Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூசாரிகளை நோக்கி ஒரு அறைகூவல்!

Featured Replies

  • தொடங்கியவர்

வணக்கம் வசம்பு,

ஜேர்மனியின் புகழ் பெற்ற 3 பூசாரிகள் வருவார்கள் என்று எனக்கு அறியத் தரப்பட்டிருந்தது. இரு தரப்பிற்கும் நடுநிலையாக நின்ற ஒருவர் இதை எனக்கு உறுதி செய்திருந்தார். நானும் மேலும் பல பூசாரிகளின் தொலைபேசி இலக்கங்களை சேகரித்து அவர்களுக்கு கொடுத்திருந்தேன். ஆகக் குறைந்தது இரண்டு பேராவது வந்து என்னுடன் விவாதம் செய்வார்கள் என்று உறுதியான முறையில் எனக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அப்படி யாரும் வரவில்லை. வந்தவர்கள்யாரும் இந்து மதம் பற்றி எதுவுமே அறியாதவர்கள். யாழ் களத்தில் இருப்பவர்கள் அறிந்துள்ள அளவிற்கு கூட, அதில் ஒரு வீதம் தன்னும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் மிக மோசமான முறையில் நடந்து கொண்டார்கள். ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தார். ஒரு தாக்குதவதற்கு வந்தார். அங்கே அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளோடு ஒப்பிடுகின்ற பொழுது நான் ஒன்றும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை.

அங்கே நான் உச்சபட்ச பொறுமையைக் கையாண்டேன்.

அவர்கள் சவால் விட்டு அழைத்ததால்தான் நான் போனேன். ஆனால் சொன்னபடி அவர்கள் வரவில்லை. அப்படி அடுத்த முறையும் நடந்து விடக் கூடாது என்பதாற்தான் அவர்களை சீண்டிப் பார்க்கக் கூடிய சொற்களை பயன்படுத்தியுள்ளேன். இனியும் இந்தப் பூசாரிகள் விவாதத்திற்கு வரவில்லை என்றால் மக்களே இவர்களைப் பற்றி புரிந்து கொள்வார்கள்.

Edited by சபேசன்

  • Replies 81
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

என்னுடன் எதிர்த்து விவாதம் செய்ய வந்தவர்கள் நீறு அணிந்து வந்திருந்தார்கள். நீறு அணியாத நான் உணர்ச்சி வசப்படாது, நிதானமாக அவர்களுடன் உரையாடினேன். ஆனால் அவர்கள் நடந்து கொண்ட முறை, ஒரு மதம் ஒரு மனிதனை எத்தனை தூரம் கீழ்த் தரமானவானாக மாற்றுகின்றது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

ஜெயந்திநாதசர்மா ஒத்துக் கொண்டது போன்று, என்னுடைய அறைகூவலை ஏற்று அவர்கள் விவாதத்திற்கு சம்மதித்தால், அதைப் பற்றி உங்களுக்கு முன்னமேயே அறியத் தருகின்றேன்.

அப்படியான ஒரு விவாதத்தில் வெற்றிவேல் கலந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்.

Edited by சபேசன்

நல்லதொரு முயற்சி. ஆனால் வார்த்தைப் பிரயோகங்கள் சரியில்லை. ஒருவர் தவறு செய்கின்றார் என்றால் அதை நாகரீகமாக கருத்தாடி தவறைச் சுட்டிக் காட்டுவதே முறையானது. சவால்கள் விடுவதும் நான் சொல்வது தான் அனைத்தும் சரியானது என்று வாதம் செய்வதும் சுயதம்பட்டத்தின் வெளிப்பாடாகவே பார்க்க முடிகின்றது. குறிப்பிட்ட சந்திப்பில் பிரபலமான பிராமணர்கள் கலந்து கொண்டு உங்களோடு வாதிடுவார்கள் என்று கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்தவர்கள் தானே உங்களுக்கு அறிவித்தார்கள். இது சம்பந்தமான சரியான ஏற்பாடுகளை அவர்கள் செய்யாமலும் விட்டிருக்கலாம். எனவே இதில் பிராமணர்களை மட்டும் குறை சொல்வதிpல் பயனில்லை. ஆனால் உங்களிடம் கலந்தரையாடலில் கலந்து கொண்டு வாக்களித்த ஜெயந்திநாதசர்மா இது சம்மந்தமான உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஜேர்மனியிலுள்ள அனைத்து ஆலயங்களிலும் ஒரு வருடத்திற்குள் தமிழில் பூஜை நடக்குமென்று டோட்முண்ட் நகரில் கூடிய தமிழர்கள் முடிவெடுத்ததாக எழுதியுள்ளீர்கள். அங்கு ஜேர்மனியிலுள்ள அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தமிழர்கள் வந்திருந்தார்களா??

