Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தூய தமிழ் போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கலன் என்பது  ஆங்கிலச் சொல் (Gallon ).  அது எப்படித் தமிழ்ச் சொல்லாகும். ஆகவே கொள்கலன் என்பது தூய தமிழ்ச் சொல் அல்ல.

ஏதாவது ஒரு பொருளை  ஏந்தி  வைத்திருப்பது   அல்லது தாங்கி  வைத்திருப்பது என்று பார்த்தால்...... எரிவாய்வைத்   தாங்கி வைத்திருந்தால் எரிவாய்வுத் தாங்கி அல்லது எரிபொருள்த் தாங்கி  என்றும் அழைக்கலாம்.  ஆனால் தாங்கி என்பது ஒரு பாரிய.... பெரிய பாத்திரமாக இருக்கும்.

அதே வேளை வாய்வு என்பதும் தூய தமிழ்ச் சொல் தானா என்பதிலும் ஒரு சந்தேகம் இருக்கின்றது. அது வட இந்தியச்  சொல்லின் பிறழ்வாகவும் இருக்கலாம்.

கொள்ளளவு என்ற சொல்லையும் கவனிக்க வேண்டும்.
கொள்வனவு என்ற சொல்லையும் கவனிக்க

ஒரு பொருளை நாம் வாங்குவதைக் கொள்வனவு செய்தல் என்கின்றோம்.
அது ஒரு சிறிய.... ஆனால் கையில் அடங்காத பொருளாக இருந்தால் அதைக் கொள்வனவு செய்து

தூர இடங்களிற்கு எடுத்துச் செல்ல ஒரு பொருள்  தேவைப்படுகின்றது.

வாங்கும் பொருள் இன்னொன்றுக்குள் அடங்க வேண்டும். அதாவது கொள்வனவு செய்த பொருள் இன்னொரு பொருளால் கொள்ளப்படவேண்டும். தமிழில் கொள்ளளவு என்ற சொல்லும் இருக்கின்றது 

ஆகவே கொள் என்பது சரியான ஆரம்பமாக இருக்கலாம். கொள் என்ற சொல்லைத் தனியாகப் புரட்டிப்பார்த்தால் கொள்வனவு வாங்குதல்..... கொள்ளளவு    உள்வாங்குதல்.......

ஆட்கொள்ளல் என்பது  புராணங்களில் வரும் சொல்  சேர்த்து வைத்திருத்தல்... என்ற பொருளில் வருகின்றது. இன்னொரு விதத்தில் சேர்த்து வைத்திருத்தல் என்பது சேமிப்பு என்ற வகையில் வருகின்றது.

பெரியதாக இருந்தால் எரிபொருட்கொள்ளகம் ( அகம் என்பது ஒரு  இடம் அல்லது உள்ளே என்ற பொருளில் வருவதால் )
சிறிய வகையில் இருந்தால் எரிபொருட்கொள்ளம்  என்று அழைக்கலாம்.

  • Replies 312
  • Views 37.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

சிலிண்டருக்கு உருளை தான் சரியான பதம்.

 

7 hours ago, தமிழ் சிறி said:

உருளை என்பது... பல பொருட்களை குறிக்கும், பொதுவான சொல் என நினைக்கின்றேன் நுணாவிலான்.
ஜேர்மனியில், காஸ்  சிலிண்டரை.... Gasflasche  (காஸ் போத்தல்) என அழைப்பார்கள்.
அதே நேரம்.... கண்ணாடி, பிளாஸ்ரிக் போன்றவற்றால் செய்யப்பட்ட... பியர், எண்ணை, குளிர்பானங்கள்... நிரப்பி இருப்பதும் போத்தல் என்று தான் சொல்வார்கள். தமிழில் போத்தல்  என்னும் போது.... கண்ணாடியால் செய்யப் பட்ட பொருள் என்று தான், உடனே ஞாபகத்துக்கு வரும். ஜேர்மனியர்கள் flasche (போத்தல்" என்பதை,  முன்னுக்கு சேர்க்கும் பொருளுடன் ஊகித்து அறிந்து கொள்வார்கள். (உ+ம். பியர் போத்தல், எண்ணைப் போத்தல், காஸ் போத்தல்... என்ற மாதிரி) 
 

"எரிபொருள்  கொள்கலன்"  என்றால் நல்லது.

