Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீதனம் + ஜி.எஸ்.ரி

Featured Replies

நாகராஜின் மகனுக்கும், செல்லையாவின் மகளுக்கும் திருமணப்பேச்சு. நாகராஜ் குடும்பம் அவுஸ்திரேலியாவில் 30 வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள். நாகராஜ் தம்பதியருக்கு ஒரே செல்ல மகன் நிமலன். செல்லையா குடும்பத்தினர் 1995 ல் இடப்பெயர்விலிருந்து கொழும்பில் வசிக்கிறார்கள். செல்லையாவுக்கு 2 பெண்பிள்ளைகள். மூத்தவளுடைய திருமணப்பேச்சு தான் இப்போது நடைபெறுகிறது. அதற்காக நாகராஜ் கொழும்பு வந்திருக்கிறார்.

பேச்சுவார்த்தை நன்றாக தான் நடைபெற்றது, சீதனப்பேச்சை செல்லையர் ஆரம்பிக்கும் வரை. 'எங்களிடமிருந்து என்னதை எதிர்பார்க்கிறீர்கள்?' என்ற செல்லையரின் கேள்விக்கு, கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு நாகராஜ் சொன்னார். 'மகனுக்கு ஒரு நல்ல இடத்தில் வீடு வாங்கிற எண்ணம் இருக்கு. அதற்கு கொஞ்ச தொகை உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறோம். அதைவிட ஒரு 75 இலட்சம்?'

செல்லையருக்கு தூக்கிவாரிப்போட்டது. இதை அவதானித்தவராக, நாகராஜ் தொடர்ந்தார். 'நாங்கள் அங்கு அவுஸ்திரேலியாவில் எங்கட மகனை வளர்த்து, ஆளாக்க எவ்வளவு செலவழிச்சிருப்பம். அதற்கு எவ்வளவு ஜி.எஸ்.ரி ரக்ஸ் கட்டியிருப்பம். அதை எல்லாம் சேர்த்து தான் இந்த சீதனத்தொகை'.

இதை சற்றும் எதிர்பாராத செல்லையர் அதிர்ச்சியுடன் கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு நாகராஜிடம் கேட்டார். 'நாங்கள் இந்ததிருமணப்பேச்சை சில மாதங்கள் தள்ளி டிசம்பரில் வைச்சுக்கொள்ளலாமா?' அதற்கு நாகராஜ் 'ஏன் இப்ப என்ன பிரச்சினை? நான் அங்கையிருந்து பிளேன் ரிக்கட் காசு செலவழிச்சு திரும்பவும் வரவேணுமோ?' என்று கோபம் கலந்த வியப்புடன் கேட்டார்.

அதற்கு செல்லையர் அமைதியாக சொன்ன பதில் இது தான். 'நீங்கள் உங்கள் மகனுக்கு சீதனத்துடன் ஜி.எஸ்.ரி ய்ம் கேட்கிறீர்கள். அது நியாயமெனத்தான் எனக்கும் படுகிறது. ஆனால், டிசம்பரில் 'கிறிஸ்மஸ் ஸீஸன்' தானே. அப்போது கடைகளில் சாமான்களுக்கு 'டிஸ்கௌன்ற்' போடுவாங்களே... அதைப் போல உங்கள் மகனுக்கும் ஒரு 50% டிஸ்கௌன்ற் போடுவீங்கள் என்று எதிர்பார்த்து தான் அப்படி கேட்டனான்'.

Edited by Mallikai Vaasam

அவர் கேட்டதிலும் தப்பு இல்லை. ஆனால் ஒன்று, நத்தாருக்கு சேல் க்கு வாறதெல்லாம், நொந்து நொடிந்து நூடில்ஸ் யாய் போன சாமான் என்று சொல்லி வையுங்க்கோ.....திறமையான மருமோன் வேணும் என்றால், விலையை கொடுத்து தான் ஆகணும். You can't buy a Gucci hand bag for 100 $, can you?

சாமியாருக்கு கூச்சி பாக் கேட்குதோ?