அடுத்து இனி மந்திரங்கள் சம்பந்தமாக வாதப்பிரதிவாதங்கள் இன்னொரு தினத்தில் நடக்குமானால் பொதுவான சிலரை நீதிபதிகளாக நியமித்து நடைபெறும் வாதப்பிரதிவாதங்கள் சம்மந்தமான சரியான தீர்ப்பை வழங்கச் செய்யலாம். இந்த நீதிபதிகளில் ஒருவராவது பிராமணரில்லாத சமஸ்கிரதம் தெரிந்தவராக இருந்தால் மிகவும் நல்லது. அதுவரை எவரினது வாதம் உண்மையானது என்பது கேள்விக்குறி தான்.

உங்கள் கருத்துக்கள் நியாயமானவை. பாராட்டுக்கள்!!!

ஒரு விவாதத்தின் உண்மையான நோக்கம் உண்மையை தெளிவுபெறச் செய்வதாக இருக்கவேண்டுமே ஒழிய, சுயதம்பட்டம் செய்வதாகவும் ஒரு சாரார் மீது சேறு வாரி பூசும் குறுகிய நோக்கம் கொண்டதாகவும் இருக்க கூடாது.

அத்தோடு வேதமந்திரங்கள் பற்றிய விளக்கம் பெறுவதென்றால் வேதத்தை கற்று தேறியவர்களிடம் தான் கேட்க வேண்டும். கோவில்களில் அர்ச்சகர்களாக தொழில் புரிபவர்கள் வேத பண்டிதர்கள் அல்ல. அவர்களுக்கு ஆகம விதிமுறைகளும், பூசைகளில் பயன்படுத்தப்படும் சில மந்திரங்களும் தான் தெரிந்திருக்கும்

உதாரணத்திற்கு, நன்றாக கார் ஓட கற்று கொண்டவருக்கு கார் ஓட வருமே ஒழிய காரின் எஞ்சினை பற்றி ஒரு Automobile Engineer அளவுக்கு தெரிந்து இருக்காது. தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பமும் இல்லை. அது போல் தான் இதுவும்.

ஐரோப்பவில் அனேகமான கோவில் அர்ச்சகர்களுக்கு பூசை மந்திரங்களையே சரிவர உச்சரிக்க தெரிவதில்லை என்பது தான் உண்மை.

இவர்களிடம் போய் வேதமந்திரங்களுக்கு விளக்கம் கேட்பது என்பது ஒரு உயர்தர (A/L) மாணவனிடம் Phd Thesis எழுத சொல்வது போல் ஆகும்

Edited by vettri-vel

சபேசன் அவர்களுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்!

வாழ்வில் நான் சந்திக்க விரும்புவர்களில் நீங்களும் ஒருவர்.

அப்படியான ஒரு விவாதத்தில் வெற்றிவேல் கலந்து கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்.

ஈழம் மலரும் போது எங்கள் தாய்மண்ணில் புலிக்கொடி பட்டொளி வீசி பறக்க அதன் கீழ் நாம் மேடை போட்டு விவாதிக்கலாம் சபேசன்.

அதுவரையில் பொறுத்திருப்போம்!!!

