Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"வெள்ளைப் பொம்பிளை வேணுமெனக் கேட்கும் இலங்கைத் தமிழ்ப் பெடியள்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"வெள்ளைப் பொம்பிளை வேணுமெனக் கேட்கும் இலங்கைத் தமிழ்ப் பெடியள்"

muzhna34906814098060161sw6.gif

பொன்னர்: சில தமிழ்ப் பெடியள் தாங்க கட்டுறதுக்கு வெள்ளப்பொம்பிளை வேணும்...! வெள்ளைப் பிள்ளை பிறக்கிறது எண்டா குங்குமப்பூ சாப்பிட்டாச் சரி எண்டு நினைக்கினம்...!

மன்னர்: அப்ப ஆபிரிக்கா கறுப்புப் பொம்பிளைகள் எல்லாம் தாங்கள் குங்குமப்பூ சாப்பிட்டு பிள்ளைப் பெத்தா ஆப்பிரிக்க சனத்தொகையே வெள்ளையாக மாறிப்போகுமே....? என்ன முட்டாள்தனமான கதை....? வெறும் முட்டாள்தனமான வெள்ளைமோகம்தான்...!

பொன்னர்: அப்ப வெள்ளை நிறமான பொம்பிளை கேக்கிறது தமிழ்ப் பெடியளுக்கு வெள்ளைமோகமா இருக்கலாம்.... ஆனால் குங்குமப்பூ சாப்பிட்டா வெள்ளைப்பிள்ளை பிறக்கும் எண்டுறது?

மன்னர்: அதுவும் ஒரு தவறான நம்பிக்கைதான். ஆனால் ஆதித்தமிழர் முதல் இக்காலத் தமிழர் வரை பெண்கள் கர்ப்பிணியாக இருக்கும்போது குங்குமப்பூ சாப்பிடுறது வழக்கமாக இருந்து வருகிறது....! தமிழர்கள் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடி என்றும் அதுவும் அறிவியல் மருத்துவத்தில் சிறந்து விளங்கினவை எண்டும் சொல்லினம். கர்ப்ப காலத்தில் குங்குமப்பூ சாப்பிடுகிறதும் உடல்நலம் தொடர்பானதுதான் என்று சொல்கிறார்கள்..?

பொன்னர்: என்ன சொல்லுறியள்...?

மன்னர்: குங்குமப்பூ சாப்பிட்டால் குருதி கட்டியான தன்மை மாறி மெல்லிதாக ஆகின்றது. இது தொப்புள்கொடி ஊடாக குழந்தைக்கு சொல்லும் சத்து வகைகள் சுலபமாக நடைபெற உதவுகின்றது. குருதி இறுக்கமாக இருந்தால் நுண்குளாய்களுக்குள்ளால் குருதி செல்வது சிறிது தடைப்பட்டு மகவு இறக்கும் நிலை சிலருக்கு உருவாகும். இதனை தடுக்கத்தான் முற்காலத் தமிழன் கண்டுபிடித்த மருந்து... இது... என்கிறார்கள்! இங்கு வளர்ச்சியடைந்த நாடுகளில் குருதி கட்டியாக வந்து மகவு இறக்கும் பிரச்சினை இருப்பவர்கள் என்று கண்டறிந்தவர்களுக்கு குருதி உறையாமல் இருக்க ஊசி மூலமாக மருந்து ஏற்றுகின்றார்கள்...!

பொன்னர்: பண்டைத் தமிழன் பெரும் விண்ணராகத்தான் இருந்திருக்கினம்....! ஒவ்வொரு தமிழனும் தலைவர் பிரபாகரன்போல ஒவ்வொரு துறைகளிலயும் சிறந்து இருந்திருப்பினம் போல கிடக்கு....!

மன்னர்: இருந்திருப்பினம் போல இல்லை. இருந்துதான் இருக்கினம்...! அவையின்ரை காலத்தில தமிழன் நாட்டை வேறு யாரும் ஆழ விடேல்லையே...!

பொன்னர்: அது சரி இந்த குங்குமப்பூவை ஸ்பானியர்களும் பயன்படுத்துகிறார்களே....!