முனிவரின் கேள்விக்கு.. பதில் நீண்டு... அடுத்த பக்கம் வந்ததால்,
அந்தப் பதில்களை... மீண்டும், மேற்கோள் காட்டியுள்ளேன்.
வாத்தியாருக்கு.... பதிலளிக்க, 
மாணவன்..... நாளை மறு தினம் வருகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் அரிசி நெல் அளக்க பழைய காலத்தில் ரின்பால் ரின்னை பாவிப்பார்கள், இதை சுண்டு என்று அழைக்கின்றவர்களா?

கொத்தும் பாவிக்கின்றவர்கள் இன்னுமொரு சொல் பாவிக்கின்றவர்கள் சிறிய அளவைக்கு

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, உடையார் said:

ஊரில் அரிசி நெல் அளக்க பழைய காலத்தில் ரின்பால் ரின்னை பாவிப்பார்கள், இதை சுண்டு என்று அழைக்கின்றவர்களா?

கொத்தும் பாவிக்கின்றவர்கள் இன்னுமொரு சொல் பாவிக்கின்றவர்கள் சிறிய அளவைக்கு

நோனா மார்க் ரின்பால் ரின்னாக இருந்தால் அதைச் 'சுண்டு' என்று அழைப்பார்கள்!

MED_1050.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சுன்டு , காக்கொத்துப் பேணி என்டும் சொல்லுவார்கள்...!  அக்கம் பக்கத்தில் சில்லறைச் சாமான்கள் குடுத்து வாங்கிறதுக்கு அளவை உதுதான்....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 26/05/2016 at 5:31 AM, தமிழ் சிறி said:

 

முனிவரின் கேள்விக்கு.. பதில் நீண்டு... அடுத்த பக்கம் வந்ததால்,
அந்தப் பதில்களை... மீண்டும், மேற்கோள் காட்டியுள்ளேன்.
வாத்தியாருக்கு.... பதிலளிக்க, 
மாணவன்..... நாளை மறு தினம் வருகின்றேன்.

றோடியோவில் கேட்டு இருந்தார்கள் அதுதான் நானும் கேட்டு இருந்தன் 

சுண்டுக்கு மேற்பட்டதை அளக்க மரைக்கால் என்று ஒரு அளவை பாத்திரம் இருக்கிறது அதன் படம் என்னிடம் இருக்கிறது அதை பிறகு சிறியருக்கு அனுப்பி காண்பிக்கிறேன்

படம்  இருப்பவர் கள் இருந்தால்  இணைக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டிலும் குறைய அளவு பேச்சு வழக்கில் சுறங்கை என கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு கையளவு அரிசி என்பது அளவீடாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

அது கொத்து. அதிகமாய் சாமத்திய வீட்டில் பிள்ளையிடம் ஒரு கொத்துக்குள் நெல்லு நிரப்பி சத்தகத்தில் வெத்திலை ஒன்று குத்து வைத்து கையில் குடுத்திருப்பார்கள்....!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, nunavilan said:

சுண்டிலும் குறைய அளவு பேச்சு வழக்கில் சுறங்கை என கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு கையளவு அரிசி என்பது அளவீடாகும்.

ம் அதுவும் ஒரு அளவு ஒரு கை பிடி அளவு சீனி வாங்க ஓடியது அந்த காலம் நண்பா ?

  • கருத்துக்கள உறவுகள்
அளவைகளின் மூலம் மதிப்பீடுகள்
ந.முருகேசபாண்டியன்

 