***

Edited by vettri-vel
*** நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

வேதங்களுக்கும், ஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரக ஜீவராசிக்கதைகளுக்கும் அதிகம் வித்தியாசமில்லை! சிறந்த ஆங்கில இயக்குனர்களால் படைக்கப்பட்ட பிரம்மாண்டமான ஏலியன் புனைகதைகளை பார்த்து மிரண்ட மேற்கு நாட்டினரே, இன்றும் பறக்கும் தட்டுகளை கண்டதாக பீதியில் பிதற்றிக்கொண்டிருக்கையில், அப்பாவிகள் நாங்கள் எம்மாத்திரம்!

பரம்பரை பரம்பரையாக எங்கள் தலையில்கட்டியடிக்கப்பட்ட இந்த வேதப் பயமுறத்தல்களில் இருந்து விடுபடுவது அத்துணை இலகுவான காரியமல்ல. முதலில் இதனை பிரதான ஜீவனோபாயமாக கொண்டு உயிர்வாழும் ஒரு முழுச்சமுகத்தின் அதியுச்ச எதிர்ப்பை சமாளிக்க வேண்டும்! இந்த வேதங்களை விட்டால் உயிர்வாழ வேறு மார்க்கம் தெரியாத இவர்களில் சிலர் தங்களை பாதுகாப்பதற்காக கொலை செய்யவும் தயங்கமாட்டார்கள்.

எனவே வெளிப்படையாக செயற்படும் சபேசன் அசிரத்தையாக இராது பாதுகாப்பில் கவனம் எடுப்பது நல்லது!

  • தொடங்கியவர்

அர்த்தம் தெரியாத ஒன்றை மதத்தின் பெயரில் எமக்கு திணிக்க வேண்டாம், அழகு தமிழில் எமது நிகழ்வுகளைச் செய்வோம்என்பதே எம்முடைய போராட்டம்.

ஈழம் மலர்ந்து புலிக் கொடி பறக்கின்ற போது, இந்த வேதங்கள், மந்திரங்கள் பற்றி விவாதிக்க வேண்டிய தேவை இருக்கக் கூடாது என்பது என்னுடைய விருப்பம்.

தமிழர்கள் இனப்பற்றோடு இருந்தால் என்னுடைய விருப்பம் நிறைவேறும்.

ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

ஒரு இனம் என்பது குறிப்பிட்ட மொழியை, குறிப்பிட்ட பண்பாட்டைக் கொண்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டம்.

தன்னுடைய பண்பாட்டு நிகழ்வுகளை வேறு ஒரு மொழியில் செய்கின்ற மக்கள் கூட்டம் ஒரு "இனம்" என்ற வரையறைக்குள் வரமுடியாது. "இனம்" என்றே கருதப்பட முடியாத நிலையில் நாம் இருந்தால், "தேசிய இனம்" என்று எப்படி ஆக முடியும்?

எமது இனத்தின் நலனுக்காக ஆவது, எமது மக்கள் தமது பண்பாட்டு நிகழ்வுகளை தமது மொழியில் செய்ய வேண்டும்.

பூசைகள் தமிழில் செய்யப்படக் கூடாது என்று சொல்ல எவருக்கும் அதிகாரம் இல்லை. அதேவேளையில் அவை சரியான வழிகாட்டல்கள் ஆலோசனகளுடன் நெறிப்படுத்தப்படவேண்டும் என்பதே எமது கொள்கை. அப்போது தான் அவை கால ஓட்டத்தில் கரைந்து செல்லாது நிலைத்திருக்கும்.

அவசரக் கோலத்தில் செய்யப்படுபவைகளை காலம் சீக்கிரமே அடித்து சென்று விடும் என்பது அனுபவ உண்மை.

அதை தவிர பூசைகளுக்கான மந்திரங்களுக்கு மட்டும் அல்ல வேறு எந்த துறையிலும் பாவனை மொழியாக பயன்படுத்தக் கூடிய வளமும் பலமும் கொண்டதே தமிழ் மொழி என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

அதே சமயத்தில் என் மொழி மட்டுமே சிறப்பானது அடுத்தவன் மொழி எல்லாம் குப்பை என்று சொல்வதையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை

Edited by vettri-vel

அர்த்தம் தெரியாத ஒன்றை மதத்தின் பெயரில் எமக்கு திணிக்க வேண்டாம், அழகு தமிழில் எமது நிகழ்வுகளைச் செய்வோம்என்பதே எம்முடைய போராட்டம்.