ம்ம்..ஆனா பாருங்கோ மல்லிய வாசணை அண்ணா..ணா உவையளிட்ட இருந்து சீதனம் + ஜி.எஸ்.ரி வாங்கிறது எனக்கு சரி எண்டு தான் படுது.. :) (குறிப்பா உங்க அவுஸ்ரெலியாவில இருக்கிறவைய தான் சொல்லுறன்).. :(

ஏன் எண்டா..!!

வாறவா பிறகு சொல்லுவா கல்யாணதிற்கு பிறகு..உங்க பெற்றோர் வீட்ட போக கூடாது அவையளுக்கு உதவி செய்ய கூடாது எண்டு எல்லாம்..அப்ப ஏற்கனவே சீதனம் + ஜி.எஸ்.ரி யை வாங்கி வைத்திட்டா..டா அவையள் பிரச்சினை இல்லாம இருக்கலாம்..ம் தானே.. :)

யாரிண்டையும் கையும் எதிர்பார்காமல்..என்ன நான் சொல்லுறது சரியோ அண்ணா..ணா..பிறகு பாருங்கோ வாறவா எவ்வளவு வீத கழிவில வாறாவோ யாருக்கும் தெரியும்..ம்.. :D

அதுவும் அவுஸை பத்தி சொல்லவா வேண்டும்..ம்..ஆனபடியா இந்த வியாபாரத்தில இலாபம் மட்டும் தான் முக்கியம் பொருட்களை பற்றி பார்க்க வெளிகிட்டால்..சாமான் அப்படியே களஞ்சியத்தில தங்கி நிற்க வேண்டிய நிலைம தான் விளங்கிச்சோ.. :lol:

யாழில் தங்களின் முதல் கதை எண்டு நெனைக்கிறன்..சுவாரசியாமான பாணியில் எழுதியுள்ளீர்கள் வாழ்த்துகள் அண்ணா..ணா..!! :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ம்ம்..ஆனா பாருங்கோ மல்லிய வாசணை அண்ணா..ணா உவையளிட்ட இருந்து சீதனம் + ஜி.எஸ்.ரி வாங்கிறது எனக்கு சரி எண்டு தான் படுது.. :( (குறிப்பா உங்க அவுஸ்ரெலியாவில இருக்கிறவைய தான் சொல்லுறன்).. :lol:

அது உங்கள் இஷ்டம் ஜமுனா... :)

அதுவும் அவுஸை பத்தி சொல்லவா வேண்டும்..ம்..ஆனபடியா இந்த வியாபாரத்தில இலாபம் மட்டும் தான் முக்கியம் பொருட்களை பற்றி பார்க்க வெளிகிட்டால்..சாமான் அப்படியே களஞ்சியத்தில தங்கி நிற்க வேண்டிய நிலைம தான் விளங்கிச்சோ.. :)

நீங்கள் எந்த சாமானை சொல்கிறீர்கள்??! :D:)

யாழில் தங்களின் முதல் கதை எண்டு நெனைக்கிறன்..சுவாரசியாமான பாணியில் எழுதியுள்ளீர்கள் வாழ்த்துகள் அண்ணா..ணா..!!

உங்கள் ஊக்கத்திற்கு மிக்க நன்றி... :o:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டிஸ்கவுண்ட் நல்லாக இருக்கின்றது

நியாயமான கருத்து...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு அவுஸ்ரேலியாவிலை இரண்டு மச்சான்மார் இருக்கிறாங்கள். :)

அவங்கள் சீதனப்பிரச்சனையாலை இப்ப என்னோடை கதைக்கிறதில்லை :D

அவுஸ்ரேலியாவிலை மாப்பிளை எடுக்கிறவை கொஞ்சம் கவனமாய் இருக்கோணும் :(

நல்ல கதை மல்லிகைவாசம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சீதனம் வாங்காட்டிலும் கேட்கிறதுதான் நியாயமாப்படுகுது. ஏனென்றால் உங்க சில பேருக்கு சீதனம் வேணாம் என்று சொல்லுறது சீப்பா எல்லோ படுகுது..! அவையே கொடுக்கிறதுதான் பெருமை என்று நினைக்கேக்க.. நீங்கள் வரி என்ன வரிக்கு வட்டி போட்டும் கேளுங்கோ..! :):(