மன்னர்: கட்டுமரத்தைக் கண்டுபிடித்து கப்பல் கட்டுவதற்கு வழிகாட்டியவன் தமிழன். ஆங்கிலத்தில இண்டைக்கும் கட்டுமரத்துக்கு கட்டுமரான் எண்டுதான் சொல்கிறார்கள். கட்டுமரன் என்ற சொல்லை இண்டைக்கு எல்லாரும்தான் பயன்படுத்துகினம்....! குங்குமப்ப+ பண்டைய இந்தியாவில் குளிர் கூடிய பகுதிகளில் பயிரிடப்பட்டது. இதற்குப் பெயர்போன இடம் காசுமீரகம்.... இப்போ பல இடங்களில் விளைவிக்கப்படுகின்றது...! குறிப்பாக, ஸ்பானியர்கள் செறிந்து வாழும் மத்திய அமெரிக்க நாடுகளிலும், இசுபானியாவிலும் இது இப்போது நிறைய விளைவிக்கப்படுகின்றது.

பொன்னர்: அவனவன் தன்ர இனத்தில, அந்த இனத்துக்கேற்ப பண்பான, அன்பான பெண் வேண்டும் என்டுதான் நினைப்பான்.. இந்தத் தமிழன்தான் வெள்ளைத்தோல் மோகத்தில அலையிறான். இப்பிடியான தமிழ் இளைஞர்களின் தோலை உரிச்சாத்தான் தோலின் தேவையே அவர்களுக்குத்தெரியவரும். தோலின் தேவையை சரியா அறிஞ்சினம் எண்டா, வெள்ளைத்தோல் என்ன... கறுப்புத்தோல் என்ன...எல்லாம் ஒன்டுதான் என்ட மனப்பான்மை வரும். சரிதானே..!

நன்றி: முழக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாழ்பட்டுபோக எங்கடையள் இன்னும் திருந்தாதுகள் :D

மூளை வளர்ச்சி அற்றவர்கள் என்பதை தவிர வேறு என்ன சொல்ல.

வெள்ளை என அழுது பைத்தியமாகுறாங்கள்...

இது தனிபட்ட விருப்பு வெறுப்புகள். என்னுடைய நண்பர் ஒருவர் பால் போல வெள்ளை, கறுப்பு பெண் தான் வெணும் என்று ஒற்றைக்காலில் நின்று, ஒரு கட்டினார்.

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளை வெடுக்கு கறுப்பு கஸ்தூரி என்பார்கள்

அனால் காதல் என்றும் வரும் போது இந்த கறுப்பே பலருக்கு ஆப்பாக அமைகிறது

ஏன் ஆண்கள் மட்டும் தானா பெண்கள் விரும்ப வில்லையா வெள்ளையை

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆஆ.......இப்படிப்போனால் கறுப்பு பெண்களின் கதி என்ன என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆஆ.......இப்படிப்போனால் கறுப்பு பெண்களின் கதி என்ன என்ன?

உங்களுக்கு என்று அமையாமலா போய்விடும் கவலை படாதீங்கோ கறுப்பி :lol::D<_<

  • கருத்துக்கள உறவுகள்

தோலைப்பார்த்து மாடு பிடித்தால் தொழிலுக்கு உதவாது <_<

வெள்ளைத்தோல் பார்த்து வீட்டுக்காரியாக்கினால் அழுக்கு வேலை எல்லாம் ஆம்பளைதான்பா பார்க்கணும்..சமையல் வரைக்கும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ரோஸ் கலர் பொம்பிளையை தான் கட்டுவனாக்கும் யாருக்கும் அந்த கலரில தெரிஞ்ச பொம்பிளைகள் இருக்கோ :lol::D

வெள்ளைத்தோல் பார்த்து வீட்டுக்காரியாக்கினால் அழுக்கு வேலை எல்லாம் ஆம்பளைதான்பா பார்க்கணும்..சமையல் வரைக்கும்..

இல்லை பிரச்சனையில்லை விகடகவி அவைகளையையே வேலையை செய்யசொல்லிட்டு அழுக்கப்போனால் சீதனமா வேண்டின சலவை இயந்திரம் இருக்குதானே (சீதனமா வாங்கேக்க கொஞ்சம் பெருசா வாங்குங்கோ அப்பத்தான் எல்லாத்துக்கும் நல்லது யாரும் அடிக்கவந்தாலும் அதுக்குள்ளே போய் இறங்கிடலாம் <_< ) அதில ஒரு நாலு மனத்தியலாம் போட்டு எடுக்க சரி

நான் ரோஸ் கலர் பொம்பிளையை தான் கட்டுவனாக்கும் யாருக்கும் அந்த கலரில தெரிஞ்ச பொம்பிளைகள் இருக்கோ :o:lol:

ரோஸ் கலரில இல்லை... ஆனா, ரோஸ் எண்ட பேரில இருக்கினம்... :lol:

சீதனமா வேண்டின சலவை இயந்திரம் இருக்குதானே (சீதனமா வாங்கேக்க கொஞ்சம் பெருசா வாங்குங்கோ அப்பத்தான் எல்லாத்துக்கும் நல்லது யாரும் அடிக்கவந்தாலும் அதுக்குள்ளே போய் இறங்கிடலாம் :D )

எங்களை அதுக்குள்ள இறக்கிவிட மாட்டாளவை??? <_<

நான் ரோஸ் கலர் பொம்பிளையை தான் கட்டுவனாக்கும் யாருக்கும் அந்த கலரில தெரிஞ்ச பொம்பிளைகள் இருக்கோ :lol::wub:

இல்லை பிரச்சனையில்லை விகடகவி அவைகளையையே வேலையை செய்யசொல்லிட்டு அழுக்கப்போனால் சீதனமா வேண்டின சலவை இயந்திரம் இருக்குதானே (சீதனமா வாங்கேக்க கொஞ்சம் பெருசா வாங்குங்கோ அப்பத்தான் எல்லாத்துக்கும் நல்லது யாரும் அடிக்கவந்தாலும் அதுக்குள்ளே போய் இறங்கிடலாம் <_< ) அதில ஒரு நாலு மனத்தியலாம் போட்டு எடுக்க சரி

சுப்பண்ணை, எங்கட நாட்டிலை ரோஸ் கலரிலை நிறையப் பொம்பிளையள் இருக்கினம். என்னவொன்று, அவையை எப்பவும் பீறிசருக்குள்ள வைச்சிருக்கவேணும். அப்பதான் அந்தக் கலரிலை இருப்பினம். :lol::D:o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரோஸ் கலரில இல்லை... ஆனா, ரோஸ் எண்ட பேரில இருக்கினம்... :D

எங்களை அதுக்குள்ள இறக்கிவிட மாட்டாளவை??? :lol:

பெயர் மட்டும் தன் ரோஸ் எண்டு இருக்கும் ஆனால் அவைகளை பார்த்தல் கடதாசி பூபோல சட சட என்று இருப்பினம் எனக்கு வேண்டாமே :(

இறக்கினால் பரவாயில்லை கொஞ்சம் சலவை தூளையும் போட்டு இயந்திரத்தையும் போட்டால் தான் கொஞ்சம் கஷ்டம் (அடிக்கடி துவைபட்ட ஆக்களுக்கு பிரச்சனையில்லை புது பெடியங்களுக்குதான் முதல் கொஞ்சம் கஷ்டமாயிருக்கும் அப்புறம் போக போக பழகிடும்) <_< .

சுப்பண்ணை, எங்கட நாட்டிலை ரோஸ் கலரிலை நிறையப் பொம்பிளையள் இருக்கினம். என்னவொன்று, அவையை எப்பவும் பீறிசருக்குள்ள வைச்சிருக்கவேணும். அப்பதான் அந்தக் கலரிலை இருப்பினம். :o:lol::wub:

ஒ எனக்கு தெரியுமே இறைச்சி கடையில இருக்கிற உரிச்ச கொழியைத்தானே சொல்லுறிங்கள் அதை வாங்கிக்கொண்டு வந்து நான் என்ன செய்யிறது ஒரு நாளைக்கு பிரியாணிதான் போட முடயும்.எதுக்கும் உங்கட நாடு ஏது என்று காதுக்குள்ள (என்ட காதுக்குள்ள) சொல்லுங்கோ பார்ப்பம் :(

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைத்தோல் பார்த்து வீட்டுக்காரியாக்கினால் அழுக்கு வேலை எல்லாம் ஆம்பளைதான்பா பார்க்கணும்..சமையல் வரைக்கும்..

கறுப்பு தோல் எண்டு பார்த்து வீட்டுக்காரியாக்கினால் அழுக்கு வேலை எல்லாம் பொம்பிளை தானா பார்க்கனும்

ஐயோ செக்கச்சிவப்பான என் கை எவ்வளவு அழுக்கா போச்சு பார்த்தேளா..என்னால இந்த வேலையெல்லாம் செய்யமுடியாது..அப்டி ஆத்துக்காரி கறுப்பா இருந்தா சொல்லமாட்டாளோ .ல்லியோ...என்ன சொல்றீங்க கபி? <_<