அர்த்தம் புரியும்வரைதான் இந்த மதம்! அதுவோ சபேசன் திட்டம்?

  • தொடங்கியவர்

சாணக்கியன்!

உங்கள் கேள்வி எனக்கு புரியவில்லை

சாணக்கியன்!

உங்கள் கேள்வி எனக்கு புரியவில்லை

சபேசன் உங்களுக்கு புரியாதளவு கேள்வி கேட்கிற திறமை என்னிடம் இல்லை!

இருந்தாலும்... இந்த மந்திர தந்திரங்கள், கடவுள் பூச்சாண்டிகள் மனிதசமுதாயத்தை இன்னமும் சீரழிப்பதற்கு காரணம்... யாரும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்வி கேட்காமை அல்லது கேள்வி கேட்க அனுமதிக்கப்படாமை என்பதே என் வாதம்!

சமஸ்கிரதத்தில் அப்படி எழுதியுள்ளது, இப்படி எழுதியுள்ளது என்று அவனவன் வந்து தனது உள்நோக்கத்துடன் விளக்கம் கூற அதைகேட்டு நாங்கள் இன்றும் வாய்பிழந்து நிற்கவேண்டியுள்ளது!

"All the best" இற்கோ, "வாழ்க வளமுடன்" என்பதற்கோ இல்லாத சக்தி "தீர்க் ஆயூஸ் பவ" என்பதற்கு இருப்பதாக நம்பும் முட்டாள்களாக ஆக்கப்பட்டுள்ளோம் என்பதை உங்கள் கருத்துகள் மூலம் புரிந்து கொண்டேன்.

எங்கள் மொழியில் அதுவும் புரியக் கூடியவகையில் அனைத்தையும் கூறும் போது, மதம் என்பது உண்மையிலேயே என்ன என்பதை சிந்திப்பவர்களால் இலகுவில் புரிந்து கொள்ள முடியும்!

இதனால் மத வெறியர்களால் மனிதாபிமானம் மிதிக்கப்படுவது நின்று மனிதாபிமானமே உலகின் பொது மதமாகும்!

Edited by சாணக்கியன்

வணக்கம் வசம்பு,

ஜேர்மனியின் புகழ் பெற்ற 3 பூசாரிகள் வருவார்கள் என்று எனக்கு அறியத் தரப்பட்டிருந்தது. இரு தரப்பிற்கும் நடுநிலையாக நின்ற ஒருவர் இதை எனக்கு உறுதி செய்திருந்தார். நானும் மேலும் பல பூசாரிகளின் தொலைபேசி இலக்கங்களை சேகரித்து அவர்களுக்கு கொடுத்திருந்தேன். ஆகக் குறைந்தது இரண்டு பேராவது வந்து என்னுடன் விவாதம் செய்வார்கள் என்று உறுதியான முறையில் எனக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அப்படி யாரும் வரவில்லை. வந்தவர்கள்யாரும் இந்து மதம் பற்றி எதுவுமே அறியாதவர்கள். யாழ் களத்தில் இருப்பவர்கள் அறிந்துள்ள அளவிற்கு கூட, அதில் ஒரு வீதம் தன்னும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் மிக மோசமான முறையில் நடந்து கொண்டார்கள். ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தார். ஒரு தாக்குதவதற்கு வந்தார். அங்கே அவர்கள் பயன்படுத்திய வார்த்தைகளோடு ஒப்பிடுகின்ற பொழுது நான் ஒன்றும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை.

அங்கே நான் உச்சபட்ச பொறுமையைக் கையாண்டேன்.

அவர்கள் சவால் விட்டு அழைத்ததால்தான் நான் போனேன். ஆனால் சொன்னபடி அவர்கள் வரவில்லை. அப்படி அடுத்த முறையும் நடந்து விடக் கூடாது என்பதாற்தான் அவர்களை சீண்டிப் பார்க்கக் கூடிய சொற்களை பயன்படுத்தியுள்ளேன். இனியும் இந்தப் பூசாரிகள் விவாதத்திற்கு வரவில்லை என்றால் மக்களே இவர்களைப் பற்றி புரிந்து கொள்வார்கள்.