, டிசம்பரில் 'கிறிஸ்மஸ் ஸீஸன்' தானே. அப்போது கடைகளில் சாமான்களுக்கு 'டிஸ்கௌன்ற்' போடுவாங்களே... அதைப் போல உங்கள் மகனுக்கும் ஒரு 50% டிஸ்கௌன்ற் போடுவீங்கள் என்று எதிர்பார்த்து

கேட்டாங்கையா ஒரு கேள்வி.. மல்லிகைவாசம் இது உண்மைக்கதை இல்லையா? :) கற்பனை என்று போட்டுட்டியள். :o

ம்ம்..ஆனா பாருங்கோ மல்லிய வாசணை அண்ணா..ணா உவையளிட்ட இருந்து சீதனம் + ஜி.எஸ்.ரி வாங்கிறது எனக்கு சரி எண்டு தான் படுது.. :( (குறிப்பா உங்க அவுஸ்ரெலியாவில இருக்கிறவைய தான் சொல்லுறன்).. :)

ஏன் எண்டா..!!

வாறவா பிறகு சொல்லுவா கல்யாணதிற்கு பிறகு..உங்க பெற்றோர் வீட்ட போக கூடாது அவையளுக்கு உதவி செய்ய கூடாது எண்டு எல்லாம்..அப்ப ஏற்கனவே சீதனம் + ஜி.எஸ்.ரி யை வாங்கி வைத்திட்டா..டா அவையள் பிரச்சினை இல்லாம இருக்கலாம்..ம் தானே.. :)

யாரிண்டையும் கையும் எதிர்பார்காமல்..என்ன நான் சொல்லுறது சரியோ அண்ணா..ணா..பிறகு பாருங்கோ வாறவா எவ்வளவு வீத கழிவில வாறாவோ யாருக்கும் தெரியும்..ம்.. :)

அதுவும் அவுஸை பத்தி சொல்லவா வேண்டும்..ம்..ஆனபடியா இந்த வியாபாரத்தில இலாபம் மட்டும் தான் முக்கியம் பொருட்களை பற்றி பார்க்க வெளிகிட்டால்..சாமான் அப்படியே களஞ்சியத்தில தங்கி நிற்க வேண்டிய நிலைம தான் விளங்கிச்சோ.. :(

அப்ப நான் வரட்டா!!

தம்பி நீங்கள் நல்லா உலகத்தை புரிஞ்சு வைச்சிருக்கிறியள். பேபி இப்ப என்ன வயசு உங்களுக்கு? :D:lol::)

எனக்கு அவுஸ்ரேலியாவிலை இரண்டு மச்சான்மார் இருக்கிறாங்கள். :)

அவங்கள் சீதனப்பிரச்சனையாலை இப்ப என்னோடை கதைக்கிறதில்லை :lol:

அவுஸ்ரேலியாவிலை மாப்பிளை எடுக்கிறவை கொஞ்சம் கவனமாய் இருக்கோணும் :D

நல்ல கதை மல்லிகைவாசம் :)

ஜம்மு தம்பி இங்கை கொஞ்சம் வந்து கு சா தாத்தாவை பாருங்கோ. அவுஸ் பற்றி என்னமோ கதைக்கிறார்.

