை எந்த வித பாகுபாடுமின்றி வீட்டிற்கு அனுப்புவார்கள் என்பது ஏற்று கொள்ள கூடிய விடயம் இல்லை..!! :D

ஏன் எனில்..!!

முதலில் அவருக்கு "கவுன்சிலிங்" கொடுத்து அதற்கு பிறகும் அவரை பணியில் அமர்த்தி அதன் பின் அவரின் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து தான் வெளியேற்றுவார்கள்.. :)

ஆனா நாங்க இப்போது தான் நிறுவனதிற்குள்ளே நுழைந்திருக்கிறோம்..ம் ஆனபடியா அவர்கள் சொல்வதை கொஞ்சம் செவிமடுத்து தான் ஆகவேண்டும் அந்த வகையில் வாற "டீம் லீடர்" ஒரு மேற்கத்தவராக இருந்தால் எங்களுடன் சேர்ந்து அநுசரித்து போவார்கள் ஆனால் உதுவே தெற்காசியராக இருந்தால்.. :D

நிலைமை அவ்வளவு தான்..ன்..!!

ஆகவே என்ன தான் நிறுவனத்தில இருந்து அவரை துரத்துறது எண்டு சொன்னாலும் நிறுவனதின் உற்பத்தியில் கணிசமான அளவு சரிவு ஏற்பட தானே செய்கிறது..இந்த தெற்காசியர்களாள்..பிறகென்ன..??..அதை போல் சும்மா..மா அண்ணா யாழ்கள சட்டதிட்டங்களை நேரம் கிடைக்கும் போது வடிவாக வாசித்தால்..

தாங்களும் இங்கே மன உளைச்சல் பட வேண்டியதில்லை என்பது தம்பியின் பணிவான வேண்டுகோள்..ள் தொடரட்டும் உங்களது கருத்துகள்..!! :D

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சும்மா..மா அண்ணா..!!

உங்க நான் சும்மா வாற நேரம் சும்மா..சும்மா வரட்டே..போகட்டா எண்டு சொல்லுறனான் பாருங்கோ ஆனா யாழை விட்டு போறன் எண்டிட்டு வாறதில்லை தானே நான்..!! :(

இதற்கு என்னுடைய பதிலை சொன்னால் இங்கே நீக்கப்பட்டு விடும்...அதனால் நான் இதற்கு பதில் அளிக்கவில்லை.

இங்க முதலில நிறுவனத்தின்ட சட்ட திட்டங்களை பற்றி தான் படிப்பீனம் பாருங்கோ..கோ ஆனாலும் நான்..(என்னை போன்ற இளையவர்கள் உள்நுளையும் போது)..குறிப்பாக அவர்கள் முதலில் இவ்வாறான சட்டதிட்டங்களை அசட்டையீனம் செய்கிறார்கள்.. :(

இதில் இருந்து தெரிகின்றது உங்களின் ஈடுபாடு.....உங்களை நம்பி ஒருத்தன் தான் கஸ்டப்பட்டு உழைத்த காசை உங்கள் மீது முதலீடு செய்ய.. நீங்கள் ஓசியில் மங்களம் பாட நினைக்கின்றீர்கள்...

இதில நான் எல்லாரையும் குற்றம் சாட்டம் விருப்பமில்லை ஏன் எண்டா இப்படி செய்யிறவை எங்கன்ட ஆட்களும் இந்தியர்களும் தான்..ன் வெள்ளையர்கள் அப்படி இல்லை..லை..!! :D

நான் சொல்ல வந்ததற்கு நீங்களே பதில் கொடுத்து விட்டீர்கள்...

இப்படி இருக்கக்க நாங்கள் போய் முறையிட்டால்..ல் முதலில் பெரிதாக அவர்கள் கண்டுப்பதில்லை..லை அதுக்காக அவர்கள் அதனை முற்று முழுதாக அசட்டையீனம் செய்கிறார்கள் எண்டு சொல்லவில்லை அத்துடன் நீங்கள் சொல்வது போல் குறிப்பிட நபரை எந்த வித பாகுபாடுமின்றி வீட்டிற்கு அனுப்புவார்கள் என்பது ஏற்று கொள்ள கூடிய விடயம் இல்லை..!! :huh:

ஏன் எனில்..!!