நன்றி உங்கள் பதில் கருத்திற்கு. இப்படியான விவாதங்களை ஒரு பொதுவான இடத்தில் வைப்பது தான் சிறந்தது. அதில் நீங்கள் தனியாக கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லைத் தானே. அதனால் உங்களுடனும் சிலரை அழைத்துச் செல்லலாம். விவாதம் வெறும் தர்க்க ரீதியாக மட்டுமல்லாது ஆக்கபூர்வமானதாக நடத்தல் முக்கியம். முடிந்தால் எனக்கும் அறிவியுங்கள், நிச்சயம் அத்தருணம் எனக்கும் நேரம் கிடைத்தால் நானும் கலந்து கொள்கின்றேன்.

வெற்றிவேல் அவர்களும் முடிந்தால் இதில் பங்குபற்றுவது நல்லதென்பது என் கருத்தும்.

சபேசன்,

அத்துடன்.. "ஓம் பூர் புவஸ் வக, தத் சவிதூர் வரேண்யம், பர்கோ தேவஜ்ய தீ மகி, தீவ்யோ யோன பிரஜோதயாத்" என்கிற பாரிய சக்தி படைத்த ( :wub: ) காயத்திரி மந்திரத்தின் அர்த்தத்தை தயவு செய்து இலகு தமிழில் தரமுடியுமா?

கூகுளில் தேடினேன் இப்படி இருந்தது:

O God, Thou art the Giver of Life, the Remover of pains and sorrows,

the Bestower of happiness O Creator of the Universe, may we receive

Thy Supreme Sin destroying light, May Thou guide our intellect in the

right direction.

தமிழில் "எல்லாம் வல்ல இறைவா, எனக்கு நல்வழிகாட்டு!" என்று வருமா?

இப்படி தமிழில் 100 தடவை சொன்னால் என்ன நடக்கும்?

மன்னிக்கவும் 108 தடவை.... அது சரி... 108, 1008 இந்த எண்களுக்கு என்ன விசேசம்?

முடியல இப்பிடி எனக்கே கேள்விக்கு மேல கேள்வியா வருகுது... இனி தமிழில மந்திரம் சொல்ல... அதை கேட்கிற அடியார்கள் கேள்வி கேட்க... நினைக்கவே புல்லரிக்குது!

Edited by சாணக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் நீங்கள் அறகூவினாலும் சரி சேவலாய் மாறி கூவினாலும் கூட எந்தப்பூசாரியும் விவாதத்திற்கு வரமாட்டாங்கள். ஏனென்றால் எல்லாப்பூசாரியுமே ஊதாரணமாக சுக்கலாம் பிரதம் விஸ்ணும் சசி வர்ணம் சமர்ப் ஞாமி எண்டது போலை.இப்ப மந்திரஙகளை தமிழிலை எழுதி மனப்பாடம் பண்ணி அப்பிடியே திருப்பிச்சொல்லுற ஆக்களாய்த்தான் இருக்கினம். இதுக்குள்ளை அவங்களுக்கு அர்த்தம் எங்கை தெரியப்போகுது. இப்பிடிப்பாத்தால் நானும் பூசாரிதான் ஏணெண்டால் எனக்கும் கனக்க மந்திரம் தெரியும் ஆனால் அர்த்தம் தான் தெரியாது. :wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன்.. பிரஞ்.. நொஸ்க்.. போல.. சமஸ்கிரதமும் ஒரு மொழி.

முறையாகப் பூசை செய்பவர்கள்.. தமிழில் அழிந்து போன வேத நூல்களுக்காக சமஸ்கிரத நூல்களைப் படித்து பூசை செய்கிறார்கள்.

எங்கும் எதிலும் கலப்படம் போல.. சில பூசகர்கள்.. விடயங்களை அறியாமல் பூசை செய்கின்றனர்.