ஒ எனக்கு தெரியுமே இறைச்சி கடையில இருக்கிற உரிச்ச கொழியைத்தானே சொல்லுறிங்கள் அதை வாங்கிக்கொண்டு வந்து நான் என்ன செய்யிறது ஒரு நாளைக்கு பிரியாணிதான் போட முடயும்.எதுக்கும் உங்கட நாடு ஏது என்று காதுக்குள்ள (என்ட காதுக்குள்ள) சொல்லுங்கோ பார்ப்பம் <_<

சுப்பண்ணை நான் சொன்னது வெள்ளைக்காரப் பொம்பிளையளை. அவை குளிருக்குள்ள ரோஸ் கலரா மாறிடுவீனம். அவையை பிறீசருக்குள்ள வைச்சிருந்தால்தான் எப்பவும் ரோஸ் கலரா இருப்பினம். அதைத்தான் சொன்னனான். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் ஊருக்கு உபதேசிக்க தத்துவம் கதைப்பினம். தங்களுக்கு என்று வரேக்கதான் அவையவையின்ர சுயரூபம் வெளிப்படும். உதில தமிழ் பொடியள நான் பாராட்டுவன். ஏனென்றால்.. அவங்கள் பொம்பிளையள் போல ஆசைகளை அமுக்கி வைச்சி.. கழுத்தறுக்காம.. வெளிப்படையாச் சொல்லி தேடிக்கிறாங்க பாருங்க... அது எவ்வளவோ மேல்.

வெள்ளைப் பொடியள் சரி கறுப்புப் பொடியள் சரி.. தமிழ் பொடியள் போல கட்டினா கண்ணே மணியே என்று அதோடையே கடைசி வரை கொஞ்சிக் கொண்டிருக்கப் போறதில்ல. அவங்கள் கட்ட முதலே.. பலதும் பத்தும் ருசிச்சுப் பார்த்திட்டுத்தான் கட்டுவாங்கள். எங்க பொடியள் தான் கன்னி காத்து.. நாத்துக்கு விட்டு.. பாவங்கள். அவங்களுக்கு இப்படி வெளிப்படையா தங்கட ஆசையை வெளியிடுற சுதந்திரம் கூட கொடுக்க மனசு வருகுதில்லை உந்தப் பொம்பிளையளுக்கு.

பிறகென்ன.. போய் ஒரு காப்புலியையோ.. அல்லது வெள்ளைக்காரனையோ கட்டிக்கிறது. அவன்.. நல்ல வாழ்க்கை.. நாலோட ஐஞ்சா அமைச்சுத் தருவான் வாழ்ந்துக்கிறது. ஏன் இப்ப இந்தியப் பொடியளே அப்படித்தான் வாழுறாங்க. ஏன் நம்ம புலத்தில பிறந்ததுகள் மட்டும் என்னவாம்..??!

காலமாறிப் போச்சுங்கோ.. எனிக் கண்ணே மணியே என்று கொஞ்சிட்டு கனகாலம் இருக்கிற மாதிரி வாழ்க்கை உவை பொம்பிளையளுக்கு அமையாது. தங்கட வாழ்க்கையை தாங்களே போற இடத்தில மூழ்கி திளைத்து தீர்மானிக்க வேண்டியதுதான்..! :lol::D

காதல் எண்டுவரும்போதோ...... கலியாணம் எண்டுவரும்போதோ...... குடித்தனம் எண்டுவரும்போதோ...... குடும்பம் எண்டுவரும்போதோ...... ஓரிரவுகூடல் எண்டுவரும்போதோ...... பாலியல்நட்பு எண்டுவரும்போதோ...... ஆண், ஆண்தான் பெண், பெண்தான்... இதில் கருப்பு.... வெள்ளை.... ஈழத்தமிழரெண்டு ஒரு வித்தியாசமுமில்லை :D . நீங்கள் சொல்லலாம் இப்படி எல்லோரும் வெக்கம் பயம் மூடநம்பிக்கை எல்லத்தையும் விட்டுட்டு வெளியிலவந்தா விடுதலை போராட்டத்துக்கு என்னவது எண்டு...... நாங்கள் மற்றவன் நாட்டில் மற்றவன் வாழ்வியலில் உறவாடும் போது எமது வாழ்வியலின் தேடல் அதிகமாகிறது சுய இன அறிவு அதிகமாகிரது இதை நாம், மற்றவனுக்கு அறிமுகமாகுவதற்க்கு அறியத்தரவேண்டியிருக்கிறது. இது எமதுநாட்டின் விடுதலையின் தேவையை இன்னொரு மூலையில் அதிகமாக்கிறது. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திராவிடத் தமிழனின் உண்மை நிறம் கருப்பு.