murugeshapandian.gifமனிதன் காலந்தோறும் தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் ஏதோ ஒன்றின் மூலம் அளவீடு செய்ய முயன்று கொண்டிருக்கிறான்.காலமும் வெளியும் பரந்துபட்ட நிலையில் எல்லையற்ற புதிர்களையும் விநோதங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.கடிகாரம் என்ற நேரங்காட்டி கண்டுபிடிப்பதற்கு முன்னர் நிழலை வைத்துக் காலத்தைக் கணிக்கும் வல்லுநர்கள் தமிழகக் கிராமங்களில் இருந்தனர். அறுபதுகளின் முற்பகுதியில் என்னுடைய நான்காம் வகுப்பு ஆசிரியர் ராமசாமி, வகுப்பில் யாராவது ஒரு பையனைக் கூப்பிட்டு,தலைமை ஆசிரியர் அறையில் உள்ள கடிகாரத்தில் மணி எத்தனை எனக் கேட்டு வரச் சொல்வார். அவன் போய் வருவதற்கு முன்னர் இப்ப நேரம் சரியாக மூன்று மணி என்று எங்களிடம் சொல்வார். மணி பார்க்கப் போன மாணவன் திரும்பி வந்து சார் மூன்று என்பான். மாணவர்கள் வியப்போடு ஆசிரியரைப் பார்ப்போம். அவர் கெத்தாகப் புன்முறுவல் செய்வார். அவர் எப்படி நேரத்தைச் சரியாகச் சொன்னார் என்பது எங்களுக்கு விளங்காத மர்மமாக இருக்கும். இயற்கைக்கும் மனிதர்களுக்குமான தொடர்பில் சூரியனை முன்வைத்து நேரத்தை மதிப்பிடுவது வழக்கிலிருந்தது.

 கோழி கூப்பிடுகிற நேரம் என்பது அதிகாலை 4-6 மணியைக் குறிக்கும்.விடியற்காலை, உச்சிப் பொழுது, சாயங்காலம், நடுச்சாமம் என ஒவ்வொரு நாளையும் அடையாளப் படுத்தும் வழக்கமிருந்தது. இரண்டுபேர் சேர்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டுப் பிரியும்போது அப்ப சாயங்காலம் பார்ப்போம்எனப் பிரிவார்கள். மாலை மூன்று மணியிலிருந்து ஆறு மணிவரை சாயங்காலம் என்ற நிலையில் இருவரும் எவ்விதமான அவசரமும் இல்லாமல் காத்திருப்பார்கள். அதுபோல காலை எனில் 6-11 மணி வரை காலை வேளையைக் குறிக்கும். கிராமத்தில் யாருக்கும் எவ்விதமான பரபரப்பும் இல்லாமல், போதுமான நேரத்தில் ஓய்வாக இருந்தனர். நேரம் மேலாண்மை என்று நிர்வாகவியல் படிப்பில், ஒவ்வொரு நிமிடத்தையும் காசாக்கிட துடித்துக் கொண்டிருக்கும் வணிகப் பரபரப்பில், ஆறுமாதம் கழித்துமகசூல் தரும் நெல்லை விதைத்து விட்டுப் பரபரப்பு இல்லாமல்,காத்திருக்கும் விவசாயி தனித்துவமானவர். யாராவது தெருவில் நடந்துபோனால், அவரைக் கூப்பிட்டு வைத்து மணிக்கணக்கில் கதைக்கின்றபோது, இருவரும் காலத்தை மறுதலிக்கின்றனர் என்றுதான் அர்த்தம். ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவத்தைக்கூட போன வாரம் நடந்ததுபோலப் பேசிக்கொண்டிருப்பது கிராமத்தில் இயல்பாக நடக்கும். கிராமத்து வாழ்க்கையில் காலம் பற்றிய பிரக்ஞைக்கு பெரிய அளவில் இடமில்லை.

 கிராமத்தினரிடம் எங்காவது செல்ல வேண்டிய ஊரைக் குறிப்பிட்டு எவ்வளவு தூரம் என்று கேட்டால், ‘இந்தா. . .பக்கம்தான் இப்படியே போனால் கிட்டேதான் என்பார்கள். நடந்து போனால் அந்த ஊர் ஒரு கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். இன்னும் சிலர், ‘இந்தா கூப்பிடு தூரம்தான். . .சத்தம் போட்டால்கூட கேட்குமே என்று வழியைக் காட்டுவார்கள். நிச்சயம் மூன்று கிலோ மீட்டர் நடந்து போக வேண்டியிருக்கும். தினமும் சராசரியாக ஒவ்வொரு கிராமத்தினரும் சில கிலோ மீட்டர் தொலைவு நடந்து செல்ல வேண்டியிருக்கும். அதைக் கஷ்டமாகக் கருதமாட்டார்கள். நடந்து ஓர் இடத்திற்குச் செல்வது என்பது அவர்களைப் பொறுத்தவரையில் இயல்பானது. தொலைவை எண்களால் அளக்க வேண்டிய தேவையில்லை.