வேதங்கள் தமிழாக்கம் செய்யப்பட்டு.. தேவையான திருத்தங்களோடு பூசைக்கு தமிழர்களால் பாவிக்கப்படுவது வரவேற்கப்பட வேண்டும்.

எமது மக்களுக்கு எமது மதம் பற்றிய பரப்புரைகளுக்கு இது உதவும். அதுமட்டுமன்றி.. தமிழோடு மட்டும் நின்றுவிடாது.. அந்தந்த நாடுகளுக்குரிய மொழிகளிலும் பூசைகள் செய்ய ஆரம்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான்.. எமது சந்ததியினரும்.. பூசைகளின் உண்மையான தார்ப்பரியத்தை விளங்கிக் கொள்வார்கள்.

மதங்கள் போதிக்கும் மானுட நீதிக்கான.. விடயங்கள் ஆலயங்கள் வழி தேவையான மொழிகளில் எடுத்துச் செல்லப்படுவதோடு.. மத அனுட்டானங்களில் ஈடுபடுபவர்கள்.. மதம் சம்பந்தப்பட்ட போதிய கல்வி அறிவு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.

அதுவே எமது மதத்தின் மீதான அவதூறுகளை அகற்றவும்.. சந்ததிகளுக்கு அவசியமான மானுட நீதியை.. காவிச் செல்லவும் உதவும்.

ஒரு சில பூசகர்கள் சாராயம் குடிக்கிறார்கள் என்பதற்காக.. மொத்தப் பூசாரிகளும் அப்படித்தான்.. அவர்கள் சார்ந்த மதமும் அப்படித்தான் என்ற விசமத்தனமான பிரச்சார நோக்கம் இத்தலைப்பில் இருக்கிறது.

எத்தனையோ கிறீஸ்தவ மத போதகர்கள்.. இஸ்லாமிய மத போதகர்கள்.. கொலைகாரர்களாக.. வன்முறையாளர்களாக இருந்துள்ளனர். அதற்காக அவர்கள் தண்டிக்கப் பட்டிருக்கிறார்கள்.. கண்டிக்கப் பட்டிருக்கிறார்கள். ஆனால் மொத்த மதப் போதகர்களும்.. அவர்களின் மதமும் அதற்காக குறை கூறப்பட்டதில்லை. காரணம்.. தவறு செய்பவர்கள் மத அடையாளத்துடன் நோக்கப்பட முதல் மனிதர்களாக நோக்கப்பட வேண்டும்.

ஒரு சிலருக்கு சிலருடன் ஏற்படும் கசப்பான அனுபவங்களின் அடிப்படையில்.. மொத்த மதமும்.. மதக் கொள்கைகளும்.. மத குருமார்களும்.. ஒரு மொழியும்.. பரிகசிக்கப்படுவது சகிப்புக்குரிய ஒன்றல்ல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

விவாதத்திற்கான நாள் பற்றி அவர்கள் எனக்கு அறிவித்ததும் இங்கே அதை அனைவருக்கும் தெரியப்படுத்துவேன். யாழ் கள உறவுகள் கலந்து கொண்டால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.

  • கருத்துக்கள உறவுகள்

விவாதத்திற்கான நாள் பற்றி அவர்கள் எனக்கு அறிவித்ததும் இங்கே அதை அனைவருக்கும் தெரியப்படுத்துவேன். யாழ் கள உறவுகள் கலந்து கொண்டால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.

காசு குடுத்து ரிக்கற் எடுத்து அங்கை வந்து அடிவாங்கிற அளவுக்கு நான் நல்லவன் இல்லை.தாறதை மொத்தமாகவோ சில்லறையாகவோ நீங்களே வாங்கவும். படங்கள் இணைத்தால் பாத்து மகிழலாம். :icon_idea::lol:

  • கருத்துக்கள உறவுகள்

காசு குடுத்து ரிக்கற் எடுத்து அங்கை வந்து அடிவாங்கிற அளவுக்கு நான் நல்லவன் இல்லை.தாறதை மொத்தமாகவோ சில்லறையாகவோ நீங்களே வாங்கவும். படங்கள் இணைத்தால் பாத்து மகிழலாம். :icon_idea::lol:

சாத்திரியார் சோத்துக்கையாலை அடிவாங்கினதை இன்னும் மறக்காமல் கவனமாகத்தானிருக்கிறார்.