வெள்ளை நிறம் மொகலாயர்கள், அராபியர்கள்,...., ஐரோப்பியர்களிடமிருந்து வந்தது.

இப்பொழுது சொல்லுங்கள் நம்மவர்கள் வெள்ளையாக இருப்பது பெருமையா?

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடத் தமிழனின் உண்மை நிறம் கருப்பு.

வெள்ளை நிறம் மொகலாயர்கள், அராபியர்கள்,...., ஐரோப்பியர்களிடமிருந்து வந்தது.

இப்பொழுது சொல்லுங்கள் நம்மவர்கள் வெள்ளையாக இருப்பது பெருமையா?

தமிழர்கள் திராவிடர்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது..??! :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்கள் திராவிடர்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது..??! :D:lol:

வரலாறு அப்படித்தான் சொல்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

வரலாறு அப்படித்தான் சொல்கிறது.

எந்த ஆதாரங்களின் அடிப்படையில்.. திராவிடம் என்பது எழுகிறது.. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் தமிழர்கள் அதற்குள் அடக்கப்பட்டுள்ளனர்..??! :D:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த ஆதாரங்களின் அடிப்படையில்.. திராவிடம் என்பது எழுகிறது.. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் தமிழர்கள் அதற்குள் அடக்கப்பட்டுள்ளனர்..??! :D:lol:

தமிழ் திராவிட மொழிகளில் மூத்த மொழி. முதன்மை மொழி. அதை பேசியவர்கள் தமிழர்கள். ஏனவே அவர்கள் திராவிடர்கள்.

திராவிட தேசம்: http://en.wikipedia.org/wiki/Image%3a%44ra...he_Sprachen.png

திராவிட மொழிகள்: http://en.wikipedia.org/wiki/Dravidian_languages

திராவிட மக்கள்: http://en.wikipedia.org/wiki/Dravidian_race

Edited by காட்டாறு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் திராவிட மொழிகளில் மூத்த மொழி. முதன்மை மொழி. அதை பேசியவர்கள் தமிழர்கள். ஏனவே அவர்கள் திராவிடர்கள்.

திராவிட தேசம்: http://en.wikipedia.org/wiki/Image%3a%44ra...he_Sprachen.png

நான் காலம் காலமாக உச்சரிக்கப்பட்டு வரும் இதைக் கேட்கவில்லை. நான் கேட்பது.. திராவிடம் என்றால் என்ன.. அதற்கான வரைவிலக்கணம் என்ன.. அது வரையப்பட பாவிக்கப்பட்ட சான்றுகள் என்ன.. அந்த வரைவிலக்கணத்தோடு தமிழர்கள் எவ்வாறு ஒத்திசைகின்றனர்.. அதற்கான தமிழர் தரப்பு புராதன சான்றுகள் என்ன.. என்பதைத்தான்..!

வெறுமனவே திராவிடம்.. தமிழர்.. திராவிட மொழி எல்லாம் ஒன்றுக்குள்ள ஒன்றுதான் என்று சொல்லிக் கொண்டிருந்த காலம் போய்விட்டது. இப்போ சான்றிகள் தேடும் காலம்...!

திராவிடம் என்ற சொல்லே ஆங்கிலேயர்கள் தந்தது. (The English word Dravidian was first employed by Robert Caldwell in his book of comparative Dravidian grammar based on the usage of the Sanskrit word dravida in the work Tantravrttika by Kumrila Bhaa (Zvelebil 1990:xx). அப்படி இருக்க.. எப்படி.. அது தமிழர்களை அடையாளப்படுத்த பாவிக்கப்பட முடியும்..??!

There is no definite philological and linguistic basis for asserting unilaterally that the name Dravida also forms the origin of the word Tamil :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெடுக்காலபோவான் நீங்கள் சிறந்த ஒரு வக்கீல். போதுமான ஆதாரங்கள் இல்லை என்று காரணம் காட்டி வழக்கை செல்லுபடி அற்றதாக்கி விட்டீர்கள். அதற்காக வழக்குகள் எப்போதும் பொய் என்றாகிவிடாது.

விவாதத்தின் தலைப்பு ஏதோவாயிருக்க நாங்கள் திராவிடத்தைப் பற்றி தொடர்ந்தும் ஆராய்ச்சி செய்தால் பார்ப்பவர்களுக்கு மண்டையால் போகும். அதனால் இதை வேறொரு பொருத்தமான தலைப்பு வரும் போது பார்த்துக்கொள்வோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.