 அறுபதுகளில் மைல் கணக்கில்தான் தொலைவைக் குறிப்பிட்டனர். எட்டு பர்லாங் தொலைவு நடந்தால் ஒரு மைல் சென்றதாக அர்த்தம். வாகனங்கள் செல்லும் நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு பர்லாங் முடியும்போது,சுண்ணாம்பு பூசப்பெற்ற சிறிய வெள்ளைக்கல் தரையில் ஊன்றப்பட்டிருக்கும்.சிறுவர்கள் பேருந்தில் பயணிக்கும்போது, ஒவ்வொரு பர்லாங் கற்களாக எண்ணி, எத்தனை மைல்கள் என்று உற்சாகத்துடன் கணக்கிடுவார்கள்.

 நிலமானது காணி, மா, செண்ட், ஏக்கர் எனப் பகுக்கப்பட்டது. நன்செய் நிலத்தைப் பொதுவாகச் செய் எனச் சொல்லும் வழக்கமிருந்தது. ஐம்பது செண்ட் நிலம் சேர்ந்தது காணி எனவும், இரு காணி நிலப்பகுதி அடங்கியது மா அல்லது ஏக்கர் எனப்பட்டது. இந்த அளவு முறை தமிழகத்தில் மாவட்டம்தோறும் வெவ்வேறு பெயர்களில் வழங்கியது. உனக்கு எவ்வளவு வயல் இருக்கு?’ என்ற கேள்விக்கு, ‘இரண்டு ஆள் நடுகை என்று சில பகுதிகளில் பதிலளிப்பார்கள்.

 வீடு இருக்கும் நிலத்தை அளக்க காலடி அளவு பயன்படுத்தப்பட்டது. கால் பாதங்களை முன்னும் பின்னும் வைத்து, எத்தனை காலடிகள் அடியின் அளவு என்று கணிக்கும் வழக்கமிருந்தது. உள்ளங்கை விரல்களை விரித்து ஆள்காட்டி விரலின் முனைக்கும் சுண்டு விரலின் முனைக்கும் இடைப்பட்ட அளவை சாண் என்று குறிப்பிட்டனர். ஒரு விரலில் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் பகுதி இஞ்ச் எனப்பட்டது. எட்டு இஞ்சுகள் சேர்ந்தால் ஒரு சாண் என அளக்கப்பட்டது. ஒவ்வொருவரும் தங்களுடைய கைவிரல்களால் தலை முதல் பாதம்வரை தன்னையே அளந்து பார்த்தால்,எட்டு சாண்கள் அளவு இருக்கும். ஒரு இஞ்ச் 2.5 செ.மீ. அளவு என்பது பிற்காலத்திய வழக்கு.

 முழங்கையிலிருந்து நடுவிரல் நுனி வரையிலான அளவு முழம் அல்லதுஅடி எனப்பட்டது. நிலத்தை அளக்க அடிக்கணக்குத்தான் பயன்பட்டது. அடிஎன்பது ஒவ்வொருவரின் கையின் நீளத்தைப் பொறுத்து மாறுபடும். ஒரே அளவு என்பது இல்லை என்றாலும் கிராமத்தினர் முன்னே பின்னே வித்தியாசத்தைப் பொருட்படுத்தாமல் கைகளை வைத்து முழம் போட்டனர்.பூச்சரத்தை அளக்க கையினால் முழம் போட்டு அளப்பது இப்பொழுதுகூட வழக்கிலுள்ளது. ஏதோ ஒரு நிலையில் அளக்க வேண்டும் என்பதைத் தவிரகூடுகிறது குறைகிறது என்பது குறித்து விற்கிறவருக்கும் வாங்குகிறவருக்கும் பெரிதும் அக்கறை இல்லை. முழம் என்பது 12 இஞ்சுகள் அல்லது 30 செ.மீ. என்று பின்னர் வரையறுக்கப்பட்டது.

முழம் போலவே பயன்பட்ட இன்னொரு அளவு கஜம்’. பெரும்பாலான துணிக்கடைகளில் துணியை அளக்க இரும்பு சட்டகத்தினால் ஆனகஜக்கோல் பயன்பட்டது.