Edited by பிரபா

சபேசன்,

உங்கள் துணிச்சலுக்கும் முயற்சிக்கும் வாழ்த்துக்கள்.

சபேசனின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

சபேசான் நடந்தவற்றை நீங்கள் ஒளிப்பதிவு செய்யவில்லையா? இப்படியானவற்றைக் கட்டயாம் ஒளிப்பதிவு செய்ய வேண்டும்.ஒன்று உங்கள் பாதுகாப்புக்கு இன்னொன்று இணையத்தில் தரவேற்றுவதன் மூலம் இதனை ஒரு உலகளாவிய பிரச்சரமாக மாற்றலாம்.டார்ட்மவுண்ட் ஜேர்மனியோடு நின்று விடாமால், இதனை சர்வதேசத் தமிழர்களூக்கான் விழிப்புணர்வு ஊட்டும் ஒரு பிரசாரமாக மாற்றலாம்.புலத்தில் இருக்கும் தமிழ் ஊடகங்களுக்கும் அறிவியுங்கள் அவர்களையும் நிகழ்சிகளை ஒளிப்பதிவு செய்ய அழையுங்கள்.இதன் மூலம் வன்முறையான எதிர்வினைகளைக் குறைக்கலாம்.புலத்தில் கோவிலுன் நிர்வாகம் என்பது தமிழர்கள் கையில் தான் இருக்கிறது.அத்தோடு மேற்குலகில் நீத் மன்றங்கள் அடிப்படை உரிமைகளை மதிப்பவை, இந்தியாவில் இருபவை போன்று பார்ப்பனரின் கையில் நீதிமன்றங்கள் இல்லை.பொதுவான் பிரச்சாரம் எடுபடுமாகில் தமிழில் பூசை செய்வதைக் கொண்டு வருவது ஒன்றும் கடினமானதாக இருக்காது.

மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக முன் நேறுவோம்.என்றும் எனது ஆதரவு இருக்கும்.

  • தொடங்கியவர்

நாரதர்,

ஒளிப்பதிவு செய்யும் திட்டத்துடன்தான் சென்றேன். ஆனால் அங்கே அப்படியான ஒரு நிலமை இருக்கவில்லை. குழப்பம் விளைவிக்கும் திட்டத்துடனேயே சிலர் அங்கு வந்ததனால், என்னுடைய ஒளிப்பதிவுக் கருவியை காப்பாற்றும் நோக்கில் ஒளிப்பதிவை நான் செய்யவில்லை.

நான் சென்றது பூசாரிகளுடன் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை நடத்துவதற்கு. ஆனால் அவர்கள் போட்ட திட்டம் வேறு.

இப்பொழுது ஒரு பூசாரியே நேரடியாக என்னிடம் பகிரங்க விவாதத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டதால், அடுத்த முறை நிச்சயமாக நிகழ்ச்சி ஒளிப்பதிவு செய்யப்படும். அதற்கான ஏற்பாடுகளுடன்தான் நான் போவேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன் அய்யா வணக்கம்

நான் தமிழகத்தில் பெரியார் கழகம் என்ற அமைப்பைச் சார்ந்தவன்

தங்களுடைய கட்டுரைகளை தவறாது படிப்பவன் உங்களது அமைப்பின் பெயரும் இணையவழியாக தெரிந்தபோது இரண்டு பெயரும் ஒத்திருப்பது அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.

உங்களது பகுத்தறிவு ஓங்கட்டும்!

தமிழீழம் பகுத்தறிவு உள்ள முற்போக்குச்சமுதாய மலர வாழ்த்துக்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் பகுத்தறிவு உள்ள முற்போக்குச்சமுதாய மலர வாழ்த்துக்கள்!!