கு சா தாத்தா நீங்கள் இப்படி சொன்னால் ஜம்முவை யாரப்பா மாப்பிளை கேட்டு வருவினம்? உதை ஒருகணம் நினைச்சு பார்த்தியளா? :):o

கு சா தாத்தா உந்த மச்சான்மாரைப் பற்றி எல்லாம் கவலைபப்டாதீங்கோ. உந்த மச்சான்மார் உங்கள் அவாவின் சகோதரர்கள் தானே. ஆமா நீங்கள் எவ்வளவு சீதனம் வாங்கினியள்? மிரட்டிக்கேட்டோ வாங்கினியள்? :(

சீதனம் வாங்காட்டிலும் கேட்கிறதுதான் நியாயமாப்படுகுது. ஏனென்றால் உங்க சில பேருக்கு சீதனம் வேணாம் என்று சொல்லுறது சீப்பா எல்லோ படுகுது..! அவையே கொடுக்கிறதுதான் பெருமை என்று நினைக்கேக்க.. நீங்கள் வரி என்ன வரிக்கு வட்டி போட்டும் கேளுங்கோ..! :lol::)

நெடுக் தாத்தா நீங்கள் சொல்வதும் சரிதான்.

இப்ப எல்லாம் சீதனம் வாங்காமல் திருமணம் செய்கிறார்களெனில் அவர்களைப் பற்றி சமூகம் என்ன சொல்லும்

சீதனம் மாப்பிளை வீட்டுக்காரர் வாங்கலையாமே.....

ஓ அப்படியா? அப்போ மாப்பிளை பெடியனுக்கு என்னமோ குறையாக்கும் அதுதான் பெருந்தன்மையா சீதனம் வாங்கலை போல :)

சீதனம் கொடுத்து திருமணம் செய்கிறார்களெனில் அவர்களைப் பற்றி சமூகம் என்ன சொல்லும்

இவ்வளவு கோடிக்கணக்கில் சீதனம் கொடுத்து எல்லோ அவளுக்கு திருமணம் செய்து வைச்சவையாம்... பெம்பிளைக்கு என்னமோ பிரச்சினை போல............. :o

இப்படி எத்தனைக்கு காது கொடுக்கணும் :):(:D

  • தொடங்கியவர்

அவுஸ்ரேலியாவிலை மாப்பிளை எடுக்கிறவை கொஞ்சம் கவனமாய் இருக்கோணும் :)

நல்ல கதை மல்லிகைவாசம் :)

நான் அவுஸ்திரேலிய மாப்பிள்ளைகளை குறிப்பாக இலக்கு வைக்கேல்ல அண்ணை... கதைக்கு ஒரு இடம் தேவைப் பட்டது அவ்வளவு தான். போக, சீதனம் கேட்கிறது, அவரவர் சிந்தனையை பொறுத்தது. தேவை, சூழல், ஆசை............என சிலதை சொல்லலாம்.

சீதனம் வாங்காட்டிலும் கேட்கிறதுதான் நியாயமாப்படுகுது. ஏனென்றால் உங்க சில பேருக்கு சீதனம் வேணாம் என்று சொல்லுறது சீப்பா எல்லோ படுகுது..! அவையே கொடுக்கிறதுதான் பெருமை என்று நினைக்கேக்க..

நெடுக்ஸ் சொன்ன மாதிரி 'கௌரவ பிரச்சினையும்' :lol: ஒரு காரணம் தான்.

மல்லிகைவாசம் இது உண்மைக்கதை இல்லையா? :( கற்பனை என்று போட்டுட்டியள். :D

இது கற்பனை தான் வெண்ணிலா. நிஜத்தில் நடக்கும் சாத்தியம் மிக குறைவு என நினைகிறேன்...

உங்கள் கருத்துகளுக்கும், ஊக்கத்திற்கும் நன்றி தூயா, காயத்ரி, கு.சா அண்ணை, நெடுக்ஸ், வெண்ணிலா... :):o

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கருத்தான கதை .அதுசரி சிட்னி எழுத்தாளர்களின் கதைகளில் கதாபாத்திரங்களின் பெயர் சுரேஸாக இருப்பதன் காரணம் என்ன?

  • தொடங்கியவர்

நல்ல கருத்தான கதை .அதுசரி சிட்னி எழுத்தாளர்களின் கதைகளில் கதாபாத்திரங்களின் பெயர் சுரேஸாக இருப்பதன் காரணம் என்ன?