முதலில் அவருக்கு "கவுன்சிலிங்" கொடுத்து அதற்கு பிறகும் அவரை பணியில் அமர்த்தி அதன் பின் அவரின் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து தான் வெளியேற்றுவார்கள்.. :mellow:

நீங்கள் மனிதனை ஒரு இயந்திரமாக பயன்படுத்தும் நிறுவனங்களிற்கு ஏன் வேலைக்கு போகின்றீர்கள்... உங்களை ஒரு சொத்தாக அல்லது மூலப்பொருளாக (சரியான சொல் இல்லை என்றால் நான் சொல்ல வந்தது Resource ) பயன் படுத்த கூடிய நிறுவனத்தில் போய் சேருங்கள்...( நீங்கள் எதையும் அசட்டை செய்வதால் உங்களை அப்படி கருத முடியாது) நான் வேலை செய்யும், செய்த நிறுவனங்களில் சக வேலை செய்பவரை மன உழைச்சலுக்கு உள்ளாக்கினால் உடனடியாக வெளியில் தான்... நானே இரண்டு பேரை வேலையை விட்டு நீக்கி இருக்கின்றேன்....

ஆனா நாங்க இப்போது தான் நிறுவனதிற்குள்ளே நுழைந்திருக்கிறோம்..ம் ஆனபடியா அவர்கள் சொல்வதை கொஞ்சம் செவிமடுத்து தான் ஆகவேண்டும் அந்த வகையில் வாற "டீம் லீடர்" ஒரு மேற்கத்தவராக இருந்தால் எங்களுடன் சேர்ந்து அநுசரித்து போவார்கள் ஆனால் உதுவே தெற்காசியராக இருந்தால்.. :(

நிலைமை அவ்வளவு தான்..ன்..!!

ஆகவே என்ன தான் நிறுவனத்தில இருந்து அவரை துரத்துறது எண்டு சொன்னாலும் நிறுவனதின் உற்பத்தியில் கணிசமான அளவு சரிவு ஏற்பட தானே செய்கிறது..இந்த தெற்காசியர்களாள்..பிறகென்ன..??..அதை போல் சும்மா..மா அண்ணா யாழ்கள சட்டதிட்டங்களை நேரம் கிடைக்கும் போது வடிவாக வாசித்தால்..

தம்பிக்கு ஒரு சின்ன விளக்கம்.... எதையும் சிறிய வட்டத்திற்குள் இருந்து பார்த்தால் இப்படி தான் தோன்றும்.......

இப்ப நான் நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்கின்றேன் என்று வைப்போம்... நீங்கள் எனது அதிகாரி என்று வைப்போம்... நீங்கள் என்னை மன உழைச்சலுக்கு உள்ளாக்குகின்றீர்கள் என்று வைப்போம்.... நான் இன்னும் 5 பேருடன் வேலை செய்கின்றேன் என்று வைப்போம்.. நீங்கள் என்னை மன உழைச்சலுக்கு உள்ளாக்குவதை என்னுடன் வேலை செய்யும் 5 பேரும் கண்டிப்பாக அறிவார்கள், அத்தோடு நில்லாமல் அவர்களும் ஒரு வித மன உழைச்சலுக்கு ஆளாவார்கள்.... விளைவாக...உங்களுக்கு கீழே வேலை செய்யும் எங்கள் 6 பேருடைய Productivity ம் குறையும்..... இதை நிவர்த்தி செய்ய ஒரே வழி என்ன? அதாவது efficiency ஜ அதிகரிக்க செய்ய வேண்டியது என்ன? உங்களை வேலையால் நிற்பாட்டுவது தானே?

Oh my little brother, I work for one of the top 15 companies in the world and we employ over 340,000 people worldwide. You really dont want to know the bad world behind the wall my boy....

Edited by chumma....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.