தமிழீழம் ராமசாமி இல்லாமலே படிப்பறிவு பெற்ற தேசமாகவே இருக்கிறது. தமிழீழத்தில் படிப்பறிவு பற்றிய கவலை வேண்டாம். அதன் கல்வி அறிவு 90% இல் இருந்து 100% ஆகும் என்பதை திடமாக நம்பலாம். எதற்கும்.. தமிழீழம் அமைய உலகத் தமிழர்கள் என்ற வகையில் ஒத்துழைத்தால் போதும்.

ஆனால் தமிழகத்தில் மக்களின் படிப்பறிவை.. குறிப்பாக பெண்களின் 60- 74 % இல் இருந்து 100% கொண்டு வர முயலுங்கள். மக்களின் பகுத்தறிவு தானே வளரும். நீங்கள் ஓரிருவர்.. உங்களுக்கே பகுத்தறிவு என்று கொண்டு திரிய வேண்டிய அவசியம் வராது..! :icon_idea::icon_idea:

http://en.wikipedia.org/wiki/List_of_count...y_literacy_rate

Edited by nedukkalapoovan

தமிழீழம் பகுத்தறிவு உள்ள முற்போக்குச்சமுதாய மலர வாழ்த்துக்கள்!!

எது?

மண்ணெண்ணெய் ஊற்றி தொண்டனை நடுத்தெருவில் வைத்து பற்ற வைத்து விட்டு

தீக்குளித்த செம்மல் என பட்டமளிக்கும் பகுத்தறிவா?

ஒரு அந்நியப்படையின் துப்பாக்கிச்சூட்டில் பலியான அப்பாவி மீனவர்களின் சாவுக்கு கடற்கரையில் நிகழ்ந்த கண்டன உண்ணாவிரத மேடையில் கூட கூசாமல் பொன்னாடை போர்த்துக் கொண்ட பகுத்தறிவா?

ஒரு நடிகன் கட் அவுட்டுக்கு குடம் குடமாக பால் அபிசேகம் செய்வதை பார்த்து கைகொட்டி சிரிக்கும் பகுத்தறிவா?

இல்லை காரியம் ஆகவேண்டுமானால் காலை பிடி என்பது போல செல்வி. ஜெயலலிதாவை லேடி பெரியார் என்று புகழ்ந்த பகுத்தறிவா?

இப்படியான ஒரு பகுத்தறிவு முற்போக்கு சமுதாயம் ஈழத்திற்கு தேவையில்லை. நன்றி!!!

Edited by vettri-vel

சாதிகளின் அடிப்படையில் மக்களை மட்டமானவர்கள் என்று எழுதியவர் இன்ன சாதிக்கு இன்ன பழக்கம் இருக்கிறது என்று எழுதிய சாதி வெறியர்கள் எல்லாம் ஈழத்தில் சாதியே இருந்தது இல்லை என்று எழுதியவர்கள் எல்லாம் இப்போது சாதி பற்றிக் கதைக்க வேண்டாமாம்.

ஈழத்தில் இப்போது சாதிய ஒடுக்குறை தனிந்து விட்டது உண்மை.அதற்கு அடிப்படைக் காரணம் போர்ச் சூழலை எதிர் கொள்ளமுடியாத பெரும்பான்மையான நில வளம் உடைய உயர் சாதியினர் புலம் பெயர்ந்தது மற்றும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர் விடுதலைக்கூட்டணியின் யாழ் உயர் சாதித் தலமை ஒரங்கட்டப்பட்டது.

ஆனால் புலத்தில் சாதி இருக்கிறது,சாதீயச்சண்டைகள் இருக்கின்றன.இவற்றைப் பாதுகாப்பது இந்த மத வெறி சாதி வெறிக் கும்பல் தான்.அதற்கான மக்கல் போராட்டங்கள் தொடர்ச்சியாகச் செய்யப்பட வேண்டித் தான் இருக்கிறது.

****

**** மேற்கோள் காட்டப்பட்ட கருத்து தணிக்கை செய்யப்பட்டுள்ளதால் அதற்கான பதில் கருத்து நீக்கப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.