சரி தான். நானும் பிறகு தான் கவனித்தேன். பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. (கதைக்கு முக்கியமல்ல என்றாலும்....)

கருத்துக்கு நன்றி அண்ணை... :)

Edited by Mallikai Vaasam

தம்பி நீங்கள் நல்லா உலகத்தை புரிஞ்சு வைச்சிருக்கிறியள். பேபி இப்ப என்ன வயசு உங்களுக்கு?

அது என்னவெண்டா நான் என்னை நானே நன்னா புரிந்துகிட்டன்..ஆனபடியா உலகத்தை இலகுவா புரிந்துக்க முடிந்தது அவ்வளவு தான் அக்கா..கா.. :D

எனக்கு வயசோ..வானிலாவிற்கு எத்தனைய் வயசு ஏன் சூரியனிற்கு எத்தனை வயசு எண்டு தெரியுமோ..??..அதை மாதிரி அங்கால சொல்ல மாட்டன்.. :D

ஒரு வேள வானிலா,சூரியனிற்கு வயசு தெரிந்தா சொல்லிடாதையுங்கோ யாரும்..!!

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு தம்பி இங்கை கொஞ்சம் வந்து கு சா தாத்தாவை பாருங்கோ. அவுஸ் பற்றி என்னமோ கதைக்கிறார்.

கு சா தாத்தா நீங்கள் இப்படி சொன்னால் ஜம்முவை யாரப்பா மாப்பிளை கேட்டு வருவினம்? உதை ஒருகணம் நினைச்சு பார்த்தியளா?

ஒமென்ன நிலா..லா அக்கா உது கொஞ்சம் கூட நன்னாவே இல்ல..ல..நான் நெனைக்கிறன் உவர் கு.சா தாத்தாவிற்கு அவரின்ட மச்சான்மாருக்கு கள்ளுகொட்டில ஏதாச்சும் தகராறு நடந்திருக்கும்..ம்.. :D

உவர் என்னும் அதை மறக்காம இருக்கிறார் அவ்வளவு தான்..உதுக்கா அவுஸ்ரெலியா மாப்பிளைமாரை குறை சொல்லுறது எல்லாம் நன்னா இல்ல.. :D

அவை எல்லாம் பத்தரை மாசத்து சா..சா பத்துமாசத்து தங்கங்கள்..(என்ன பார்த்தாலே தெரிந்திருக்கும் தானே பிறகு என்ன நிலா அக்கா).. :)

அட ஜம்முவை யாரும் மாப்பிள கேட்டு வர தேவல ஜம்முவே பார்த்து கொள்ளும்..ம் அல்லோ பிறகென்ன ஆனா கட்டாயம் சீ+தனம் தரணும் உது எப்படி இருக்கு..கு..!! :D

அப்ப நான் வரட்டா!!

அது என்னவெண்டா நான் என்னை நானே நன்னா புரிந்துகிட்டன்..ஆனபடியா உலகத்தை இலகுவா புரிந்துக்க முடிந்தது அவ்வளவு தான் அக்கா..கா.. :D

எனக்கு வயசோ..வானிலாவிற்கு எத்தனைய் வயசு ஏன் சூரியனிற்கு எத்தனை வயசு எண்டு தெரியுமோ..??..அதை மாதிரி அங்கால சொல்ல மாட்டன்.. :D

ஒரு வேள வானிலா,சூரியனிற்கு வயசு தெரிந்தா சொல்லிடாதையுங்கோ யாரும்..!!

அப்ப நான் வரட்டா!!

:D:D நன்னா இருக்கு விளக்கம். நாமளும் நல்லா புரிஞ்சிருக்கிறமாக்கும். உலகத்தை தான். :D சாமம் சாமமாக மொறு மொறு னு கடலை சாப்பிடுற பழக்கம் இருக்கோ ஜம்மு? ஏன்னா கடலை சாப்பிட்டுக்கொண்டு யோசனை செய்தால் நிறைய யோசிக்கலாம் உண்மையோ? :)

அவை எல்லாம் பத்தரை மாசத்து சா..சா பத்துமாசத்து தங்கங்கள்..(என்ன பார்த்தாலே தெரிந்திருக்கும் தானே பிறகு என்ன நிலா அக்கா).. :lol:

அட ஜம்முவை யாரும் மாப்பிள கேட்டு வர தேவல ஜம்முவே பார்த்து கொள்ளும்..ம் அல்லோ பிறகென்ன ஆனா கட்டாயம் சீ+தனம் தரணும் உது எப்படி இருக்கு..கு..!!