 விரல்கடை அளவுகூட முன்னர் பயன்பட்டது. நாலு விரல்கடை என்ற சொல் வழக்கிலிருந்தது. முழங்கையினால் அளந்தபிறகு, மிச்சமுள்ள இடத்தை அளக்க கட்டை விரல் தவிர்த்த நான்கு விரல்களையும் சேர்த்து வைத்து அளந்து, ‘இரண்டு முழம், நாலுவிரல்கடை அளவு என்று குறிப்பிடுவார்கள்.

 கைவிரல்கள் நான்கையும், உள்ளங்கையும் சேர்த்து வைத்து, பெருவிரலை மட்டும் நீட்டிவைத்து மரக்கட்டைகளை அளந்து எத்தனை கை என்று மதிப்பிடுவது ஆசாரிகளிடம் வழக்கிலிருந்தது.

 நேரத்தைப் பொறுத்தவரையில் கண் சிமிட்டுற நேரம் முக்கியமானது.கண்ணை மூடித் திறக்கவில்லை. அதுக்குள்ளே ஆள் சிட்டாய்ப் பறந்திட்டான் என்று கிராமத்தில் பேசிக் கொள்வார்கள். கண் இமை மூடித்திறப்பது நேரத்தைப் பொறுத்தவரையில் மிக நுண்ணிய அளவு. ஆள் காட்டி விரலையும் நடுவிரலையும் சேர்த்து உருவாக்கும் ஒலி சொடக்குஎனப்பட்டது. இந்தா சொடக்கு போடுற நேரத்தில வந்துவிட மாட்டேனா?’என்ற பேச்சு, பேசுகிறவர் விரைவில் வந்துவிடுவதைக் குறிக்கும்.

 தானியத்தை அளப்பது என்பது எப்பவும் கிராமத்தினருக்குத் தேவைப்படும் முக்கியமான விஷயமாகும்களத்தில் தானியத்தை அளப்பதற்கு மரக்கால் பயன்பட்டதுபெரிய மரக்கால்சின்ன மரக்கால் வழக்கிலிருந்தனவீட்டு உபயோகத்திற்குப் படி எனப்படும் இரும்பு அளவு பயன்பட்டதுபெரிய படி,அரைப்படிகால்படிஅரைக்கால் படிவீசம்படிஅரை வீசம்படி போன்ற படிகள் இன்றுகூட வீடுகளில் உள்ளனபடியை உழக்கு என்று குறிப்பிடுவார்கள்11/2லிட்டர் அளவு என்பது ஒருபடி ஆகும்நான்கு படி அளவு நெல் சேர்ந்தால் ஒரு பெரிய மரக்கால்இரண்டு படி அளவு நெல் சேர்ந்தால் ஒரு சிறிய மரக்கால் எனப்பட்டன.

 அறுபது படி நெல் கொள்ளும் சாக்குமூடை பெரிய மூடை எனவும் ஐம்பது படி நெல் கொள்ளும் சாக்கு மூடை சின்ன மூடை எனவும் குறிப்பிடப்பட்டன.களத்தில் நெல்லை அளக்கும்போது, முதல் மரக்கால் நெல்லை சாக்கிற்குள் கொட்டும்போது, லாபம் என்று சொல்வார்கள்; ஒன்று எனச் சொல்லும் வழக்கமில்லை.

 நெல்லை அளக்கும்போது, படியில் அம்பாரமாக நெல்லைக் குவிக்கும்போது தாராளமாக அள்ளிவைத்துப் பெட்டியில் கொட்டுவார்கள்.

 சிறிய பாகற்காய் அளக்கும்போது இரும்பிலான வட்டப்படியை வைத்துப் படிக்கணக்கில் விற்பார்கள். அதிலும் பெரிய படி, சின்னப்படி என்று இரு வகையான உழக்குகள் வழக்கிலிருந்தன.

 தராசில் பொருட்களை நிறுத்தல் என்பது பெரிதும் வியாபாரத்தில் பயன்பட்டது. எடைக்கல்லில் மோசடி செய்து பொருளை விற்றால் குஷ்டம்வந்துவிடும். அதுக்குப் பதிலாக இரண்டு காசுகள் கூட வைத்துப் பொருளை விற்கலாம் என்பது வியாபாரியான என் தந்தையாரின் நம்பிக்கை. அது பொதுவாகப் பரவலாக எல்லாரிடமிருந்தது. வீசை என்ற எடைக்கல் மூலம் பொருட்கள் தராசினால் நிறுக்கப்பட்டன. இன்றைய 11/2 கிலோ என்பது அன்றைய ஒரு வீசை ஆகும். சிறிய பொருட்களை நிறுக்கத் தோலாஎனப்படும் எடைக் கற்களும் பயன்படுத்தப்பட்டன. பாதாம் பருப்பு, குங்குமப்பூ போன்ற விலை உயர்ந்த பொருட்கள் தோலா கணக்கில் விற்பனை செய்யப்பட்டன.

 தங்கம் எட்டு கிராம் சேர்ந்தால் ஒரு பவுன் என்பது பிற்கால வழக்கு. முன்னர் குன்றிமணி எனப்படும் காயை வைத்து தங்கம் எடை போடப்பட்டது.

விறகை நிறுத்திட தூக்கு என்ற அளவு பயன்பட்டது. இருபது கிலோ எடையிலான எடைக்கற்கள் ஒரு தூக்கு எனக் குறிக்கப்பட்டன. அஞ்சு தூக்கு விறகு வாங்கி வா என்று சொல்லும் வழக்கமிருந்தது.

 பருத்தியை சதுர வடிவிலான பெரிய சாக்குப் பைகளில் நிரப்பினர். அது தாட் எனப்பட்டது. ஒரு தாட் என்பது 100 கிலோ எடை அளவிலான பஞ்சு ஆகும்.

 கூறு போட்டு விற்றல் என்பது இன்று கூட தமிழகத்தில் உள்ளது. காய்கறிகள்,பழங்களைக் கூறுபோட்டுச் சந்தைகளில் விற்பனை செய்கின்றனர்.கடற்கரையோரங்களில் மீன்களைக் கூறு கூறாகப் பிரித்து கூறுகட்டி விற்பனை செய்கின்றனர். ஒரு கூறு என்ன விலை என்பது அங்கு நடைமுறை. தராசு, எடைக்கற்கள் இன்னும் இத்தகைய இடங்களில்போய்ச் சேரவில்லை என்பதுதான் உண்மை.

 புல், விறகு, கரும்பு, வைக்கோல் போன்றவற்றை விற்கின்றவர் ஏதோ ஒரு அளவில் கட்டுக் கட்டாகக் கட்டி விற்பனை செய்கின்றார். வரையறுக்கப்பட்ட அளவு என்று எதுவுமில்லை. ஏதோ ஒரு அளவில், ஒரே சீராகக் கட்டப்பட்டÔகட்டுகள்Õ மூலம் விற்பனையாவது வாங்குபவருக்கும் உடன்பாடான விஷயமாகும்.

 சில இடங்களில் சிலவகையான பொருட்களை -ஜோடியாக- இரண்டாகத்தான் விற்கின்றனர். ஜோடி எவ்வளவு என்றுதான் விலை சொல்வார்கள்.தனியாகக் கேட்டால், ஒன்றாகத் தரமாட்டார்கள்.

 கிராமங்களில் அடுப்பெரிக்கப் பயன்படும் எருவாட்டி, எருக்களை மாட்டுச் சாணியை வட்டமாகத் தட்டி காய வைத்து விற்பனை செய்வது இன்றும் நடைமுறையில் உள்ளது. எருவாட்டிகளை அறுபதுகளில் ஓரணாவுக்கு ஆறு கை என்ற எண்ணிக்கையில் விற்பார்கள். ஒரு கை என்பது இரு எருவாட்டிகளைக் குறிக்கும். ஆறு கை என்பது பன்னிரண்டு எருவாட்டிகள் ஆகும்.

 தக்காளி, கத்திரிக்காய் போன்றவற்றைக் கூடைக் கணக்கில்தான் விற்பார்கள்.பெரிய கூடை, சிறிய கூடை என்று எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட கூடைகள் வழக்கிலிருக்கின்றன. எடை அளவு வந்தபிறகும் இன்றும் விவசாயிகள் கூடைக்கணக்கில்தான் தக்காளியை விற்றுக் கொண்டிருக்கின்றனர்.