அப்ப நான் வரட்டா!!

ம்ம்ம் உங்களைப் பார்த்துதான் புரிந்துகொண்டேன் பத்தரை மாற்று தங்கங்கள் என்று :wub: அதுக்காக உரசிப்பார்க்கவா முடியும்?

ஹீஹீ சீதனமோ? அதோடை ஜீ எஸ் டீ :D நன்னாவே இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

சாமம் சாமமாக மொறு மொறு னு கடலை சாப்பிடுற பழக்கம் இருக்கோ ஜம்மு? ஏன்னா கடலை சாப்பிட்டுக்கொண்டு யோசனை செய்தால் நிறைய யோசிக்கலாம் உண்மையோ? :wub:

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. அதிக கடலை சாப்பிட்டால்.....

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு. அதிக கடலை சாப்பிட்டால்.....

கடலையில் எல்லாம் நஞ்சூறாது கந்தப்பு தாத்தா... ஏன்னா கடலை ஒரு உலர் உணவு எல்லோ (மொறு மொறு என சாப்பிடும் கடலை வறுத்த கடலை ஆக தான் இருக்கும்)

  • கருத்துக்கள உறவுகள்

கடலையில் எல்லாம் நஞ்சூறாது கந்தப்பு தாத்தா... ஏன்னா கடலை ஒரு உலர் உணவு எல்லோ (மொறு மொறு என சாப்பிடும் கடலை வறுத்த கடலை ஆக தான் இருக்கும்)

உலர் உணவு என்பது தெரியும் . ஆனால் அதிகளவில் கச்சான் சாப்பிட்ட சாத்திரிக்கு வந்த நிலமையினைப் பார்க்க

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=427044

உலர் உணவு என்பது தெரியும் . ஆனால் அதிகளவில் கச்சான் சாப்பிட்ட சாத்திரிக்கு வந்த நிலமையினைப் பார்க்க

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=427044

அச்சோ கந்தப்பு அது கச்சான் எல்லோ கச்சான் பித்தம் தெரியாதோ...

அதுவும் வயது போனாக்களுக்கு பித்தம் தலைக்கு ஏரும் தெரியாதோ?

நான் சொன்னது கடலை க.....ட....லை கந்தப்பு கடலை :wub:

  • கருத்துக்கள உறவுகள்

மல்லிகை வாசம் கதையில் சிட்னி வாசம் வீசுகிறது..... தொடருங்கள்

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

அச்சோ கந்தப்பு அது கச்சான் எல்லோ கச்சான் பித்தம் தெரியாதோ...

அதுவும் வயது போனாக்களுக்கு பித்தம் தலைக்கு ஏரும் தெரியாதோ?

நான் சொன்னது கடலை க.....ட....லை கந்தப்பு கடலை :wub:

அதுசரி கோயிலில விற்பது கடலைக்கொட்டையா? கச்சானா?

அதுசரி கோயிலில விற்பது கடலைக்கொட்டையா? கச்சானா?

மல்லாக்கொட்டை மணிலாக்கொட்டை கச்சான்... இப்படி தான் நான் அறிஞ்சிருக்கிறன் :)

கடலை என்பது கொண்டைக்கடலை :wub::D:lol:

p7120504wh9.jpg

canada707nj5.jpg

  • தொடங்கியவர்

மல்லிகை வாசம் கதையில் சிட்னி வாசம் வீசுகிறது..... தொடருங்கள்

:mellow::huh::(

உங்கள் கருத்துக்கு நன்றி புத்தன்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.