அடுப்புக்கரியை அளக்க பெரிய தகர டின், சிறிய தகர டின் என்ற இருவகையான அளவு முறைகள் பயன்படுகின்றன. தகர டின்னின் கொள்ளளவு என்பது விற்பனையாளரின் விருப்பம்போல மாறக்கூடியது எனினும்,வாங்குகிறவர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை.

கிணறு எத்தனை அடி ஆழம் தோண்டியிருக்கீங்க?’ என்ற கேள்விக்கு எட்டுப் பாகம் என்று பதிலளிப்பார்கள். பாகம் என்பது நீட்டலளவையில் பயன்படும் ஒருவகையான அளவுகோல். இரு கைகளையும் விரித்து நிற்கும் மனிதனின் இடது கையின் நடுவிரலின் நுனியில் தொடங்கி, வலது கையின் நடுவிரலின் நுனிவரை அடங்கும் பகுதியானது பாகம் எனப்படும். வீட்டுச் சுவரை அளக்கக்கூட பாகம் அளவு பயன்பட்டது. சிலருக்கு நீளமான கையும் சிலருக்குக் குட்டையான கையும் இருக்கும்போது, ஒவ்வொருவரையும் பொறுத்தவரையில் பாகம் என்பது வித்தியாசப்படும். இத்தகைய சிறிய வேறுபாடுகளைக் கிராமத்தில் யாரும் பெரிதுபடுத்தாத காலமொன்று முன்னர் இருந்தது.

 கண்மாயில் தண்ணீர் நிரம்பி, தளதளவென அலைஅடிக்கும்போது, எவ்வளவு ஆழம் தண்ணீர் இருக்கும் என்ற கேள்விக்கு இரண்டுஆள் மட்டம் என்று சாதாரணமாகக் சொல்வார்கள். ஓர்ஆள் மட்டம் என்பது சுமார் ஆறுஅடிகள் என்ற கணக்கில் பார்க்கும்போது, இரண்டு ஆள் மட்டம் என்பது பன்னிரண்டுஅடிகள் ஆழம் என்பது கணக்காகும்.

 கோடை காலத்தில் கண்மாயிலிருந்து கரம்பை மண்ணை வெட்டி மாட்டுவண்டியில் எடுத்துச் சென்ற பிறகு பெரிய பள்ளம் ஏற்பட்டுவிடும்.இந்த மாதிரி ஏற்படும் பள்ளத்தை அளக்க ஆனைப் பள்ளம் அல்லது கஜப் பள்ளம் என்று சொல்லுவார்கள். ஆனையின் சராசரி உயரமான பத்தடி என்பதைக் கருத்தில் கொண்டு பள்ளத்தின் ஆழமானது அளக்கப்பட்டது.

 வயலில் அறுவடை முடிந்து, களத்தில் நெல்லைத் தூற்றிப் பொலியாகக் குவித்து வைத்து இருப்பார்கள். வீட்டுக்குக் கொண்டுபோகும் நெல், கூலி நெல் கொடுத்ததுபோக சலவைத் தொழிலாளர், மடையன், கொல்லர் போன்றவர்களுக்கு நெல் வழங்குவதைச் சுதந்திரம் என்று குறிப்பார்கள்.நெல்லை அளக்கிறவர், இரு கைகளையும் சேர்த்து வைத்து நெல்லை அள்ளி மூன்று முறைகள் மேற்படி கைவினைஞர்களுக்குப் போடுவார். இவ்வாறு நெல்லைக் கைகளால் அள்ளிப்போடுவது என்பது, கிராமத்தினரைப் பொறுத்தவரையில் ஒருவகையான அளவுதான்.

 புளியமரத்திலிருந்து உலுக்கப்பெற்ற புளியம்பழங்கள் அம்பாரமாகக் களத்துமேட்டில் குவித்து வைக்கப் பெற்றிருக்கும். பெரிய நார்க்கூடை, சிறிய நார்க்கூடை என இருவகையான கூடைகள் மூலம்தான் புளியம்பழங்கள் அளந்து விற்கப்பட்டன. கூடையின் அளவு பற்றிய பொதுவான நிர்ணயம்,விற்கிறவருக்கும் வாங்குகிறவருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ளும் வகையில் நிலவியது.

 அறுபதுகளில் தெருவில் பலசரக்கு விற்பனை செய்யும் பெண்கள் கைப்பிடி அளவு அரிசிக்கு மாற்றாக பலசரக்குப் பொருட்களை விற்பனை செய்தனர்.கைப்பிடி அளவு என்பது பிற்காலத்தில் வழக்கினில் இல்லை.

 ஆட்காட்டி விரலுக்கும் பெருவிரலுக்குமிடையில் இருக்கும் பொடியின் அளவு சிட்டிகை எனப்பட்டது. மருந்துப் பொடியை பயன்படுத்த சிட்டிகை அளவு பயன்பட்டது.

 சுரைக்காய், பூசணிக்காய் போன்ற பெரிய காய்கள் தனித்தனியாக விலை சுட்டப்பெற்று விற்பனை செய்வது இன்றும் வழக்கினில் உள்ளது.பறங்கிக்காயை நீளவாக்கில் பல கீற்றுக்களாக அறுத்து, ஒரு கீற்று இவ்வளவு என்று விற்பனை செய்வது நடைமுறையில் உள்ளது.

 எல்லாவற்றையும் அளந்திட மனிதர்கள் கடந்த பல நூற்றாண்டுகளாக முயன்று கொண்டிருக்கின்றனர். தரப்படுத்துதல், நிர்ணயம் செய்தல் போன்ற பொருளியல் கோட்பாடுகள் வணிகத்தில் புகுந்தாலும், மரபு வழிப்பட்ட நிலையில் பொருட்களை விற்பனை செய்வதும் வாங்குவதும் தொடர்ந்து நடைபெறுகின்றன. காலத்தையும் இடத்தையும் அளந்திட பல்வேறு அளவுகோல்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்று மெட்ரிக் முறையில் எல்லாம் நூறின் அடிப்படையில் மீட்டர் என மாறினாலும், ‘படி,மைல் போன்ற சொற்கள் நமக்குத் தேவைப்படுகின்றனவாக உள்ளன.

 படியைப் புறந்தள்ளிவிட்டு எடைக் கணக்கில் கிலோ மெல்ல நுழைந்துவிட்டது. டஜன் முப்பது ரூபாய் என்ற கணக்கில் விற்ற ஆரஞ்சுப் பழங்கள் இன்று, ‘ஒரு கிலோ ஆரஞ்சு அம்பது ரூபாய் ஆகிவிட்டன.நல்லெண்ணெய் கூட ஒரு கிலோ பாக்கெட்டுகளில் வந்துவிட்ட நிலையில்,பால் ஒரு கிலோ என பாக்கெட்டில் வரும்நாள் தொலைவில் இல்லை.எல்லாவற்றுக்கும் தராசை தூக்குவதைவிட, துவரம்பருப்பை அளந்திடஅரைவீசம்படி போதும் என்றுதான் தோன்றுகிறது. அதுதான் எளிது,வசதியும் கூட.

Edited by suvy
சிறு பிழை திருத்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புங்கை, சுவி, சுணா & முனிவர் ஜீ

  • கருத்துக்கள உறவுகள்
On 27.5.2016 at 6:15 AM, புங்கையூரன் said:

நோனா மார்க் ரின்பால் ரின்னாக இருந்தால் அதைச் 'சுண்டு' என்று அழைப்பார்கள்!

MED_1050.jpg

kachan-paaddi-600x450-copy.jpg

கச்சான் கடையில் இருக்கும்... சுண்டுக்கு, இந்த அளவு பொருந்தாது.   43.gif38.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, உடையார் said:

நன்றி புங்கை, சுவி, சுணா & முனிவர் ஜீ

ஏன் உடையார் அப்படியே தமிழ்சிறீக்கும் ஒரு நன்றியை சொல்லுறதுதானே...., இப்ப பாருங்கள் அவர் கச்சான் கடையில நிக்கிறார், அடுத்து சங்கக் கடைக்கு போக முதல் ஓடிவந்து நன்றியைச் சொல்லுங்கோ...! tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.